BHAARGAVA PURAANAM - PART 2
#40e. சொக்கட்டான்
வைகுந்த வாசன் வந்தார் ஒருநாள்
கைலாச வாசனைக் காண்பதற்காக.
சொக்கட்டான் ஆடினார் சிவன், உமை.
இக்கட்டான ஒரு பந்தயம் வைத்தனர்.
வென்றவருக்குத் தர வேண்டும் தம்
பொன்னாபரணங்களைத் தோற்றவர்.
சாட்சி ஆக்கப்பட்டார் விஷ்ணு மூர்த்தி;
கட்சி மாறிவிட்டார் பந்தயம் முடிவில்.
வென்றவள் உமை என்ற போதிலும்
வென்றவர் சிவன் என்று சொன்னார்.
கண்மண் தெரிமல் வந்து விட்டது
அண்ணன் மீது உமைக்குக் கோபம்.
“குருடன் போலச் சாட்சி சொன்னதால்
குருட்டு மலைப்பாம்பாக மாறிவிடுவீர்!”
கோபம் சாபமாக மாறியது உமையிடம்,
சாபம் மாற்றியது விஷ்ணுவைப் பாம்பாக!
“கஜமுகனை வென்ற கரிமுகன் அருளால்
நிஜ உருவம் பெருவீர், வருந்தாதீர்!” என
அன்புடன் ஆறுதல் கூறினார் சிவபிரான்;
மண்ணுலகில் காத்திருந்தது மலை பாம்பு.
யத்த களத்திலிருந்து வந்த கரிமுகன்
மெத்த வருந்தும் பாம்பைக் கண்டார்.
தீர்ந்தது தாபம் நீங்கியது சாபம் – சுயவுரு
திரும்பியது உடனே கரிமுகன் அருளால்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி
#40e. சொக்கட்டான்
வைகுந்த வாசன் வந்தார் ஒருநாள்
கைலாச வாசனைக் காண்பதற்காக.
சொக்கட்டான் ஆடினார் சிவன், உமை.
இக்கட்டான ஒரு பந்தயம் வைத்தனர்.
வென்றவருக்குத் தர வேண்டும் தம்
பொன்னாபரணங்களைத் தோற்றவர்.
சாட்சி ஆக்கப்பட்டார் விஷ்ணு மூர்த்தி;
கட்சி மாறிவிட்டார் பந்தயம் முடிவில்.
வென்றவள் உமை என்ற போதிலும்
வென்றவர் சிவன் என்று சொன்னார்.
கண்மண் தெரிமல் வந்து விட்டது
அண்ணன் மீது உமைக்குக் கோபம்.
“குருடன் போலச் சாட்சி சொன்னதால்
குருட்டு மலைப்பாம்பாக மாறிவிடுவீர்!”
கோபம் சாபமாக மாறியது உமையிடம்,
சாபம் மாற்றியது விஷ்ணுவைப் பாம்பாக!
“கஜமுகனை வென்ற கரிமுகன் அருளால்
நிஜ உருவம் பெருவீர், வருந்தாதீர்!” என
அன்புடன் ஆறுதல் கூறினார் சிவபிரான்;
மண்ணுலகில் காத்திருந்தது மலை பாம்பு.
யத்த களத்திலிருந்து வந்த கரிமுகன்
மெத்த வருந்தும் பாம்பைக் கண்டார்.
தீர்ந்தது தாபம் நீங்கியது சாபம் – சுயவுரு
திரும்பியது உடனே கரிமுகன் அருளால்!
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி