devi bhaagavatam - skanda 11
11#5. ருத்திராக்ஷ மஹிமை
ருத்திராக்ஷத்தின் மேல்பக்க முகம் பிரமன்;
ருத்திராக்ஷத்தின் கீழ்பக்க முகம் விஷ்ணு.
நடுக் கண்டம் ஆகும் ருத்திரன் இந்த மணியில்;
அடங்குவர் மும்மூர்த்திகள் ருத்திராக்ஷத்தில் !
போக, மோக்ஷங்கள் தரவல்லது இந்த மணி;
மூன்று நிறங்கள் கொண்டது ருத்திராக்ஷம்.
முள் போன்ற அமைப்பினை உடையது இது;
முகங்கள் ஐந்து கொண்டது ருத்திராக்ஷ மணி.
முகத்தோடு முகத்தைச் சேர்த்து கோர்த்து - அதன்
பிருஷ்டத்தோடு பிருஷ்டத்தை சேர்க்க வேண்டும்.
மேல் நோக்கி இருக்க வேண்டும் மேருவின் முகம்;
மேருவை நாக பாசத்தினால் சேர்த்திட வேண்டும்.
அபிஷேகம் செய்ய வேண்டும் பஞ்ச கவ்வியத்தால்;
அபிஷேகம் செய்ய வேண்டும் சந்தன நீரினால்.
எந்தத் தெய்வத்துக்கு எந்த மந்திரமோ - அதனால்
அந்த தெய்வத்தை நன்கு பூஜிக்க வேண்டும்.
சிரத்தையோடு அணிய வேண்டும் இவற்றை
சிரசு, கழுத்து, மார்பு, காதுகள் மற்றும் தோளில்.
அணிய வேண்டும் வைதீக கர்மங்களின் போது;
அணிய வேண்டும் கயிறு, பொன்னில் கோர்த்து.
அளிக்கும் புண்ணியம் கண்ணால் கண்டதுமே;
அணியக் கூடாது இவற்றைத் தூய்மையின்றி.
அளிக்கும் புண்ணியம் கையால் தொட்டால் - இது
அதிகப் புண்ணியம் தரும் உடலில் அணிந்தால்.
அதிகப் புண்ணியம் இதனால் ஜபம் செய்தால்;
அடையும் நற்கதி இருபத்தொரு தலைமுறை!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி