கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 53
'ஒரு கோவில் உண்டா, குளம் உண்டா'? என்பது போல,
'ஒரு Park உண்டா, Beach உண்டா? என்றும் கேட்பார்கள்!
நாங்கள் கோவில், குளம் பார்த்தோம்! இனிமேல், இங்கு
நாங்கள் பார்க்க வேண்டியது, மற்ற இரு இடங்களுமே!
அக்காவின் இரண்டாம் மகன், மனைவி, மகனுடன் வர,
அக்காரணத்தை முன்னிட்டு, குழந்தைகள் விளையாட,
நீரூற்றுக்கள் இருக்கும் 'Water Park' காணச் சென்றோம்.
நீரில் விளையாட, பல குழந்தைகள் ஆவலாக இருக்க,
'நட்பு மழை' நட்பில்லாத மழையாக மாறிப் பொழிய,
தட்ப வெப்பம் குளிராக மாற, எல்லோரும் ஓடிப் போக,
நீருற்றுக்களைப் படம் எடுத்தேன், காலியாக! பின்னர்
நீரூற்று மேல் சூரியக் கிரணங்கள் விழ, மிக அழகிய
வானவில் வண்ணங்கள் தோன்றி மனத்தை மயக்க,
வானவில் வண்ணங்கள் சிறைப்பட்டன, காமராவில்!
இரு வயது மதிக்கத் தக்க சிறுவன் ஒருவன், நடக்காது,
இரு குட்டிக் கால்களால், பந்தை உதைத்து விளையாட,
எங்கள் வீட்டு வாண்டும், பந்தை உரிமை கொண்டாட,
எங்கள் பாடு படு திண்டாட்டமானது, பந்தைப் பிடுங்க!
ஊஞ்சல்கள், சறுக்கு மரங்கள், வளைந்த பாலங்கள்;
நெஞ்சில் நிற்கும் பல குழந்தை விளையாட்டுக்கள்!
எங்கள் கண்ணம்மா வேடிக்கை பார்த்து, மகிழ்ந்தாள்;
எங்கள் உதவியுடன் ஊஞ்சல் ஆடிச் சிரித்து ரசித்தாள்!
நன்கு மாலைப் பொழுதைக் கழித்த பின், எல்லோரும்
வந்து சேர்ந்தோம், எம் இனிய இல்லம், இரவு நேரம்!
:car: தொடரும் ......................