ஜகத் குரு(பரமாச்சார்யர்) ஞாபகம்
ஜகத் குரு(பரமாச்சார்யர்) ஞாபகம்
நம்முடைய பெரிய பாக்யமே, அதிர்ஷ்டமே பரமாச்சார்யர் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம், அவர் சுவாசித்த காற்றை நாமும் சுவாசித்து, அவர் நடந்த மண்ணில் நாமும் நடந்தோம், அவரை நேரில் பார்த்தோம், என்பதே அவரை தரிசனம் செய்தவர்கள் புன்யசாலிகள் . அவரோடு பேசி, அவர் பேசியதைக் கேட்க கொடுத்துவைத்தவர்கள் மகா புருஷர்கள். அவரோடேயே இருந்தவர்களைப்பற்றி கேட்கவே வேண்டாம் அவர்களுக்கு மறு பிறப்பே கிடையாது என தைரியமாக கூறலாம்.
மஹா பெரியவா ஒரு அபூர்வ மாணிக்கம். இந்த நாடே நற்கதியடைய அவதரித்தவர். அவரை வயதைக்கொண்டோ, கால அளவைக் கொண்டோ மதிப்பிட முடியாத பரம புருஷன். ஒரு சிறந்த ஆன்ம சக்தியின் உருவகம் அவர். இந்தியாவில் மட்டுமே இவ்வாறு மகான்கள் அவதரித்துள்ளனர். என்பது நமக்கு புகழ். எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் நடு நடுவே அவ்வப்போது இத்தகைய வழிகாட்டி ஒருவர் தோன்றி நம்மை நல்வழிப்படுத்த அவதரித்துக்கொண்டே இருக்கும் ஒரே நாடு இந்தியா.
பெரியவா ஒரு ஞான சாகரம். உயர்ந்த நோக்கு, வேத சாரம், பரோபகாரம், சகலரிடமும் பாரபட்சமின்றி அன்பு, தர்ம சிந்தனை, ஜகத்குரு என்ற பேருக்கே இலக்கணம் அல்லவா மஹா பெரியவா. தெரியாத மொழிஇல்லை. அறியாத சாஸ்திரம் இல்லை. அனுபவிக்காத ரசனை இல்லை. எளிமையின் சின்னம். கலியுக தெய்வமென்பதால் தானே அவரது வாக்க்குகளை ரா. கணபதி தெய்வத்தின் குரலாக நமக்கு அளித்திருக்கிறார்.
ஒடிந்து விழும் அந்த சிறிய உருவுக்குள் எத்தனை பெரிய ஆத்ம பலம். தெய்வீக் சக்தி.
பன்னிரண்டு வயதிலேயே சன்யாசம். ஆதி சங்கரரின் வழித்தோன்றல் அல்லவா. முதலாமவர் அவர் 7 வயதிலேயே உலகைத் துறந்தவராச்சே.
''யாரப்பா ஒரு உண்மையான குரு?'' என்று ஆதி சங்கரரைக் கேட்டபோது அவர் சொன்னது என்ன தெரியுமா. எவர் ஒருவர் ஞானத்தை முழுமையாக பெற்று தனது சிஷ்யர்களுக்கும் தன்னை அண்டியவர்க்கும் அவர்கள் நற்கதி பெற போதிக்க தன்னை முழுமையாக அற்பணிக்கிறாரோ அவரே குரு. இது மகா பெரியவாளுக்கு முற்றிலும் பொருந்தும்.
சதாய்சு பெற வாழ்த்தும் வழக்கமுடையவர்கள் ஹிந்துக்கள். பெரியவா நூரை நெருங்கி வாழ்ந்த மகான். ஆதி சங்கரரைப்போன்றே கால் நடையாகவே பல வருஷங்கள் விஜய யாத்ரை சென்று மக்களை சந்தித்தவர் . தெய்வமே மனிதனைத் தேடி நாடு பூரா சஞ்சாரம் செய்து மக்களை அடைந்து மகிழ்வித்து உய்வித்தது. இது வேறு எங்குமே உலகில் காணாத அதிசயம்.
ஒரு மனிதன் எந்த அளவுக்கு தன்னை உயர்த்திக்கொள்ள முடியும் என்று வாழ்ந்து காட்டியவர் மஹா பெரியவா. மனித குலமே மூக்கில் மேல் விரலை வைத்து அதிசயிக்கும் மாண்பு கொண்டவர். எந்த பட்டமும் கவுரமும் ஆடம்பரமும் தன்னை நெருங்காதபடி கவனமாக இருந்த எளிய உன்னத தபோ பலம் மிக்க ரிஷி. உலகமே அவரது கனகாபிஷேகத்தை ஆர்வமாக் கொண்டாடியது. அவரோ என்றுமே போல் வித்தியாம் ஒன்றுமின்றி தரிசனம் தந்தார். விரலசைத்தால் நவ நிதியம் அவர் காலடியில் கொண்டு கொட்ட அநேகர் காத்திருந்தபோதிலும் பணம் அவரை நெருங்க விடவில்லை..
ஒரு அறிவாளி, ஞானி என்ன சொல்கிறார் தெரியுமா? கடவுளின் கருணை, அருளை மேலும் மேலும் பெற்று உயரும் ஒருவன் தன்னைப் பற்றிய சுய மதிப்பை தூசாக கருதுகிறான். ''தான்'' விலக விலகத்தானே ''அது'' நெருங்குகிறது. அப்படி தன்னை ''பெரியவாளாக'' நினைக்காது எளிமையாக தவ ஸ்ரேஷ்டராக வாழ்ந்து காட்டியவர் தான் மஹா பெரியவா.
நமக்குத் தான் அவா மகாபெரியவா. தான் அப்படியென்று அவர் சிந்திக்கவேயில்லை. அவர் எண்ணம் பூரா நம் க்ஷேமத்திலேயே தான் இருந்தது. நமது வேதமும் சாஸ்திரங்களும் எப்படி ஒரு யோகி இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறதோ அப்படி வாழ்ந்து காட்டியவர் அவர். அவரை நேரில் கிணற்றங்கரையிலும், ஒலைத்தட்டிகளுக்கு அடியிலும், சிறிய ஒரு சுவற்றின் மேல் சாய்ந்துகொண்டு தரையில் படுத்ததையும் கண்டவர்கள் அறிவர்.
ருட்யார்ட் கிப்ளிங் ஒரு மேதாவி. அவன் ஒரு சர்வகலாசாலையில் மாணவர்களுக்கு போதிக்கும்போது ''நண்பர்களே, என்றாவது ஒருநாள், எப்போதாவது, செல்வத்தை சற்றும் சிந்திக்காத, வாழ்வில் வசதிகளை தேடாத, பெருமையும் புகழும் விரும்பாத ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அப்போது நீங்களே உணர்வீர்கள், எவ்வளவு ஏழைகள் நீங்கள் என்று'' என சொல்லும்போது அவருக்கு இப்படி வாழ்ந்த, பரமாச்சார்யரைத் தெரியாது..
பால் பிரண்டன் என்கிற மேலை நாட்டு எழுத்தாளர் ''ரகசிய இந்தியாவை பற்றி ஒரு தேடல்'' என்று புத்தகம் எழுத வந்தபோது உண்மையான ஒரு யோகியை சந்திக்க தேடோ தேடு என்று அலைந்து கிட்டி முட்டி பெரியவாகிட்ட வந்தபோது ''பேசாம திருவண்ணாமலை போ. நீ தேடறவர் அங்கே இருக்கார்'' என்று அனுப்பிவைத்தார். அந்த சமயத்திலே பெரியவாளோடு பால் பிரண்டன் பேச்சு கொடுத்தார். அப்போ ரெண்டுபேரும் காஞ்சி மடத்திலே பேசினது பத்தி கொஞ்சம் இப்போ பார்ப்போம்
ம பெ: '' அடே பிரண்டா, உலகத்தை சிறப்பாக அனுபவிக்க ஒவ்வொரு மனுஷனுக்குள்ளேயும் ஒரு மாறுதல் நிகழணும் இந்த மாதிரி மனத்தில் ஒரு மறு மலர்ச்சி ஏற்படவேண்டியது அவசியம். அப்போது தான் உலகத்தை சரியாக புரியும். உனக்குள்ளேயும் அது ஏற்பட்டா யோகிகளை நீயே அடையாளம் கண்டுபிடிப்பே'' மகரிஷி அரவிந்தருடைய உபதேசத்தை படிச்சவர்களுக்கு இது தெரியும். அவருடைய தத்துவமும் இது தான். மாறுதல் உள்ளிருந்து, தானே வரவேண்டும். அது வரவில்லை யென்றால் மனித குலத்தின் நிலைப்பாடு, மேம்பாடு, வளர்ச்சி எல்லாம் குதிரைக் கொம்பு தான்.
நீங்கள் உங்கள் நாட்டில் கடல் போர் நடத்துகிரீர்களே, கப்பலை போர் செய்யாமல் வைத்துக்கொண்டும் பீரங்கிகளை உபயோகிக்காமல் துருப்பிடிக்க வைத்தாலும், யுத்தம் என்பது நின்றுவிடுமா ? வீரர்கள் வெறும் குச்சி வைத்துக் கொண்டாவது போரில் ஈடுபட மாட்டார்களா? இது ஒரு புத்திசாலித்தனமான எதிர்காலப் பார்வை. அணு ஆயுதங்கள், அணு குண்டுகள், இவை கண்டுபிடிக்கப்படாமல், அவை இல்லாமல் இருந்தாலும் உலகில் போர் நிற்கப் போவதில்லை. எங்கோ யாரோ யாருடனோ நிச்சயம் ஒரு யுத்தம் செய்து கொண்டு தான் இருப்பார்கள். அமைதியாக அன்பாக உறவு வேண்டுமானால் மனித மனங்கள் திருந்த வேண்டும். மனம் மேம்பட வேண்டும். உள்ளிருந்து சமரச அன்பு பெருக வேண்டும். இது அனைவருக்கும் ஏற்பட்டால் இந்த புவி இன்ப லோகமாகும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் இடையே பரஸ்பர ஆன்மீக மன ஒருமைப்பாடு அவசியம். ஏழை பணக்கார நாடு என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. தனி அந்தஸ்து மரியாதையோடு உறவு வைத்துக் கொள்ளவேண்டும். இது நல்லெண்ணத்தை வளர்க்கும், அமைதி சுபிட்சம் பெருக வழி கோலும்.''
பிரண்டன்: ''சுவாமிஜி, அப்படியென்றால் தற்போது மக்கள் இன்னும் தரத்தில் உயரவில்லை என்கிறீர்களா.?? இன்னும் கீழே கீழேயே போய்க் கொண்டிருக்கிரார்களா?
ம. பெ : ''அதல்ல. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு புனித ஆத்மா உள்ளது. அது தான் அவன் திருந்த திருந்த மெதுவாக கடைசியில் அவனை கடவுளிடம் கொண்டு சேர்க்கிறது. எனவே மக்களிடம் குறைபாடு கண்டுபிடிக்கவோ, கடிந்து கொள்வதிலோ அர்த்தமில்லை.
அவர்கள் வளரும் விதம் சூழ்நிலை அப்படி. அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள். பாவம். சூழ்நிலை சந்தர்ப்பம் இவை மனிதனை வளரவிடாமல் அழுத்தி கீழேயே வைத்துள்ளதே. இது கீழை நாடு மேலை நாடு எங்குமே இருக்கும் பரிதாப நிலை. சமூகத்தையே சீர்படுத்தி மேல் நிலைக்கு கொண்டுவர பாடுபடவேண்டும். இதன் மூலம் தான் பிறவிப்பயன் என்ன என்பது புரியும். ."
பால் பிரண்டன் பெரியவாளின் ஆன்மீக சக்தியைக்கண்டு வியந்தார். .
மஹா பெரியவா, ஒருத்தரை பார்த்தாலே அவர்களுடைய மனசில் உள்ளே ஓடற எண்ணம் பூரா துல்லியமா தெரியும்.
அந்த மனிதனைச்சுற்றி இருக்கும் ஒளியை உணரக்கூடியவர். நீ எப்படிப்பட்டவன், உனக்கு என்ன தேவை என்பது அவருக்கு புரிந்து விடும். இந்த மனித இனமே ஒரு குடும்பம். இந்து முஸ்லிம் பார்சி கிருஸ்தவன் என்கிற வித்யாசம் இல்லாதவர். இந்தியன் அந்நியன் என்ற பாரபட்சம் அவருக்கில்லை. ஏதாவதொரு இஷ்ட தேவதையை மனதில் ஸ்மரித்து வழிபடும்போது கடவுள் வழிபாடு த்யானம் எல்லாம் கைகூடும் கை கொடுக்கும் என்பவர். .
பரம்பொருளை அறிய ஒரு தூண்டுகோலாக அமைவது தான் இஷ்ட தேவதை வழிபாடு. வழி பலவாக இருந்தாலும் இந்த வழிபாடு கடைசியில் அனைவரையும் பரம்பொருளை அடைய ஒன்று சேர்க்கும். வித்யாசங்கள் அப்போது மறையும் இதை ஞானிகள் ரிஷிகள் அனுபவித்து உபதேசித்திருக்கிறார்கள்.
இந்திய சுதந்திரத்தின் போது 1947ல் மஹா பெரியவாளுடைய வயசு 40. அப்போது அவா "இந்த நாள் பாரத வர்ஷம் சுதந்திரம் அடைஞ்சிருக்கு. இது போறாது. இந்த தேச அனைத்து மக்களும் ஒரே மனசோடும் இதயத்தோடும் பகவானை வேண்டிக்கணும். நமக்கு இன்னும் நிறைய ஆன்மீக பாதையில் முன்னேற திட மனசு, விடா முயற்சி, ஒத்துழைப்பு எல்லாம் அருளணும்னு பிரார்த்தனை பண்ணனும். "
பார்த்தீர்களா. நாட்டுக்கு சுபிட்சம் பணத்தில் அல்ல. வசதியில் அல்ல. என்று சுதந்திரத்தன்றே பெரியவா உணர்த்தியிருக்கா. இன்னிக்கு நாடு கெட்டுக் குட்டிச்சுவராக போனதற்கு நாம் திருந்து எடுத்து அனுப்பிய நம்மோட பிரநிதிகள் தானே காரணம். அவர்களை அங்கு அனுப்பியது யார். நாம் தானே. தனது தலையிலே தானே மண்ணைப் போட்டுக்கொள்வதில் நமக்கு ஈடு யார்.? எத்தனை கோடி மக்கள்? இதில் கொஞ்சமாவது மனச்சாட்சிக்கு மட்டு பயந்து நல்லது செய்ய ஆளில்லையா? இதுக்கு எத்தனை கொடி ? எத்தனை சண்டை? இதில் யார் யோக்கியம்? எவ்வளவோ பார்த்தாச்சே. இன்னும் நம்பிக்கை சாகல்லே.
மஹா பெரியவா போல சில நடமாடும் தெய்வங்களாலே கொஞ்சமாவது இன்னும் மன சாட்சி இருக்கு. பெருகி வரச் செய்திருக்கிறார். 1957ல் பெரியவா பட்டத்துக்கு வந்த கோல்டன் ஜுபிலி விழா ஏற்பாட்டில் அவர் என்ன சொன்னார் என்பது நினைவு கொள்வோம். ''மடத்துக்கு பொறுப்பேற்று 50 வருஷமாச்சு. இன்னும் எதிரே நிக்கற வேலை முடியலே. இதெல்லாம் செய்ய அதிகாரம் மட்டும் என்கிட்டே இருக்கு. பரவாயில்லே காலம் இன்னும் இருக்கே. இருந்துண்டே தான் இருக்கும். மனுஷாளைவிட அதுவாவது
எடுத்துண்ட வேலை தொடர ஒத்துழைக்கணும்.'' இதுக்காக தான் தேசம் பூரா பெரியவா அலைஞ்சு அங்கங்கே லோக தர்மத்தை பரிபாலனம் பண்ணிண்டு வந்தா போல இருக்கு. நிறைய பக்தர்களை இந்த சேவையிலே ஊக்குவித்தார்கள். ஜகத் குரு என்கிற தன்னுடைய பொறுப்பை எப்போதும் உணர்ந்தே உழைத்தவர் அந்த உத்தமர்.
Source: Sage of Kanchi
Krishnamoorthi Balasubramanian