• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


Our neighbor's cars and roofs covered with snow...

DSCN7328.JPG
 
hi RR,
அன்புள்ள அம்பிக்கு

கிட்டு தாத்தா அனேக ஆசீர்வாதம். க்ஷேமம் க்ஷேமத்திற்கு உடன் செல்பேசியில் பேசவும். இப்பவும் ஒரு மாசமா நான் அமெரிக்கா போய்ட்டு வந்தேன். நம்ம பங்கஜம் பொண்ணு ஜனனி யு.எஸ் ல இருக்கா. வா தாத்தான்னு என்ன அலக்கழிச்சு அழைச்சுண்டு போய்ட்டா. இந்த வருஷம் கங்கா ஸ்நானம், US ஸ்நானம் ஆயிடுச்சு. ஏன்டா போனோம்னு ஆயுடுத்து. என்ன கண்றாவியோ போ. நன்னா வாயிக்கு ருசியா சாப்பாடு கூட இல்ல. ஒரு வத்தகுழம்பு இல்ல. ஒரு சுட்ட அப்பளாம் இல்ல. நாக்கு செத்துடுத்து. என்ன ஊருடா அது. எல்லாரும் பிட்சாவையும், பெப்சியையும் கட்டின்டு அழறதுகள். ஒரு நாள் இல்ல. பண்டிகை இல்ல. நம்மளவா நாலு பேரு ஒண்னா பாத்தது கூட கிடையாது. நேக்கு சுத்தமா புடிக்கல.

அப்படி இருந்தும் பிராம்மண பொண்ணு பையன் நாலு பேற பாத்தேண்டா அம்பி. பாக்க சகிக்கல. அவா அவா இஷ்டத்துக்கு வரன் தேடிண்டு செட்டில் ஆயிட்டா. ஒரு கோத்திரம் இல்ல. சூத்திரம் இல்ல. ஒரு வேதம் இல்ல. என்னடா வாழ்க்கை இது. இவா சந்ததி எப்படி இருக்கும்? பெத்தவா மனசு என்ன பாடுபாடும்னு இவா நினைக்கிறதே இல்ல. கேட்டா சின்ன வயசுலேந்து ஒன்னா படிச்சு பழகினாளாம். அவன் இவள நன்னா பாத்துப்பானாம், என்னன்ட சொன்னதுகள். சிவ சிவான்னு கேட்டுண்டு வந்துட்டன்.

என்ன இருந்தாலும் நம்ம ஊரு, நம்ம மனுஷான்னு சொல்லிக்கிறதுக்கு பெருமையா இருக்கு அம்பி. கொஞ்சம் ஒடம்பு சரியில்லாம போயிடுத்து. நம்ம பிரபு டாக்டர் தான் மருந்து மாத்திரைலாம் கொடுத்தார். இப்ப செத்த தேவலாம். யு.எஸ் போயிட்டு வந்ததுலேர்ந்து மனசு கொஞ்சம் பாரமா தான் இருக்கு இப்படியே விட்டுட கூடாதுடா அம்பி. நாம ஏதாவது செஞ்சு தான் ஆகனும். அப்ப அப்ப பிராமணாலாம் ஒண்ணு கூடி இத்த பத்தி பேசி முடிவு பண்ணி நல்ல முடிவெடுக்கணும். அப்படி ஏதாவது இருந்த நேக்கு தகவல் சொல்லு. நானும் வரேன். ஓகேவா???

மத்தபடி எல்லருக்கும் என்னோட ஆசிகள சொல்லிடு.
இப்படிக்கு
கிட்டு தாத்தா

email_open_log_pic.php


coutesy
swaminatha sarma
 

Dear TBS sir,

கிட்டு தாத்தா கிட்டச் சொல்லுங்கோ, நம்மளால ஒண்ணும் செய்ய முடியாதுன்னு! பிராமணப் பசங்கள் அவா

சமூகத்திலே கல்யாணம் பண்ணின்டாலும், இங்கே வந்து மாறித்தான் போய்டுவா! நம்ம ஊர்ல இருக்கற மாதிரி

டிரஸ் பண்ணிண்டு நடக்கச் சொன்னாக் கேப்பாளோ? ஏதோ சமைக்கத் தெரிஞ்சு, அதில் இன்டரஸ்ட் இருக்கிற

பொண்ணக் கல்யாணம் பண்ணிண்டா, மாசத்திலே சில நாளாவது வத்தக் குழம்பு, மைக்ரோ வேவ்ல சுட்ட

அப்பளம் etc கிடைக்கும்.

Be a Roman in Rome -ன்னு தாத்தாவுக்கும் தெரியுமோல்லியோ?


Regards ............ :)
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 103

காணாததைக் கண்டதால் எனக்கு மகிழ்ச்சி; வரலாறு
காணாத பனிப் பொழிவால், வேலை இந்நாட்டவர்க்கு!

பனி, கடல் போல வீட்டைச் சுற்றிப் பரவிடும்; அதனால்,
தனி வீட்டில் உள்ளோர், பனியைத் தள்ளிட வேண்டும்!

வெளியில் நிற்கும் கார்களின் மேலே படியும் அடர்ந்த
பனியை, உடனடியாக சுத்தம் செய்திடவும் வேண்டும்.

கார் போகும் பாதைகளை, உடனே கவனிக்க வேண்டும்;
தார் இட்டு உள்ள நடைபாதைகளைச் சீராக்க வேண்டும்!

பனிப் பொழிவு, முதலிலே மென்மையாகவே இருக்கும்;
மணிகள் சில சென்ற பின்பு, கடினமாக இறுகிப் போகும்!

கால்களைப் பதித்தால், அச்சுப் போலப் பதிந்துவிடும்;
கல்லைப் போல கனமாக மாறி, செடிகளை அழுத்தும்!

ஒரு பெரிய குளிர் சாதனப் பெட்டியில் உள்ளதுபோல,
இருந்தது வீடு முழுதும்! வெளியில் கிடு கிடுக் குளிர்!

மரக்கிளைகள் பல, விழுந்த பனியின் கனம் தாங்காது,
மரத்திலிருந்து முறிந்து கீழே விழுந்ததால், மின்சாரம்

பல இடங்களில் துண்டிக்கப்பட்டு, இருளும் பரவியது!
பல வீடுகளில் தொலைபேசி, இன்டர்நெட்டு, இல்லை!

சுடுநீர் வரவு இல்லாது, தொலைத் தொடர்பு இல்லாது,
கடும் குளிரைத் தடுக்க, வெப்பமூட்டும் வசதி இல்லாது,

பலர் அனுபவித்தனராம், மிகுந்த சிரமத்தை! ஆனாலும்
சிலர், எங்கள் பகுதியினர் போல, அதிர்ஷ்டம் செய்தோர்!

இறைவன் காட்டும் சின்னச் சின்னக் கருணைகளையும்,
நிறைவான மனத்துடன் எண்ணி மகிழ்ந்திட வேண்டும்!

:hail: . . . :happy:

தொடரும் ...........................



 
கால்களைப் பதித்தால், அச்சுப் போலப் பதிந்துவிடும்...

DSCN7424.JPG
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 104

என்னதான் ஸ்டையிலாக வாழ்க்கை வாழ்ந்தாலும் என்ன?

என்றும் மாறாது சில வாழ்க்கை முறைகள், இந்நாட்டிலும்!

மின்சாரம் துண்டிக்கப்பட்ட சில இடங்களில், விறகுகளை,
மின்சாரச் செலவு இல்லாமல் குளிர் தடுக்க, எரித்தனராம்!

அடுப்பும் மின்சாரத்தில் இயங்கும் சில வீடுகளில்; அவர்கள்
எடுத்துச் சாப்பிடும் 'ரெடிமேட்' உணவை உண்டு ஜீவித்தனர்!

சில அலுவலகங்களில், விடுமுறையும் அறிவிக்கப்பட்டது;
சிலர் இல்லத்திலிருந்தே வேலை பார்த்தனர், லீவு சேமிக்க!

மரக் கிளைகள் உடைந்து விழுந்ததால், சில ரோடுகளிலே
அறவே நின்றது போக்குவரவு, சில மணிகள்! இருப்பினும்,

இந்த நாட்டின் பராமரிப்பைப் புகழ்ந்தே தீரவேண்டும்; பனி
எந்த இடங்களில் பரவினாலும், உடனே பனி தள்ளும் ஒரு

பெரிய வாகனம் மேலும் கீழும் போய், தெருக்களில் சேரும்
பெரிய பனிப் பொழிவை உடனே நீக்குகிறது; எங்களின் வீதி,

இரவில் ஒரு முறையும், அதிகாலை ஒரு முறையும் அப்படி
எளிதில் சுத்தம் செய்யப் பட்டது கண்டு வியந்து போனேன்!

இத்தனை கடும் பனியாலும், குழிகள் விழாது இருக்குமாறு,
எத்தனை பாங்காகத் தெருக்களை அமைத்துள்ளர், இங்கு!

பொதுமக்கள், சிங்காரச் சென்னையில், மழைக் காலத்தில்,
மெதுவாக இடுப்பளவு நீரைத் தாண்டிச் செல்வதை எண்ணி,

என்றுதான் இந்தியாவிற்கு விமோசனம் கிடைக்குமோ, என
எண்ணிக் கொஞ்சம் என் மனம் சஞ்சலப்பட்டது, நிஜம்தான்!

ஓர் ஆட்டோப் பயணம், சென்னையில், மழைக் காலத்திலே;
ஒரு நிலநடுக்கம் அப்போது வந்ததை நான் உணரவில்லை!

:bump2:

தொடரும் ..................
 

பெரிய வாகனம் மேலும் கீழும் போய், தெருக்களில் சேரும்

பெரிய பனிப் பொழிவை உடனே நீக்குகிறது.......

(Road is clean!)
DSCN7419.JPG
 
When I uploaded the photos in my album, something like a full moon appeared in this photo!

One round snow flake might have fallen very near the camera lens... I love this one the most!



DSCN7306.JPG
 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 105


பனி நன்றாகப் பொழிந்து ஓய்ந்துவிட்டது; அடுத்ததாக

இனி வருவது Halloween; குழந்தைகளுக்குக் குதூகலம்!

அக்டோபர் மாதம் கடைசி நாளில் அனுசரிப்பார் இதை;

அந்நாளில் அணிவர், பல விதமான மாறு வேடங்களை!

ஒரு வயது கூட நிரம்பாத குட்டிக் குழந்தைகள் முதல்,
சிறுவர்களும், பெரியவர்களும் அணிவர் மாறுவேடம்!

விடுமுறையாக அறிவிக்கப்படும் அந்த தினம்; காலை
விரும்பியபடி விருந்து தயாரித்து, இறையை வணங்கி,

பரங்கிக்காயைக் குடைந்து அதில் பேய் முகம் செதுக்கி,
பலர் வாசலில் வைத்து, மாலை விளக்கு ஏற்றுவார்கள்.

இப்போது பிளாஸ்டிக்கில் பரங்கிக்காய் வந்துவிட்டது!
இப்போது அதிலேயே மெழுகுவர்த்தியை வைக்கிறார்.

கூடையுடன் கிளம்புவார்கள், மாறுவேஷம் அணிந்து,
கூறுவது 'Trick or Treat' என, விளக்கு உள்ள வீடுகளில்.

அந்த வீடுகளில் உள்ளோர். சாக்கலேட்டுகள் வாங்கி,
வந்த குழந்தைகளுக்கு அளித்திட இருப்பர், தயாராக!

பெரிய பாத்திரத்தில் வைத்துள்ள சாக்கலேட்டுகளில்
சிறுவர் சிறுமியர் வேண்டியதை எடுத்துக்கொள்வர்.

மிகச் சின்னக் குழந்தைகளுக்கு, அம்மாக்களும் உடன்
அகம் மகிழத் துணை வருவது பார்க்கவே அழகுதான்!

பயங்கரமான முகமூடிகள் அணிந்த காலம் மாறியது!
மயக்கும் அழகான உடைகளும் இன்று வந்துவிட்டது!

தேவதை போல, ராணி போல, டோரா போல என அழகு
தேவதைகளாக பெண் குழந்தைகள் வலம் வந்திட, ஒரு

சிறுவன் Finger chips பெட்டியாக வந்து, எல்லோரையும்
சிரிக்க வைத்து, நிறைய சாக்கலேட்டுகள் அள்ளினான்!

எங்கள் குட்டிக் கண்ணம்மாவின் முதலாவது Halloween;
எங்களை மயக்கினாள், Lady bird போல் உடை அணிந்து!

:drama:


தொடரும் .....................
 

இப்போது பிளாஸ்டிக்கில் பரங்கிக்காய் வந்துவிட்டது!

DSCN7408.JPG
 
இப்போது அதிலேயே மெழுகுவர்த்தியை வைக்கிறார்.

DSCN7410.JPG
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 106

சில குழந்தைகள் அழகு வடிவத்தில் வந்திட, வேறு

சில குழந்தைகள் பயமுறுத்தும் Witch வேடங்களில்!

கருப்பு கவுன், நீண்ட தொப்பி இவற்றுடன், அவர்கள்

விருப்பத்துடன் பறக்க நீண்ட துடைப்பம் கையிலே!

சூப்பர் மேன்
போல ஒரு சிறுவன் சாக்கலேட்டுகளை

சூப்பர் அளவில் அள்ளி எடுக்க, அவனுடைய அம்மா

இரண்டோ மூன்றோ மட்டுமே எடுத்திட அறிவுறுத்தி,

இன்னும் ஐந்து வீடுகள்தான் செல்லலாம் என்றாள்!

தாம் கொண்டு வந்த பெரிய பைகளைக் காட்டி, சிலர்

நாம் தரும் அதிக அளவை சிரித்த முகத்துடன் வாங்க,

நாம் கொண்டாடும் நவராத்திரிக் கொண்டாட்டத்தை

நம் நினைவில் கொண்டு வந்தது, அமெரிக்க நாட்டில்!

எங்கள் கண்ணம்மாவுக்கு முதல் Halloween இதுதானே!

தங்கள் தேர்வாக Lady Bird உடை பிள்ளைகள் வாங்கி,

அவளுக்கு அணிவித்து, Trick or Treat செய்யப் புறப்பட,

அவளும் ஆவலுடன் சென்றும், சிறிது நேரத்திலேயே,

சுருதி சேர்த்துத் தன் முகாரி அலாபனை ஆரம்பித்திட,
சடுதியில் மூவரும் இனிய இல்லம் திரும்பி வந்தனர்.

செல்லக் குழந்தை ஆனதால், நான்கு வீடுகள் சென்றே
அள்ளிக் கொண்டு வந்தாள், கூடையில் சாக்கலேட்கள்!

இனிப்பு அனைத்தும் பெரியவர்களுக்கே! இந்த நாட்டில்
இனிப்பு மறுக்கப்படுகிறது மிகச் சின்னஞ் சிறுசுகளுக்கு!

சிங்காரச் சென்னை திரும்ப அடுத்த வாரம் எம் பயணம்;
எங்கள் சுற்றத்துக்காக ஒரு ஷாப்பிங் செல்ல வேண்டும்!
:roll:

தொடரும்....................
 
hi rr,
அன்புள்ள அம்பிக்கு

''.........அப்படி இருந்தும் பிராம்மண பொண்ணு பையன் நாலு பேற பாத்தேண்டா அம்பி. பாக்க சகிக்கல. அவா அவா இஷ்டத்துக்கு வரன் தேடிண்டு செட்டில் ஆயிட்டா. ஒரு கோத்திரம் இல்ல. சூத்திரம் இல்ல. ஒரு வேதம் இல்ல. என்னடா வாழ்க்கை இது. இவா சந்ததி எப்படி இருக்கும்? பெத்தவா மனசு என்ன பாடுபாடும்னு இவா நினைக்கிறதே இல்ல. கேட்டா சின்ன வயசுலேந்து ஒன்னா படிச்சு பழகினாளாம். அவன் இவள நன்னா பாத்துப்பானாம், என்னன்ட சொன்னதுகள். சிவ சிவான்னு கேட்டுண்டு வந்துட்டன்.........''

மத்தபடி எல்லருக்கும் என்னோட ஆசிகள சொல்லிடு.

இப்படிக்கு
கிட்டு தாத்தா
email_open_log_pic.php


coutesy
swaminatha sarma


அய்யா ,

பிராம்மண சமுதாயத்தில் மட்டும் இல்லாமல் இன்று எல்லோருடைய சமுதாயத்திலும் கவனித்துத் தீர்வு காண வேண்டிய ஒரு சமுதாயப் பிரச்சனை!

இதைப்பற்றி அடுத்து விரிவாக ''Tamils Abroad'' என்ற தலைப்பில் எழுதப்போகிறேன் ..படித்து தங்களின் கருத்துக்களைப் பதிய வேண்டி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ..


சிவஷன்முகம்..
 
Last edited:
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 106

சில குழந்தைகள் அழகு வடிவத்தில் வந்திட, வேறு

சில குழந்தைகள் பயமுறுத்தும் Witch வேடங்களில்!

கருப்பு கவுன், நீண்ட தொப்பி இவற்றுடன், அவர்கள்

விருப்பத்துடன் பறக்க நீண்ட துடைப்பம் கையிலே!

சூப்பர் மேன்
போல ஒரு சிறுவன் சாக்கலேட்டுகளை

சூப்பர் அளவில் அள்ளி எடுக்க, அவனுடைய அம்மா

இரண்டோ மூன்றோ மட்டுமே எடுத்திட அறிவுறுத்தி,

இன்னும் ஐந்து வீடுகள்தான் செல்லலாம் என்றாள்!

தாம் கொண்டு வந்த பெரிய பைகளைக் காட்டி, சிலர்

நாம் தரும் அதிக அளவை சிரித்த முகத்துடன் வாங்க,

நாம் கொண்டாடும் நவராத்திரிக் கொண்டாட்டத்தை

நம் நினைவில் கொண்டு வந்தது, அமெரிக்க நாட்டில்!

எங்கள் கண்ணம்மாவுக்கு முதல் Halloween இதுதானே!

தங்கள் தேர்வாக Lady Bird உடை பிள்ளைகள் வாங்கி,

அவளுக்கு அணிவித்து, Trick or Treat செய்யப் புறப்பட,

அவளும் ஆவலுடன் சென்றும், சிறிது நேரத்திலேயே,

சுருதி சேர்த்துத் தன் முகாரி அலாபனை ஆரம்பித்திட,
சடுதியில் மூவரும் இனிய இல்லம் திரும்பி வந்தனர்.

செல்லக் குழந்தை ஆனதால், நான்கு வீடுகள் சென்றே
அள்ளிக் கொண்டு வந்தாள், கூடையில் சாக்கலேட்கள்!

இனிப்பு அனைத்தும் பெரியவர்களுக்கே! இந்த நாட்டில்
இனிப்பு மறுக்கப்படுகிறது மிகச் சின்னஞ் சிறுசுகளுக்கு!

சிங்காரச் சென்னை திரும்ப அடுத்த வாரம் எம் பயணம்;
எங்கள் சுற்றத்துக்காக ஒரு ஷாப்பிங் செல்ல வேண்டும்!
:roll:தொடரும்....................

படங்கள் அருமை ...இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறீர்களா? அல்லது சென்னையில் இருக்கிறீர்களா?
 
படங்கள் அருமை ...இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறீர்களா? அல்லது சென்னையில் இருக்கிறீர்களா?
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, சண்முகம் சார். இன்னும் சில பக்கங்களில் கடல் கடந்த மூன்றாம் அனுபவம் முற்றுப் பெறும்.

தற்பொழுது சிங்காரச் சென்னை வந்து சேர்ந்து, jet lag நிலையில் உள்ளோம். குஞ்சுப்பு சார் அவர்களின் ஆசிப்படி இலையுதிர்

கால வண்ணக் கலவைகள் இந்த முறை எங்களுக்குப் பரிசு. அத்துடன் இயற்கை அன்னையின் பனிப் பொழிவும் கூடுதல்

பரிசுதான்! இதுவரை அக்டோபர் மாதத்தில் பனிப் பொழிவு இருந்ததே இல்லையாம்!

ஜூன் மாத இறுதியில் வந்த பயங்கர மருத்துவமனை அனுபவங்கள் இப்போது மெதுவாக மறைகின்றன.


நட்புடன்,
ராஜி ராம்
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 107

கடல் போலப் பொருட்களை குவித்து வைத்துள்ள அந்த

Costco சென்று, வேண்டிய பொருட்கள் வாங்க வேண்டும்.

சாக்கலேட் வகைகள் மிகப் பெரிய அளவுகளில்; குட்டிச்
சாகலேட்கள் நிரப்பிய, மிகப் பெரிய பிளாஸ்டிக் பைகள்!

பலவிதமான Zip Lock பைகள் உள்ளன; நமக்கு வேண்டிய
சில அளவுகள் வாங்கினால், பிரித்து பங்கிட எளிதாகும்.

சுற்றம் நட்புடன், என் குட்டி மாணவர்கள் உள்ளனரே! ஒரு
சுற்றுச் சுற்றி, உருகாத வகை இனிப்புகள் வாங்கினோம்.

சின்ன பரிசுகளாக, பேனாக்கள் போன்றவை வாங்கிய பின்,

உண்ண, பெரிய வட்ட வடிவ Pizza வாங்கினர் பிள்ளைகள்.

சிங்காரச் சென்னையிலே, Pizza பக்கமே போவதில்லை;
இங்கு பலர் உண்பதால், நாமும் உண்ணவே வேண்டும்!

திராக்ஷை உறுகாய் இந்தியாவிலே ருசிக்க, அதேபோல
திராக்ஷை ஜாமும் ரசிக்க, பாட்டிலகளிலே அடைத்தேன்.

செடிகள் வெட்டும் ஒரு நீண்ட, கூரிய வெட்டும் கருவியே,
செடிகள் வெட்டத் திண்டாடும் எனக்கு, மகனுடைய பரிசு!

எங்கள் பயணப் பெட்டிகளைத் தயார் செய்துவிட்டோம்.
எங்கள் குட்டிக் கண்ணம்மாவைப் பிரிவதில் வருத்தமே!

நன்கு விளையாடத் தெரியும் சமயம் விட்டு வருவதால்,
நன்கு அறிந்திடுவாள் குழந்தை, எங்களுடைய பிரிவை!

புறப்படும் நாள், கடைசி செட் துணிகளையும் துவைத்து,
புறப்பட்டோம் சரியான நேரம், விமான நிலையத்திற்கு.

வீட்டிலிருந்தே online check in செய்ததால், எங்களுடைய
சீட்களை தேர்வு செய்ய முடிந்தது! தொந்தரவு இல்லாத

இரண்டு இருக்கைகள் மட்டும் இருக்கின்ற வரிசைகளில்
ஒன்றைத் தேர்வு செய்து வைத்திருந்தாள், பெண்ணரசி!

பிரியா விடை பெற்று, சிங்காரச் சென்னை சேர்வதற்குப்
பிரியமான பிள்ளைகளைப் பிரிந்து, விமானம் ஏறினோம்.

:plane: தொடரும்...............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 108

இந்தியா வரை விமானம் வராததால், இதனுள்ளே

இந்தியப் பணியாளர் இருக்கவில்லை; ஆகையால்

மேலைநாட்டு நாகரிகமே அவர்களிடம் தெரிந்தது;

மேலை நாட்டுத் தயாரிப்பில், உணவு ருசி இல்லை!

அந்த இலை தழை சாலடும், புளித்த ஊத்தப்பமும்,

எந்த வாசமும் இல்லாச் சட்னியும் மிகக் கொடுமை!

அமெரிக்கா போகும்போது உணவு நன்றாக இருந்தது;

அதையே நம்பி, பிஸ்கட் மட்டுமே வைத்திருந்தோம்!

பசி ருசி அறியாது அல்லவா? எங்களுக்கு நன்றாகப்

பசி வருவதற்காகக் கொடுத்ததில் பாதி உண்டோம்!

இரவில் பாஸ்டனில் புறப்பட்டதால், உறங்கினோம்.

விடியல் விரைவிலேயே; கிழக்கு நோக்கி வந்ததால்!

ஆதவன் தரிசனம் கிடைக்கவில்லை; ஆனால் அந்த

ஆதவன் கிரணங்கள் பட்டு, சிவந்த நிறம் தெரிந்தது!

இருட்டாக இருந்த மேகத் திரள்கள், மிக அடர்த்திதான்;

இருட்டு விலக விலக, பாறை போல அவை தெரிந்தன!

சிறிது நேரம் சென்றதும், பஞ்சு போல அவை மாறின;

சிறிது நேரம் மேகம் பார்வையை மறைக்க, விமானம்

கீழே வேகமாக இறங்கி வர, லண்டனின் தோற்றமும்
கீழே நன்கு கண்களில் பட, பெரிய நீர் நிலை, வளைந்த

சாலைகள் இவற்றைத் தாண்டி, விமானம் தரையிறங்க,
காலை நேரப் புத்துணர்வுடன், பாதுகாப்பு பரிசோதனை

மேற்கொள்ள, விமானத்திலிருந்து வெளியே வந்தோம்;
மேலான கிறிஸ்மஸ் அலங்காரம் மின்னி வரவேற்றது!

தொடரும்...............
 
Last edited:
ஆதவன் கிரணங்கள் பட்டு, சிவந்த நிறம் தெரிந்தது!

DSCN7445.JPG
 

Latest ads

Back
Top