• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

devi bhaagavatam - skanda 11

11#16. சந்தியா வந்தனம்

சந்திகள் மூன்று வகைப்படும் ஒரு நாளில்;
பிராதாஸ், மத்யான, சாயங்கால சந்திகள்.

பிராதாஸ் சந்தி செய்யத் தகுந்த காலம் இது.
உத்தமம் நட்சத்திரங்கள் தெரியும் சமயம்;

மத்யமம் நட்சத்திரங்கள் தெரியாத சமயம்;
அதமம் சூரியம் தோன்றும் சமயம் என்பர்.

மத்யான சந்தி செய்ய வேண்டிய சமயம்
உச்சி வானில் சூரியன் இருக்கும் சமயம்.

சாயங்கால சந்தி செய்யும் சமயம் இது.
உத்தமம் சூரியன் தென்படும் சமயம்;

மத்யமம் சூரியன் அஸ்தமிக்கும் சமயம்;
அதமம் நட்சத்திரங்கள் தோன்றும் சமயம்.

வேதியனுக்கு ஒரு விருக்ஷத்தை ஒப்பிட்டால்
வேர்கள் ஆகும் செய்யும் சந்தியா வந்தனங்கள்.

கிளைகள் ஆகும் மதிக்கும் நான்கு வேதங்கள்;
இலைகள் ஆகும் வேதங்கள் கூறும் கர்மங்கள்.

வேர் அறுபட்டால் விழுந்து விடும் விருக்ஷம்!
வேரைக் காக்க வேண்டும் விருக்ஷத்தைக் காக்க!

செய்ய வேண்டும் சந்தியா வந்தனம் உரிய சமயங்களில்;
செய்ய வேண்டும் பிராயச் சித்தம் நேரம் தவறிவிட்டால்.

செய்ய வேண்டும் சூரியோதயத்துக்கு மூன்று நாழிகை முன்பு;
செய்ய வேண்டும் சூரியாஸ்தமனத்துக்கு மூன்று நாழி முன்பு;

சாதாரணம் வீட்டில் செய்யும் சந்தியா வந்தனம்;
மத்யமம் பசுத் தொழுவத்தில் செய்யும் வந்தனம்;

உத்தமம் ஆற்றங்கரையில் செய்வது - அதிலும்
உத்தமம் தேவியின் ஆலயங்களில் செய்வது.

வேதியர்களுக்கு மேலான தெய்வம் தேவியே!
தேவி காயத்ரீயின் உபாசனையே நிலையானது!

சகல வேத சாரம் காயத்ரீயின் உபாசனையே!
சகலரும் சாக்தரே காயத்ரீ உபாசனையால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#16. SandhyA Vandanam

There are three Sandhis during a day - one in the morning, one at noon and one in the evening. The best time to do the SandhyA Vandanam in the Morning is when the stars are still visible. The second best time is when the stars just disappear. The third best time is when the Sun rises.

The SandhyA Vandanam at noon must be done when the Sun is at its highest position. The SandhyA Vandanam in the evening must be done when the Sun has not yet set. The second best time is when the Sun just sets. The third best time is when the stars appear.

If a brahmin can be compared to a tree then SandhyA Vandanam forms the roots of the tree; The four VedAs form the branches of the tree and the KarmAs prescribed by the VedAs form the leaves of the tree. If the roots get cut, the tree gets uprooted. So to keep the tree alive, its roots must be tended to.

SandhyA Vandanam must be done at the appointed time. If the time is not maintained, the prAyachittham must be done. The right time for doing the SandhyA Vandanam is three NAzhigai (72 minutes) before the Sunrise in the morning and before the Sunset in the evening.

The Sandhya Vandanam performed in the house is ordinary, that which is performed in the cow shed is better and that which is performed in the river banks is the best.

But the Sandhya Vandanam performed in the temple of Devi is the best among the best. GAyatree Devi worship has been prescribed for the Brahmins.

GAyatree Devi worship is the essence of all the VedAs. All the brAhmins are 'SAkthA's since they worship Shakti Devi.
 
bhaartgava puraanam - part 2

#39a. வித்ருமன்

மாதவன் அரண்மனையில் நுழைந்தனர்;
தோதாகக் கடத்தினர் கட்டில் சகிதம்


மாதவனையும் சுமுதையையும் காட்டிற்கு!
ஏதும் அறியவில்லை அவர்கள் நித்திரையில்.


அமைதியாக உறங்கும் கர்ப்பிணிப் பெண்ணை
அழிக்க மனம் வரவில்லை வித்ருமனுக்கு.


பெண்களைக் கொல்வதே பாவம் – அதிலும்
கர்ப்பிணிகளைக் கொல்வது மகா பாவம்.


கொல்லவும் மனம் வரவில்லை அவனுக்கு;
கொல்லாமல் செல்லவும் வழியில்லை!


இருதலைக் கொள்ளி ஏறும்பானான் அவன்!
அரச கட்டளையா அன்றிக் கருணை உள்ளமா?


கண் விழித்துப் பார்த்த சுமுதை அஞ்சினாள்.
கணவனும் இருந்தான் அருகில் கட்டிலில்;


கட்டில் இருந்தது வெட்டவெளியில், காட்டில்!
கண் எதிரே கொலைப் படைகளுடன் வீர்கள்.

எழுப்பினாள் கணவன் மாதவனை மெல்ல.
எழுந்த மாதவனும் திடுக்கிட்டு அஞ்சினான்.


“தூமாசுரனின் தளபதி வித்ருமன் நான் தான்.
தூமாசுரனை அழிக்குமாம் ஒரு குழந்தை.


வளருகிறதாம் அது அரசியின் கருவில்!
வளர்ந்து ஆளாகக் கூடாது அந்தக் குழந்தை.


அதை அழித்துவிடவந்துள்ளோம் நாங்கள்.
ஆனால் விழித்துக் கொண்டீர்கள் நீங்கள்.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



 
BHAARAGAVA PURAANAM - PART 2

#39A. Vidruman


Vidruman and his men entered the palace of MAdhavan. They lifted the cot on which MAdhavan and Sumudai were sleeping and kidnapped them easily to the nearby forest. Since they were in deep sleep they did not realize this.


Sumudai was sleeping quietly and Vidurman could not bring himself to kill her. He knew it was a sin to kill a woman and killing a pregnant woman was a greater sin. But he could not disobey DhoomAsuran without losing his own head! He was in a real dilemma as to whether to obey the king’s order or the principles of dharma?


Meahwhile Sumudai woke up. She was on her cot with her husband but the cot was in the middle of a jungle and they were surrounded by the enemy soldiers with deadly weapons.


She woke up MAdhavan quietly. He got the shock of his life to see the armed killers. Vidruman spoke to them, “I am the army chief of DhoomAsuran. My name is Vidruman. We learned that a child will be born to destroy DhoomAsuran. That child is growing in the womb of this queen Sumudai. We have been sent to kill the baby. You woke up before we could do our job!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#19b. மஹிஷாசுர மர்த்தனி (2)

“தேவர்களுக்குத் தேஜஸ் அளிப்பவள் நீயே!
யாவரும் லிங்கத்தைத் தொழுவது உன்னால்!


உன்னை ஒதுக்கிச் சிவனைத் தொழுபவர்கள்
என்ன சுகம் அடைவர் இம்மை மறுமையில்?


சாந்தர், சாதுக்கள், சத்துவர்கள் என்றும்
சார்ந்துள்ளனர் உன் திருவடிகளையே.


பக்தியுடன் யாகத்தில் தரும் அவிர்பாகம்,
சித்திக்கும் தேவர்களுக்கு உன் அருளால்.


ஸ்வாஹா தேவி நீயே
ன்றோ – உந்தன்
ஸ்வபாவத்தை அறியாதவர் அறிவிலிகள்.


அழித்தாய் மஹிஷனை! ஒழித்தாய் அச்சத்தை!
அளித்தாய் புகழை! அளிப்பாய் கருணையை! ”


கூறினாள் தேவி மிருதுவாக தேவர்களிடம்
மாறாத இளம் புன்னகை பூத்த முகத்துடன்,


“எப்போதெல்லாம் ஆபத்துகள் விளையுமோ
அப்போதெல்லாம் அவற்றிலிருந்து காப்பேன்!”


உறுதிமொழி அளித்தாள் கருணை மிக்க தேவி
உலகத்தவருக்கும், அமரருக்கு அளித்த போதே!


“காத்தாய் எங்களை மஹிஷனை வதைத்து;
காக்கும் திருவடிகளில் நீங்காத பக்தியைத் தா!


அன்னை நீ! உன் அறியாத பிள்ளைகள் யாம்;
முன் பின் சிந்தியாமல் செய்வோம் தவறுகள்;


பிழை பொறுத்து அருள வேண்டும் தாயே – உன்
பிள்ளைகள் அறியாமல் செய்யும் பிழைகளை நீயே!

உள்ளன இரு பறவைகள் ஜீவனின் உடலில்;
உள்ளன பரமாத்மா, ஜீவாத்மா என்றவாறு.


உண்டு மூன்றாவது பறவை மித்திரன்;
பண்டு தொட்டு மன்னித்து வருகின்றது.


மித்திரன் ஆவாய் நித்தியமும் நீயே!
சத்தியமாகச் சரணடைய வேண்டும்!


மன மொழி மெய்களால் உன்னை என்றும்
மறவாமல் தொழத் திருவருள் புரிவாய்!”


திருவருள் புரிந்தாள் தேவி அமரருக்கு.
திருவுருவை மறைத்தாள் அமரருக்கு.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#19b. Mahishaasura Mardhini

The Devaas were praising Devi with gratitude and bhakti.


“You bestow tejas on the Devaas.Your amsam makes people worship the Sivalingam. A person who worships only Siva and not you will not get any good in this world or in the next world.


Saadhus, Sanths and Saatvic people worship your feet. You deliver the havisu offered in the homam to the Devaas. You are the Swahaa Devi Those who do not your nature are utter fools. You killed Mahishan and delivered us from fear. You have given us fame and now we beg for your mercy. ”


Devi replied in a soft voice with a sweet smile,”Whenever there is a danger threatening the good people I will protect them from that danger” Devi gave this promise to us humans also when she promised this to the Devaas.


Deva prayed, “Give us undiminished bhakti to your lotus feet Devi. You are our mother. We are your foolish children. We may make mistakes since we lack foresight and knowledge. Please forgive our sins and forget them.


There are two birds in a jeeva named as Paramatma and Jeevaatma. But there is also a third bird called Mithran. It forgives all the faults. You are the Mithran and we surrender to you.
Please grant that we may always worship you using our mind, speech and body.


Devi granted them their wishes and then disappeared from there.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#17. செய்யக் கூடாதவை

பூஜிக்கக் கூடாது விஷ்ணுவை அக்ஷதையால்;
பூஜிக்கக் கூடாது வினாயகரைத் துளசியால்;

பூஜிக்கக் கூடாது துர்க்கையை அறுகால்;
பூஜிக்கக் கூடாது சிவனைத் தாழம்பூவால்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

11#17. These are forbidden


Vishnu must not be worshiped with Akshatha.

VinAyakA must not be worshiped with Tulasi.

DugA Devi must not be worshiped the Arugu.

Siva must not be worshiped with THAzham poo.
 
Bhaargava puraanam - part 2

#39b. வன வீரர்கள்

சுமுதை நடுநடுங்கினாள் இதைக் கேட்டு;
சுமுகமாகத் தப்பிக்க முயற்சி செய்தாள்.


“கருணை கொண்ட உள்ளம் தங்களுக்கு;
கருணை காட்டுங்கள் ஒரு கர்ப்பிணிக்கு.”


“கொல்லாமல் உங்களை விட்டுவிட்டால்
கொல்லப் படுவேன் தூமாசுரனால் நான்!”


சுமுதை இறைவனைப் பிரார்த்தித்தாள்,
அமுதை நிகர்த்த இனிய சொற்களால்.


வீரர்கள் தோன்றினர் அந்த வனத்தில்!
வீழ்த்தினர் எளிதில் வித்ருமன் வீரரை!


நிராயுதபாணியாக நின்றான் வித்ருமன்;
மறைந்து விட்டனர் மாயப்படை வீரர்கள்.


ஓடிச் சென்று சொன்னான் தூமாசுரனிடம்;
கடிந்து கொண்டான் அவனைத் தூமாசுரன்.


“அரண்மனையிலேயே அழித்திருக்கலாமே!
ஆரண்யத்துக்குக் கொண்டு சென்றது ஏன்?


உருவாகும் கருவையும் அழிக்கவில்லை;
உருப்படியாக எதையுமே செய்யவில்லை!”


உடைவாளை உருவினான் தூமாசுரன்;
படைத் தலைவனின் சிரம் உருண்டது.


அமைச்சர் கூறினார் தூமாசுரனிடம்,
“அனைத்தும் நம் நன்மைக்கே அரசே!


எதிரி மாதவனோ, மனைவியோ அல்ல!
எதிரி பிறக்கப் போகும் குழந்தை தான்.


கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்றால்,
கண் மூடித்தனமாக நம்மை ஏசுவர்!


காலம் கனிந்திடக் காத்திருப்போம் நாம்;
ஞாலம் செய்யாததைக் காலம் செய்யும்.


குழந்தை பிறந்ததை அறிந்த பிறகு அதை
அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.”


தூமாசுரன் அடைந்தான் மன அமைதி
“ஏமாற மாட்டேன் நான் அடுத்த முறை!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
Bhaargava puraanam - part 2

#39b. வன வீரர்கள்

சுமுதை நடுநடுங்கினாள் இதைக் கேட்டு;
சுமுகமாகத் தப்பிக்க முயற்சி செய்தாள்.


“கருணை கொண்ட உள்ளம் தங்களுக்கு;
கருணை காட்டுங்கள் ஒரு கர்ப்பிணிக்கு.”


“கொல்லாமல் உங்களை விட்டுவிட்டால்
கொல்லப் படுவேன் தூமாசுரனால் நான்!”


சுமுதை இறைவனைப் பிரார்த்தித்தாள்,
அமுதை நிகர்த்த இனிய சொற்களால்.


வீரர்கள் தோன்றினர் அந்த வனத்தில்!
வீழ்த்தினர் எளிதில் வித்ருமன் வீரரை!


நிராயுதபாணியாக நின்றான் வித்ருமன்;
மறைந்து விட்டனர் மாயப்படை வீரர்கள்.


ஓடிச் சென்று சொன்னான் தூமாசுரனிடம்;
கடிந்து கொண்டான் அவனைத் தூமாசுரன்.


“அரண்மனையிலேயே அழித்திருக்கலாமே!
ஆரண்யத்துக்குக் கொண்டு சென்றது ஏன்?


உருவாகும் கருவையும் அழிக்கவில்லை;
உருப்படியாக எதையுமே செய்யவில்லை!”


உடைவாளை உருவினான் தூமாசுரன்;
படைத் தலைவனின் சிரம் உருண்டது.


அமைச்சர் கூறினார் தூமாசுரனிடம்,
“அனைத்தும் நம் நன்மைக்கே அரசே!


எதிரி மாதவனோ, மனைவியோ அல்ல!
எதிரி பிறக்கப் போகும் குழந்தை தான்.


கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்றால்,
கண் மூடித்தனமாக நம்மை ஏசுவர்!


காலம் கனிந்திடக் காத்திருப்போம் நாம்;
ஞாலம் செய்யாததைக் காலம் செய்யும்.


குழந்தை பிறந்ததை அறிந்த பிறகு அதை
அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.”


தூமாசுரன் அடைந்தான் மன அமைதி
“ஏமாற மாட்டேன் நான் அடுத்த முறை!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



#39B. Mysterious soldiers

Sumudai trembled with fear on hearing these words. She tried her luck to escape unhurt. She told Vidruman, “Sir! you are a kind-hearted man. Please do not hurt a pregnant women who has done no harm to anyone".

But Vidruman replied to her, “If I don’t kill you, I will be killed by DhoomAsuran”
. Now Sumudai had none but her god to save her and her husband. She prayed sincerely to her god.

Some mysterious soldiers appeared there suddenly. They fought with the soldiers of Vidruman and killed all of them. Vidruman was spared alive but he had lost all his weapons. The mysterious soldiers disappeared as mysteriously as they had appeared from nowhere.

Vidruman ran to DhoomAsuran and reported the happenings. DhoomAsuran was not happy with this. He took to task Vidruman and asked, “You could have killed them in their palace. Why did you have to take them to the forest? You did not kill them! You did not kill the fetus. You have not done anything I told you to do”. He drew out his sword and Vidruman’s head rolled on the ground.

A minister consoled him thus, “All is for our own good. MAdhavan and his wife are not our enemies. Only the child in the womb is. If we kill a pregnant woman, we will be blamed by everyone. Let us wait till the child is born and then we can destroy it. Let us wait for the right time to do this”


DhoomAsuran calmed down on hearing these words. He said to himself, “I will be more careful next time!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#18a. தேவி பூஜையின் பலன்

இருந்தது ஒரு சக்ரவாகப் பறவை பொதிகையில்;
பறந்து திரிந்தது பறவை பல நாடுகளின் வழியே.

அடைந்தது காசியைப் பூர்வ ஜன்ம புண்ணியத்தால்;
அடைந்தது பறவை அன்னபூரணியின் ஸ்தானத்தை.

பறந்தது தினந்தோறும் ஆலயத்தைப் பிரதட்சிணமாக;
இறந்த பின் பறவை அடைந்தது நேராகச் சுவர்க்கத்தை.

சிறந்த போகம் அனுபவித்தது இரண்டு கற்ப காலம்;
பிறந்தது க்ஷத்திரிய குலத்தில் மன்னன் மகனாக.

பெற்றான் பிரகத்ரதன் என்ற பெயரை அவன்;
பெற்றான் பேரும் புகழழும் சத்திய சீலனாக.

பெற்றான் பெரும் புகழை ஜிதேந்த்ரியனாக;
பெற்றான் பெரும் புகழைத் திரிகால ஞானியாக.

காணச் சென்றனர் முனிவர்கள் அவனை,
"ஞானம் கிடைத்தது எங்ஙனம்?" என்றனர்.

வாழ்க வளமுடன் விசாலாக்ஷி ரமணி
 
11#18. The merits of Devi worship


There lived a ChakravAka bird in the Podigai hill. It flew across many countries and reached the City of Kasi by its good fortune. It reached the temple of Devi AnapoorNi.

Everyday it would fly around the temple in clockwise direction making pradakshiNams. When it died, it went straight to the heaven. It enjoyed all the pleasures of the heaven for two eons.

Then it was born as the son of a king and became a prince. The prince was named as Brihadratha. He became very famous. He was always truthful. He had conquered all his sense organs and he knew the past and the future in addition to the present.

The sages went to him and paid their respect. They asked him wonder struck,"How did you gain so much knowledge and wisdom?"
 
#39c. பாலச்சந்திரன்

நாட்டுக்குத் திரும்பவில்லை இருவரும்;
காட்டிலேயே வாழக் கற்றுக்கொண்டனர்.


கனி, கிழங்குகளை உண்ணலாயினர்;
தனிமையில் திரிந்தனர் கானகத்தில்.


நெருங்கி விட்டது சுமுதையின் பிரசவம்,
விரும்பி வந்தார் குழந்தையாக விநாயகர்.


நான்கு கரங்களில் நான்கு ஆயுதங்கள்,
மூன்று கண்களுடன் அதிசயக் குழந்தை!


அணைத்துக் கொண்டாள் அழகிய குழவியை,
வினவினாள் அவனைப் பற்றிய விவரங்களை.


“பாலசந்திரன் என்பார்கள் என்னை – உன்
பக்திக்கு மெச்சி வந்துள்ளேன் முன்பும்!


வரமளித்தேன் விஷ்ணுவாகத் தோன்றி!
வனத்தில் காத்தேன் வீரர்களை அனுப்பி!


தூமாசுரன் விரும்புகிறான் கருவை அழிக்க.
ஏமாற்ற வந்தேன் சிறு குழந்தையாக மாறி!”


சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருந்தனர்
ஒற்றர்கள் பிரசவத்தை எதிர்நோக்கியவாறு.


பிரசவம் ஆகும் முன்னரே சுமுதை மடியில்
பிரகாசமான குழவியைக் கண்டு வியந்தனர்!


ஓடினர் உடனே மன்னன் தூமாசுரனிடம்;
மடியில் குழந்தையைப் பற்றிக் கூறினர்.


“நான்கு கரங்கள், மூன்று கண்கள் கொண்ட
நானிலத்தில் அதிசயமான ஒரு குழந்தை!”


சதுரங்க சேனை தயாரானது போருக்கு!
அதிசயக் குழந்தையை அழிப்பது எளிதா?


படை நடந்து அடைந்தது அந்த வனத்தை.
படை சூழ்ந்து கொண்டது அந்த வனத்தை!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



 
BHAARGAVA PURAANAM - PART 2

# 39C. BAlachandran

MAdhavan and Sumudai did not go back to their palace for the fear of getting killed by DhoomAsuran. They learned to survive in the forest by eating the fruits and roots.


They roamed around in the forest undisturbed. The time for the birth of Sumudai’s baby was nearing fast.


VinAyaka appeared there as a small child. He had three lovely eyes and four arms holding on to four weapons. Sumudai embraced the unusual child and asked about him.


The child replied,” I am called a BAlachandran. I have appeared to you before as VishNu to grant you boons. I sent some soldier to save you from the killers and Vidruman.

DhoomAsuran wants to kill your baby. I have come here as a small child to deceive him and protect your unborn child from those killers.”


The spies were watching Sumudai all the time. They had to report the birth of the child to DhoomAsuran. They were surprised to see a small baby on Sumudai’s lap – even before her baby had been born! They ran to report this to DhoomAsuran.


They told him, “There is a baby on the queen’s lap. It has four arms and three eyes and is indeed an unusual child.”


An army got ready since it was not going to be easy to kill a strange child with four arms and three eyes! The army marched towards the forest and surrounded it completely.


 
DEVI9 BHAAGAVATAM - SKANDA 5

5#20a. ஜனமேஜயன்

“அமுதமாக இனிக்கிறது வியாச முனிவரே!
அன்னையின் பெருமைகளை நீர் கூறுவது.


இன்னமும் கேட்க வேண்டும் என்ற பேராவல்
எண்ணத்தில் தோன்றி விரைந்து வளருகிறது.


தேவியின் லீலைகளைக் கேட்பதால் விளங்கும்
தேவியின் சக்தியும், ஆற்றலும், ஸ்வரூபமும்!


அறம், பொருள், இன்பங்கள் வேண்டுமா?
பிறவா வரமும், முக்தியும் வேண்டுமா?


இம்மையிலேயே ஜீவன் முக்தி வேண்டுமா?
இகலோக போகங்கள் அனுபவிக்க வேண்டுமா?


துக்கங்களில் இருந்து விடுதலை வேண்டுமா?
துரிதங்களில் இருந்து நிவாரணம் வேண்டுமா?


அனைத்தும் கிடைக்கும் விரும்பிய வண்ணம்
அன்னையின் அற்புத லீலைகளைச் சுவைத்தால்.


கர்மபலத் தியாகம் செய்த முனிவரும் விரும்பி
ஆர்வமாகக் கேட்கின்றனர் தேவி லீலைகளை.


முற்பிறப்பில் தேவியை பூஜை செய்தவர்கள்
இப்பிறப்பில் வாழ்கின்றார்கள் குறைவின்றி.


வறுமையில் வாடுபவர், நோய் பற்றியவர்,
வம்ச விருத்தி அற்றவர், ஏவல் செய்பவர்,


சுமையாட்கள், சுற்றி அலைந்து திரிபவர்;
சுவையான உணவு உண்ண முடியாதவர்,


ஊமையர் செவிடர், நொண்டி, நோயாளி,
குருடர், துக்க வாழ்வு வாழ்கின்றவர்கள்


தேவியைப் பூஜிக்காத பாவிகள் ஆவார்கள்;
தேவியைப் பூஜித்தவர் நல்வாழ்வு வாழ்வர்.


மேலும் கூறுங்கள் தேவியின் லீலைகளை
மறைந்த தேவி சென்றது எங்கே என்று!


கைலாசத்துக்கா? இமயமலைக்கா? அன்றி
வைகுண்டத்துக்கா? இந்திர லோகத்துக்கா?”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#20a. Janamejayan

King Janamejayan told sage Vyaasa. “These tales about Devi are fascinating. I want to listen more and more of Devi’s leelaas. Knowing about them will make me understand the greatness of Devi and her swaroopam better.

We get anything we want from Devi be it Dharma, Artha, Kaama, Moksha or Liberation from bondage or jeevan mukti or pleasures of this world or freedom from sorrows and troubles. Devi will give us anything we want.


Even the sages who have given up the fruits of karma wish to listen to the greatness of Devi. All the people who suffer in this life are those who did not do aaraadhana of Devi in their previous births.


The poor, the wretched, the chronic sufferers, those without any children, those who live by obeying orders, those who make a living by carrying heavy loads, those who go hungry, the deaf, the dumb, the blind and the lame are all people who had not done Devi’s aaraadhana.


Please tell me more. Where did the Devi go after disappearing from the Devaas? Did she go to Kailash or Himalayas or Vaikuntam or Indra lokam?”


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#18b. பிரகத்ரதன்

"இருந்தேன் ஒரு சிறு பறவையாக முன்னர்;
அடைந்தேன் அன்னபூரணியின் ஆலயத்தை.

செய்தேன் ஆலயப் பிரதட்சிணம் தினமும்;
சென்றடைந்தேன் பின்னர் சுவர்க்க லோகம்!

இருந்தேன் இரண்டு கற்ப காலம் அங்கே;
பிறந்தேன் மன்னர் குலத்தில் ஒரு மகனாக.

அன்னையின் அருள் நமக்கு இருக்குமானால்
இன்னமும் வேண்டியது ஏதாகிலும் உண்டோ?

நித்தியம் அல்ல சிவ பெருமானின் உபாசனை;
நித்தியம் அல்ல விஷ்ணு பிரானின் உபாசனை;

நித்தியமானது தேவி உபாசனை ஒன்றே;
சத்தியமானது தேவி உபாசனை ஒன்றே!

யாரால் கூற முடியும் தேவியின் பெருமையை ?
யாரால் அறிய முடியும் தேவியின் பெருமையை?

உண்டாகும் தேவியிடம் பக்தி ஒருவனுக்கு
உண்டானால் ஜன்மசாபல்யம் என்ற நற்பேறு!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#18b. Brihadratha

The King Brihadratha told the Sages the story of his life. "In my previous birth I was a chakravAka - a very lowly bird. Once I flew around the temple of the DeviAnnapoorNi of Kasi in clockwise direction.

And, as the result of that, I lived in the Heavens for a period of two Kalpas. Now I have taken birth as a prince. I have the knowledge of the past, the present and the future.

Who can ascertain the amount of merits accumulated by remembering the lotus feet of the Mother of the World? I shed tears of joy whenever I think of her glories. Those who do not worship Devi are the Great Sinners and their lives will be miserable.

Neither the worship of Siva nor of VishNu is permanent. Only Devi's worship is eternal. This is stated clearly in the VedAs.

Everyone ought to serve the lotus feet of the Devi with devotion. No other act is more glorious or meritorious in this world than serving the feet Devi.

The births of those are really fruitful who possess faith in the worship of Devi. Those who have no such faith will never earn the merits by performing Devi'sworship."

The Sages went back to their abodes satisfied with the reply of Brhadratha.

 
bhaargva puraanma - part 2

#39d. தூமகேது

காட்டை அடைந்த அசுரர்களின் படை,
கோட்டை போலக் காத்தது அக்காட்டை.


பாண மழை பொழிந்தான் தூமாசுரன்,
பாலச்சந்திரன் இருந்தான் தாய் மடியில்.


சீறி வந்தன அசுரனின் பாணங்கள்!
வீரமாக எழுந்து நின்றான் குழந்தை.


கறுத்த மேகங்கள் குவிந்தது போல
மறைத்துக் கொண்டன பாணங்கள்.


குழந்தையை மூடிக் கொண்டது கண்டு
குமுறினர் மனம் மாதவனும், சுமுதையும்.


“எனக்கு ஒரு பயமும் இல்லை அம்மா!”
என்றவன் வாயிலிருந்து புகை மண்டலம்!


மெல்லப் பரவியது புகை மண்டலம்;
கள்ள அரக்கர்களைச் சூழ்ந்தது புகை.


கவிழ்ந்தது காரிருள் போலப் புகை.
காரிருள் விலகியது மெல்ல மெல்ல.


படையை அங்கு காணவே காணோம்!
படை பஸ்பமாகி அழிந்தனர் வீரர்கள்!


தூமாசுரன் வந்தான் பெரும் படையுடன்;
தூம மண்டலத்தில் அழிந்துபோனான்.


தூமாசுரனைத் தூமத்தால் வென்றவன்
'தூமகேது' என்று புதிய பெயர் பெற்றான்.


மாதவன், சுமுதையை அனுகிரஹித்து
மறைந்து அருளினான் பாலச்சந்திரன்.


நாரணன் பிறந்தான் சுமுதையின் மகனாக.
மாறாத அன்பு செலுத்தினான் பெற்றோரிடம்


நாட்டை ஆண்டான் நன்றாக நெடுங்காலம்!
நற்கதி அளித்தான் தன்னைப் பெற்றோருக்கு!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
#39D. DhoomakEtu

The army of asurA reached the forest and surrounded it guarding it like a fortress. DhoomAsuran showered arrows on BAlachandran.

The child stood up bravely on his mother’s lap. The arrows covered the child completely like dense black clouds. MAdhavan and Sumudai were afraid about the safety of the child.


“Nothing has happened to me mother!” the child BAlachandran spoke and they could see thick black fumes emanating from his mouth. The fumes became darker and denser and covered the asurA army in pitch darkness. When the fumes cleared after some time no one was there. All the asurA had turned into ash.


DhoomAsuran had come with a huge army and the child BAlachandran had killed the army with his own fumes. He was praised a DhoomakEtu. He blessed MAdhavan and Sumudai and disappeared from there.


VishNu was born as Sumduai’s son on the due day. He grew up well and respected and loved his parents. He ruled the country well for a long time. He gave moksha to his parents and liberated them from the cycle of birth and death.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#20b. வியாசரின் பதில்

“அடைவர் நீ கூறிய இடங்களில் ஒன்றை,
அடைந்தவர் ஜீவனாகப் பிறவி உலகில்.


உள்ளது மணித்வீபம் பாற்கடல் நடுவில்;
உள்ளாள் தேவி மனோரம்மியத் தீவினில்.


வசிப்பாள் தன் விருப்பம் போல அங்கே!
வசிப்பர் அவளுடன் பல அழகிய பெண்கள்!

வந்தனர் மும்மூர்த்திகள் பெண்ணுருவில் அங்கு;
தந்தாள் தேவி மூன்று சக்தியரை மூவருக்கும்.


மறைந்தருளிய மஹிஷாசுர மர்த்தினி தேவி
மனம் கவர்ந்த மணி த்வீபத்துக்குச் சென்றாள்.


அமர்த்தினர் தேவர் மஹிஷன் அரியணையில்
அரசன் ஒருவனை உலகாளச் செய்வதற்கு.

சூரிய வம்சத்து அரசன் சத்ருக்னன் ஆனான்
சீரிய மணிமுடி தரித்துப் புதுச் சக்ரவர்த்தியாக.


செழித்தது நாடு சத்ருக்னனின் ஆட்சியில்;
செழித்தன நல்லறங்கள், நீதி, நியாயங்கள்.

பொழிந்தது மாதம் மும்மாரி தவறாமல்;
விளைந்தன பயிர், காய், கனி, மலர்கள்.


சொரிந்தன பாலைக் கறவைப் பசுக்கள்;
விரிந்தது பசுமை நதி நீர்ப் பெருக்கால்.


தத்தம் தொழில் செய்தனர் நால் வர்ணத்தவர்
தவறவிடவில்லை வர்ணாசிரம நெறிகளை.


வாழ்ந்தனர் பெண்கள் மாறாத கற்போடு;
வாழ்ந்தனர் பெண்கள் புண்ணியவதிகளாக.

புத்திரர்கள் காட்டினர் பெற்றவரிடம் பக்தி;
நித்தியம் நிலவியது நாட்டில் முழு அமைதி.

அந்தணர் வாழ்ந்தனர் செந்தண்மையுடன்;
அனைவரும் வாழ்ந்தனர் தேவி பக்தியுடன்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#20b. Vyaasaa’s reply

Vyaasaa told king Janamejayan,” Only a jeeva will go one of these places you have just mentioned. Devi went back to her MaNi dweepam located in the Ocean of Milk. It is a fascinating island. Devi lives there the way she likes, surrounded by many beautiful women.


The Trinity had visited the dweepam once. They got changed into women and they were given their respective consorts and responsibilities there by Devi herself.


Devaas decided to place Satrugnan – a Soorya vamsa king – on Mahishan’s throne to rule over the world. He was a good king and the world prospered under his rule. Dharma and Justice prevailed in the world.


The rains never failed. The crops, flowers, vegetables and fruits grew and yielded well. Cows gave plenty of milk. The earth became covered with green plants and trees. The people of the four varNa did their jobs well. There was no confusions nor unrest and nor upheavals during Satrugnan’s reign.

Children had great respect for their parents. Women lived pure and chaste lives. The brahmins lived lives of austerity and discipline. All the people were the devotees of Devi.

 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#19. காயத்ரீ மஹிமை

பசு, சிசு, மாதா, பிதா ஹத்தி தோஷங்கள்;
குரு பத்தினியைக் கூடிப் புணர்ந்த பாவம்;

பிராமணனின் பூமியைத் திருடிய பாவம்;
பிராமணன் மதுவினை அருந்திய பாவம்;

மூன்று கரணங்களால் செய்த பாவங்கள்;
மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள்;

ஆயிரம் உரு காயத்திரியால் அழிந்து விடும் !
தூய்மை தருவதில் இதற்கு இணை உண்டோ?

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

11#19. The greatness of GAyatree

If the GAyatree is repeated one thousand times, the sins resulting from the killing a cow, one's own father, one's own mother, from causing abortions, enjoying with the wife of one’s own Guru, stealing the property or land of Brahmin and drinking wine all get destroyed.

Also the sins acquired in three births through one's thoughts or words or deeds get destroyed. He who works hard in studying the Vedas without knowing the GAyatree is just wasting his time.

The study of the four Vedas is only secondary to the reciting of the GAyatree for a true Brahmin.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#40a. கஜமுக அசுரன்-1

அசுரர்கள் தோற்றனர் தேவர்களிடம் போரில்;
அசுரர்கள் ஓடி ஒளிந்தனர் தேவருக்கு அஞ்சி.


தேவை அசுரர்களின் வாழ்வு மீண்டும் தழைக்கத்
தேவர்களை வெல்லும் வலிமையுடைய அசுரன்.


மாதவம் புரிந்து கொண்டிருந்தார் மாகதர்;
மகத்துவம் வாய்ந்த மகனைத் தர வல்லவர்.


அசுர கன்னி சென்று அவருடன் கூடினால்
அசர வைக்கும் அசுரர்கள் பலர் தோன்றுவர்.


விபுதை ஒரு மிக அழகிய அரக்கக் கன்னி;
விவரம் சொல்லி அனுப்பினர் முனிவரிடம்.


முனிவரின் தவத்தைக் கலைக்கவில்லை;
இனிய தவத்தில் எதிரே அமர்ந்தாள் அவள்.


தவம் கலைந்த முனிவர் கண்டது என்ன?
தாபத்துடன் கூடி மகிழும் இரு யானைகள்!


காம வசப்பட்டார் கண நேரத்தில் முனிவர்;
கண்டார் கண்ணெதிரில் அழகிய தபஸ்வினி!


“கணவனுடன் இளமையை அனுபவிக்காமல்
கானகத்தில் என்ன செய்கிறாய் பெண்ணே?”


“மணம் இன்னமும் ஆகவில்லை முனிபுங்கவா!
மனம் பறி போய்விட்டது உங்களைக் கண்டதும்.


மணந்தால் உங்களையே மணப்பது என்று
மனவுறுதியுடன் நான் காத்திருக்கிறேன்!”


தேனை நிகர்த்த இனி
க்கும் மொழிகள்!
மானை நிகர்த்த சலிக்கும் விழிகள்!


ரதியையும் நாணச் செய்யும் மேனி எழில்;
குதி போடும் இளமையின் மதமதர்ப்பு கண்டு


தன்னையும் மறந்தார்; தவத்தையும் மறந்தார்;
பெண் யார் என்பதையும் கூட அறியவில்லை.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



 

Latest ads

Back
Top