• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#13a. முதல் நாள் யுத்தம் (1)

சென்றனர் பாஷ்கலன், துர்முகன் இருவரும்;
செப்பினர் தேவியிடம் மிகவும் கம்பீரமாக.


“வெல்ல இயலவில்லை எவராலும் மஹிஷனை.
வெல்ல இயலும் எளிதில் உன்னால் மஹிஷனை.


அசுர வேந்தனை மணந்த பின் என்ன குறை?
அசர வைக்கும் அழகிய பெண்ணே கூறுவாய்!


எருமைத் தலையணை நெருங்குவது எங்கனம்?
எண்ணிப் பொரும வேண்டாம் தெய்வ நங்கையே!


இருக்கமாட்டான் அவன் எருமைத் தலையனாக
நெருக்கமாக உன்னிடம் வரும் நேரங்களில்.


கோடி மன்மத விக்ரஹமாக வருவான் – நீ
கூடி மகிழ்விப்பாய் அவனை உன் அழகால்!


மூன்று உலகங்களும் கிடக்கும் உன் காலடியில்;
தோன்றுவதை செய்து கொண்டு இன்புறுவாய்!”


தேவி கூறினால் உறுதியான மறுமொழியை,
“தேவர்களுக்குப் புது வாழ்வு தரவே வந்தேன்.


அண்டவெளியில் ஒளிந்து கொள்ளட்டும்;!
இருண்ட குகையில் ஒளிந்து கொள்ளட்டும்!


விடமாட்டேன் மஹிஷனை உயிரோடு!
விளம்புங்கள் இதை ம
ஹிஷன் காதோடு!”

சினம் பீறிட்டது அமைச்சர்களிடம் – அவர்
இனம் வெளிப்பட்டது அவர்கள் செயலில்


செய்தனர் வீரகர்ஜனை; ஏந்தினர் வில்லை;
எய்தனர் பாணங்களை தேவியின் மீது !


அதிரவில்லை தேவி அந்தத் தாக்குதலால்!
புதிராகப் புன்னகைத்தாள் தேவி அப்போது!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#13a. The first day’s war

Bashkalan and Durmukhan went to meet Devi and told her thus: “No one could defeat Mahishan in a war. But you can defeat him easily by becoming his wife. After marrying the monarch of all the three worlds, what will you lack oh stunningly beautiful lady?

Do not feel disgusted wondering how go near that buffalo headed king. He will not be buffalo headed when he comes to you. He will be as beautiful as ten million Manmathans put together. Make him happy with your rare beauty”

Devi replied in a calm but determined voice, “I have come here to restore the Heaven to the Devaas. Mahishan may go and hide anywhere in the universe but I will not spare him. Go and tell this to your mighty monarch Mahishan”

True to their race, the ministers became very angry. The roared menacingly, took up their bows and started raining arrows on Devi. Devi was unperturbed by this sudden attack. She smiled in a mysterious and meaningful manner.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#6d. வழிப்பறி

துரத்தி விட்டனர் அவர்களைக் காட்டுக்கு;
துவளவில்லை அவர்கள் வனவாசத்தால்.

வழிப்பறி செய்தான் வழிப் போக்கர்களிடம்;
வாழ்வாதாரம் ஆகிவிட்டது இந்த வழிப்பறி.

முடிந்து போனது குணநிதியின் ஆயுட்காலம்;
மடிந்து வீழ்ந்தான் காட்டில் ஒரு மரத்தருகே!

வந்தனர் யம கிங்கரர்கள் ஒரு புறம்,
வந்தனர் சிவ கணங்கள் மறு புறம்.

வாக்குவாதம் நடந்து குழுக்களிடையே!
வாதித்தனர் சிவகணங்கள் தம் கட்சியை!

"மாண்டான் இவன் ஒரு மரத்தருகில்;
ஆண்டவனின் ருத்திராக்ஷ மரம் அது.

காற்றுப் பட்டாலே அழிந்து விடும் பாவங்கள்;
மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!" என்றனர்.

திவ்விய சரீரம் தந்தனர் குணநிதிக்கு;
திவ்விய விமானம் ஏறிச் சென்றான்!

குருஹத்தி, பிரம்மஹத்தி தோஷங்கள் அழிந்தன
அருகில் இருந்த ருத்திராக்ஷ மரத்தின் காற்றால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#6d. Banished to a forest!

When all these secrets became public, the people drove out GuNanidhi to a nearby forest. He was unruffled by being banished. He started looting the wayfarers and made it his mode of living.

One fine day his life ended and he fell dead in the forest near a tree. The Yama KinkarAs came to take him to the hell. The Siva GaNAs came to take him to Siva lokam.

There was an arguement between the two groups as to where GuNanidhi had to be taken now. The Siva GaNAs said,

"This man had died near a RudrAksha tree. The air from the tree has destroyed all the sins committed by this man. So he must go to Siva lokam. There is no second opinion in this matter!"

They gave GuNanidhi a beautiful form and a vimaanam came down to take him to Siva lokam. All the sins committed by GuNanidhi including the brahma hatthi and guru hatthi had been removed by the proximity of the RudrAksha tree when he died.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#39j. பால லீலைகள் (10)

“தாங்கள் விழைவது என்ன?’ என
“தாய் கோருவது மக்கள் நலனையே!


நாகர்கள் சிறை செய்துள்ள மகன்களை
வேகமாக விடுவிக்க வேண்டும் நீங்கள்!


எக்காலத்திலும் மாறாத பக்தி வேண்டும்;
முக்காலம் தொழும் பாக்கியம் வேண்டும்.”


திரும்பினார் வரங்களை அளித்துவிட்டு;
திவ்ய நாமம் ஆனது 'மயூரேஸ்வரர்' என்று.


நீராடச் சென்றார் குளத்துக்கு மயில் ஏறி;
நீராட வந்தாள் வாசுகிப் பாம்பின் குமாரி.


கவரப் பட்டாள் தெய்வீக காந்தியால்;
விவரங்களைக் கேட்டாள் விரும்பி வந்து.


“மயூரேஸ்வரர் என் பெயர், சிவன் மகன்” என
“மறுக்காமல் என் பூஜையை ஏற்க வேண்டும்!”


‘தருணம் நெருங்கி விட்டது அம் மூன்று
பறவை மகன்களை விடுதலை செய்திட!’


தடாகக் கரையில் நின்றனர் தோழர்கள்;
தான் சென்றார் நாகலோகம் அவளுடன்.


ஆசனம் அளித்துப் உபசாரம் செய்து;
பூசை செய்தபின் சென்றனர் சபைக்கு.


அலட்சியம் செய்தான் அவரை வாசுகி;
அவரிடம் பறி கொடுத்தான் ரத்தினத்தை!


மூர்ச்சித்தான் வாசுகி சக்தி குன்றியதால்!
மூலைக்கு ஒருவர் ஓடினர் அஞ்சியதால்!


விடுவித்தார் ஜடாயு, சம்பாதி, சேனனை!
நொடியில் அடக்கினார் எதிர்த்த வாசுகியை.


களைத்த வாசுகியை எடுத்துத் தன் விரல்
கணையாழியாக அணிந்தார் மயூரேசர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.



 
BHAARGAVA PURAANAM - PART 2

#39j. BAla leelA (10)

“Revered Mother! what is your wish?” GanEsha asked VinatA. She replied, “Just like all the other mothers in the world, I wish for the welfare of my sons. I pray to you to free my sons imprisoned by the wicked NAgAs. Please grant me constant bhakti towards you and the good fortune of worshiping you always”


GanEsha granted those boons and went back. Now his new name became MayoorEsar. One day, he went to the pond on his peacock, to take his bath. At the same time the daughter of the snake VAsuki also came there with her friends. She was attracted by the aura of GanEsha and asked about him.


GanEsha introduced himself as MayoorEsar – the son of Siva. The NAga kanya wanted to do pooja and arAdhanA to GanEsha. She invited him to go with her to her land of NAgAs. Ganesha left behind his friends on the bank of the pond and went with her.


She did puja to GanEsha and offered him her hospitality before taking him to her father VAsuki and his Durbar. VAsuki was very arrogant and ignored GanEsha. To get even with him, GanEsha plucked off the NAgaratnam from VAsuki. He fell faint since he had lost all his power stored in the gem. The whole durbar ran about in utter confusion. GanEsha released the three sons of VinatA namely JatAyu, SampAti and SEnan.


By then VAsuki woke up and came charging at GanEsha. GanEsha subdued him in a moment. He lifted VAsuki and wore him as an ornamental ring on one of his fingers.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#13b. முதல் நாள் யுத்தம் (2)

ஊதினர் தேவர் வெற்றிச் சங்கு இதைக் கண்டு;
ஏவினர் கொடிய பாணங்களை அமைச்சர்கள்.

ஏவினாள் சக்தி தேவி ஐந்து பாணங்களை;
ஏவினான் பாஷ்கலன் ஏழு பாணங்களை.

எறிந்தாள் தேவி பத்து வலிய பாணங்களை.
தெரித்தது வில்லை அர்த்த சந்திர பாணம்.

பாய்ந்தான் கதையை ஓங்கிய பாஷ்கலன்;
சாய்த்தாள் தேவி அவனைத் தன் கதையால்!

மூர்ச்சித்துக் கிடந்தான் முஹூர்த்த நேரம்;
முயன்றான் மீண்டும் தேவியைத் தாக்கிட.

குத்தினால் தேவி அவனைச் சூலாயுத்தால்.
கத்தினான்; பின்பு மாண்டான் மார்பு பிளந்து!

வெற்றி முழக்கம் செய்தது தேவர் சமூஹம்
சற்றும் தயங்கவில்லை அசுரன் துர்முகன்.

“நில் பெண்ணே நான் உள்ளேன் இன்னமும்!”
வில்லை வளைத்தான்; எய்தான் பாணங்கள்.

தூள் தூளாக்கினாள் தேவி பாணங்களால்;
தூள் பறந்தது தொடர்ந்த கடும் போரினால்!

பெருகி ஓடியது ஒரு ரத்த ஆறு அங்கே!
பெருக்கில் ஓடின வெட்டுண்ட தலைகள்!

பறந்தன வானில் கழுகுகள் வட்டமிட்டு;
நெருங்கின செந்நாய்கள் உடலை உண்ண!

உடைத்தாள் தேவி வில்லை ஒரு பாணத்தால்!
உடைத்தாள் தேவி தேரை ஐந்து பாணங்களால்!

தாக்கினான் துன்முகன் சிங்கத்தை கதையால்!
தாக்குதல் செய்யவில்லை எந்தத் தாக்கமும்!

அரிந்தாள் தேவி துன்முகன் சிரசை வாளால்;
எறிந்தாள் கொய்த தலையைத் தூக்கி விசிறி.

பொழிந்தது மலர் மாரி விண்ணிலிருந்து
எழுந்தது "ஜய ஜய" என்ற தேவர் கோஷம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#13b. The first day’s war (2)

The Devaas blew the conch of victory. The asura ministers became very angry and shot terrible arrows. Devi shot five arrows. Bashkalan shot seven arrows. Devi shot ten more arrows and broke his bow with a crescent moon shaped arrow.

Bashkalan pounced with his mace raised. Devi put him down with a blow from her own mace. He lay faint for one muhoortham. Then he came round and tried to attack Devi again. Devi attacked him with her soolaayudam. He fell down screaming with pain as his chest was split open.

The Devaa made a jaya jaya gosham. Durmukhan was ready to take over. He told her, “I am still here to fight with you!” He shot arrows on Devi. Devi shattered his arrows with her own. A terrifying war ensued between the asuraas and Devi.

A river of blood started flowing there! The severed heads of the asura floated in that river. Vultures circled in the sky to eat the dead and the wild dogs also moved in.

Devi broke Durmukhan’s bow with one arrow and chariot with five arrows. Durmukhan attacked Devi’s lion with his mace but the lion just ignored it. Devi caught hold of Durmukhan’s head, severed it with her sword and tossed it away.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#7a. ருத்திராக்ஷ வடிவங்கள்

உத்தம ருத்திராக்ஷம் நெல்லிக்காய் அளவு ,
மத்யம ருத்திராக்ஷம் இலந்தைக் கனி அளவு,

அதம ருத்திராக்ஷம் கடலையின் அளவு.என
ஆன்றோர் பாகுபாடு செய்துள்ளனர் மணிகளை.

வெண்மை நிற ருத்திராக்ஷம் உரியது வேதியருக்கு
செம்மை நிற ருத்திராக்ஷம் உரியது க்ஷத்திரியருக்கு

பொன் நிற ருத்திராக்ஷம் உரியது வைசியருக்கு
கருமை நிற ருத்திராக்ஷம் உரியது சூத்திரருக்கு

முள்ளுடைய மணிகள் உத்தமம் ஆனவை.
முள்ளில்லாத மணிகள் மத்தியமானவை;

இயற்கையில் துவாரம் உள்ளவை உத்தமம்;
செயற்கை துவாரம் உள்ளவை மத்தியமம்.

அணிய வேண்டும் சிகையில் ஒன்றே ஒன்று;
அணிய வேண்டும் சிரசில் முப்பத்து இரண்டு;

அணிய வேண்டும் கண்டத்தில் முப்பத்தாறு;
அணிய வேண்டும் மார்பில் ஐம்பத்து மணிகள்;

அணிய வேண்டும் ஒரு தோளில் பதினாறு;
அணிய வேண்டும் மணிக்கட்டில் பன்னிரண்டு;

அணிய வேண்டும் அரைப் பட்டிகையில் ஐம்பது;
அணிய வேண்டும் பூணூலில் நூற்றெட்டு மணிகள்.

அதமம் முப்பது மணிகள் அணிவது;
மத்யமம் ஐநூறு மணிகள் அணிவது;

உத்தமம் ஆயிரம் மணிகள் அணிவது;
எத்தனை அதிகமோ அத்தனை மேன்மை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#7a. The RudrAksha

The best RudrAksha is of the size of a gooseberry. The second best is of the size of a bear fruit and the third the size of a peanut.

The white RudrAksha is suitable for the Brahmins. The red colored ones are fit for the KshatriyAs. The gold colored ones are fit for Vaisyas and the black RudrAkshas are fit for the fourth VarNa.

The seeds with a thorny exterior are the best and those with a smoother surface are not so good. The seeds which have a bore in the middle naturally are good and those which have been bored by man are the second best.

Only one RudrAksha is worn on the hair, thirty two are worn on the head; thirty six are worn on the neck; fifty are worn on the chest; sixteen are worn on the shoulder; twelve are worn on the wrist; fifty are worn on the waist; one hundred and eight are worn as a poonool"

Wearing thirty RudrAkshAs is adamam, wearing five hundred RudrAkshas is madhyamam and wearing one thousand is utthamam.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#39k. பால லீலைகள் (11)

சினந்தான் ஆதிசேஷன் விவரங்களை அறிந்து;
கணமும் நினைக்கவில்லை இறைவன் என்று!


எதிர்த்தான் தன் நாகர்கள் படையுடன் வந்து;
உதித்தது மயூரம் கணேசர் நினைத்தவுடனே!


அதிர்ந்தன நாகங்கள் மயிலைக் கண்டவுடன்;
ஒளிந்தன ஓடிச்சென்று நான்கு திசைகளிலும்!


“விரட்டி விடுவாய் நாகர்களின் சேனையை!
விரட்டிப் பிடி விடாதே ஆதிசேஷனை!” என


பறந்தது மயில் தன் சிறகுகளை அசைத்து!
பயந்தன நாகங்கள் வீசிய பெருங்காற்றில்!


மூச்சு முட்டி அவர்கள் சிதறி ஓடிவிடப்
பேச்சின்றி நின்றான் ஆதிசேஷன் அங்கே!


ஆணவத்தை அடக்கி, அறிவைப் புகட்ட
அணிந்தார் மயூரேசர் தன் அரைநாணாக!

நாகலோகத்தில் இருந்து வெளிவந்தபின்,
நடந்தவற்றை அறிந்து சினம் கொண்டார்.


கொக்கு வடிவில் வந்த அசுரன் தன்னிடம்
சிக்கிய முனிகுமாரரை விழுங்கினானாம்!


அழித்து வீழ்த்தினார் மாயக் கொக்கை!
விழித்து எழுந்தனர் உயிருடன் சிறுவர்.


காட்டுப் பன்றியாக வந்தான் ஓரசுரன்!
காட்டெருமையாக வந்தான் ஓரசுரன்!


வந்தவர் திரும்பிச் செல்லவில்லை!
வந்த பாதை ஒருவழிப்பாதை ஆனது!


முனி புங்கவர்கள் கனிவுடன் வந்தனர்;
பணிந்து சென்றனர் கணேச குமாரனை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி





 
BHAARGAVA PURAANAM - PART 2

#39k. BAla leelA (11)

AadisEshan became violent when he heard of these happenings. He forgot that GanEsha was the God Supreme. He gathered his NAga sena and came for a battle with GanEsha.

GanEsha contemplated on his mayooram and it appeared there immediately. The snakes were terrified by the sight of the magnificent mayooram. They ran and tried to escape.
GanEsha commanded the peacock, “Chase off all those snakes. Do not spare AadisEshan.”


The peacock flew moving its powerful wings. The wind created was so strong that the snakes felt breathless. AadisEshan stood all alone there. GanEsha grabbed him, subdued him and wore him around his waist as an arainAN.


While GanEsha was visiting the land of NAgAs, an asuran had come there. He had assumed the form of a giant crane. He gobbled up all the little boys he could get hold of. MayoorEsar killed the crane. All the children gobbled up by him came out alive and safe.


Two asuras appeared as a wild boar and a wild buffalo. They too got killed by GanEsha. The path leading to GanEsha became an one way traffic. Whosoever came to him, never went back alive.

The rushis and sages knew the greatness of GanEsha. They would come and worship him frequently.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#14a. இரண்டாவது யுத்தம் (1)

‘மாண்டனர் மதி அமைச்சர்கள் யுத்தத்தில்!’
மூண்டது வெஞ்சினம் மஹிஷன் சித்தத்தில்!

“பெண் கையால் மண்டனர் இரு அமைச்சர்கள்;
பண்ணுங்கள் அடுத்துச் செய்ய வேண்டியதை!”

முன் வந்தான் சிக்ஷூ என்ற சாரதி – போர்க்களம்
முன் சென்றான் பெருத்த அசுர சேனையுடன்.

முழக்கமிட்டாள் தேவி சங்கினை ஊதி – மேலும்
முழங்க விட்டாள் நாண் ஒலியுடன் கர்ஜனையை

ஓடினர் பின் வாங்கி அசுரப் படை வீரர்கள்;
“ஓடாதீர்கள்! ஓடாதீர்கள்!” தடுத்தான் சிக்ஷூ.

“சங்கம், கண்டாமணி, கர்ஜனைகளைக் கேட்டு
இங்கிருந்து ஓடிவிடுவேன் என்று எண்ணாதே!

எங்கனம் எய்வேன் பாணம் உன் மீது?
தங்க விக்கிரகம் போன்ற பெண்ணே !

கட்டழகியே ஏன் விரும்புகிறாய் போரினை?
வெட்டப் பட்டு வீழ்ந்து மரணமடையவா?

‘அடைவர் வீர சுவர்க்கம் போர்வீரர்கள்!’
இடைவிடாது பரவும் கட்டுக் கதை இது ”

கூறினான் அரக்கன் சிக்ஷூ தேவியிடம்,
கூறினாள் தேவி அரக்கன் சிக்ஷூவிடம்.

“யுத்தத்தில் வென்ற பிறகே திரும்புவேன் நான்
யுத்த பூமியை மஹிஷன் ரத்தத்தால் சேறாக்கி!

நாட்டுவேன் வெற்றித் தூணை அந்தச் சேற்றில்;
நாட்டுவேன் இந்திரன் ஆட்சியைச் சுவர்க்கத்தில்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#14a. The second day’s war (1)

When Mahishan was informed of the death of the two ministers, he flew into a fit of rage. He sent a talented charioteer Sikshoo to the war front with a huge asura sena.

Devi blew her conch on seeing the asura army. She roared and the twang of her bow merged with it spreading fear in the hearts of the asura warriors. They started running in all possible directions. Sikshoo stopped them from running away.

He told Devi, “Don’t dream that I will scream and run away from here on hearing your conch, roar and the twang of your bow. But how can I shoot my arrows on you when you look like an idol made of pure gold?

Why do want a war? Do you want to get killed? That the brave warriors reach Swarggam is pure nonsense repeated over and over since long.”

Devi replied to him, “I shall go away only after killing Mahishan and shedding his blood on this ground to create a bloody muddy slush and plant my jaya sthambam on it. I will put Indra back on his throne in Swarggam.”


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#7b. ருத்திராக்ஷ மந்திரங்கள்

ஓத வேண்டும் ஈசான மந்திரத்தை
சிரசில் ருத்திராக்ஷம் அணியும் போது;

ஓத வேண்டும் தத் புருஷ மந்திரத்தை
காதில் ருத்திராக்ஷம் அணியும் போது;

ஓத வேண்டும் அகோர மந்திரத்தை
நெற்றியில், இதயத்தில் அணிகையில்;.

ஓத வேண்டும் வாம தேவ மந்திரத்தை
வயிற்றில் இம்மணிகளை அணிகையில் .

ஓத வேண்டும் அங்க மந்திரங்களை முறையே
அங்கங்களில் ருத்திராக்ஷம் அணியும் போது

கோர்க்க வேண்டும் ருத்திராக்ஷங்களை
மூல மந்திரத்தை ஜபித்த வண்ணம்.

நீக்க வேண்டும் ருத்திராக்ஷம் அணிந்த ஒருவன்
மீன், இறைச்சி, வெங்காயம், பூண்டு, முருங்கையை.

அணிய வேண்டும் ருத்திராக்ஷத்தை
கிரஹணம், அமாவாசை, பௌர்ணமி,

உத்தராயணம், தக்ஷிணாயனம் மற்றும்
விஷு சங்கிரமண காலங்களில் தவறாமல்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#7b. The mantrAs

EesAna mantra must be uttered while wearing the RudrAksha on the head.Tatpurusha mantra must be uttered while wearing the RudrAksham in the ears.

Aghora mantra must be uttered while wearing RudrAksha in the forehead and the chest. VAmadEva mantra must be uttered while wearing RudrAksha on the waist.

Anga mantras must be uttered while wearing RudrAksha in the various angas. The RudrAksha must by strung while uttering the moola mantra of the god to be worshiped.

One who wears RudrAksha must not eat fish, meat, onion, garlic and drumsticks.

The RudrAksha must be worn during eclipses, on the New moon day, the Full moon day and the Vishu SangramaNa times as well as the UttarAyanam and DakshiNAyanam.
 
BHAARGAVA PURANAM - PART 2

#39l. பால லீலைகள் (12)

புலியாக மாறி வந்தான் ஓரசுரன்;
கிலியால் நடுங்கினர் வனவாசிகள்.


அடித்துக் கொன்றது புலி அவர்களை;
அழிக்கச் சென்றது கணேசரின் பாசம்.


அழித்து விட்டது புலியாகிய அசுரனை;
இழுத்து வந்தது யமனைக் கணேசரிடம்.


“அடியேன் செய்த தவறு என்ன சுவாமி?
பிடித்து வந்தது பாசம் என்னை இங்கே!”


“பறித்தாய் ஆசிரம வாசிகளின் உயிரை;
பாசம் இழுத்து வந்தது அதனால் தான்.


“இழைக்கவில்லையே நான் அபசாரம்;
அளிக்கப்பட்ட தொழிலைச் செய்கிறேன்.


வாழ்நாள் முடிந்தவர்களை மட்டுமே,
வீழ்த்துவேன் எனக்கிட்ட ஆணைப்படி.


பிழை செய்திருந்தால் அறியாமையால்
பிழை பொறுத்து மன்னியுங்கள் சுவாமி!


“நெருங்கக் கூடாது என் பக்தர்களிடம்!
மறந்து விடாதே இதை இனியென்றுமே!


புலியால் கொல்லப் பட்டவர்கள் மீண்டும்
புவிமேல் வரவேண்டும் உயிருடன் மீண்டு.”


விட்டால் போதும் என்று ஓடி, உயிரோடு
விட்டு விட்டான் வனவாசிகளை யமன்.


கணேசரைக் கொல்ல வந்த அசுரன் -
தன்
காது, மூக்கு அறுபட்டுச் சென்றான்.


சிந்துராஜனிடம் சென்று சொன்னான் - தான்
சந்தித்த இன்னல்களை வெகு விவரமாக!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
BHAARGAVA PURAANAM - PART 2

#39l. BAla leelA (12)

An asuran came changed into a tiger. The people living in the forest were terrorized. The tiger killed many of them. GanEsha released his pAsam on the tiger. It killed the tiger and went on to tie and drag Yama to GanEsha.


“What is the crime I have committed of oh lord?” Yama asked GanEsha. “Why has your pAsam dragged me here?”


“You killed the people living in this Ashram. That is why you have been dragged here by my pAsam” GanEsha replied to Yama.


“I have not committed any crime oh lord! I just did my duty and killed those whose life span had expired. If in performing my duty, I have committed any mistake, please forgive me.”


“Never go near my devotees. Always remember this in the future. All those who were killed by the tiger must be sent back here alive immediately!”


Yama agreed to this and hurried back to his world. He sent back alive all those people who got killed by the tiger.


Another asuran came to kill GanEsha. He barely escaped with his life but his ears and nose got chopped off. He returned to Sindhu Raajan alive and elaborated all his sufferings.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#14b. இரண்டாவது யுத்தம் (2)

மேக மழையைப் போலப் பெய்தான் சிக்ஷூ
வேகமான சர மழையினைத் தேவியின் மீது.

தடுத்தாள் தேவி அவற்றைத் தன் பாணங்களால்;
தொடுத்தாள் தேர்க்கொடியை முறிக்க ஒரு பாணம்.

மயங்கினான் சிக்ஷூ தேவியின் கதாயுதத்துக்கு.
தயங்காமல் தாக்கினான் உடன் வந்த தாம்பரன்.

எழுந்தவுடன் எய்தான் சிக்ஷூ பாணங்களை;
எதிர்த்தனர் தேவியை இருவரும் ஒன்றாக.

பொழிந்தாள் தேவியும் சரமழை ஒன்றை!
கிழிந்தன கவசங்கள்; பொழிந்தது உதிரம்!

விளங்கியது அசுரர்களில் உடலில் உதிரம்
அழகிய கல்யாண முருங்கையைப் போல்!

அடித்தான் சிங்கத்தை அசுரன் தாம்பரன்
அடர்ந்த, கனத்த இரும்பு உலக்கையால்!

நகைத்தான் இடி போன்று உடல் குலுங்க.
தகைத்தாள் சிரத்தை நொடியில் வாளால்!

கூத்தாடியது சிரமற்ற உடல் சிறிது நேரம்.
யுத்த பூமியில்
பின்பு தள்ளாடி விழுந்தது.

பாய்ந்தான் சிக்ஷூ தன் வாளை ஏந்தியபடி!
மாய்த்தாள் தேவி அவனைப் பாணங்களால்.

மிரண்டு ஓடலானது அசுரர்களின் படை.
திரண்டு கிடந்தன அசுரர்களின் உடல்கள்.

முழங்கினர் வெற்றிச் சங்கை தேவர்கள்!
வணங்கினர் வீர வெற்றிச் செல்வியை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#14b. The second day’s war

Sikshoo shot arrows on Devi as a cloud rains water droplets. Devi broke them with her own rain of arrows. She broke the flag on his chariot and beat him with her mace. Sikshoo fainted and Taambran took over and started attacking Devi.

Sikshoo came round soon and they both attacked Devi with their weapons. Devi rained arrows on them and tore open their body armors. Their wounds bled profusely on the bodies of the dark hued asuraas and made them resemble the Kaluyana murungi trees.

Taambran attacked Devi’s lion with a dense, heavy iron pestle and laughed like thunder claps. Devi cut off his head in a moment. The decapitated body danced for a short while before dropping dead in the battle field.

Sikshoo lifted his sword and charged on Devi. She shot five arrows and killed him. The asura army started running in utter confusion. The bodies of the asuras killed in the war lay heaped. The Deva blew their conches of victory and paid obeisance to Devi – their protector.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#7c. ருத்திராக்ஷ ஸ்வரூபங்கள்

ஒரு முக மணி பரமாத்மாவின் ஸ்வரூபம்;
இரு முக மணி அர்த்த நாரீஸ்வர ஸ்வரூபம்;

மூன்று முக மணி அக்னியின் ஸ்வரூபம்;
நான்கு முக மணி பிரம்மனின் ஸ்வரூபம்;

ஐந்து முக மணி பஞ்ச பிரம்ம ஸ்வரூபம்;
ஆறு முக மணி ஆறுமுகனின் ஸ்வரூபம்;

ஏழு முக மணி சூரியனின் ஸ்வரூபம்;
எட்டு முக மணி அஷ்டவசு ஸ்வரூபம்;

ஒன்பது முக மணி யமனின் ஸ்வரூபம்;
பத்து முக மணி திக்தேவதை ஸ்வரூபம்;

பதினோரு முக மணி ஏகாதச ருத்ர ஸ்வரூபம்;
இதையே இந்திரனின் ஸ்வரூபம் என்பர் சிலர்;

பன்னிரண்டு முக மணி ஆதித்யரின் ஸ்வரூபம்;
இதையே விஷ்ணுவின் ஸ்வரூபம் என்பர் சிலர்;

பதிமூன்று முக மணி மன்மதனின் ஸ்வரூபம்;
பதினான்கு முக மணி ருத்ர மூர்த்தி ஸ்வரூபம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#7c. The swaroopam

The RudrAksha with a single face is the swaroopam of ParamAtma. The RudrAksha with two faces is the Aardha NAreeswara swaroopam.

The RudrAksha with three faces is the Agni Swaroopam; The RudrAksha with four faces is Brahma swaroopam. TheRudrAksha with five faces is the PanchaBrahma swaroopam.

The RudrAksha with six faces is the Shanmukha swaroopam. Some people say it is Ganesha swaroopam.The RudrAksha with seven faces is the swaroopamof The Sun.

The RudrAksha with eight faces is he swaroopam of Ashta Vasu. The RudrAksha with nine faces is the swaroopam of Yama Dharma. The RudrAksha with ten faces is the swaroopam of Dik DevatAs.

A RudrAksha with eleven faces is the swaroopam of EkAdasa Rudra. Some people say that this is the swaroopam of Indra.

The RudrAksha with twelve faces is the swaroopam of the DWAdasa Adithya. Some say it is the swaroopam of VishNu.

A RudrAksha with thirteen faces is the swaroopam of Manmatha and one with fourteen faces is the swaroopam of Rudramoorti himself.


 
BHAARGAVA PURAANAM - PART 2

#39m. கனலாசுரன் (13)

சபையில் இருந்தவர்கள் கேட்டனர்
சபைக்கு வந்த அசுரன் குறைகளை.


“ஒருவராலும் கொல்ல முடியவில்லை;
ஒருவரையும் விட்டு வைக்கவில்லை.


மாயவிக் குழந்தை தான் கணேசன்;
மாய்க்கும் வழியும் தெரியவில்லை.”


நொந்து போயிருந்த சிந்து ராஜனை
நோகடித்தன இந்த வார்த்தைகள்!


“அழித்திருக்க வேண்டும் பிறந்த அன்றே!
அழித்திருக்க வேண்டும் நானே சென்று! ”


“கனலாசுரன் இருக்கையில் கவலை ஏன்?
கனலை ஒத்த பராக்கிரமம் கொண்டவன்.


வரம் பெற்றவன், மரணம் இல்லாதவன்,
வீரம் நிறைந்தவன், வெற்றிகொள்பவன்!”


கவலைகளை மறந்தான் சிந்துராஜன்;
கட்டித் தழுவினான் கனலாசுரனை.


அசுர வீரர்கள் படை நடந்தனர் உடனே;
ஆசிரமவாசிகள் மீது ஆரவாரத்துடன்.


துதித்தனர் அனைவரும் பரமசிவனை;
அளித்தார் சூலயுதத்தைக் கணேசனுக்கு.


நினைத்த மாத்திரத்தில் தோற்றுவித்தார்
சேனைகள் நால்வகையினரை கணேசன்!


கையில் பரசு, பாச, அங்குசத்துடன் அவர்
மயில் மீது ஆரோஹணித்துச் சென்றார்.


தொடங்கி நடந்தது கடுமையான போர்.
தொடங்கினர் அசுரர் மாயப் போரினை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
BHAARGAVA PURAANAM - PART 2

#39m. BAla leelA (13)

All the asuras gathered in the durbar listened to the tale of woes related by the asuran – who managed to come back alive.


“No one could kill GanEsha, but he manages to kill everyone sent by us. He is a tricky child no doubt. None of us can figure out a fruitful plan to do away with him”


Sindhu RAjan was already gloomy and this made him gloomier and sadder. He spoke to himself aloud, ‘ I must have killed him the day he was born. I must have gone by myself to do it!’


One of his ministers spoke to him, “Why do you worry oh king? We still have KanalAsuran among us. He has as much power as the burning fire. He has received several boons. He has no death. He is valorous and he has never been defeated by anyone.”


Sindhu RAjan became happy on heaing these words. He hugged KanalAsuran. The army of asura started walking towards the Ashram where GanEsha lived, almost immediately.


Those who lived in the Ashram took refuge in lord Siva. He gave GanEsha his SoolAyudham and blessed him. GanEsha created a huge chaturanga sena just by his sankalpam. He sat on his peacock with his parasu, pAsam and ankusam and went to the battle field.


A terrible war followed and the asurAs started doing war by trickery and treachery.
 
5#15a. மூன்றாவது யுத்தம் (1)

மடிந்து போயினர் சிக்ஷூவும், தாம்பரனும் – மனம்
ஒடிந்து போனான் மஹிஷன் இதை அறிந்தவுடன்!

சிதறி ஓடிவிட்டது அசுரர் படை என்று அறிந்ததும்
பதறிப் போனான் மஹிஷன் இந்தச் செய்தியினால்.

வைரக் கவசம் அணிந்த இரு அசுர வீரர்கள்
வைரியை வெல்லச் சென்றனர் போர்க்களம்.

வந்து சேர்ந்தனர் அசிலோமன், பிடாலன்
சிவந்த யுத்த பூமிக்கு அசுரர் படையுடன்.

விளங்கினாள் தேவி சிம்ஹ வாஹனத்தில்;
வியந்தனர் தேவியின் பேரெழிலைக் கண்டு.

வினயமாகப் பேசினான் அசிலோமன்,
வியப்பூட்டிய வீர மங்கை தேவியிடம்.

“இழைக்கவில்லை உனக்குத் துரோகம் நாங்கள்;
பிழை என்ன செய்தோம் கூறுவாய் பெண்ணே!

எங்கிருந்து வந்தாய் நீ? எதற்கு வந்துள்ளாய்?
என் அசுரர்களைக் கொன்று குவிக்கின்றாய்?”

தேவி சிரித்தாள் இவ்வினாக்களைக் கேட்டு
தேவி பதில் கூறினாள் அசிலோமனுக்கு.

“வந்தது ஏன் என்று கேட்டாய் என்னிடம்!
வந்தவள் அல்ல நான் எங்கிருந்தோ இங்கு!

செல்பவள் அல்ல நான் இங்கிருந்து எங்கும்!
செல்லவேண்டிய தேவை இல்லை எனக்கு!

எங்கும் எப்போதும் இருப்பவள் நான் – கேள்
எத்தன்மையவள் என்று உரைக்கின்றேன் !’

நீதி, அநீதிகளை ஆராயும் நடுநிலை சாக்ஷி;
நீ கூறும் மன மாசுகள் கொண்டவள் அல்ல!

வேண்டுதல் வேண்டாமை இல்லாதவள்!
வெளிப்படுவேன் அறப் பொருளாக எங்கும்.

காக்க விரும்புவேன் சாது ஜனங்களை!
தாக்கி அழிப்பேன் துன்பம் தருபவர்களை.

சிஷ்ட பரிபாலனம், துஷ்டநிக்ரஹம் செய்யும்
சிறந்தவர் அனைவரும் என் அவதாரங்களே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 

Latest posts

Latest ads

Back
Top