• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Dainty Dose of Delightful Information

Status
Not open for further replies.
#18. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

86. கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.

87. நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை!

88. குதிரை ஏறாமல் கேட்டது; கடன் கேளாமல் கெட்டது.


89. கன்றைச் சுமக்க சம்மதித்தால், பசுவைச் சுமக்க வைப்பார்கள்.

90. தங்கத்திலே புரண்டாலும் கழுதை கழுதையே!
 
146. Doggy bag
In a restaurant,the food we haven't eaten will be packed in a doggy bag for us to take home.

147. Hornets' nest

A hornets' nest is a violent situation or one with a lot of dispute.

148. Stir up a hornets' nest
If we create a serious problem, we 'stir up a hornets' nest'.

[TABLE="width: 787"]
[TR]
[TD]149. Strong as an ox
A person who's exceedingly strong physically is said to be as strong as an ox.

150. Coon's age
For a very very long time
[/TD]
[/TR]
[/TABLE]
 
#19. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

91. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?


92. இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

93. வெந்நீரால் வெந்த நாய் தண்ணீரைக் கண்டும் அஞ்சும்.

94. புலி வாலைப் பிடித்து இழுப்பது.


95. மதில் மேல் பூனை.

 
151. Pet peeve
A pet peeve is something that irritates an individual greatly.
(Pet peeve affects all people whether or not they have pets!)

152. For donkey's years
Doing something without any changes, for an awfully long time is doing it for donkey's years.
(Eventually we end up doing things for donkey's years as daily chores)

153. Bird-dog
To bird-dog is to follow someone or something very closely and monitor them.
(We call them as admirers in real lives)

154. Cat nap
A short sleep during the day is cat napping.
(He who has mastered this short sleep will live for a long time!)

155. Get a sheepskin
Getting a sheepskin means getting a degree or a diploma.
(I love getting sheepskin in many colors!)
 
காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
காணி ஆசை கோடி கேடு.
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
காப்பு சொல்லும் கை மெலிவை.
காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
காற்றில்லாமல் தூசி பறக்குமா?
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.



 
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்.
கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.
கையிலே காசு வாயிலே தோசை.
கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்.



 
நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
நித்திய கண்டம் பூரண ஆயிசு.
நித்தியங் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.
நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
நீர் மேல் எழுத்து போல்.
நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.



 
பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுதானும் பேசாதே.
பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே.
பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
பக்கச் சொல் பதினாயிரம்.
பசியுள்ளவன் ருசி அறியான்.
பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.
பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
படையிருந்தால் அரணில்லை.
படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
பணம் பத்தும் செய்யும்.
பணம் உண்டானால் மணம் உண்டு.
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.
பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
பதறாத காரியம் சிதறாது.
பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
பருவத்தே பயிர் செய்.
பல துளி பெருவெள்ளம்.
பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
பல்லக்கு ஏய யோகம் உண்டு, உன்னி ஏறச் சீவன் இல்லை.
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும்.
பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்.
பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
பாம்பின் கால் பாம்பு அறியும்.
பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்.
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.



 
I do not see any animal in these sayings
supposed to involve animals.
So where is it?

பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
.
.
.

 
பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
.
.
.


திருநெல்வேலிக்கே அல்வாவா?
கொல்லன் தெருவிலேயே ஊசி வியாபாரமா?
"சலப்புக்கு அஞ்சாதது நரியா? கரடியா?"
என்ற தலைப்பில் பட்டி மன்றம் போடுவோமா? :)
 
Dear Sis,

I DO see a few animals towards the end!

The other proverbs are for humans = social ANIMALS. :high5:

Hence they are fit to be posted here! :lol:

Man is a social animal.
Man is a political animal.
Man is a thinking animal.
Man is a rational animal.
All I see in some men is
only the animal part and
the other parts are completely missing!!!
 
#20. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

96. அறிவிலியின் முயற்சி தறிகெட்டோடும் புரவி.

97. மேருவைச் சேர்ந்த காகமும் பொன் நிறம்.

98. முட்டையிட்ட கோழிக்கு வருத்தம் தெரியும்.


99. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.

100. சண்டி குதிரைக்கு நொண்டி சாரதி.

 
156. Grin like a Cheshire cat
If a person has a very wide smile,he is said to grin like a Cheshire cat

We used to say it this way when we were kids.

மயில்சாமி பூனை மாதிரி சிரிக்கிறது.

யார் அந்த மயில்சாமி??? தெரியாது!!!

தெரியாமலேயே கூட நாங்கள்
சரியாகச் சொல்லி இருக்கின்றோம்!!! :clap2:


157. Whale of a time
To have a whale of a time is really enjoy oneself.

Is it a whale because it has a whale of time
or is it the other way??? :noidea:

158. Fly in the ointment
A fly in the ointment is something that spoils our full enjoyment of something we like.

This one needs no explanation or example I am sure. :)

159. Feathers fly
When people are fighting or arguing angrily, we say that feathers are flying.

It may turn out to be bunches of their rich plumes for all we know! Surely you must have heard of ஓரியாடறது :rolleyes:

160. On the wallaby track
To be on the wallaby track, is to be unemployed.

Can we add these two categories too please???
The under employed and the uselessly employed!!!
 
Internet is available for everyone.
Copy pasting is known to everyone.
There must be some intelligent, interesting and interacting
personal contribution to customize and make the product our own.
It is that special touch that attracts and draws in crowds of readers!!!
The following is just an example!

Quotes 1051 to 1054




1051a. ஊண் அற்றபோதே உறவற்றுப் போகும்

1051b. Utter poverty… bitter relationships.



1052a. ஊணுக்கு முந்து கோளுக்குப் பிந்து
1052b. Be the first to feast and the last to gossip.



1053a. ஊன்றக் கொடுத்த தடி என் உச்சியை உடைக்கிறது.
1053b. To lend a walking stick and get beaten by it.



1054a. ஊர்க் குருவி மேலே ராமபாணம் தொடுக்கலாமா?
1054b. Different strokes for different folks.













 
#21. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

101. மிதித்தாரைக் கடியாத பாம்பும் உண்டோ?

102. தலை இருக்க வால் ஆடலாமா?


103. நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.

104. குதிரையின் குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.

105. குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
 
161. Small dog, tall weeds
This idiom is used to describe a person when we are not sure that he has the ability or resources to handle the given tough task or job.

162. Don't catch your chickens before they're hatched /
Don't count your chickens until they've hatched' is an alternative
We should wait until we are sure that the desired results have been produced rather than assuming it and acting beforehand.

163. Cold fish
A cold fish is a person who doesn't exhibit his real feelings.

164. While the cat's away, the mouse will play
Some people - whose behavior is strictly controlled by their authorities - cross their limits and enjoy when their authority is not around.

165. Angry as a bull
If someone is as angry as a bull, he is really awfully angry.

 
எறும்பு ஊர கல்லுந் தேயும்.
எறும்புந் தன் கையால் எண் சாண்
எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
எலி அழுதால் பூனை விடுமா?
கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிற
குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
 
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
குரைக்கிற நாய் கடிக்காது
சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி.
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
 
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா!
முதலையோ மூர்க்கனோ இல்லை நான்! எனவே
கொண்டதையும் விடுவேன்! கண்டதையும் விடுவேன்!! :whistle:
 
#22. பிராணிகள் பற்றிய சொற்றொடர்கள்.

106.அசைந்து தின்னும் யானை; அசையாமல் தின்னும் வீடு.

107. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.யானை இறந்தாலும் ஆயிரம் பொன்.

108. எலி அழுதால் பூனை விடுமா?

109. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, ஐயங்காருக்கு மூன்று கொம்பு.

110. அஞ்சியவனைக் குஞ்சும் விரட்டும்.
 
166. Cold turkey
To do cold turkey is to stop taking drugs abruptly, instead of slowly reducing the dosage.

167. Birds and the bees
Learning about the birds and the bees is learning about sex and reproduction.

168. Bird-brain
To have a bird-brain, or to be bird-brained, is to be very stupid.

169. Stubborn as a mule
No one can make a mule do any thing it does not want to do! So a person who is stubborn to the core and will never compromise or change his views and decisions is said to be as stubborn as a mule.

I personally happen to know quite a few myself! :)


170. Sick as a dog
Someone who has a bad and violent bout of vomiting is said to be as sick as a dog.

 
109. ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு, ஐயங்காருக்கு மூன்று கொம்பு.
Dear VR Maam,

Why specifically "Iyyenggar" here?. I could not understand the meaning of this proverb?

cheers.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top