Raji Ram
Active member
திருமலைக்கு ஒரு பயணம் - 3
ஒருமனத்தோடு தரிசனம் செய்ய விழைந்ததால்,
ஒருவரும் பசி பற்றி எண்ணவேயில்லை; அந்தப்
தன் பழமையைப் பேருந்து பறைசாற்ற, பாலாஜி
தன் அருளால் காப்பான் என்ற நம்பிக்கையோடு,
ஏற்றமிகு திருமலைப் பாதையில், இயற்கையின்
தோற்றங்களை கண்டு களித்தவாறு சென்றோம்.
பயணிகள் அனைவரையும் ஓரிடத்தில் கீழிறக்கி,
பரிசோதித்தனர் ஆயுதங்கள் உள்ளனவா என்று!
சின்ன 'பாட்டரி'கூடத் திருக்கோவிலுள் எடுத்துச்
செல்லத் தடை உண்டே! அத்தனை கட்டுப்பாடு!
ஒரு முறை அதிகாலை தரிசிக்கச் சென்ற போது,
ஒற்றை பாட்டரி வைத்த சிறு டார்ச்சை, கையில்
நான் கொண்டு செல்ல, காவலாளி தடை செய்ய,
நான் தேடித் தேடி வாங்கிய அந்தச் செல்லத்தை
விட்டு விட முடியாமல், பாட்டரியைக் கொடுத்து
விட்டு, காலி டார்ச்சை வெற்றியுடன் பெற்றேன்!
முடி காணிக்கை செய்ய வேண்டுமா, என வினவ,
நொடியிலே கை தூக்கினர் நான்கு பேர்! அவர்கள்
உடன் செல்பவர் ஐந்து பேரென மொத்தம் ஒன்பது!
உரிய இடத்தில் அவர்களை இறக்கி விட்ட பின்பு,
சரியாக ஆதவன் உச்சிக்கு வந்து சேருமுன், ஒரு
வழியாகத் திருக்கோவிலின் அருகே சென்றோம்.
வழிகாட்டிக்குப் பரிச்சயமான ஒரு கடையில், ஒரு
வழிகாட்டினார் எங்கள் உடமைகளைப் பாதுகாக்க!
:lock1:
தொடரும் ..............