• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

விசாலாக்ஷி ஜி,
நான் இந்த தளத்திற்கு புதியவள். இன்று தான் உங்கள் கவிதைகளை கண்ணுற்றேன். (உங்கள் முதல் பக்கம் மட்டும் !!!). மிகவும் பிடித்து இருக்கிறது. நானும் கவிதைகள் எழுதுபவள் என்ற முறையில் உங்கள் கவிதைகள் வாழிய வாழியவே !! என் நமஸ்காரங்கள்.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#3b. ருத்திராக்ஷம்

காணக் கூடாததைக் கண்ட பாவம்;
கேட்கக் கூடாததைக் கேட்ட பாவம்;

முகரக் கூடாததை முகர்ந்த பாவம்;
உண்ணக் கூடாததை உண்ட பாவம்;

சொல்லக் கூடாததைச் சொன்ன பாவம்;
செய்யக் கூடாததைச் செய்த பாவம்;

எண்ணக் கூடாததை எண்ணிய பாவம்;
பண்ணக் கூடாததைப் பண்ணிய பாவம்;

நெருப்பில் பஞ்சு போல அழிந்து போகும்
நெஞ்சில் ருத்திராக்ஷம் அணிந்தவனுக்கு.

ருத்திராக்ஷம் அணிபவன் ருத்திரனுகுச் சமம்;
ருத்திரன் உண்பது அவன் உண்பதற்குச் சமம்.

ருத்திராக்ஷம் அணிவதற்கு நாணும் ஒருவன்
துக்க மயமான சம்சாரக் கடலில் அமிழ்வான்.

ருத்திராக்ஷத்தைப் பரிகாசம் செய்பவன்,
பிறந்தவன் ஆவான் கலப்பு ஜாதிகளில்.

அணியலாம் இதை எந்த ஆபரணத்தோடும்;
அணியலாம் இதை எந்த வர்ணத்தவரும்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#3b. RudrAksham

The sin of seeing things not to be seen; the sin of hearing things not to be heard;
the sin of smelling things not to be smelled; the sin of eating things not to be eaten; the sin of speaking words which should not be spoken; the sin of doing deeds not to be done; the sin of thinking thoughts not to be thought about; and the sin of performing acts not to be performed will all burn away like the cotton does in a fire, if the person wears RudrAksahm on his neck.

A man wearing Rudraksham is equal to Rudran himself. If he eats the food it is as good as eaten by Rudran himself. One who feels shy to wear a RudaAksham will get immersed in the smasAra sAgaramfilled with sorrows. One who makes fun of RudrAksham is born out of mixed varNas.

RudrAksham may be worn with any other ornament. It may be worn by men belonging to all the four varnAs.


 
BHAARGAVA PURAANAM - PART 2

#39b. பாலலீலைகள் (2)

“கணேசன் இருக்கும் வரையில் இல்லை
கணப் பொழுதும் நிம்மதி என் மனத்தில்!


ரகசியமாக அழியுங்கள் கணேசனை
அகத்தில் அமைதி நிலவும் மீண்டும்!”


கழுகாக மாறிப் பறந்தான் கிருத்திராசுரன்;
குழந்தை கணேசன் கிடந்தான் தொட்டிலில்.


பற்றிக் கொண்டது கணேசனைக் காலில்;
பறந்து சென்றது கழுகு உயர விண்ணில்!


அலறித் துடித்தனர் அருகில் இருந்தவர்;
கலங்கவே இல்லை குழந்தை கணேசன்!


வளைத்தான் கையால் கழுகின் கழுத்தை;
தளையை விட்டு விட்
டு இறந்தது கழுகு!

விழுந்தான் அன்னை மடியில் கணேசன்;
விழுந்தாள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தேவி.


வந்தனர் எலிகள் உருவில் இரு அசுரர்கள்
வலுச் சண்டையிட்டு கணேசனைத் தாக்கிட.


உருவெடுத்தான் ஒரு பூனையாக கணேசன்
இரு அசுரகளையும் குதறிவிட்டது பூனை!


பூனை வடிவெடுத்து வந்தான் ஒரு அசுரன்;
கொன்றன நாய் வடிவெடுத்த வேதங்கள்.


முனி குமாரனாக வந்த அந்த பலாசுரனை
இனிமையாக விளையாடியே அழித்தார்.


கொல்லச் சென்றவர் கொல்லப்பட்டனர்;
பொல்லாத கோபம் கொண்டான் சிந்து.


வல்லமை மிகுந்த அசுரர்களும் கூட
கொல்லப்பட்டனர் கணேச குமாரனால்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


 
BHAARGAVA PURAANAM - PART 2

#39b. BAla leelA (2)

“I can not have a moment of peace, as long as GanEsha is alive. Kill him secretly.” Sindhu RAjan commanded his asurAs. Grudra asuran took the form a vulture and flew to GanEsha. The child was lying in a cradle. The vulture grabbed the child in its talons and flew up higher and higher in the air.


Everyone got frightened by this and started screaming and crying but not baby GanEsha. But GanEsha was not afraid of the huge bird! He wound his arm round the neck of the vulture and squeezed hard. The vulture dropped him down first and then it also dropped dead. GanEsha fell right back into his mother’s lap giving her a great mental relief and joy.


Two asurAs came as rats and started fighting among themselves and attacked GanEsha. He changed into a cat and tore them apart. Another asura came changed into a cat. The four VEdAs commanded by GanEsha, took the form of a dog and tore apart the cat. BalAsuran came as a muni kumAran. GanEsha
played with him and killed him playfully.


The mighty asuraas who were sent to kill Ganesha got killed by him instead. This made Sindhu RAjan terribly angry.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#11d. தாமிரன்

“மனக் குறிப்பை உணர்ந்து சொல்ல வேண்டும்!
மனக் குறிப்புகள் ஆகா சொந்தக் கற்பனைகள்!


காமம் மிகுந்தவள் அல்ல வந்துள்ள பெண்;
காமரசச் சொற்களைப் பேசவில்லை அவள்.


விரும்பி வரவில்லை உம்மிடம் எதையும்;
தருமம் உணர்ந்த வீரம் மிகுந்த அப்பெண்.


அழகிய பெண் ஆயுதம் தாங்கியுள்ளாள்;
அழிக்க வல்லவர் யாருமில்லை உலகில்.


கேட்டதில்லை இது போன்ற பெண் பற்றி!
கண்டதில்லை இது போன்ற பெண்ணை!


வந்துள்ளாள் நமக்குத் துன்பம் தருவதற்கு;
வந்துள்ளாள் நமக்கு விபரீதம் விளைவிக்க.


உதய காலத்தில் கனவு கண்டேன் இன்று;
உதிரமயமான ஆடையில் இருந்தாள் நின்று.


அழுது கொண்டிருந்தாள் வீட்டின் முன் நின்று;
விழித்துக் கொண்டு விட்டேன் பதறியடித்து.


கூச்சலிடுப் பறந்தன பறவைகள் அப்போது;
அச்சம் தந்தன தோன்றிய துர் சகுனங்கள்.


விசித்திரப் பெண் வந்துள்ளாள் நம்மிடம்;
விளிக்கின்றாள் அறைகூவிப் போருக்கு!


‘வினாசகாலே விபரீத புத்தி’ என்பார்கள்
விபரீத புத்தி உண்டாகியுள்ளது உமக்கு!


வந்துள்ள பெண் மானிடப் பெண்ணல்ல;
வந்துள்ளவள் தானவப் பெண்ணல்ல.


மாயையால் உருவானவள் இந்தப்பெண்.
மாய்க்க இயலாது எவராலும் அவளை.


நடப்பது நடந்தே தீரும் மாற்ற முடியாது;
உடனடியாகப் போருக்குச் செல்வோம்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#11d. Thaamran

Thaamran did not agree with the views of Durdaran. He said, “Interpretations should not be one’s own imagination. The woman who has come here is not filled with lust.She has not spoken about love or lust.

She has not come here seeking anything from you. She knows the right from the wrong and is valorous. A beautiful woman has taken up arms. She says nothing and nobody can destroy her. I have not seen or heard about such a woman all my life. I am sure she has come here to create difficulties and problems for asuras.

I had a bad dream early today morning. I saw a woman in blood colored clothes weeping in front of her house. I got startled and woke up from my sleep. The screeching of the birds was accompanied by many ill omens.

A strange young woman comes to us. She challenges us to fight with her. ‘Vinaasa kaale vipareetha buddhi’ and your buddhi is already perverted. The woman who has come here is neither a human nor an asuri. She is the personification on Maayaa. She can’t be destroyed.

Whatever will happen will happen. Let us get ready for the war.” Thaamran concluded his long speech.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#4a. ருத்திராக்ஷ வகைகள்

"எப்படி வந்தது இத்தனை சிறப்பு - இதனைத்
தப்பாமல் கூற வேண்டும் தாங்கள் எனக்கு!"

நாரதன் வேண்டினான் நாராயணனிடம்,
நாராயணன் கூறினான் நாரதனுக்கு இதை.

"கேட்டான் இதையே முருகன் ருத்திரனிடம்;
கூறினான் ருத்திரன் ருத்திராக்ஷ மகிமையை.

வெல்ல இலயாதவர்கள் திரிபுர அசுரர்கள்
தொல்லைகள் பல தந்தனர் தேவர்களுக்கு.

முறையிட்டனர் தேவர்கள், தெய்வங்கள் - தம்
குறைகளை என்னிடம் ஒன்றாகக் கூடி வந்து.

சகல தேவ ஸ்வரூபமான, மனோஹரமான,
சுடர் விட்டு அக்னி போல எரிக்கூடியதான,

பயங்கர வடிவுடைய, இடையூறுகளை அகற்றக் கூடிய
அகோரம் என்னும் அஸ்திரத்தை ஆயிரம் ஆண்டுகள்

கண் மூடிச் சிந்தித்தேன் மனதை ஒருமுகப் படுத்தி;
கண் திறந்ததும் உருண்டோடின கண்ணீர்த் துளிகள்.

தோன்றின அவற்றிலிருந்து ருத்திராக்ஷ மரங்கள்;
தோன்றின முப்பத்தெட்டு வித ருத்திராக்ஷங்கள்

வலக் கண்ணாகிய சூரிய விழியின் நீரிலிருந்து
கபில வர்ணம் கொண்ட பன்னிரெண்டு வகைகள்;

இடக் கண்ணாகிய சந்திரவிழியின் நீரிலிலிருந்து
வெண்ணிறம் கொண்ட அரிய பதினாறு வகைகள்;

நெற்றி கண்ணாகிய அக்னி விழியின் நீரிலிருந்து
கறுப்பு நிறம் கொண்ட பத்து வகைகள் தோன்றின.

வெண்ணிறம் கொண்டவை ஆகும் பிராமண ஜாதி;
செந்நிறம் கொண்டவை ஆகும் க்ஷத்திரிய ஜாதி;

கலப்பு நிறம் கொண்டவை ஆகும் வைசிய ஜாதி
கருப்பு நிறம் கொண்டவை ஆகும் சூத்திர ஜாதி!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#4a. The types of RudrAkshas

Narada asked NArAyaNA,"Why is RudrAksham so famous? You must explain this to me!" NArAyaNA said," Skanda asked the same question to Rudra and this is what Rudra told Skanda."

"The asurAs living in TripurA were invincible. They gave immense problems to the people of the three worlds. The DevAs complained about this to me (Rudra).

I sat in deep meditation for one thousand years concentrating on the Aghora Asthramwhich has the swaroopam of all the DevAs, which steals one's mind by its uniqueness, which glows like the burning fire, which is awesome and which can remove all the hurdles.

When I opened my eyes three drops of tears rolled down from my three eyes. From those three drops grew the trees of RudrAksham which were of thirty eight different types.

Twelve types which had Kapila VarNam appeared from the tear drop from my right eye which is the Sun.
Sixteen types which were white in color appeared from the tear drop from my left eye which is the Moon.
Ten different types which were black in color appeared from the tear from my third eye which is Agni.

The white colored RudrAksha belong to the Brahmins, the red colored belong to the KshatriyAs, the mixed colored belongs to Vaiayas and the black colored to SoodrAs."
 
BHAARGAVA PURAANAM - PART 2

#39c. பாலலீலைகள் (3)

மாமரமாக மாறினான் வியோமாசுரன்;
மாங்கனிகள் குலுங்கின கிளைகளில்!


கனிகளைப் பறித்து விரும்பி உண்ட,
முனி குமரர்கள் உயிர் இழந்தனர்.


நுழைந்தார் கணேசர் மாமரப் பொந்தில்;
பிளந்தார் மரத்தை உருவத்தைப் பெருக்கி.


இறந்தான் அசுரன் இரண்டு துண்டுகளாகி!
இறந்த குமாரர்கள் உயிர்பெற்று எழுந்தனர்.


சதமகிஷ பக்ஷிணி என்னும் ஓர் அரக்கி;
சாப்பிடுவது தினமும் நூறு எருமைகள்!


அழகிய வடிவெடுத்து வந்தாள் அவ்விடம்;
பழகினாள் நல்ல தேவ ஸ்திரீயைப் போல.


“சிறையில் வாடுகின்றான் என் கணவன்;
சிந்துராஜன் வருத்துகின்றான அவனை!”


நித்திரையில் தேவி இருக்கும் பொழுது,
தந்திரமாகப் பறந்தாள் கணேசனுடன்.


காதைப் பற்றி வலித்தான் கணேசன்;
கதை முடிந்தது அழகிய ராக்ஷசியின்.


ஆமையாக மாறி வந்த ஓர் அசுரனை
அழுத்தினார் முதுகில் கால்களால்.


பேச்சில்லாமல் இறந்து போனான்,
மூச்சு முட்டிய அந்த ஆமை அசுரன்!


குதிரையாக மாறி வந்தான் ஓர் அசுரன்;
குதிரை மேல் கணேசனை அமர்த்தியதும்


வாயு வேகத்தில் பறந்தவன் மாய்ந்து
வாயில் நுரைதள்ளி விழுந்தான் கீழே.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
BHAARGAVA PURAANAM - PART 2

#39c. BAla leelA (3)

VyomAsuran transformed into lovely huge mango tree. Its branches were laden with ripe, fleshy fruits. The rushi kumArAs ate the fruits and fell down quite dead.


GanEsha entered into a hole in the tree. He grew in his size and tore the tree into two. The asura fell down dead – cut into two parts. All the children who had died after eating the mango fruits were revived by GanEsha.


Satha mahisha bakshiNi was a rAkshasi who used to eat one hundred buffaloes each day. She transformed herself into a DEva sthree and came to DEvi and GanEsha. She said that her husband had been imprisoned by the cruel Sindhu RAjan and was suffering in his prison.


DEvi trusted her. One day while Devi was asleep, the rAkshasi took off carrying GanEsha in her arms. GanEsha was not afraid of her. He pulled her ears so hard that the rAkshasi fell down quite dead.

Another asuran transformed himself in to a huge tortoise and came to kill GanEsha. The asuran got killed when GanEsha pressed hard with his feet on the back of the tortoise.

Another asuran came transformed into a horse. It looked very attractive. The womenfolk in the ashram made GanEsha sit on the horse. it took off like a streak of lightning and flew away in the sky.


GanEsha forced him to fly on with the same speed and go round all the worlds in the universe. The asuran grew so tired that he fell down dead spitting foam from his mouth!


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#11e. தாமிரன் தூது (1)

“நீயே தாமிரா! அந்த அழகியிடம் சென்று விடு!
நீயே கொணர்ந்து அவளை எனக்குத் தந்து விடு!


வர மறுத்தால் நீயே அவளைக் கொன்றுவிடு!
வர மறுக்கிறது அவளைக் கொன்
றுவிட மனம்!

நேரில் காண வேண்டும் நான் அவளை;
தேறியுள்ளாய் காம, வீரப்போர்களில் நீ!


உயிர் இழப்பான் போரில் போர் வீரன்;
உயிர் இழப்பான் சோகத்தில் காமுகன்.


எந்த விதமாகிலும் நான் காண வேண்டும்;
வந்து காணச் செய்யவேண்டும் அவளை!


வீணாக்காதே பொழுதை இங்கேயே நின்று!
வாணாளை நீட்டு அவளை நீ கொணர்ந்து!


யார் அவள்? எதற்காக இங்கே வந்தாள்?
போர் புரிய வந்தாளா? காமம் கருதியா?


தானே வந்தாளா? பிறர் அனுப்பி வந்தாளா?
நானே அறியவேண்டும் விவரங்கள் எல்லாம்.


செய்யலாம் யுத்தம் தேவை ஏற்பட்டால்;
செய்யலாம் சமாதானம் தேவை ஏற்பட்டால்.


மருட்டி விடாதே அந்த அழகியை தாமிரா!
இருப்பதை அறிந்து வா அவள் உள்ளத்தில்!”


சென்றான் தாமிரன் நாற்படைகளுடன்;
கண்டான் துர் நிமித்தங்கள் வழி நெடுக.


அஞ்சவில்லை படை துர் சகுனங்களால்;
வெஞ்சமர் புரிய எண்ணி முன்னேறியது.


கண்டனர் சிம்ஹ வாஹனத்தில் தேவியை!
கண்டனர் திருக் கரங்களில் ஆயுதங்களை!

தெள்ளத் தெளிவானது அமைச்சனுக்கு – அவள்
உள்ளக் கருத்து அவளைக் கண்ட உடனேயே!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#11e. Thaamran goes to Devi

Mahishan was impressed by Thaamran’s opinions. He told him,”Taamraa! You please go to that woman and bring her here. If she refuses to come with you, just kill her. I can’t kill her with my own hands.


I must meet her. You seem to know warfare as well as love fare.You must make her come here and meet me. A warrior gets killed in a battle field and a lover gets killed when he becomes lovelorn.


Who is she? Why is she here? What does she want? Did she come here on her own or was she sent here by someone else? I want to know everything about her.


If necessary we can fight with her. If necessary we can make a peace pact with her. Do not scare her for my sake. Just find out everything about her and try to bring her here”


Thaamran went accompanied by the four wings of the asura army.The soldiers saw bad omens all along the way but they could not care less abut it. Their only thought was a war with that strange woman.

Then they all saw her seated on her lion. She was as beautiful as she was valorous! Eighteen weapons shone in her arms. One look at her made Thaamran understand why she was there.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#4b. ருத்திராக்ஷ வகைகள் (2)

ஒருமுகம் கொண்டது சாக்ஷாத் சிவ ஸ்வரூபம்;
நீக்கும் பிரம்ம ஹத்தி தோஷங்களையும் கூட!

இருமுகம் கொண்டது தேவியின் ஸ்வரூபம்;
நீக்கும் புத்தி பூர்வ, அபுத்தி பூர்வ பாவங்களை.

மூன்று முகம் கொண்டது அக்னி ஸ்வரூபம்;
நீக்கும் ஸ்த்ரீஹத்தி தோஷத்தை நொடியில்.

நான்கு முகம் கொண்டது பிரம்ம ஸ்வரூபம்;
நீக்கும் நரஹத்தி என்னும் கொடிய பாவத்தை.

ஐந்து முகம் கொண்டது காலாக்னி ருத்ர ஸ்வரூபம்;
நீக்கும் தவறான உணவு, புணர்ச்சியின் பாவங்களை.

ஆறுமுகம் கொண்டது சுப்ரமண்ய ஸ்வரூபம்;
நீக்கும் பிரம்ம ஹத்தி போன்ற பாவத்தையும்.

ஆறுமுகம் கொண்ட ருத்திராக்ஷத்தை ஒருவன்
அணிந்து கொள்ளலாம் தனது வலது காதில்.

ஏழு முகம் கொண்டது மன்மத ஸ்வரூபம்;
நீக்கும் பொன்னைத் திருடிய பாவத்தையும்.

எட்டு முகம் கொண்டது விநாயக ஸ்வரூபம்;
நீக்கும் சகல பாவங்களை; தரும் ந
ன்மைகளை!

ஒன்பது முகம் கொண்டது பிரணவ ஸ்வரூபம்;
தரும் புத்தியும், முக்தியும், சிவலோகப் பதவியும்.

நீக்கும் ஆயிரம் நர ஹத்தியின் பாவங்களை;
நீக்கும் நூறு பிரம்ம ஹத்தியின் பாவங்களை.

ஒன்பது முகம் கொண்ட ருத்திராக்ஷத்தை
அணியலாம் ஒருவன் தன் இடது தோளில்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#4b. Types of RudrAkshas


Rudraksha with a single face is Lord Siva Himself. It can rid the wearer of even the sin incurred by killing a brahmin.

The RudrAksha with two faces is the swaroopam of Devi. Two sorts of sins (buddhipoorva and abuddhi poorva ) are completely destroyed by it.

The RudrAksha with three faces is the swaroopam of Agni. The sin incurred by killing a woman (sthree haththi dosham) is destroyed by it - in a moment.

The RudrAksham seed with four faces is the swaroopam of BrahmA and removes the sin of killing human beings (nara haththi dosham).

The RudrAksham with five faces is the swaroopam of RudrA. Sins incurred by eating the forbidden food and copulating with unworthy women are destroyed by it.

The six faced RudrAsha is the swaroopam of KArtikEya. It is to be worn on the right hand. The wearer becomes free from the BrahmahatyA sin.

The seven faced RudrAksha is the swaroopam of Manmatha and is named Ananga. Wearing this frees a person from the sin of stealing gold.

The eight faced RudrAksha is the swaroopam of Lord VinAyaka. Wearing this frees one from the sin of having illicit relationship with a woman from a bad family and the forbidden relationship with the wife of one's own Guru.

It bestows on the wearer plenty of food, clothes, gold and the Highest abode at the end.
The nine-faced RudrAksha is the swaroopam of Bhairava. By wearing this, a person gets both Bhoga (worldly enjoyment) and Moksha (total liberation)

 
BHAARGAVA PURAANAM - PART 2

#39d. பால லீலைகள் (4)


துந்துபி என்னும் கொடிய அசுரன்
துடித்தான் கணேசனை முடித்துவிட.


ஆலஹாலம் நிகர்த்த விஷத்தால்
அழகாகச் செய்தான் நாவல்பழம்.


முனிகுமாரனைப் போல வந்தான்;
இனிக்கப் பேசிப் பழங்கள் தந்தான்.


சுவைத்து உண்டார் அதை கணேசன்;
சுவைக்கத் தந்தார் தன் மோதகங்கள்.


உண்ட அசுரன் சுருண்டு விழுந்தான்;
கொண்டது பலி, விஷம் அவனையே.


வழியில் அசுரன் ஒருவன் உருமாறி
விழுந்து கிடந்தான் மலைப் பாம்பாக.


விழுங்கி விட்டான் கணேச குமாரனை!
அழத் தொடங்கினர் உடன் வந்தவர்கள்.


பிளந்தார் பாம்பை இரண்டு துண்டாக!
வெளிப் பட்டான் நொடியில் கணேசன்.


சோலைக்குச் சென்றனர் ரிஷிபத்தினிகள்;
பாலன் கணேசனையும் எடுத்துக்கொண்டு.


பக்ஷி உருவில் ஓர் அசுரன் வர – ரிஷி
பத்தினிகள் அஞ்சி ஓடினர் ஆசிரமத்துக்கு.


பாறை மீது மோதிக் கொன்றார் அந்தப்
பட்சியின் கால்களைப் பற்றிய கணேசன்.


விஸ்வகர்மா உருவில் வந்த அசுரன்,
விநாயகருக்கு அணிவித்தான் சிலம்பு.


சிலம்பு வடிவில் இருந்தனர் அசுரர்கள்;
சிலம்புகளை அசைத்தபடி ஆட்டினார்.


சிலம்பு அணிந்த கால்களை உதறிட,
சிலம்புகள் பறந்தன கால்களிலிருந்து


பறந்து தாக்கின அணிவித்தவனை!
இறந்து விழுந்தனர் மூன்று அசுரரும்!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.




 
BHAARGAVA PURAANAM - PART 2

#39d. BAla leelA (4)

Dundubi was an asuran. He wished to kill GanEsha. He made Jamoon fruits with a deadly poison. He transformed into a rushi’s son and came to GanEsha. He offered the poisonous fruits to GanEsha.

After eating the fruits, Ganesha offered the disguised asuran his modakams. The asuran ate the modakam and fell down dead since his own poison had affected him and not GanEsha, as intended by him.


Another asuran got changed to a huge python. He swallowed GanEsha whole when he passed by with his friends. The friends started wailing and crying. GanEsha tore the snake into two parts and emerged from the snake unhurt.


Once the Rushi patnis went to a garden carrying Bala GanEsha with them. An asura came in the form of a giant bird. The rushi patnis got frightened and ran back the Ashram carrying GanEsha with them. But GanEsha grabbed the bird, dashed it against a huge rock and killed it.


Three more asurAs came to kill GanEsha. One of them was transformed as Viswakarma and the other two as anklets made by him. The anklets were put around GanEsha’s ankles. The asurAs wanted to kill GanEsha but he shook his legs and kicked so violently that the anklets flew off, dashed on the asuran disguised as Viswakarma. All the three asuraas got killed in this manner!


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#11f. தாமிரன் தூது (2)

‘மஹா வீரங்கனையன்றோ இந்தப் பெண்!
மஹிஷனை மதித்து விரும்புவாளா இவள்?

தெய்வப் பெண்ணான இவள் விரும்புவாளா
மைநிறத் தலை கொண்ட மஹிஷாசுரனை?

வந்த வேலையைச் செய்ய வேண்டும் நான்
சொந்தக் கருத்து எதுவாக இருந்த போதிலும்.

“விரும்பினான் போரை மஹிஷன் தேவர்களிடம்
விரும்புகின்றான் மஹிஷன் அன்பை உன்னிடம்.

தோள்வலிப் போர் புரிந்து துயர் அடையாதே!
தோளை வல்லியாகச் சுற்றி இன்புறுவாய் நீ!

மெலிந்த பொன்னுடல் தாங்குமா மஹிஷனின்
வலிய வீரத் தாக்குதல்களைப் போர்க் களத்தில்?

இளமைக்குரியது இன்பச் சுவை வாழ்வில்.
இளமையை வீணாகாதே துன்ப வாழ்வில்.

எந்த வேண்டும் கரங்களில் மலர்ச்செண்டு;
ஏந்தி உள்ளாய் கரங்களில் பல ஆயுதங்கள்.

விற்புருவமும், வேல்விழியும், இருக்கையில்
வில்லும், வேலும், வாளும் எதற்கு உனக்கு?

சுகம் பெற வேண்டும் நீங்கள் இருவரும்!
நிகரற்று விளங்க வேண்டும் இக உலகில்!

வெல்வான் மஹிஷன் உன்னை வீரப் போரில்!
வெல்வாய் நீ மஹிஷனைக் காதல் போரில்!

ஆசை மனைவி ஆகிவிடு மஹிஷனுக்கு!
பூசை செய்வான் உன்னை மலர்களால்.

மன்னன் ஆவான் உனக்குப் பிறக்கும் பிள்ளை!
இன்னமும் நான் சொல்வதற்கு என்ன உள்ளது?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#11f. Thaamran meets Devi

Thaamran knew what type of a woman Devi was at the very first glance! He thought to himself, “This woman is really valorous. Will she respect Mahishan? Will she love Mahishan? She looks like a goddess. Can she ever love the charcoal-colored and buffalo-faced Mahishan? But I must attend to my job without giving vent to my own opinions and thoughts.


He spoke to Devi, “Mahishan wanted to fight with the Devaas. But now he wants only your love and affection. Do not destroy yourself by fighting with him. Instead become a creeper around the trunk of his body and enjoy love and life.


Your fragile body would not bear the cruel attacks in a war. Youth is for enjoying life and not for wasting it in wars and battles. You must be holding flower bouquets in your hands in stead of these gleaming sharp weapons.


Why do you need a bow and a spear when you already have bow-like eyebrows and so spear-like sharp darting eyes. You two must enjoy life and it pleasures. You to must be unmatched by anybody in the three worlds.


He will win over you easily in a war but you will win over him easily in a war of love. Become Mahishan’s wife. He will adore you as if you are a goddess. You son will become the next king. What more can I offer you?”


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#4c. ருத்திராக்ஷ வகைகள் (3)

பத்து முகம் கொண்ட மணி விஷ்ணு ஸ்வரூபம்;
நீக்கும் கிரஹதோஷங்கள், பீடைகள், விஷத்தை.

பதினோரு முகம் கொண்டது ஏகாதச ருத்திர ஸ்வரூபம்;
தரும் அஸ்வமேத, வாஜ்பேய யாகங்களின் பலங்களை.

பதினோரு முகம் கொண்ட ருத்திராக்ஷத்தை
அணியலாம் ஒருவன் தன்னுடைய சிகையில்.

பன்னிரண்டு முகம் கொண்டது ஆதித்ய ஸ்வரூபம்;
நீக்கும் துஷ்ட மிருகங்களின் பயம், வியாதிகளை!

பன்னிரண்டு முகம் கொண்ட ருத்திராக்ஷத்தை
அணியலாம் ஒருவன் தன்னுடைய காதுகளில்.

பதிமூன்று முகம் கொண்டது ஷண்முகனுக்குச் சமம்;
நிறைவேற்றும் சகல விருப்பங்களையும் அணிபவருக்கு.

பதினான்கு முகம் கொண்ட மணி ருத்திரனாக்கி விடும்;
அணிந்தவன் மோக்ஷம் பெறுவான்; தேவரும் தொழுவர்.

அணிய வேண்டும் ஆறு முக மணியை வலது காதில்;
அணிய வேண்டும் ஒன்பது முகத்தை இடது தோளில்;

அணிய வேண்டும் பதினொரு முகத்தைச் சிகையில்;
அணிய வேண்டும் பன்னிருமுக மணியைக் காதுகளில்;

அணிய வேண்டும் சிரசில் இருபத்தி ஆறு மணிகளை.
அணிய வேண்டும் மார்பில் ஐம்பது மணிகளை;

அணிய வேண்டும் தோளில் பதினாறு மணிகளை;
அணிய வேண்டும் மணிக்கட்டில் பன்னிரண்டு மணிகளை

இருக்க வேண்டும் ஒரு ஜபமாலையில் 27 / 54 / 108 மணிகள்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
11#4C. The types of RudrAksha (3)

The ten-faced RudrAksha is the swaroopam of JanArdana, the DevA of DevAs. Wearing this pacifies the evils caused by unfriendly planets, evil spirits and snakes.

The eleven-faced RudrAksha is the swaroopam of the EkAdas (Eleven) Rudras. Wearer of this gets the benefits of performing one thousand Aswameda YAgAs, one hundred VAjapeya sacrifices and making gifts of one hundred thousand cows.

The RudrAksha with twelve faces is the swroopam of the DwAdasa AadityAs. These can be worn in the ears. They rid the wearer from the fear of wild animals, diseases and discomforts. He becomes freed of the sins incurred in killing elephants, horses, deer, cats, snakes, mice, frogs, asses, foxes and various other animals.The thirteen faced RudrAksha is very rare to find. The wearer becomes equal to KArtikeya and gets all his heart's desires fulfilled and earn the eight siddhis.

One who wears the fourteen faced RudrAksha on his head becomes equal to Siva. The Devas pay their respects to him and he attains the Highest Goal in the end namely the state of becoming Siva. His body becomes the body of Siva.

The BrAhmins should wear at least one RudrAksha with devotion. A rosary of twenty-six RudrAkshas can be worn on the head. A rosary of fifty seeds is to be worn on the chest; sixteen rudrAkshas can be worn on each of the two arms and twelve RudrAksha on each of the two wrists.


 
BHAARGAVA PURAANAM - PART 2

#39e. பாலலீலைகள் (5)

ஓடி வந்தது ஒரு மதயானை – விளை
யாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம்.

சிதறி ஓடி விட்டனர் சிறுவர்கள்!
சிந்தனையாலே வரவழைத்த ஒரு

அங்குசத்தை மனதால் கணேசன் ஏவிட,
அங்கேயே விழுந்து மடிந்தது மதயானை.

பிஞ்சு பாலகனுக்கு வயது இரண்டு;
வஞ்சம் கொண்டு வந்தான் ஓர் அசுரன்.

தடாக நீரில் நஞ்சைக் கலந்து விட்டு,
கூடாசுரன் காத்திருந்தான் மறைந்து.

மாய்ந்தனர் தடாக நீரை அருந்தியவர்
தீய்ந்தன மரங்கள், செடி கொடிகள்.

கண்களால் தண்ணீரைக் கணேசன்
கண்டதும் நீங்கியது நச்சுத்தன்மை!

துளிர்த்தன மரங்கள், செடி கொடிகள்,
பிழைத்தனர் நஞ்சினால் மாண்டவர்.

மூன்றாவது கண்ணைத் திறந்து நோக்க,
மறைந்த அசுரன் எரிந்து சாம்பலானான்.

மீனாக மாறி ஒளிந்திருந்தான் அசுரன் ,
முனிகுமாரர்கள் நீராடும் தடாகத்தில்.

கரங்களால் மீனைக் கணேசன் பிடித்து,
கரையில் எறிந்ததும் இறந்தான் அசுரன்.

மலையாக மாறி நின்ற அசுரனை கணேசன்,
மணலாக்கி விட்டார் ஒரு ஹூங்காரத்தால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
BHAARGAVA PURAANAM - PART 2

#39e. BAla leelA (5)

A mad elephant came charging at the children playing with GanEsha. They all ran away frightened except GanEsha. He made an ankusam appear by his command and aimed it at the mad elephant. The ankusam split the head of the elephant into two and the elephant fell down and died.


GanEsha was now two years old. An asuran named GudAsuran came there with a vengeance. He poisoned the water of the pond and waited among the clouds invisible to everyone. Those who drank the water of the pond dropped dead and the plants and trees withered due to the poison.


GanEsha stared at the water of the pond and the poison in the pond was destroyed by his mere glance. Then he looked at the GudAsuran hiding among the clouds with his third fiery eye and reduced the asuran into ashes. The trees and plants were revived and the people who died were resurrected by GanEsha.


Another asuran became a fish in the pond of water which was being used by those living in the Ashram. GanEsha caught the fish with his bare hands and threw it on the banks of the ponds. The asuran got killed by the impact of the fall on the earth.


Another asuran became a huge mountain and blocked GanEsha’s path. The mountain was shattered into rubble by the hoonkArA sound made by GanEsha.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#12a. தேவியின் மறுமொழி (1)

கோபம் கொள்ளவில்லை ஜகன்மாதா – இவை
கேவலம் மஹிஷனின் சொற்கள் அன்றோ?

” கூறு உன் மன்னன் மஹிஷனிடம் சென்று,
அறிவற்ற எருமையின் மகன் அல்லவா நீ ?

புல், பூண்டு தின்னும் பெண் எருமையல்ல நான்!
வால், கொம்பு, பருத்த வயிறு இல்லை என்னிடம்!

எப்படி ஆசை கொண்டாய் என்னிடம் மஹிஷனே
இப்படி உன் குல லக்ஷணங்கள் இல்லாத போதும்?

விரும்பவில்லை நான் பிரமன், விஷ்ணுவை;
விரும்பவில்லை நான் வருணன், அக்கினியை.

காம வெறியூட்டும் கட்டழகு உடல் இருப்பதால்
காம வெறிகொண்டு விரும்புவேனோ உன்னை ?

உத்தமப் பெண் இணைவாள் இன்பம் துய்க்க
உத்தம நாயகனுடன், தனக்கு ஏற்றவனுடன்.

கலவி இன்பம் கருதி அணைக்க மாட்டாள்
கயவனனைக் காமுகனைக் கள்வனை.

அறிவாய் நான் ஒரு கன்னி அல்ல என்பதை!
அறிவாய் என் நாயகனின் பெருமைகளை!

தனக்கு மிஞ்சின தெய்வம் இல்லாதவன்;
தானே அனைத்துக்கும் கர்த்தா ஆனவன்;

எல்லாவற்றுக்கும் நிலையான சாக்ஷி;
எக்காலத்திலும் அழிவே இல்லாதவன்;

ஆசைகள் அற்ற பூரணப் பொருள் அவன்;
பூசனை செய்வதற்கு உகந்தவன் அவன்;

வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்;
ஆண்டவனாக உலகை ஆள்பவன் அவன்;

எங்கும் நிறைந்தவன்; தாங்கும் ஆதாரம்;
ஏங்கும் பக்தனின் குறைகளைத் தீர்ப்பவன்;

கடவுள்களின் கடவுள் ஆவான் அவன்
விடையேறும் ஈசன் பரமசிவன் அவன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#12a. Devi’s reply (1)

Devi did not get angry with the minister Thaamran since he was only conveying the message sent by Mahishan. She replied to Thaamran thus:


Go and tell your king the mighty Mahishan these words. “You are the son of a buffalo with no power of discretion. I am not a female buffalo feeding on grass and leaves.


I do not have a tail or horns or a fat belly. How did you fall in love with me even though I do not have any of those features considered most beautiful in your race?


I did not choose Brahma or Vishnu or Varuna or Agni. Will I fall for you even if you take the form of Manmathan? A virtuous woman would choose only a virtuous man for seeking pleasure.


She will not seek the company of a rogue or lustful man or a thief – just to gratify her senses. Know that I am a married woman. I shall relate the greatness of my husband now.


He has none equal to him or superior to him. He is the doer of everything. He is the Omniscient, Omnipotent and Omnipresent. He is free from all desires. He is complete in himself.


He is the best god worthy of being worshiped. He has no likes or dislikes. He is the lord of everything. He supports everything. He rides on Nandi and his name is Parama Sivan the most auspicious among gods.”
 

Latest posts

Latest ads

Back
Top