• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மணிக் கீர்த்தனைகளின் கனித் தமிழாக்கம் - ராஜி ராம்

Raji Ram

Active member
அன்பார்ந்த இசைப் பிரியர்களுக்கு,

என் வணக்கம் உரித்தாகுக!

பிற மொழிகளில் அமைந்த மணிக் கீர்த்தனைகள் பல, பொருள் புரியாமலே
இசையால் மட்டுமே வளர்ந்து செழித்துள்ளன. இவற்றைப் பொருள் தெரிந்து
பாடத் தமிழாக்கம் தேவை என உணர்ந்தேன். அதன் விளைவே இந்த முயற்சியில்
என்னை ஈடுபாடு கொள்ள வைத்தது.

பெரும் கடலா கர்நாடக இசையில் பிரபலமான மணிக் கீர்த்தனைகளின்
அர்த்தம் மாறுபடாது, அதே ராக, தாளங்களில் அமைத்து, அவற்றைப் பாடி
வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன். நன்றி.

அன்புடன்,

ராஜி ராம்
 

"ஶ்ரீ கணபதினி" (தமிழாக்கம்)
சௌராஷ்ட்ரம்; த்யாகராஜர்
தேஸாதி (இரண்டு களை சவுக்கம்)


ஆ: ஸ ரி¹க³ம¹ப ம¹தா²நி³ஸ்; அ: ஸ் நி³த²நி²த²ப ம¹க³ரி¹ஸ

Audio File:


பல்லவி:
;, ஶ்ரீ கணபதியை| ; சேவிக்க |வாரீரே||
; சிறந்த பக்தர்களே| ; சேவிக்க| வாரீரே||

அனுபல்லவி:
சீர் மிகு ப்ரமனின்| ; பூஜைகளை| ஏற்றுக்கொண்டு||
;, சீரிய நர்த்தனம்| ;, ஆடி எ|ழுந்தருளும்||
(ஶ்ரீ கணபதியை)

சரணம்:
பலா தெங்கின் காய் நாவல் முதலான|
பழங்களை அமுது| செய்து கொண்டு||
பதங்களை பூமியில் மிக அழுத்தமாய்|
கலீர் கலீரென| பதித்துக்கொண்டு||
பதி ஹரியின் திருவடிகளை இதய|
தாமரை மலரில்| இருத்திக்கொண்டு||
பக்தனான த்யாகராஜன் புகழ்வோன்|
பல கதிகளில் தித்|தளாங்கு என ஆடி||

வரும் (ஶ்ரீ கணபதியை)
 
What a wonderful and delightful contribution. I have heard this song as a part of Thygaraja Pancharatna renditions. I was told this song was originally from Sriranga Panchratnam.. Looking forward to learning more. Taking a gap after Sri before Ganapathini shows your mastery of Sahityam.
 
2. "ப்ரம்மம் ஒகடே"

"ப்ரம்மம் ஒகடே" என்ற அன்னமையாவின் பாடல் மிகப் பிரபலமானது.

தாய்த் தமிழில் சிலர் ஏற்கனவே மொழிபெயர்த்தாலும், "ஒகடே" என்ற சொல்லுக்கு "ஒன்றே" என்றும் "யானை'', ''நாய்'' என்ற சொற்களுக்கு "வேழம்", "அசுழம்"
(இந்தச் சொல் திருப்புகழில் உள்ளது) என்றும் மாற்றினால் இன்னும் சிறப்பாகும்
என்று தோன்றியது.


வேறு சில மாற்றங்களையும் இந்தத் தமிழாக்கத்தில் காணலாம்.
 
2. "ப்ரம்மம் ஒகடே". (தமிழாக்கம்)
பௌளி - ஆதி (திஸ்ர கதி) - அன்னமையா

ஆ: ஸ ரி¹க³ப த¹ஸ் - அ: ஸ் நி³த¹ப க³ரி¹ஸ

Audio Link:



தந்தனானா தனா | தந்தனா|னா ஹரே||

தந்தனா|னா ஹரி| தந்தனா|னா ஹரே||
தந்தனா|னா ஹரே| தந்தனா|னா...||

பல்லவி:
; ப்ரம்மம் ஒன்றே பர ப்ரம்மம் ஒன்றே

சரணம் - 1
; அன்னை பூமியிலே| உயர்வோ தாழ்|வோ இல்லை||
; அனைவருக்கும் ஶ்ரீ ஹரி| அந்தராத்|மா ஹரி||
அந்தராத்|மா ஶ்ரீ ஹரி| அந்தராத்மா ||
; அனைத்து உயிரினங்களில்| உறைவது| ஒன்றே||
; அனைவருக்கும் ஶ்ரீ ஹரி| அந்தராத்|மா ஹரி||
அந்தராத்|மா ஶ்ரீ ஹரி| அந்தராத்மா ||
(ப்ரம்மம் ஒன்றே)

சரணம் - 2
; பாராளும் ராஜனின்| நித்திரையும்| ஒன்றே||
பணி புரியும் சேவகனின்| நித்திரையும்| ஒன்றே||
; பார் புகழ் வேதியர்| வாழும் பூமி | ஒன்றே||
பாபம் புரிவோர் lஇருக்கும்| இந்த பூமி| ஒன்றே||
(ப்ரம்மம் ஒன்றே)

சரணம் - 3
; பெரிய வேழம் மீது| காயும் கதிர்| ஒன்றே||
சிறிய அசுழம் மீது| பொழியும் வெய்யில்| ஒன்றே||
; கர்மம் புண்ணியமோ | ; அன்றி| பாபமோ||
; காக்கும் ஶ்ரீ வெங்கடேஸ்|வரன் நாமம்| ஒன்றே ஈஸ்||
வரன் நாமம் ஒன்றே வேங்கடேஸ்|வரன் நாமம்| ஒன்றே||
(ப்ரம்மம் ஒன்றே)


(ப்ரம்மம் ஒன்றே)
 
3. "ராம தரிசனம்"

அயோத்தியில் ஶ்ரீ ராமர் ஆலயம் திறக்கப்பட்ட நேரத்தில் வெளிவந்த,
வித்வான் திரு. ரவிகிரண் இயற்றிய "ராம தர்சன் கரோ" என்ற ஹிந்திப்
பாடல், மிகப் பிரபலம் அடைந்தது.

இந்த பாடலைத் தமிழாக்கம் செய்ய விழைந்தேன். ஒரு சரணத்தை தேஷ்
ராகத்திலும், அதில் "தாமரை" என்ற சொல்லையும் அமைத்தேன்.


சிந்துபைரவியில் "ராம தரிசனம்" என்ற சொற்களில் "ம த ரி ஸ்" என்று
ஸ்வராக்ஷரமும் அமைந்தது இறையின் அருள். 🙏
 
3. "ராம தர்ஷன் கரோ" (தமிழாக்கம்)
ராகமாலிகை - ஆதி - வித்வான் ரவிகிரண்
Audio file:


பல்லவி:
ராகம்: ப3சந்த்

ராம தரிசனம் செய்வோம் ப்ரியமான||
ராம தரிசனம் செய்வோம் அயோத்யா||
ஷ்யாமனின் புனித ஜன்ம பூமியிலே||
(ராம தரிசனம் செய்வோம்)

சரணம் 1 - ராகம்: வரமு

காம கோடி சுந்தரன் வர முனிவர் மன
வாசன் ஜானகி நேசன் தசரத||
(ராம தரிசனம் செய்வோம்)

சரணம் 2 - ராகம் : தேஷ்

தாமரைப் பாதன் நிஜ பக்த பாலனன்||
காம லோப மதம் இல்லா நற்குண||
(ராம தரிசனம் செய்வோம்)

சரணம் 3 - ராகம்: சிந்துபைரவி

க்ஷேமம் புண்ணியம் பர ஷாந்தி வேண்டியே||
நாமம் ஜபம் மறவோம் சாகேத||
(ராம தரிசனம் செய்வோம்)

சரணம் 4 - ராகம்: பெஹாக்

சோம வதனன் ரவிகுல சாகரத்தின்||
சோமன் சர்வோத்தமன் ஶ்ரீ மஹாவிஷ்ணு||
(ராம தரிசனம் செய்வோம்)

சரணம் 5 - ராகம் : மத்யமாவதி

நேமமுடன் கதிரும் மதியும் பணியும்||
ராமன் ராக்ஷஸ பீமன் நம் கண்மணி||
(ராம தரிசனம் செய்வோம்)|


ACg8ocKB9ObmKcyw5KhOXN9o7dE5p0eoYyQB69sPMOcC8G964wMScCA=s40-p
ReplyForward

Add reaction
 
Last edited:
4. "ஜனனி நின்னுவினா" (தமிழாக்கம்)

ரீதிகௌள - மிஸ்ர சாபு- சுப்பராய சாஸ்திரி

ஆ: ஸ க² ரி² க² ம¹ நி² த² ம நி² நி² ஸ்
அ: ஸ் நி² த² ம¹ க² ம¹ ப ம¹ க² ரி² ஸ

Audio link:


பல்லவி:
ஜனனி உன்||னையல்லால்|| மூ||வுலகினில்||
ஜனனி உன்|னையல்லால் || திக்|கெவர் அம்மா||
ஜகத்திலே|| நான் காணே||னே அம்பா ||
(ஜனனி)

அனுபல்லவி:
மன்மதன் ம||னம் மகி||ழ வைத்த || தேவியே ||
என் மனுவை ||செவிமடுத்து|| அன்னையே நீ || காப்பாயே||

சிட்டை ஸ்வரம்:
நி.ப.நி. நி.ஸ நி.நி. ||ஸா, ; நி. ஸ || க ரி ஸ நி.ஸ க க || மா , ம க க ரி ஸ ||
நி. ஸ க ரி நி. ஸ க || ரி நி. ஸ ரி ஸ ஸ நி.|| ப. , நி. நி. ஸ ஸா|| க க ம க க ரி ஸ ||
க க ம க க மா || , நி. நி. ஸ நி. ஸா|| நி. ஸ க க ம க ம|| நி த ம ம நி நி ஸ் ||
க் க் ம் க் ரி' க் , || க் ரி' நி ஸ் , நி நி || ஸ் , நி த ம மா || க ரி ஸ ஸா நி. ப. ||
(ஜனனி)

சரணம்:
வரம் அரு||ளும் தாயல்ல||வா ஒரு||வனைக் காப்பது||
அரிதா|| தயை வரா||தா..||
உறுதியாய் நம்||பின என்னோ||டு வாதமா||
பிரமனும் || ஹரியும் ஹரனும்|| வணங்கும் பா||தம் உனதே||

(சிட்டை ஸ்வர ஸாஹித்யம்)

எல்லையில்||லா சுகத்||தைத் தரும்|| தேவி என்றறிந்து || மிக்க நம்பினேன்||
எக்கணமும் தன||யனின் முறைகள் கேட்டு|| உன்னையல்லால் ||காப்பதெவரோ||
அன்னையே கேளாய்|| இது பாரமா || தருணமிது க்ருபை| அருள வேகமாய்||
கமல விழியே || நீ சுவாசினி|| தாமதம் செய்||யாமலே காப்பாய்||

(ஜனனி)
 
ஒரு வித்தியாசமான புரந்தரதாசரின் பாடலைக் கேட்டு, அந்தக் காலத்தில்
இப்படிப் பாடினாரா என்று வியந்தேன்! திரு. பாலமுரளிகிருஷ்ணா மாண்ட் ராகத்தில் அமைத்துப் பாடியுள்ளார்.


அதன் தமிழாக்கம் அடுத்த இடுகையில்.
 
5. "மடி மடி மடி எந்து". (தமிழாக்கம்)
மாண்ட் - ஆதி
புரந்தரதாசர்

ஆ: ஸ க³ம¹த²நி³ஸ் அ: ஸ் நி³த²ப ம¹க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
; மடி மடி மடி என்று |; அடிக்கடி| பறக்கிறாய் ||
; மடி ஆச்சாரத்தின்| வழி வே|று ||

அனுபல்லவி:
; மண்ணுலக பாலனன் | ; பாத | த்யானத்தை||
; மறவாதிருப்பதே| மடி ஆச்|சாரம் ||

(மடி ஆச்சாரத்தின் வழி இதுவே)

சரணம் 1:
; ஆடைகளை நீரில் இட்டு| ; உலர | வைத்து ||
; உடுத்திக் கொண்டால்| ; மடியே | இல்லை ||
; உள்ளிருக்கும் காம |
குரோத மத| மாச்சரியம் || ; தள்ளி வி|டுவதே | ; மடி ஆச்|சாரம்||

(மடி ஆச்சாரத்தின் வழி இதுவே )

சரணம் 2:
; தசமி த்வாதசி | ; புண்ய| தினங்களில்||
; வசுதேவன் மகனை | ; பூஜிக்|காமல்||
; தோஷத்தை அஞ்சாது | ; தகாதவை உண்டு எ||ம
பாசக் கயிற்றிலே | ; சிக்குவ|தே மடியா?||
(மடி ஆசாரத்தின் வழி வேறு)

சரணம் - 3:
; பசியோடு களைத்து | உன் இல்|லம் நாடி ||
; மதிய வேளையில் | ; முதியவர் | வந்தால்||
; வசதி இல்லை என்று சொல்லிப் | பல வித ||
; ருசிகளில் நீ மட்டும் உண்பதே | மடியா?||
(மடி ஆசாரத்தின் வழி வே|று)

சரணம் 4:
; கு³ருவின் சான்றோரின் | ; ஹரிதா|சர்களின்||
; திருவடி தொழுது | ; ஹரி பக்|தியுடன்||
; இரவும் பகலும் | ; ரக்ஷிப்|பாய் என்று ||
; புரந்தர விட்டலனின்| ; த்யானமே | மடியாம் ||

(மடி மடி மடி என்று)
 
Thank you Prof. M S K Sir. Some sing that song in HindhOLam and some in Mohanam.

I shall try to translate the beautiful song soon. 🙏
 
6. குருலேக". (தமிழாக்கம்)
கௌரிமனோஹரி - கண்ட சாபு
தியாகராஜர்

ஆ: ஸ ரி²க²ம¹பத²நி³ஸ் - அ: ஸ் நி³த²ப ம¹க²ரி²ஸ

Audio file:


பல்லவி:
குரு|வின்றி|| எத்|தகைய|| பெருந்|தகையும்|| அறி|யாரே||

அனுபல்லவி:
கூ|ரான|| மன| ரோக|| முட் |புதரை|| அழித்|திட- ஸத் ||
(குருவின்றி )

சரணம்:
; தனம்| தாரம்|| மக்|கள் உடல்|| தா|யாதி|| உற|வுகளால்||
; ஜனித்|துச் சித||றும்| மனத்|| துயர்|களை|| கரு|ணையுடன்||
மன|தில் அண்||டா|து செய்யும்|| மருந்|தென||; தத்|வ போ-||
தனை| செய்து|| காப்|பாற்றும்|| த்யாக|ராஜ||னின் நற்றுணை||

(குருவின்றி)
 

7. ராமா நீ ஸமானமெவரு (தமிழாக்கம்)

கரஹரப்ரியா - ரூபகம்.
தியாகராஜர்
ஆ: ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 ஸ் - அ: ஸ் நி2 த2 ப ம1 க2 ரி2 ஸ

Audio link:


பல்லவி:
; ரா|மனின் ச||மானம்| எவரோ|| ரகு| வம்சம் || ஓங்கச் | செய்த||
(ராமனின் சமானம் எவரோ)

அனுபல்லவி:
ரா|மனின் தேவி || மரு|வின் துளிரே||
ராம|பக்திக் கூண்டில்|| பா|டும் கிளியே||
(ராமனின் சமானம் எவரோ)

சரணம்:
; சொல்|லும் ஒவ்வொரு|| சொல்|லிலும் தேன்||
; சொட்|டச் சொல்லும்|| சோ|தரர் பெற்ற||
; ஶ்ரீ | ஹரி த்யாக|| ராஜன்| குல மணி||
சொல்|லில் இனிமை|| மென்|மை பெற்ற||

(ராமனின் சமானம் எவரோ)
 


8. "நன்னு விடசி கதலகுரா" ( தமிழாக்கம்)
ரீதிகௌள - மிஸ்ர சாபு
தியாகராஜர்

ஆ: ஸ க²ரி²க²ம¹நி²நி²ஸ் - அ: ஸ் நி²த²ம¹க²ம¹ப ம¹க²ரி²ஸ

Audio Link:


பல்லவி:
; என்|னை விட்||டு அகலத்|| தகு|மா ரா||மய்யா | ராமா ||
;,| ; கோ||தண்ட| ராமா || ;, | ; கல்||யாண| ராமா ||
;,|; பட்||டாபி | ராமா|| (என்னை விட்டு)

அனுபல்லவி:
; நின்| பிரிவு||தனை | அரை|| ; நிமி|டமும்|| தா|ளேனே||
(என்னை விட்டு)

சரணம் - 1:
; தா|ள மு||டியா | வெம்மை|| ; தாக்|கி எ||னை வ|தைக்க||
; தண்|மை த||ரும் கற்|பகத்|| ;தரு|வாக|| நீ | இருக்க ||
(என்னை விட்டு அகல தகுமா)

சரணம் - 2:
;பெ|ரும் சா||கரம்| மூழ்கி|| ; அ|ரும் முத்தைக்|| கண்|டது போல்||
;பெ|ரும் ஆ||னந்தம்| தந்து|| ;அரு|ளிய|| ஶ்ரீ | ரமணா||
(என்னை விட்டு)

சரணம் -3:
; பூ|மியை|| அகழும்| வேளை|| ; புதை|யல் கண்||டது| போலே||
; பூ|மிஜா || நாய|கனே|| ; ஸ்வா|மி உனைக்|| கண்டு கொண்|டேனே||
(என்னை விட்டு)

சரணம் - 4:
; வறண்|ட நி||லத்தில் | மேலே|| ; வரும்| பெரும்||மழை | போலே||
; வந்|தாயே|| இந்த| வேளை|| ;எந்|தையே|| பெரு|மாளே||
(என்னை விட்டு)

சரணம் - 5:
; த்யா|கரா||ஜன் | போற்றும்|| ; ஸ்யா|மள||னே ஶ்ரீ| ராமா||
; த்யா|கரா||ஜனை | என்றும்|| ; த்யா|கம் செய்||யாது| ஏற்பாய்||
(என்னை விட்டு)
 
அன்பார்ந்த இசைப் பிரியர்களுக்கு,

என் வணக்கம் உரித்தாகுக!

பிற மொழிகளில் அமைந்த மணிக் கீர்த்தனைகள் பல, பொருள் புரியாமலே
இசையால் மட்டுமே வளர்ந்து செழித்துள்ளன. இவற்றைப் பொருள் தெரிந்து
பாடத் தமிழாக்கம் தேவை என உணர்ந்தேன். அதன் விளைவே இந்த முயற்சியில்
என்னை ஈடுபாடு கொள்ள வைத்தது.

பெரும் கடலா கர்நாடக இசையில் பிரபலமான மணிக் கீர்த்தனைகளின்
அர்த்தம் மாறுபடாது, அதே ராக, தாளங்களில் அமைத்து, அவற்றைப் பாடி
வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன். நன்றி.

அன்புடன்,
ராஜி ராம்
ராஜி ராம்
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
நன்றி
 
9. "எந்த முத்³தோ³" (தமிழாக்கம்)
பிந்துமாலினி - ஆதி
தியாகராஜர்

ஆ: ஸ க³ரி¹க³ம¹ப நி²ஸ் - அ: ஸ் நி²ஸ் த²ப க³ம¹ப க³ரி¹ஸ்

Audio link:


பல்லவி:
; என்ன அழகோ | என்ன| ஒயிலோ||
; எவராலேனும் வர்|ணிக்க | இயலுமோ?||

அனுபல்லவி:
;, என்ன உயரிய| ; மனிதரா|யினும்||
; எண்ணம் எல்லாம்| ; காமம் | மீதே||
(என்ன அழகோ)

சரணம்:
; அத்தையிடம் பயந்து| ஆசைக்கு| தாசர்கள்||
; அரிய பக்தரைப் போல்| வேஷம்| தரிப்பார் ||
; சுத்தப் பாலின் ருசி| ; பாண்டம்| அறியுமோ?||
; உத்தமனே! த்யாக|ராஜன் பு|கழ்வோனே||

(என்ன அழகோ )
 
ராஜி ராம்
பல்லவி அனுபல்லவி சரணம் என்றால் என்ன ?
ஒரு கீர்த்தனையின் முதல் பகுதி பல்லவி. இரண்டாம் பகுதி அனுபல்லவி.
மூன்றாம் பகுதி சரணம். சில கீர்த்தனைகளில் அனுபல்லவி இராது.
சரணம் மட்டும் இருந்தால் அது சமஷ்டி சரணம் எனப் பெயர் பெறும்.

பல கீர்த்தனைகளில் பல சரணங்கள் அமைவது உண்டு.
 
10. "சங்கரி நீவே" (தமிழாக்கம்)
பேகடா - ரூபகம்
சுப்பராய சாஸ்திரி

ஆ: ஸ க³ரி²க³ம¹ப த²ப ஸ் - ஆ: ஸ் நீ²த²ப மா¹க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
சங்|கரி நீ||யே | என உன்னை||
சந்ததமும் கோ||ரி வந்தேன்||

அனுபல்லவி:
சங்|கடங்கள் தீ|ர்த்து கா|த்திட|| ; இ|ங்கெவர் உள்||ளார்| உலகில்||
பங்கஜம்| அமர்வோன் பணியும்|| காமா|க்ஷி பாலிப்பாய்||

சிட்டை ஸ்வரம்
ரீ;| ; ; ஸா;|| ; ; | ரிநி.த.ப. ஸஸகரி|| கா ;| ; ; மா ; || ; ; | தபமப கரீஸ||
ஸாரிநி.| த.ப.ஸநி. ரிஸகரி|| காமப| தபஸ்நி ரி'ஸ்ம்க்||
ரி'ஸா'ரி'| நிதபமா பகரி|| ஸா ரி'நி|தபமா, கரிஸ||
(சங்கரி நீயே)

சரணம்:
கன|க கிரியில்|| திக|ழும் தீன|| ஜன ரக்ஷகி|| என அறிந்து||
; சன|காதி மு||னிவர்|களும் உன்னை || ஸதா| பஜிக்கின்||றா|ரே ||

முன் நாள்| மூக கவிக்கு|| அருளிய|தைக் கேட்டு வந்தேன்||
கேளாய் | பாராய் உனை நம்||பிய என்|னை காத்திடுவாய்||

சிட்டை ஸ்வர ஸாஹித்யம்

ஶ்ரீ | காஞ்||; |சியில் வளர் சுரர்க்கருள்|| தா|யே|| ; | மதி முகமே வாராய்||
கோகிலம் |நிகர் மென் மொழியளே|| கோரின | வரம் அருள்வாயே||
பராமு|கம் ஏன் பார||மா? பர|ம க்ருபா நிதியே||
(சங்கரி நீயே)

 
சங்கரி நீவே - இந்தப் பாடலில் மூகக் கவிக்கு காஞ்சி காமாக்ஷி
அருளியதாக சரணத்தில் குறிப்பு உள்ளது.

பேசும் சக்தி இழந்த பக்தர் ஒருவருக்குப் பேசும் சக்தியுடன் புலமை
தன்மையும் அளித்தாள் தேவி காமாக்ஷி. அவர் ஸ்ரீ காஞ்சி பீடத்தின்
20-ம் அதிபதி மூக சங்கரேந்திர சரஸ்வதி ஆவார். (கி பி 398 - 437)

இவர் "மூக பஞ்சசதி" எனும் 500 ஸ்லோகங்களை இயற்றியுள்ளார்.
 
சங்கரி நீவே - இந்தப் பாடலில் மூகக் கவிக்கு காஞ்சி காமாக்ஷி
அருளியதாக சரணத்தில் குறிப்பு உள்ளது.

பேசும் சக்தி இழந்த பக்தர் ஒருவருக்குப் பேசும் சக்தியுடன் புலமை
தன்மையும் அளித்தாள் தேவி காமாக்ஷி. அவர் ஸ்ரீ காஞ்சி பீடத்தின்
20-ம் அதிபதி மூக சங்கரேந்திர சரஸ்வதி ஆவார். (கி பி 398 - 437)


இவர் "மூக பஞ்சசதி" எனும் 500 ஸ்லோகங்களை இயற்றியுள்ளார்.
https://www.aanmeegam.in/slogas/mooka-pancha-sathi-tamil/ contains all the 500 shlokas divided into 5 sections.
 
ஒரு கீர்த்தனையின் முதல் பகுதி பல்லவி. இரண்டாம் பகுதி அனுபல்லவி.
மூன்றாம் பகுதி சரணம். சில கீர்த்தனைகளில் அனுபல்லவி இராது.
சரணம் மட்டும் இருந்தால் அது சமஷ்டி சரணம் எனப் பெயர் பெறும்.

பல கீர்த்தனைகளில் பல சரணங்கள் அமைவது உண்டு.
Raji Ram Thank you for your excellent and simple explanations of pallavi, anupallavi, and saranam. Initially, I suggested that you clarify in simple phrases. You have now completed the task that I requested before.
 
11. "ஏதாவுனரா" - (தமிழாக்கம்)
கல்யாணி - ஆதி - தியாகராஜர்

ஆ: ஸ ரி²க³ம²ப த²நி³ஸ் - அ: ஸ் நி³த²ப ம²க³ரி²ஸ

Audio link:


பல்லவி:
; எந்த இடத்தில் நீ| ; நிலை கொண்|டாயோ||
எண்ணிப் பார்த்தும் அகப்|படவில்லை|யே||
(எந்த இடத்தில்)

அனுபல்லவி:
; சுந்தரி சீதா| கௌரி| வாகீஸ்வரி||யில்
; எந்த ஶ்ரீ தேவி ரூப|மோ கோ|விந்தா||
(எந்த இடத்தில்)

சரணம்:
; நீர் நிலம் தீ வளி | ; அகண்ட வெ|ளியிலா||
; நீண்டு எண்ணிலடங்கா லோகங்|களிலா||
; சீர் அருளும் த்யாக|ராஜன்| அர்ச்சிப்போனே||
; சிவன் மாதவன் ப்ரம்|மா இ|வர் வடிவி||லா
(எந்த இடத்தில்)


 

Latest ads

Back
Top