• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...


கற்சிலை நிறத்திலே ஒரு பெரிய முதலை உலவி வர ...

IMG_3910.JPG
 

எங்களுக்கு என்ன கட்டுப்பாடு எனக் கேட்பது போன்று,
தங்களுக்குள் சண்டை போட்டன, சிறு குரங்குகள் சில!

IMG_3919.JPG
 

வெய்யில் தாழ்ந்துவிட்டதால், நீர்யானைகள் தமக்கு

வைத்த உணவை நாடி, நீரிலிருந்து வெளியே வந்தன.

IMG_3920.JPG
 

குளிர்ந்த நீர் நீர்வீழ்ச்சியிலே
வெள்ளமாகக் கொட்டியது ...

IMG_3926.JPG
 
Dear Rajiram, Your trip to zoo and the payanakadaigal/kavidhaigal is simply outstanding and appreciable. It's like as if we have toured with you to the zoo. What next?
 

பயண இம்சைகள்!


ரயில் பெட்டிகளின் இருக்கைகளில் அமர்ந்தும்,

ஒயிலாகப் படுத்தும் செல்ல உள்ளன வசதிகள்!

குளிரூட்ட சாதனங்களை இணைத்து, நம்மைக்
களிப்பூட்ட முனைகின்றது அரசு! ஆனாலும், நம்

சயனம் கெடுக்க எத்தனை எத்தனை வகைகளில்,
பயண இம்சைகள் உடன் வருகின்றன தெரியுமா?

இரைந்து பேசிக்கொண்டு, இரவு பத்து மணிக்குத்
திறந்து விடுவார்கள், உணவுப் பொட்டலங்களை!

மற்றவரைப் பற்றிய கவலையே இல்லாமல், தாம்
மற்றவரை நக்கல் செய்துகொண்டே இருப்பார்கள்!

செல்லுல்லாப் பேசியில் விடாமல் அழைத்து, தாம்
செல்லும் பயணம் பற்றி விமர்சனம் செய்வார்கள்!

பெண்கள் கூடினாலோ, கேட்கவே வேண்டாம்! தம்
அன்புக் கணவர் பற்றி ஆராய்ச்சியே செய்வார்கள்!

ஒரு வழியாக இவை அனைத்தும் ஓய்ந்த பின்னர்,
ஒரு வழியாக ஓசிக் கம்பளியை மடித்துப் போட்டு,

உறங்க ஆரம்பித்ததும், நமக்கு அடுத்த 'பர்த்'திலே,
உறக்கத்தில் குறட்டை விட்டுப் படுத்துகிற பயணி!

அடிக்கடி அணைந்துவிடும் A C; ஓடாத மின் விசிறி;
அடித்து நம்மை அரட்டும் செல்லுலா மணியோசை!

சின்ன உழக்குகளும் வந்துவிட்டால், அழுது. அரற்றி,
என்ன சமாதானம் செய்தாலும், ஓயாது படுத்திடும்!

ஓட்டுனர் ரயிலைத் தண்டவாளத்திலே ஓட்டுவார்;
ஆட்டுனர் ரயிலை அதன் போக்கில் ஓட விடுவார்!

ஓட்டுனரும், ஆட்டுனரும் மாறி மாறி அந்த ரயிலை
ஓட்டி, ஆட்ட, காணமல் போய்விடும் நமது உறக்கம்!

இத்தனையும் மீறி அரை மயக்கத்தில் கிடக்கையில்,
அத்தனை பேரையும் எழுப்பிடும் கைப்பேசி அலாரம்!

அதிகாலை மூன்று மணிக்கு ரயிலை விட்டு இறங்க,
அலாரம் வைத்த பயணியோ, எழுந்திருக்க மாட்டார்!

'சும்மா இருப்பதே சுகம்', என இவை அனைத்தையும்
நம்மால் தாங்க முடிவதே பயணத்தில் பேரானந்தம்!


:peace:
 
Last edited:
hi RR madam.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்..
....
 
Last edited:

எல்லாம் நன்மைக்கே ... 1


அன்னையுடன் ஆசையாய் இரு நாட்கள்
அன்புடன் கழித்து, இன்று அதிகாலையே

இனிய இல்லம் திரும்ப, ரயில் ஏறினேன்;
இனிய உறக்கத்தில் ஒருவர் என் 'சீட்'டில்!

காலியாகக் கிடந்த இருக்கையைக் காட்டி,
ஜாலியாக அதிலேயே படுக்கச் சொன்னார்

டிக்கட் பரிசோதகர்; வசதி இதுதான் என்று
இக்கட்டு தீர்ந்த மகிழ்ச்சியில் உறங்கிவிட,

தனது இருக்கை அது என்று கூறி வந்தாள்,
தன் படுத்தும் சின்ன மகனுடன் ஒரு பெண்

அடுத்த நிறுத்தத்தில்; உடனே சென்றேன்,
அடுத்து இருந்த என் இருக்கைக்கு! அங்கே

பேப்பர் சுற்றி வைத்த பாட்டில்கள் இருக்கு;
பேப்பர் மறைத்ததோ உள் நாட்டுச் சரக்கு!

'குடி மகன்கள்' மூவர் அமர்ந்துள்ளார், தாம்
கடித்துக் கொள்ள வறுத்த முந்திரியுடனே!

ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்தேன்;
ஜன்னல் வழியாக நோக்க ஆரம்பித்தேன்!

அடுத்த நிறுத்தத்தில் வந்தது ஓர் அதிர்ச்சி!
எடுத்த நீளத் துப்பாகியுடன் இரு போலீஸ்;

துப்பாக்கி இல்லா இரு போலீஸ்; இடையே
அப்பாவி தாடி முகத்துடன் இரு இளைஞர்!

குடி மகன்கள் முகம் கழுவச் சென்றிட, தம்
அதிரடித் தோரணையுடன் வந்தமர்ந்தனர்

என் எதிர்ப் பக்க இருக்கையில்; அப்போது
என் கண்களில் பட்டதே தந்தது அதிர்ச்சி!

:shocked:

தொடரும் .......
 
குறுநாவல் படிப்பதைப் போன்று

எதிர் பாராத திருப்பங்களுடன் ஒரு குறுநாவல் படிப்பதைப் போன்று இருக்கின்றது! நன்றி.
 
Last edited:

எல்லாம் நன்மைக்கே ... 2


அப்பாவி என்று நான் எண்ணிய இளைஞர்,
தப்பான எதையோ செய்தவர்! ஒருவனின்

இடது கையை இணைத்தது அடுத்தவனின்
வலது கையுடன், 'என்றும் வெள்ளி'க் காப்பு!

என் நடுக்கத்தை மறைத்து, கலவரம் இன்றி
என் முகத்தை வைக்க முயன்று தோற்றேன்!

'நீங்கள் படுத்துக்கொள்ளலாம் Madam!' எனத்
தங்கள் தாராள மனதைப் பறைசாற்றிவிடப்

போலீஸ் முயல, நானும் பணிவாக மறுக்க,
போலீஸ் சிறிது நேரத்திலே சாமி ஆடியது!

துப்பாக்கிப் போலீஸ், தூங்கி ஆடியபடித் தம்
துப்பாக்கி மீது சரிய, மற்ற இரு போலீஸும்

தாம் பிடித்த இளைஞர் மீதே நட்புடன் சரிய,
நான் மிரட்சியுடன் இக் காட்சியைப் பார்க்க,

அசோக வன சீதையை நினைத்தாரோ, என்
அதோகதியைக் கண்ட டிக்கட் பரிசோதகர்?

அந்தப் பெட்டியின் மறு ஓரத்தில் காலியாக
வந்த ஒரு இருக்கையை எனக்கென ஒதுக்கி,

அங்கே என்னை அழைத்துச் சென்றார் அவர்;
அங்கே நிம்மதி வந்திட, உரைத்தேன் நன்றி!

தினமும் கிடைக்காத பகல் வேளைத் துயில்,
எனக்கு இன்று நன்றாகத் தந்தது அந்த ரயில்!

'எல்லாம் நன்மைக்கே' என்று நினைத்தால்,
எல்லா நன்மைகளும் தருவான் இறைவன்!


ராஜி ராம்

6 - 11 - 2012.

:sleep: . . . :becky:
 

என் ரயில் அனுபவத்தை எழுதிவிட்டேன், ஷண்முகம் சார்!
என் ஆக்கம், தங்களைப் போன்ற நல்ல நண்பர்கள் தரும் ஊக்கமே! :popcorn:
 

போகாத ஊருக்கு வழி - 1


இறை அருள் இல்லாது எதுவும் நிகழாது;
அது
நிறைவு தரும் உள் நாட்டுப் பயணமாயினும்!

இயற்கையின் அழகிலே இறையைக் கண்டு,
இயன்றவரை கூட்டமான கோவில்கள் எனில்

செல்லாமல் இருப்பவள் நான்! சென்ற மாதம்
செல்ல விரும்பினேன் Kaziranga National Park!

இந்த மாதம்தான் பொதுமக்கள் கண்டு களிக்க
அந்தப் பூங்கா திறக்கப்படுமாம். என்னவருக்கு

கணினி தொடர்பான கருத்தரங்கு நடந்திடும்
கல்கத்தா நகரில் டிசம்பர் முதல் வாரம். அதில்

பங்கு பெற அவர் விழைய, ஷில்லாங் நகரில்
தங்கும் பெரியம்மா மகன் எங்களை அழைக்க,

கௌஹாத்தி நகரிலிருந்து Kaziranga செல்ல
சௌகரியமாகப் பயணத் திட்டங்கள் இருக்க,

எல்லா இடங்களையும் பார்க்க இரு வாரங்கள்
செல்ல ஏற்பாடுக
ளை ஆரம்பித்தோம் நாங்கள்!

அஸ்ஸாம் சுற்றுலாத் துறையின் அலுவலகம்
அமைந்துள்ளது அழகிய கௌஹாத்தி நகரில்.

அந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டதில்
வந்த விவரங்கள் மிகுந்த மன மகிழ்ச்சி தந்தன.

ஐந்து நாட்கள் உள்ள பயணத் திட்டத்தில், பல
ஜந்துக்கள் உலவும் Kaziranga பூங்காவும் உண்டு;

அகன்ற பிரம்மபுத்ரா நதியில் படகுச் சவாரியும்,
சிறந்த நீர்வீழ்ச்சிகளைக் காண்பதும் கூட உண்டு!

தொடரும் ...............
 

போகாத ஊருக்கு வழி - 2


கல்கத்தாவில் என்னவரின் உற்ற நண்பரின்

இல்லம் இதுவரை நான் பார்த்ததில்லை. இது

மிகவும் பெரிய குறை அவருக்கு; இப் பயணம்
மிகவும் முக்கியம் நண்பரிடம் செல்லுவதால்!

சிங்காரச் சென்னையில் சுற்றுலாத் துறைகள்
பாங்காக வைத்துள்ளன சேவை மையங்களை.

அழகிய இடங்கள் பற்றிச் செய்திகள் அடங்கிய
அழகிய புத்தகம், இலவசமாகவே கிடைத்தது!

நாம் செல்லும் ஊர்கள் பற்றிய விவரமறிந்தால்,
நாம் செல்லும் பயணமும் எளிதாய் இருக்குமே!

புத்தகப் புழுப் போல, முதல் பக்கம் ஆரம்பித்து,
புத்தகம் முழுதும் படித்து மகிழ்ந்தேன்! திருப்தி!

ஜீப், யானை, படகு என வகை வகைச் சவாரிகள்,
ஜீன்ஸ், பான்ட், சுடிதார் போல உடைகளில் மிக

எளிதாகுமே என்ற எண்ணம் வர, முதலிரண்டும்
எப்போதும் அணியா உடைகள் என்பதால், புதிய

உடைகள் சுடிதார் செட்டுகளாகத் தைத்து, அந்த
உடைகள் கசங்காமல் இஸ்திரியும் செய்தேன்!

கணினியுடன் பல மணி நேரங்கள் செலவாக்கி,
இனிய புதிய செய்திகள் நிறையத் திரட்டினேன்!

பயண ஏற்பாடுகளில் மனம் மிக மகிழ்ந்து, எங்கள்
பயணம் பற்றி எல்லோரிடமும் சொல்ல, ஓரிரவு

நல்ல தூக்கம் என்னவருக்குக் கலைந்தது! ஒரு
சொல்ல ஒண்ணாத வலி வயிற்றிலே வந்தது!

:decision: தொடரும் .............

 
hi RR madam,
Kazhiranga national park is for SINGLE HORN RHINOS....which is very famous in the world....when i was posted in Tezpur near

Gawhati....i visited shillong/darjeeling too....nice 7 sisters ezperience....7 sisters meas seven north eastern states....i did

my MBA from calcutta...i like matka tea and matka rasgulla from bara bazaar near howrah station..it was really nice

experiences with AMEE BALO BOLCHE......
 
Last edited:

போகாத ஊருக்கு வழி - 3


கையில் கிடைத்த முதலுதவி மருந்துகளால்,

பைய மறைந்தது வலி; என்றாலும், முழு இரவு

உறக்கம் கலைந்து போனது; மறு நாள் விடியல்
உறங்காத அயர்வோடு தொடங்கினும், பின்னர்

தினப்படி வேலைகள் நடந்தேறின; இரு நாட்கள்
இனம் புரியாக் கலவரத்துடன் செல்ல, மீண்டும்

வந்து உதித்தது வலி, இம்முறை தீவிரமாகவே;
அந்த நேரம் மலேசியாவில் நள்ளிரவு என்பதால்,

அன்பு அண்ணனைத் தொந்தரவு செய்யாது, என்
அன்புத் தங்கையிடம் கேட்டுத் தெரிந்து, அவள்

இதே போலத் தவித்த சமயம், அண்ணன் அளித்த
அதே மருந்துகளைத் தர, கிடைத்தது நிவாரணம்!

முதுமையில் அடி வைத்தால், உடல் நிலையில்
பொதுவாக அதிக கவனம் தேவை! அண்ணனின்

ஆலோசனைப்படி ECG எடுத்து, சரியெனக் கண்டு,
ஆரம்பித்தேன் சில மருந்துகள் அவரைக் கேட்டு!

இக்காலத்தில் மருத்துவ வசதிகள் பெருகியதால்,
அக்காலம் போல symptomatic treatment வேண்டாம்!

வயிற்றுக்குள் ஒரு குட்டிக் காமராவை நுழைத்து,
வயிற்றின் உள்ளே படங்களை எடுத்திடலாமே!

அந்தப் பரிசோதனைகளையும் முடித்து, அதிலும்
எந்தப் பெரிய விஷயமும் இல்லை என்று கண்டு,

இரு மாதங்கள் மாத்திரையே போதுமென்றறிந்து,
ஒருவாறு நிம்மதி வந்தாலும்.... எங்கள் பயணம்?


:confused: தொடரும் ..................


 

போகாத ஊருக்கு வழி - 4


மருந்து மாத்திரைகளைத் தொடர வேண்டும்.
அருந்தும் பானங்களும், உணவும் மாறியதால்,

இந்தப் பயணம் சென்றால், அந்த இடங்களிலும்
இந்தப் பானங்களும், உணவுமே தேவைப்படுமே!

எப்படி இரு வாரங்கள் விசேஷ உணவு தேடுவது?
இப்படி எண்ணம் எழுந்ததால், பயணம் ரத்தானது!

இந்தப் பயணம் ரத்தானது இறைவனின் சித்தம்;
அந்த முடிவும் நல்லதென நினைப்பேன் நித்தம்!

ஏமாற்றம் வந்த பொழுதும், அதிலுள்ள நல்லதை
ஏற்றுக் கொண்டு நிம்மதி பெறுவதுதான் சிறப்பு!

இதுவரை செல்லாத ஊர்கள் பற்றிச் செய்திகளை,
பொதுவாக வலைத்தளத் தேடலால் அறிந்தேன்.

வடகிழக்கு மாகாணங்களில் சுற்றுலாச் செல்லத்
தொடர்பு கொள்ளும் வகைகளையும் அறிந்தேன்.

அதிக வேலைகள் உள்ள வேளைகளில் அமர்ந்து
புதிய உடைகள் தைக்கவே மாட்டேன்! ஆனாலும்

பயணம் போகும் ஆர்வத்தில், தையல் நாயகியாக,
சயனம் செய்யும் மதிய வேளைகளில் மாறினேன்!

புதிய உடைகள் சில கிடைத்து மகிழ்ச்சி; மேலும்
இனிய சுற்றத்துடன் பல முறை பேசி, அவர்களும்

தினமும் உடல் நிலை பற்றி வினவ, இறையைத்
தினமும் போற்றினேன் இவர்களை அளித்ததால்!

கரிய மேகத்திலும் வெள்ளி நிற விளிம்பு உள்ளது;
அரிய பயணம் செல்லாவிடி
லும், நன்மை உள்ளது!


உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம் :pray:
 

Latest ads

Back
Top