• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
* சுமங்கலிகள் மெட்டி அணிவது ஏன்?
வி.அபிராமி, சென்னை

திருமண பந்தம் ஏற்பட்டு விடுவதன் அடையாளம் தாலிகட்டுதல். அது போன்று மணமகளும், மணமகனும் கற்பு நெறியுடனும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வது என்று உறுதி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியாக அம்மி மிதித்தல் நடத்தப்படுகிறது. இதன் அடையாளமே மெட்டி அணிவித்தல்.
 
கொடையில் சிறந்தவன் கர்ணன்


1911969_587335818011457_963113655_n.jpg


நல்ல மழைக்காலம் அது :

ஏழை ஒருவன் தருமரின் அரண்மனைக்கு சென்று ,

'' மகாராஜா ....எங்கும் விறகு கிடைக்க வில்லை !...தாங்கள் தான் உதவ வேண்டும் !''
என்றான் :

மழைக்காலம் என்பதால் அரண்மனையிலும் கூட விறகுகள் ஈரத்தில் நனைந்திருந்தன :
'' அப்பனே ...மன்னிக்க வேண்டும் !...என்னால் இப்போது உனக்கு காய்ந்த விறகுகள் தரமுடிய வில்லை !''

தருமரின் பதிலை கேட்டு ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்ற அந்த ஏழை பின் , கர்ணனின் அரண்மைனைக்கு விரைந்தான் :

'' கர்ண மகாராஜாவே ...வீட்டில் ஒரு சுள்ளி கூட இல்லை ...தாங்கள் விறகு தந்து உதவ வேண்டும் !''
என்றான் :

கர்ணனின் அரண்மனையிலும் கூட விறகுகள் ஈரத்தினால் நனைந்து போயிருந்தன :என்றாலும்
ஒரு கணம் யோசித்தவன் ,உள்ளே சென்று கோடரி ஒன்றை கொண்டு வந்து ..அரண்மனை தூண்களில் ஒன்றை வெட்டி பிளந்து அவனிடம் கொடுத்தனுப்பினான் !


கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்து விட்டால் எப்படியாவது கொடுத்து விடவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவன் கர்ணன் !....
எண்ணமே மூல காரணம் !

எனவே தான் ' கொடையில் சிறந்தவன் கர்ணன் ' என்கிற சிறப்பை அவனால் பெற முடிந்தது !!




Source: Thangam Krishnamurthy
 
51 விநாயக வடிவங்களும் வணங்குவதால் வரும் வளங்களும்...


51vinayagar.jpg



விநாயகர் என்றால் அவருக்கு மேம்பட்ட தலைவர் இல்லை என்று பொருள். அவரை சிருஷ்டித்தவரே சிவபெருமான்தான்.

இன்னல்கள் அனைத்தையும் தீர்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தவரும் சிவபெருமான்தான். ஆனால், திரிபுரம் எரிக்கச் சென்ற சிவன் விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவரது தேர்ச் சக்கரம் முறிந்தது. பின்னர் விநாயகரை வழிபட்டு அவர் திரிபுரம் எரித்தார்.

முருகப் பெருமான் வள்ளியை மணம் புரிய உதவியரும் விநாயகப் பெருமானே. சேரமான் பெருமாள் நாயனாரும் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் திருக்கயிலாயம் சென்றபோது ஔவைப் பாட்டியையும் உடன் வரும்படி வேண்டினர். அப்போது ஔவை விநாயகர் பூஜை செய்து கொண்டிருந்தார். "அம்மையே! நீ பூஜையை முடி. நானே உன்னைத் திருக் கயிலாயம் கூட்டிச் செல்கிறேன்' என்றார் விநாயகர். அதன்படி ஔவை பூஜையை முடித்ததும் தன் தும்பிக்கையால் ஔவையை சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலாயம் போவதற்கு முன்னரே கூட்டிச் சென்றதாக விநாயக புராணம் கூறுகிறது.

எனவே விநாயகர் அருளால் எடுத்த காரியம் யாவும் இனிதே நிறைவேறும்.

ஔவைப் பாட்டி அருளிய விநாயகர் அகவல் படிப்பதால் வாக்குவன்மை, லட்சுமி கடாட்சம் உண்டாகும். செய்வினைகள் யாவும் நீங்கும்.

51 விநாயகர் வடிவங்களும் அந்த வடிவங்களை வணங்குவதால் நாம் அடையும் பலன்களையும் இனி காண்போம்.



1. ஏகாக்ஷர கணபதி: கணபதி அருள் கிடைக்கும்.

2. மகா கணபதி: பரிபூரண சித்தி.

3. த்ரைலோக்ய மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.

4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி.

5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.

6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.

7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.

8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.

9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.

10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.

11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.

12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.

13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.

14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.

15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.

16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.

17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.

18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.

19. விஜய கணபதி: வெற்றி.

20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.

21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.

22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.

23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.

24. விரிவிரி கணபதி: விசால புத்தி.

25. வீரகணபதி- தைரியம்.

26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி.

27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி.

28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.

29. குமார கணபதி: மாலா மந்திரம்.

30. ராஜ கணபதி: மாலா மந்திரம்.

31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.

32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.

33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.

34. யோக கணபதி: தியானம்.

35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.

36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.

37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.

38. நவநீத கணபதி: மனோவசியம்.

39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.

40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி.

41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.

42. குரு கணபதி: குருவருள்.

43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.

44. சிவாவதார கணபதி: சிவபக்தி.

45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.

46. ரக்த கணபதி: வசிய விருத்தி.

47. அபிஷ்டவாத கணபதி:

நினைத்ததை அடைதல்.

48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.

50. மகா கணபதி: ப்ரணவமூலம்.

51. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை.

மகா கணபதியை வணங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.

51 ?????? ???????????..
 
மாசி மகம் பற்றிய தகவல் :

1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.

2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

4. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.

5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

7. அன்னதானத்தில் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப் பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

10. உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் துவங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.

12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.

13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.

15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

16. மாசிமகம் ஸ்தானம் செய்வேருக்கு சிவனும், விஷ்ணுவும் உரிய பலன் தருவார்கள். அன்று புண்ணிய நதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்களை விலக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும் போது சொர்க்கப் பேறு தருவார். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுக் கலாம் என ஈசனே திணறுவாராம்.

17. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

18. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.

19. மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்த சக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும் உடலும் ஆரோக்கியமாகும்.

20. ராமநாதபுரம் எமனேஸ்வர சிவாலய சிவன், எமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலய எமதீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்ப விழா நடக்கும் சிவ அம்சமாக முருகன் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார்.

21. திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகேயுள்ளது சின்ன ஓம்காளி ஆலயம். இங்கு மாசி மாதம் 16 நாட்கள் குண்டவிழா நடைபெறுகிறது.

22. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண் டத்தில் இடம் கிடைக்கும்.

23. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

24. மாதத்தின் சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

25. கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, வெள்ளிக் கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்.








Source: Nagarathar
 
கொடை வள்ளல்


அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும் கர்ணனை கொடை வள்ளல் என்று சொல்வது பிடிக்கவில்லை. அவருடன் வாதிட்டான்.

கண்ணன் உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார். அர்ஜுனனை அழைத்து, ''இன்று மாலைக்குள் இந்தக் குன்று முழுவதையும் நீ தானம் செய்து முடித்து விட்டால், நான் உன்னை கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று ஒத்துக் கொள்கிறேன்,''என்றார்.

அர்ஜுனனும் ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள் வரவர, தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான். எவ்வளவோ பிரயாசைப்பட்டும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு கூட தானம் செய்து கொடுக்க முடியவில்லை.

அப்போது அந்தப் பக்கம் கர்ணன் வரவே, கண்ணன் அவனை அழைத்து, ''கர்ணா, இந்தத் தங்கக் குன்றை நாளை காலைக்குள் தானம் செய்து கொடுத்து விட வேண்டும், உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.

கர்ணனும், ''இது என்ன பெரிய வேலையா?'' என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கம் வந்த வறியவர் இருவரை அழைத்தான். அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும் இந்த தங்க மலையை தானம் அளிக்கிறேன். வெட்டி உபயோகித்துக் கொள்ளங்கள்,''என்று கூறியபடியே,சென்று விட்டான்.

அப்போது கண்ணன் அர்ஜுனனிடம் சொன்னார், ''இப்போது உனக்கு வித்தியாசம் தெரிகிறதா? உனக்கு முழுமையாகக் கொடுக்கலாம் என்ற எண்ணம் கடைசி வரை வரவில்லை..

நீதி: தானமோ அன்போ நம் மனதின் ஆழத்திலிருந்து முழுமையாக கொடுக்காதவரை அதன் சிறப்பு தெரிவதில்லை.



[h=5]Ananthanarayanan Ramaswamy[/h]
 
பதினெட்டாம் படி தத்துவம்;
---------------------------------------
பதினெட்டு என்பது சாஸ்திரங்களில் முக்கியமாக கருதப்படும் எண்ணாகும்.பாரதப்போர் பதினெட்டு நாட்கள்,ராமயாணபோர் பதினெட்டு மாதங்கள்,தேவ அசுர போர் பதினெட்டு ஆண்டுகள் என நடந்துவந்துள்ளது.

1.காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

2.கோபம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

3.பேராசை: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

4.மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

5.பொறாமை: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

6.வீண் பெருமை: அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

7.அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

8.அமைதி: விருப்பு, வெறுப்பு இன்றி கடமை செய்தல் வேண்டும்.

9.அகங்காரம்: அகங்காரத்தோடு கடமை செய்தல் கூடாது.

10.தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

11.ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

12.மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

13.அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

14கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

15.காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

16.மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

17.நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

18.மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவமாகும்.

“ஓம் சாமியே சரணம் ஐயப்பா” என்ற நாமத்துடன்..,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 

All about Srardha

Question : Who has performed sraardha first? Who has coordinated the procedures for the sraardha we perform today? Has any body amended it?

Answer:
Sri Varaha moorthy has performed sradha first. Sage Bodhayana has co-ordinated the procedures for Sraadha. But his procedures are lengthy. For instance, even while Bhokthas are taking food, Kartha is to continue performing the lengthy Jayathi Homa. These procedures are later amended by sage Apasthambha which is the basis of Sraadha Niyama now we follow.


Question:I have heard Sraadha has to be performed by self. Is it possible?

Answer:
Sraadha niyama say so. But due to the elaborate procedures and complexities in them, we seek the Sasthrikals known as Bruhaspathi or Vadyar to guide. Now it has become order of the day to invite Sasthrikals, Bruhaspathi known as Vaadyar.
Question: who all can take food prepared for sraadha, after offering to Bhoktha?
Answer: It can be taken by close relations and by sagothra too. Normally, other Gothra persons do not share the srardha food. However, children below the age of 7 years are allowed eat the srardha food. But in Srivaishnava Thenkalai sampradaya, it is known as ishta pandhi, where any one who is not related, too can eat, if one wish.

Question: There is Atma pinda sraadha with special manthra too. My question sir, who are advised to perform Jala srradha and Hiranya sraadha?

Answer:Hiranaya sraadha I have already replied. How ever I will give one more clarification and express the srardha niyama as explained by my distant cousin, late Sri Mukkur Lakshminarasimhachariar, (who was very popular for his divine writings in many periodicals, very specifically for an article series in Kalki "Kurai Onrum Illai Govinda") has given some hints on the Srardha procedures. He even wrote an article in one of the Kalki Deepavali supplement and I give the contents here below for the readers to take a note. The Srardha niyama in three different types with each having values on Uthama, Madhima & Athama paksha:

Question: What is pithru dosha? Does this appear on account of non-performance of sraardha?

Answer: The pitru dosha is supposed to be caused by non-performance of sraardha rites. It. causes childlessness, obstacles and failures in many ways.
Question: We normally perform sraadha on a specific given thithi of the month of death. Sir, Can we postpone/advance to any earlier or later thithi?
Amswer: It is desired sraadha be performed on the fixed thithi only. However there are some exceptions told in the scripts, like - (1) If Vadhyar, Bhokta failed to turn, then also you can postpone it to a convenient day. (2) If due to war, mutiny, calamity etc. one can postpone the same to any other convenient day, till the normalcy returns! Or if any death take place amongst one's close relatives (aasoucham) one can postpone srardha to the day when aasoucham is over. Here for the failed Srardham, the condition is, that it should be performed on the immediate next day, or on the Krishna Paksha Ashtami or on the Amavasya day, in that order; if that too not possible, then in the next month but in the same thithi.
One compulsory rule is, you can postpone the thithi sraadham but cannot advance it!” These are the main rulings. I hope you are satisfied with the reply.

More to come

https://www.trsiyengar.com/id139.shtml
 
வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் !

நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம். அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி காலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம். ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது. பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும். அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது. இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.

1. கதலீபலம் - வாழைப்பழம்

2. பீஜாபூரபலம் - கொய்யாப்பழம்

3. வேத்ர பலம் - பெரப்பம் பழம்

4. பதரி பலம் - எலந்தைப் பழம்

5. கர்ஜுர பலம் - பேரிச்சம் பழம்

6. ஜம்பூ பலம் - நாவல் பழம்

7. கபித்த பலம் - விளாம் பழம்

8. த்ராஷா பலம் - திராøக்ஷ பழம்

9. சூ பழம் - மாம்பழம்

10. மாதுஸங்கபழம் - மாதுளம் பழம்

11. நாரங்கபலம் - நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி

12. பனஸ பலம் - பலாப் பழம்

13. உர்வாருகம் - வெள்ளரிக்காய்

14. ஜம்பீர பலம் - எலுமிச்சம் பழம்

15. இக்ஷúகண்டம் - கரும்பு

16. சணகம் - கடலை

17. ப்ருதுகம் - அவல்

18. ஸர்க்கரா - சர்க்கரை

19. ததி - தயிர்

20. குடோபஹாரம் - வெல்லம்

21. ஆப்பிள் - காஷ்மீர பலம்

22. அமிருதம் - தீர்த்தம்

23. நாரிகேளம் - தேங்காய்

24. ஸால்யன்னம் - சம்பா அன்னம்

25. குளா பூபம் - அதிரசம், அப்பம்

26. தத்யன்னம் - தயிர் சாதம்

27. திந்திரியன்னம் - புளியோதரை

28. ஸர்கரான்னம் - சர்க்கரை பொங்கல்

29. மாஷா பூபம் - வடை

30. ரஸகண்டம் - கற்கண்டு

31. மோதகம் - கொழுக்கட்டை

32. திலான்னம் - எள்ளு சாதம்

33. ஆஜ்யோபகாரம் - நெய்

34. லட்டூகம் - லட்டு

35. சித்ரான்னம் - பலவகை கலந்த சாதம்

36. நாரிகேளகண்டத்வயம் - இரண்டாக உடைத்த தேங்காய்

37. க்ருதகுள பாயஸம் - வெல்லம் போட்ட பாயஸம்

38. கோக்ஷீரம் - பசும் பால்

ருதுக்கள்


சித்திரை, வைகாசி - வஸந்த ருது

ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது

ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது

ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது

மார்கழி, தை - ஹேமந்த ருது

மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர

திங்கள் - இந்து வாஸர

செவ்வாய் - பவும வாஸர

புதன் - சவும்ய வாஸர

வியாழன் - குரு வாஸர

வெள்ளி - ப்ருகு வாஸர

சனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே

வைகாசி - ரிஷப மாஸே

ஆனி - மிதுன மாஸே

ஆடி - கடக மாஸே

ஆவணி - ஸிம்ம மாஸே

புரட்டாசி - கன்யா மாஸே

ஐப்பசி - துலா மாஸே

கார்த்திகை - வ்ருச்சிக மாஸே

மார்கழி - தனுர் மாஸே

தை - மகர மாஸே

மாசி - கும்ப மாஸே

பங்குனி - மீன மாஸே.



Source: Hari Krishnamurthy
 
சங்கடஹர சதுர்த்தி விரதம் சிறப்பு

4afa8c3a-6e9c-4b35-8263-3621f54c7f7e_S_secvpf.gif



பிள்ளையாரை வழிபட சங்கடகர சதுர்த்தி நாள் மிகவும் ஏற்றது. பவுர்ணமியை அடுத்த நான்காம் நாள் தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்பர். சங்கடங்களை அழிப்பதால் இது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

கர்வ மிகுதியால் பிள்ளையாரின் கோபத்துக்கு ஆளான சந்திரன் தன் உடலில் பொலிவிழந்து வருந்தினான். இறுதியில் பிள்ளையாரிடமே சரணடைந்தான். பிள்ளையார் அருள்புரிந்ததோடு ‘சங்கடஹர சதுர்த்தி உதய நேரத்தில் எம்மை பூஜிப்பவர் யாவருக்கும் இன்னல்கள் நீக்கி அருள்புரிவேன்’ என்றருளினார் என்கிறது புராண தகவல்.

ஆகவே சங்கடஹர சதுர்த்தி நாளில் அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பிள்ளையாரை வழிபட நல்ல பலன் கிட்டும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை வரை உணவு அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.

முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

http://www.maalaimalar.com/2014/02/11154755/sangada-sathurthi-viratham.html
 
Significance of BELL in Temples


Bell or Ghanta is an indispensable part in most Hindu pujas. Ghanta is sounded before the actual puja and worship begins. A well-designed Ghanta or bell produce long strains of the sound ‘OM.’ A bell is rung in a Hindu temple, during the waving of light in front of the deity, while bathing the deity and while offering food.

Hindu devotees on entering the temple also hit the ghanta hanged in front of the sanctum sanctorum.



The most widespread belief is that the ghanta is sounded to invite the deity to accept the worship and prayers. Another belief is that it is to drive away the evil forces.


The sound made from a well-designed Ghanta is uninterrupted, reverberating, deep and sonorous.


Symbolically, the body of the bell represents time – Ananta. The tongue of the bell symbolically represents Goddess Saraswathi. The handle of the Ghanta is considered to be the vital principle (Prana Shakti) and symbolically represents Hanuman, Garuda, Nandi or Chakra.



The bell without a handle is considered inauspicious for doing pujas.

Bell or Ghanta in Hinduism ? The ringing of bell during Hindu Puja at home and temples ~ Hindu Blog
 
Significance of Shankh or Conch Shell in Hinduism


In Hindu religion, Shankh, or Samkha, is of great importance and symbolizes luster, brilliance, purity and auspicious beginning. It is a pious article and is used in all religious rituals. The most famous Shankha is the Panchajanaya of Lord Vishnu. In the Mahabharata, Lord Krishna and the five Pandavas had a separate conch shell and it is referred in the beginning of the Bhagavad Gita. In religious rituals, Shankh is used to announce the beginning of a prayer or arrival of

deity and in some places sacred water is collected and distributed in it.


krishna-blowing-conch.jpg





Shankh literally means ‘pacifying the inauspicious.’ In Hinduism, origin of the conch shell took place during the Samudra Manthan or churning of ocean. There are two types of Shankh – left handed conch shell and right handed conch shell. Valampiri Shankh or Lakshmi Shankh is the right handed conch shell and is considered auspicious.



Shankha is blown at every festival and auspicious beginning and the sound ushers in freshness and new hope. Right handed conch shell is kept at home by many people as it is believed to bring wealth and prosperity. It is also associated with Kubera, god of wealth. Many institutions and organizations employ conch shell as their symbol.



Shankha is closely associated with Lord Vishnu and Goddess Lakshmi. Image of Lord Vishnu always has him holding a conch shell. It is believed that during the Samdura Manthan, first conch shell appeared and it was followed by Goddess Lakshmi.



Usually, right handed conch shell is used for worship. The shell is thoroughly cleaned and is placed on a clean cloth, usually red cloth. Normal puja is performed. In some places, conch shell is placed on a silver or clay pot. A cloth is used to cover the mouth of the pot and it is placed on it.




People usually collect and keep water in conch shell and is sprinkled while performing pujas. While performing Lakshmi Puja, conch shell is filled with milk and then it is poured over the idol. Water collected in Shankh is offered while worshipping sun.





Shankh is also part of classical Indian musical instruments and there is also a mudra based on it in classical dance. There are also numerous legends and myths associated with the conch shell in the vast Hindu literature.


Source: http://www.hindu-blog.com/2008/06/significance-of-shankh-or-conch-shell.html
 
While in hiding with King Virat, the Pandavas assumed these identities :

Name Adopted Name Adopted Persona

Yudhisthira Kanka Play the game of dices with the King

Bhima Vallabha Cook


Arjuna Brihannala Princess' music teacher


Nakula Granthik Supervisor of the stables


Sahadeva Tantipal Supervisor of the cattle sheds


Draupadi Sairindhri Queen's maid

Apart from these public pseudonyms, the Pandavas referred to each other by these secrte names while in hiding :

Name Secret Name

Yudhisthira Jay
Bhima Jayanta
Arjuna Vijay
Nakula Jaytsen
Sahadeva Jayadval

Lectio Brevior: Mahabharata - Quick Facts
 
Last edited:
Vasudeva Kudumbam

The original name for Hinduism is Sanatana Dharma. Sanatana means ‘no beginning or no end’ ie eternal. Dharma is way of life or philosophy.


This Dharma has been expounded from time immemorial by enlightened sages. They had risen above normal people through concentrated meditation to be enlightened with the all pervading truth.


Religion is a particular system of order or belief with emotion and morality guiding one towards God. Very often it was first expounded by a ‘messenger’ during a period of history and reflects the customs and culture of that era of existence.

However when one extracts the philosophy of the religion concerned, the tenets contained in one religion very often resemble those of the others. This reminds us of the saying ‘All paths lead to the same God’ just like all rivers end in the mighty ocean.

This has been extolled by Hindu sages as ‘Vasudeva Kudumbam (The whole world is a family creation of one Supreme Power)



Follow your Swadharma according to your religious faith. Follow your holy-scripture (Vedas, Gita, Guru Granth Sahib, Dhammapada, Bible, Quran). Believe that all of us are belonging to Vasudeva Kudumbam (Universal Brotherhood).


In Tamil there is a very popular saying “Yaadhum oore yavarum kelir”. It means that every place is our place; everybody is our kith and kin ( Kaniyan Boongundranar, Tamil poet). In Sanskrit it is “Loka Samastha Sukhino Bhavantu” (‘May All Beings Be Happy and Free’). In Malayalam it is called ‘Lokame Tharavadu’ (World is my home)


Vasudeva Kudumbam (Universal Family) | Moni's Academy
 
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே?

E_1383904762.jpeg









பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு.

பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், 'அட்சதாம் சமர்ப்பயாமி' என்று சொல்லி விட்டால் போதும். ஒருவர், அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன் பெயரைச் சொல்லி, 'அட்சதாம் சமர்ப்பயாமி' என்று சொல்லிக் கொண்டே பூஜையை முடித்து விட்டார். பூஜை செய்பவர், சாஸ்திரிகளுக்கு தட்சணை கொடுக்க வேண்டும்.

இவர்தான் எல்லாவற்றுக்கும் பதிலாக, 'அட்சதை போதும்' என்று சொல்லி இருக்கிறாரே... பூஜை முடிந்ததும், 'தட்சினார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி' என்று சொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம், பூஜை செய்தவர்.

'என்ன இது? தட்சணை எங்கே...' என்றார் சாஸ்திரிகள். 'அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே... பிடியுங்கள் அட்சதையை...' என்றார்.

பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். தூபத்தில் அக்னி தேவன், தீபத்தில் சிவன், விபூதியில் மகேஸ்வரன், கண்ணாடியில் சூரியன், குடையில் சந்திரன், சாமரத்தில் மகாலட்சுமி, விசிறியில் வாயுதேவன் உள்ளனர். அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும்.

நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் விரும்புவர். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர். விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.

இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு, தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்கு முன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்கு பின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும்.

அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால், இதையெல்லாம் செய்யலாம்.


varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
 
"ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்,தான் பிள்ளை தானே வளரும்"

விளக்கம்;


பெருமபாலனவரகள் இதன் விளக்கமாக நினைப்பது என்னவென்றால்,ஊரில் உள்ள குழந்தைகளை தன் குழந்தை போல் வளர்த்தால்,தன்னுடைய குழந்தை தானே வளரும் என நினைக்கிறார்கள்.

உண்மையான விளக்கம்;

அதாவது ஊரார் பிள்ளையாகிய தன் மனைவி கர்ப்பமாக இருக்கும்பொழுது,நல்ல பணிவிடை செய்து,மனம் நோகாமல் தேனும்,பாலும்,பழங்களும்,உணவும் கொடுத்து ஊட்டி வளர்த்தால்,வயிற்றில் இருக்கும் தன் குழந்தை தானே வளரும் என்பதை உணர்த்தும் பழமொழியாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
ஒருமுறை, திருமலைராயன் பட்டினத்தில் அரசவைப் புலவராக இருந்த அதிமதுரக் கவிராயருக்கும் கவி காளமேகத்துக்கும் இடையே ஏற்பட்ட போட்டியில் அற்புதமான பாடல் ஒன்று கிடைத்தது. "திருமால் அவதாரங்கள் பத்தினையும் ஒரு வெண்பாவில் பாடவேண்டும்' என்றார் அதிமதுரகவி. "பாதி வெண்பாவிலேயே பாடமுடியும்' என்றார் காளமேகம். அப்பாடல் இதுதான்:

""மெச்சுதிரு வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலுள் சன்ம மியம்பவர் - மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமா வாவா''

"திருவேங்கடத் திருமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே! உன்னை நான் பாதி வெண்பாவிலேயே புகழ்ந்து பாடவிருக்கின்றேன். என்முன்னே தோன்றி அருள் தருவாயாக! என்று வேண்ட, பெருமாளும் தோன்றி அருள் செய்தார். மச்ச, கூர்ம, வராக, நரசிங்க, வாமன, பரசுராம, ரகுராம, பலராம கிருஷ்ண, கல்கி ஆகிய பத்து அவதாரங்களையும் கூறிவிட்டார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வேப்பஞ் சேரியில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. அங்குள்ள திருக்குளத்தில் மகாவிஷ்ணுவின் சிலை ஒன்று 21 அடி உயரத்தில் உள்ளது. அதில் பெருமாளின் பத்து அவதாரங்களும் ஒரே கல்லில் அமைந்துள்ளதே இதற்குச் சான்றாகும்

Source : Net
 
தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் ..

1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.

13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும் ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.

14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள்தான்.

16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிரார்த் தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த் தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.

19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிரார்த்தத்துக்கு பார்வணசிரார்த்தம் என்று பெயர்.

20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிரார்த்தம் சங்கல்ப சிரார்த்தம் எனப்படும்.

21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும், சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிரார்த்தம் ஆம சிரார்த்தம் எனப்படும்.

22. சிரார்த்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும்.

23. சிரார்த்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.

24. சிரார்த்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிரார்த்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிரார்த்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிரார்த்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாக இருந்தால் சிரார்த்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

25. பித்ருக்களை சிரார்த்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிரார்த்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை, செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.

26. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கி த்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

28. பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த் தத்தைச் செய்ய வேண்டும்.

29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தை செய்ய வேண்டும்.

30. பெற்றோர்களின் வருஷாந்தர சிரார்த்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதி தர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிரார்த்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.

32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டு விட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள். 35. சிரார்த்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாள னாகப் பிறப்பான் என்று புரா ணங்களில் கூறப்பட்டுள்ளது.

36. உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிரார்த்தம் செய்ய வேண்டும்.

37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட் டாயமாகச் செய்ய வேண்டும்.

39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

40. ``மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதை கருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

41. ``நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.''

42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.

43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.

44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது.

45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமை மாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.

46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.

47. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.

48. சிரார்த்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்து உறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.

49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிக முக்கியம்.

50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.

53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் தேடி வரும்.

54. மாகளாய பட்சத்தின் 16 நாட்களும் சிரார்த்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.

55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

59. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

60. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது









Source: Krishnamoorthy Balasubramanian
 
Significance of Sri Hanumanji in The Flag [FONT=Arial, Helvetica]of Arjuna’s chariot[/FONT]

[FONT=Arial, Helvetica]Hanumanji met Bhima in the forest and recognised him as his spiritual brother. (They were both born with the blessings of Pavandev). Hanumanji promised to aid the Pandavas in the battle of Kurukshetra. There Hanumanji positions himself on the flag of Arjuna’s chariot, thus stabilising and protecting it. Hanumanji’s flag signifies sense control and mind control that gives victory to the higher nature over the lower nature.

Hanuman
[/FONT]
 
Yuyutsu

Yuyutsu was Dhritarashtra’s second son, younger only to Duryodhana but elder than the rest of the 99 Kaurava brothers. He grew up alongside them, and was treated lovingly by all of them including Duryodhana. That being said there were more than a few traits of his Kaurava brothers that Yuyutsu did not quite agree with.

It is said that after the game of dice, when Duhshasana brought Draupadi to the Kaurava court and tried to disrobe her, Yuyutsu was the only Kaurava brother to openly protest the injustice that was being meted out to a daughter in law of the family. And this was not the only instance when he openly showed dissent.

When Duryodhana was planning for the war with the Pandavas, he mentioned that the war was necessary to teach the Pandavas a lesson for their ‘treachery’ in demanding for a portion of the kingdom from him. Upon hearing this Yuyutsu immediately stood up and berated his elder brother and told him “If you really didn’t want war, then you would not have tried to cheat the Pandavas of what was rightfully theirs nor would you have tried to disrobe their wife in open court.


At the beginning of the war, Yudhisthira comes over to the Kaurava camp and takes the blessing of his elders such as Bhishma and his teachers Drona and Kripa and then addresses the army. He tells that anybody who believed that the truth was with the Pandavas were more than welcome to their army and that they would be treated with due respect accorded to all warriors.
On hearing this, Yuyutsu, without any hesitation immediately orders his charioteer to take their chariot to the Pandava army to join his cousins in the war against his own brothers. For Yuyutsu, the truth was more important than relationships or the bond of brotherhood. He clearly realized that in the end truth alone triumphs.

yuyutsu.jpg
Yuyutsu




After 18 long days of battle, he ended up being the only Kaurava brother to have survived the great war of Kurukshetra, cementing his belief in truth, justice and fairness.

Please see this video

http://www.youtube.com/watch?v=ro7H1l_nqME

Yuyutsu ? The Kaurava who survived | Mahabore's Mumblings
 
Last edited:
எண் ஏழின் சிறப்புக்கள்:


1620615_721864547865942_640460481_n.jpg



1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur'an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு

நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்

18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம் பெண்)



Source: jeyanathan Durai
 
கர்மா செய்வதால் என்ன பலன்?


37058e65-196d-4fe4-a5f7-25909e40ff78_S_secvpf.gif



கர்மாக்களை செய்வதால் இறந்தவர், பூலோகத்துக்கும் பித்ரு லோகத்துக்கும் இடையில் ஏற்படும் அனைத்து தடைகளையும் கடந்து செல்ல வேண்டிய பித்ரு லோகத்தை சென்றடைகிறார் என்கிறது சாஸ்திரம். அது மட்டுமில்லாமல் இந்த கர்மாக்களை ஈடுபாட்டுடன் சிரத்தையாக செய்யும் கர்த்தாவுக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் வம்ச விருத்தி முதலிய பலன்களும் கிட்டும் என்பது மகரிஷிகளின் வாக்கு.


பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கர்மா-சிராத்தம்-தர்ப்பணம் போன்றவற்றை செய்யாமல் விட்டு விட்டு, தெய்வ சந்தோஷத்துக்காகச் செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள், ஸ்தோத்ர பாராயணங்கள் போன்ற எந்த ஒரு ஆன்மீக செயலையும், எந்த ஒரு தெய்வமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்கிறது சாஸ்திரம். முன்னோர்களுக்கு செய்ய வேண்டியவைகளை செய்துவிட்டு அவர்களின் ஆசியுடன் செய்யும் பூஜைகளைத் தான் தெய்வம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறது.

இதன்மூலம் தெய்வீகமான பூஜைகளைக் காட்டிலும் முன்னோர்களுக்காக செய்யும் கர்மாவே முக்கியம். ஏராளமான இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் இன்றும் கூட பெற்றோர் இறந்த பிறகு, அவர்களுக்காக முதல் 12 நாட்கள் செய்ய வேண்டிய கர்மாக்களையும் அதன்பிறகு ஒவ்வோர் மாதமும் செய்ய வேண்டிய மாஸிகங்களையும், ஓர் வருஷ முடிவில் செய்யும் ஆப்தீகத்தையும், அமாவாசை, மாதப்பிறப்பு முதலிய பித்ரு நாட்களில் செய்ய வேண்டிய பித்ரு தர்பணங்களையும் மற்றும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் சிராத்தத்தையும் சிரத்தையாக அனுஷ்டித்து வரும் குடும்பங்கள், எந்தவித குறைவும் இன்றி சந்தோஷமாக இருந்து வருவதை காணலாம்.

அவ்வாறில்லாமல் குதர்க்க வாதம் பேசி, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கர்மாவை- சிராத்த-தர்ப்பணங்களைச் செய்யாமல் இருப்பவர்களின் குடும்பங்களில் பிற்காலத்தில் வம்ச விருத்தியின்மை, ஒற்றுமைக்குறைவு, வியாதி, ஆரோக்கியமின்மை முதலிய கஷ்டங்கள் ஏற்படும்.

ஆகவே, நாம் முன்னோர்கள் செய்து வந்த வழிமுறைகளை பின்பற்றி சிரத்தையுடன் நமது சக்திக்குத் தக்கவாறு பித்ரு கர்மாக்களைச் செய்ய வேண்டும். இது நாம் நமது குழந்தைகளுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.

http://www.maalaimalar.com/2012/08/07155918/doing-karma-benefits.html
 
வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டிய ஸ்வாமி படங்கள்...

பூஜை அறையில் ஸ்வாமி படங்களை வைப்பதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன, சாஸ்த்திர கருத்தானது பூஜையில் இருக்க வேண்டிய படங்கள் என்னன்ன என்பதை பார்ப்போம். விநாயகர், வள்ளி,தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ.லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி,மீனாக்ஷி,விசாலாக்ஷி,மற்றும் llலலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி. இது தவர பானலிங்கம், சிவலிங்கம்.{ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது}

கூடாத படங்கள் – {உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ.காளியம்மன்,மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சனேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர்,முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது. {உக்கிர தெய்வங்கள் நமது குல தெய்வமாக இருக்கும் பக்ஷத்தில் அந்த தெய்வப் படம் மட்டும் வைக்கலாம்.} ஆகம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே இப்படங்களை வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் உடைந்த படங்கள், பின்னமான ஸ்வாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ அல்லது ஏரியிலோ விட்டுவிட வேண்டும்.

நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் ஸ்வாமிக்கு நிகராக வைக்க கூடாது.

ஒரு ஜான் {கட்டை விரல் அளவு} மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரம் தெரிவிக்கிறது.

மேரு,ஸ்ரீ.சக்ரம், மற்றும் யந்திரங்கள் இவைகளை முறைப்படி உபதேசம் வாங்கிக்கொண்டு ஜபம்,தியானம் செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும் தவறினால் சில யந்திரங்கள் விபரீதமான கெடு பலங்களை தரும். சக்தி உபாசகர்கள் மட்டுமே ஸ்ரீ.சக்ரம்,மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும் சங்கை காலியாக வைக்கலாகாது. சங்கை எதுவும் போடாமல் இருக்கும் பக்ஷத்தில் கமுத்தி வைக்கலாம். சங்கின் நுனி கிலக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.


Source: Swarnagiri Vasan
 
ஸ்வஸ்திக் சின்னத்தின் மஹத்துவம் என்ன?

நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதுதான். நம் எல்லோருடைய ப்ராத்தனையாகவும் இருக்க முடியும். இடையூறுகள் இல்லாத தன்மையே "ஸ்வஸ்தி" என்ற வார்த்தையால் குறிக்கிறோம்.

யஜுர் வேதத்தில் வரும் ஒரு ப்ரார்த்தனை.

ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்தச்ரவா;
ஸ்வஸ்தி ந பூஷா விச்வவேதா:|
ஸ்வஸ்தி ந ஸ்தாசஷ்யோர் அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்ருஹஸ்பதிர் ததாத ||

எல்லா வளங்களும் நிறைந்த நல்வாழ்வை அருள வேண்டி இந்திரன், பூஷன்,கருடன், ப்ருஹஸ்பதி முதலான தேவர்களைக் குறித்தும் செய்யும் பிரார்த்தனை இது.

இதில் வரும் 'ஸ்வஸ்தி' என்ற வார்த்தை "தடையற்ற நல்வாழ்வு" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவேதான் இந்த ஸ்வஸ்தியைக் குறிக்கிற சின்னமாக ஸ்வஸ்திகா பயன்படுத்தப்படுகிறது.

பகவான் விஷ்ணுவின் கரத்தில் உள்ள சுதர்சன சக்கரம் ஸ்வஸ்திகா வடிவிலேயே அமைந்துள்ளதாக சிலர் கூறுவர்.

செங்கோன வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும், ஒன்றுக்கு ஒன்று குறுக்கில் செல்லும் கோடுகள் தாம் ஸ்வஸ்திகா.

பிரணவத்தின் வடிவமான\போலவே சின்னமும் புனிதமானது. இல்லங்களில் முகப்பிலும், பூஜை அறையின் சுவர்களிலும் வரைவது வழக்கம். இதில் உள்ள எட்டு கோடுகளும் எட்டு திக்குகளைக் குறிப்பதாகக் கொள்வர். எட்டு திக்குகளிலுமிருந்து நாம் தொடங்கும் செயலுக்கு எந்த விக்னமும் வரக்கூடாது என்பதே இப்படி வரைவதன் தாத்பர்யம் ஆகும்.

ஜெர்மனியில் நாஸி இயக்கத்தினர் பயன்படுத்தியது இந்த ஸ்வஸ்திகா சின்னத்திற்கு நேர் எதிரான === சின்னமாகும்.

இந்த சின்னத்தை திருஷ்டி பரிகாரமாக ஜெர்மானியர்கள் பயன்படுத்தினார்கள் என்பதும் ஒரு தகவல்.

மங்கலச் சின்னம் ஸ்வஸ்திகா. இது ஸூர்யனின் வடிவத்தைக் குறிப்பதாகவும் சிலர் கூறுவர்.






Source: jayanathan Durai

 


Two modes


In life, we have essentially two psychological modes that we are in most of the time: reactive and responsive. The reactive mode is the one that feels stressful. In it, we feel pressured and are quick to judge. We lose perspective and take things personally. We're annoyed, bothered, and frustrated.

Needless to say, our judgment and decision making capacity is severely impaired when we are in a reactive state of mind. We make quick decisions that we often regret. We annoy other people and tend to bring out the worst in them. When an opportunity knocks, we are usually too overwhelmed or frustrated to see it. If we do see it, we're usually overly critical and negative.
source: unknwon

The responsive mode, on the other hand, is our most relaxed state of mind. Being responsive suggests that we have our bearings. We see the bigger picture and take things less personally. Rather than being rigid and stubborn, we are flexible and calm. In the responsive mode, we are at our best. We bring out the best in others and solve problems gracefully. When an opportunity comes our way, our mind is open. We are receptive to new ideas.

Once you are aware of these two drastically different modes of being. You will begin to notice which one you are in. You'll also notice the predictability of your behavior and feelings when you are in each mode. You'll observe yourself being irrational and negative in your reactive mode and calm and wise in your responsive state of mind.


Source: Junaid Tahir

 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top