OP
OP
swathi25
Guest
[h=1]தி. நகர் பகுதியில் தொடரும் அலட்சியங்களும்... அக்கறையின்மையும்! அங்காடித் தெருவின் கதை-18[/h]
By கே. பாலசுப்பிரமணி
ஒரு கிராமமாக இருந்து... நகராக உருவான விதம், அதன் முக்கியப் பகுதிகள் என்று தி. நகர் முகம் குறித்து கடந்த 17 அத்தியாயங்களாகப் பார்த்தோம். தியாகராய நகருக்கு என இன்னொரு முகம் இருக்கிறது. அதுகுறித்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
'ஆசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் சொர்க்கம்' தியாகராய நகர் என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம்தான். அதேநேரத்தில், சென்னை தி.நகரில் பல பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள் பாதுகாப்புக் குறைபாடுள்ள, மோசமான தீ விபத்தை ஏற்படுத்தும் வணிகப் பகுதிகளில் ஒன்றாகவும் இருக்கின்றன.
முந்தைய விபத்துகள்!
இதற்குமுன்பு 2008-ம் ஆண்டுதி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். 2014-ம் ஆண்டில் மட்டும் மூன்று தீ விபத்துகள் தி.நகரில் நடந்துள்ளன. தி.நகர் துரைசாமி தெருவில் உள்ள பாம்பே ஜெனரல் ஸ்டோரில், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி பெரும் தீவிபத்து நடந்துள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தீ விபத்து நடந்த இடத்தை அடைய தீயணைப்பு வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டன. உஸ்மான் ரோட்டில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கடைசியாகக் கடந்த மே 31-ம் தேதி அதிகாலை உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இப்படித் தியாகராய நகர் என்பது 'தீ நகரா'கத்தான் இருக்கிறது.
அதிர்ச்சித் தகவல்கள்!
'தியாகராய நகரில் உள்ள வணிகக் கட்டடங்களில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை' என்று தி.நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தி.நகரில் உள்ள கடைகளை ஆய்வுசெய்து தீயணைப்புத் துறை சார்பில் ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு ஜனவரி 24 மற்றும் 25-ம் தேதிகளில் கடைகளில் ஆய்வுசெய்த குழுவினர், சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள்;
மேலும் படிக்க: https://www.vikatan.com/news/covers...-t-nagar-tale-of-angadi-theru-episode-18.html