• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

devi bhaagavatam - skanda 11

11#11. மூன்று வகை பஸ்மம்

சாந்திகம்

பசுவின் குறியிலிருந்தே கோமியத்தை எடுத்து
பஸ்மம் ஆக்கித் தயாரித்தது சாந்திக பஸ்மம்.

பௌஷ்டிகம்

பசுவின் குறியிலிருந்து தரையில் விழுமுன்
பஸ்மம் ஆக்கித் தயாரித்தது பௌஷ்டிகம்

காமதம்

தரையில் விஷுந்த கோமியத்தை எடுத்து
பஸ்மம் ஆக்கித் தயாரித்தது காமத பஸ்மம்

மூன்று கீற்றுகளின் தாத்பர்யம்

கீழ்க் கீற்று குறிக்கும் பிரமதேவனை;
நடுக் கீற்று குறிக்கும் விஷ்ணுவை;

மேல் கீற்றுக் குறிக்கும் மஹேஸ்வரனை;
ஒற்றைக் கீற்று குறிக்கும் சர்வேஸ்வரனை.

அந்தணர் தரிக்க வேண்டும் மந்திரத்துடன்;
மற்றவர் தரிக்க வேண்டும் நீரில் குழைத்து.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#11. The three types of Bhasma

ShAntika Bhasma is obtained by burning the cow dung collected form the cow itself - just as it leaves the body of the cow.

Poushtika Bhasma is obtained by burning the cow dung which has left the body of the cow but has not fallen down of the ground.

KAmada Bhasma is obtained by burning the cow dung which has fallen on the ground.

The significance of the three lines of the Vibhooti.

The bottom line signifies BrahmA, the middle line VishNu and the top line MahEswara.

A single line signifies the SarwEswara. Brahmins must utter mantras while smearing the Vibhooti. The others must wear is mixed with water.
 
BHAARAGAVA PURAANAM - PART 2 #39s. யுத்தம்

சிந்து ராஜன் எய்தான் விரைவாகச் சரமழையை!
சிந்துவின் பாணங்களைச் சிதறடித்தார் கணேசர்.

சூரிய அஸ்திரத்தை ஏவினான் சிந்து ராஜன்
சூலாயுதம் விழுங்கியது சூரிய அஸ்திரத்தை

வீழ்த்தியது சிந்துவினின் கிரீடத்தைச் சூலம்.
வீழ்ந்தன இரு செவிகளும் கூடவே அறுபட்டு.

மறைந்து போனான் சிந்து ராஜன் அங்கிருந்து;
மறுபடியும் ஓடினர் படைவீரர்கள் தாறுமாறாக.

துவண்டான் சிந்து தன் முதல் தோல்வியால்
துவண்டாள் அவன் மனைவி அவனைக் கண்டு!

மைத்துனர்கள் வந்தனர் சிந்துராஜனிடம்
யுத்தகளம் சென்றனர் படையினை நடத்தி

காய்ந்தனர் போரில் கலன், விகலன் இருவரும்.
மாய்ந்தனர் போரில் கலன், விகலன் இருவரும்!

தன்மன், அதன்மன் சிந்துவின் மகன்கள்
நன்கு போரிட்டு மடிந்தனர் இருவரும்.

வந்தான் போருக்கு வருந்தியயபடி சிந்து
நொந்தான் தன் பாணங்கள் வீணானதால்.

அழித்து விட்டார் சுப்பிரமணியர் எளிதாக;
அழிப்பதற்கு சிந்துராஜன் எய்த சரங்களை.

கண்டார் நாரதர் இந்த நாடகப் போரினை
விண்டார் “விளையாடியது போதும்!” என.

அனுப்பினர் பிருங்கியை சிந்துராஜனிடம்
அனுமதி இன்றி நுழைந்தான் மாளிகையில்.

காவலரை மாய்த்தான் பிருங்கி மேலும்
கேவலம் செய்தான் சிந்துவின் ராணிக்கு.

சிந்துவின் மனைவியை இழுத்து வந்தான்.
சிகையை அறுத்து அவன் முன் எறிந்தான்.

சினந்த சிந்து ராஜன் எய்தான் சரங்களை.
அனைத்தும் சற்றும் பயனற்றுப் போயின

சிதைத்தான் அந்தச் சரங்களை பிருங்கி ;
உதைத்தான் சிந்துவைக் காலால் பிருங்கி.

மூர்ச்சித்து விழுந்துவிட்டான் சிந்து ராஜன்
ஆர்வத்துடன் கணேசரிடம் சென்றான் பிருங்கி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
BHAARGAVA PURAANAM - PART 2

#39s. The War

Sindhu RAjan showered a rain of arrows. GanEsha dispersed them easily. Sindhu RAjan shot his Soorya ashtram now. GanEsha’s soolAyudam destroyed the Soorya asthram and proceeded to dislodge the crown and severe the ears of Sindhu Raajan. He suddenly disappeared from the battle field. The army ran in confusion since there was no one to lead it.


Sindhu RAjan had tasted his first ever defeat in life and he did not relish it. His wife got upset seeing him so upset. Sindhu RAjan’s brothers in law came for his help. Kalan and Vikalan lead the army and fought valiantly but got killed in the war.


Danman and Adanman were the two sons of Sindhu RAjan. They too fought valiantly only to get killed in the war. Now Sindhu RAjan himself came to the battle field with a heart loaded down with sorrow.

All the destructive asthrams shot by him were playfully destroyed by SubramaNyan. NArada got tired of this mock fight. He told Ganesha, “Enough of this mock fight”.


Brungi was sent to Sindhu RAjan by GanEsha. Brungi entered the palace and killed the guards on duty. He dragged Sindhu’s wife, cut off her hair and threw it in front on him.


Sindhu became very angry and shot his arrows on Brungi – who destroyed them easily and kicked Sindhu so hard that he fainted and fell down. Brungi returned to GanEsha, happy with what he had done.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#16c. மஹிஷனின் பதில்

“தரும் ஆனந்தம் உன்னுடன் யுத்தம் புரிவது;
வெறும் பேச்சல்ல, வென்றுள்ளேன் அமரரை!


சிறு பெண் உன்னோடு எதற்காகச் சண்டை?
அறிவுரைகள் கூறுவதற்கு எனக்கும் தெரியும்!


எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்று விடு;
என்னிடம் இருந்து தப்புவதற்கு அது ஒரே வழி.


என்ன கீர்த்தி வரும் உன்னைக் கொல்வதால்?
என்னை வந்து பற்றும் ஸ்த்ரீ ஹத்தி தோஷம்.


பாவம் தரும் சிசு, ஸ்திரீ, பிரம்ம ஹத்திகள்
பாவங்களைத் தொலைப்பது எளிடாக இராது.


எடுத்துச் செல்ல முடியும் உன்னை மஞ்சத்துக்கு
கெடுத்துச் சுவைக்க முடியாது சுக போகங்கள்


மனம் ஒத்த இருவர் கலந்தால் விளையும்
மன்மதன் ரதி தேவி போன்ற காம சம்போகம்.


அழகு இருக்கிறது, ஆனால் அறிவில்லை!
அழகில் உனக்கு பொருத்தமானவன் நான்!


கை விடு உன் முரட்டுப் பிடிவாதத்தை;
கை கொடு அன்போடு நேசக்கரம் நீட்டு!


அலைமகள் சுகிக்கின்றாள் மாலோடு;
கலைமகள் சுகிக்கின்றாள் பிரமனோடு;


மலை மகள் சுகிக்கின்றாள் சிவனோடு;
இளம் கன்னி நீ சுகிப்பதில் என்ன தவறு?

துணையாக வந்த வாலிப அழகனை விட்டு,
துயருற்றாள் மந்தோதரி துஷ்டனை மணந்து!

உன் தலைவிதியும் அது போல இருந்தால்
என் பேச்சு இத்தனையும் உன்மேல் வீணாச்சு!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷிரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#16c. Mahishan’s reply

Mahishan replied to Devi, “I will enjoy fighting with you. I have conquered the Devaas and I am nor simply boasting! I too can give advice to you. Go back now to where you have come from. That is the only way to escape from me!


What do I stand to gain by killing you – except that I will be haunted by Brahmahaththi dosham for the rest of my life. Killing infants, women and brahmins are great sins and cannot be washed away easily.


I can carry you to my bed directly and ravish you. But violence and force will not yield pure pleasure. Only when two people indulge with mutual consent and love, pure bliss can be experienced.


You are beautiful but you have no brain. I am the one best suited for your rare beauty. Give up being adamant and extend to me your friendship and love!


Lakshmi enjoys pleasures with Vishnu, Saraswati with Brahma and Uma with Shiva. What is wrong if you indulge with me for your pleasure?

Mandothari was foolish, since she chose a wicked fellow as her husband, instead of the good fellow who loved her dearly. If you are destined to suffer a similar fate, all my letcures will be a total waste!”
 
devi bhaagavatam - skanda 11

11#12. திரு நீற்றின் பெருமை

பாதுகாக்க வேண்டும் இதைப் பொன் போலவே!
பயணத்தின் போது கொண்டு செல்லவேண்டும்.

வைக்கக் கூடாது அசுத்தமான இடங்களில்;
கொடுக்கக் கூடாது அதர்மிகளின் கைகளில்.

தாண்டக் கூடாது இதை; வீசி எறியக் கூடாது;
தரிக்க வேண்டும் பக்தியுடன் தினந்தோறும்!

சமம் திருநீறு அணியாத ஒருவன் விலங்குக்கு!
சமம் திருநீறு அணியாத உடல் மயானத்துக்கு!

திருநீறு இல்லாத ஒரு நெற்றி பாழ்!
சிவன் கோவில் இல்லாத கிராமம் பாழ்!

சிவார்ச்சனை இல்லாத பிறவி பாழ்!
சிவ சிந்தனை இல்லாத வித்தை பாழ்!

விபூதி இல்லாத அர்ச்சனையும் வீண்!
விபூதி இல்லாமல் இல்லை முக்தி!

யாகம், ஹோமம், விரதம், உபவாசம் வீண் !
யாத்திரை, சௌசம், ஜபமும், தவமும் வீண் !

திருநீறு அணியாமல் செய்கின்றவை வீணே!
திருநீறு அணிபவன் பெறுவான் சிவ பாவனை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#12. The greatness of Vibhooti

Vibhooti must be treated with the same respect as the Gold dust. One must carry it along with him while travelling. The container should not be kept in dirty or unholy places nor given in the hands of the wicked people.

One should not cross across the Vibhooti nor waste it by throwing it away. Vibhooti must be worn with great care and devotion, every single day.

One who is not adorned by Vibhooti is no better than an animal. His body is no better than an inauspicious burial ground.

A forehead not adorned by Vibhooti is a waste. A village which does not have a Shiva temple is a waste. A life devoid of Siva archana is a waste.

Any art not glorifying Siva is a waste. Any pooja done without Vibhooti is a waste. There is no liberation for one who does not use Vibhooti.

All the KarmAs like YAga, YagnA, DAnam, Tapas, Japam, Vtratam, Fasting and visiting the holy places will go in waste - if the person performs these without wearing the auspicious and holy Vibhooti.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#39t.
சிந்துவின் சிந்தாகுலம்

‘அழிக்கப் பிறந்துள்ளான் கணேசன் என்றறிந்ததும்
அழித்திருக்க வேண்டும் அவனை நானே சென்று!

தும்பை விட்டு வாலைப் பிடித்தவன் போல நானும்
வம்பை வளர்த்துக் கொண்டு வருந்துவதால் பயன்?

போரில் மாண்டனர் என் படைத் தலைவர்கள்!
மேலும் மறைந்தனர் என் இரண்டு வீர மகன்கள்!

சாதாரண வீரன் என்னைத் தாக்கிச் செல்கிறான்!
அசாதாரண நிகழ்வுகள் என் அழிவின் அறிகுறி.

சிறை விடுத்தால் வாழலாம் குறைவின்றி!
தரை தட்டிவிடும் வளர்த்து வைத்த நற்பெயர்

வெற்றி அல்லது வீர மரணம் உறுதியானது!’
சற்றும் தயங்காமல் சென்றான் போர்க்களம்.

‘என்னை அழிக்கப் பிறந்த சிறுவனுடன்
இன்று போர் புரியப் விரும்புகிறேன் நான்!

நானா? அவனா?முடிவாகி விடும் இன்று!”
நகைக்கும் முகத்தோடு கணேசர் அங்கு!

எய்தான் தன்னோடு பிறந்த சக்கரத்தை;
“கொய்வாய் சிறுவனின் தலையை!” என,

தீப் பொறி பறக்க வந்தது சக்கரம் – அதன்
தீட்சண்யம் குறைந்தது அருகில் வந்ததும்.

வலம் வந்தது கணேசரை மும்முறை;
நலம் தரும் பாதங்களை நமஸ்கரித்தது.

எய்தான் சூலத்தைச் சிந்துராஜன் உடனே.
எய்தான் பரசுவை பதிலுக்கு கணேசன்.

தோன்றினர் அசுரர்கள் சூலத்திலிருந்து!
தோன்றினர் பூதர்கள் பரசுவிலிருந்து!

பொருதனர் தோன்றிய அசுரரும் பூதரும்!
பெரிய அளவில் தொடர்ந்தது யுத்தம்.

அஸ்திரங்கள் அழித்தன அஸ்திரங்களை;
விஸ்தாரமான யுத்தம் நடந்த பிறகு,

விடுத்தார் சூலாயுதத்தை எடுத்து கணேசர்
விழுந்தான் சிந்து ராஜன் மார்பு பிளந்ததால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
BHAARGAVA PURAANAM - PART 2

#39t. The end of Sindhu RAjan

Sindhu RAjan was not happy with himself and what he had done. “I should have gone and destroyed GanEsha myself – when I learned that he was born to destroy me. I let the opportunity go by and now he has become too powerful to be destroyed.

I lost my valiant generals in the war. I lost my two valorous sons in the war. An ordinary soldier attacked me and escaped unhurt. Do all these point towards my end? If I release the DEvA from my prison, I may live live long but what will happen to me name and fame?


They will be drawn in the mud for ever and ever. I am sure to win the war or reach the veera swargga. Today I will fight with GanEsha who is born to kill me. Either he will live or I will live. Let me get this over today itself”


He went to the battle field. He threw the chakrAyudam which was born along with him and gave the order to the weapon ” Cut off the head of that boy GanEsha”


The chakram sped towards GanEsha, spitting sparks of fire, but as it neared him, it slowed down and the sparks disappeared. It went round GanEsha thrice and did namaskAr at is feet.


Sindhu RAjan threw at Ganesha his soolAyudam. GanEsha released his parasu. An army of asuras emerged from the soolAyudam. An army of BoothAs appeared from the parasu. They fought among themselves a long and hard battle.

Finally GanEsha threw his soolAyudam at Sindhu RAjan and he felt dead with his chest torn open by the weapon.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#17a. மந்தோதரி (1)

“யார் மந்தோதரி? யார் கைவிட்ட நாயகன்?
யார் மணந்த நாயகன்? ஏன் துயருற்றாள்?”


தேவி கேட்டாள் மஹிஷனிடம் கேள்விகள்;
தேவிக்குக் கூறினான் மஹிஷன் இவற்றை.


“உண்டு சிம்மள தேசம் என்ற ஒரு நாடு;
உண்டு அதில் வளமையும், பசுமையும்!


ஆண்டு வந்தான் மன்னன் சந்திரசேனன்;
ஆண்டு வந்தான் நீதிநெறிகள் தவறாமல்.


சகல கலா நிபுணன் அவன் சத்திய சீலன்,
சாந்தன்; சாந்தவதி
அவன் மனைவி குணவதி.

கொண்டிருந்தாள் நல்ல அங்க லக்ஷணங்கள்;
கொண்டிருந்தாள் இல்லறத்தின் நற்பண்புகள்.


தொழுது வந்தாள் கணவனைத் தெய்வமாக;
வாழ்ந்து வந்தாள் ஒழுக்கத்தில் சிறந்தவளாக.


மந்தோதரி என்ற பெயர் கொண்ட மூத்த
மகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர்.


நாளொரு மேனி; பொழுதொரு வண்ணம்
நன்றாக வளர்ந்து விட்டாள் மந்தோதரி.


திருமணம் புரிய வரன் தேடினான் மன்னன்
குருவான புரோகிதர் சொன்னார் அவனிடம்,


“மந்தர தேசத்தின் மன்னன் சுதன்மன்;
சுந்தரமான கம்புக்ரீவன் அவன் மகன்.

ஏற்றவன் அவன் அறிவிலும், அழகிலும் நீ
பெற்ற மகள் இளவரசி மந்தோதரிக்கு!” என,


சொன்னான் சந்திரசேனன் குணவதியிடம்
சொன்னாள் குணவதி மந்தோதரியிடம்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#17a. Mandothari (1)

Devi asked Mahishan, “Who was Mandothari? Who was the man she rejected? Who was the man she married? Why and how did she suffer?”

Mahishan replied to Devi,” There was a kingdom called SimmaLam and it was ruled by king Chandrasenan. He was good king and ruled his kingdom justly. He had a good-natured wife called Gunavathi. Mandothari was their eldest daughter whom they brought up lovingly.

When Mandothari reached marriageable age the King was looking for a suitable prince for her. Kulaguru advised Chandrasenan that Kambugreevan the son of Sudanman, the king of Mandiradesam was the most suitable prince to marry Mandothari.

The king became very happy and told the news to his wife Gunavathi and she conveyed it to Mandothari.
 
devi bhaagavatam - skanda 11

11#13. திருநீற்றின் பெருமை

தரும் மெய் ஞானத்தைச் சந்நியாசிக்கு;
தரும் விரக்தியை வானப்பிரஸ்தனுக்கு;

தரும் வேதாந்த தியான சித்தியை பிரம்மசாரிக்கு;
கிருஹஸ்தனுக்கு இல்லற தர்ம அபிவிருத்தியை!

தரும் புண்ணியப் பேற்றினைச் சூத்திரனுக்கு
தரும் மனிதனுக்கு விடுதலை பாவத்திலிருந்து.

முக்தி மங்கையை வசீகரிப்பவை இவை நான்கு;
விபூதி, சிவலிங்கம், பஞ்சாக்ஷரம், ருத்திராக்ஷம்.

சிவன் உண்பது ஆகும் விபூதி தரித்தவன் உண்பது ;
அவனைப் பின்பற்றினால் அழியும் பாவக் குவியல்.

விபூதி தரித்தவனை பாவிக்க வேண்டும் சிவனாக.
விபூதி தரித்து வேடமிட்டாலும் பெறுவான் நற்கதி!

இல்லை சிவ மந்திரத்திலும் சிறந்த ஒரு மந்திரம்,
இல்லை சிவ ஆசாரத்திலும் சிறந்த ஒரு ஆசாரம்;

இல்லை சிவார்ச்சனையிலும் சிறந்த புண்ணியம்;
இல்லை சிவ பரத்திலும் சிறந்த ஒரு பரம்!

இல்லை விபூதி ஸ்நானத்தில் சிறந்த ஸ்நானம்;
இல்லை சிவாக்னி வீரியத்தில் சிறந்த வீர்யாக்னி.

இல்லை விபூதியிலும் சிறந்த ஒரு தாரணம்;
இல்லை விபூதியிலும் சிறந்த ஒரு பாபநாசினி;

என்றோ எரித்தான் சிவபெருமான் காமதேவனை !
இன்றும் என்றும் எரிக்கும் திருநீறு பாவங்களை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி,
 
devi bhaagavatam - skanda 11

11#13. The greatness of Vibhooti

Vibhooti bestows true knowledge on the SanyAsis; it bestows Virakti (dispassion) on the VAnaprasta; it nurtures the Gruhasta Dharma and it confers VedAnta DhyAna Siddhi on a BrahmachAri. It gives merits for a person of the fourth VarNa and liberates everyone form the sins they had committed.

The four things which attract and speed up the process of liberation are Vibhooti, Sivalinga, PanchAkshara and RundrAksha.

A person who wears Vibhooti is at par with Siva. Following such a person destroys one's own sins. Such a man must be treated with a great respect. Even if he is only acting his role as devotee of Siva, he still gets good merits by wearing the vibhooti.

There is no mantra superior to the Siva mantra. There is no superior AachAramto Siva AchAram. There is no greater merit than performing Siva archana.

Nothing and no one is superior to Siva. There is no teerta snAnam holier than the Vibhooti snAnam. There is no VeeryAgni superior to that SivAgni.

There nothing superior to Vibhooti for adorning a person. There is nothing better to destroy the sins of a person.

Siva burned down Manmatha long ago. Vibhooti burns down the sins committed by everyone of us,
every single day.
 
bhaargava puraanam - part 2

#39u. சக்கரபாணி

சிந்துராஜன் மடிந்ததை அடுத்து.
சிதறி ஓடினர் எஞ்சிய வீரர்கள்.

“விடுதலை செய்வாய் தேவர்களை!”
வீரபத்திரரை அனுப்பினார் கணேசர்.

வந்தான் யுத்தகளத்துக்குச் சக்கரபாணி;
நொந்த உள்ளத்துடன் கதறி அழுதான்!

செய்து முடித்தான் சடங்குகளை எல்லாம்,
சென்று வணங்கினான் கணேச பெருமானை.

“வேண்டும் வரம் தருவேன் கேள்!” என்றார்.
“வேண்டாம் வேறு எதுவுமே என் இறைவா!

அறிவீனத்தால் சிந்து ஆனான் சத்ருவாக;
அவனைத் தாங்கள் மன்னிக்க வேண்டும்!"

கணேசரை பக்தியுடன் அரசன் பூஜிக்க,
கணேசர் காட்சி தந்தார் அரசனுக்காக!

சித்தி தேவி, புத்தி தேவி சமேதராக
சிங்க வாகனத்தில் ஏறி அமர்ந்தபடி.

“நன்மை செய்வாய் நீண்ட நல்லாட்சியில்!
என் திருவடிகளை அடைவாய் முடிவில்.

சிறை மீண்ட தேவர்கள் வந்து வணங்கினர்,
நிறைவோடு சென்றார் தத் தம் இருப்பிடம்

சக்கரபாணி வாழ்ந்தான் நெடுங்காலம்
அக்கறையுடன் செய்தான் நல்லாட்சி.

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி.


 
bhaargava puraanam - part 2

#39u. ChakrapaaNi

When Sindhu RAjan dropped dead, his army took to its heels. GanEsha sent Veerabadran to free the DEvA from Sindhu’s prison. Sindhu RAjan’s father ChakrapANi came to the battle feild and wept over the dead body of his son. He then completed all the rituals and came to GanEsha to pay his obeisance.

GanEsha offerd to bestow on him any boon he sought but ChakarapANi did not seek anything for himself. He said, “I beg your pardon on Sindhu RAjan’s behalf. He became the enemy of DEvA due to his folly. Please forgive him and accept my puja to you lotus feet”


ChakrapANi worshiped GanEsha who appeared with his DEvis on a simha vAhanam. GanEsha blessed the king ChakrapANi, “You will live very long and rule over your country very well! When you leave the earth you will come to me and merge with me”

The king ChakrapANi ruled wisely and well for many years.


 
devi bhaagavatam - sbanda 5

5#17b. மந்தோதரி (2)

“திருமண பந்தத்தில் விருப்பமில்லை எனக்கு;
இருக்க வேண்டும் காலமெல்லாம் கன்னியாக.


சுதந்திரம் வேண்டும் மோனத் தவம் செய்திட,
சுதந்திரம் பறி போகும் திருமணம் புரிந்தால்.


அடிமையாக வேண்டும் ஓர் ஆண்பிள்ளைக்கு;
அடைய முடியாது என்னால் மோட்ச சுகத்தை!


சேவை செய்ய வேண்டும் அவன் உறவினருக்கு;
சேவை செய்து என் சுதந்திரத்தை இழப்பேன்!


அறியமுடியாது கணவனின் உண்மை அன்பை;
அறிந்தால் துயர் விளையும் வேறு தொடர்பை.


துக்கமே வரும் பெண்களுக்கு மணவாழ்வில்;
சுகம் என்பது சொப்பனத்தில் வரும் சுகம் தான்!


உத்தானனின் மகன் அரசன் உத்தமன் — தன்
உத்தம மனைவியை விரட்டினான் கானகம்.


பெண்ணுக்குத் துயர் தருபவன் கணவன் – வரும்
பெண்ணுக்கு விரகதாபம் கணவனைப் பிரிந்தால்.


பெண்ணை ஒதுக்குவார் கணவனை இழந்தால்;
பெண்ணுப் பெண்ணே எதிரி ஆகிவிடுவாள்.


விளைவது இத்தனை துயரமும் எப்போது?
விழைந்து ஒரு கணவனை வரிக்கும் போது!”


குணவதி உரைத்தாள் கணவனுக்கு இதை;
மணப் பேச்சு ஆகிப் போனது பழைய கதை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
Devi bhaagavatam - skanda 11

11#14. தீவினை அகற்றும் திருநீறு

எல்லாத் தீர்த்த நீராடலின் புண்ணியத்தை
அள்ளித் தரும் விபூதி ஸ்நானம் நமக்கு!

கட்டைகளைக் கொளுத்தும் அக்னியாகக்
கெட்ட பாவங்களைக் கொளுத்தும் திருநீறு!

பந்தம் தரும் தண்ணீரில் ஸ்நானம்;
பந்தம் அகற்றும் திருநீற்று ஸ்நானம்.

மங்களம் தருவது தூய திருநீறு;
மக்களைக் காப்பது தூய திருநீறு;

தூய்மையைத் தருவது தூய திருநீறு;
தேவிக்குப் பிரியமானது தூய திருநீறு;

விடுபடலாம் 64 வகை ரோகங்களிருந்து;
விடுபடலாம் துஷ்ட மிருகங்களிடமிருந்து;

விடுபடலாம் கள்வரின் பயத்திலிருந்து;
விடுபடலாம் நம் தலை எழுத்திலிருந்து;

விடுபடலாம் செய்த பாவங்களிலிருந்து;
விடுபடலாம் துன்பம் துயர்களில் இருந்து;

ஒளிர்வதால் திருநீற்றின் பெயர் பஸிதம்;

ஒழிப்பதால் குற்றங்களை, இது பஸ்மம்;

ஐஸ்வர்யம் தருவதால் இது விபூதி;
ரக்ஷிப்பதால் இதன் பெயர் ரக்ஷை.

வெளி மலத்தைப் போக்கும் தண்ணீர் ஸ்நானம்;
எல்லா மலத்தையும் போக்கும் பஸ்ம ஸ்நானம்;

பஸ்ம ஸ்நானம் செய்யாதவன் நீசன்
பஸ்ம ஸ்நானமே புண்ணிய தீர்த்தம்!

அணிய வேண்டும் நாம் விபூதியை உடனே
அபான வாயுவை வெளியே விட்டாலும்;

கக்கினாலும், தும்மினாலும், மலஜலம்
கழித்தாலும், கொட்டாவி விட்டாலும்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#14. The greatness of Bhasma

Vibhooti snAnam confers the benefit of the snAnam in every holy teerta. Just like the fire burning down all the woods and logs, Vibhooti will burn down all the sins and evils. The bath taken in water binds a person while a bath taken in Bhasma liberates a person.

Vibhooti confers auspiciousness. It protects the wearer. It purifies the wearer. It is very dear to Devi's heart.

By applying Vibhooti one can get cured of sixty four different diseases. He can get saved from wild animals; He can become free from the fear of thieves. It can even change one's destiny.

One can get rid of one's sins committed through the body, from free from his sorrows and problems. Since the Vibhooti shines on the forehead it is called 'BhAsita'. Since it destroys all the sins it is a 'Bhasma'. Since it bestows auspiciousness and good merits it is 'Vibhooti'. Since it protects the wearer it is 'Rakshai'.

A bath in water removes only the dirt on one's external body but a bath in Bhasma removes all the dirts of the mind and the body. One who does take the Bhasma SnAnam is a lowly man.

One must smear vibhooti on one's forehead without fail, after releasing ApAna VAyu or vomiting, or sneezing or yawning or urinating or defecating.
 
bhaargava puraanam - part 2

#39v. தூமாசுரன்

தூமாசுரன் மகிபாதினியை ஆண்டு வந்தான்.
உமா மகேஸ்வரனிடம் பக்தி கொண்டவன்.


ஆதரித்தான் அடியவர்களை அன்போடு;
ஆட்சி புரிந்தான் குறைவு ஏதும் இன்றி.


மந்திரிகள் எண்மர்; மகன்கள் நால்வர்;
மகிழ்ந்திருந்தான் தன் மனைவியருடன்


பிருகு முனிவர் வந்தார் தூமாசுரனிடம்;
பிருகுவைச் சீடர்களுடன் கௌரவித்தான்.


பிறகு கேட்டான் தன் மனத்தின் ஐயத்தை,
“பிறந்தேன்
நான் அசுர குலத்தில் எதற்காக?”

முக்காலமும் அறிந்தவர் பிருகு முனிவர்;
முற்கால நிகழ்ச்சிகளைக் கூறலானார்.


முற்பிறப்பில் தூமாசுரன் பெயர் விகுதி;
நற்பண்புகளும், புகழும் வாய்திருந்தான்.


இந்திரப் பதவியை விரும்பினான் விகுதி;
அந்த முயற்சியில் செய்தான் யாகங்கள்.


முடிந்தன தொண்ணூற்றொன்பது யாகங்கள்;.
மிகுந்து இருந்தது நூறாவது யாகம் மட்டுமே.


யாகத்தை முடித்துவிட்டால் சுவர்க்க
போகம் தேடி வந்து விடும் விகுதியை!


“பறிபோகுமோ பதவி?” அஞ்சினான் இந்திரன்;
பரிதவித்தான் செய்வது அறியாமல் இந்திரன்.


மன்னன் விகுதி மகேசன் அருள் பெற்றவன்;
மண்ணைக் கவ்வச் செய்யமுடியாது எளிதில்.


அபாயம் ஏற்படுத்த வேண்டும் அவனுக்கு
உபாயம் ஒன்றைக் கண்டுபிடிப்பதன் மூலம்.


கசக்கினான் மூளையை; நன்கு சிந்தித்தான்;
விகசிக்கவில்லை தக்க உபாயம் ஒன்றும்


நாரதர் வந்தார் நல்ல சமயத்தில் அவ்விடம்;
“நன்மைகள் செய்வேன் இந்திரா!” என்றார்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
bhaargava puraanam - part 2

#39 v. DhoomAsuran

DhoomAsuran ruled over MahipAdini. He was a staunch devotee of lord Siva. He took good care of his citizens and ruled well. He had five wives, four sons and eight ministers and lived a happy and contented life.


Once Brugu rushi came to meet him along with his disciples. DhoomAsuran welcomed them and looked after their needs. He then asked his long standing doubt to the sage Brugu, “Why was I born as an asuran?” Brugu knew all the happenings in the past and told him this.


“In your previous birth you were a king named Viguthi. You aspired for the position of Indra and started doing the required one hundred yAgAs. You successfully completed ninety nine and only the last yAgA remained to be completed.


If that were completed then you would become the new Indra. So Indra got worried and wanted to retain his post and place in the heaven. Since you were a good king, he could not resort to any tricks or treachery.


He tried to think up a scheme but nothing occurred to him! Just then Narada came to him and said, “I will make sure that your post and position in swargga are not endangered”




 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#17c. வீரசேனன் (1)

பூத்துக் குலுங்கினாள் புஷ்பவதியான மந்தோதரி!
பார்த்துப் பரிதவித்தனர் மந்தோதரியின் தோழியர்.

“இத்தனை அழகும், இளமையும், பூரிப்பும் இப்படி
வியர்த்தமாகின்றதே யாரும் அனுபவிக்காமல்!”

வந்தான் கோசல தேசத்து அரசன் அவ்வழியே;
வந்தனர் தோழியர் அவன் அழகைப் புகழ்ந்தபடி!

உருகினான் அவ்வரசன் மந்தோதரியைக் கண்டு;
விரும்பினான் அந்த இளவரசியை மணம் புரிய,

“யார் இந்த சுந்தரி சொல்லுங்கள் எனக்கு!” எனவும்
“யார் நீங்கள் கூறுங்கள் முதலில் அதை எமக்கு!”

“வீரசேனன் என் பெயர்; கோசல நாட்டு மன்னன்!
வீரரிடமிருந்து விதிவசமாகப் பிரிந்து விட்டேன்!”

“சந்திரசேன மன்னனின் மூத்த குமாரி இவள்
மந்தோதரி என்ற பெயர் கொண்டவள் இவள் ”

“உயிராக மதிக்கிறேன் உங்கள் இளவரசியை;
உயிர் தரியேன் ஒரு கணமும் அவள் இன்றி!

காகுஸ்த வம்சத்து அரசன் வீரசேனன் நான்;
கந்தர்வ மணம் புரியவேண்டும் இக்கன்னியை!

என்ன தடை இருக்கும் இவளை நான் மணக்க?
எனக்கேற்ற குலமும், குணமும் கொண்டவளை!

கந்தர்வ மணம் புரிந்திட விரும்பாவிடில்
கடி மணம் புரிவேன் மன்னனிடம் பேசி !”

சென்றாள் தோழி மறுமொழி கூறாமல்;
செப்பினாள் விவரம் மந்தோதரியிடம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#17c. Veerasenan (1)

Mandothari attained puberty and became very beautiful. Her friends felt sad that all her beauty and youth were being wasted by her remaining unmarried and single.


One day Veerasenan, the king of Kosala Kingdom, came by that way. The friends of Princess Mandothari were bowled over by his handsome appearance and were discussing about it.


Veerasenan saw Mandothari and fell head over heels in love with her at the very first sight. He demanded to know who she was from her friends. But those girls wanted to know who he was!


He replied, “I am Veerasenan, the king of Kosala desam. I got separated from my soldiers and happened to come this way. The girls told him, “This is our princess Mandothari – the eldest daughter of our king Chandrasenan.


Veerasenan told them, “I love your princess dearer than my life. I want to marry her now and here in a Gandharva vivaaham. What can be the objection when we are both well matched in race, age and beauty. If she does not want Gandharva vivaaham I shall talk to the king her father and seek his permission to marry her”


The girls did not reply anything to him. On the other hand they went to Mandothari and told her everything.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#15a. விபூதி தரிப்பது

வியர்த்தம் ஆகிவிடும் கர்மங்கள், ஜபம்
விபூதி அணியாமல் அவற்றைச் செய்தால்.

பிராமணனின் அடையாளம் காயத்ரீயே ஆகும்;
பிரம்மண்யம் அழிந்துவிடும் விபூதி இன்றேல்!

மந்திர பூர்வமான திருநீறு ஒளிர்வது
அந்தணன் ஒருவனின் லக்ஷணம் ஆகும்.

கண்டபோதே பிரியம் எழும் அந்தணனுக்கு;
சண்டாளன் ஆவான் பிரியம் எழாத ஒருவன்.

உண்ணக் கூடாது விபூதி அணியாமல்;
பண்ணும் துலாபாரமும் தராது பலன்!

விலகி விடக்கூடாது பூணூல் என்பதற்காகவே
அணிகின்றனர் வேறு ஆடையைப் பூணூலாக !

கூறவில்லை விபூதிக்கு மாறாக எதையும்;
கூற இயலாது விபூதிக்கு மாற்றாக எதையும்!

இட வேண்டும் வலக்கையின் மூன்று விரல்களால்;
இட வேண்டும் ஆறு அங்குலத்துக்குக் குறையாமல்.

'அகாரம்' ஆகும் அநாமிகை ( மோதிர விரல் )
'உகாரம்' ஆகும் மத்திமை (நடு விரல் )

'மகாரம்' ஆகும் தர்ஜனி ( ஆள்காட்டி விரல்)
முக்குண ஸ்வரூபம் த்ரிபுண்டர தாரணம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 

Latest posts

Latest ads

Back
Top