கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 91
பூக்களின் தேன் உண்ண, தேனீக்கள் சுற்றின; அதில்
பூமேல் அமர்ந்த ஒரு தேனீ, என் வண்ணப் படத்தில்!
பலர் மிதிவண்டிகளில் 'Passing' என்று கூறிச் செல்ல,
சிலர் சக்கரக்காலணிகளில் மிக வேகமாகச் செல்ல,
சிறு குழந்தை ஒன்று தன் மூன்று சக்கர வாகனத்தை,
சிறு கால்களால் மிதித்துச் செல்ல, ஒரு தாய், தனது
மிதிவண்டியினுடன் இணைத்த குட்டி மிதிவண்டியில்,
மிக ஆனந்தமாகத் தன் குழந்தையுடன் செல்ல, அவன்,
தானே வண்டி ஓட்டுவதாக பாவித்து, பெருமையாகத்
தன் இருக்கயில் அமர்ந்து ஒய்யாரமாகப் போக, இந்த
நீட்ட வாக்கில் அமைந்த நான்கு சக்கரக் காலணியும்,
நீட்ட வடிவில் அமைந்த தாய் - மகன் மிதிவண்டியும்,
புதிய கண்டுபிடிப்புக்களால், இவர்கள் எல்லோருமே,
இனிய நேரங்களை நாடுவதை உணர்த்த, மகிழ்ந்தேன்!
கிழக்குப் பகுதிகளில் இப்பொழுதுதான், இலைகளிலே
அழகிய வண்ண மாற்றங்கள் தொடங்கி இருக்கின்றன!
சவுக்கு மரங்களின் வாடிய இலைகள்கூட, வேறுபட்டு
இருப்பதால், அதுவும் மிக அழகாகவே தெரிந்தது! ஒரு
மரத்தில் யாரோ பழைய ஆடையைத் தொங்கவிட்டது,
மரத்தில் யாரோ தூக்குப் போட்டுத் தொங்குவது போல,
திடீரெனத் திரும்பியதும், பயமுறுத்தியது! மாலையின்
பளீரென்ற வெய்யிலில் எடுத்த அந்தப் படத்தை, நான்
வெளிச்சம் குறைத்து, எடிட் செய்தபோதே அறிந்தேன்,
வெளிச்சம் குறைந்தால், பேய் போலத் தோன்றுமென!
:scared:
தொடரும்..................