• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


நிலமும் நீரும் சேரும் இடங்கள் கொள்ளை அழகுதான்! மனம்

தினமும் நினைத்து மகிழுமாறு, வண்ணம் மிகுந்த வடிவங்கள்!

DSCN7521.JPG
 

வானம் நீல வண்ணத்தில் இருக்க, அதில் தெரிந்தது, மிளிரும்

வண்ணம் விளங்கும் அழகிய வெண்மையான வண்ண நிலவு!

DSCN7524.JPG
 

அழகாக முயல் குட்டி நிற்பதுபோல உருவம் அதில் இருந்தது...

DSCN7527.JPG
 
அபுதாபிதான் என்று நினைக்கின்றேன்! ஒளி இன்னும் அதிகம்!
அபூர்வமான வடிவில், பல வண்ண விளக்குகளால் மின்னியது!

DSCN7535.JPG
 

முதல் அமெரிக்கப் பயணத்தின்போது, என்னிடம்
காமரா இல்லை! இரண்டாம் பயணத்தின்போது, காமராவை

கைப்பையில் வைக்கலாமெனத் தெரியவில்லை! பாட்டரியை செக் இன் பெட்டியில் போட்டுவிட்டேன்!

மூன்றாம் முறை, ஜன்னல் இருக்கை கேட்டு வாங்கி, என் ஆசை தீர புகைப்படங்கள் எடுத்து, ஆவலுடன்

உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். என்னைப் போலவே நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்!


:dance:
 

Picasa 3 மென்பொருள் பற்றிக் கூறவேண்டும். இரட்டை அழுக்குக் கண்ணாடிகள் வழியே எடுத்த புகைப்படங்களை,

அழகாக Edit செய்து, துல்லியமாக்கி, Touch up செய்து இடுவதற்கு மிகவும் வசதிதான். இந்த "Back to Chennai"

ஆல்பம் செய்ய எனக்கு அதிக நேரம் ஆனதும் நிஜம்!
 

Special thanks to Prof Sir, Kunjuppu Sir, Shanmugam Sir and Bushu... Elated to get your likes and nice comments. :)

Regards...........
 

Special thanks to Prof Sir, Kunjuppu Sir, Shanmugam Sir and Bushu... Elated to get your likes and nice comments. :)

Regards...........

Please help me to post my thread Tamils Abroad in general discussions...

We have evidence of Tamils contact with the Romans and even Americans from the earliest period. But we don’t have memories of Tamil settlements in these countries during the ancient period. Scholars also infer that the imperial Cholas of the later days must have travelled as for as Mexico. However on the basis of dependable evidence we can say that large scale Tamil migration to African, West-Indian Ocean islands began to take place only in the 19th century.

The following chat clearly shows the countries supplied by total Emigration from Madras Presidency.


To Mauritius Bourbon (Reunion) 1874 -75 : 5,844

,, Ceylon--------------------------------------------: 17,227
,, British Burmah---------------------------------: 264
,, West Indies--------------------------------------: 3,043
,, Other places ------------------------------------: 3,614

Sorry to say that all these migrate are lost their identity except Ceylon.


Interestingly seen, now this chat is increasing as in March /31/ 2011, say up to 80,000 H1B visas alone.

Knowing all parents worried about their kids who are residing in U.S.A. This applied to Europe, Gulf and African countries. American Government issues visas in various categories like Tourist visa, H1B and L-1 visa. Here, there are no problems in the L-1 visa holders, because their companies took all responsibilities.

This is an important thing, to know the categories of visas. Apart from this lot of higher study visas are given by the U.S.A.

Until these, problems are not arising to their parents. Whenever their kids or one of the family members induced or advised to stay or get P.R. the problems will begin.

All parents having the confidence to them. They have trust upon the kids that he or she is not going out of culture. This may be true because they have brought up in Indian soil. But the question arises about their hereditary. This is really tough to the green card holders to brought their children as in Indian culture.
 
Last edited:
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 111

விமானத்தில் கொடுத்த உணவில் பாதியே உண்டதால்

விமானத்தில் டின்னர் கிடைக்குமோ என்று ஏங்கினேன்!

விளக்குகளை அணைத்துவிட்டதாலே வந்தது சந்தேகம்;

விளக்குகள் பளீரெனப் போடப்பட்டன நட்ட நடு இரவில்!

மீண்டும் அதே பாணியில் ஆசிய சைவ உணவு! பசியாற

மீண்டும் அதே பாணியில் உண்டோம் கொஞ்சம் உணவு!

வீட்டில் ரொட்டியும் தயிரும் தயாராக இருக்கும்; தம்பி

வீட்டின் உபயமாக, சாப்பாட்டு மேஜைக்கே வந்துவிடும்!

சரியான சமயம் சிங்காரச் சென்னையில் இறங்கி, மிகச்

சரியாக பாதுகாப்பு, குடியேற்றச் சோதனைகள் முடித்து,

தயாராக இருந்த வாடகை வண்டிக்கு முன்பணம் கட்டி,

தயாள குணமுள்ள பணியாளன் பெட்டிகளை ஏற்றித்தர,

இனிய இல்லம் வந்து சேர்ந்தோம், ஊர் ஜனம் எல்லாம்,

இனிய இரவு கூறிவிட்டு, உறங்கிப் போயிருந்த நேரம்!

புண்ணியவாளன் ஒருவன் பின்கட்டுக் குழாயை எடுத்து,
தண்ணி அடிக்க விற்றுவிட்டதால், மேல் தொட்டி காலி!

இரு வாளிகள் நீர் நிரப்பி வைத்திருந்தாள் பணிப்பெண்;
இருவரும் முகம் கழுவி, தயிர் சாப்பிட்டு உறங்க முயல,

சிறிது நேரத்திலே பளீரென்று ஆதவன் உதித்து வந்திட,

சிறிய பிளாஸ்டிக் பையை குழாய் ஓட்டையில் அழுத்தி,

மேல் தொட்டியில் நீர் ஏற்றி, சோபாக்களைக் காத்திருந்த

மேல் விரிப்புக்களை துவைத்து, பெட்டிகளைச் சரிசெய்து,

குட்டிப் பரிசுகளை விநியோகிக்க எடுத்து வைத்து, கிச்சன்

பெட்டிகளில் நிரப்பப் பொருட்களை வாங்கி வைத்து, என

அன்றைய தினம் முழுதும் வேலை தொடர்ந்து இருந்தது;
என்றோ மழையில் கெட்டிருந்த தொலைபேசி இணைப்பு

அம்மா ஆட்சி மகிமையால் மாலை நேரத்தில் சரியானது!
சும்மா என் கைப்பேசி இருந்ததால், அந்த இணைப்பு அவுட்!

சிங்காரச் சென்னை வாழ்க்கைக்கு இது எல்லாமே ஜுஜுபி;

எங்களுக்குப் பழகிவிட்டது இந்த வாழ்க்கை முறை நன்று!

:ballchain:

தொடரும்.................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 112

ஓசியில் கிடைக்கும் மனிதக் குருதியின் ருசியே இல்லாது,

ஓடி மறைந்தன, கொசுக்களும்; நாப்தலின் உருண்டைகளின்

வாசனையால், பல்லி. கரப்பான் ஆகிய ஜந்துக்கள் போய்விட,
வாழ்த்தினேன் அதன் கண்டுபிடிப்பாளர்களை, அன்று, நன்று!

இங்கு வந்த பின், எங்கள் பயணம் தோன்றுகிறது கனவுபோல;

இந்த எண்ணம் எல்லோருக்கும் வருமோ என நான் அறியேன்!

ஆசையாக மகன் இல்லம் சென்று சேர்ந்த பின், இரு வாரத்தில்,

மோசமான விபத்தால் என்னவரின் உடல் நலம் குன்றினாலும்,

நல்ல மருத்துவ வசதி, அன்பான பிள்ளைகளின் கவனிப்பு, பல

நல்ல இதயங்களின் பிரார்த்தனை இவை நன்றாகவே காத்தன.

நண்பர் வாழ்த்தியதுபோல, இலையுதிர்கால அழகு எங்கள் பரிசு;

தண்மையான பனிப் பொழிவு, எங்களுக்குக் கூடுதல் பரிசுதான்.

எந்த ஆண்டும் இராத இந்த அதிசய நிகழ்வு, இயற்கை அன்னை

தந்த சிறப்புப் பரிசாகவே நினைத்து, நான் ஆனந்திக்கின்றேன்!

குட்டிக் கண்ணமாவின் வேடிக்கை விளையாட்டுக்கள், மனதில்

கெட்டியாக ஒட்டிக்கொண்டு, நல்ல மன நிறைவும் தருகின்றன.

பல இடங்கள் சுற்றிப் புதிய காட்சிகள் காணவில்லை; ஆனால்,
பல சுற்றத்தினர் எங்களைக் காண வந்ததால், நெருக்கமாயினர்!


எங்கு சென்றாலும், என்ன அனுபவங்கள் வந்தாலும், அவற்றில்

நன்கு தேர்வு செய்து, நல்லவை மட்டுமே எண்ணிட வேண்டும்!

மூன்றாம் கடல் கடந்த அனுபவத்திலே, எங்களுக்குக் கிடைத்த

ஒன்றாம் தரமான எண்ண அலைகளின் ஓட்டம், இதுவே ஆகும்!

இறைவனின் அருளால் பயணம் நன்கு நிறைவேற, மனம் மகிழ,

குறைகளை எண்ணாது, நிறைகளை எண்ணிப் போற்றுகிறோம்!

உலகம் உய்ய வேண்டும்,[FONT=arial, sans-serif] :pray:[/FONT]

ராஜி ராம்
 

அடுத்த பயணம் திருவனந்தபுரத்தில் நடக்கும் திருமண வைபவத்திற்கு. அதில் புதுமையான அனுபவங்கள்

கிடைத்தால், நிச்சயம் பகிர்ந்துகொள்வேன்! :typing:
 
Please help me to post my thread Tamils Abroad in general discussions...

Posting a new thread is not a big deal, Sir! Please click the general discussion (GD) section and scroll down to find

'post a new thread' at the bottom of the chart containing the GD topics. Click on that and type the topic and message

in the respective boxes.

The above post seems to give some statistics and has no specific questions. Do you want to ask whether the Tamils

living abroad can follow Tamil culture? Let your questions be clear when you start the new thread.

Best wishes..........
 

நிலவில் ஒரு நிழலின் பயணம்!


நிலத்திலும், ஆகாயத்திலும், நீரிலும் ந
ம் பயணம்;
நிலவின் மீதோ, இரு நிழல்களின் அழகிய பயணம்!

அதிசய நிகழ்வான இந்த கிரஹங்கள், எப்போதும்
அதிசயிப்பதுடன் ஆனந்திக்க வைப்பது நிஜமேதான்!

பொன் மாலைப் பொழுதில் ஆரம்பித்த நிகழ்வு; நான்
என் மாலைப் பொழுதைப் படப் பிடிப்பில் கழித்தேன்!

சாப்பாடு இல்லை என்றாலே தொல்லை இல்லையே!
ஏற்பாடு முன்பே செய்து, காமரா தயார் நிலையிலே!

இனிய இல்லத்தின் மேல் தளத்தில் அமர்ந்து, அந்த
இனிய நிகழ்வைக் காமராவில் சிறைப் பிடித்தேன்!

பூரணமாக நிலவை மறைத்தவுடன், என்ன மாற்றம்!
புதிய வடிவில் ஆரஞ்சு போன்ற அதிசயத் தோற்றம்.

எழுத்தைவிடப் படங்களே க(வி)தை சொல்வதால்,
எழுத்தே இல்லாமல், படங்களையே பகிர்கின்றேன்!

உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray:
 

Latest posts

Latest ads

Back
Top