• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த முதல் அனுபவம் ..... 37

ஸ்ரீ லக்ஷ்மி கோவில் தரிசனம் காலை வேளை செய்தோம்.
ஸ்ரீ லக்ஷ்மி சன்னதி மட்டும் அல்லாது, விஷ்ணு, விநாயகர்

சன்னதி எல்லாம் தென்னிந்திய முறையில்; ராதா கிருஷ்ணா
சன்னதியும், ராம சீதா சன்னதியும் வட இந்திய முறையில்.

004Lakshmi%20temple%2C%20Delaware.jpg


பஞ்சகச்சம் அணிந்தவரும், பைஜாமா அணிந்தவரும் அங்கு
நெஞ்சம் குளிர பூஜைகள் செய்து, பிரசாதமும் தருகிறார்கள்.

நல்ல தரிசனம் செய்தபின், அடுத்த கட்டப் பயணம் தொடக்கம்.
நல்ல நினைவுகள் மனதில் நிறைய, நன்றி கூறிப் புறப்பட்டோம்.

மூன்று ஒன்றுவிட்ட சகோதரர்கள் PHILADELPHIA வில் இருக்க,
மூன்று வேளை உணவுகளையும் அவர்கள் வீட்டில் முடிக்க,

மழை தூறல் இடையே பயணம் மேற்கொண்டு, அந்த ஊருக்கு,
இழை ஓடும் அவர்கள் பற்றிய நினைவுகளுடன் சென்றோம்.

அன்பான உபசரிப்பு; குட்டிப் பரிசுகள் பரிமாற்றம்; அரட்டை;
அன்புடன் பரிமாறிய நம்ம சாப்பாடு என, பொழுது போனது!

இரவு உணவுக்குப் பின்பு காபி குடிப்பதும் வழக்கமாம்; நடு
இரவு காபியுடன் உறங்கச் சென்று, அதிகாலை எழுந்தோம்.

பஞ்சு போன்ற மஞ்சு வீதியை மறைத்த மலைப் பாதையில்,
நெஞ்சு படபடக்க, மெதுவாக 'பிட்ஸ்பர்க்' நகர் அடைந்தோம்.

பாலாஜி கோவில் 'பிட்ஸ்பர்க்கில்' மிகப் பிரசித்தம்; அங்கு
பாலாஜி தரிசனத்துக்கு எல்லோரும் கூடிட ஏற்பாடு ஆனது.

தரிசனம் முடிந்த பின்பு, தங்கை மகனின் பட்டமளிப்பு விழா
தரிசனத்திற்கு எல்லோரும் சேர்ந்து போவதாகவும் ஏற்பாடு!

'ஜருகு, ஜருகு' என உந்துதல் இல்லை; அமைதியாக, நெஞ்சு
உருக ஆண்டவனை வேண்ட முடிகிறது! பிரசாதமாக அங்கு

பாதாம், கற்கண்டு, கிஸ்மிஸ், ஆப்பிள், வாழைப் பழம் என
பல்வேறு சத்தானவை, நம் கைகள் நிறையத் தருகின்றார்!

ஒரு தளம் முழுதும் சாப்பாட்டு அறையே வியாபித்திருக்க,
பெரும் கூட்டம் அங்கு நிறைந்திருக்க, புளியோதரை முதல்,

பிசிபேளா, தயிர் சாதம் வரை வகை வகையான உணவுகள்,
'பிசி'யாக 'டோக்கன்' தந்து, வரிசையில் பட்டுவாடா செய்ய,

பிரம்மச்சாரிப் பசங்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அங்கு,
பிரசாதங்களை 'தெர்மோகோல்' பெட்டிகளில் வாங்குகிறார்!

:hungry: . . . :laugh:

தொடரும் ..............
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 38

பட்டமளிப்பு விழா மிக விமரிசையானது; உறவினரும்
பட்டம் வாங்கிய மருத்துவராக இருந்தால், அவர் வந்து,

'HOODING CEREMONY' செய்கின்றார்; அழகான துணியை
HOOD போல அணிவிக்கின்ற விழாதான் அதுவாகும்.

ஒரு டாக்டரின் தாத்தா, அப்பா இருவரும் டாக்டர்கள்;
இருவரும் இருபுறம் நின்று அழகிய HOOD போட்டுவிட,

கூடியிருந்த அனைவரும் கரகோஷ ஒலி எழுப்பி மகிழ,
நாடியிருந்த வேளை வந்து, தங்கை மகன், தன் தந்தை

கையால் HOOD அணிந்து, பெருமையாகச் சிரித்து நிற்க,
மெய்யான உள்ளன்புடன், அனைவரும் வாழ்த்தினோம்.

043%20DoctoralHoodingCeremony-010lg.jpg


எங்கள் காரை மறுநாள் விமான நிலையத்தில் விட்டு,
என்னவர் தங்கையின் குடும்பத்துடன் பயணித்தோம்.

அவர்களின் வீடு நூறாண்டு கொண்டாடிய வீடு ஆகும்;
அவர்களின் இரு வேலையாட்கள் பராமரிக்கின்றார்.

வீட்டைப் பூட்டுவதே கிடையாது; திருட்டு பயமில்லை.
வீட்டில் இருந்த இரு நாய்கள் என்னை பயமுறுத்தின.

ஒரே நாள் அவர்களிடம் தங்கிவிட்டு, TAMPA செல்ல
மறுநாள் விமானம் ஏறி, எம் பயணம் தொடர்ந்தோம்.

என்னவரின் அக்கா மகன், மருமகள் அழைத்திருந்தார்;
சென்னையில் உள்ளபோதே மிக்க அன்பு காட்டுபவர்!

மதிய வேளை அங்கு சேர்ந்து, மாலையே கண்டோம்,
அதிக வெள்ளை மணல் கொண்ட CLEARWATER BEACH.

044%20tampa%20clearwater%20beach.jpg


:dance: . . . தொடரும்.................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 39

சூரியன் அஸ்தமிக்க எட்டரை மணி ஆனது. கடல் நீர்
சூரியன் மறைந்தபின் வெதுவெதுப்பாக ஆகிவிட்டது!

கடலில் சூரியன் முங்கியதால், அதன் வெப்பம் பட்டு,
கடல் நீர் சுட்டது என்று கடி ஜோக்கும் சொன்னார்கள்!

வலை மாதிரி ஒரு நீண்ட கைப்பிடியில் கட்டி, மணலை
வலை போட்டுத் தேடிக்கொண்டிருந்தார் ஒரு மனிதர்!

சிலருக்கு அது ஒரு பொழுதுபோக்காம். ஏதாவது அங்கு
அவருக்குக் கிடைத்ததோ என்னவோ அறியோம் யாம்!

என் தங்கச் சங்கிலியின் கொக்கி அவிழும் சிலவேளை.
உடன் சரிபார்த்தேன் அதை! சென்னையில் அவிழ்ந்ததை,

விமான நிலையத்தில் பார்த்தேன்; தந்தை சொல்லுவார்,
'சாதனம் தொலையாது, உழைத்த பணத்தில் வாங்கினால்'.

நீண்ட பெரிய பாலம் வழியே சென்று, ஒளிர் விளக்குகள்
நீண்ட வரிசையில் கண்டு, இனிய இல்லம் சேர்ந்தோம்!

வெள்ளை மணலின் கொள்ளை அழகினை ரசித்ததில்,
பிள்ளைக் குதூகலம், ஒட்டிக் கொண்டது எம் மனத்தில்!

மறு நாள் DISNEY WORLD போய் வரத் தீர்மானித்தோம்;
சிறு வயதிலிருந்தே எல்லோருமே DISNEY விசிறிகளே!

புளியோதரை, தயிர் சாதம், ஜூஸ், சிப்ஸ் என்று பல
களிப்புடன் கட்டிக்கொண்டு, ஒரு மணி பயணித்தோம்!

நான்கு பார்க்குகளாகப் பிரித்ததில் ஒன்று தேர்வு செய்து,
நன்கு ரசிக்க MAGIC KINGDOM போய்ச் சேர்ந்தோம்.

:car: . . . தொடரும்................
 
Last edited:
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 40

ஓய்வறைகள் பல இடங்களில் அமைந்ததும் வசதியே;
ஓய்வாக அமர, பெஞ்ச் போன்ற அமைப்புக்கள் அங்கே.

குடிநீருக்கு WATER FOUNTAIN உள்ளன; நெட்டுக் குத்தாக
குடிநீர் பீச்ச, குருவிபோல வாய் வைத்து அருந்துகிறார்!

045%20DrinkingFountain.jpg


நான் பாட்டிலில் நிறைத்து எடுத்து வந்து பாதுகாத்தேன்;
நாம் வேண்டும்போது, தேடத் தேவையில்லையே, என.

கூட்டம் எத்தனை இருந்தாலும், எவரும் இடிப்பதில்லை;
நோட்டம் இட்டபடி நடந்து, நம்மை வருத்துவதுமில்லை.

நம்ம ஊர் திருவிழாக் கூட்டத்தோடு ஒப்பிடாது, என்னால்
சும்மா இருக்க முடியவும் இல்லை; மனம் ஒரு குரங்கு!

சுற்றுலாப் பயணிகள், ஆயிரக் கணக்கில் வரும் இடம்;
சுற்றுப்புறம் சுத்தமாகப் பராமரிக்கப் பலருக்கு வேலை!

அழகிய உடை அணிந்த பலர் குப்பையை அகற்றுகிறார்;
அழகிய கார் போன்ற VACUUM CLEANER - ஐ ஓட்டுகிறார்!

அப்பள இடுக்கி போன்ற நீண்ட உபகரணத்தால், இலை
அப்புறப் படுத்தியபடியே, வேகமாக நடந்து போகிறார்!

முதலில் பார்த்தது, ராபின்சன் வாழ்ந்த மரம்; 'கிச்சன்'
முதல் எல்லா அறைகளும், சிக்கென மரத்தின் மேலே!

கீழே ஓடை; ஒரு சுற்றும் சக்கரம்; அதில் கிண்ணங்கள்;
கீழே உள்ள நீரை அவை எடுத்துச் செல்லும் மேலே!

படிகள் வழியே மரத்தின் மேல் சென்று வீடு பார்த்து,
படிகள் வழியே இறங்கவும் வசதி அங்கு இருக்கிறது!

:peace:தொடரும்................

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 41

அடுத்தது குடை ராட்டினம்; ஒரு வரிசைக்கு ஐந்து குதிரைகள்;
தடுத்தும் கேட்காமல், நான் முதலில் சென்று ஏறி அமர்ந்தேன்!

கீழும், மேலும் குதிரைகள் ஆடினாலும் தலை சுற்றவில்லை!
கீழே மர போர்டும் சுற்றுவதால், அதில் அம்மாக்கள் நிற்கிறார்!

அதற்கும் சேர்த்து வைத்து MAD TEA PARTY என்ற RIDE இல் ஏறி,
எல்லோருக்கும் தலை சுற்றோ சுற்றுத்தான்! கிண்ண வடிவில்

இருவர் உட்கார அமைப்பு; வேகமாக கிண்ணங்களும் சுற்றிவர,
இருவருக்கு நடுவில் போகும் திசை திருப்பும் சக்கரம் இருக்க,

ஓட்டவும் தெரியாமல், பிடித்து அமரவும் தெரியாமல் தவிப்பு!
ஓட்டம் பிடித்தோம் நாங்கள், அந்தக் கிண்ணங்கள் நின்றவுடன்.

ராக்கெட் மாதிரி அமைப்பில் இன்னொரு ride; அதை விடாது ,
ராக்கெட் ஒவ்வொன்றில் ஒவ்வொருவர் அமர்ந்து சுற்றி வர,

சுற்றிலும் கிரகங்கள் போல அமைத்து இருப்பதால், அவற்றை
சுற்றி நாமே வலம் வருவதுபோலத் தெரிந்தது! அடுத்ததாக,

கடல் கொள்ளையர் வாழ்க்கை காட்டும் ஒரு குகை உள்ளது;
உடல் குளிர சில்லென்ற காற்று; ஒரு ஜன்னல்; அதில் கண்டது,

செஸ் ஆடும் இரு எலும்புக் கூடுகள்! பயங்கரம்! ஆனால் அந்த
செஸ் ஆட்டம் போட்டோவில் வரவேயில்லை! குகைக்குள்

ஒரு குட்டி RIDE; உள்ளே இருட்டு; இரண்டு கப்பல்கள்; குண்டு
ஒரு கப்பலிலிருந்து எதிர் கப்பலுக்குப் பறந்து, ஒரே சத்தம்!

048%20pirates.jpg


கொள்ளையர் மூவர் ஒரு இடத்தில் 'தண்ணி அடிக்க', நாமே
கொள்ளையர் கூட்டத்தில் மாட்டியதுபோல தோன்றியது!

கைதிகள் அடைத்த ஒரு சிறை; நாய் காவல்; அதன் வாயில்
கைதிகள் சாவியைக் கண்டு, கொடுக்குமாறு கெஞ்சுகின்றார்!

தொடரும் ....................
 
I made a huge album containing photoes that I shot in Magic Kingdom with an ordinary camera.

Shall try to capture those in my digicam and post in this thread!

Raji Ram :photo:
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 42

MAGIC CARPET RIDE; இருவர் அமர்ந்து சுற்ற இருக்கைகள்;
'மேஜிக்' போல மேலும் கீழும் நகரும் CARPET அமைப்பு.

சுற்றி வரும்போது, நம் மேல் குளிர் நீரைப் பீச்சி அடிக்க,
சுற்றிலும் நிற்கும் ஒட்டகங்கள்; நாங்கள் தப்பித்தோம்!

053%20alladin%20carpet.jpg


052%20magic%20carpet.jpg


பல RIDE களில் நாமே மேலும் கீழும் நம் இருக்கைகளை,
பல முறை நகர்த்திவிடுமாறு, JOY STICK வைத்துள்ளார்.

அடுத்தது SPORTS CAR RIDE; காரின் வேகமும், திசையும்
கொடுத்துள்ளார் நம் கையில்! STEERING + ACCELERATOR!

சின்னச் சின்ன வாண்டுகள் ஜமாய்ப்பதைக் கண்டவுடன்,
என்னவரைக் கெஞ்சி, இருவரும் ஒரு காரில் ஏறிவிட,

அடிகள் ஐந்து கூட நேராக ஓட்ட முடியவில்லை; காரின்
அடியில் ஒற்றைத் ரயில் தண்டவாளம் போன்று இருக்க,

'இடி ராணி' போல இடித்து, இடித்து நான் ஓட்ட, என்னவர்,
'இனி நான் ஓட்டறேன்', எனக் கூறி, 'இடி ராஜா' ஆனார்!

மிகக் கடினமான ACCELERATOR; அழுத்த மிகவும் கஷ்டம்;
மிக எளிதான சுற்றும் STEERING; தொட்டாலே திரும்பும்!

சிரித்துச் சிரித்து விலா நோக, எங்கள் ஓட்டத்தை முடித்து,
சிரிப்பு பயமாக மாறிடும் அடுத்த பகுதிக்கு விரைந்தோம்!

FAST PASS என்று ஐந்து இடங்களில் வாங்க முடியும்; அந்த
FAST PASS வைத்தவர், 'கியூ' வரிசைகள் தாண்டிச் செல்வர்.

எங்கள் மகன் நுழைவு வாயிலில் தந்த வரைபடம் கண்டு,
எங்கள் FAST PASS இடங்களைத் தேர்வு செய்திருந்தான்!

:bump2:தொடரும்.........................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 43

அதிகம் கியூ வரிசை உள்ள இடங்களில் விரைவு நுழைவு!
அதிகம் பயம் உண்டாக்கும் இடத்திற்கு நாங்கள் வந்தோம்!

SPALSH MOUNTAIN RIDE பகுதி. எட்டுப்பேர் அமரும் படகு;
SPLASH இல்லாது மெதுவாகப் படகு அசைந்து புறப்பாடு!

055%20splash%20mountain.jpg


வழி முழுதும் பாட்டு ஆரவாரமாக ஒலிக்க, படகு போகும்
வழி நெடுகிலும் டிஸ்னீ கார்டூன் பாத்திரங்கள் இருக்க,

திடீரென ஒரு பெரிய பள்ளத்தில் படகு இறங்க, நாங்கள்
திடீர் பள்ளமே உச்சக் கட்டம் என நினைக்க, அது அல்ல!

எங்கள் படகு நின்றது ஒரு நொடி; மறு நொடி ஒரு கூச்சல்!
எங்கள் முன் சென்ற படகை அங்கு காணவில்லை; ஏன்?

எங்கள் படகு சில அடி முன்னேறினால் கீழே தெரிந்தது,
எங்களை அலற வைத்த, செங்குத்தான அதல பாதாளம்!

முட்செடிகள் போன்று அடர்த்தியாக ஏதோ அங்கு தெரிய,
சட்டென்று எங்கள் படகு கீழே தள்ளப்பட, நாங்கள் அலற,

மறு நொடி ஒரு காமரா ஒளி கண்களில் பட, அதற்கு
ஒரு நொடிக்குப் பின் படகு தரை தட்டி நின்று போனது!

046%20splashmountain.jpg


போட்டோ யாரோ எடுத்தார் என்று எண்ணி நடக்க, ஒரு
போட்டோவில் எங்கள் அலறல் பதிவாகித் தொங்கியது!

ஆம்! மேலே தெரிந்த காமரா ஒளி DISNEY WORLD ஏற்பாடு!
நாம் கீழே இறங்கிச் செல்வதற்குள், நம் போட்டோ ரெடி!

போட்டோ ஒன்று டாலர் பதிமூன்று! நாம் மேலும் வாங்க
போட்டோ ஒவ்வொன்றும் டாலர் ஒன்பது அதிகமாகும்!

எத்தனை சந்தோஷம் அனுபவித்து, பயந்து அலறினோம்!
அத்தனையும் நினைத்து மகிழ, வாங்கினோம் இரண்டு!

:photo: . . . தொடரும்.............

 
கீழே அமைதியாகப் புறப்படும் படகு, (மேற்கண்ட படத்தில்)
மேலே இருந்து விழுவதற்குள் செல்லுவதே, 'சில்' பயணம்!
:bounce:
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 44

BOAT ஒன்று பெரியதாக JUNGLE CRUISE RIDE செல்ல; அதில்
காட்டு விலங்குகள் பல வழியில் பார்க்கப் புறப்பட்டோம்!

055%20disney-world-jungle-cruise-9.jpg


அழகிய குண்டுப் பெண்ணொருத்தி அதை ஓட்டிச் செல்ல,
அழகான மழலை ஆங்கிலத்தில் அவள் கதைத்துத் தள்ள,

மெதுவாகச் சென்ற அந்தப் பயணத்தில், என் காமராவில்
நிறைவாகப் பல படங்கள் எடுத்துக் கொண்டே இருந்தேன்.

056%20disney_jungle_cruise.jpg


057%20jungle%20river%20cruise.jpg


யானைகள் பல குளித்து, நீர் அடித்து விடையாட, சில நீர்-
யானைகள் வாய் திறந்து பயமுறுத்த, ஒரு நெடிய மரத்தில்,

பெரிய மலைப் பாம்பு சுருண்டு கிடக்க, வண்ணத்துப்பூச்சி
பெரிய அளவில் இறகு விரித்துப் பரப்பியிருக்க, நாங்கள்,

குளுமையான நீர் மேல் சென்ற அந்தப் பயணத்தை, நன்கு
இனிமையாக ரசித்து, படகோட்டிக்கு நன்றி கூறி வந்தோம்!

ஓடும் படகில் எடுத்த படங்களாக இருப்பினும், அதில் பல
நாளும் நினைவலைகள் எழுப்ப வல்லவையாக இருந்தன!

அடுத்தது பேய் மாளிகை 'HAUNTED MANSION' சென்றோம்.
எடுத்த எடுப்பிலேயே திகில் ஊட்ட, ஒரு மயானப் பாதை!

முப்பது பேர் அடங்கும் ஒரு அறை மூடியதும், வேகமாய்,
முப்பது நொடியில் கீழே இறங்கியது! அறையில் மாட்டிய

படங்கள், எங்கள் அறையுடன் வராது, நிலையாக நின்றன;
மனங்கள் படபடக்க அனைவரும் வரிசையில் சென்றோம்.

இருவர் உட்காரும் குட்டி வண்டி; நானும் மகனும் ஒன்றில்;
என்னவர் மட்டும் ஒன்றில்; மெதுவாக நகர்ந்தது வண்டி!

:fear: . . தொடரும்...................
 
....

சில நீர்யானைகள் வாய் திறந்து பயமுறுத்த .....

062%20disney-world-jungle-cruise-hippo.jpg


ஒரு நெடிய மரத்தில், பெரிய மலைப் பாம்பு சுருண்டு கிடக்க .....

082%20jungle%20cruise%20phthon%2042844084_d7VEt-S.jpg


Photo curtesy: Internet..... still!! :cool:
 
.....
அடுத்தது பேய் மாளிகை 'HAUNTED MANSION' சென்றோம்.
எடுத்த எடுப்பிலேயே திகில் ஊட்ட, ஒரு மயானப் பாதை.

066%20haunted%20mansion.jpg


வரவேற்பு......ஆவிகள் இசைக் குழு !!

068%20haunted%20mansion.jpg
 
பழகுதமிழில், மிகமிக எளிமையாக,
அதே சமயம் சுவை சற்றும் குன்றாமல்
மிக அழகாகச் சொல்லிக்கொண்டு போகிறீர்கள்
கூடவே நாங்களும்!
 
நன்றி VSK சார்! தொடர்ந்து படித்து, எங்களுடன் பயணம் செய்யுங்கள்!
ராஜி ராம் :car:
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 45

ஒரு பேய்க்குரல் கதை சொல்லிக் கொண்டே வருகிறது!
பல ஆவிகள் பறந்து நகர்ந்தபடியே இருக்கின்றன. ஒரு

எலும்புக் கூடு கையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு,
எலும்பு விரல்களால் நம்மை அழைக்கின்றது, உதவிக்கு!

கதை சொல்லும் பேய், 'நாங்கள் தொண்ணூற்று ஒன்பது;
கதை கேட்கும் நீ நூறாவதாக இருக்கலாம்', என்கின்றது!

'ஹும்ம்ம், ஹும்ம்ம்' - அதுதான் பேய்ச் சிரிப்பாம்! நான்
'ஹூம்' சொல்லக்கூடத் தெம்பில்லாது நடுங்கிவிட்டேன்!

தம் கட்டை விரலை சுட்டும் விரலாக்கி, நம்முடனேயே
தாம் பயணம் செய்ய விரும்புகின்றன, மூன்று ஆவிகள்!

057%20haunted-mansion-disney-world.jpg


அழகிய அறை ஒன்று கீழே தெரிய, அதில் ஜோடிகளாகப்
அழகிய உடை அணிந்த ஆவிகள் நடனம் ஆடுகின்றன.

நடனம் ஆடும் ஆவிகள் எல்லாம் மேசையின் ஊடேயும்
நடனம் ஆடி, வெளி வந்தும் சுற்றிச் சுற்றி ஆடுகின்றன.

064hauntedmansion4.jpg


ஒன்று குனிந்து, சிறந்த தன் பிறந்த நாள் 'கேக்'கின் அருகில்
சென்று, அதை ஊதி அணைத்து, நன்றாய்ச் சிரிக்கின்றது!

பெரிய மேசை ஒன்றில், விருந்துச் சாப்பாட்டு உணவுகள்;
அருகில் அமர்ந்து உண்ணுகின்றன (!) அங்கு சில ஆவிகள்!

067%20hauntedmansiondetail.jpg


எப்படி இதையெல்லாம் செய்கிறாரோ என வியப்புதான்;
இப்படி செய்தால்தானே நல்ல உலகப் புகழ் கிடைக்கும்!

வெளியே வரும் முன்னே, ஒரு பெரிய நிலைக்கண்ணாடி;
தனியே இருந்த என்னவர் சட்டை மேல், ஆவி தெரிந்தது!

பயந்துபோய் மகனை நோக்கித் திரும்ப, என்னை அடுத்து
பயம் இல்லாமல் இன்னொன்று அமர்ந்து இருக்கின்றது!

உங்களுடன் ஒரு ஆவி நண்பனாக வரும் - என அறிவிப்பு;
எங்களுடன் ஒன்றும் வராததால், போனது எங்கள் தவிப்பு!

:scared:
தொடரும் .............

 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 46

மலை போன்ற பெரிய அமைப்பு; தண்டவாளம்; ரயில்; அது
'அலை அலையாகப் பயம் தரும் பயணம்', என்றான் மகன்!

பார்த்துவிடுவோம் என்ற 'குண்டு' தைரியத்தில் அதில் அமர,
வியர்த்துவிட்டது பயணம் ஆரம்பமான உடனே! தடக், தடக்

சத்தத்துடன் தண்டவாளத்தில் வளைந்து, வளைந்து செல்ல,
சத்தமாகக் கத்தாவிட்டால், பயம் அதிகமாகவே தெரிந்தது!

என் அலறலோ 'வீல், வீல்'; மகனும், என்னவரும் COOL! COOL!
என் முதல் பயங்கர RIDE அதுதான், வேகத்தில்! ரயில் பாதை,

முறுக்கு சுற்றுவதுபோல ரயிலைச் சுற்றிவிட, கூச்சலுடன்,
சிறுவரும், பெண்களும் ரசித்து மகிழ, RIDE முடிவுக்கு வந்தது!

060Big-thunder-mountain-magic-kingdom-704477.jpg


இதுதான் மிக வேகமான RIDE என, மகனின் நண்பன் சொல்ல,
இதன் 'அண்ணன் RIDE' அடுத்ததாக வந்து, நடுங்க வைத்தது!

அதுதான் 'SPACE MOUNTAIN RIDE'; ரயிலைவிட அதி வேகம்!
மெதுவாக பயத்தை விரட்டி, FAST PASS மூலம் சென்றோம்.

அறுபது மைல் வேகத்தில் புறப்பட்டு, பிரகாசமான ஒளியில்
ஒரு நொடி சென்று, இருட்டுப் பாதாளத்தில் தள்ளிவிட்டது!

069%20space%20mountain%20ride.jpg


தூரத்தில் பூமி உருண்டையாக; கும்மிருட்டில் படு வேகமாய்,
ஓரத்தில் நம்மைத் தள்ளி, இடம் வலமாக இருக்கை திரும்ப,

பல நட்சத்திரங்களின் GALAXY தெரிய, விண்வெளியில் விழும்
சில எரி நட்சத்திரங்கள், விண்வெளிக் கலங்கள் கண்ணில் பட,

ஒரு நொடி ஏதேனும் ஆணி கிழன்றால், என்ன ஆகுமோ என,
ஒரு பயம் மனதில் படர, பயத்தைக் கூச்சலால் போக்கினேன்!

பேய் மாளிகையில் வந்ததைவிட, இதில்தான் அதிக திகில்!
பேய் அறைந்ததுபோல் ஆனேன், அந்த RIDE முடிந்தபோது!
:jaw:தொடரும் .......................
 
Last edited:
Now I know why the space mountain ride was so scarrrrry!

Got the photo of the ride with lights ON!!

070SpaceMountainLightsOn2.jpg


Photo courtesy: Internet, still (pun intended!) ..... :cool: Raji Ram
 
பேயாட்டம் பார்த்தபின்னர்
பேய்வேகப் பயணத்தால்
பேயறைந்ததுபோல் ஆனீரோ
பேய்க்கூச்சல் போட்டீரோ!:)
 
உச்ச ஸ்தாயி அலறல்தான் பேய்க்கூச்சலோ? அறியேன்!! :shocked:

ராஜி ராம்
 
மீண்டு வந்தது என் கணினி!

அதி வேகத்தில் இயங்கும் திட்டம் எடுத்தபின்,
அதி வேகம் கணினியில் கண்டு அதிசயித்தேன்!

கண் இனிப் படுமோ இதன் வேகம் கண்டு, எனக்
கணினி பற்றி நானும் ஐயம் கொஞ்சம் கொள்ள,

வன்பொருள் ஒன்று மெல்லச் சிதைந்து போய்,
தன் பங்காகக் கணினியையே நிறுத்திவிட்டது!

மாற்றும் முயற்சியிலே நாட்கள் பல ஓடிவிட,
ஏற்றம் மிகு நட்பு வட்டம் கொஞ்சம் விலகிவிட,

நீங்குதல் நலம் என வள்ளுவத்தில் கண்டாலும்,
நீங்குதல் கடினமே, கணினியைப் பொறுத்தவரை!

ஏங்கித்தான் போனது மனது, கணினி வரவிற்கு;
பாங்குடன் தொடர்கின்றேன், நண்பர்களே வருக!

இனிதே பயணம் போவோம், கவிதை மலர்களுடன்;
இனி வரும் நாட்களைத் தொடருவோம், நட்புடன்!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :typing:
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 47

பயங்கர வேக ஆட்டம் முடிந்து, நாங்கள் வெளியேறும்போது,
பயந்துபோன என் முகம் அங்கு உள்ள திரையில் தெரிந்தது!

அமைதியான அழகான RIDE ஒன்று வேண்டாமா? அதுதான்
அமைதியான PETER PAN SAIL ஆகும்; இருவர் அமரும் படகு;

ஏறியதும், மெதுவாக மேலே ஆகாயத்தில் போவதுபோல;
'சீரியல்' விளக்குகள் வீதிகளில்; விளக்கு ஒளிரும் வீடுகள்;

059%20peterpan.jpg


வாகனங்கள் செல்லுவதும், அவற்றின் ஒளி விளக்குகளும்,
வானத்திலிருந்து அனைவரும் காண்பதுபோலவே இருந்தது!

ஓரத்தில் பல DISNEY கதாபாத்திரங்கள்; அனைத்தும் பாட,
தூரத்தில் PETER PAN கப்பல் ஓட்டும் அழகு கண்களில் பட,

அதைத் தாண்டியதும், நாம் வந்த படகு நின்று போகின்றது;
இதை மறக்கவே முடியாது; மனம் மகிழ்ந்தது; நிறைந்தது!

061%20peter%20pan.jpg


பின்னர், சின்ன 'மிக்கி' ரயிலில் ஏற மனம் விழைந்தாலும்,
இன்னும் கொஞ்சம் சுற்றி வரலாமெனத் தீர்மானித்தோம்!

:wave:தொடரும் ........................
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 46
...........................

அறுபது மைல் வேகத்தில் புறப்பட்டு, பிரகாசமான ஒளியில்
ஒரு நொடி சென்று, இருட்டுப் பாதாளத்தில் தள்ளிவிட்டது!

069%20space%20mountain%20ride.jpg


தூரத்தில் பூமி உருண்டையாக; கும்மிருட்டில் படு வேகமாய்,
ஓரத்தில் நம்மைத் தள்ளி, இடம் வலமாக இருக்கை திரும்ப,

பல நட்சத்திரங்களின் GALAXY தெரிய, விண்வெளியில் விழும்
சில எரி நட்சத்திரங்கள், விண்வெளிக் கலங்கள் கண்ணில் பட,

ஒரு நொடி ஏதேனும் ஆணி கிழன்றால், என்ன ஆகுமோ என,
ஒரு பயம் மனதில் படர, பயத்தைக் கூச்சலால் போக்கினேன்!
.................
'கிழன்றால்' என்பதைக் 'கழன்றால்' என மாற்றுவதற்குள், கணினி படுத்தது!

தமிழ்ச் சொற்களின் ஆராய்ச்சி நடப்பதால், இதன் பொருள்...........

கிழம் + கழன்றால் = கிழன்றால்!! ஆம்! வயதான அடையாளமே அதுதானே!

:decision: ராஜி ராம் :peace:
 
கடல் கடந்த முதல் அனுபவம் ..... 48

TOY STORY யில் வரும் BUZZ LIGHT YEAR RIDE அடுத்தது;
TOY போன்றே, இருவர் அமரக் கிண்ண வடிவ இருக்கை.

இரு புறமும் ZURG வில்லனின் ஆட்கள் இருக்கிறார்கள்;
இரு புறமும் நாம் சுடுவதற்கு, சிறிய லேசர் துப்பாக்கிகள்.

070%20zurg.jpg


071%20zurg.jpg


எங்கள் மகன் சுட்டுத தள்ள ஆரம்பிக்க, நானோ உடனே
எங்கள் காமராவில் படங்களைச் சுட்டுத் தள்ளி இருக்க,

என்னவர் 10,500 பாயின்ட்டுகள் எடுக்க, நான் ஆவேசமாய்
என்னுடைய துப்பாகியால் ZURG ஐச் சுட்டு ஜெயித்துவிட,

முடிவில் 25,000 பாயின்ட்டுகள் எடுத்த நான் எம்பித் துள்ள,
முதலாவதாய் மகன் 55,000 பாயின்ட்டுகளை அள்ளினான்!

அடுத்து வந்தது GOOFY RIDE; விடவில்லை நாங்கள்; அதை
எடுத்து மற்றவையுடன் ஒப்பிட்டால், அது வெறும் 'ஜுஜுபி'!

குட்டி வட்டம் அடித்தபின், எங்களை இறக்கிவிட்டது; எதிரே ௦,
குட்டி மிக்கியின் ரயில் புறப்படத் தயார் நிலையில் இருக்க,

நிம்மதியான ஒரு பயணம்; உள் நுழைவாயில் வரையில்,
நிம்மதிப் பெருமூச்சு நாங்கள் விட, கொண்டுவந்து விட்டது!

நிறைய நடை மிச்சம்தான்; FERRY BOAT தயார் நிலையில்;
சிறிய ஓட்டமும் நடையுமாகச் சென்று அதில் ஏறினோம்!

:fish2:தொடரும் ....................
 

Latest posts

Latest ads

Back
Top