• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

இது போன்ற பெரிய வண்டிகளின் அளவு, தெரியும்
அதனுடன் நிற்கின்ற வண்டிகளுடன் ஒப்பிட்டால்!

DSCN7181.JPG
 
நெடுஞ்சாலை மராமத்துப் பணி, பல இடங்களில்;
நெடிய 'கிரேன்கள்' அங்கு வேலைக்காக நின்றன.

DSCN7169.JPG
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 98

எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதே இல்லை,
இத்தனை அழகு மிகுந்த, வண்ணக் கோலங்களை!

மீண்டும் ஒரு முறை Horn pond சென்று சுற்றினோம்;
மீண்டும் இலையுதிர் காலத்தின் அழகை ரசித்தோம்.

போகும் அவசரத்தில், காமராவை மறந்துவிட்டேன்!
மேலும் பலவண்ணங்கள் ஒரே இலைகளில் காண,

சில இலைகளைச் சேமித்தேன்; படம் எடுப்பதற்கு;
சில இலைகளில் நான்கு வண்ணங்கள் இருந்தன!

மலைக்கு M போகாவிட்டால், மலை M இடம் வரும்;
மனத்தில் இந்த எண்ணமே வந்து உதித்தது எனக்கு!

நல்ல நடைப் பயிற்சி; இனிய இல்லம் வந்த பின்பு,
நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சி இருந்தது, ரசிக்க.

உழவர் சந்தை ஆரம்பித்தது, தமிழ் நாட்டில்; நண்பர்
கிழவர் சந்தை எனக் கேலி செய்வார்; ஏனென்றால்,

பணம் சேமிக்க விழையும் சீனியர் குடிமக்கள், அங்கு
தினம் வருவார், புதிய காய்கறிகள் மலிவாய் வாங்க!

இங்கும் கோடை ஞாயிற்றுக் கிழமைகளில் உண்டு;
இங்கு தமது நிலத்திலே விளைந்த காய் கனிகளை,

இடைத் தரகர் இன்றி விற்பார்கள்; செயற்கை உரமே
இடாத பல வகைகள் விற்பனைக்கு உள்ளன. பெரிய

அளவில் மிளகாய்கள், வண்ண வண்ண மலர்கள்,
அளவில் மிகவும் சிறிய பரங்கிக் காய்கள் இருந்தன.

பெரிய பரங்கிக் காய்கள், Halloween Day வருவதால்,
பெரிய அளவில் சிலர் விற்பனையும் செய்கின்றார்.

தொடரும் ..................
 
சில இலைகளில் நான்கு வண்ணங்கள் இருந்தன!

DSCN7232.JPG
 
Last edited:

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 99

இயற்கை உரங்களை மட்டுமே போட்டு வளர்த்தும்,

இயல்பு மாறாத காய்கறிகளும் இருந்தன, அநேகம்.

பல்வேறு வகை ஆப்பிள்களும், தக்காளிப் பழமும்,
பலவாறு தயாரித்த கேக் வகைகளும் கிடைத்தன.

ரசாயன உரங்கள் இடாத காய் கனிகளை, குழந்தை
ரசித்து உண்பதால், சிலவற்றை வாங்கி வந்தோம்.

தேனீ வளர்ப்பு பற்றி அருமையாக விளக்கம் தந்திட,
தேனீக் கூட்டைக் கொண்டு வந்து, ஒரு கண்ணாடிப்

பெட்டியில் வைத்திருந்தார் ஒருவர்; அவர் அந்தப்
பெட்டியில் உள்ள ராணித் தேனீயைக் காட்டினார்!

ஒரு பூத கண்ணாடியை அருகே வைத்துக்கொண்டு,
சிறு தேனீயைப் பெரிதாக்கிக் காட்டிட விழைந்தார்.

தேன் பாட்டிலை வாங்க அதிகம் ஆட்களே இல்லை;
தேன் கிடைக்கும் விதத்தை அறியவே விரும்பினர்!

சிறுவர்கள் பலர் பெற்றோருடன் வருவதால், அங்கு
சிறு விளையாட்டுத் திடல் ஒன்றை வைத்துள்ளனர்.

குதித்து விளையாடி மகிழும் Trampolineதான் அங்கு;
குதிக்கும் குழந்தைகள் விழாதவாறு சிறந்த ஏற்பாடு!

ஒரு இடத்தில் ஹீலியம் நிரப்பிய வண்ண பலூன்கள்;
சிறு குழந்தைகள் விரைந்தனர், அதை வாங்குவதற்கு!

வெளியேறும் வாயில் அருகில், மைக் பிடித்த பாடகர்;
துளியும் பயம் இல்லாது, கத்திக் கொண்டு இருந்தார்!

இன்னும் இருவர் கிடாரும், ட்ரம்மும்; பக்கவாத்தியம்;
இன்னும் சத்தமாக தூள் கிளப்பிக் கொண்டிருந்தனர்!

புதிய அனுபவமாக இந்த இடத்தைச் சுற்றிய பின்னர்,
இனிய இல்லம் வந்தோம், ஊதா வண்ண பலூனுடன்!

:couch2:

தொடரும் ...................
 
இயற்கை உரங்களை மட்டுமே போட்டு வளர்த்தும்,
இயல்பு மாறாத காய்கறிகளும் இருந்தன, அநேகம்.

DSCN7252.JPG
 
தேனீ வளர்ப்பு பற்றி அருமையாக விளக்கம் தந்திட,

தேனீக் கூட்டைக் கொண்டு வந்து, ஒரு கண்ணாடிப்

பெட்டியில் வைத்திருந்தார் ஒருவர்............

DSCN7248.JPG
 
பெட்டியில் உள்ள ராணித் தேனீயைக் காட்டினார்.... ( we could not spot it!! )

DSCN7249.JPG
 
குதித்து விளையாடி மகிழும் Trampolineதான் அங்கு;
குதிக்கும் குழந்தைகள் விழாதவாறு சிறந்த ஏற்பாடு!

DSCN7255.JPG
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 100


தீபாவளித் திருநாள் வந்துவிட்டது; அமெரிக்காவில்

தீபாவளி, சாதாரண நாளைப் போல் வேலை நாளே!

சர வெடிகளும், பெரிய வெடிகளும், மத்தாப்புக்களும்,

சர சரவென உயர்ந்து எழுந்திடும் புஸ்வாணங்களும்,

கல்லுப் பட்டாசு என்கிற வெங்காய வெடிகளும், நம்

கையில் பிடித்த கம்பியில், விஷ்ணுச் சக்கரங்களும்,

பாம்புபோல மேல் எழும் மணக்கும் வில்லைகளும்,
பாம்புபோல நீண்டிருக்கும் சாட்டை மத்தாப்புகளும்,

எதுவுமே இந்த பாஸ்டனில் கிடையாதே! ஆனாலும்,
பொதுவாகச் செய்கின்ற கங்கா ஸ்நானம் முடிந்தது!

சூரிய உதயத்திற்கு முன், எண்ணெய் தேய்த்து நீராடி,
சூரியனையும் தரிசித்து, புத்தாடை உடுத்தி, வீட்டிலே

நாங்கள் தயார் செய்த இனிப்புக்களை உண்டு, இங்கு
எங்கள் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தோம்!

எல்லோருடனும் பேசி, வாழ்த்துக்கள் பரிமாறியதும்,
எல்லோருடனும் கூடியிருந்தது போன்ற ஆனந்தம்!

கணினியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு,
இனிதே பேச முடிவது, நல்ல விஞ்ஞான வளர்ச்சி!

என்ன உடைகள் அணிந்தோம் என்று காட்டிடலாம்;
சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கலாம்!

வாழ்வின் இன்பமே, சின்னச் சின்ன விஷயங்களை
வாழ்வில் ரசித்து, மகிழ்ச்சி அடைவதில் இருக்கிறது!

:peace:

தொடரும் .........................
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 101


இங்கு தீபாவளிக்கு மறுநாள், திடீரென ஓர் அறிவிப்பு;

அன்று நடு இரவில், பனிப் பொழிவு வருகிறது என்று!

பனிப் பொழிவை நான் பார்த்ததே கிடையாது
; ஆனால்,

பனி இரவில் பொழிந்தால் எப்படி வெளியே செல்வது?

முதல் முறை Subzero சீதோஷ்ண அனுபவம் பெற்றேன்;

முதல் முறை தெர்மாமீட்டரில் அந்த நிலை பார்த்தேன்!

குளிர் மிகுதியாகி வர, இரண்டு போர்வைகள் போர்த்தி,
குளிரை விரட்டி, உறங்க முயன்று, பெற்றேன் வெற்றி!

மறுநாள் விடியலில், பனிப் போர்வை செடிகள் மேல்;
இதுநாள் வரை காணாத காட்சியைப் படம் எடுத்தேன்!

மெல்லிய படலம் போல, கூரைகளில் பனிக் குழைவு;
அள்ளி எடுத்தேன் பனியை, புல்வெளியின் மேலிருந்து!

அதிசய நிகழ்வாக இது வந்திட, எங்களுக்கு இன்னும்
அதிசயம் கொடுக்க, இயற்கை அன்னை விழைந்தாள்!

அந்த சனிக்கிழமை மாலையில் கடும் பனிப் பொழிவு
வந்து, மறுநாள் காலை வரை தொடரும் என்றார்கள்!

தெர்மல் உடைகள் எங்கள் மகன் பரிசாக அளித்தான்;
தெர்மல் உடை அணிந்தால், குளிர்த் தாக்கம் இராது!

பனி விழுவதை விடியோ எடுக்க வேண்டும்; மேலும்,
பனி விழும்போது, அதில் நனைந்து நிற்க வேண்டும்!

குளிர் பனிப் பொழிவையே எதிர்நோக்கி இருந்தேன்;
எதிர்பாராத பரிசு கிடைத்தது போலவே மகிழ்ந்தேன்!

:smow: . . . :smow:

தொடரும் .....................
 
Last edited:
மறுநாள் விடியலில், பனிப் போர்வை செடிகள் மேல்...

DSCN7285.JPG
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 102

பனிக் கட்டிகளை என் கைகளிலே எடுக்க ஆவல்;

இனிதே நிறைவேறிவிட்டது, சென்ற விஜயத்தில்!

இறுகிய பனிக் கட்டிகளை Rocky mountainsல் கண்டு,
இரு கைகளில் என்னவர் தந்திட, ஆசை ஈடேறியது!

நான் எதிர்நோக்கிய சனிக்கிழமை வந்துவிட்டது;

என் மனம் காலை எழுந்தவுடனே, குதூகலித்தது!

நான்கடுக்கு உடைகள் உடுத்தித் தயார் நிலையில்,

நன்கு சக்தியேற்றிய காமராவுடன் காத்திருந்தேன்.

இதோ! முதல் பனித் துளிகள் கொட்ட ஆரம்பித்தன!

அது ஆகாயத்திலிருந்து, தேவர்கள் பவுடர் எடுத்துக்

கொட்டுவதுபோல, மெல்லிய வெண் புள்ளிகளாய்;

கொட்டுவது தொடர்ந்தது, பஞ்சுத் துணுக்குகளாய்!

காத்திருந்த நேரம் வந்துவிட்டது; உடனே நான் எதிர்

பார்த்திருந்த பனிப்பொழிவில், நனையச் சென்றேன்!

உடைகள் மேல் வெண் துணுக்குப் பனிகள்; குளிரால்
உடைகள் மேல் அவை நின்றன, சில மணித் துளிகள்!

ஆசை தீர விடியோக்கள், போட்டோக்கள் எடுத்ததும்,
ஆசை தீர கைகளில் பனித் துளிகளைப் பிடித்தேன்!

கையுறைகள் இல்லாது வந்தததால், நிமிடங்களிலே,
கை விரல்கள் உணர்ச்சியே இன்றி மரத்துப் போயின!

சுடுநீர் வரவு எப்போதும் உள்ள ஊரானதால், உடனே
சுடுநீரில் கைகளை நனைத்து, உயிர் வரவைத்தேன்!

லடாக்கில் பனியிலே பணிபுரியும் ஜவான்கள் பலர்,
இடக்குப் பண்ணும் அதிகாரிகளால், தம் கைகளுக்கு

கையுறைகளே இல்லாது வேலை செய்து, அதனால்
கைவிரல்களை இழந்த சோகம், மனதிலே உதித்தது!

:smow: . . . :ballchain:

தொடரும் ...................
 

Latest ads

Back
Top