• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

IMG_3744.JPG
 
In school days we used to read stories through pictures. Padam paarthu kadhai sol. The pictures themselves are telling the stories. Very beautiful and nice efforts and I suggest you to approach vikatan or kalki so that Many people can enjoy this zoo trip. Keep going.:car:
 
Excellant, but if the photos are attached it would have been more beautiful. If it is possible kindly host videos/photos.
 
Excellant, but if the photos are attached it would have been more beautiful. ....
Dear Sir,

I was new to this forum and did not post the photoes properly! I learnt to make public albums and post the photoes,

from my nephew (VR mam's second son). Since I logged in my Gmail account, the photoes posted were visible only

to me but not to other members! I shall post the photoes taken at Denver zoo, after I finish this write-up!

Regards .......... :)
 

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 4


வண்ண மீன்கள் வைத்திருக்கும் இடம்,
சுறா மீன்
வடிவில் அமைந்த பெரிய அறை ஆகும்! அதனுள்

பல கண்ணடித் தொட்டிகளிலே, வேகமாகத் திரிந்த
பல வகை மீன்கள், உள்ளம் கொள்ளை கொண்டன!

படமே எடுக்க இயலாது, சில வகைகள் சுற்றி வர,
படம் எடுக்கப் போஸ் கொடுத்தன அவற்றில் சில!

பாட்டரி வண்டி, சில இடங்களிலே நிறுத்தியதால்,
பார்க்க இயலவில்லை பல விலங்கு வகைகளை!

காலாற நடந்து சென்று காணலாம் என்றெண்ணி,
காலாற நடக்க ஆரம்பித்து, சுற்ற ஆரம்பித்தோம்!

மனிதக் குரங்கை ஒத்த உருவத்திலிருந்து மாறி,
மனித வடிவத்தை அடைந்ததை விளக்குவதற்கு,

இரண்டரை மில்லியன் ஆண்டுகள் முன்பிலிருந்து,
முப்பத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை

பெற்ற மாற்றங்களை படமாக வைத்திருக்க, நாம்
பெற்ற இன்றைய உருவத்தின் உயர்வும் புரிந்தது!

அருகில் நிஜ மனிதக் குரங்கு, குகையில் அமர்ந்து,
உருவம் முழுவதும் காட்டாது ஒளிந்துகொண்டது!

பறவைகளின் கூண்டுகள் பல இருந்தன. தேசீயப்
பறவை தன் அழகிய தோகையை நீட்டி அமர்ந்தது.

வெள்ளை மயில்களில், பெட்டைகளே மிக அதிகம்.
கொள்ளை அழகான கண்களுடன் சுற்றி உலவின.

பல வகைக் கிளிகள்; சில வெண்மை; சில பசுமை;
சில பஞ்ச வர்ணம்; சில சிறியவை; சில பெரியவை!

தொடரும் ................. :)
 
Last edited:


அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 5

ஒரு கிளி கண்ணாடியில் அழகு பார்த்தது; அடுத்து
ஒரு காட்டுக் கோழி, மிக அவசரம் போல் திரிந்தது!

நெட்டை உருவோடு நடை பயின்று வந்தது, அங்கே
ஒட்டகச்சிவிங்கி ஒன்று; அதன் துணை அதனருகில்!

இரு நிறங்களும் வேறாக விளங்குவது ஆச்சரியம்!
வரிக்குதிரை பொம்மையில், ஒரு தண்ணீர்க் குழாய்!

வரிக்குதிரையும் நெருப்புக் கோழியும் நண்பர்களே;
வரிக்குதிரைக்கு அருகிலேயே நெருப்புக் கோழிகள்!

காட்டில், தன் பார்வைத் திறனால், எதிரிகள் வரவை
நோட்டமிட்டு அறிவிக்குமாம், நெருப்புக் கோழிகள்!

கேட்கும், நுகரும், திறன் மிக்க வரிக்குதிரைகளோ,
கேட்டு, நுகர்ந்து, எதிரிகள் வரவை அறிவிக்குமாம்!

'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', என மனிதருக்குக்
கோடி காட்டும் வகையில் இவைகள் வாழ்கின்றன!

அங்கங்கே பாம்புப் புற்றுகள் இருந்தன; பாம்புகளும்
அங்கே உலவுமாம்; மான்களும் கூட உலவிடுமாம்!

அறிவிப்புப் பலகைகள் வைத்தும் கூட, பயத்தையே
அறியாததுபோல், காதல் ஜோடிகள் காட்டினுள்ளே!

பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஜோடியாக உலவினர்!
பள்ளியிலே என்ன கூறி விடுமுறை எடுத்தனரோ?

பசி எங்களுக்கு மெதுவாகத் தோன்றி வருத்த, எம்
பசி ஆற்றிட, நுழைவாயில் அருகில் அமைந்த ஒரு

உணவகத்திற்குச் சென்ற பின்பு, இரண்டு மணிக்கு,
உலவும் சிங்கங்கள் காண, சீட்டுகள் வாங்கினோம்!

தொடரும் ..................... :thumb:
 

ஒட்டகச்சிவிங்கி ஒன்று...

IMG_3837.JPG


அதன் துணை அதனருகில்! இரு நிறங்களும் வேறாக விளங்குவது ஆச்சரியம்!

IMG_3843.JPG
 
Last edited:

Latest ads

Back
Top