• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#15a. Rules for applying Vibhooti

All the KarmAs done without applying Vibhooti on the forehead go in waste. The real hallmarks of a brahmin are the Gayatree mantra and the smearing of Vibhooti. Every Brahmin must be adorned by the bright Vibhooti applied with the uttering of the mantras.

A brahmin must develop a liking to Vibhooti even as he looks at it. The brahminwho does not have a liking for Vibhooti is actually a ChaNdALan!

One must not eat without applying Vihooti. Even the tulAbhAram measured with gold will go in waste if Vibhooti is not smeared.

Often the utthareeyam - the upper garment - is twisted and worn as a poonool to make sure that it does not get displaced during the ceremony ritual. But there is no alternative for Vibhooti. There can be no alternative for Vibhooti.

Vibhooti must be applied with the three fingers of the right hand - excepting the thumb and the little finger. The length of the three lines must be at least six inches.

The line drawn by the ring finger (AnAmika) is the 'AkAram'. The line drawn by the middle finger (Madhyamai) is the 'UkAram' and the line drawn by the index finger is the 'MakAram'.

The three lines are the swaroopams of the three gunAs and these are three component sounds in the PraNava OnkAram.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#39w. சிவஜன்மன்-1

யாக சாலைக்குப் புறப்பட்டார் நாரதர்,

ஆகிவிட்டார் வயோதிக அந்தணராக.

தட்டுத் தடுமாறி கையில் கோலுடன்,
கிட்டே வந்தார் விகுதி ராஜனிடம்.


ஆசனம் அளித்து உபசரித்தான் – “உமது
அவசியத் தேவை எது?” எனக் கேட்டான்.


‘சிவ ஜன்மன் என்பது என் பெயர் – நான்
கிழ ஜன்ம
ம் ஆகிவிட்டேன் பார் இன்று!

பிரமச்சரியம் காத்து வந்தேன் இதுவரை.
இறக்கும்முன் துய்க்க வேண்டும் இன்பம்.


எனது அவசியத் தேவை உன் மனைவி!”
என்று கூறினார் சிவ ஜன்மனான நாரதர்.


திடுக்கிட்டு நின்றுவிட்டான் விகுதி ராஜன்!
‘அடுக்குமா இது உலகில்?” எனச் சிந்தித்தான்.


‘பிறன் மனைவியைத் தானம் கேட்பதா?
அறம் ஒத்துக் கொள்ளுமா இதனை?’


“தரும நெறிக்குப் புறம்பானது இது.
தருவேன் வேறெதை விரும்பினாலும்.”
என

“வாக்குத் தந்தாய் நீயாகவே வந்து எனக்கு;
சாக்குப் போக்குச் சொல்கிறாய் இப்போது ”
என

“ஆண்டு அனுபவித்த மனைவியை நான்
மீண்டும் தானமாக எப்படித் தருவேன்?


தகாத பொருளைத் தானம் கேட்பதும் பாவம்
தகாத பொருளைத் தானம் தருவதும் பாவம்!”
என

“ஆர்வத்தை உருவாக்கி விட்டு - என்
ஆர்வத்தைக் குலைக்கிறாய் இப்போது.


யாகசாலைக்கு வந்து தானம் கேட்டவர்
போகக் கூடாது திரும்பி ஏமாற்றத்துடன்.


யாகம் பூர்த்தி ஆகவேண்டும் என்றால்
போகப் பொருளைத் தர மறுக்காதே!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.




 
BHAARGAVA PURAANAMA - PART 2

#39w. Sivajanman

NArada changed himself into an old and infirm Brahmin and walked to the yAgasAlA with a stick in hand and faltering steps. Viguthi RAjan welcomed him, offered him a seat and asked about his requirements.


“My name is Sivajanman. I observed brahmacharyam till now. I want to enjoy the pleasure of wedded life before I die. So I want your wife as a gift”


Viguthi RAjan was taken aback by this strange request. How can a man donate a woman whom he had married and enjoyed for many years. He told the old man, “I can you anything you want but not my wife. It is against Dharma to give away one’s wife to another man.”


Sivajanman (NArada in disguise) found fault with Viguthi RAjan and said, “When I came here you promised to give me anything I desired but now you are going back on your promise.”


Viguthi told the old man, “A gift must be worthy of giving away. Asking for an improper gift is a sin. Giving away an improper thing is also sin.”


Now the old man threatened Viguthi RAjan, “You know very well that you have to give away anything anyone desires in order to complete this yAgA. If I go away empty handed you can’t complete your yAgA!”


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#18a. மஹிஷன் வதை (1)

வீரசேனனை மணக்க மறுத்த மந்தோதரி
வைராக்கியத்துடன் வாழ்ந்தாள் வெகுநாள்.


எய்தினாள் தங்கை இந்துமதி மணப் பருவம்,
செய்தான் சுயம்வர ஏற்பாடுகள் சந்திரசேனன்.


மாலையிட்டாள் மனம் கவர்ந்தவனுக்குத் தங்கை
மாலயிட விரும்பினாள் ஒருவனுக்குத் தமக்கை.


வந்திருந்த மன்னர்களில் ஒருவன் அவன்;
மந்திர தேசத்து மன்னன் சாருதோஷ்ணன்.


தந்தையிடம் கூறினாள் தனது விருப்பத்தை;
தந்தை மணம் நடத்தினான் அம் மன்னனுடன்.


இன்ப வாழ்வு நடத்தினாள் அவள் சிலகாலம்;
இன்ப வாழ்வே துன்பமயமானது விரைவில்.


வேலைக்காரன் மனைவியுடன் தன் கணவன்
குலாவுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்!


வேறு பெண்களுடனும் சுகிப்பதைக் கண்டாள்
வேதனையுற்றாள் அதை ஜீரணிக்க இயலாது.


‘வஞ்சித்துவிட்டான் என்னை ஸ்த்ரீ லோலன்!
கிஞ்சித்தும் இனி வாழ்வில் இன்பம் இல்லை!’


உயிரை விடலாமா என்று எண்ணினாள்!
உயிரை விடுவது மகா பாவம் அல்லவா?


தந்தையிடம் கூறினால் பரிஹசிப்பர் தோழியர்!
நொந்த மனத்தினால் வாணாள் வீணாள் ஆனது!


கூறினான் மஹிஷன் மந்தோதரி கதையை;
கூறினான் மஹிஷன் தேவியிடம் மேலும்;


“ஆம் என்று சொல்லி இன்புறுவாய் பெண்ணே!
ஆளாவாய் துன்பத்துக்கு மறுத்துப் பேசினால்!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
devi bhaagavatam - skanda 11

11#15b. துர்வாசர்.

துர்வாசர் சென்றார் பித்ரு லோகத்துக்கு;
அர்க்ய, பாத்ய, ஆசமன, ஆசனம் தந்தனர்.

கூக்குரல் கேட்டது பித்ரு லோகத்தில் - அருகே
கும்பிபாக நரகத்தில் உழல்பவர்களிடமிருந்து!

பார்க்க விரும்பினார் நரகத்தைத் துர்வாசர்;
பார்த்தார் குனிந்து நரகத்தைத் துர்வாசர்.

சுகானந்தம் பெறத் தொடங்கினர் நரக வாசிகள்!
சுவர்க்க வாசிகள் போலக் கும்மாளம் இட்டனர்!

இசைத்தனர் இனிய இசைக் கருவிகளை;
வசந்தகால மலர்மணத் தென்றல் வீசியது.

வியப்படைந்தார் துர்வாசர் இம் மாற்றத்தால்!
வியப்படைந்தனர் கிங்கரர்கள், யம தூதர்கள்!

ஓடினர் யமனிடம் இந்த விந்தையைக் கூற!
நாடினான் யமன் நரகத்தை விடை காண!

திகைத்தான் சுவர்க்க வாசிகளிலும் அதிக
சுகம் அனுபவிக்கும் நரக வாசிகளைக் கண்டு!

சுகம் நரகத்திலும் உண்டாகும் என்றால்
பயம் இன்றிப் பாவம் செய்வர் மனிதர்கள்!

சென்றனர் தேவர்கள் விஷ்ணுவுடன் கயிலை;
செப்பினர் பிறைசூடிப் பெருமானிடம் இதனை.

கூறினர் பிரானிடம் தாம் கண்ட விந்தையை;
கோரினர் தாம் கண்ட விந்தையின் காரணத்தை.

வெண்ணீறு அணிந்த பிரான் வெகுவாகச் சிரித்தார்.
விண்டார் "கண்ட விந்தையின் காரணம் திருநீறு" என!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#15b. Sage DurvAsa

Sage DurvAsa went to the Pitru lokam once. He was welcomed with due honors and respect by the Pitrus. He heard pathetic cries from down below. It was from the hell called Kumbee BhAga and from the souls suffering there.

DurvAsa wanted to have a glance at that Naraka. He looked at it from above the Hell. Suddenly everything in the Hell changed dramatically. The suffering souls became happy all of a sudden.

They were enjoying like the people in the Heaven. They played musical instruments and danced. Breeze laden with the fragrance of the flowers embraced them gently.

Sage DurvAsa was surprised by these sudden changes. So also the Kinkarasand the Yama dhootAs. They ran to Yama Dharma to disclose this wonderful incident.

Yama was equally surprised. He ran to the Kumbee BhAga to know the reason. He could not find the reason why the people in a hell looked happier than the people in the heaven!

If there were joy and happiness in a hell, then men will have no fear of hell and will commit more sins more daringly. Yama got worried by this thought.

The DevAs went with Vishnu to meet Siva and told him of this strange incident. Siva laughed heartily and told them,"This change was caused by the holy Vibhooti!"

 
bhaargava puraanam - part 2

#39x. சிவஜன்மன்- 2

விகுதி ராஜன் அடைந்தான் மனத் துயரம்
‘விதி வாழ்வில் விளையாடுமோ இப்படி?’


“பத்தினியை யாசித்தீர்கள் ஐயா நீங்கள்.
பத்தினிக்குச் சமம் ஆகும் ஒருவன் நாடு.


தந்து விடுகிறேன் என் நாட்டை உமக்கே.
வந்து நிற்பார்கள் இளம் கன்னிகள் இங்கே!


விரும்பியவளைத் தேர்ந்தெடுத்து உங்கள்
விருப்பம்போல வாழலாம் நீங்கள்!” என்றான்.


என்ன சொன்னாலும் ஏற்கவில்லை கிழவன்.
எண்ணம் யாகத்தைக் குலைப்பது ஆயிற்றே!


“உன் புகழ்ச்சி மொழிகள் எல்லாம் பொய்!
உண்மை என்று நம்பி ஏமாந்து விட்டேன்.


என் காரியம் நிறைவேறவில்லை அதனால்
உன் யாகமும் பூர்த்தி ஆகாது ஒருபோதும்.”


விகுதி ராஜன் அவரைப் போக விடவில்லை
“தகுதி இல்லாத பொருளைத் தரமாட்டேன்.


இன்று தங்கிவிடுங்கள்; உணவு அருந்திவிட்டு
சென்று விடலாம் நாளைக் காலை விடிந்ததும்”


சிவஜன்மன் சினம் கொண்டு சபித்தான்;
கவலைப்படவில்லை தன் செய்கைக்கு.


“பிரமச்சரியம், பின் இல்லறம், வானப்
பிரஸ்தம் என்று எண்ணியிருந்தேன்.


குலைத்துவிட்டாய் என் எண்ணங்களை!
கெடுத்துவிட்டாய் என் வாழ்க்கையினை!


அசுரனாகப் பிறப்பாய் அடுத்தபிறவியில்!"
அழித்தான் சிவஜன்மன் யாகசாலையை.


வந்தவர் நாரதர் என உணர்ந்தான் விகுதி;
இந்திரன் பதவியைக் காக்கவே வந்தார்.


உண்மை தெரிந்த பின் மனம் தேறினான்.
ஜன்மம் எடுத்தான் தூமராஜனாக அடுத்து.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
BHAARGAVA PURAANAM - PART 2

#39x. Sivajanman

Viguthi RAjan was saddened by the cruel play of Fate in his life. He made a fresh offer to the old man. “The country of a King is equated to his wife. I shall give away my entire kingdom to you. All the pretty young girls will line up here. You may select the one you like best and live with her happily.”

But the old man was adamant and will compromise on anything – since he had come there in order to ruin the yAgA. “I have heard so much about you good qualities, but now I find that they are all utter lies. My request was not fulfilled by you. So your yAgA will not be fulfilled either.”


Viguthi RAjan did not allow the old man to go off in a huff. He pleaded with him to stay there for the night and leave the next day after eating something.


But the old man did not listen to his words. He cursed Viguhti RAjan, “I was planning to get married and go for Vaanaprastaa later. But you have ruined all my plans. You will be born as an asura in your next birth”


Viguthi RAjan realized that it was NArada who had come disguised as an old an in order to help Indra retain his power and position. He could now console himself after realizing this truth. He was born as Dhoomaasuran in this birth.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#18b. மஹிஷன் வதை (2)

“மந்தமதி படைத்த மஹிஷாசுரனே ! என்னையும்
மந்தோதரி போன்ற பெண்ணென எண்ணினாயோ?

வந்துள்ளேன் நான் உன்னை சம்ஹரிப்பதற்காகவே!
வா போருக்கு அல்லது போ பாதாள உலகத்துக்கு ! ”

யுத்த வெறி கொண்டான் மஹிஷாசுரன் இப்போது!
வைத்துத் தொடுத்தான் சரமாரியாக பாணங்களை!

தடுத்துப் போர் செய்தாள் தேவி தன் பாணங்களால்;
மடிந்தான் துர்த்தரன் மலையைப் போல விழுந்து.

எய்தான் திரிநேத்திரன் ஏழு பாணங்களை – உடனே
எய்தாள் தேவியும் அவற்றுக்கு எதிர் பாணங்களை.

அந்தகன் அடித்தான் சிங்கத்தை உலக்கையால்;
அந்தகனைக் கொன்று, மென்று, தின்றது சிங்கம்.

அடைமழை என அம்புகளை எய்தான் மஹிஷன்
தடுத்துக் கதையால் அவனை அடித்தாள் தேவி.

விழுந்தான் மூர்ச்சித்த மஹிஷன் களத்தில்!
எழுந்தான் தெளிந்த மஹிஷன் கணத்தில் !

பாய்ந்து தாக்கினான் சிங்கத்தின் தலையை;
பாய்ந்து தாக்கியது சிங்கமும் மஹிஷனை.

சிங்க வடிவில் பொருதான் சிங்கத்துடன்- தேவி
சிங்க மஹிஷன் மீது எய்தாள் தன் நாகபாணம்!

எறிந்தான் மலைகளை யானை வடி
வில் மஹிஷன்!
தெறித்தாள் மலைகளை! சிரித்தாள் மஹாதேவி!

பாய்ந்தது சிங்கம் மஹிஷனின் மத்தகத்தில்!
பிளந்தது சிங்கம் மஹிஷனின் மத்தகத்தை!

சர்ப்ப வடிவெடுத்தான் மஹிஷன் அப்போது;
சர்ப்பத்தை வெட்டினாள் தேவி தன் வாளால்!

வெட்ட முயன்றான் தேவியை மஹிஷன் – ஆனால்
வெட்ட முடியவில்லை தேவியை மஹிஷனால்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#18b. Devi’s anger

“Do you think me to be an ordinary foolish girl like Mandothari? I have taken this avatar only to punish you and destroy you! Either come and fight with me or go back to Paataala now!” Devi spoke to Mahishan angrily.


Devi’s words made Mahishan’s infatuation for her evaporate in his seething anger. All he wanted now was to fight with Devi. He started shooting arrows like a rain cloud raining water droplets. Devi blockd or broke them with her own arrows.


Durdaran fell deal like an uprooted mountain. Trinetran shot seven arrows on Devi. Devi broke his arrows with her own. Andakan attacked Devi’s lion. The lion killed Andakan and devoured his dead body.


Devi blocked Mahishan’s cloud of arrows and attacked him with her mace. Mahishan fainted in the battle field but came round soon. Now he attacked Devi’s lion on its head. The lion struck him back with its powerful claws and paws.


Mahishan now transformed himself into a lion and fought with Devi’s lion. Devi shot her Naaga BaaNam on Mahishan. Now he changed into a wild elephant, uprooted mountains and tossed them around.


Devi’s lion jumped on the elephant and split its head into two. Mahishan changed his form to a serpent. Devi cut the serpent with her sword. Mahishan tried attack Devi with his sword but could not!
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#15c.பித்ரு தீர்த்தம்

"குனிந்து பார்த்த துர்வாசரின் விபூதி வாசனை
கலந்து சென்றது காற்றுடன் அந் நரகத்துக்கு!

அறிவீர் காரணம் இதுவே இந்த விந்தைக்கு !
மாறிவிடும் கும்பீபாகம் புனிதத் தீர்த்தமாக.

சுகம் பெறுவர் பித்ருக்கள் அதில் நீராடி;
மாறும் அதன் பெயர் பித்ரு தீர்த்தம் என்று.

உயர்வடையும் மூவுலகில் உள்ள அனைத்துத்
தூய புண்ணிய தீர்த்தங்களிலும் பித்ரு தீர்த்தம்.

செய்வர் பூஜை சிவலிங்கத்தை அமைத்து;
செய்வர் பூஜை தேவியையும் ஸ்தாபித்து.

புகழ் பெறும் இது மூன்று உலகங்களிலும்;
புகழ் பெறக் காரணம் ஆகும் தூய திருநீறு!"

இனிய குரலில் கூறினார் சிவபெருமான்;
பணிவோடு வணங்கிச் சென்றனர் தேவர்கள்

எடுத்துரைத்தனர் யமனிடம் பிரான் கூறியதை;
எடுத்துரைத்தனர் யமனிடம் நீற்றின் பெருமை.

மகிழ்ந்தனர் பித்ருக்கள் புண்ணிய தீர்த்தமாடி;
மகிழ்ந்தனர் பித்ருகள் சிவன் உமையை பூஜித்து.

மூழ்கி எழுந்தனர் அப் புண்ணிய தீர்த்தத்தில்
முன்பு நரகத்தில் இருந்த பாவிகள் எல்லாம்.

பெற்றனர் புனித சரீரம், புண்ணிய பலன்கள்;
பெற்றனர் பத்திர கணங்கள் என்ற பெயரை!

அடைந்தனர் கைலாசம் பொன் விமானம் ஏறி;
அடைந்தனர் பித்ருக்கள் தீர்த்த குண்டத்தை.

நிர்மாணித்தனர் கும்பீபாகத்தைத் தொலைவில்;
நிர்மல விபூதி அணிந்தவர்கள் செல்லத் தடை!

திருநீற்றின் பெருமையை வெளிக் காட்ட
சிறந்த நிகழ்ச்சி இதைவிட வேறு எதற்கு?

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#15c. Pitru Teertam


Siva explained the reason for this strange incident to the DevAs and Vishnu. "When sage DurvAsa bent down to look at the Hell Kumbee BhAga, the smell of his Vibhooti mixed with the air and got blown down towards the Hell.

Now the Hell Kumbee BhAga will transform into a holy teertam. The Pitrus will take a holy dip in the holy teertam which will get the name as 'Pitru Teertam'.

This teertam will become more famous than all the other holy teertam in the three worlds. A Siva lingam will be established near it. The image of Devi Uma will also be established along with it. This will become a very holy teertam in the future"

The DevAs took leave of Siva and told Yama the reason for this miraculous change. Everyone understood the greatness of the holy Vibhooti.
The Pitrus were happy to have a holy dip in the teertam and worship Siva and Uma.

The souls who were suffering in Kumbee BhAga hell also took a holy dip in the teertam. And all their sins vanished. They got a divine body and good merits. They got the name as 'Badra GanAs'. They reached KailAsa by getting into the vimAnams sent from Sivalokam.

A new Hell Kumbee BhAga was created far away from the Teertam. Also anyone wearing the holy Vibhooti was not allowed to go anywhere near it.


Can there be any better incident to bring out the greatness of the holy ash Vibhooti?
 
BHAARGAVA PURAANAM - PART 2

#39y. சுமுதை

மாதவன் ஆண்டான் மகிபாதினியை;
மனைவி கற்புக்குக்கரசியான சுமுதை.


புத்திரப் பேறு இல்லை இவர்களுக்கு;
நித்தம் குறைகூறினான் மனைவியை.


‘வெறுமையான வாழ்வே தண்டனை!
வெறுக்கும் கணவனும் தேவையா?’ என


நாட்டைத் துறந்து விட்டாள் சுமுதை;
காட்டுக்குச் சென்றாள் தவம் செய்திட.


‘விரதத்தால் புத்திர
ப் பேறு! அன்றேல்
இரையாவேன் வனவி லங்குகளுக்கு!’


நாரணனைக் குறித்துச் செய்தாள் தவம்;
நான்கு புறங்களிலும் மறைத்தன புதர்கள்!


விஷ்ணுவாகத் தோன்றினார் விநாயகர்,
“வேண்டும் வரம் யாது?” என்று கேட்டார்.


"திருக்குமாரனாக நீர் அவதரிக்க வேண்டும்.
திரும்பவும் கணவனின் அன்பு வேண்டும்”


“நிறைவேறும் விருப்பம் விரைவில்!”
உறுதி மொழி அளித்தார் இறைவன்.


தவம் ஆக்கி
விட்டது புடமிட்ட பொன்னாக.
தவத்தால் ஒளிர்ந்தாள் தேக காந்தியுடன்.


கண்டவர் வியந்தனர் தேக காந்தியால்!
கணவனும் வியந்தான் தேக காந்தியால்!


இல்லறம் இனிக்கலானது இருவருக்கும்
சொல்லிய சொல்லும் பலித்தது விரைவில்.


கருவுற்றாள் சுமுதை, மனம் மகிழ்ந்தாள்;
கருவிலே உருவானவன் நாராயணனே!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
BHAARGAVA PURAANAM - PART 2

#39y. Sumudai

MAdhavan ruled over MahipAdini. Sumudai was his loyal wife. They did not have any children. MAdhavan kept blaming Sumudai for this. She yearned for a child and her husband’s cruel words tortured her.


She decided to go to the forest and do penance. She said to herself. ‘Either I will come back with a boon for a son or I will end up as food for the wild beasts there.”


She meditated of NArAyaNan. Several years passed by and she was completely covered bu the plants and bushes all around her. VinAyaka appeared to her as VishNu and blessed her.


Sumudai asked for two boons, “I must beget you as my son. I must win back my husband’s love!” God blessed her and granted her both these boons.


Sumudai went back to her country. Now she glowed with the aura her severe penance had bestowed on her. People were wonder struck to see her glow like pure gold. Her husband MAdhavan was also surprised by her glow and accepted her with affection.

They lived happily and soon Sumudai conceived a son. It was NArAyaNa himself who was in her womb.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#18c. மஹிஷன் வதை (3)

சுய உருவெடுத்தான் மஹிஷன் மீண்டும்;
பெயர்த்து எறிந்தான் மலைகளைக் கெல்லி.


இடித்துத் தள்ளினான் தேவியைக் கொம்பால்!
இடி முழக்கம் செய்து நகைத்தான் மஹிஷன்.


வாலைச் சுழற்றி அடித்தான் தேவியை!
“வலிமை எங்கே போயிற்று பெண்ணே?


கொள்ளமாட்டேன் இனி மோஹம் உன்மீது!
கொல்ல வந்த உன்னை நான் கொல்வேன்!”


“அலறாதே எருமையனே போர்க்களத்தில்;
அழகானது அல்ல உன் குரல் கேட்பதற்கு.


துன்புறுத்தினாய் தேவர்களை, சாதுக்களை;
இன்புற்றாய் சுவர்க்கம் தரும் போகங்களில்.


ஒழித்து விடுகிறேன் தேவர்களின் அச்சத்தை;
ஒழித்து விடுகின்றேன் உன்னை மிச்சமின்றி! ”


சண்டிகை உருவெடுத்தாள் தேவி அப்போது;
கொண்டிருந்தாள் கையில் மதுப் பாத்திரம்.


சுவைத்து அருந்தினாள் திராக்ஷை ரசத்தை;
சூலாயுதத்துடன் துரத்தினாள் மஹிஷனை.


மாயப்போர் நிபுணன் மஹிஷன் தாக்கினான்
மாய வித்தைகளில் பல்வேறு வடிவெடுத்து.


சிவந்த கண்களுடன் குத்தினா
ள் மஹிஷனை;
சிறிது நேரத்தில் தெளிந்து எழுந்தான் மஹிஷன்!


தாக்கினான் கால்களால் வெறியோடு மஹிஷன்;
தாக்கியது மஹிஷனைக் கதிர் வீசும் சக்கரம்.


அறுந்தது சக்கரத்தால் மஹிஷனின் சிரம்;
அறுத்த பின் திரும்பியது தேவியின் கரம்!


ஓடியது பெருகிய ரத்த வெள்ளம் பாய்ந்து!
ஆடினார் அமரர் ஆனந்த வெள்ளம் பாய !


அறைந்து தின்றது அசுரர்களைச் சிங்கம்;
விரைந்தனர் பாதாளம் மிஞ்சிய அசுரர்கள்.


சண்டிகை தேவியும் மறைந்து அருளினாள்;
கொண்டனர் பேருவகை விண்ணில் அமரர்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAATGAVATAM - SKANDA 5

5#18c. The end of Mahishan

Mahishan took his original form now – complete with a pair horns and a tail. He uprooted and tossed the mountains with his mighty horns. He attacked Devi with his horns and beat her by swirling his strong tail.


He laughed at her mockingly and shouted, “What has happened to your valor now? I will not desire you any more. Instead I will destroy you before you can destroy me!”


Devi said, “Don’t shout while you fight. Your voice is not too pleasing to hear. You were harassing the Devaas and the saadhus. You were enjoying the pleasures of Heaven which do not belong to you. I will put an end to the sorrows of the Devaas. I will put an end to your atrocities.”


Now Devi assumed the form of Chandigai! She held a vessel of wine in her hand. She drank the grape wine from it and started chasing Mahishan with her trident. Mahishan was an expert in warfare by Maayaa. He assumed various forms and fought with Devi.


Devi struck him with her trident and her eyes had turned red due to her anger. He fell faint but came round again.

Mahishan now attacked Devi with his powerful hoofs. Devi released her discus which was radiating light rays like a Sun. It severed the head of Mahishan and returned to the hands of Devi.


A river of fresh red blood flowed from Mahishan’s body. The mirth and joy of the Devaas flowed like a river of happiness. Devi’s lion killed and ate the asuras who were still alive. The rest of the asuras fled to Paataala to save their lives.


Chandigai disappeared from the battle field. The Devaas were overwhelmed and started praising Devi.
 
62g. திருநீற்றுப் பதிகம்

https://www.youtube.com/watch?v=VlbE5j3-lHc

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே…. (1)

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே…. (2)

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு

சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே…. (3)

காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே…. (4)

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு

பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே….(5)

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு

வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே….(6)

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே….(7)

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே….(8)

மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு

மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே….(9)

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்

கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே….(10)

ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே….(11)

https://kayarevee.wordpress.com/திருவிளையாடல்கள்-மூன்ற/திருநீற்றுப்-பதிகம்/
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#15d. ஊர்த்வ புண்ட்ர விதிகள்

எடுக்க வேண்டும் நாமம் இடும் திருமண்ணை
கடற்கரையிலிருந்து, சிவத் தலங்களிலிருந்து;

மலைச் சிகரங்களிலிருந்து, நதிக் கரையிலிருந்து;
துளசியின் வேரில் இருந்து, புற்றுக்களில் இருந்து.

தரும் கருப்பு நிற மண் மனச் சாந்தியை;
தரும் சிவப்பு நிற மண் நல்ல வசீகரத்தை;

தரும் பொன்னிற மண் சிறந்த சம்பத்தை;
தரும் வெண்ணிற மண் சிறந்த தர்மத்தை.

தொடக் கூடாது நகத்தால் திருமண்ணை;
இடலாம் இதை அழகிய பல வடிவங்களில்.

தீபம், மூங்கில் இலை, தாமரை மொட்டு,
மச்சம், கூர்மம், சங்கு போன்ற வடிவில்!

உத்தமம் ஆகும் பத்து அங்குலம் இடுவது;
மத்யமம் ஆகும் 9,8,7,6 அங்குலம் இடுவது.

அதமம் ஆகும் 4, 3, 2 அங்குலம் இடுவது - தரும்
அதிக பாபம் திருமண்ணே இடாமல் இருப்பது.

பன்னிரண்டு திருநாமங்களை உச்சரித்த வண்ணம்
பன்னிரண்டு நாமங்களை இடவேண்டும் உடலில்.

தரும் தூய்மை திருமண் இடுவது - அதில்
இருப்பர் விஷ்ணு, லக்ஷ்மி இடைவெளியில்.

சந்து விடாமல் புண்டரம் தரித்துக் கொள்வது
சமம் ஆகும் அவர்களை விலக்கி வைப்பதற்கு.

புண்டரம் தரிக்காமல் செய்யும் கர்மங்கள்
வீணாகிப் போய்விடும் வைஷ்ணவர்களுக்கு.

இடக் கூடாது திரிசூலம், லிங்கம், சந்திரப்பிறை.
இடக் கூடாது திருமால் போன்ற வடிவங்களை.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#15d. Oordhva PuNdram

The red soil required for marking the Oordhva PuNdram is to obtained from the crests of hills, the banks of the rivers, the Siva Kshetras, the ocean beaches, the ant-hills or from the roots of the Tulasi plants. The earth is not to be taken from any other place.

The black coloured earth gives peace of mind, the red-coloured earth endows physical attractiveness ; the yellow-coloured earth increases prosperity and the white-coloured earth gives better religious disposition.

The Oodhva puNdra is to be drawn with the fingers, taking care to make sure that the nails do not touch the marks. The shape of the vertical mark can resemble a flame or a lotus bud, or the leaf of a bamboo, or a fish, or a tortoise or a conch-shell.

A mark ten inches long is the best. Marks 9 / 8 / 7 / 6 inches are good but length lesser than that is not good. The twelve NAmAs of Vishnu must be uttered while marking the twelve NAmams (holy marks) on the body.

Vishnu and Lakshmi reside in the gap in the Oordhva puNdram. So care must be taken to make sure that there are gaps between the three lines. The karma's performed without marking the Oordhva puNdram will be wasted.

One must avoid using the shapes of Trisoola, Sivalinga and crescent moon.

 
BHAARGAVA PURAANAM - PART 2

#39z. தூமாசுரன்

அண்டை நாடுகளை வென்று அவற்றை
ஆண்டு வர விரும்பினான் தூமாசுரன்.


படைகள் நடந்தன திக்விஜயத்திற்கு;
திடீர் முடிவு திகைப்பளித்தது பலருக்கு.


தூமாசுரன் கேட்டான் அசரீரி ஒன்றினை,
“சேமமாக ஆட்சி செய்து கொண்டிருந்தாய்!


ஆசை மிகுதியால் படை நடத்துகின்றாய்;
அழிப்பான் உன்னைச் சுமுதையின் மகன்.”


திடுக்கிட்டு நின்றான் தூமாசுரன் அதுகேட்டு!
‘கெடுத்துக் கொண்டேனோ வாழ்வை நானே?”


தருமமூர்த்தி உரைத்தான் தருமத்தை.
“தருமம் தவறி நடந்தால் அழிவு உறுதி!


அருள் வேண்டினால் இல்லை அழிவு.
சரண் புகுவோம் நாம் சுமுதை மகனிடம்!”


சம்மதிக்கவில்லை மற்ற அமைச்சர்கள்.
‘இம்மாதிரியான அறிவுரையா தருவது?’


“சரண் அடைவதா சின்னப் பயலிடம்?
சிவன் அருள் பெற்று அழிவற்றவர் நீர்.


பகைவன் பிறப்பான் என்று அறிந்ததும்
பகைவனை அழிக்க வேண்டும் உடனே!


கருவில் உருவான குழந்தையை அழித்தால்,
விரைவில் விடுபடலாம் கவலையிலிருந்து!”


வித்ருமனை வரவழைத்தான் தூமாசுரன்
“சத்ருவை அழிப்பது உன்னுடைய கடமை.


கருவிலே உருவாகும் சுமுதை மகனை
விரைவில் அழித்துவிட்டு வா!” என்றான்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.




 
BHAARGAVA PURANAM - PART 2

#39z. DhoomAsuran

DhoomAsuran wanted to conquer the neighboring countries and rule over them too. He led his army on a dikvijayam.


People were surprised by this sudden decision. He heard an asareeri then. ” You used to rule well oh DoomAsuran! Now you have become very greedy and ambitious. Beware! The son of Sumudai will destroy you!”


DhoomAsuran was shocked! “Have I ruined my own life by this dikvijayam?” One of his ministers Dharma moorthy told him, “If we go against dharma we will be punished. If we seek the grace, we will not be punished. Let us surrender to the son of Sumudai.”


The other ministers did not approve of this idea. It was unthinkable to surrender to a small baby. They told DhoomAsuran, “You have been blessed by Siva and you can not be destroyed by anyone. If we learn about the birth of an enemy we must kill him and be rid of all the worries. Send someone to kill the baby and then you can live without a worry”


DhoomAsuran called Vidruman and ordered him, “Go forth and destroy the son of Sumudai now!”
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#19a. மஹிஷாசுர மர்த்தனி (1)

இந்திரனும், தேவர்களும் துதிக்கலாயினர்
தொந்தரவு செய்த மஹிஷனை அழித்ததற்கு.


“மகேஸ்வரி தாயே! லோக மாதா நீயே!
முறையாக முத்தொழில் செய்பவள் நீ !


மும் மூர்த்திகளின் முச்சக்தியும் நீ
யே – தாமே
மும் மூர்த்திகள் இயங்க இயலாதவர்கள்.


புகழ், அறிவு, நினைவு, மட்டுமன்றி
கதி, கருணை, தயை, சிரத்தை நீயே!


பூமாதேவி, கமலை, ஜயை மட்டுமன்றி
புஷ்டி, கலை, விஜயை, கிரிஜை நீயே!


புத்தி, உமை, ரமை, பிரபுத்வம் மற்றும்
வித்தை, துஷ்டி, க்ஷமை, காந்தி, மேதை நீ!


அனைத்தும் நீயே! ஸ்வாஹா தேவி நீயே!
அனைவருக்கும் ஆனந்தம் தருபவள் நீயே!


காப்பாய் நம்புபவரையும், நம்பாதவரையும்!
காப்பாய் பயனுள்ள, பயனற்றவர்களையும்!


சுகத்தைத் தரும் ஞான வித்தையும் நீயே!
துக்கத்தைத் தரும் அவித்தையும் நீயே!


பிறவிப் பிணியைத் தருபவளும் நீயே!
பிறவிப் பிணியைத் தீர்ப்பவளும் நீயே!


சுகம் தருபவள் நீயே என்று உணராமல்
சுகபோகிகள் தொழுவதில்லை உன்னை!


சரணடைகின்றோம் உன்னிடம் தேவர்கள்
சரணடைகின்றனர் உன்னிடம் முனிவர்கள்


மும் மூர்த்திகளை உலகத்தினர் தொழுவது
முச்சக்தியை நீ அவர்களுக்குத் தருவதனால்.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#19a. Mahishaasura Mardhani (1)

Indra and the other Devaas started praising Devi’s greatness. They were thankful to her for destroying the troublesome Mahishaasuran.


“You are Maheswari! You are the mother of the world! You are responsible for the three fold activities of creating, protecting and destroying. You bestow energy and power to the Trinity. Without your help, they are incapable of doing anything by themselves.


You are Fame, Buddhi, Memory, Final abode, Mercy, Sympathy, Enthusiasm, Mother earth, Lakshmi Devi, Victory, Pushti, Kala, Vijaya, Girija, Uma, Rama, Thushti, Kshamai, Kaanti and Medha.


You are the Swahaa Devi! You are the giver of happiness and bliss.You protect both the believers and the non believers. You protect the useful people as well as the useless people.


You give us true knowledge and liberate us from samsaaraa. You make us ignorant and bind us in samsaaraa. Those who indulge in pleasure do not realize that you are the giver of the bliss and do not worship you.

The Devaa surrender to you.The rushis surrender to you.The Trinity are worshiped by the world merely because of the power you bestow on them to do their jobs as ordained by you.”
 

Latest ads

Back
Top