• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

IMG_3847.JPG
 

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 6

'Lion safari' என்று சொன்னதும், அங்கே உலவி வரும்
Lion கள் நிறைய இருக்குமே என்று ஆனந்தித்தோம்!

முப்பது ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டு, இருவரும்
அப்போதே பாதுக்காப்பான வண்டியிலே ஏறினோம்!

இருபத்தைந்து பேர்கள் சேர்ந்ததும், வண்டி புறப்பட்டு,
இரண்டு வலிய இரும்பு வலைக் கதவுகளைக் கடந்தது!

ஏதோ 'ஜுராசிக்' பார்க்கில் நுழைவதுபோல் தோற்றம்!
'அதோ பாருங்கள் இரு சிங்கங்கள்!' என்றார் ஓட்டுனர்!

விரிந்த கண்களுடன் நோக்கினால், சிங்க ராஜா ஒன்று
இருந்தது தன் ராணியினருகில், ஆழ்ந்த உறக்கத்தில்!

சற்றும் அசையாமல் அப்படியே கிடந்தது; அதன் பின்
ஒற்றைக் கண்ணை, ஒரே முறை திறந்து பார்த்த பின்,

மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தது! சிங்க ராணி, தனது
நீண்ட நித்திரை கலைந்துவிடாது, நன்கு உறங்கியது!

புகைப்படங்களை வண்டிக்குள் இருந்தே எடுத்த பின்,
புறப்பட்ட வண்டியின் அடுத்த நிறுத்தம், மிக அருகில்!

பாதுக்காப்பாக அமைத்த ஒரு பகுதியில், ஒரு ஜோடி;
பாதுகாத்தது தன் இரண்டு மாதக் குட்டிகள் மூன்றை,

தாய்ச் சிங்கம் அடுத்திருந்த பகுதியில்! அவ்வளவே!
தாய்ச் சிங்கத்தைப் படம் எடுப்பதே, கடினமாயிற்று!

படம் எடுக்க நான் படும் பாட்டைப் பார்த்த ஓட்டுனர்,
படம் தான் எடுப்பதாகக் கூறி, அந்த சிங்க ஜோடியை,

வண்டியின் கதவைத் திறந்து, வீரர் போல எடுத்தார்,
வண்டியருகில் உறங்கும் சிங்கம் வராது என்று நம்பி!

தொடரும் ..................... :photo:
 

படம் எடுக்க நான் படும் பாட்டைப் பார்த்த ஓட்டுனர்,
படம் தான் எடுப்பதாகக் கூறி, அந்த சிங்க ஜோடியை,

[FONT=arial, sans-serif]வண்டியின் கதவைத் திறந்து, வீரர் போல எடுத்தார்,[/FONT]
[FONT=arial, sans-serif]வண்டியருகில் உறங்கும் சிங்கம் வராது என்று நம்பி!

[/FONT]

IMG_3864.JPG
 

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 7


சிங்கம் ராஜாதான்; அதன் கொட்டாவி கூட அழகே!
[FONT=arial, sans-serif]அசிங்கமாக மனிதர் முகம் போலப் போகவில்லை![/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]இருபது நிமிடங்களிலேயே அந்தப் பயணம் முடிய, [/FONT]
[FONT=arial, sans-serif]இருவரும் மீண்டும் பாதி வழியில் இறங்கினோம்![/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]இன்னும் சில படங்கள் எடுக்க விழைந்ததால், நான் [/FONT]
[FONT=arial, sans-serif]இன்னும் ஒரு முறை அங்கு சுற்றவே விழைந்தேன்.[/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]கரடிகள் சில உலவிய இடத்தில் நின்று, அங்கு ஒரு [/FONT]
[FONT=arial, sans-serif]கரடி சில கம்புகளை நோட்டமிடுவதைக் கண்டேன்![/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
சிலம்பாட்ட வீரனோ என்னவோ, [FONT=arial, sans-serif]போன பிறவியில்?[/FONT]
[FONT=arial, sans-serif]சிலம்பாட ஒரு கம்பைத் தேடுவதுபோலத் தேடியது![/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]மிக நெருக்கமாகக் கம்பிகள் இட்டதாலும், சிறுத்தை [/FONT]
[FONT=arial, sans-serif]மிக வேகமாக உலவியதாலும், நல்ல படம் இல்லை![/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]நான் மிகவும் ரசிக்கும் பறவைகளின் கூட்டமிருக்க, [/FONT]
[FONT=arial, sans-serif]என் காமராவுக்கு நல்ல வேலை வந்தது! அங்கிருந்த[/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]பறவைகள் மிகவும் சுறுசுறுப்பு; நீரில் விளையாடின;[/FONT]
[FONT=arial, sans-serif]பறந்தன; கூவி மகிழ்ந்தன; கூடிக் குலவின; அழகாக![/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]ஒரே ஒரு பெலிகன் மட்டும் துறவி போல அமர்ந்து, [/FONT]
[FONT=arial, sans-serif]ஒரே திசையை நோக்கித் தவமிருந்தது, அசையாது![/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]வயதான அரசர்கள் வடக்கிருந்து நோன்பு இருப்பது, [/FONT]
[FONT=arial, sans-serif]வந்தது ஏனோ [FONT=arial, sans-serif]எனது [/FONT]நினைவில், அந்த சமயத்தில்![/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]குடுமி வைத்த வெள்ளை Egret பறவை, மீன்களைச் [/FONT]
[FONT=arial, sans-serif]சடுதியில் பிடிக்க முயன்று, அதில் வெற்றி கண்டது![/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]மாலை வேளையில், பறவைகளில் இனிய குரல்கள் [/FONT]
[FONT=arial, sans-serif]மாலை மயக்கம் தருவது மறுக்க முடியாத உண்மை![/FONT]
[FONT=arial, sans-serif][/FONT]
[FONT=arial, sans-serif]தொடரும் .......................... [/FONT]
 
Last edited:

சிலம்பாட்ட வீரனோ என்னவோ, போன பிறவியில்?

சிலம்பாட ஒரு கம்பைத் தேடுவதுபோலத் தேடியது!

IMG_3881.JPG
 
[FONT=arial, sans-serif]
மிக நெருக்கமாகக் கம்பிகள் இட்டதாலும், சிறுத்தை
[/FONT]
[FONT=arial, sans-serif]மிக வேகமாக உலவியதாலும், நல்ல படம் இல்லை!

IMG_3889.JPG
[/FONT]
 

நான் மிகவும் ரசிக்கும் பறவைகளின் கூட்டமிருக்க .....

IMG_3890.JPG
 
Thanks. post 1153 ... without snakes. post 1154 Wht if the deers are freely moving? Will they harm us? Even freely moving snakes will not harm us.
 
Thanks. post 1153 ... without snakes. post 1154 Wht if the deers are freely moving? Will they harm us? Even freely moving snakes will not harm us.
The deer won't harm us. It might be a warning to the cyclists roaming around!

A deposit of Rs. 200/ is collected for renting a bike @ Rs. 30/- per hour. We saw many students making use of this facility. :thumb:
 
I am not aware of such facilities. Then it must be the warning for snakes and deers stating "beware human on road." Recently I have seen some photographs taken in Australia, wherein the entire traffic on the road was stopped for a while allowing kangarus to cross the road.
 

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - 8


இருட்டில் திரியும் இரவு ஜீவிகள் இருந்த இடத்தில்,
இருட்டு என்றால் கும்மிருட்டு, நுழைவு வாயிலில்!

மூச்சை அடைக்கும் துர்மணம் வீச, அங்கு உள்ளவை,
பேச்சு மூச்சு இல்லாதது போலவே, அமைதி காத்தன!

வேகத்திற்குப் பெயர் போன ஆமை வகைகள் இருக்க,
வேகமாக அங்கு சென்றேன், அவற்றைப் படம் எடுக்க.

ஆமையின் வடிவில் ஒரு கூரை அமைந்திருக்க, ஒரு
ஆமையின் ஓட்டில், நீல நிற வண்ணம் சொட்டியிருக்க,

கற்சிலை போல ஒரு முதலை படுத்திருக்க, அங்கேயே
கற்சிலை நிறத்திலே ஒரு பெரிய முதலை உலவி வர,

எங்களுக்கு என்ன கட்டுப்பாடு எனக் கேட்பது போன்று,
தங்களுக்குள் சண்டை போட்டன, சிறு குரங்குகள் சில!

வேலியே இல்லாது, மரத்தடியில் கூட்டமாக இருந்து,
வெளியே உலவும் அவற்றை, பயத்துடனே பார்த்தேன்!

வெய்யில் தாழ்ந்துவிட்டதால், நீர்யானைகள் தமக்கு
வைத்த உணவை நாடி, நீரிலிருந்து வெளியே வந்தன.

கரும் சட்டையை அணிந்தது போல ஒரு குரங்கு, தன்
கரும் தேகத்தைப் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தது!

இருவரும் பொறுமையாக நடந்தே சுற்றியிருக்கலாம்!
இரு வண்டிகளிலும் சென்றதே வீணாகத் தோன்றியது!

வெளியே வரும் சமயம், குளிர்ந்த நீர் நீர்வீழ்ச்சியிலே
வெள்ளமாகக் கொட்டியது; மகிழ்ச்சி வந்தது மனதிலே!

இனிய நண்பர்களைக் கண்ட ஆனந்ததுடன், விரைவாக
இனிய இல்லம் வந்து சேர்ந்து, ஆல்பமும் தயாரித்தேன்!


உலகம் உய்ய வேண்டும்,

ராஜி ராம்.
:pray2:
 

ஒரு
ஆமையின் ஓட்டில், நீல நிற வண்ணம் சொட்டியிருக்க ...

IMG_3900.JPG
 

Latest ads

Back
Top