Raji Ram
Active member
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 94
நால்வழிப் பாதைகள் இரு மருங்கும் அமைந்திருக்க,
நல்ல வேகத்தில் அந்த நெடுஞ்சாலையில் பயணம்.
கட்டணம் வசூலிக்கும் இடங்களில், இந்தத் தடவை
கட்டணம் டாலராகவே செலுத்த வேண்டும். E Z Pass
மகன் தன் காரில் வைத்துள்ளான். இந்த இடங்களில்,
அவன் ஓட்டுகிற படு வேகம் குறைந்துதான் போனது!
சில இடங்களிலே நான்கு வழிப் பாதைகள் இருந்தன;
சில இடங்களிலே இரு வழிப் பாதைகளாக இருந்தன.
சில இடங்களிலே போக்குவரத்து மிகக் குறைவுதான்;
சில இடங்களிலே வண்டிகள் அதிகமாகத் தெரிந்தன.
போக வர, வேறு வேறு பாதைகள் அமைத்துள்ளதால்,
போகும் வண்டிகளெல்லாம், போகும் ஒரே திசையில்!
ஒரு வேன் தன் இணைப்பிலே காரை ஏற்றிச் செல்ல,
அது ஒய்யாரமாக, பெட்ரோல் செலவின்றிச் சென்றது!
நான்கு மணி நேரப் பயணத்திலே, இரண்டு முறைகள்
நன்கு அமைந்த ஓய்விடங்களில் நிறுத்தினோம்; பின்
கட்டிடங்கள் வானுயரக் கண்களிலே பட்டு, நாங்கள்
எட்டினோம் நியூயார்க் நகரை என்பதை அறிவித்தன.
அழகிய 'டனல்' வழியாகப் பாதை சென்றது; மின்னும்
அழகிய விளக்குகள் ஒளி காட்ட, மனம் மயங்கியது!
மிகவும் பெரிய உலோகப் பாலம் ஆற்றின் மேலிருக்க,
மிகவும் மெதுவாக, வண்டிகள் அதன் மேல் ஊர்ந்தன.
:bump2: . தொடரும்......................