'நான்பிராமின் வீடல்லவா அது?' என்று என்னை வினவ,
'நான் பிராமின்தானே! பரவாயில்லை!' என்று அதில் ஏற,
என்னைத் தொடர்ந்து வந்தனர் மேலும் சிலர், அதுவரை
'என்னைத் தொடாதே' என்று ஒதுக்கியவரின் மாடிக்கு!
சிவாச்சாரியார் நீர்க்கலசத்துடன் கோவிலைச் சுற்றிட,
சில பக்தர்களும் அவரைத் தொடர்ந்து பணிவுடன் வர,
இப்போது உரைநடையில் 'அந்த' அனுபவம்!......... i think these type of stuff, has to fall on my eyes !
can you please explain the situation a little more elaborately, and how, in your own inimitable way, dealt with it. thank you good lady.
இப்போது உரைநடையில் 'அந்த' அனுபவம்!
கோவிலின் மேற்குப் புறத்தில் இருந்தது அந்த வீடு! அந்த மாடியை நான் கும்பாபிஷேகத்திற்கு முன் தினமே தீர்மானம்
செய்துவிட்டேன், என் 'காமரா'ப் பணியைப் பார்த்திட. அது யாருடைய வீடு என்று நான் அறியேன்; கேட்டு அறியவும்
விழையவில்லை!
சிவாச்சாரியார் கும்பத்துடன் புறப்பட, விரைந்து அந்த மாடிப் படிகள் அருகில் சென்றேன். கூட்டமாகச் சில மாமிகள்
என்னைக் கடந்து நடந்தனர். அவர்களின் ஒருவளான கோவில் அர்ச்சகரின் மனைவி, என்னை ஆச்சரியம் கலந்த
விழிகளுடன் பார்த்து, 'ராஜி மன்னி! அந்த வீட்டு மாடிக்கா போறேள்? எல்லாரையும் எங்காத்து மாடிக்கு அழைச்சிண்டு
போறேனே! நீங்களும் வாங்கோ!' என்று அழைப்பு விடுத்தாள். அவள் வீட்டு மாடியிலிருந்து படம் எடுக்கவே முடியாது!
நான் 'ஏன்?' என்று ஒற்றை வார்த்தை வினாவைத் தொடுக்க, 'அது நான்பிராமின் வீடு அல்லவா?' என்று புருவங்களை
உயர்த்திக் கூற, 'நான் பிராமின்தானே! அதனால் ஏறுவேன்!' என்று நான் சிரித்தபடி உரைத்து (எனக்கு ஒரு பெரியவர்
அறிவுறுத்திய 'ஜிலேபி சிரிப்பு'தான்!) மாடியில் ஏறிட, இன்னும் சிலர் என்னைத் தொடர்ந்து அதே மாடியில் ஏறினர்.
அந்த வீட்டில் என்ன உபசாரம், எங்களுக்கு!
மாடியிலிருந்து இறங்கும் முன், அந்த வீட்டில் இருப்பவர்களைப் படம் எடுக்க வேண்டும் என்று கேட்டேன். உடனே
உள்ளே சென்று, கேசத்தைச் சரி செய்து, போட்டோவுக்கு 'போஸ்' கொடுத்தனர். Innocence என்பதன் முழு வடிவத்தை
அவர்களிடமே கண்டேன்!
Thank you Sir!good one for you dear lady.