• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

DSCN6901.JPG
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 86


நீண்ட மரங்களைப் பாறாங்கல் மீது பார்த்தவுடன்,

நீண்ட வேர்கள் எப்படி உட்சென்றன என வியப்பு!

கண்ணில் தோன்றுவது எல்லாமே வண்ண மயம்;
மண்ணில் விழுந்த இலைகள் கூட, வண்ண மயம்;

புறப்படவே மனம் இல்லாவிடினும், மலைகள் மீது
இருக்கின்ற வேறு வண்ண ஜாலங்கள் கண்டுவிட,

அங்கிருந்து நகர்ந்தோம்; குன்றுகள் பற்பல இருக்க,
பாங்காகப் படர்ந்தன, அவற்றின் மீது வண்ணங்கள்!

பெரிய மலர்க் கொத்துக்களை நிறுத்தியது போல,
அரிய காட்சியாக, அது சிந்தையிலே நிறைந்தது!

பனிச்சறுக்கு விளையாட்டிற்கு அமைத்த பாதைகள்
தனியாகத் தெரிந்தன, வண்ணங்களே இல்லாமல்!

மரங்களை வெட்டி இப் பாதைகளை அமைத்ததால்,
நிறங்கள் பல இல்லாமல், பச்சையாக விளங்கின!

உணவு உண்ண நேரம் ஆனதால், சிறிது நேரத்தில்,
உணவகம் ஒன்றை நாடினோம். சிறுவன் ஒருவன்

விடியோ விளையாட்டு ஆடிக்கொண்டு இருந்தான்;
விரைவில் வந்து, அன்னைக்கு நன்கு உதவினான்.

அன்னை நடத்தும் உணவகத்தில், உதவியாளனாக,
தன்னை நினைத்து ஓடியதை, நாங்கள் ரசித்தோம்!

பதினாறு அங்குல விட்டத்தில், வட்டப் Pizza, நடுவே

பதவிசாக அமர, நான் அசந்தே போனேன்! அதிலே

போடும் சீஸ், நான் வெறுக்கும் ஒரு வஸ்து! எனவே
போட்டேன் அதை இன்னொரு தட்டிலே; அதன் பின்

கெட்டி ரொட்டி போன்ற அடிப்பாகத்தை உண்டேன்!
எட்டிக் காயாகவே எனக்கு இந்த வஸ்து இருக்கிறது!

:car: . தொடரும் ......................
 
Raji, call me Bushu if you like, that is how my family and friends call me.. I changed the name here because I did not want to give an impression that I was impersonating a Tamil Brahmin.. my father used to call me that and the first sound I made was Bu so and before I was officially named I became Bushu.. please feel free to call me Subha or Bushu.. choice is yours.. :-)

by the way, lovely pictures.. feeling so nostalgic.. :-)
 
Thank you Bushu! All the two hundred + photoes are lovely, in my album.

But, I am posting a few, which are amazing and relevant to my write-up! Enjoy viewing... :)
 

பெரிய மலர்க் கொத்துக்களை நிறுத்தியது போல,
அரிய காட்சியாக, அது சிந்தையிலே நிறைந்தது!

DSCN6933.JPG


 

பனிச்சறுக்கு விளையாட்டிற்கு அமைத்த பாதைகள்
தனியாகத் தெரிந்தன, வண்ணங்களே இல்லாமல்!

DSCN6875.JPG


 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 87


மீண்டும் பயணம் தொடர்ந்தோம், சுற்றிலும் பல

குன்றுகள் கொண்டு இருந்த, வளந்த பாதையில்.

மலைகளில் பலவித வண்ணங்கள் பரவியிருக்க,
நிலை கொள்ளாது போட்டோக்களை எடுத்தவாறு,

இயற்கை அன்னையின் புதிய பரிமாணங்களை,
வியந்து நோக்கி, நான் மன நிறைவடைந்தேன்!

மலைகளில் பாதைகளை அமைத்து இருப்பதால்,
மலைப் பாறைகள், சாலை விளிம்பிலே உள்ளன.

ஒரு இடத்தில் பாறையின் வடிவம், காண்பதற்கு
ஒரு மனிதக்குரங்கு முகப் Profile போல இருந்தது!

குன்றுகள் தூரத்தில் நீல நிறமாகவே தெரிந்தாலும்,
சென்று அருகில் கண்டால், வண்ண மயமாயுள்ளன!

அழகிய குளம் ஒன்று கண்ணில் பட்டது; சுற்றிலும்
அழகிய வயலெட் நிறத்திலே மலர்கள் தெரிந்தன.

படங்கள் சில எடுக்க, நான் மட்டும் இறங்க, அங்கு
படங்களுக்கு 'போஸ்' தர, இருந்தன வாத்துக்கள்!

இந்த முறை என்னமோ புரியவில்லை! பல முறை
இந்த வாத்துக்களே நிறைய எதிரிலே வருகின்றன!

நீரில் தாவி குதித்து, நீந்தி விளையாடின, அழகாக;
நேரில் கண்ட எல்லோருமே, ஆரவாரம் செய்தனர்!

அலுக்காமல் படங்களை எடுத்ததுடன் நில்லாமல்,
அலுங்காமல் சிறிய மூவீ ஒன்று எடுத்துவிட்டேன்!

காமராவில்
மலர்களைச் சிறைப் பிடிக்க, அப்போது,

காமராவின் பாட்டரி தீர்ந்ததாக வந்தது அறிவிப்பு!

:photo: . . . :nono:

தொடரும் .....................


 

மீண்டும் பயணம் தொடர்ந்தோம், சுற்றிலும் பல

குன்றுகள் கொண்டு இருந்த, வளந்த பாதையில்.

DSCN6944.JPG


 

ஒரு இடத்தில் பாறையின் வடிவம், காண்பதற்கு
ஒரு மனிதக்குரங்கு முகப் Profile போல இருந்தது!

DSCN6951.JPG
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 88

சக்தி இல்லா பாட்டரி ஆயினும், சிறிது நேரத்தில்,
சக்தி கொஞ்சம் பெற்று, சில படங்களுக்கு உதவும்!

நெடுஞ்சாலையில் சென்றபோது, நடுவில் இருந்த
அடுக்கடுக்கான புற்களில், வண்ணங்கள் இருந்தன.

வீட்டுக்குத் திரும்ப வேறு வழியாக வந்தோம். அது
வீடுகள் இருபுறமும் கொண்ட, குறுகியது. எனவே,

சென்ற எங்கள் பயண வேகம் கொஞ்சம் குறைந்தது.
சென்ற வழி நெடுகிலும், வண்ண மயமான மரங்கள்.

மின்சாரம் வழங்கும் கம்பிகள் இருந்ததால், அந்த
மின்சாரக் கம்பிகள் புகைப்படங்களிலே தெரிந்தன.

சில படங்களுக்கு பாட்டரி உதவி, பின் தீர்ந்துவிட,
சில படங்களுக்கு மகனின் காமராவை நாடினேன்!

அழகிய பெரிய எரி ஒன்றைச் சுற்றியே பாதை வர,
அழகிய சிறு மணல் பரப்பும், பீச் போல அங்கிருக்க,

அமர்ந்து உண்ண மேசைகள், பெஞ்சுகள் இருக்க,
அமர்ந்துகொண்டு, பரப்பினோம் பாக்கெட்டுகளை!

நவராத்திரி சமயம் அல்லவா? எனவே வடையும்,
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டலும், எங்கள் வசம்!

பீச்சில் உண்ட சுண்டலால், சென்னையின் மெரீனா
பீச்சின் நினைவு , எங்களது மனதிலே நிழலாடியது!

ஏரியின் அருகே சென்று, சன்ன அலைகள் கண்டு,
ஏரியின் நீரிலே அளைந்துவிட்டுத் திரும்பினோம்.

அடுக்கடுக்காக மணல் வடிவங்கள், நீரடியில்! அதை
எடுத்துப் பாலைவனமாகக் காட்டலாம், சினிமாவில்!

தொடரும் .....................


:car: . தொடரும் .....................
 
Last edited:
நெடுஞ்சாலையில் சென்றபோது, நடுவில் இருந்த
அடுக்கடுக்கான புற்களில், வண்ணங்கள் இருந்தன.


DSCN6782.JPG
 
வீட்டுக்குத் திரும்ப வேறு வழியாக வந்தோம். அது
வீடுகள் இருபுறமும் கொண்ட குறுகியது...

DSCN6982.JPG



 

மின்சாரக் கம்பிகள் புகைப்படங்களிலே தெரிந்தன...

DSCN6983.JPG
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 89

இரவு நேரம் நெருங்கி வர, மீண்டும் பயணித்து,
இரவு எட்டு மணிக்கு இனிய இல்லம் சேர்ந்து,

விரைவாக உணவு தயாரித்து, உண்ட பின்னர்,
விரைவாக மற்றவர் எல்லோரும் உறங்கிவிட,

இல்லம் சேர்ந்தவுடன் சக்தி ஏற்ற வைத்திருந்த,
நல்ல ஆல்பங்கள் செய்தி உதவும் காமராவின்

பாட்டரியை எடுத்துப் பொருத்தி, ஆரம்பித்தேன்,
பார்த்த காட்சிகளின் ஓர் ஆல்பத்தைத் தயாரிக்க.

இருநூறுக்கும் மேல் இருந்த அந்தப் படங்களை,
இரு மணி நேரம் எடிட் செய்து, ஒவ்வொன்றாக

ஆல்பத்தில் இட்டால் நேரம் விரயமாகும் என்று,
ஆல்பத்தில் மொத்தமாக load செய்து பார்த்தால்,

எடிட் செய்தது எதுவுமே அதில் வராமல், முன்பு
எடிட் செய்யாது பதிவான படங்கள்தான் வந்தன!

அவசரமாக, எடிட் செய்ததை Save செய்யாது விட,
அபராதமாக, அதற்கு மேலும் மூன்று மணி நேரம்!

ஆல்பத்தில் ஒவ்வொரு படமாக எடிட் செய்தபின்,
ஆல்பத்தை முடித்தபோது, காலை மணி மூன்று!

உடன் பிறப்புகளுக்கு அனுப்பிய மறு நொடியில்,
உடல் நடுங்கியது, தனியாக விழித்து இருந்ததில்!

நித்திரா தேவியின் திருவடிகளை நாடினேன்; ஒரு
நிமிட நேரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.

தவறுகள் செய்துதான் எதையுமே கற்க வேண்டும்!
தவறு இன்று செய்ததை, என்றும் மறக்க மாட்டேன்!

:photo: . . . :typing:

தொடரும் .................
 

வீட்டுக்குத் திரும்ப வேறு வழியாக வந்தோம். அது
வீடுகள் இருபுறமும் கொண்ட, குறுகியது......

IMG_1684.JPG



 

Latest ads

Back
Top