• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 79

புதிய செய்திபோல இதைக் கேட்ட நான், மீண்டும்

புதிய கேள்வியைக் கேட்க விழைந்தேன். அங்கே

மீன் பிடிக்கும் சிலரைப் பற்றியது, அந்தக் கேள்வி;
மீன் பிடித்தால், அதை வைக்க கூடை இல்லையே,

எனக் கேட்க, இன்னொரு வினோதமான விஷயம்
எனக்குக் கூறினாள் பெண்ணரசி! மீன் பிடித்ததும்,

அதை கொக்கியிலிருந்து விடுவித்து, மறுபடியும்
அதை, தண்ணீரிலேயே விட்டுச் செல்வார்களாம்!

இதென்ன புது விளையாட்டு, என வியந்து, நான்
இந்த மீன்களெல்லாம் காயத்தால் கஷ்டப்படுமே,

என்று மீண்டும் கேட்க, இப்படிப் போனவை, நீருள்
சென்றும், காயத்தால் உணவு உண்ண முடியாமல்,

இறந்து போகும் என்றாள்! என் மனம் வருந்தியது!
இரக்க மனம் கொண்டவர், இப்படிச் செய்வாரோ?

இன்னும் கொஞ்ச தூரம் நடந்ததும், குட்டி Beach!
சின்ன அறிவிப்புப் பலகை அங்கு இருக்க, சென்று

படித்தேன்; அமெரிக்க யுத்தத்தில் இறந்த மூன்று
துடிப்பான இளைஞர்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

மிக இளம் வீரர்கள்; இருபது வயதுகூட எட்டாதவர்.
மிகப் பெருமைதான் அவர்களின் அன்னையருக்கு!

செல்லமாக வளர்க்கும் சிறு வயதிலே, போருக்குச்
செல்ல அனுமதிப்பது, சாதாரண நிகழ்வு அல்லவே!

குட்டி பீச்சில், ஒரு குட்டிப் பெண், கற்களை எடுத்து,
குட்டிக் கையால் எட்ட வீசி, குதித்து மகிழ்ந்தாள்.

இரண்டு அடிகள் உள்ள சிறு மணல் பரப்பு, அவளது
சிறந்த விளையாடும் இடமாக மாறியது விந்தை!

:car: . தொடரும் ......................
 

Catch and release is a practice within
recreational fishing intended as a technique of conservation.

After capture, the fish are unhooked and returned to the water before experiencing serious
exhaustion

or injury. Using barbless hooks, it is often possible to release the fish without removing it from the water.

A slack line is frequently sufficient. :fish2:
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 80

அதிகம் வேலைகள் இல்லாத சமயம்தான், மனம்

அதிகம் சிந்திக்கும் தத்துவங்களைப் பற்றி! ஆம்!

பயணங்கள் எதுவும் இல்லாது இருப்பதால், நான்
பயணித்தேன் மனத்தில் வேறு திசைகளில்; இங்கு

வந்து மூன்று திங்கள் முடிந்துவிட்ட நிலையிலே,
வந்த இயற்கை மாற்றங்கள் பற்றிய சிந்தனையே!

துளிர் விட்டுப் பசுமை மயமாகக் காட்சி தந்தவை,
குளிர் வந்துவிட்ட நிலையில், நிறம் மாறுகின்றன.

இலையுதிர் காலம் தொடங்கியதும், உஷ்ணமான
நிலையும் மாறி, வெய்யில் இதமாக இருக்கின்றது!

இளம் இலைகள் முதிர்ந்து, வாடி, வதங்கி, சுருங்கி,
நிலம் தொடுவதற்காகக் கீழே வந்து விழுகின்றன!

நமது வாழ்க்கையும் இப்படித்தானே! குழந்தையாக
இனிது சென்ற தருணங்கள்; பின் படிக்கும் காலம்,

வேலை, திருமணம், வாரிசுகள் என்று சுழன்றபின்,
வேலைப் பளு குறைந்த முதுமைக் காலம் வரும்!

இலைகள் உதிர்வதுபோல, வாழ்வு முடிந்ததவுடன்,
நிலையான உயர் பதவி, சுவர்க்க லோகமேதான்!

நல்ல விஷயங்களிலே நாட்டத்துடன் வாழ்ந்தால்,
நல்ல வாழ்வுதான் நமக்கும், இறுதிக் காலம் வரை!

மனம் கொஞ்சம் சோகமாகுமோ என்ற ஐயத்தால்,
மனம் உற்சாகம் அடையக் காமராவை நாடினேன்.

Picasa இருந்தால், மிக எளிது ஆல்பங்கள் செய்வது!
Picasa Software - உடன், வேலை செய்ய அமர்ந்தேன்!

தொடரும்..................
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 81


வாடிய திராக்ஷைச் செடி இலைகள், வருந்த வைத்தன;
நாடிய பல வண்ணங்கள், வேறு செடிகளில் இருந்தன!

தோட்டத்தில் பட்டன் ரோஜாக்களில் மீண்டும் வசந்தம்!
தோட்டத்தின் அழகைக் கூட்ட, அவை மலர்ந்திருந்தன.

சில செடிகளில் அடர் பச்சை நிறம் மஞ்சள் நிறம் ஆக,
சில செடிகளில் அவை சிவப்பாக மாறத் தொடங்கின.

சில செடிகளில் அடர் சிவப்பு நிறம் அழகாய்த் தெரிய,
சில புல் வகைகளிலே வெண்மை நிறமே படர்ந்தது!

வருண தேவன் தயவு; அடிக்கடி குளிர் மழை பொழிய,
வருத்தும் வெய்யிலின் தாக்கமும் குறைந்துவிட்டது!

இவர்கள் நான்கு விதமாகவே காலங்களைப் பிரிப்பர்;
இந்தியாவில் ஆறு காலங்களைச் சொல்லுகின்றோம்.

வசந்தம், கோடை, இலையுதிர் மற்றும் பனிக்காலம்;
வரிசைப் படுத்தி இவர்கள் சொல்லுகிறார்கள். நாம்,

இளவேனில், முதுவேனில், கார், குளிர், முன்பனி,
பின்பனி என்று சித்திரையில் தொடங்கி, ஒவ்வொரு

காலமும், இரு மாதங்கள் கணக்கிலே கூறுகின்றோம்;
காலங்களை விரிவான வகைகளாக பிரிக்கின்றோம்.

அடுத்த ஆர்வம் கொண்ட வேலையை நான் செய்தேன்;
எடுத்த சில படங்களை 'எடிட்' செய்தேன்; சேகரித்தேன்.

:photo: . . . :typing:

தொடரும் .....................
 

வாடிய திராக்ஷைச் செடி இலைகள், வருந்த வைத்தன...

DSCN6689.JPG


பட்டன் ரோஜாக்களில் மீண்டும் வசந்தம்!

DSCN6698.JPG
 

சில செடிகளில் அடர் பச்சை நிறம் மஞ்சள் நிறம் ஆக,

DSCN6701.JPG


சில செடிகளில் அவை சிவப்பாக மாறத் தொடங்கின.

DSCN6700.JPG


 

சில செடிகளில் அடர் சிவப்பு நிறம் அழகாய்த் தெரிய,


DSCN6694.JPG


சில புல் வகைகளிலே வெண்மை நிறமே படர்ந்தது!

DSCN6699.JPG


 
Re Post #603, an item which I read in another newsgroup may be relevant.

"On the first day, God created the dog and said, "Sit all day by the door of your house and bark at anyone who comes in or walks past. For this, I will give you a life span of twenty years." The dog said, "That's a long time to be barking. How about only ten years and I'll give you back the other ten?" And God saw it was good. On the second day, God created the monkey and said, "Entertain people, do tricks, and make them laugh. For this, I'll give you a twenty-year life span." The monkey said, Monkey tricks for twenty years ? That's a pretty long time to perform. How about I give you back ten like the dog did? And God, again saw it was good. On the third day, God created the cow and said, "You must go into the field with the farmer all day long and suffer under the sun, have calves and give milk to support the farmer's family. For this, I will give you a life span of sixty years." The cow said, "That's kind of a tough life you want me to live for sixty years. How about twenty and I'll give back the other forty?" And God agreed it was good. On the fourth day, God created humans and said, "Eat, sleep, play, marry and enjoy your life. For this, I'll give you twenty years." But the human said, Only twenty years ? Could you possibly give me my twenty, the forty the cow gave back, the ten the monkey gave back, and the ten the dog gave back; that makes ….. eighty, okay ? " Okay," said God, "You asked for it. " So that is why for our first twenty years, we eat, sleep, play and enjoy ourselves. For the next forty years, we slave in the sun to support our family. For the next ten years, we do monkey tricks to entertain the grandchildren. And for the last ten years, we sit on the front porch and bark at everyone. Life has " Now " been explained to you. There is no need to thank me for this valuable information. I'm doing it as a public service. If you are looking for me I will be on the front porch."
 
I got this story from my friend some time back and was thinking about it when I wrote that post!

Thanks for sharing it in this thread, Prof. MSK Sir! :typing:
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 82


வார விடுமுறை நாட்களிலே வேலை செய்தால்,

வார நாட்களில் ஒருநாள் விடுமுறை எடுக்கலாம்.

சென்ற வாரம் முழுவதும், அலுவலகமே கதி என்று
சென்ற மகனுக்கு, இந்த வெள்ளியன்று விடுமுறை!

இலையுதிர் காலத்தில், வசந்த காலத்தில் துளிர்த்த
இலைகள் நிறம் மாறி, வண்ண ஜாலங்கள் காட்டும்.

நீண்ட நெடும் சாலைகளின் இரு மருங்கிலுமுள்ள,
நீண்ட நெடிய மரங்களில், வண்ணங்கள் மிளிரும்.

சென்ற இரு முறைகளிலும், எம் அமெரிக்க விஜயம்,
மூன்று மாதக் காலமே ஆனதால், அக்டோபர் வரை

தங்காது, இந்தியா திரும்பினோம்; இந்த முறைதான்
தங்கியுள்ளோம் இக் காலத்தில், பாஸ்டன் நகரில்!

இயற்கை அன்னையின் இந்தப் பரிமாணம், நாங்கள்
இன்றுவரை படங்களில் மட்டுமே பார்த்துள்ளோம்!

வெள்ளியன்று, சில மணி நேரம் பயணிக்கலாமென,
துள்ளும் குதூகலத்துடன் மகன் கூற, மகிழ்ந்தோம்!

இதனிடையில், பறவைகள் திராட்சையின் இனிப்பு
இதமாகத் தெரியத் தொடங்க, படை எடுத்தன! நான்

காமராவில் சிறைப் பிடிக்கச் சென்றபோதெல்லாம்,

காமராவில் சிக்காது, எட்டிப் பறந்தன; கூரை மேல்

அமர்ந்த சில பறவைகளைப் படம் பிடித்தேன்; அதை
அமர்ந்து ஆல்பத்திலிட, நேரமே கிடைக்கவில்லை!

மீண்டும் திராட்சையில் ஜாம் செய்ய முயல, அதுவும்
மீண்டும் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது! ஆம்!

ஊறுகாய் செய்த அதே வாணலியில் ஜாம் செய்திட,
ஊறுகாயின் காரம் அதிலே சிறிது இறங்கிவிட்டது!

நன்றாகத் தேய்த்த பாத்திரத்திலும், காரம் உட்சென்று,
நன்றாக உள்ளே 'பிடித்து' உள்ளதையும் அறிந்தேன்!

Chilly - Chocolate போலவே, இது ஒரு ஜாம் வகையாக,

Chilly - Grape ஜாம் ஆனது, ஒரு வினோத அனுபவமே!

:high5: . . . :)

தொடரும் .....................


 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 83

பெருமையாக இந்நாட்டில் சொல்லவேண்டிய ஒன்று,

அருமையாக இவர்கள் தருகின்ற வானிலை அறிவிப்பு.

வியாழன் இடிமழை; வெள்ளி மேகமூட்டம்; மீண்டும்
விடாது சிறு மழை, சனி, ஞாயிறு என்று இருந்ததால்,

ஆண்டில் ஒரு முறை இயற்கை காட்டும் விந்தையை,
ஆண்டவன் தயவால், இந்த வாரமே கண்டு வரலாம்!

விடிந்ததும், விரைவாய் காலை வேலைகள் முடித்து,
துடிப்புடன் புறப்பட்டோம், New Hampshire - ஐ நோக்கி!

வார நாள் என்பதால், சாலையில் நெரிசலே இல்லை;
நேரம் மிச்சம் ஆகும், நாம் E Z pass வழியே சென்றால்.

பணம் கட்டி, சிறப்பு ஸ்டிக்கரை நம் காரில் ஒட்டினால்,
தினம் கட்ட வேண்டாம் சில்லரையாக Toll Gate-டிலே.

தேவையான கட்டணத்தைக் எடுத்துக்கொள்ளும் இந்த
சேவை, நீண்ட தூரப் பயணங்களில், நமக்குப் பேருதவி!

நெடுஞ்சாலையை எட்டும் பொழுதே, இரு புறங்களில்
நெடும் மரங்களின் இலைகள், பசுமை மாறி இருந்தன.

உலகில் சில நாடுகளே காணும் இந்த நிற மாற்றங்கள்,
உலகில் எல்லோரையும் கவருவதிலே என்ன வியப்பு?

என் காமராவை எடுத்துத் தயார் நிலையிலே வைத்து,
என் முதல் அனுபவத்தை எதிர்பார்த்துப் பயணித்தேன்!

:car: . . . தொடரும் ................
 

E Z travel with E Z pass!!

There are display boards to inform 'E Z pass OR cash Lane 8', 'lane closed' and E Z Pass only!

DSCN6747.JPG
 

நெடுஞ்சாலையை எட்டும் பொழுதே, இரு புறங்களில்
நெடும் மரங்களின் இலைகள், பசுமை மாறி இருந்தன.

DSCN6756.JPG


Many photos were clicked from inside our car! :photo:
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 84

இரு புறத்திலும் உள்ளன,
இரட்டை வழிப் பாதைகள்;
இரு புறமும் வண்டிகள், தத்தம் திசையிலே சென்றன.

எதிரில் வரும் வாகனமே இல்லாததால், எல்லோரும்
எளிதில் மிக வேகமாகப் பயணம் செய்யவும் இயலும்.

சிறிது நேரம் பயணித்து, ஓய்வுக்கு நிறுத்திய இடத்தில்,
சிறிய நிற மாற்றம் அடைந்த ஒற்றை மரம் பார்த்தோம்!

அழகிய White mountains எட்டியவுடனே தெரிகின்றது
அழகிய பல வண்ண இலைகள் கவரும் தோற்றம்!

உச்சியில், ஒரு மரத்தில் என்ன தீப் பிழம்பா? இல்லை!
உச்சியில் தீயின் வண்ணத்தில் நிகழ்ந்த நிற மாற்றம்.

பச்சை மரத்தில் தீப் பிடித்தது போல மாயத் தோற்றம்;
பச்சை நிறம் சிவப்பாக மாறும் ஒரு வினோத மாற்றம்!

தங்க நிறத்தில் இலைகள் பல; மஞ்சள் நிறத்தில் சில;
எங்கு கண்டாலும் வித விதமான வண்ண ஜாலங்கள்.

பட்டுப் புடவை வண்ணங்கள் தெரிந்தன; ஒருவேளை
பட்டு உற்பத்தியாளர்கள், புது நிறம் இங்கு காண்பரோ?

மஞ்சளில் எத்தனையோ விதங்கள்; சிவப்பில் பற்பல;
நெஞ்சம் கவரும் பலவிதப் பச்சைகள்; ஆரஞ்சு நிறம்

சூரிய ஒளியில் இடையிடையே மின்ன, சில மரங்கள்
சீரிய புதிய நிறங்களைக் காட்டி, நம் மனதை மயக்கின.

சென்ற முறை Acadia national park செல்லும் வழியிலே
கண்ட, அழகிய குட்டி நீர்வீழ்ச்சி அருகில் சென்றோம்.

முந்தைய நாள் மழையில், பாதைகள் நனைந்திருக்க,
விந்தையான பல நிறக் கொடிகள் படர்ந்து கிடந்தன!

:bounce: தொடரும் ....................


 
இரு புறத்திலும் உள்ளன, இரட்டை வழிப் பாதைகள்;
இரு புறமும் வண்டிகள், தத்தம் திசையிலே சென்றன.


DSCN6784.JPG
 

சிறிது நேரம் பயணித்து, ஓய்வுக்கு நிறுத்திய இடத்தில்,
சிறிய நிற மாற்றம் அடைந்த ஒற்றை மரம் பார்த்தோம்!

DSCN6751.JPG




 

அழகிய White mountains எட்டியவுடனே தெரிகின்றது
அழகிய பல வண்ண இலைகள் கவரும் தோற்றம்!

DSCN6767.JPG


 

பச்சை மரத்தில் தீப் பிடித்தது போல மாயத் தோற்றம்;
பச்சை நிறம் சிவப்பாக மாறும் ஒரு வினோத மாற்றம்!

DSCN6789.JPG
 


பட்டுப் புடவை வண்ணங்கள் தெரிந்தன; ஒருவேளை
பட்டு உற்பத்தியாளர்கள், புது நிறம் இங்கு காண்பரோ?

DSCN6868.JPG
 

விந்தையான பல நிறக் கொடிகள் படர்ந்து கிடந்தன!

DSCN6842.JPG



DSCN6862.JPG
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 85


உயந்த மரங்களின் இலைகளில் பல நிறங்களிருக்க,

அடர்ந்த காட்டுக்குள் சில பாதைகள் இருக்க, அதிலே,

மரத்தின் வேர்கள் படிகள் போல அமைந்திருக்க, நாம்
ஈரத்தின் தாக்கத்திலும், எளிதாக நடக்க முடிகின்றது!

ஒவ்வொரு இலையிலும் வண்ண ஜாலம் தெரிந்தது;
வெவ்வேறு வண்ணக் கலவைகளின் அழகு புரிந்தது!

கொடிகள், பல வண்ண இலைகளுடன் திகழ, பற்பல
செடிகள், மரங்கள், வண்ண வண்ண இலைகள் பெற,

ஒரு மரம் முழுதும் தங்க இலைகளின் அழகு மிளிர,
ஒரு மரம் முழுதும் சிவப்பு வண்ணம் நன்றாகப் படர,

ஒரு மரம் முழுதும் ஆரஞ்சு வண்ணம் அழகாயிருக்க,
ஒரு மரம் முழுதும் பற்பல வண்ண இலைகள் இருக்க,

பூமி அன்னைக்கு, இயற்கையே வண்ண வண்ணமாக,
பூரிக்கும் அழகிய உடைகள் தந்ததாகவே தோன்றியது!

நீர்வீழ்ச்சி அருகில், ஒரு பாலம் தாண்டிச் சென்றோம்;
நீர்வீழ்ச்சி சில்லென்று நீரைக் கொட்டிடக் கண்டோம்.

பதினைந்து அடி உயரமே என்றாலும், வேகம் அதிகம்;
இதை வந்து முதலில் பார்த்தவரின் கற்பனை அதிகம்!

ஒரு தேவதை வந்து இதில் நீராடுவதாக, தன் மனதில்
ஒரு தோற்றம் வருவதாகவே, அவர் கூறியுள்ளாராம்!

இன்னொரு இடத்தில், அகன்ற இரண்டு அடி நீர்வீழ்ச்சி;
இன்னும் அமைதியாக நீரைப் பாய்ச்சியவாறு இருந்தது.

இந்த நீர் ஆழமில்லாத ஆறாகப் படர்ந்து செல்லுகின்றது;
அந்த ஆற்றின் வரைபடமும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

கற்களில் மரம் முளைக்குமா? ஆம்! முளைக்கும்! இங்கு,
கற்களில் மரங்கள் பல, உயரமாக வளர்ந்து நிற்கின்றன!

:thumb: . தொடரும் ........................

 

Latest ads

Back
Top