P.J.
0
[h=2]வாழ்க்கை எனும் நதி .....சிறுகதை[/h] ஐம்பது வயது வரை தன் வாழ்க்கைத் துணைவியாக இருந்து உயிர்நீத்த மனைவியை விசுவநாதனால் மறக்க முடியவில்லை. இறந்தபின் அவளுடைய ஆத்மா என்ன ஆயிற்று , மறுபடியும் எங்கு பிறந்திருப்பாள் என்பது போன்ற பல சந்தேகங்கள் அவன் மனத்தில் முளைத்தன. அவன் பல சாஸ்திரங்களைப் படித்துப் பார்த்தான். ஆனால் எதைப் படித்தாலும் அவனுக்குத் தெளிவு பிறக்கவில்லை.
அந்த சமயம் அவனுடைய ஊருக்கு ஞானானந்தர் என்ற மகான் வந்தார். அவர் ஓய்வாக இருந்த சமயத்தில் அவரிடம் சென்று தன் சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டான்.
அதற்கு அவர் , " அப்பா ! உன் ஊரில் ஓடும் நதியைப் பார் எங்கிருந்தோ மலையில் தோன்றி பல ஊர்களின் வழியாகத் தவழ்ந்து செல்கிறது. செல்லுமிடம் எல்லாம் மக்களின் தாகத்தைத் தணித்து , பயிர்களை விளைவித்துப் பின்னர் கடலில் போய் சேருகிறது.. கடலில் கலந்தபின் அதன் தனித்தன்மை மறைந்து கடலுடன் ஐக்கியமாகி விடுகிறது. அது போல் தான் மனித வாழ்க்கையும் ! உன் குடும்பத்திற்கும் , உன் சமூகத்திற்கும் உன்னுடைய கடமையை நிறைவேற்றுவதும் , பிறருக்கு உதவி செய்வதும் தான் உன்னுடைய பிறவிப்பயனாகும். உன் வாழ்வு முடிந்ததும் பரம்பொருளுடன் ஐக்கியமாகி விடுகிறாய்.
ஒருவன் உயிரோடு வாழும் போது அவன் பிறருக்கு என்ன நன்மை செய்கிறான் என்பதுதான் முக்கியமே தவிர , இறந்த பிறகு என்ன ஆவான் என்று அறிய முயல்வது வீண் முயற்சி ! அதனால் எந்தப் பயனுமில்லை " என்று அறிவுரைப் பகன்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு தெளிவு பெற்ற விசுவநாதன் அன்று முதல் தன் ஆராய்ச்சியை நிறுத்தி விட்டு , பிறருக்கு உபகாரம் செய்யலானான்.
????? ??????.????