[h=2]பூ மற்றும் இலைகளை பூஜைக்கு எடுத்து செல்லும் முன் கவணிக்க வேண்டியவை[/h]
இறைவனுக்கு அர்ச்சிக்கப்படும் சில வகை பொருட்களை, அவற்றை சேகரித்த நாளில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் வரை வைத்திருந்து பின்னர் பயன்படுத்தலாம்.
அந்தவகையில் வில்வ இலையை பறித்து 6 மாதங்கள் வரையிலும், வெண்துளசியை பறித்து ஓராண்டு வரையிலும், தாமரையை பறித்து 7 நாள் வரையிலும், அரளியை பறித்து 3 நாட்கள் வரையிலும் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.
இறைவனுக்காக துளசியை பறிக்கும்போது சில விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
திருவோண நட்சத்திரம், சப்தமி, அஷ்டமி, துவாதசி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, மாலை வேளை, இரவு நேரம், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பூஜைக்காக துளசி பறிக்கலாம்.
மேலும், இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பூக்களையும், இலைகளையும் பறிக்கும்போது பேசிக் கொண்டோ, சிரித்துக் கொண்டோ பறிக்கக் கூடாது. அதுபோல கைகளை கீழே தொங்க விட்டவாறும் பறிக்கக் கூடாது.
அத்துடன் கையால் உடம்பையும், உடைகளையும் தொட்டவாறும், கொம்புள்ள கிளைகளை முறித்தலும் அப்போது செய்யக்கூடாது.
நம் மனதில் இறைவனை முழுவதுமாக நிறுத்தி, அவன் நாமத்தை உச்சரித்தவாறே பறிக்க வேண்டும்.
சிவலிங்கத்தின் தலையில் புஷ்பம் இல்லாமலிருக்கக் கூடாது;
புஷ்பங்களில் சாத்வீகம், ரஜசம், தாமசம், மிச்ரம் என்ற நான்கு வகைகள் உண்டு.
வெண்மையான புஷ்பங்கள் சாத்வீகம், சிவந்தவை ரஜசம், கருநிற புஷ்பங்கள் தாமசம், மஞ்சள் வர்ணமுள்ளது மிச்ரம். மூன்று தளங்கள் உள்ளதும், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணமுள்ளதுமான ஒரு வில்வத்தை,
சிவனுக்கு, அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்மாவின் குலோத்தாரணம் செய்து, சிவலோகத்தில் கொண்டாடப்படுவான். வில்வ பத்ரம் புதிதாக இருந்தாலும், காய்ந்திருந்தாலும், சிவனுக்கு அர்ச்சிப்
பதால், சகல பாவங்களும் விலகும்.
வில்வ பத்திரத்தை ஒரு முறை அர்ச்சித்தபின், மறுதினம் அதையே தண்ணீரில் கழுவி, மீண்டும் அர்ச்சிக்கலாம்; தோஷமில்லை.
சுவர்ண புஷ்பம், மூன்று நாளும்; வில்வம், ஐந்து நாளும்; துளசி, பத்து நாளும் திரும்பத் திரும்ப எடுத்து, பூஜிக்கலாம்; பழசு என்ற தோஷமில்லை.
ஸ்நானம் செய்தபின், அப்படியே புஷ்பம் பறித்து வந்தால், அது, பூஜைக்கு உதவாது.
ஈரத் துணியை மாற்றி, காய்ந்த உடை உடுத்தி, நெற்றிக்கிட்டு, வாழை இலை அல்லது பூக்குடலையில் கொண்டு வர வேண்டும். கீழே விழுந்த புஷ்பம், வஸ்திரத்தில், கையில் கொண்டு வந்த புஷ்பம், வாடியது, புழு அரித்தது, கேசம் சேர்ந்தது ஆகிய புஷ்பங்களைத் தள்ள வேண்டும்.
அட்சதையால் விஷ்ணுவையும், துளசியால் விநாயகரையும், அருகினால் தேவியையும், வில்வத்தால் சூரியனையும் பூஜிக்கக் கூடாது. ஊமத்தை, எருக்கு புஷ்பங்கள், விஷ்ணுவுக்கு கூடாது.
பூஜைக்குரிய எருக்கு, செண்பகம், புன்னை, நந்தியாவட்டை, பாதரீ, கண்டங்கத்தரி, அரளி, நீலோற்பலம் ஆகிய இந்த எட்டும், அஷ்ட புஷ்பங்கள் எனப்படும். புஷ்பத்தை கிள்ளி, கிள்ளி பூஜை செய்தால் தரித்ரியம் ஏற்படும்.
பல நாமாக்களுக்கு ஒரு முழு புஷ்பம் அர்ச்சிக்கலாம். பத்திரத்தை கிள்ளி அர்ச்சிக்கலாம். வில்வம், துளசியை தளம், தளமாக அர்ச்சிக்க வேண்டும்.
தாமரை பூவில் சரஸ்வதியும், அரளிப் பூவில் பிரம்மாவும், வன்னியில் அக்னியும்… இப்படி ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு தெய்வம் உள்ளது.
15 | September | 2011 | My Blog