• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

BHAARAGAV PURAANAM - PART 2

#40a. Gajamukha asuran

The asurA were defeated by the DEvA in a battle and went into hiding. To bring back their happy days, they needed powerful asurA who could win over the DEvA.


MAgathar was doing severe penance. He could give might asurA sons – if an asura kanya could go to him and infatuate him. VibudhA was a beautiful asura kanya. She was selected for this task and sent to the sage MAgathar.


VibudhA did not disturb the penance of MAgathar but sat in front of him like a tapasvini. When MAgathar came out of his penance, he saw two elephants playing amorously. He was aroused by the sight. He then saw the beautiful tapasvini sitting in his front.


He spoke to her thus: “Why do you waste your youth and beauty in doing penance instead of enjoying with your husband?


Vibudha replied, ” I am not yet married. You have stolen my heart. I can’t marry anyone else. So I am waiting for you!”

Her words were sweeter than honey and her restless eyes were prettier than those of a doe. She was more beautiful than Rati Devi and MAgathar could not resist any more. He forgot himself, he forgot his penance and he did not even bother to find out who that beautiful girl really was!

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#21a. சும்ப, நிசும்பர்கள் (1)

‘ஜனமேஜயனே! விரும்புகின்றாய் மேன் மேலும்
மனமொன்றி தேவியின் லீலையைக் கேட்டிட.


சும்பன் நிசும்பன் ஆவர் கொடிய அரக்கர்;
சொந்தம் உண்டு அண்ணன் தம்பி என்று.


அகம்பாவிகள், முரடர்கள், வலியவர்கள்.
ஆண்களால் கொல்ல முடியாதவர்கள்.


படை பலம் மிகுந்த அசுர சகோதரர்களின்
இடைவிடா விளையாட்டுத் துன்புறுத்துவது.


மாயாவி அசுரர்கள் இவர்களின் தளபதிகள்;
மாயப் போர் புரிந்து மாய்த்தனர் சாதுக்களை.


சண்டன், முண்டன், குரூரன், ரக்த பீஜன்
தாமிர லோசனன் அழிந்தனர் தேவியால்.


சும்ப, நிசும்பர்கள் வந்தனர் பூவுலகுக்கு
வம்பு செய்திட பாதாளத்தில் இருந்து.


இருந்தனர் புஷ்கர க்ஷேத்திரத்தில் அவர்கள்
புரிந்தனர் கடும் தவம் பிரமனைக் குறித்து.


உருண்டோடின பதினாயிரம் ஆண்டுகள்
மறந்தனர் அன்ன, பான, நித்திரைகளை!


மகிழ்ந்தான் பிரமன் கடும் தவத்தால்
நெகிந்து வந்தான் அன்னத்தின் மீதேறி.

“வேண்டும் வரம் கேளுங்கள்!” என்றதும்
“வேண்டும் எமக்கு அழிவில்லாத தேகம்.


கொடியது அனைத்திலும் மரண பயம்;
கொடிய பயத்தைப் போக்கி அருள்வீர்.”


வியந்தான் விரும்பிய வரத்தினால் பிரமன்!
விளக்கினான் காலத் தத்துவத்தை பிரமன்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி



 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#21a. Sumban and Nisumban (1)

Sage Vyaasaa was pleased that Janamejayan wanted to listen to more of Devi’s leelaas. He related the tale of Sumban and Nisumban now.


“Sumban and Nisumban were two mighty and wicked asuraas. They were brothers. They could not be killed by any male. They had a large army under their control and their favorete past time was terrorizing good people.


They had several asuras well versed in Maayaa tricks a his generals. Chandan, Mundan, Krooran, Raktha Beejan, Taamralochanan were a few of his generals who had to get killed by Devi herself.


Sumban and Nisumban came to the earth from the Paataala. They resided near Pushkara kshetram and did severe penance on Brahma for ten thousand years. They did not eat or drink or sleep. Brahma was very pleased with their severe penance and appeared om front of them.


He wished to give the boon they wanted. Sumban and Nisumban wished for this boon, “Make us immortal Oh Lord! There is nothing more terrorizing than the fear of death. Remove that fear from our minds please!”

Brahma was stunned to hear this. He explained to them the importance of the Time Factor and how it controls the lives and life spans of everyone and everything.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#40b. கஜமுக அசுரன்-2

பெண் யானையாக மாறினாள் விபுதை,
ஆண் யானையாக மாறினார் மாகதர்.


காதலுடன் கூடிய இருவருக்கும் பிறந்தான்
கஜமுகன் என்னும் வலிமை வாய்ந்த அசுரன்.


பெண் யானையின் மயிர்க்கால்களில் இருந்து
எண்ணிறந்த அசுர வீரர்கள் உற்பத்தி ஆயினர்.


தவம் செய்யும் முனிவர் மக்கள் அசுரர்களா?
குலம், நலம் அறியாமல் கூடியதன் விளைவு!


“பெண்ணே! நீ யார் உண்மையைக் கூறு!”
“முனிபுங்கவா! நான் அசுர கன்னி விபுதை.


தேவை தேவர்களை வெல்லும் மகன் எனத்
தேடி வந்தேன் நான் தவசீலர் ஆகிய உம்மை.


ஆசி கூறி வாழ்த்துங்கள் நம் மகனை,
அசுரர்களிடம் கூட்டிச் செல்லும் முன்”


“தேவர்களுக்குத் தகுந்த எதிரி பிறந்தான்!”
தேனாக அசுரர்களுக்கு இனித்தது செய்தி.


குலகுரு கூறினார் கஜமுக அசுரனிடம்,
“பலம் மிக்கவனாக ஆகவேண்டும் நீ!


தவம் செய்வாய் சிவனைக் குறித்து
தவம் பெற்றுத் தரும் அரிய வரங்கள்.


வரம் அளிப்பதில் வள்ளல் சிவபிரான்;
வரம் தரும் உலகை ஆளும் வலிமை.”


கானகம் சென்றான்; தவம் புரிந்தான்;
காணக் கிடைத்தது சிவன் தரிசனம்.


தேவர்களால் அழிவின்மை பெற்றான்.
மூவுலகை ஆளும் வலிமை பெற்றான்


தலைநகர் ஆனது மாதங்கபுரம் – அவனைத்
தலை வணங்கினர் மூவுலகத்தினரும் கூடி.


அடிமைப் படுத்தினான் தேவ சமூஹத்தை
அடிபணிந்த தேவர் புரிந்தனர் குற்றேவல்.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
BHAARAGAVA PURAANAM - PART 2

#40b. Gajamukha asuran

VibudhA became a female elephant and MAgathar a male elephant. When they made love, a mighty son Gajamukha asuran was born to them. Many more asurA were born out of the hair follicles of the female elephant.


MaaAgathar was taken aback. How could he a rushi produce asurA? He asked Vibuda, “Tell me the truth now. Who are you?” VibudA was honest and told him all about herself.


She said “I am an asura kanya sent to you to beget mighty sons. Please bless our children before I take them back to the asurA kingdom”


ThE news that a mighty son and may more valiant asurAs have been born was a welcome news to the asurA. They rejoiced on hearing this.


SukrAchArya – the asura kulaguru – told Gajamukhan, “You must become very strong by doing penance and obtaining boons from lord Siva. He is very generous with his boons.”


Gajamukha asuran started doing severe penance on Siva. Eventually Siva appeared before him and gave him several boons. Gajamukhan would become invincible by the DEvA. He would conquer and rule over all the three worlds.


Gajamuhkan made MAthangapuram his capital city and ruled all the three worlds. DEvA became his servants and did the menial jobs ordered by him.


 
5#21b. சும்ப, நிசும்பர்கள் (2)

“உலகியலுக்கு மாறான வரம் தர இயலாது!
உலகில் பிறந்தவைகளுக்கு உண்டு அழிவு.

காலத் தத்துவத்தை மாற்ற இயலாது;
காலத் தத்துவத்துக்கு
ட்பட்ட என்னால்!"

சிந்தித்தனர் சகோதர்கள் வெகு நேரம் – நிர்
பந்தித்தனர் இந்த வரம் தர பிரமதேவனை.

“உண்மையே உம் கூற்று படைப்புக் கடவுளே!
மண்ணில் பிறந்தவற்றுக்கு உண்டு மரணம்.

நேரக் கூடாது எமது மரணம் இவற்றால்;
தேவர், மனிதர், மிருகங்கள், பறவைகள்.

வர வேண்டும் மரணம் ஒரு பெண்ணால்!
தர வேண்டும் இந்த வரத்தை நீர் எமக்கு!

எந்தப் பெண்ணுக்கு இருக்கும் ஆற்றல்
எம்மைக் கொன்று குவிப்பதற்கு?” என

அருளினான் கோரின வரம் பிரமன் – மறைந்து
அருளினான் மீண்டும் அன்ன வாஹனம் ஏறி.

சென்றனர் தம் இருப்பிடம் சும்ப, நிசும்பர்கள்;
நன்னாள் ஒன்றில் அமர்ந்தனர் அரியணையில்.

உணர்ந்தனர் இனி நம் கை ஓங்குமென்று,
இணைந்தனர் அசுரர் சும்ப, நிசும்பரோடு!

ரக்தபீஜன், தாம்பரன் வந்தனர் படையுடன்
ரக்தபீஜன் பெற்றிருந்தான் ஓர் அறிய வரம்.

சிந்திய ரத்தத் துளியிலிருந்து விளைவான்
சிறந்த வீரன் அவனைப் போன்றே ஒருவன்.

ரத்தமே பீஜமாகி அசுரர்களை விளைவிப்பதே
ரக்தபீஜன் என்ற விநோதப் பெயர்க் காரணம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#21b. Sumban and Nisumban (2)

Brahma told Sumban and Nisumban, “I can not give a boon against the Law of Nature. Everything created will get destroyed some day. I myself am bound by Time Factor. So I can’t bend the all binding Time Factor to suit your needs”


The two brothers Sumban and Nisumban pondered over this statement for time and saw the truth in it. They told Brahma, “What you say is true Oh Brahma Deva! Whatever is born will have to die. But please grant us this boon that we will not get killed by Deva or Manushya or birds or animals. If at all, we may die in the hands of a woman. We know that no woman will dare to cross swords with us!”


Brahma granted them that boon and disappeared from there. The brothers Sumban and Nisumban returned to their abode and sat on the throne on an auspicious day. The asuraas realized that under their combined leadership a great future awaited the asurass. So they joined hands with Sumban and Nisumban.


Raktabeejan and Taamralochanan came to them with their own armies. The asuraa clan became stronger day by day. Raktabeejan had a rare ability. From every drop of blood he sheds, there will appear a might asura as great as himself.

The drops of blood acted as seeds and produced more asuraas. That was the reason for his unusual name Raktabeejan.
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#23a. காயத்ரீ ஜபம்

நாளொன்றுக்கு ஆயிரம் உரு என்ற கணக்கில்
நிஷ்காம்யமாக ஜபம் செய்திட வேண்டும்.

ஆயுள் விருத்தியாகும் ஒரு மாதம் ஜபித்தால்;
ஆரோக்கியம் ஆகும் இரண்டு மாதம் ஜபித்தால்.

விருத்தியாகும் சம்பத்து மூன்று மாதம் ஜபித்தால்
விருத்தியாகும் புகழ் நான்கு மாதம் ஜபித்தால் .

விருத்தியாகும் வித்தை ஐந்து மாதம் ஜபித்தால்
விருத்தியாகும் மாதங்கள் இன்னும் அதிகரித்தால்.

இஷ்ட சித்தி உண்டாகும் ஒற்றைக் காலில் நின்று
இரு கைகளை உயர்த்தி முன்னூறு உரு ஜபித்தால்.

இஷ்டப்பட்டவை எல்லாம் கிடைக்கும் இதுபோல
இயல்பாக ஆயிரத்தெட்டு முறைகள் ஜபித்தால்.

மனம் ஒருமித்து ஜபித்தால் கிடைக்கும்
மோக்ஷப் பிராப்தி ஒரு மாத காலத்தில்.

எல்லாமே சித்திக்கும் இது போலத் தொடர்ந்து
எல்லோரும் மூன்று லக்ஷம் உரு ஜபித்தால்.

நீரில் மூழ்கி நூறு உரு ஜபித்தால் கைக்கூடும்
விரும்பும் மனோ ரதங்கள் ஒரே மாதத்தில்.

மூன்று லக்ஷம் உரு ஜபித்தால் சித்திக்கும்
மனம் விரும்பியவைகள் அனைத்துமே.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#24a. GAyatree Japam (1)

Gayatree mantra must be chanted one thousand times per day. Chanting for one month makes one life span longer. Chanting for two months will improve one's health.

Chanting for three months bestows wealth on the person. Chanting for four months will make him very famous. Chanting for five months will make him very skillful. As the number of months of chanting increases the benefits also increase.

If a person stands on one leg, lifts up both his hands and does this japam three hundred times, he will get his ishta sidddhi. Doing japam one thousand and eight times will make him get all his desires fulfilled.

Concentrated japam for one month will make him eligible to obtain moksham or liberation. Doing the japam for three lakh times will make him get everything he can think of.

Standing in water and doing japam one hundred times a day for one month will make his wishes come true. Doing japam three laksh times in this manner will bestow on him all the greatness.
 
BHAARGAVA PURAANAM - PART 2

#40c. கரிமுக நாதன்

உத்தியான வனத்தில் உலவினர் சிவன் உமை;
சித்திரங்கள் விளங்கின மண்டபச் சுவர்களில்.

எனையவற்றில் இருந்து மாறுபட்டு இருந்தது
யானைகள் சுகித்திருப்பது போன்ற சித்திரம்.

பெண் யானையைப் பார்த்திருந்தாள் உமை;
ஆண் யானையில் லயித்திருந்தான் சிவன்;

கோடி சூரியப் பிரகாசத்துடன் தோன்றினார்,
கோடி மன்மத அழகுடன் குட்டி விநாயகர்!

உச்சி முகர்ந்து மகிழ்ந்தனர் விநாயகரை;
“அச்சம் தீர்க்கப் பிறந்தவன் நீ!” என்றனர்.

சர்வ சக்திகளையும் அளித்து வாழ்த்தினர்;
சர்வத்துக்கும் அவரை முதன்மை ஆக்கினர்.

“அடிமைப் படுத்தியுள்ளான் தேவரைக் கஜமுகன்.
கொடுமைப் படுத்துகிறான் தேவரைக் கஜமுகன்.

அழிவில்லாத வரத்தைப் பெற்றுள்ளான்;
அளவில்லாத மமதை கொண்டுள்ளான்.

முடிப்பாய் கஜமுகனைப் போரில் வென்று.
துடைப்பாய் தேவர்களின் துயரை இன்று!”

புறப்பட்டு விட்டார் யுத்தத்திற்கு விநாயகர்;
பூதன் அசலன் ஆனான் அவரது வாகனமாக.

கஜமுகன் படைவீரர்கள் தயார் நிலையில்!
கலந்தன படைகள் மாதங்க நகர் அருகில்!

விநாயகர் முன் வந்து நின்றான் கஜமுகன்.
“வீரப் பிரதாபச் சிறுவன் நீதானா?” என்றான்.

“அறிவாயா சிறுவா வில்லை எடுப்பது பற்றி?
அறிவாயா சிறுவா பாணம் தொடுப்பது பற்றி?”

“தர்மம் பெரியது; அதர்மம் சிறியது அறிவாய்.
தர்மம் வெல்லும் உருவில் சிறியதானாலும் !

தேவர்களை சிறை விடு! நீ நல்லவனாகி விடு!
தேவையில்லை இங்கு இன்று இந்த யுத்தம்.

அழிவில்லாமல் நீடு வாழலாம் இப்போதும்
அழித்துவிட்டால் உன் அகந்தையை நீயே!”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி


 
BHAARGAVA PURAANAM - PART 2

#40c. Karimukha NAthan

Siva and Uma were taking a stroll in a garden. It had a maNdapam with colorful paintings on it walls. One of those paintings was different from the rest. It portrayed two elephants playing amorously. Siva was staring at the male elephant and Uma at the female elephant. Baby VinAyaka came in to existence from the power of their thoughts.


He was as brilliant as ten million suns put together and as lovely as ten million Manmathas put together. Siva and Uma embraced the child and said, “You are born to put an end to all the sufferings of the DEvA and remove their fear.”


They blessed him with all the special powers. They made him the foremost among gods. They told VinAyaka, “Gajamukha asuran has imprisoned all the DEvA. He is ill treating them in the prison. He has got several boons and has become very arrogant because of the boons. You must release the Deva from his prison”


Vinayaka left for the battle field. He rode on the back of Achalan one of the gaNaas of Siva. Gajamukhan had his army ready and the two armies came together outside MAthangapuram.


Gajamukha asuran came in front of VinAyaka and asked, “So you are the miracle child born to kill me! Do you know how to hold a bow? Do you know how to shoot an arrow?”


VinAyaka replied, “Dharma is large and powerful. Adhrma is small and weak. Dharma will conquer Adharma. Release the DEvA from your prison now. Then this war will not be necessary. Destroy your pride so that you may still live for a long time!”


 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#21c. ரக்தபீஜன்

வெல்பவர் இல்லை ரக்த பீஜனை எதிர்த்து;
கொல்பவர் இல்லை ரக்தபீஜனை எதிர்த்து.


படை சேர்ந்ததும் பலம் கூடி விட்டதால்
படை நடந்தனர்; வென்று சூறையாடினர்.


கைப் பற்றினர் இந்திரனின் சுவர்க்கத்தை;
கைப் பற்றினர் இந்திரன் சொத்துக்களை.


கற்பகச் சோலையில் பானம் அருந்தினர்,
கற்பகத் தரு காமதேனு கை வசப்பட்டன


குபேரனை விரட்டிக் கொள்ளையடித்தனர்;
குற்றேவல் செய்வித்தனர் திக் பாலகரை.


சூரிய, சந்திரர் அடி பணிந்து விட்டனர்
சும்ப, நிசும்பர்கள் இட்ட கட்டளைக்கு!


ஓடி ஒளிந்தனர் தோற்ற அரசர்கள்;
ஒளிந்து வாழ்ந்தனர் தோற்ற அமரர்.


சுவர்க்க லோகம் பறிபோய் விட்டது;
சுவர்க்க போகம் கனவாகி விட்டது!


அஞ்சி வாழும் வாழ்வு நிலைபெற்றது;
தஞ்சம் அடிந்தனர் அமரர் காடுகளில்!


தஞ்சம் அடைந்தனர் குஹைகளில்
மிஞ்ச முடியாத போது அஞ்சுவதே கதி.


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
5#21c. Raktha Beejan

Nobody could conquer Raktha beejan nor kill him. The asuras united under Sumban and Nisumban. They became so powerful that they set out to conquer the Heaven and the earth. THe went to Swarggam and conquered Indra.

The grabbed all the wealth belonging to Indra and heaven. They drank in the Karapagach cholai and took control over Kaamadhenu and Karpaga vruksham. They drove away Kuberan from ALagaapuri and looted his wealth.


The Ashta dik paalakaas were reduced to the status of slaves. Even Sooryan and Chandran obeyed the commands of the asuraas now.

The kings on earth who were defeated went into hiding. The Devaas who were defeted lived in caves. They lost their swarggam and all the comforts of swarggam.

When one can not face the enemy the only path left is to go into hiding.


 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#23b. காயத்ரீ ஜபம் (2)

உப்பில்லாமல் உணவு உண்ண வேண்டும்;
இரவு மட்டுமே உணவு உண்ண வேண்டும்.

ஒற்றைக் காலில் நீரில் நின்று கைகளை உயர்த்தி
ஒரு வருஷம் ஜபிக்கின்றவன் ரிஷியாகி விடுவான்.

இரண்டு வருஷங்கள் ஜபித்தால் வித்தைக் கைக் கூடும்;
மூன்று வருஷங்கள் ஜபித்தால் முக்கால உணர்வு வரும்.

நான்கு வருஷங்கள் ஜபித்தால் மஹாதேவன் தரிசனம்;
ஐந்து வருஷங்கள் ஜபித்தால் அணிமா சக்திகள் வரும்.

ஆறு வருஷங்கள் ஜபித்தால் விரும்பிய உரு எடுக்கலாம்;
ஏழு வருஷங்கள் ஜபித்தால் தேவனின் வடிவம் கிடைக்கும்.

ஒன்பது வருஷங்கள் ஜபித்தால் மனுத்வம் கிட்டும்;
பத்து வருஷங்கள் ஜபித்தால் இந்திரத்வம் கிட்டும்.

பதினோரு வருஷங்கள் ஜபித்தால் பிரஜாபதித்வம் கிட்டும்;
பன்னிரண்டு வருஷங்கள் ஜபித்தால் பிரம்மத்வம் கிட்டும்.

உணவு ஆகலாம் கிழங்குகள், சருகுகள், பால் மற்றும்
கனிகள், சோமபானம், பிக்ஷா அன்னம் போன்றவை .

உரு மூவாயிரம் தினம் ஜபித்தால் ஒழிந்து போகும்
குருபத்னி சம்போக பாவம், பொன் திருட்டு, சுராபானம்,

காட்டில் குடிசையில் இருந்து ஜபித்தால்
விட்டு விலகும் பிரம்மஹத்தி ஒரே
மாதத்தில்!

பாவங்களை ஒழிக்கலாம் ஆயிரம் உரு தினமும்
நீரில் மூழ்கி பன்னிரண்டு ஆண்டுகள் ஜபித்து.

ஒரு மாத காலம் மௌனத்தோடும் நியமத்தோடும்
பிராணாயாமத்துடன் மூவாயிரம் உரு ஜெயித்தால்

அகன்று விடும் தீவினைகள் - பிரம்மஹத்தி
அகலும் ஆயிரம் முறை பிராணாயாமத்தால்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 11

11#24. GAyatree japam (2)

A person must eat only once a day at night - food without any salt. If such a person stands in water on one leg, lifts up both his hands and does GAyatree japam for one full year, he can become a rishi.

If he does japam for two years he will will become the master of learning. If he does the japam, for three years he can know all the happenings in the past, the present and the future.

If he does this for four years, he will get the darshan of Lord Siva. If he does this for five years he will get the ashta siddhis. If he does this for six years he will get the power to assume any form.

If he does this for seven years he will get the form of a DevA. Doing this for nine years will make him a Manu. If he can do this for ten full years he can become an Indra.

If he can do this for eleven years, he can become a prajApati. If he can do this for twelve long years he can become a BrahmA.
The food he can take may be roots, fruits, leaves, milk, water, soma rasa and biksha annam.

Chanting three thousand times GAyatree will destroy the sins incurred by stealing gold, consuming intoxicating drinks and copulating with one's own guru patni. Chanting GAyatree staying in a hut in the forest can remove even Brahma hathi dosham in one month.
Standing in water and doing japam one thousand times a day, for twelve days, will deliver him from all his sins.

Brahma hatthi can be got rid off by doing one thousand prANAyAma and doing japam three thousand times a day, for one month, observing the vow silence and with niyamam.
 
devi bhaagavatam - sbanda 5

5#21d. காலத் தத்துவம்

ஞாலம் செய்யாததைக் காலம் செய்யும்;
ஞாலம் வசப்பட்டு நிற்கும் காலத்துக்கு.


காலம் மாற்றிவிடும் தலை கீழாக எதையும்;
காலம் மாற்றிவிடும் முன்னுக்குப் பின்னாக.


வாழ்ந்தவன் வீழ்வான் காலம் மாறினால்;
வீழ்ந்தவன் வாழ்வான் காலம் மாறினால்!


அனுபவிக்க வேண்டும் சுக துக்கங்களை;
அனுமதிக்க வேண்டும் காலம் அதற்கு.


அரசனை அற்பனாக்கும் காலத் தத்துவம்;
அரசனாக்கும் அற்பனைக் காலத் தத்துவம்.


பலவானைப் பலவீனன் ஆக்கும் காலம்;
பலவீனனைப் பலவான்ஆக்கும் காலம்.


வறியவனை வள்ளல் ஆக்கும் காலம்;
வறியவன் ஆக்கும் வள்ளலைக் காலம்.


சூரனைப் பேடி ஆக்கும் காலத் தத்துவம்;
சூரனாக்கும் பேடியைக் காலத் தத்துவம்.


மூடனை அறிவாளி ஆக்கும் காலம்;
மூடனாக்கும் அறிவாளியைக் காலம்.

அறநெறியாளனைப் பாவியாக்கும் காலம்;
அறநெறியாளனாக்கும் பாவியைக் காலம்.


அஸ்வமேத யாகங்கள் செய்த இந்திரனை
அஞ்சி குகையில் தஞ்சம் புகச்செய்தது காலம்.


பிரமன் முதலிய தேவர்களுக்கு இந்த கதி!
உரைக்க வேண்டுமா காலத்தின் சக்தியை?


வாழ்க வளமுடன்; விசாலாக்ஷி ரமணி



 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#21d. The Time Factor.

“The Time Factor binds and controls everything in creation. Time can change things upside down or inside out. The flourishing persons may perish and the perishing persons may flourish.


We have to experience the joys and sorrows as they come. But we have to wait till the Time factor allows that to happen. We can neither speed up not slow down the predetermined happenings.


A Prince may become a pauper and a pauper a prince. A strong man may become a weakling and a weakling a strong man. A poor man may become prosperous and a prosperous man poor.


A valorous man may become a knock-kneed person and a knock kneed person become valorous. A fool may become wise and a wise man a fool. A just man may become unjust and an unjust man just.

Indra had performed one hundred yagnas to become the king of swarggam and yet the Time Factor made him live hiding in a cave. If this is the plight of Devaas and Gods, need I elaborate on the power of Time Factor any more?”

 
BHAARGAVA PURAANAM - PART 2

#40d. மூஷிகன்

பாணங்களைப் பொழிந்தான் கஜமுக அசுரன்;
பாணங்களை விழுங்கியது கரிமுகனின் கதை.


தேரை உடைத்தார் கரிமுகன் தன் பாணத்தால்;
தேரை உருவாக்கினான் அசுரன் மாயையால்!


தண்டத்தை அவர் மீது ஏவினான் கஜமுகன்;
தண்டத்தை உடைத்தது கரிமுகனின் கதை.


கதையால் அடித்தார் கஜமுகனின் மார்பை.
கஜமுகன் விழுந்தான் நினைவை இழந்து.


விழுந்த அசுரன் எழுந்தபோது – ஆயுதத்தால்
எழுந்தவன் மார்பைப் பிளந்தார் கரிமுகன்.


அழிவில்லாத அசுரன் ஆனான் மூஷிகனாக;
அட்டஹாசம் செய்தான் உலகங்கள் நடுங்கிட.


ஏறி அமர்ந்தார் அவன் முதுகில் கரிமுகன்;
மாறிவிட்டன அவனது ஆணவ மலங்கள்.


அடிமை ஆகிவிட்டான் கரிமுக நாதனுக்கு;
வடிவெடுத்தான் அவரது சீரிய வாகனமாக!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.




 
#40d. Mooshikan

Gajamukha asuran shot a shower of arrows. Karimukhan’s mace swallowed all the arrows. Karimukhan destroyed the chariot of the Gajamukha asuran but he created a new chariot by his power of MAyA.


Gajamukha asuran now threw his daNdam on Karimukhan but Karimukhan’s mace shattered the daNdam. Karimukhan hit Gajamukha asuran with his daNdam and the asuran fell down unconscious.


When he came round and got up again, Karimukhan tore open his chest into two. But Gajamukha asuran could not be destroyed. Now he became a giant Mooshikan and threatened everyone.


Karimukhan sat on his back and the divine touch destroyed the pride and conceit of the asuran. He became the vAhanam of Karimukhan willingly now.


 
[h=2]Devi Bhaagavatham (Skanda 12)[/h]

12#1a. காயத்ரி ஜபம்

"தேவியின் அருளைப் பெறுவதற்குச் செய்யத்
தேவையான கர்மா எது என்று கூறுங்கள்!

காயத்ரீ ஜெபத்தின் விதிமுறைகள் யாவை?
காயத்ரீ ஜெபத்தின் இன்றியமையாமை என்ன?

காயத்ரீயின் வர்ணங்கள், சந்தஸ்ஸுகள் எவை?
காயத்ரீயின் ரிஷிகள், தேவதைகள் யார் யார் ?"

வினவினான் நாரதன் நாராயணனிடம் இவற்றை;
விளக்கினான் நாரதனுக்கு நாராயணன் இவற்றை.

"பிற அனுஷ்டானங்களைச் செய்யாது இருந்தாலும்
பிராமணன் செய்யதேயாக வேண்டும் காயத்ரீ ஜபம்.

மூன்று வேளைகளிலும் சந்தியாவந்தனம் செய்து
மூவாயிரம் உரு காயத்ரீ ஜபம் செய்கின்றவனை

போற்றிப் பூஜிப்பர் விண்ணுலகத் தேவர்களும்;
போற்றிப் பூஜிப்பர் மண்ணுலக மாந்தர்களும்.

நியாசங்களைச் செய்யாது விட்டு விட்டாலும்
நிச்சயமாக ஜபித்தாக வேண்டும் காயத்ரீயை.

தியானிக்க வேண்டும் தேவியை ஜெபத்தின் மூலம்;
தியானிப்பவன் பெறுவான் பற்பல மேன்மைகளை.

அக்ஷர சித்தி தரும் மும்மூர்த்தியகளுடன் சமத்துவம்!
அக்ஷர சித்தி தரும் சோமசூர்யாக்னியுடன் சமத்தவம்!"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#22a. தேவர்கள் தவிப்பு

அமரரை ஓட்டிவிட்டனர் சுவர்க்கத்திலிருந்து;
ஆயிரம் ஆண்டுகள் கொடுங்கோல் புரிந்தனர்!


வினவினர் அமரர் குல குரு பிருஹஸ்பதியிடம்;
“வழி கூறுங்கள் இழந்தவற்றை மீண்டும் பெற்றிட!”


” மந்திரங்கள் பயன் தரும் உரிய தெய்வங்களால்,
மந்திரங்களால் பயன் தர இயலாது தாமாகவே!


மந்திரங்களுக்கு உட்பட்டவை யாகங்கள்;
மந்திரங்கள் தேவர்களை முன்னிட்டவை.


காலத்துக்கு வசப் பட்டவர்கள் தேவர்கள்;
காலத்தைத் தடுத்திட இயலாது நம்மால்;


காலத்துக்கேற்ற உபாயங்கள் உள்ளன – எனினும்
காலம் பெரிதா? உபாயம் பெரிதா? நான் அறியேன்.


கால பலனும், உபாய பலனும் ஒன்றானால்
கர்மங்கள் நிறைவேறிக் கேட்பது கிடைக்கும்.


உபாயத்தைக் கைவிடக் கூடாது ஒருநாளும்;
அபாயத்தைத் தவிர்த்திட உள்ளது ஒரு வழி.


காலாதீத தெய்வம் ஒன்று உண்டு என்றறிவாய்;
காலம் வசப்பட்டுள்ளது அந்த தேவி ஒருத்திக்கு


காலாதீத தெய்வம் பற்றி மேலும் சொல்வேன்;
காலாதீத தெய்வத்தின் அருள் பெரும் வழி இது.


மஹிஷனை வதைத்த மஹாசக்தி தேவி
மனதில் நிலைக்கட்டும் காலாதீத தேவியாக!


காலம் கனிந்தது உமது துக்க நிவர்த்திக்கு;
காலம் கடத்தாமல் செல்வீர் இமயத்துக்கு.


ஆராதியுங்கள் பக்தியுடன் மனம் ஒன்றி !
துதியுங்கள் பீஜாக்ஷர மந்திரங்கள் ஜபித்து!”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி




 
DEVI BHAAGAVATAM - SKANDA 5

5#22a. The plight of Devaas

The asuraas drove away the Devaas from the Heaven. They ruled like tyrants for one thousand years. When they can take no more the Devaas went to meet their kulaguru
Bruhaspati and asked him, “Please tell us a method by which we can recover our Swarggam form the asuraas.”


Bruhaspati said,” Yaagaas and Yagnaas depend on their mantraas for bearing fruits. Mantraas can not bestow anything on us without the assistance of the God towards whom the Mantrass are directed.


The Gods themselves are controlled by the Time Factor. So they are powerless against the Time Factor. Certain things can be done to suit the prevailing Time, but whether the Time is stronger or our plans are stronger I am unable to tell you.


There is one infallible method to overcome the problems now. There is a power which is not controlled by the Time factor. It is the Mahaa Shakti who put an end to the wicked Mahishan.

The Time of your deliverance is fast approaching. So proceed to Himaalayaas without any further delay. Do Devi aaraadhana by chanting her Beejaaksharaas with intense devotion!”

 

Latest ads

Back
Top