• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM -SKANDA 5

5#9d. தூதுவர் வர்ணனை

“கூற இயலாது அவள் ஆபரணங்கள் பற்றி!
கூற இயலாது அவள் ஆயுதங்களைப் பற்றி!


கூற இயலாது அவள் துள்ளும் இளமை பற்றி!
கூற இயலாது அவள் துலங்கும் எழில் பற்றி!


எப்படிப் பட்டவனோ இப்பெண்ணின் கணவன்?
எப்படி ஆளுவானோ இத்தகைய பெண்ணை!


பார்வைக்குப் பெண்; செயல்களில் ஆண்!
பார்த்துவிட்டால் போர் புரிய மாட்டீர்கள்!


பார்க்க விரும்புவீர்கள் அவள் பேரழகையே;
போர் புரியும் வெறியுணர்வு மறைந்து விடும்.


ஏறி அமர்ந்துள்ளாள் ஒரு சிங்கத்தின் மீது;
ஏறிட்டுப் பார்க்கின்றது சிங்கம் ஏளனமாக!


பொழிகின்றாள் அற்புத வீர ரசத்தையும்
வழியும் தன் சிருங்கார ரசத்துடன் கலந்து!


இல்லை அவளை இழுத்து வரும் ஆற்றல்!
சொல்லுங்கள் இனிச் செய்ய வேண்டியதை”


தூதுவர் புகழ்ச்சியைக் கேட்டு மஹிஷன் – மன
வேதனை கொண்டான் காம விகாரம் பெருகி.


மறைந்து விட்டது மஹிஷனின் கோப வெறி;
பிறந்து விட்டது வீரப்பெண் மேல் காமவெறி.


அழைத்தான் தன் அமைச்சன் ஒருவனை,
“பிழைப்பேன் நான் அவளை அடைந்தால்!


அழைத்து வரவேண்டும் அவளைக் காமக்
கிழத்தியாக்க வேண்டும் எனக்கு!” என்றான்.


“வில் யுத்தம் விரும்பவில்லையா? – தோளோடு
மல் யுத்தம் புரிய விரும்புகிறீர்களா?” என்றான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#9d. Description by the messengers


The messengers continued to describe about the dazzling damsel they has seen. ” We can’t describe about her ornaments or her weapons or her youth or her beauty and do justice to what we have seen there.


We wonder what kind of a man can be her husband? How does he control her? She looks like a female but her courage belongs to a male. If you see her, you will give up the idea of fighting with her and you will just want to admire her beauty and youth.


She is seated on a ferocious lion. It mocks at us by its very look. She oozes valor along with beauty. We don’t have the guts or power to bring her here. Now tell us what we should do next?”


Mahishan got infatuated with this unseen woman after listening to the description given by his messengers. He wanted to possess her. He forgot his anger and fell in a lust filled longing.

He called one of his ministers and said, “I will live only if I can have that unusually beautiful and courageous woman. Bring her here to make her my lover. ”


The minister laughed and said.” You have given up the idea of fighting with her on the battle field. Instead you want to wrestle with her on your bed!”


 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#13b. பிரமரி தேவி (1)

வலிமை கொண்டவன் அசுர மன்னன் அருணன்
வெறுத்தான் தேவர்களை அசுர மன்னன் அருணன்

வெளியேறினான் தன் பாதாள உலகத்தை விட்டு;
குடியேறினான் கங்கைக் கரைப் பர்ணசாலையில்.

தவம் செய்தான் காயத்ரீ மந்திரம் ஜபித்து;
தவம் செய்தான் 10,000 ஆண்டுகள் நீர் அருந்தி;

தவம் செய்தான் 10,000 ஆண்டுகள் காற்றைச் சுவாசித்து;
தவம் செய்தான் 10,000 ஆண்டுகள் எதுவும் உண்ணாமல்!

எழுந்தது தவ அக்னி அவன் உடலில் இருந்து;
கொழுந்து விட்டு எரிந்தது உலகங்கள் எங்கும்.

அஞ்சிய தேவர்கள் தஞ்சம் புகுந்தனர் பிரமனிடம்;
அன்ன வாஹனத்தில் சென்றான் காயத்ரீயுடன்.

உயிர் மட்டுமே ஊசலாடியது அருணன் உடலில்;
வயிறு ஒட்டி அவன் உடல் முழுவதும் ஓட்டைகள்!

பிரகாசித்தான் அருணன் இரண்டாவது அக்னியாக;
பிரார்த்தித்தான் அருணன் மரணம் இல்லா வாழ்வு!

"பிறப்பு என்ற ஒன்று ஜீவர்களுக்கு இருந்தால்
இருந்தே ஆகவேண்டும் இறப்பு என்ற ஒன்றும்!

கால வயப்பட்டவர்களே தேவர்கள், தெய்வங்கள்!
கேள் வேறு ஏதாவது வரம்!" என்றான் பிரமதேவன்

"வரக் கூடாது மரணம் அஸ்திர சஸ்திரங்களால்;
வரக் கூடாது மரணம் ஆண்களால், பெண்களால்!

வரக் கூடாது இரண்டு, நாலு கால் பிராணிகளால்;
வரலாம் மரணம் வேறு எதாவது ஒரு விதத்தில்!"

அளவற்ற வலிமை பெற்றான் பிரம தேவனிடம்;
ஆள விரும்பினான் மூவுலகங்களையும் வென்று.

திரும்பினான் வரம் தந்த பிரமன் காயத்ரியுடன்;
திரட்டினான் அருணன் அசுர வீரர்களை ஒன்றாக.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#13b. BhrAmari Devi (1)

AruNa was a very powerful AsurA. His hatred for the DevAs was intense. He came out of the PAtALA and reached the banks of Ganges. He constructed a small hut there. He lived there doing GAyatree japam with severe intensity and austerity.

He did penance living only on water for the first ten thousand years. He did penance living only on air for the next ten thousand years. For the next ten thousand years he lived on nothing practically.

The heat of his intense penance spread in all the three worlds. The DevAs could not bear the intensity of his penance. They took refuge in BrahmA. He went to AruNa on his Hamsa VAhana along with Devi GAyatree.

AruNa was just barely alive. He was emancipated and was a mere bag of bones. But he shone as brilliantly as the second Agni Deva.

BrahmA blessed him back to good health and strength. AruNa wished for immortality.

BrahmA replied to AruNa, "Even Gods and DevAs are not free from this limitation of Time called Death! I cannot grant you a boon of immortality since that is an impossibility. Ask what is possible and acceptable."

AruNa said, "O Lord! Grant me such a boon that my death shall not be caused by any war, nor by any arms nor by any weapons, nor by any man nor by any woman, nor by any biped or quadruped nor by any combination of the two. Grant me such a boon and also a large army so that I can conquer the Devas.”

BrahmA gave him all these boons and went back to His own abode.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#37d. கடும் போர்

நாகாஸ்திரத்தை எய்தான் கமலாசுரன்;
நாக விஷம் தாக்கியது ஐயன் படையை!

சக்கராயுதத்தை விடுத்தார் விநாயகர்;
சீக்கிரமாக அது அழித்தது நாகங்களை.

எய்தான் கமலாசுரன் தன் சக்கரத்தை;
ஐயனிடம் வந்தது தீப்பொறிகளுடன்!

ஐயன் நீட்டிய அவர் சக்கரத்திலேயே
ஐக்கியமானது அசுரன் விட்ட சக்கரம்!

மழு ஆயுதத்தை எய்தான் அசுரன்;
மழுங்கிய ஆயுதம் ஆனது மழுவும்!

வருணாஸ்திரத்தை எய்தான் அசுரன்;
பெருமழை பெய்தது ஊழிக் காற்றோடு!

மேகங்களை வரவழைத்தார் விநாயகர்
வேகமாகக் குடித்துவிட்டன அவை நீரை .

அஸ்திரங்கள் பல விடுத்தான் அசுரன்!
அஸ்திரங்கள் பதிலுக்கு விடுத்தார் ஐயன்.

ஆதவன் விழுந்தான் மேற்குதிசையில்;
போதும் போரெனத் திரும்பினர் பாசறை.

பேதமின்றி அசுரர் மாய்த்த படைவீரர்கள்
சேதமின்றி உயிருடன் எழுந்தனர் மீண்டும்!

“அசுரரை சம்ஹரிக்கத் தேவை உபாயம்!”
ஐங்கரன் அணுகினான் முனிபுங்கவர்களை!

“கரி, பரி, ரதம் என்று வாகனங்களில்
இருந்து போரிடுகின்றான் கமலாசுரன்!

தங்களுக்குத் தேவை தகுந்த வாஹனம்;
தருவிக்கலாம் அதையும் யாகம் செய்து”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
BHAARGAVA PURAANAM - PART 2

#37d. The battle

KamalAsuran shot his NAgAsthram. The deadly poison of the snakes afflicted the soldiers of VinAyaka. He shot his chakrAyudam. It destroyed all the snakes and their poison.


KamalAsuran shot his chakrAyudam now. It sped fast towards VinAyaka spitting fiery sparks. When God put forward his own chakram held in his hand, the chakram released by the asuran merged with the chakram of God.


KamalAsuran threw his mazhu and it was just as good as any blunt instrument. KamalAsuran shot his VaruNAsthram. Heavy rain poured, accompanied by a stormy wind.


VinAyaka summoned the clouds which promptly drank off all the water of the rain. KamalAsuran kept shooting one asthram after another. VinAyaka shot the compatible asthram which could destroy his asthrams.


The sun set in the west and the war was suspended for the day. All the soldiers killed by the asuran’s army were resurrected by VinAyaka.


VinAyaka approached the rushis and said, “We need a fool-proof plan to destroy the asuran. ” The rushis said,
“The asuran has many vAhanams like elephant, horse and the chariot. You must also get a suitable vAhanam to fight him well. We can perform a yagna and get a powerful vAhanam suitable for you!”

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#9e. அமைச்சன் தூது

“செல்வேன் அந்தத் தேவியிடம் இப்போதே;
வெல்வேன் அவளைச் சொல் வன்மையால்!”

விரைந்தான் அமைச்சன் நாற்படையுடன்;
உரைத்தான் வினயத்துடன் எட்ட நின்று.

“இனிய கன்னியே! அறிகிலேன் நீ யாரென!
தனியே வந்துள்ள காரணம் கூறுவாய்!

தேவரைப் புறமுதுகிடச் செய்து – பிரம
தேவனிடம் வரம் பெற்றவன் மஹிஷன்.

அறிந்து வரச் சொன்னான் என்னிடம் – உன்
அபிப்பிராயம் என்னவென்று விசாரித்து.

எண்ணாதே எருமை முகத்தினன் என்று;
எண்ணிய உருவம் எடுக்க வல்லவன்!

வருவான் உன்னிடம் உனக்கு ஏற்றதொரு
அருமையான ஆண்மகன் வடிவெடுத்து.

பிறர் கூறக் கேட்டான் உன் பெருமையை.
பிறந்து விட்டது உன் மேல் காதல் தாகம்.

தேவை உன் கடைக்கண் பார்வை ஒன்றே;
தேர்ந்தவன் மன்மத லீலையில் மஹிஷன்.

வரலாம் நீ என்னுடன் அவனிடம் செல்ல;
வரச் செய்வேன் அவனையும் உன்னிடம்.

கூறுவாய் உன் எண்ணத்தை என்னிடம்!
பெறுவாய் மஹிஷனின் அரவணைப்பை”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#9e. The minister as messenger


The minister was enthusiastic to complete his mission successfully. He told Mahishan” I shall go to her now. I shall convince her with my smart speeches and ideas!”


He went to Devi wit his chaturanga sena and talked to her with respect from a safe distance, “Dear sweet lady! I do not know who you are. I do not now why you have chosen to come here all alone.


Our king Mahishan has defeated the Devaas. He has secured rare boons from Brahma. He wants to know about your ideas and plans. Do not slight him thinking him as a buffalo faced man. He can any form he desires.


When he comes to you, he will come as a befittingly handsome young man. He listened to the description of your rare beauty. Now he is steeped in love and longs for you.

He is an expert in the art of love. You may come with me if you want to go to him. Other wise I can make him come here to you. Tell me what you wish for and win Mahishan’s unconditional love and adoration.”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#13c. பிரமரி தேவி (2)

அறைகூவினான் அருணன் இந்திரனைப் போருக்கு;
முறையிட்டான் இந்திரன் பிரம்மதேவனிடம் சென்று.

சென்றனர் தேவர்கள் பிரம்மனுடன் விஷ்ணுவிடம்;
சென்றனர் தேவர்கள் விஷ்ணுவுடன் சிவபிரானிடம்.

"
ட்டிவிட்டான் அருணன் அஷ்ட திக்பாலகர்களை!
ஆட்டுவித்தான் அஹங்காரத்தோடு மூவுலகையும்!

எடுத்துக் கொண்டான் திக்பாலகர்களின் உருவை!
எடுத்துக் கொண்டான் திக்பாலகர்களின் தொழிலை!"

அரற்றினார் தேவர்கள் துயரங்களைச் சிவனிடம்,
"வரம் தந்துள்ளான் பிரம்மதேவன் விசேஷமாக!"

ஒலித்தது வானொலி அச்சமயத்தில் உரக்க;
"கலக்கம் வேண்டாம் தேவர்களே உங்களுக்கு!

சரணடையுங்கள் பராசக்தியிடம் அனைவரும்;
நிறைவேற்றுவாள் உங்கள் கோரிக்கைகளை.

பெறுகிறான் வலிமை காயத்ரீ மந்திரத்தால்!
பெறுவான் அழிவை ஜபம் செய்ய மறந்தால்!"

தந்திர இந்திரன் அனுப்பினான் தன் குலகுருவை,
"மந்திரத்தை மறக்கச் செய்யுங்கள் எவ்வாறேனும்!

உதவுவாள் தேவியும் உமது முயற்சிகளில்!
உதவுவோம் தேவர்களும் தியானம் செய்து!"

பூஜித்தனர் தேவர்கள் ஒன்றாக - ஜாம்
பூந்தேஸ்வரியை மாயா பீஜ மந்திரத்தால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



 
10#13c. BhrAmari Devi (2)

ArunA challenged Indra for a war. Indra sought the help of BrahmA; who in turn sought the help of Vishnu; who in turn sought the help of Siva.

"ArunA has driven away the Ashta Dik PAlakAs. He has assumed their forms and also their roles. He is terrorising all the three worlds. BrahmA has given him special boons making him almost immortal"

An AakAshvANi was heard at that time from the sky. "Do not worry Oh DevAs! Take refuge in the Mother of the Universe. She will remove your sorrows and solve your problems. ArunA gets his power from his GAyatree japam. If he stops doing the japam, he will become vulnerable"

Indra conceived a plan and sent his guru Bruhaspati to Aruna with this instruction. "Make AruNa forget to do GAyatree japam by hook or crook. Devi will assist you in your attempt. We DevAs will also pray to Devi and worship her - seeking her help."

Bruhaspati went to meet AruNa. The DevAs worshipped JAmboontheswari Devi.
 
Bhaargava puraanam - part 2

#37e. மயில் வாஹனன்

“யாககுண்டத்திலிருந்து வெளிப்படும் மயிலை
வாகனமாகக் கொண்டால் வெற்றி நிச்சயம்!”


மல்லாலர் மகிழ்ந்தார் முனிவர் சொல்லால்;
“உள்ளம் விரும்பியதை உரைத்தீர்கள் ” என்று


நடந்தன வேள்விக்கான ஏற்பாடுகள்;
நடந்து முடிந்தது வேள்வியும் நன்கு.


யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்டது.
வாகனமாகும் பிரம்மாண்ட மயில் ஒன்று.


மூவுலகும் மகிழ்ந்தது மயிலைக் கண்டு;
பூமழை பொழிந்தனர் தேவர் மகிழ்ந்து.


புறப்பட்டார் யுத்தத்துக்குப் மயில் மீது!
புத்திதேவி சொன்னாள் “நான் செல்வேன்”


புன்னகை புரிந்து ஆமோதித்தார் ஐயன்.
புறப்பட்டாள் புத்தி தேவி விமானத்தில்!

யுத்தக் களத்தை அடைந்தாள் புத்தி தேவி;
சக்தியினால் உற்பத்தி செய்தாள் வீரரை.

வியூகத்தில் நிறுத்தினாள் வீரரை – மதி
யூகத்துடன் நடத்தினாள் போரினை.

அசுரர்கள் கை ஓங்கிய போதெல்லாம்
அளவற்ற சினம் கொண்டாள் தேவி.


சினத்தில் தோன்றினான் சிறந்த வீரன்!
மனதில் மகிழ்ந்தாள் மகனைக் கண்டு.

“சுந்தர ஆசிரமத்தில் சித்தி தேவியுடன்
தந்தை அமர்ந்துள்ளார் மயூரேசராக!


வணங்கி ஆசிகள் பெற்று மீண்டும்
வருவாய் யுத்த களத்துக்கு” என்றாள்.


மகனைக் கண்டு மகிழ்ந்தார் பெருமான்;
மகனுக்குப் பெயரிட்டார் லாபன் என்று.

அனைத்து ஆசிகளையும் வழங்கிய பின்,
அனுப்பினர் அவனை அமர்க்களத்துக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



 
BHAARGAVA PURAAANAM - PART 2

#37e. MayoorEsar

“From the yAga kuNdam a peacock will emerge. It will be a suitable vAhanam for you!” The rushis told MallAlar. They got everything ready for the yagna and performed it successfully.


A huge peacock emerged from the yAga kuNdam. The whole world felt happy to see the peacock. DEvA rained flowers. MallAlar sat on the peacock and got ready to go the battlefield.

Buddhi Devi requested him, “Please allow me to go to the battle field.” MallAlar agreed with a smile.


Buddhi Devi went to the battle field in her vimAnam. She created her own army and arranged them in vyooham. She fought the war well with tactics.

But when her army was subdued by the asura army, she became very angry. From her anger a mighty son was born to her. She felt happy to see him.


She told him “Go to the Sundara Ashram. Your father is there seated on a peacock. Take his blessings and come to the battle field!”

Her son did as he was told by his mother. MallAlar was happy to see his son whom he named as LAbhan. He gave his blessings and sent him back to the battle field.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#10a. தேவியின் மறுமொழி

“அரச நீதி அறிந்த அமைச்சனே – உன்
அசுர குல நாசினியாக வந்துள்ளேன்!


என்னென்னவோ கூறினாய் என்னிடம்,
இன்னார் நான் என்று அறியாமலேயே!


கண்களால் எரித்திருப்பேன் உன்னை
விண்ணவர் பகைவன் அனுப்பியதால்.


அறிந்து கொள் நான் யாரென்று இப்போது;
பிறந்த, பிறக்கப் போகின்றவற்றின் தாய்
நான்.

தந்தை என்னுள் உறையும் சிவபெருமான்.
விந்தையாக உள்ளோம் யாம் ஓருடலில் !


பூலோகப் பெண்ணா
நான் மஹிஷனை விரும்ப?
தேவப் பெண்ணா
நான் மஹிஷனை விரும்ப?

அசுர குலப் பெண்ணா
நான் மஹிஷனை விரும்ப?
அழிக்க வந்துள்ளேன்
நான்மஹிஷனைப் போரில்!

சம்ஹாரம் செய்ய உருவெடுத்த என்னிடம்
சம்சாரம் செய்ய அழைப்பு விடுக்கின்றாய்!


கேள் என் மறுமொழியைக் கவனமாக;
சொல் இதனை உன் அரசனிடம் சென்று.


“உயிர் மேல் ஆசை இருந்தால் செல் பாதளம்;
உயிர் மேல் ஆசை இன்றேல் செய்வாய் போர்.


சுவர்க்கம் உரியது தேவர்களுக்கு மட்டுமே,
சுவர்க்கம் விட மறுத்தால் அழிந்து போவாய்!


வென்றுள்ளேன் தேவர்களை ! இவள் ஒரு
வெறும் பெண் என்று எண்ணி மயங்காதே!


எண்ணிப்பார் பிரமன் தந்த வரத்தை – ஒரு
பெண்ணால் தான் அழிவு என்று மறவாதே!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEI BHAAGAVATAM - SKANDA 5

5#10a. Devi’s reply

Devi replied to Mahishan’s minister thus:

You who knows the neethi saastra! I have come here to destroy the race of asuraas.You told me many things even without knowing who I really am!

I could have burned you down to ash for the simple reason that, you were sent by Mahishan – the enemy of Devaas.

I will tell you now who I really am. I am the mother of everything that has been born and that will be born. My lord Siva is their father.

Both of us reside in one and the same form. I am not a girl belonging to the race of man or Deva or Asura to fall in love with Mahishan.

I have taken this form only to destroy him and he invites me to become his lover. Listen to this message carefully and repeat it to your king when you get back to him.

“Oh Mahisha! Go back to Paataala where you belong. The heaven belongs to the Deva. If you don’t quit the heaven you will be destroyed completely.

Don’t slight my warning thinking that I am after all a woman. Remember Brahma’s boon that you will get killed by a woman”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#13d. பிரமரி தேவி (3)

சென்றார் பிருஹஸ்பதி அசுரன் அருணனிடம்,
சொன்னான் அருணன், "அதிசயம் தங்கள் வரவு!

பிரியம் வைத்துள்ளீர் இந்திரன் மீது - அவனைப்
பிரிந்து என்னிடம் வந்த காரணம் எதுவோ ?" என

"பிரியம் வைத்துள்ளேன் நான் காயத்ரீயிடம்;
பிரியம் வைத்துள்ளாய் நீயும் காயத்ரீயிடம்.

பிரியம் வைத்தேன் நான் உன் மேல் அதனால்!"
பிரியத்துடன் மொழிந்தார் குரு பிருஹஸ்பதி.

இறுமாந்தான் அருணன் தன் சிறப்பை எண்ணி;
மறந்தான் பரம மந்திரத்தை ஜபம் செய்வதற்கு.

அகன்று சென்றது அருணின் ஜப தேஜஸ்- தேவகுரு
அகமகிழ்ந்து திரும்பினார் வந்தவேலை முடிந்ததும்.

பூஜித்தான் இந்திரன் மஹேஸ்வரியை பக்திடன்;
பூஜை பலித்தது; காட்சி தந்தாள் பிரமரி தேவி!

ஜகன்மாதா! லோகநாயகி! ஸர்வாத்மிகை;
ஸர்வ ஜனனி, ஸர்வேச்'வரி, தேஜோ ரூபிணி;

கோடி சூரியர்களின் பிரகாசத்துடனும் மற்றும்
கோடி மன்மதர்களின் சௌந்தர்யத்துடனும்;

நவ மணி மலைகள் அணிந்து சந்தனப் பூச்சுடன்;
நம மலர் மாலைகள் அணிந்து புன்னகையுடன்;

அலையும் வண்டுகள் ஹ்ரீங்காரம் செய்திட -ஆடை
அலங்காரத்துடன் அபய, வரத, ஹஸ்தங்களுடன்;

கருணைக் கடலாகத் தோன்றினாள் தேவி
அருள் புரிந்திட வந்தாள் அங்கு பிரமரி தேவி!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#13d. BhrAmari Devi (3)

AruNa welcomed the Devaguru Bruhaspati with due honors. He could not help wondering what had brought the Devaguru away from Indra to AruNa the DaityA!

Bruhaspati told him,"You worship GAyatree. I too worship GAyatree So I am your friend and not an enemy, as you assume me to be!"

AruNa was very happy to hear these sweet words from Devaguru. He became very proud and conceited at his own greatness and forgot to do his GAyatree japam.

AruNa lost his tejas due to the japam and the protection given by GAyatree. He had become vulnerable now. Bruhaspati was happy to have accomplished his mission and went back to the heaven.

IndrA and the DevAs worshiped Devi Maheswari with devotion. Devi was pleased and gave her darshan to the DevAs.

The Mother of the world, the ruler of the world, the atma in everyone, the supreme Devi appeared with the brilliance of ten million Suns and the beauty of ten million Manmathans.

She wore many gem studded ornaments and garlands made of fresh flowers. She had sandal paste smeared on her body and a lovely smile in her face. Thousands of bees were swarming around her.

She came to answer the prayers of the Devas and to protect them. She was filled with sympathy and mercy and appeared as the BhrAmari Devi.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#38a. சூரியகுமாரன்

கண்டம் நகரத்தை, மைதல தேசத்தில்,
ஆண்டு வந்தான் மன்னன் சக்கரபாணி.

பிறக்கவில்லை பெயர் சொல்ல ஒரு பிள்ளை
பிறந்தன யாகப் பயனாக; ஆனால் தக்கவில்லை.

‘தீவினைப் பயன் துரத்துகிறது!’ என்று
தீர்மானித்தான் கானகத்தில் தவம் புரிய.

சௌனக முனிவர் வந்தார் அரசனிடம்;
சூரிய விரத முறைகளைக் கற்பித்தார்

“வருந்தாதே பிறப்பான் சத்புத்திரன்
அருள் புரிவான் சூரியன் உனக்கு!”

சூரிய விரத்தை அனுஷ்டித்தான் அரசன்;
சூரியன் அறிந்தான் அரசன் மலடன் என.

இருபத்தோராம் நாள் சூரியன் அரசியைக்
கருவுறச் செய்தான், கனவில் வந்த கூடி!

அரசன் உருவில் சூரியன் வந்ததால்
அரசனே கூடியதாக நினைத்தாள் அரசி.

அரசன் அரசியிடம் செல்லாததால்;
அரசன் அறிந்தான் சூரியன் அருளை.

பிறந்தது குழந்தை பத்து மாதங்களில்
சிவந்த சடை, அரிய மூன்று கண்கள்

இருகரங்களில் பற்றிய சூலங்களுடன்!
மூர்ச்சையடைந்தாள் அஞ்சிய அரசி!

அந்தணர் வடிவில் வந்தான் வருணன்;
ஆசிகள் தந்தான் சிந்து எனப் பெயரிட்டு.

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்!
வளர்ந்தான் சிந்துராஜன் பராக்கிரமத்துடன்.

திரிந்தான் மனம் போனபடி திசைகளில்;
எறிந்தான் மலைகளைப் பெயர்த்தெடுத்து.

கலக்கினான் சமுத்திரங்களை விளையாடி.
வி
க்கினான் நிலவைப் பாதையிலிருந்து.

‘ஆண்மையும், வீரமும் கொண்ட இவனே
ஆள வேண்டும் நமது அசுரர் குலத்தினை!’

தேடி வந்தார் சுக்கிராச்சாரியார் அவனை;
நாடச் சொன்னார் சிவபெருமான் அருளை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
BHAAARGAVA PURAANAM - PART 2

#38a. Soorya KumAran

King ChakrapANi ruled over the KaNdam city in Maithala dEsam. He had no children. He got children after performing YAgA but they did not survive. He felt very sad at heart. He thought it was the effect of his evil deeds in the previous births. He decided to go to a forest and do severe penance.


Sounaka rushi came to meet him. He took pity on the King’s plight and taught him the vratham to please the Sun God. Rushi told ChakrapANi, ” Do not worry oh king! Surely Soorya BhagavAn will bless you with a good son soon.”


The king performed the Soorya vratham in the prescribed manner. Sooryan knew that the king was impotent. So on the twenty first day of the vratham, he came in the queen’s dream as king ChakrapANi. He made love to her in her dream and she got pregnant.


The queen was under the impression that the King had united with her, but the king knew the truth that the child was the gift of Sooya bhagavAn.


After ten months, a son was born to the queen. It had red matted hair, three eyes and held soolams in both its hands. The queen got frightened by this sight and fainted right away. VaruNan came there disguised as a Brahmin. He named the child as Sindhu RAjan and blessed him.


Sindhu RAjan was valorous and daring. He roamed the world in all the directions. He plucked the mountains and tossed them around. He churned the sea water just for fun. He deviated the moon from its assigned path.


SukrAchAyra was very pleased with this young man – so brave, daring and valorous. He decided that Sindhu RAjan must become the king of asurAs. AsurA guru approached Sindhu RAjan and advised him to seek the grace of lord Siva by doing severe penance.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#10b. அமைச்சனின் பதில்

“வீர வசனங்கள் பேசினாய் பெண்ணே!
வீர மொழிகள் உரியவை ஆண்களுக்கு.

இனிய பேதைத்தன்மையே ஆகும் – நல்ல
அணிகலன் உன் போன்ற பெண்களுக்கு.

எண்ணி விடாதே மஹிஷனை இளப்பமாக!
பெண்ணே! எங்கே உன் சேனை எனக் கூறு!

தனியாக வந்துள்ளாய் எம்முடன் போரிட!
தயார் நிலையில் சேனை மஹிஷனிடம்!

ஏந்தியுள்ளாய் நீ ஆயுதங்கள் பதினெட்டு;
எண்ணிலடங்கா மஹிஷனின் ஆயுதங்கள்!

மலரினும் மெல்லிய உடல் கொண்ட நீ
மலையொத்த மஹிஷனை வெல்லுவதா?

யுவதிப் பருவத்தில் உள்ளவள் நீ – மஹிஷன்
யுத்தத்துக்கு என்றே உடல் படைத்தவன்.

மதயானையிடம் அகப்பட்ட மலர்செண்டாக
பேதமையால் வீணே அழிந்து விடாதே நீ!

கொண்டுள்ளாய் மமதை உன் இளமையால்;
விண்டுள்ளாய் தகாத மொழிகளை என்னிடம்.

அழித்திருப்பேன் உன்னை ஒரே பாணத்தால்;
பிழைத்தாய் மஹிஷன் கொண்ட காமத்தால்.

காலடியில் சமர்பிப்பான் தன் செல்வங்களை;
காலால் இட்ட பணியைத் தலையால் செய்வான்.

மரணம் அடைவாய் நீ மகிஷனுடன் பொருதால்!
மரணம் அடைவான் அவன் உன்னை இழந்தால்!

இறப்பதனால் கிடைப்பது என்ன என்று கூறு
சிறப்பாக வாழ வேண்டிய நீங்கள் இருவரும்?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#10b. The minister’s reply

The minister spoke to Devi now,” You gave a valorous speech which belongs to a man and not to a young and tender girl like you. Women like must be adorned by innocence and timidness.

Don’t think that Mahishan is a good for nothing fellow just because he fell in love with you . You say you have come to destroy us. But you are all alone! Where is your army? Mahishan’s huge army is always in readiness.

You carry eighteen weapons in you tender arms! The weapons Mahishan possesses can not be counted. You look like the creeper of a flowering plant and Mahishan is of the size of a huge mountain.

You are in your sweet young age but Mahishan is born to win in wars. You will get destroyed by him the way a flower bouquet will be by a mad elephant.

Don’t get destroyed due to your foolishness. You are conceited by your youth and beauty. You have spoken to me most inappropriate words. I could have killed you with a single arrow. You are saved by the infatuation Mahishan has for you.

Mahishan wilL lay at your feet everything that is his. He will fulfill all your wishes and commands. If you fight with him, you are sure to get killed. He will kill himself after seeing you dead. What is the use of two people giving up their lives in stead of living together in pleasure and joy?”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#13e. பிரமரி தேவி (4)

தோத்தரித்தனர் தேவர்கள் தேவியை பக்தியுடன்;
தேனினும் இனிய தன் குரலில் கூறினாள் தேவி;

"கேளுங்கள் தேவர்களே வேண்டும் வரங்களை;
கேட்கும் வரங்களைத் தருவேன் உங்களுக்கு!"

கூறினர் அருணன் தரும் துன்பத்தைத் தேவியிடம்
கோரினர் அருணனை அழித்துத் தம்மைக் காத்திட.

ஏவினாள் தேவி எண்ணிறந்த வண்டுகளை வானில்;
மேவியது இருள் அவ்வண்டுகள் பரவி விரவியதால்.

பறந்தன வண்டுகள் குருவிக் கூட்டங்களைப் போல;
நிறைத்தன வண்டுகள் மூன்று உலகங்களையும்!

துளைத்தன வண்டுகள் அரக்கர்களின் மார்புகளை;
துளைத்தன கூரிய அம்பின் முனையைப் போல!

இருக்கும் போர்க்களத்தில் வீர உரையாடல்கள்!
இருக்கும் போர்க்களத்தில் வீர ஆவேச யுத்தம்!

சத்தம் இன்றி அழித்து விட்டன வண்டுகள் அசுரரை!
ரத்தம் சிந்த அழித்து விட்டன வண்டுகள் அசுரரை!

ஹ்ரீங்காரத்துடன் அழித்து விட்டன அசுரர்களின்
ஹ்ருதயங்களைத் துளையிட்ட வண்டுகள் கூட்டம்.

பிரமன் தந்த வரத்துக்கு பங்கம் நேராமல்
மரணம் நேர்ந்தது ஆறுகால் வண்டுகளால்!

பிரமரி தேவியைத் துதித்து வரங்கள் பெற்றனர்
பிரமரி தேவியின் சரிதம் இதுவே அறிவீர் நீர்!

அச்சம் அகன்று விடும் இந்தச் சரித்திரத்தை
அன்புடன் படிப்பவருக்கும், கேட்பவருக்கும்.

அகன்று செல்லும் அனைத்துப் பாவங்களும்;
அடைவர் பக்தர்கள் சாயுஜ்ய பதவிகளை

தரும் கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும்
தேவி சாயுஜ்ய பதவியைத் தேவி மஹாத்ம்யம்.

ஓம் தத் சத்.

தேவி பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தம் இத்துடன் நிறைவுற்றது
 
DEVI BHAAGAVATAM - SKANDA 10

10#13e. BhrAmari Devi (4)

Devi spoke in a voice sweeter than that of a cuckoo,"O DevAs! Say what do you want.” The Devas began to explain the cause of their sorrows. They informed Devi of the wicked deeds of the vicious Daitya in neglecting the Devas, VedAs and BrahmaNAs.

BhrAmari Devi sent out the black bees and hornets swarming around her. More and more black bees got generated and they together with those which had got out of Devi's hands covered the whole earth.The sky was overcast with the bees and the earth became dark.

Those black bees bored through and tore asunder the breasts of the Daityas. The Daityas could neither use their weapons nor fight back nor even exchange any words. They could do nothing but die, wherever they were and however they were.


After destroying the asuAs the bees came back to the Devi. The DevAs worshiped the Devi Bhagavati with various offerings.


The MahA Devi became happy and gave to each of them separate boons and disappeared from there.

If anybody hears this wonderful story of BhrAmari Devi, he will cross the ocean of samsArA. Hearing the the accounts of the Manus will bestow auspiciousness. He who hears or recites daily the Greatness of Devi, as given in Devi Mahaatmyam , will be freed from all his sins and obtain SAjuya mukti.






 
BHAARGAVA PURAANAM - PART 2

#38b. சிந்து ராஜன்

“சிவனை தியானித்துத் தவம் செய்து
அவனிடம் வரங்களை வாங்கி விடு.


வெல்ல முடியாது உன்னை எவராலும்
மெல்ல அசுரர் கை ஓங்கிவிடும்!’ எனத்


தவம் செய்யச் சென்றான் சிந்து ராஜன்
தவம் நீடித்தது ஈராயிரம் ஆண்டுகள்.


காட்சி தந்து வரம் தந்தான் சிவன்,
“ஆட்சி செய்வாய் மூவுலகங்களை!


அழிவின்றி வாழ்வாய் நெடுங்காலம்
அடி பணிவர் உன்னிடம் தேவர்கள்!”


வரம் தந்தது வெற்றி மேல் வெற்றி!
வந்தது பூலோகம் அவன் குடைக் கீழ்!


தேவலோகம் சென்றான் சிந்து ராஜன்;
தேவேந்திரன் எதிர்பட்டான் யானைமீது!


வஜ்ஜிராயு
த்தைத் தடுத்து யானையை,
வஜ்ஜிர முஷ்டியால் தாக்கினான் சிந்து!


பொறி கலங்கி நின்றது வெள்ளை யானை;
மறைந்துபோனான் மாயையால் இந்திரன்.


வீரர்களை நியமித்தான் சுவர்கத்தில் – தன்
வீடு திரும்பினான் சிந்து பூலோகத்தில்.


விஷ்ணுவிடம் இந்திரன் சரண் புகவே
விஷ்ணு புறப்பட்டார் தன் சக்கரத்துடன்.


தேவர்கள் தாக்கி அழித்து விட்டனர் தம்
தேவருலகில் இருந்த சிந்துவின் வீரரை


செய்தியை அறிந்து சினந்த சிந்துராஜன்
செய்தான் தன் அடுத்த படையெடுப்பை .


விஷ்ணுவின் தலைமையில் தேவர்கள்!
உஷ்ணமான போர் தொடங்கியது உடனே.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
BHAARGAVA PURAANAM - PART 2

#38b. Sindu RAjan

Guru SukrAchArya told Sindu RAjan, “Do penance to Lord Siva and get his blessings and boons. You will become invincible. The DEvA will obey you. Asura will achieve supremacy as before.”


Sindhu RAjan went to do penance. He concentrated on Lord Siva and did severe penance for two thousand years. Siva appeared to him and gave him many boons.


He blessed Sindhu RAjan saying, “You will rule over the three worlds. You will live for a very long time. The DEva will obey you. No one can defeat you”
These boons gave victory over victory. Soon Sindhu had conquered the whole earth.

Next he went to swarggam. Indra opposed him seated on his AirAvat. Sindhu RAjan escaped being hit by Indra’s vajrAyudam and hit the AirAvat hard on its head.
The elephant stood dazed and Indra disappeared from there by his MAyA.

Sindhu RAjan nominated a care taker ruler and his soldier stayed back in swarggam. He returned to the earth and to his capital city.


Indra sought the help of VishNu in overthrowing Sindhu RAjan from swarggam. Under VishNu’s guidance the Deva killed the soldiers of Sindu RAjan.


When he learned of this, Sindhu became furious and invaded swarggam with his army. A terrible war ensued.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#10c. அமைச்சனும், தேவியும்

“வணங்கி வேண்டுகின்றேன் உன்னிடம் மீண்டும்
இணங்கி விடு மஹிஷனின் மனைவி ஆவதற்கு!


கணவனை, போகங்களை விரும்பாத நீ – ஒரு
அணங்காகப் பிறந்தது எதற்காக எனக் கூறு! ”
என

“அரசனுக்கு ஏற்ற அமைச்சனாக உன்னை
பிரமன் படைத்துள்ளான் இது திண்ணம்!


குணத்துக்கு ஏற்ற உருவம் கொண்டுள்ளேனா?
குணம் உருவத்துக்கேற்பக் கொண்டுள்ளேனா?


உருவத்தால் பெண், தேவகுணம் கொண்டவள்!
குணத்தால் ஓர் ஆண், அசுரகுணம் கொண்டவள்!


பெண் உருவமும், ஆண் தன்மையும் என்னிடம்!
பெண் தன்மையும், ஆண் உருவமும் அவனிடம்!


ஆண்தன்மை கொண்டிருந்தால் கேட்பானா
பெண்ணால் மட்டுமே மரணம் என்ற வரம்?


விதிக்கவில்லை பிரமன் அவனுக்கு இதை;
மதியின்றிக் கோரிப்பெற்றான் அவன் இதை.


புல் மாறும் வஜ்ஜிராயுதமாக தெய்வ பலத்தால்!
புல்லாக மாறும் வஜ்ஜிராயுதம் அது இன்றேல்!


என்னை என்ன செய்யும் அவன் ஆயுதங்கள்?
என்னை என்ன செய்யும் அவன் சேனைகள் ?


எடுத்துச் சொல் மஹிஷனிடம் இவற்றை!
எடுக்கும் முடிவின்படி நடக்கும் நடப்பவை”
என

நொந்து போய் விட்டான் மதி அமைச்சன்,
இந்த மொழிகளை தேவி கூறக் கேட்டதும்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 

Latest posts

Latest ads

Back
Top