• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
செய்யவேண்டிய பணிகள்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 107

செய்யவேண்டிய பணிகள்

இந்தப் பெரிய பணியில் முதல் ஸ்டெப்பாகச் செய்யவேண்டியது தற்போது மிஞ்சியுள்ள சாஸ்திரக்ஞர்களையெல்லாம் குருகுலமோ, பாடசாலையோ எதுவா ஒன்றில் பிடித்துப்போட்டு போதிப்பதற்கு ஊக்கம் தரவேண்டும். அங்கே பழைய சாஸ்திரங்களின் ஸம்பந்தமான நூல்களை, சுவடிகளையெல்லாம் முடிந்தமட்டும் சேகரித்து வைக்கவேண்டும். இவற்றில் ரிஸர்ச்சுக்கும் தூண்டுதல் அளிக்க வேண்டும். முக்யமான நூல்களையாவது அச்சுப் போடுவதற்கு ஸஹாயம் செய்யவேண்டும்.

கற்றவன் கற்பிப்பவனாக வேண்டும்

நன்றாகப் படித்தறிந்த ஒருத்தர் நாலு பேருக்காவது அதைப் படிப்பிக்காமல் போனார் என்று ஏற்படவே கூடாது. நன்றாகக் கற்று வித்வானாகிற எவனும் அப்புறம்தான் கற்றதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து ப்ரசாரம் செய்தேயாக வேண்டுமென்பது ஆன்றோர் விதித்த விதி. தன்மட்டில் கற்றவனாயிருந்து பயனில்லை. கற்பிப்பவனாயிருந்து கல்வியின் பயன் வருங்கால ஸமுதாயத்துக்கும் போகும்படிச் செய்யவேண்டும்.

மநுஷ்யனுடைய வாழ்க்கையில் ப்ரஹ்மசர்யம், கார்ஹஸ்த்யம், வானப்ரஸ்தம், ஸந்ந்யாஸம் என்று நாலு ஆச்ரமம் உள்ளது என்றால், கல்வி கற்பிப்பதிலும், நாலு ஸ்டேஜ்கள் உண்டு. அதீதி, போதம், ஆசரணை, ப்ரசாரணை என்று இந்த நாலுக்குப் பேர். அதீதி என்றால் படிப்பது. முதலில் நன்றாகப் படிக்கவேண்டும். அப்புறம் போதம், அதாவது படித்ததை நன்றாகப் புரிந்துகொண்டு அதிலே மேலும் புது அறிவு பெறுவது. மூன்றாவதாக ஆசரணை. முதலிரண்டும் இப்போதுங்கூடப் பல ஸப்ஜெக்ட்களில் நடந்துவிடுகின்றன. ஆனால் இந்த மூன்றாவது விஷயத்தில் தான் கோளாறாக இருக்கிறது. அது என்ன? ஆசரணை என்றால் அறிவிலே இறக்கிக் கொண்டதை நம்முடைய வாழ்க்கையிலே இழைத்து, நடைமுறையில் நடத்திக் காட்டுவது என்று அர்த்தம். கற்றபின் அதற்குத் தக நிற்பது ஆசரணை.

இந்த மூன்றோடு மட்டும் வித்வானின் லக்ஷணத்தை முடிக்காமல், முடிவாக ‘ப்ரசாரணை’ என்றும் ஒரு நாலாவது லக்ஷணம் சொல்லியிருக்கிறது. இதுதான் தான் கற்ற கல்வி தன்னோடு போகாமல் அதை நாலுபேருக்குக் கற்றுக் கொடுப்பது. ப்ரசாரம் செய்வது ப்ரசாரணை.

ஸ்ரீ ஹர்ஷர் இந்த விஷயத்தைக் கவி சாதுர்யத்தோடு சொல்லியிருக்கிறார். நளனுடைய கதையை “நைஷதம்” என்ற பெயரில் எழுதியிருப்பவர் அவர். நளன் நிஷததேசத்து ராஜாவானதால் புஸ்தகத்துக்கு “நைஷதம்” என்று பெயர் வைத்தார். வித்வான்கள் விரும்பும்படியான காவ்யம் அது. “நைஷதம் வித்வத் ஒளஷதம்” – நைஷத காவ்யமானது வித்வான்களுக்கு லேஹ்யம் மாதிரி – என்று சொல்வார்கள். அதிலே அவர் நளன் சதுர்தச வித்யைகளைக் கற்றுத் தேர்ந்தான் என்று சொல்லும்போது இந்த ஸமாசாரம் சொல்லியிருக்கிறார். ‘சதுர்தச’ என்ற வார்த்தையில் சிலேடை செய்து சொல்லியிருக்கிறார்.

‘சதுர்தச’ என்ற வார்த்தை இரண்டுவிதமாக அர்த்தம் கொடுக்கும். பதிநாலு என்பது ஒரு அர்த்தம். தசம் – பத்து, சதுர்தசம் – நாலு ப்ளஸ் பத்து, அதாவது பதிநாலு நாலு வேதம், அதன் ஆறு அங்கம், நாலு உபாங்கம் என்பவை சேர்ந்து பதிநாறு வித்யைகள்.

‘சதுர்தச’ என்பதற்கு இன்னொரு அர்த்தம் நாலு தசை, நாலு விதமான ஸ்டேஜ்கள் என்பது.

சதுர்தச வித்யைகளைக் கற்று, அவற்றுக்கு அதீதம், போதம், ஆசரணை, ப்ரசாரணை என்று சதுர்தசைகளை நளன் கொடுத்தான் என்று (கவி ஸ்ரீஹர்ஷர்) வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார்.

அதீதபோத ஆசரண ப்ரசாரணை:

தசாச் – சதஸ்ர: ப்ரணயந் நுபாதிபி: |

சதுர்தசஸ்த்வம் க்ருதவாந் குதஸ்வயம்

நவேத்மி வித்யாஸு சதுர்தசஸ்வயம் ||



Sage of Kanchi

Krish Ram
 
Thyagaraja Temple Annual Festival on August 25th!

Thyagaraja Temple Annual Festival on August 25th!


========================================


13 th August 2015


"Enclosed is the invitation for the Annual Festival at Tyagarajar temple in Tiruvarur, Tamil Nadu. Devotees can get in touch with Shri G. Dakshinamurthy in his mobile: 9442403557 for making contribution towards the puja. His communication address is No.204, G.D. Nagar, Tiruvarur 610 001.

The temple Kumbabhishekam is also scheduled for October 2015 and Ther (Chariot) in January 2016.

Here are the online transfer details:

Name: V. Dakshinamurthy
Payee Account Number: 11009863922
Bank IFSC Code: SBIN0000939
Payee Bank Name: STATE BANK OF INDIA
Payee Bank Branch: TIRUVARUR
Payee Bank City: TIRUVARUR

Friends, please call Shri Dakshinamurthy and inform him about the money transfer and provide your address to him, so that he can mail the prasadam, which he does religiously!"

*****

Padma Balasubramanian reached out to me with this noble request to spread the word about helping the temple. Thiruvarur is her native place! She says that the fund requirement is quite heavy and most old members of temple have either passed away or are dependent on their children to make any contribution.

She personally knows Shri Dakshinamurthy for about 10 years now. She mentions that even if there is an extra Rs.10 from our contribution, he will arrange to do an archanai in one of the sannadhis and send us the prasad and also inform us about it! "Rare are such people and its a pity we don't have many more like this, especially in temple and charity sectors", adds she!

The magnificent Thyagaraja temple and the majestic chariot are seen in the picture.

Let us do our might in this noble cause.

Thanks so much everyone!





Source: Sage of Kanchi

Panchanathan Suresh
 
பிரசாரப் புரளி தெய்வத்தின் குரல் (நான்க&#300

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 108

பிரசாரப் புரளி

ப்ரசாரணை என்பது இந்த நாளில் எடுத்ததற்கெல்லாம் ஆர்ப்பாட்டமாக ப்ரசாரம், propaganda என்று செய்கிற மாதிரியானதல்ல. இப்போது ஏதோ ‘ஸ்டாடிஸ்டிக்ஸ்’களை (புள்ளி விவரங்களை)க் காட்டி ஒரு விஷயத்தை ‘ஓஹோ’ என்று நினைக்கும்படியாகவே ‘ப்ராபகாண்டா’ இருக்கிறது. இத்தனை பம்ப்ஸெட் போட்டோம், இத்தனை ஊரில் எலெக்ட்ரிக் லைட் போட்டோம், திட்டத்தில் இததற்கு இத்தனை கோடி செலவழித்தோம் என்கிறாற் போல ‘ப்ராபகாண்டா’ என்பது நடக்கிறது. வாஸ்தவத்தில் (இவற்றால் ஜனங்களுக்கு) ஏற்பட்ட ப்ரயோஜனம் குறிப்பிடும்படியாக இருந்ததா என்று கேள்வி எழுந்தாலுங்கூட ஸ்டாடிஸ்டிக்ஸைப் பார்த்து ப்ரமித்துப் பாராட்டிவிடத் தோன்றிவிடுகிறது.

மதத்தில் கன்வர்ஷன் (மதமாற்றம்) செய்கிறவர்கள்தான் இப்படி ப்ராபகாண்டா செய்வதில் மஹா கெட்டிக்காரர்களாயிருக்கிறார்கள். பணத்தை, காசைக் கொடுத்து, இல்லாவிட்டால் வேறே ஏதோ ஸாமர்த்யம் செய்து வளைத்து, ஒன்றுமறியாத பாமர ஜனங்களை அப்படியே சேரி சேரியாகத் தங்கள் மதத்துக்குத் தள்ளிக்கொண்டு விடுவார்கள். அப்புறம் அவர்களைக் கணக்கெடுத்து (அதோடு கொஞ்சம் சேர்த்துக்கொண்டாலும் சேர்த்துக்கொண்டு!) “பார்த்தீர்களா, இத்தனை பேர் ஹிந்து மதம் உபயோகமில்லை என்று எங்கள் மதத்தில் விச்வாஸம் வைத்துச் சேர்ந்துவிட்டார்கள்” என்று ஸ்டாடிஸ்டிக்ஸ் காட்டி ப்ரசாரம் செய்வார்கள்.

அங்கே அப்புறம் நம்மவர்கள் போய் கன்வர்ட் ஆனவர்களை எப்படியாவது பிடித்து, “நம்ப மதத்திலே உங்களுக்கு என்ன பிடிக்கவில்லை? அந்த மதத்திலே என்ன பிடித்து அதிலே சேர்ந்தீர்கள்?” என்று கேட்டால் அவர்கள் முழிமுழி என்று முழிப்பார்கள். ரொம்பவும் கேட்டால், “எங்களுக்கு ஹிந்து மதத்தில் எதுவும் பிடிக்காமலில்லை. அப்படியே இதில் பிடிக்காததாக ஏதாவது இருந்தாலுங்கூட, அந்த மதத்தில் இதைவிடப் பிடித்ததாக எதுவுமில்லை. நிஜத்தைச் சொல்லப்போனால் எங்களுக்கு இந்த மதத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இதிலே எங்களுக்கு அபிமானமோ, பொதுவாக மதவிஷயம் என்பதிலேயே எங்களுக்கு அக்கறையோ இல்லை. அவர்கள் எங்களுக்கு இது இதுகளைக் கொடுத்தார்கள். இன்னம் என்னென்னவோ செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள், எங்களுக்கு ஏதேதோ ‘ரைட்’கள் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதற்காகவெல்லாந்தான் அவர்களுடைய மதத்துக்குப் போனோமே தவிர, அந்த மதக் கொள்கை புரிந்தோ, பிடித்தோ போகவில்லை” என்று உண்மையைப் போட்டு உடைத்துவிடுவார்கள்.

“ப்ரசாரணை” என்ற வார்த்தையைப் பார்த்துத் தற்கால ப்ரசாரம் மாதிரியாக்கும் அது என்று நீங்கள் நினைத்துவிடப் படாதே என்பதற்காகச் சொல்கிறேன். ப்ரசாரம் என்றாலே புரளி ப்ரசாரம்தான் என்று எடுத்துக் கொண்டுவிடக்கூடாது என்பதற்காகச் சொல்கிறேன்.

நம்பரைக் காட்டி ப்ரமிக்க வைத்து ப்ரசாரம் செய்வது நம்முடைய தேசாசாரத்தில் கிடையவே கிடையாது. இத்தனை பேர் படிக்கிறார்கள் என்று ஸ்டாடிஸ்டிக்ஸ் காட்டுவதற்காக வித்யா ப்ரசாரம் பண்ணும்படியாக நம் சாஸ்திரங்கள் சொல்லவேயில்லை. பாத்ரம் பார்த்து, நிஜமாகவே க்ரஹிக்க கூடியவர்களுக்குத்தான் வித்யையை ப்ரசாரம் செய்யவேண்டுமென்று விதித்திருப்பதை முதலிலேயே சொன்னேன்.

இப்படித்தான் ப்ராபகாண்டா பண்ணாமலே ஒவ்வொரு வித்யார்த்தியும் முதலில் தான் வித்வானாகி, அப்புறம் குருவாக ஆகித் தானும் சில வித்யார்த்திகளுக்கு நிஜமாகவே போதித்து அவர்களை நிஜமான வித்வானாக்க வேண்டும் என்று வைத்திருந்தார்கள். சிஷ்யன் குருவாகி வாழையடி வாழையாக மேலும் சிஷ்யர்களை பயிலுவிக்க வேண்டுமென்பது நம்முடைய மரபு.

ஒருத்தன் தான் ஸம்பாதித்த ஸொத்தை யாருக்கும் ப்ரயோஜனப்படாமல் புதைத்து வைத்துவிட்டுச் செத்துப் போனால் எத்தனை தோஷமோ, அதைவிட தோஷம், தான் கற்ற வித்யையை நாலு பேருக்குக் கொடுக்காமல் செத்துப் போவது என்பது நம் முன்னோர்களின் கருத்தாக இருந்திருக்கிறது.


Sage of Kanchi

Krish Ram
 
Sri Kamakshi Amman

Sri Kamakshi Amman

13 th August 2015

Sri Kamakshi is holding a sugarcane bow in her left lower arm. Why sugarcane bow? If you crush a sugarcane you get sweet and tasty juice from which sugar is manufactured. It means if you crush your mind (controlling of mind), you get the sweet reality of Brahman.






Sage of Kanchi

Gayathri Rao
 
Kaanchi Mahaaswamigal Says……

Kaanchi Mahaaswamigal Says………

To start with, we must perform the rites prescribed by the Vedas. But in this there must be the realization that they are but steps leading us to the higher state in which we will ultimately find bliss in our Self, a state in which there will be neither rites nor duties to perform.

When Vedic rites are performed in a spirit of dedication to Isvara they will loosen your ties little by little, instead of keeping you bound to this world. If you perform rites to please the Lord, without expecting any reward, your mind will be cleansed and you will transcend the three gunas. This is the meaning and purpose of "yajna".


Sage of Kanchi

Jambunathan Iyer
 
Sri Kanchi Kamakoti Veda Patasala, Tiruchchirapalli

Sri Kanchi Kamakoti Veda Patasala, Tiruchchirapalli


https://www.youtube.com/watch?v=3Mg4ttdT4HU


Published on Feb 21, 2014

Veda Vidyalayam, Veda Patasala, Sri Kanchi Kamakoti Veda Patasala, Vedas, Sri Kanchi Kamakoti Vidyalayam, Rigveda Vidyalayam, Tiruchchirapalli, Trichy, Srirangam,





Patasala address :
Sri Kanchi Chandra Sekhara Rigveda Veda Vidyalayam, Kanchi Kamakoti Madam, Near: Jambukeswara sahitha Akilandeswari Devastanam, Thiruvanaikaval, Trichy, Tamilnadu 620005

Please Donate
 
அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 113

அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு

வாஸ்தவ நிலை எப்படி இருக்கிறதென்று பார்த்தால் வ்யஸனம்தான் மிஞ்சுகிறது. வர வர வர வித்யையின் தரம் குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு சாஸ்திரமாக மறைந்துகொண்டே வருகிறது. எத்தனையோ கலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ஒரே இருட்டிலே சின்ன மின்மினிப் பூச்சி வெளிச்சம்கூடப் பெரிசாகத் தெரிகிறார்போல, குருபீடங்களிலே ஸ்வல்பவித்வத்தோடு ஒருத்தர் இருந்துவிட்டால்கூட அவரை சிஷ்யலோகம் “ஸர்வஜ்ஞர்” என்று புகழ்ந்து அவரும் தாம் அதற்குமேல் தெரிந்துகொள்ள வேண்டாமென்று நினைக்கிற அளவுக்குக் கொண்டு விட்டுவிடுகிறது.

மின்மினிப் பூச்சியைச் சொல்லும்போது ஒரு கதை நினைவு வருகிறது. கதை என்றால் நிஜமாகவே நடந்த கதை. நீலகண்ட தீக்ஷிதரும், பழமார்நேரி மஹாதேவ சாஸ்திரகள் என்பவரும் ஸம்பந்தப்பட்ட கதை. நீலகண்ட தீக்ஷிதர் மதுரையில் புகழ்வாய்ந்ததாக உள்ள திருமலை நாயகர் மஹாலையும் புது மண்டபத்தையும் கட்டிய நாயக மன்னருக்கு மந்த்ரியாக இருந்தவர். மஹாபக்தர். இவற்றோடு மஹாவித்வானுமாவார். பழமார்நேரி சாஸ்த்ரிகள் இவர் மாதிரி ப்ரஸித்தி பெறாதவர். ஆனாலும் தீக்ஷிதரும் அவரிடம் எப்படித் தோற்றுப் போனமாதிரி ஆனார் என்று அந்தக் கதை தெரிவிக்கிறது. ஞானசூன்ய உலகத்திலே எப்படி மின்மினிப் பூச்சி மாதிரி துளிப்போல ஞானத்தைப் பகட்டாகக் காட்டிக்கொள்பவர்கள் தங்களை ப்ரமாதப் படுத்திக்கொள்ள முடிகிறது என்று மஹாதேவ சாஸ்திரி இடித்துக் காட்டி ச்லோகம் இயற்றிச் சொன்னதில்தான் தீக்ஷிதருக்கு அவரிடம் ரொம்பவும் மரியாதை ஏற்பட்டது என்று கதை*.

வெறும் அரட்டை ஆஸாமிகளும் மின்மினி அறிவினாலேயே ப்ரகாசிக்கிற இருட்டுச் சூழ்நிலையில்தான் இப்போது இருக்கிறோம். இந்த மின்மினி ஒளியை மங்கச்செய்யும் நக்ஷத்ரக் கூட்டங்களின் ப்ரகாசம், நக்ஷத்ரங்களின் ஒளியையும் மழுங்கப் பண்ணும் சந்த்ரோதயம், அந்த சந்த்ரனும் இருக்கிற இடம் தெரியாமல் அமுங்கிப்போகும் ஸூர்யோதயம் என்னும்படியாக மேலும் மேலும் நாட்டில் வித்யா ப்ரகாசம் ஓங்கும்படியாகச் செய்யவேண்டும். இப்போது பூர்ண யோக்யதை உள்ள வித்வான்கள், சாஸ்திரஜ்ஞர்கள், பழைய கலைகள் தெரிந்தவர்கள். ஆயுர்வேத வைத்யர்கள், சில்பிகள், ரதகாரர்கள், பரத சாஸ்திர நிபுணர்கள் என்று ஏதோ கொஞ்சமாவது இல்லாமல் போகவில்லை. ஆனாலும் அரட்டைக்குத்தான் மதிப்புத் தருவது. தடபுடாவுக்குத் தான் மரியாதை செய்வது என்று லோகம் இருப்பதில், – கட்சியபிமானம் ஜாதியபிமானம் முதலியன இதிலும் தலைதூக்கியிருப்பதில் – ஸாதுக்களாக அடங்கியிருந்து கொண்டிருக்கிற, நிஜமான யோக்யதையுள்ள இந்தச் சில வித்வான்களுக்கு ஆதரவு கிடைப்பது ச்ரமமாயிருக்கிறது.

சவடால்காரர்கள் ஆர்ப்பாட்டமாகத் தங்களுடைய அரைகுறை ஞானத்தில் வேதாந்த சாஸ்திரம் வரையில் நம்முடைய வித்யைகளைப் பற்றி எழுதுவது இன்று ஜகத் ப்ரஸித்தி பெறுகிறது. நல்ல ஞானமுள்ள விஷயஜ்ர்கள் ரொம்பவும் பரிச்ரமப்பட்டு ஆராய்ச்சி செய்து எடுத்துச் சொல்கிற விஷயங்களை ப்ரசாரம் செய்வதற்கு, ப்ரசுரம் செய்வதற்கு எவரும் முன்வருவதில்லை. இன்றைய நிலையில் தடபுடல்தான் வேண்டும், பூர்ண யோக்யதை அவச்யமில்லாத விஷயம் என்கிறதுபோல ஆகிக்கொண்டு வருகிறது. இதற்குக் காரணம், பொதுவாக வித்யா ஞானத்தின், சாஸ்திர அறிவின் லெவல் ரொம்பவும் இறங்கியிருப்பதுதான். மேற்கத்தியப் படிப்பிலே தேர்ந்தவர்கள் தற்போது நிறைய இருந்தாலும் ஸ்வதேச வித்யகைளில் பரிசயம் ஜனங்களுக்கு இல்லாததால்தான், இதிலே வாஸ்தவமான ஞானத்தை எடைபோட முடியாமல், படாடோபமான அரைகுறை ஞானத்தை ஆதரிப்பதாக இருக்கிறது. இது ஸரியே இல்லை.


ஆதரிப்பவர்கள் இல்லாவிட்டால் நல்ல வித்வத் உள்ளவர்களுக்கு மனஸு தளர்ந்து போய் அவர்கள் தங்கள் வித்வத்தைத் தங்களுடைய ஸந்ததிக்கோ, சிஷ்யர்களுக்கோ கற்றுக்கொடுக்காமலே போய்விடுவார்கள். நமக்கு வித்யைகள் நஷ்டமாகிப்போகும். இப்படித்தான் தற்போதே நேர்ந்திருக்கிறது. இது மேலும் இப்படியே போய்க்கொண்டிருப்பதற்கு விடப்படாது என்பதற்காகத்தான் இவ்வளவு சொல்வதும்.

* ஸ்ரீசரணர்கள் சுவைப்படக் கூறிய இக்கதையின் விரிவை இதே பகுதியில் “கவிஞர், அறிஞரின் தற்பெருமை” என்ற உரையின் “நீலகண்டரும் மஹாதேவரும்” என்ற பிரிவில் காண்க.


Sage of Kanchi

Krish Ram
 
தினம் ஸ்நானம் செய்வதற்கு முன்

தினம் ஸ்நானம் செய்வதற்கு முன் கீழ்கண்ட ஸ்லோகம் சொல்லி ஸ்நானம் செய்தால் பாபங்கள் அகலும்-( ஸ்ரீ மஹா பெரியவா)

அதிக்ரூர மஹாகாய
கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம்
அநுஜ்ஞாம் தாதுமர்ஹஸி

துர்போஜன துராலாப துஷ்ப்ரதி க்ரஹ ஸம்பவம் பாவம்
ஹர நமஸ்துப்யம் பாகீரதி நமோஸ்துதே

கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸகச்சதி.


Sage of Kanchi

Krishnamoorthi Balasubramanian
 
தமிழக அமாவாசை தலங்கள்!

தமிழக அமாவாசை தலங்கள்!

ராமேஸ்வரம்: ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர, ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு, ராமன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமலிங்கம் என்றும், அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை விசுவலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். காசியாத்திரை செல்வோர் இங்கு தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்வர். கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பிதுர்தர்ப்பணம் செய்வோர் ஆடி அமாவாசையன்று ராமநாதசுவாமியை வழிபடுவர். இருப்பிடம்: மதுரையில் இருந்து 200 கி.மீ.,

தொலைபேசி: 04573- 221 223.


திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள பிதுர்தலமான இதற்கு பிதுர் மோட்சபுரம் என்ற பெயருண்டு. அஸ்தி கரைத்தாலும், தர்ப்பணம் செய்தாலும் அவர்கள் நற்கதியாகிய பிறவாநிலை பெறுவர் என்பது ஐதீகம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இங்கு வந்த போது, வைகைக்கரையிலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் போல் காட்சியளித்ததாம். இதனால் ஆற்றில் இறங்க அஞ்சி மறுகரையில் நின்றே வழிபட்டனர். அவர்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றது.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 18 கி.மீ.,

தொலைபேசி: 94435 01761, 04575 265 082, 265 084.


கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், அன்னை பார்வதியின் உதவியை நாடினர். பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க அம்பிகையே கன்னியாக வடிவெடுத்து தவத்தில் ஈடுபட்டாள். தவத்தால் பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி பாணாசுரனை வதம் செய்தாள். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகாசமுத்திரம் ஆகிய மூன்றும் சங்கமிக்கு இங்கு பிதுர்தர்ப்பணம்
செய்வோருக்கு முன்னோர் ஆசி கிடைக்கும்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 235 கி.மீ.,

தொலைபேசி: 04652- 246 223.


அழகர்கோவில் நுபுர கங்கை: திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். பதினெட்டாம் படி கருப்பசாமி சக்தி மிக்கவர். அனுமன் தீர்த்தம், கருடதீர்த்தம், சக்கர தீர்த்தம், நுõபுர கங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமால் உலகை மூன்று அடிகளால் அளந்த போது, அவரது சிலம்பு அணிந்த திருவடி வானம் நோக்கி சென்றது. அது கண்ட பிரம்மா தன் கலச நீரால் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அந்த நீர் கங்கை போல் ஊற்றெடுத்தது. இதனால், இந்த தீர்த்தம் நுõபுர கங்கை என பெயர் பெற்றது. நுõபுர கங்கையில் நீராடி தர்ப்பணம் செய்வது சிறப்பு.

இருப்பிடம்: மதுரையில் இருந்து 25 கி.மீ.,


தொலைபேசி: 0452- 247 0228, 247 0229.


ஆனைமலை மாசாணி அம்மன்: பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் இருந்தது. அந்த பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தான். ஒருநாள் ஆற்றில் நீராடிய இளம்பெண் மிதந்து வந்த மாம்பழத்தை சாப்பிட்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை கொடுத்தான். அவள் மீது ஊரார் இரக்கம் கொண்டனர். அதுவே பக்தியாகி வழிபட்டனர். மயான சயனி என்பதே மாசாணி என மருவியது. உப்பாற்றின் கரையில் அம்மன் 17 அடி நீளத்தில் படுத்த நிலையில் காட்சி தருகிறாள். இவள் நீதி தெவமாக விளங்குகிறாள்.
இருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,

தொலைபேசி: 04253- 282 337, 283 173.


திருச்செங்கோடு அர்த்தநாரி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலில், சிவன் அம்பிகையை இடபாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னிதி சிறப்புமிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோவிலான இங்கு உள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. அந்தக் காலத்தில் வழக்குகளை இங்கு பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. அமாவாசை நாளில் இந்த தீர்த்தத்தைப் பருகினால் உடல் நோய், மன நோய் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் .
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,

தொலைபேசி: 04369-250 238.


அனுமந்தபுரம் வீரபத்திரர்: தட்சனின் யாகத்தை நிறுத்த, சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். சாகாவரம் பெற்ற தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்டினார். பிறகு, தன் கோபம் தணிய பூலோகத்தில் உள்ள அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி அமைதி பெற்றார். இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோவில் அமைக்கப்பட்டது. செவ்வாய்தோஷம், உடல்நோய் நீங்க ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி நாட்களில், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். இருப்பிடம்: விழுப்புரம்- சென்னை சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 10 கி.மீ.,

தொலைபேசி: 044- 2746 4325.


பண்ணாரி மாரியம்மன்: பண்ணாரி வனப்பகுதியில் மேய்ந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும், அங்குள்ள வேங்கை மரத்தடியில் அடிக்கடி பாலைச் சுரந்தது. இதை அறிந்த மாடு மேய்ப்பவன் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில், ஒரு அம்பாள் சிலை இருப்பதைக் கண்டான். விஷயமறிந்த ஊரார் அங்கு வந்த போது, ஒருவருக்கு அருள் வந்தது. பசுமை மிக்க இந்த இடத்தில் மாரியம்மனாக வீற்றிருக்கும் என்னை வழிபட்டால் வேண்டும் வரம் அளிப்பேன், என்று அம்மன் வாக்களித்தாள். அதன்படி கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர். ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு புற்றுமண்ணே பிரசாதம்.
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக 77 கி.மீ.,

தொலைபேசி: 04295- 243 366, 243 442, 243 289.


தேவிபட்டினம் நவபாஷாண கடல்: ராமநாதபுரம் அருகிலுள்ள தேவிபட்டினம் கடலில், ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாணம் என்னும் கற்களால் ஆன நவக்கிரகங்கள் உள்ளன. அமாவாசையன்று இந்தக் கடலில் நீராடி நவக்கிரகங்களை வழிபட்டால் கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். இங்குள்ள சக்கர தீர்த்தம் என்னும் தர்ம புஷ்கரணியில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். வீரசக்தி பீடமாக விளங்கும் இங்கு அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள். புகழ் மிக்க மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தால் போற்றப்படும் அம்பிகை இவளே. ராவணனுடன் போரிடும் முன் ராமர், லட்சுமணர், அனுமன் மூவரும் வெற்றி பெற இந்த அம்பிகையை வழிபட்டனர்.
இருப்பிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,

பவானி சங்கமேஸ்வரர்: ஈரோடு மாவட்டம் பவானியில், பவானி ஆறு காவிரிஆற்றுடன் கூடுகிறது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் அன்னை வேதாம்பிகை அருள்பாலிக்கிறாள். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு திருநணா என்றும் பெயருண்டு. திருநணா என்பதற்கு பாவம் நெருங்காது என்பது பொருள். அதனால் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவதரிசனம் செய்வோருக்கு பாவம் நெருங்குவதில்லை என்பது ஐதீகம். காவிரி, பவானி, அமுதநதி கூடுவதால் பவானியை முக்கூடல் என்று சொல்வர். ஆடி மாதம் முழுவதுமே இங்கு நீராடி, சுவாமியை வழிபடுவது சிறப்பு.

இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 15 கி.மீ.,


அலைபேசி: 98432 48588, தொலைபேசி: 04256- 230 192.


செதலபதி முக்தீஸ்வரர்: திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலை தில தர்ப்பணபுரி என்று சொல்வர். அமாவாசையன்று செய்யும் தர்ப்பணத்தின் பெயரால் அமைந்த தலம் இது. திலம் என்றால் எள் என்று பொருள். இத்தலத்தில் ராமர் தனது தந்தை தசரதர், ஜடாயு இருவருக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. முக்தி தருபவராக சிவன் இருப்பதால் முக்தீஸ்வரர் எனப்படுகிறார். அம்பிகை சுவர்ணவல்லித் தாயார் செல்வம் தருகிறாள். இங்குள்ள அரசலாற்றிலும், சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வர்.
இருப்பிடம்: திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் கிராமம். இங்கிருந்து 4 கி.மீ.,
அலைபேசி: 94427 14055, தொலைபேசி: 04366- 238818, 239 700

அய்யாவாடி பிரத்யங்கிரா: அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். இலங்கை போரில் வெற்றி பெறுவதற்காக ராமர் யாகம் செய்து இந்த தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் சிங்க முகம், 18 கைகள், சிரித்த முகத்துடன் கரிய நிறத்தில் காட்சி தருகிறாள். எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட, அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா யாகம் இங்கு நடக்கிறது. பழம், பட்டு, பூக்கள் என 108 திரவியங்களை சேர்ப்பர். யாக குண்டத்தில் மிளகாய் வத்தலை இட்டாலும் நெடி சிறிதும் இருக்காது.யாகம் நிறைவேறியதும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடக்கும்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ.,
தொலைபேசி: 94431 24347, 0435 246 3414.

பாபநாசம் பாபநாசநாதர்: நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ.,
தொலைபேசி: 04634- 223 268

சொரிமுத்தையனார் கோவில்: சாஸ்தாவின் முதல் தலம் பொதிகை மலையில் உள்ள சொரிமுத்தையனார் கோவில். பூர்ணா, புஷ்கலா தேவியருடன் வீற்றிருக்கிறார். பாணதீர்த்தம் கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது.


Sage of Kanchi

Venkat Babu Sarma
 
Mahalakshmi, Saraswathi and Durga represent three colours in our Flag!"

Mahalakshmi, Saraswathi and Durga represent three colours in our Flag!"
========================================================

“It is worthy to note that luckily the Chakra of Bha­ga­van, who is the embodiment of Dharma, has its place in the centre of our National Flag", HH Sri Chan­dras­ekharendra Saras­wat­hi, the Mahaperiyava, had reacted to India becoming independent on August 15, 1947!

This Seer of Kanchi Kam­a­koti Peetam saw divinity in the Tricolour. In fact, during Mahatma Gandhi’s meeting with Him in 1927, the Acharya was said to have spoken in Sanskrit and Gandhi had conversed in Hindi.

His deep insight and experience in the spiritual knowledge apart, the Acharya seemed to have displayed spectacular way of expressing things, making complex matter sound ordinary and closer to heart.

To Him the Chakra on our national flag is an embodiment of Dharma, reminding one of the moral values as envisaged by emperor Asho­ka and makes one contemplate on the spiritual discipline imparted by Bhagwan Krishna in the Bhagavad Gita.

He has an interesting way of explaining the three stripes in the tricolour that indicate the military strength, wealth and kno­wledge (dar­k green, white and orange colours).

“Mahalakshmi, Goddess of prosperity is of Orange colour; Saraswathi represented by White colour and Dark Green is the colour of Durga – Mother Protector; It is a happy coincidence that the colours of three Shak­tis are seen in the three stripes of Tricolour,” He had said!

*****

A Joyous 69th Independence day to everyone!


Sage of Kanchi

Panchanathan Suresh
 
வித்வான்களுக்குக் கோரிக்கை

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 114

வித்வான்களுக்குக் கோரிக்கை

அதே ஸமயத்தில் வித்வத் ஸமூஹத்திடமும் ஒன்று கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். “நீங்கள் பரம த்யாகிகளாக, ஆதரவு அநாதரவு இவற்றைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது எத்தனை கஷ்டத்திலும் சிஷ்யவர்கத்தை உண்டாக்கி அதனிடம் உங்களுக்குத் தெரிந்தவற்றை ஒப்புக் கொடுக்கவேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன்.

நேரில் கண்ட ஆதர்ச வித்வான்கள்

இம்மாதிரி, பேர், புகழ், பணம், ஆதரவு எதையும் எதிர்பார்க்காமல் அநேக குடும்பங்களில் வித்யைகளுக்கே தங்களை அர்ப்பணித்துக்கொண்டு வருபவர்களையும் நான் ஒன்று, இரண்டு இடத்தில் பார்த்திருக்கிறேன். நான் எத்தனையோ ஊர் சுற்றி எவ்வளவோ பார்த்திருப்பதில் இப்படியும் பார்த்தது எனக்குச் சொல்லி முடியாத ஸந்தோஷமாயிருந்தது.

இவற்றில் ஒன்று எங்கே எப்போது என்றால் 1927-28 வருஷங்களில் மலையாள தேசத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். அங்கே திருவஞ்சிக்களம் என்று ஒரு ஸ்தலம். (திரு அஞ்சைக்களம் என்பதே ஸரியான பெயர்.) பழைய காலத்தில் அதுதான் மலையாள தேசத்துக்குத் தலைநகரமாயிருந்தது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப் பெருமாள், அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் (இரண்டு பேரிலும் ‘பெருமாள்’ இருக்கிறது.) ஆகிய ராஜ – பக்தர்கள் இருவரும் திருவஞ்சிக்களத்திலிருந்துதான் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். தேவாரத்தால் போற்றப்பட்டுப் ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ என்று கூறப்படுகிற க்ஷேத்ரங்களில் “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என்பதாக மலையாளத்திலிருக்கும் க்ஷேத்ரம் இதுதான். இதே மலையாள தேசத்தில் (ஆழ்வார்களின் பாசுரங்களைப் பெற்றவையான) நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் பதின்மூன்று இருக்கின்றன. திருவஞ்சிக்களத்துக்குப் பக்கத்தில் ப்ரஸித்தமான பகவதி க்ஷேத்ரம் ஒன்று இருக்கிறது. கொடுங்கலூர் என்று பெயர். வெள்ளைக்காரர்கள் அதைத்தான் ‘ரோங்கனூர்’ என்று ஆக்கியிருக்கிறார்கள் அந்த ஊரிலும் அதைச் சுற்றியுள்ள சில ஊர்களிலுந்தான் நான் சொன்னபடி அநேக வித்வான்கள் வெளியுலகத்தின் ஆதரவைப்பற்றி நினைக்காமல் அநேக சாஸ்திரங்களை அப்யஸித்துக் கொண்டிருப்பது.

கொடுங்கலூரிலும், இந்தச் சுற்றுப்புற ஊர்கள் ஒவ்வொன்றிலும் ராஜா என்று ஒருத்தர் இருக்கிறார்.

மலையாளத்திலேயே பொதுவாக ராஜாக்கள் அதிகம். அங்கே பெரும்பாலும் “மருமக்கத் தாயமுறை” என்ற முறைப்படியே ராஜ்யமோ, மற்ற ஸொத்தோ அடுத்த தலைமுறைக்குப் போய்க் கொண்டிருந்தது. அதாவது அப்பா – பிள்ளை என்று பிதுரார்ஜிதமாக மற்ற இடங்களிலெல்லாம் ஸொத்து, ராஜ்யம் ஆகியவை போகின்றனவென்றால், மலையாளத்தில் மட்டும் அம்மா வழியில் மாதுரார்ஜிதமாகப் போவதாகவும் இருந்தன. ஆனாலும் அம்மா என்றால் அவள் ஸ்த்ரீ. அவள் எப்படி ஸொத்துப் பரிபாலனம் செய்வாள்? அதனால் அவளுடைய அண்ணா – தம்பிக்கு ஸொத்துப் போகும். ஆனால் இந்த அண்ணாவோ தம்பியோ கண்ணை மூடுகிறபோது தங்கள் பிள்ளைக்கு (ஸொத்தை) எழுதிவைக்க முடியாது. அந்த ஸஹோதரியின் பெண்ணுக்குத்தான் ஸொத்துப் போகும். முன்னே சொன்ன மாதிரியே அதை இந்தப் பெண்ணுடைய ஸஹோதரன்தான் பரிபாலனம் செய்வான். இவன் இதற்கு முன் ஸொத்தை நிர்வஹித்தவனுக்கு மருமான் (மருமகன்) தானே? இப்படி மாமா – மருமகன் என்று ஸொத்து நிர்வாஹம் போவதாலேயே இதற்கு “மருமக்கத் தாயமுறை” என்று பெயர். “தாய” என்றால் தாயார் ஸம்பந்தப்பட்டது என்று அர்த்தமில்லை. Taaya இல்லை, Daaya ‘தாயம்’ என்பது ஸம்ஸ்க்ருத வார்த்தை. அதற்கு ‘ஸொத்தின் பாகம்’ என்று அர்த்தம். இப்படி பிதுரார்ஜிதத்தில் பங்கு உடையவர்களுக்குத்தான் “தாயாதி” என்று பேர்.

கொடுங்கலூர்ப் பகுதியில் இருந்த அநேக ராஜாக்கள் இவ்வாறு மருமக்கத் தாயமுறையில் ராஜாவாக இருந்தவர்கள். பேர்தான் ராஜா. நாம் ‘மிடில் – க்ளாஸ்’ (மத்யதர வகுப்பினர்) என்று சொல்பவர்களைவிடவும் அந்த ராஜாக்களின் வருமானம் ஸ்வல்பமாகவே இருக்கும். நம் ஊரில் பரம ஏழைக்குத்தான் கஞ்சி ஆஹாரமென்றால், அங்கே இந்த ராஜாக்களின் முக்ய ஆஹாரமே கஞ்சிதான்! நம் ஊரில் கஞ்சி சாப்பிடுகிற கலயம், கப்பரை என்று ஏழை மண்ணிலோ, சுரைக் குடக்கையிலோ ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறானென்றால், அந்த ராஜாக்களோ இந்தக் கலயம் – கப்பரைகூட வைத்துக்கொள்வதில்லை. அந்த ப்ரதேசங்களில் பலாமரம் செழிப்பாக வளரும். அந்தப் பலா இலைகள்தான் இந்த ராஜாக்களுக்குப் பாத்திரம் பொருளாதார சூழ்நிலை இப்படியிருந்தாலும் வித்வத்திலே அவர்கள் அத்தனை பேரும், அவர்களைச் சேர்ந்தவர்களுங் கூட, ஆச்சர்யப்படும்படியான தேர்ச்சி பெற்றிருந்தார்கள். புருஷாள் மட்டுமின்றி ஸ்த்ரீகளும் இப்படியே ஏதாவதொரு சாஸ்திரத்தில் நல்ல யோக்யதை ஸம்பாதித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவர்களாக வெளியிலே ப்ராபல்யத்துக்கு ப்ரயாஸைப் படாவிட்டாலும், தானாகவே இவர்களில் ரொம்பவும் தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் பெயர் வெளியில் பரவியிருக்கிறது. இப்படி ஒரு ராஜா மஹாமஹோ பாத்யாயா பட்டம்கூட வெள்ளைக்கார ராஜாங்கத்திடமிருந்து பெற்றிருக்கிறார். பெயரளவில் ராஜாக்களாக இருந்துகொண்டு கஞ்சியைக் குடித்துக் காலங்கழிப்பவர்களாக நம்முடைய வேத சாஸ்திரங்களையும் மற்ற பூர்விகக் கலைகளையும் வ்ருத்தி பண்ணிக்கொண்டு வந்த இவர்களை வித்வத் ஸமூஹம் முழுதும் ‘ஐடியலாக’க் கொள்ளவேண்டும்.

மலையாளத்தில் நான் வித்வத் – ஊரைப் பார்த்தது (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து) முப்பதுக்கு முந்தி. இதே மாதிரி இன்னொன்று நான் பார்த்து அப்படியும் ஏறக்குறைய நாற்பது வருஷத்துக்கு அப்புறம். அது மலையாளத்தில் இது தெலுங்கு தேசத்தில் அப்போது பார்த்தது வித்வத் – ஊர். இப்போது பார்த்தது அப்படியே ஒரு ஊர் முழுக்க இல்லை, இது வித்வத் – குடும்பம்தான். ஆனாலும் அந்தக் குடும்பமே ரொம்பப் பெரிசாக இருந்ததால், “சாஸ்திரங்களிலேயே அத்தனை பேரும் ஈடுபட்டிருப்பதாக இப்படியும் ஒரு குடும்பமா?” என்று ஆச்சர்யப்படும்படியாகவும், ஸந்தோஷப்படும்படியாகவும் இருந்தது.

“ஹரி ஸோதருலு” என்று அவர்களைச் சொல்லுகிறார்கள். தெனாலி கிட்டேயுள்ள ஈப்பூரைச் சேர்ந்த அண்ணா தம்பிகள் ஐந்து பேர். நான் அவர்களைப் பார்த்தது பெஜவாடா (விஜயவாடா) வில் அவர்களுக்கு உள்ள வீட்டில். பெரியவர் பெயர் ஹரி வேங்கடஸூப்பையா. அவருக்கு நாலு தம்பிகள். அஞ்சு பேரும் ப்ராசீனமான முறையில் ஒவ்வொரு சாஸ்திரம் படித்து நல்ல வித்வத்தோடு இருக்கிறார்கள். வேதம், வேதபாஷ்யம், ஸ்ம்ருதிகள், புராணம் என்று ஒவ்வொன்றில் ஒருத்தர் ஸ்பெஷலைஸ் பண்ணியிருக்கிறார். இதெல்லாவற்றையும் ஒன்றுக்கொன்று சேர்த்துத் தொகுத்துப் புஸ்தகம் போட்டிருக்கிறார்கள். அதுகூடப் பெரிசில்லை. தங்களுக்கு அடுத்த தலைமுறையிலும் இந்த வித்யா ஸம்பத் வீணாகிவிடாமல் தங்களுடைய பசங்களுக்கும் நன்றாக சாஸ்திராப்யாஸம் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் நான் பெரிசாக நினைக்கிறேன். தங்களகத்துக் குழந்தைகளுக்கு அஞ்சு வயஸு ஆச்சோ இல்லியோ ஸம்ஸ்க்ருத பாடம் ஆரம்பித்துவிடுகிறார்கள். பாடம் என்று புஸ்தகத்தோடு கட்டிப்போடாமல் ஸரளமாக ஸம்ஸ்க்ருதத்திலேயே பேசுவதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஏழெட்டு வயஸு வாண்டுகள் பளிச்சுப் பளிச்சென்று ஸம்ஸ்க்ருதத்தில் பதில் சொல்வதைக் கேட்க ஆனந்தமாயிருந்தது.

பூர்வகாலத்தில் ‘அசேஷ வித்வத்ஜனங்கள்’ என்னும்படியாக ஊர் பூராவும், பெண்டுகள்கூட பாண்டித்யத்தோடு இருந்தார்கள். சாணி தெளிக்கிறவள் ஸம்ஸ்க்ருதத்தில் போடு போடு என்று போடுவதைக் கேட்டே, வாதத்திற்கு வந்த வெளியூர் வித்வான் கம்பி நீட்டிவிட்டார், கிளிப்பிள்ளைகள் கூட தங்களுக்குள் பெரிய தர்க்க சாஸ்திரவாதங்கள் பண்ணிக்கொண்டிருந்தன – என்றெல்லாம் கதைகளில் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். அதற்கு நம் காலத்திலும் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் துளியாவது ‘ஸாம்பிள்’ மாதிரிப் பார்க்க முடிந்தது.

வித்வான்கள் வித்யையை ஈச்வரோபாஸனையாக, அதாவது வேறு ப்ரதிப்ரயோஜனம் எதிர்பாராமல், பேணி வளர்த்துக்கொள்ள ப்ரயத்னம் பட்டால் எப்படியாவது அவை உயிரைப் பிடித்துக்கொண்டு வ்ருத்தியாகிவிடும். அவர்களும் உயிரைப் பிடித்துக்கொண்டு காலம் தள்ள ஈச்வரன் கைகாட்டாமல் போகமாட்டான்.

இப்படி பலர் இருந்துமிருக்கிறார்கள். பரமபக்தரான த்யாகையர்வாள் போன்றவர்கள்தான் ராஜ ஸம்பாவனை, பேர், புகழ் முதலியன வேண்டாம் என்று ஒதுங்கி, ஒதுங்கி அவர்கள் பாட்டுக்கு இருந்தார்களென்றில்லை. மஹாவித்வான்களிலுங்கூடப் பணவசதி, பாராட்டு, ப்ராபல்யம் வேண்டாம் என்றே இருந்தவர்களுண்டு.

வித்வானாக இருக்கிறவர் பணத்தைத் தள்ளுவதைவிடப் பாராட்டைத் தள்ளுவது ச்ரமம். தனக்கு நல்லபுத்தி இருக்கிறது, நிறையத் தெரிந்து கொண்டிருக்கிறோம், ஆராய்ச்சி செய்து பெரிசாக எழுதியிருக்கிறோமென்றால் உடனே இதை லோகம் ரெகக்னைஸ்’ செய்யவேண்டும், தன்னைப் புகழவேண்டும், மரியாதை பண்ண வேண்டும் என்ற எண்ணங்களும் ஏற்பட்டுவிடுகின்றன. ஒரேயடியாக வித்யா கர்வம் ஏறி, ‘இந்த உலகத்துக்கு நம்மைப் புரிந்து கொள்ள சக்தி உண்டா? நம்மைப் பாராட்ட அதற்கு யோக்யதை உண்டா?’ என்று நினைக்கிற அளவுக்கும் சில வித்வான்கள் போய்விடுகிறார்கள். ஆதலால் அவர்கள் வித்வத்துக்காகப் பாடுபடுகிறது போலவே, அல்லது அதை விடவும் விநய ஸம்பன்னர்களாவதற்கும் பாடுபட வேண்டும்.


Sage of Kanchi

Krish Ram
 
வருங்காலத்துக்காக

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 115

வருங்காலத்துக்காக

வித்வான்கள் பணத்துக்காகப் பறக்கப்படாது, ப்ராபல்யத்துக்காகப் பறக்கப்படாது என்று நான் சொன்னதால் அவர்களைக் காயக் காயப் போடவேண்டும், எந்த ரெகக்னிஷனும் இல்லாமல் மூலையில் தள்ளி வைக்க வேண்டுமென்று மற்ற ஜனங்கள் அர்த்தம் பண்ணிக்கொண்டவிடக் கூடாது. பரம த்யாகிகளாக இருந்தாவது வித்யகைளைப் பேண வேண்டுமென்பது அவர்களுடைய லக்ஷ்யமாக இருக்கவேண்டுமென்பது போலவே, அவரவரும் ஏதோ கொஞ்சமாவது பணம், பொழுது முதலியவற்றை த்யாகம் செய்து நம்முடைய தேசத்தின் இந்த அறிவுப் பிதுரார்ஜிதம் நசித்துப்போகாமல் காப்பாற்ற வேண்டுமென்பது மற்றவர்களுடைய லக்ஷ்யமாயிருக்க வேண்டும். அதாவது, இப்போதுள்ள வித்வான்களையும் மற்ற பண்டைய கலைகளை அறிந்தவர்களையும் தேடிக் கண்டுபிடித்து பொருளாதார ரீதியிலும், ஸமூஹ கௌரவத்திலும் அவர்களுக்கு உயர்வு தந்து, அவர்களுக்கு சிஷ்ய பரம்பரை உண்டாகி இந்த வித்யைகள் வருங்காலத்துக்கும் போகும்படியாகப் பண்ணவேண்டும்.

உயிரோடு ஒட்டிவைக்க வேண்டும்

இப்போதும் நம் பண்டைய சாஸ்திரங்களில் ரிஸர்ச் என்பது கொஞ்சம் நடக்கத்தான் நடக்கிறது. ஆனால் அது ‘அகாடெமிக்’காக, ஸமூஹ வாழ்க்கையோடு ஒட்டாமல் நடக்கிறது. ‘பேப்பர்’ படிப்பது, ‘தீஸிஸ்’ எழுதுவது, ‘ஸெமினார்’ ‘ஸிம்போஷியம்’ என்று நடத்துவது, ஸ்காலர்கள் என்று பொறுக்கி எடுத்த சிலபேர் மட்டும் ‘டிஸ்கஸ்’ பண்ணுவது. அப்புறம் நூறு இருநூறு என்று விலை வைத்துப் புஸ்தகமாகப் போட்டு லைப்ரரிகளில் வைத்து அந்தப் புஸ்தகங்களில் சிலந்தி கூடுகூட்டுவது, புஸ்தகம் ரிலீஸ் ஆகிறபோது விழா நடத்தி மந்த்ரிகளும் ஜட்ஜ்களும் நம்முடைய கல்ச்சரைப் பற்றி லெக்சர் செய்வது, பத்ரிகைகளில் பெரிசாக புஸ்தக விமர்சனம் செய்வது, அப்புறம் கொஞ்சம் காலத்தில் பேசியவர்களும் எழுதியவர்களுமே அடியோடு மறந்துபோய் விடுவது – என்பதாகத்தான் இப்போது நடந்துவருகிறது.

இப்போதைய ‘ஸெட்-அப்’பில் நம்முடைய பண்டைய வித்யைகளுக்காகவும் ச்ரமம் எடுத்துக்கொண்டு இப்படி ஆராய்ச்சி, விவாத மஹாநாடு, நூல் வெளியீடு என்றெல்லாம் நடத்துகிறார்களே என்று அவர்களைப் பாராட்ட வேண்டுமென்றாலும் (அவர்கள்) செய்வது “நிறக்காமல்”, ஸமூஹத்தில் வேர் பிடிக்காமல் கொஞ்ச காலத்திலேயே எடுபட்டுப் போய்விடுவதைச் சொல்லாமலிருக்க முடியவில்லை. இப்படியில்லாமல் இவற்றை ஸமூஹத்தின் உயிரோடு ஒட்டி வைக்கவேண்டும். அதற்கு இவற்றிலேயே தங்களுடைய உயிரும் வாழ்க்கையும் கலந்து போய்விடும்படியாகப் பண்ணிக்கொள்ளும் குரு – சிஷ்ய பரம்பரை ஏற்பட்டால்தான் முடியும்.


நம்முடைய சாஸ்திரங்களை நிஜமாகவே காப்பாற்ற வேண்டுமென்றால் அவற்றிலுள்ள விஷயங்களை மாத்திரம் புஸ்தகம் போட்டு லைப்ரரியில் வைப்பதில் ப்ரயோஜனமில்லை. அப்படியே இந்தப் புஸ்தகங்களை யாராவது படித்துத் தெரிந்துகொண்டு, இப்போது நடக்கிற ரீதியிலேயே மேலும் ரிஸர்ச் பண்ணி, மேலும் புஸ்தகங்கள் போடுவதாக வைத்துக் கொண்டாலும் அதனால் நிலைத்து நிற்கிறதாகப் பயன் எதுவும் விளையாது. புஸ்தகப் படிப்பால் பெறுகிற வெறும் விஷயஞானமென்பது எத்தனையோ தப்புக்களுக்கும், விபரீதத்துக்குமேகூட இடம் தரலாம். அல்லது வீணாகப் போய்விடலாம். நம் தேசாசாரப்படி உருவான இவ்விஷயங்களை நம்முடைய தேசாரத்தின்படியே ஏற்பட்டுள்ள சாஸ்திரிய முறைப்படி, மாணவனுக்கு விநயம், புலனடக்கம், மற்ற ஒழுக்கங்கள், உயர்குணங்கள், ஈச்வரபக்தி முதலியவற்றோடு கலந்து கொடுத்தால்தான் அவனுக்கும் ச்ரேயஸ் ஏற்பட்டு, அவனால் உலகுக்கும் க்ஷேமம் உண்டாகும்.


Sage of Kanchi

Krish Ram
 
எல்லாத் துறையிலும் குருகுல வாஸம்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 116

எல்லாத் துறையிலும் குருகுல வாஸம்

இதற்கு ரொம்பவும் தலைசிறந்த வழி குருகுலக் கல்வி. உண்மையான குருகுல முறையைக் கடைப்பிடித்து, குருவுடைய அறிவோடு அருளையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வித்யாப்யாஸம் பெற்றால் எல்லாக் குறைபாடுகளும் போய்விடும். ஸெக்யுலர் எஜுகேஷன் (லௌகிகக் கல்வி) கூடு இம்மாதிரி ரிடயரான ஆசிரியர்களிடமிருந்தும், ப்ரொஃபஸர்களிடமிருந்தும் அவர்களோடேயே வஸித்து அவர்களுக்குத் தொண்டு செய்துகொண்டே கற்று, ப்ரைவேட்டாகப் பரீக்ஷை எழுத இடமிருந்தால் அப்படிச் செய்வது ரொம்பவும் ச்லாக்யம். ‘பிள்ளையாண்டான் ஒரு வருஷம் ‘கோட்’ அடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு ஒரு வருஷமாவது உங்கள் குழந்தைகளை குருகுலவாஸம் செய்யவிட்டு, அதற்கான உதவியை குருவுக்குப் பண்ணுங்கள், அல்லது கோடை விடுமுறை இரண்டு மாஸத்திலாவது இதை நடத்திப் பார்க்க வழி தேடுங்கள், என்றெல்லாம் அடிக்கடி நானும் சங்கு ஊதிக்கொண்டே இருக்கிறேன். விடிகிற போது விடியட்டும்.

குருகுலக் கல்விக்கு அடுத்தபடியாக, next best என்கிறார்களே, அப்படி வருவது சாஸ்திரோக்தமான முறையில், குருமார்கள் கட்டுப்பாட்டின்கீழ் பல பசங்கள் ரெஸிடென்ஷியலாக (அங்கேயே வஸித்துக்கொண்டு) படிக்கிற வித்யாசாலைகள்.

இரண்டில் ஒன்று ஏற்பட்டு வ்ருத்தியாவதற்கு உங்களைத் தூண்டி விடுவதற்காகத்தான் இத்தனை நேரம் குருகுலம் பற்றியும், கடிகாஸ்தானம் பற்றியும் சொன்னேன்.

அம்பாள் அருள்வாளாக!

நான் எத்தனை சொன்னாலும், அதில் கொஞ்சமாவது உங்கள் மனஸிலே பட அம்பாள்தான் அநுக்ரஹம் செய்யவேண்டும்.

ஸர்வஜ்ஞனான ஈச்வரனோடு கலந்திருக்கிற அம்பாள்தான் சோபைகளிலெல்லாம் பரம சோபையோடு ப்ரகாசிப்பதான வித்யையின் ஸ்வரூபம் என்று ஆசார்யாள் கேநோபநிஷத் பாஷ்யத்தில் சொல்கிறார். அவள்தான் நம் எல்லார் மனஸிலும் புகுந்து நம்முடைய புராதன வித்யைகளை ரக்ஷிப்பதில் நம்மைச் செலுத்தவேண்டும். வித்தம்தான் (பணம்தான்) குறி என்று நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்யையே லக்ஷ்யம் என்ற ஈடுபாட்டை அவளுடைய அநுக்ரஹம்தான் உண்டாக்கித் தரவேண்டும். இதுவரை யுகாந்தரமாக வித்யா ப்ரகாசம் விளங்கி வந்த இந்த தேசத்தில் இருள் மூடுமாறு விடப்படாது. வித்யைதான் பெரிய ப்ரகாசம் என்று சொன்ன ஆசார்யாள், ‘உமா பரமேச்வரி மாத்ரம்தான் இப்படி வித்யையால் ஜ்வலித்துக்கொண்டு ஹைமவதி என்று பெயர் பெற்றாள் என்று இல்லை, எவன் வித்யையைப் பயின்று வித்வானாலும் அந்த வித்யையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்’ என்று முடித்திருக்கிறார்.

“ஹைமவதி” என்று இந்த இடத்தில் உபநிஷத்திலே அம்பாளுக்குப் பெயர் சொல்லியிருப்பதற்கு இரண்டு விதமாக அர்த்தம் பண்ணலாம். ஒன்று, ‘ஹிமம்’ என்பது ‘பனி’ ஆதலால் பனி மலையான ‘ஹிமவா’னுக்குப் பிறந்த இவள் ‘ஹைமவதி’ என்பது. ‘ஹிம’த்தைக் குறித்தது ‘ஹைமம்’ – ‘சிவ‘த்தைக் குறித்தது ‘சைவம்’ என்கிறாற்போல.

இங்கே ‘இ’காரம் ‘ஐ’காரமாகிறது. இதே மாதிரி ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் ‘ஏ’காரமாக ஆரம்பிக்கும் வார்த்தையிலிருந்து உண்டாகிற derivative -களும் ‘ஐ’ஆகிவிடும். “ஏக”த்திலிருந்து “ஐக்யம்”, “கேகயன்” பெண் “கைகேயி”. இந்த ரூல்படி ‘ஹிமம்’ போலவே ‘ஹேமம்’ என்ற சொல்லின் அடியாகவும் ‘ஹைமவதி’ப் பெயர் ஏற்படும். ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜ்வலிப்பவள் ஹைமவதி. ‘பஹுசோபை உள்ளவள்’ என்று உபநிஷத்தே இங்கு அம்பாளைக் குறிப்பதால் ஸ்வர்ண காந்தியாய் ஜ்வலிப்பவள் என்று பொருள் கொள்வதும் ரொம்பப் பொருத்தந்தான். ஆசார்யாள் இரண்டு அர்த்தங்களையும் ஒப்புக்கொண்டு, இந்த சோபைக்கு, ஜ்வலிப்புக்கு அவள் வித்யா ரூபிணியாயிருப்பதே காரணம் என்கிறார். அப்புறம் தம் வாக்ய பாஷ்யத்தை முடிக்கிற இடத்தில், “வித்யா வானாக (வித்வானாக) ஒருவன் இருந்தால், அவன் அங்கலக்ஷணப்படி குரூபியாயிருந்தாலும்கூட பஹுசோபையுடனே ப்ரகாசிக்கிறான் : விரூபோ (அ)பி வித்யாவாந் பஹு சோபதே” என்கிறார். ஸதாசாரத்தோடு படிப்பாளிகளாக இருக்கப்பட்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில், “முகத்திலேயே என்ன அறிவுக் களை, என்ன தேஜஸ்!” என்று சொல்ல முடிகிறது. அதேபோல், “மூஞ்சியைப் பார்த்தாலே சோதாக் களை” என்றும் சொல்கிறோம். முன்னே சொன்ன ஸைகிள் பெடல் உதாரணப்படி நம் பூர்விகர்களின் வித்யா ப்ரகாசத்தின் பலத்தில் இப்போதும் நம்மில் சிலர் முகத்திலாவது இந்தத் தேஜஸ் இருக்கிறது. ஸைகிள் நின்று போகாமல் அவள் க்ருபைதான் ஓட்டுவித்து, எல்லோர் முகத்திலும் சோபையை உண்டாக்கி, தேசம் முழுதிலும் அறிவொளி பரவச் செய்ய வேண்டும்.


Sage of Kanchi

Krish Ram
 
Hindu Temple of Kentucky invites you all for Maharudram event – Sep 4, 5 & 6

Hindu Temple of Kentucky invites you all for Maharudram event – Sep 4, 5 & 6

MAHESHonAUGUST 17, 2015


On behalf of Hindu Temple of Kentucky, I have a great pleasure in inviting you all for the Maharudram event that has been planned for September 4, 5 & 6.

Sri Rudram is a yajur vedic hymn in praise of Lord Shiva. This is accepted by many as the greatest form of worship for universal peace, prosperity and salvation.Maharudram will be performed by 121 Ritwiks chanting Sri Rudram 11 times totaling 1331 times.

The organizing committee has been doing a great job in making every arrangements. They definitely need more qualified ritwiks to sign up to get to the 121 counts. If you are a qualified ritwik and interested in participating in this event, please contact one of the following members of the committee.

Please visit this link for more details

Ritwik accommodation and airport pick up will be taken care of.

For details please contact :
Johnny Alse : (812) 987-5151
Srini Narasimhan : (502) 775-9344
Sunder Iyer : (502) 298-7917



https://mahaperiyavaa.wordpress.com...vites-you-all-for-maharudram-event-sep-4-5-6/
 
பல்லவ கடிகாரம்

பல்லவ கடிகாரம்


டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி, தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தானம் என இந்தியாவின் பல பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இந்தியத் தொல்பொருள் கள ஆய்வுத் துறை மூலம் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், மகாபலிபுரம் போன்ற இடங்களில் இவர் செய்த ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.


அவர் சொல்கிறார்:

சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது, “நீ என்ன வேலை பார்க்கிறாய்?” என்று கேட்டார். அப்போது கோவில்கள் திட்டப்பணியில் தொல்லியல் துறையில் செய்யும் பணிபற்றிச் சொன்னேன். “நீ மகாபலிபுரம் போயிருக்கிறாயா? அங்கு என்ன பார்த்தாய்?” என்று கேட்டார். நான் பஞ்சபாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி என்றெல்லாம் சொன்னேன்.

“அங்கு பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து, “பல்லவா காலத்தில் ஏது பெரியவா கடிகாரம்?” என்று கேட்டேன். “இருக்கு. இருக்கு. நீ அடுத்தவாட்டி போறப்போ நல்லா பார்த்துட்டு வா!” என்றார்.

மறுமுறை போனபோது, “கடிகாரம் பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை பெரியவா, எனக்குத் தெரியவில்லை” என்றேன். “அர்ஜுனன் தவம் பார்த்தியா?” என்று கேட்டார். “பார்த்தேன்” என்றேன். “அந்த அர்ஜுனன் தபஸ் சிற்பத்திற்குக் கீழே நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். சின்ன விஷ்ணு கோயில் ஒன்று இருக்கும். பக்கத்தில் ரிஷி ஒருவர் உட்காந்து கொண்டிருப்பார். கீழே அமர்ந்து சிலர் வேதம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ஆற்றில் நனைத்த துணியைப் பிழிந்து கொண்டிருப்பார். மற்றொருவர் நின்று கொண்டு மாத்யான்னிஹ வந்தனை செய்து கொண்டிருப்பார். (அதில் ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார்) பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் ‘பல்லவ கடிகாரம்‘ என்று சொன்னேன்” என்று பெரியவர் சொன்னார்.

பெரியவரின் நுணுக்கமான பார்வையைக் கண்டு எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது.
-------------------------------------------------------------------------------

நாமும் அதைப் பார்த்து ரசித்து வியக்கலாமா. இதோ அந்த சிற்பத்தின் நிழற் படம்


unnamed_zps81eb7440.jpg



http://periva.proboards.com/thread/6348/#ixzz3ck342hmy




 
வேதத்திலும் ஜனநாயக அம்சம்*

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 117

வேதத்திலும் ஜனநாயக அம்சம்*

பழைய காலத்து ஆட்சி முறையைப் பற்றிப் பொதுவாக நமக்கு என்ன அபிப்ராயமென்றால், அதிலே பொது ஜனங்களுக்குக் கொஞ்சங்கூடப் பங்கே இல்லாமல் ராஜாவுக்கே எல்லா அதிகாரத்தையும் விட்டிருந்தது என்பதுதான். ராஜா என்றால் அந்த ஒரு ஆளைமட்டும் நினைக்காமல் அவனுடைய தர்பாரிலுள்ள ப்ரமுகர்களையும் குறிப்பாகக் கொள்கிறோம். ராஜா முக்யமாகவும் மற்றும் அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், மந்திரி – ப்ரதானி ஆகியவர்களும் முடிவுகள் எடுத்து அதிகாரிகள் மூலம் அவற்றை அமல்படுத்தியதுதான் பழங்கால ஆட்சிமுறை என்று நினைக்கிறோம். வெள்ளைக்கார சரித்ர ஆசிரியர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் தந்த்ரமாக நம்மை வளைத்துப் பழக்கப்படுத்தியிருப்பதில் சிலபேர் இன்னொன்றும் நினைக்கிறோம். அதாவது இந்த ராஜாக்களைப் பிராம்மணர்கள் தங்கள் கையில் போட்டுக்கொண்டு, தங்கள் இஷ்டப்படி, அதாவது தாங்களே உசத்தி என்று கொட்டம் அடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வசதியாகவே எல்லாம் செய்துகொண்டார்கள் என்பதாகவும் ஒரு எண்ணம் இருந்துவருகிறது.

பொதுஜனங்களுக்கும் ஆட்சியிலே பங்கு தருகிற ஜன நாயகம் என்பது மேல்நாட்டினர் சொல்லிக் கொடுத்துத்தான் நமக்குத் தெரியவந்ததென்று பொது அபிப்ராயம் இருக்கிறது.

ஆனால் வாஸ்தவத்திலோ வேதகாலத்திலிருந்தே ஸகல ஜனங்களின் அபிப்ராயமும் ப்ரதிபலிப்பதற்கு இடம் தந்துதான் ராஜ்ய நிர்வாஹம் நடந்து வந்திருக்கிறது. வேதத்திலே “ஸபாஸ, “ஸமிதி”, “விததா”, என்று இரண்டு, மூன்று அமைப்புக்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இவற்றில் அறிஞர்களாக இருக்கப்பட்ட ஜனங்கள் கூடி ஆட்சி விஷயங்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுத்ததாகவும் அவற்றுக்கு இணங்கவே அரசன் பரிபாலனம் செய்ததாகவும் தெரிகிறது. வெள்ளைக்கார சரித்திர ஆசிரியர்கள்கூட இவை பிராம்மணர்களால் மட்டுமோ, அல்லது பிராம்மண – க்ஷத்ரியர்களால் மட்டுமோ அமைந்ததாகச் சொல்லாமல், ஸகல ஸமூஹங்களுக்கும் ப்ரதிநிதித்வம் தருகிற ரீதியில்தான் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.

‘நமோ நம’ என்று திரும்பத் திரும்ப வருவதாக “ருத்ரம்” என்று அபிஷேக காலத்தில் ஒரு ஸ்தோத்ரம் சொல்லப்படுகிறதே, அது வேதத்திலேயே வருவது – யஜுர் வேதத்தின் தைத்திரீய ஸம்ஹிதையில் வருவது. அதிலே இந்த லோகத்திலிருக்கப்பட்ட எல்லா சேதன, அசேதனங்களையும் சொல்லி, அவை ஒவ்வொன்றுக்கும் ‘நமோ நம’ என்று நமஸ்காரம் பண்ணப்படுகிறது.

எதனாலென்றால் அது ஒவ்வொன்றிலும் விச்வவ்யாபியான பரமாத்மா நிறைந்திருப்பதால். எல்லா சிவஸ்வரூபம் என்று இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறபோது, “ஸபைகளுக்கெல்லாம் நமஸ்காரம், ஸபாபதிகளுக்கெல்லாம் நமஸ்காரம்” என்று “நமோ நம” சொல்லியிருக்கிறது. ராஜாங்க கார்யங்களுக்காக ஏற்பட்ட மக்களுடைய ஸபையும், அதற்கு அக்ராஸனராக இருந்த ஸபாபதியுந்தான் இங்கே குறிப்பிடப்படுவது.

நம் காலத்தில் அநேக விதமான ஸபைகளைச் சொல்கிறோம் – அவற்றில் ஸங்கீத ஸபை முக்யமாயிருக்கிறது. “ஸபாவுக்குப் போறேன்” என்றால் கச்சேரிக்குப் போகிறான் என்றே அர்த்தம் செய்து கொள்கிறோம். ஆனால் வேத காலத்தில் அடைமொழி கொடுக்காமல் வெறுமே ஸபை என்று சொன்னால், அது இந்தக் காலத்தில் நாம் “சட்ட ஸபை” என்று அடைமொழி கொடுத்துச் சொல்கிறோமே, அந்த மாதிரியான ஒரு அமைப்புத்தான். ‘ஸபை‘ என்பது தமிழில் ‘அவை’ என்று ஆயிற்று.

ஜனங்களுக்கு நல்லது பண்ணுவதற்காகப் பல அறிஞர்கள் ஒன்றுகூடி ஒரு ஸபை ஏற்படுத்தினால் அது ஈச்வர ஸ்வரூபமே என்று மதித்து “ருத்ர”த்தில் அதற்கு நமஸ்காரம் தெரிவித்திருக்கிறது.

பரமேச்வரன் அர்சசாரூபத்தில் (விக்ரஹ உருவில்) பரிபூர்ணமாக விளங்கிக் கொண்டிருக்கிற சிதம்பரத்தில் அவருடைய ஸந்நிதிக்கு “ஸபை” என்றுதான் பெயர். அது “கனக ஸபை”. அது தவிர, தாம் ஆடிக்கொண்டே லோகங்களையெல்லாம், சேதனா சேதனங்களையெல்லாம் ஆட்டி வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிற அந்த த்ரிபுவன சக்ரவர்த்திக்கு இன்னும் நாலு ஸபை – ரஜத ஸபை என்று வெள்ளியில் ஒன்று, மதுரையில் இருப்பது; ரத்ன ஸபை என்று திருவாலங்காட்டில் இருப்பது; தாம்ர ஸபை என்று திருநெல்வேலியில் இருப்பது; சித்ர ஸபை என்று சிற்பங்களே இல்லாமல் சித்ரங்கள் மட்டும் நிறைந்திருப்பதாகத் திருக்குற்றாலத்தில் இருப்பது – என்றிப்படி மொத்தம் பஞ்ச ஸபைகள். இந்த ஸபைகளுக்கு preside பண்ணும் ‘ஸ்பீக்க’ராக, ஸபாபதியாக அவர் இருக்கிறார்! இல்லை, ஸ்பீக்கர் (பேசுபவர்) இல்லை, டான்ஸர் (ஆடுபவர்)!

அவரை நாம் ‘நடராஜா’ என்றே பொதுவில் சொல்கிறோமானாலும், தீக்ஷிதர்கள் சிதம்பர ஆலயத்தைக் குறிப்பிட்டு எழுதும்போது “ஸபாநாயகர் கோயில்” என்றுதான் போடுவது வழக்கம். ஈச்வரன் ஸபாநாயகர் அல்லது ஸபாபதி மட்டுமில்லை, ஸபையுமே அவன்தான் என்று நமக்குக் காண்பித்துக் கொடுக்கவே வேத ஸ்துதியான “ஸ்ரீ ருத்ர”த்தில் ஸபைக்கும் நமஸ்காரம் சொல்லியிருக்கிறது. “Will of the people is the will of God”, “மக்கள் தீர்ப்பு மஹேசன் தீர்ப்பே” என்பதெல்லாம் நம்மிடம் புதுசாக வந்து சேர்ந்திருக்கும் கொள்கைகள் இல்லை, ஆதிக்கு ஆதியான வேத காலத்திலிருந்து இந்த அபிப்ராயம் இருந்து வந்திருக்கிறது என்பதற்கு இது சான்று.

ராஜீய வ்யவஹாரங்களை ஆலோசித்து விவாதிக்கும் ஸபை அங்கத்தினர்களுக்கு நல்ல அறிவு, அதைப்போலவே உயர்ந்த சீலமான நடத்தை, ‘பாயின்ட்’களை நன்றாக எடுத்துச் சொல்வதற்கு அவசியமான வாக்கு வன்மை ஆகிய மூன்றும் இருக்கவேண்டும் என்பதை வேதத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். இந்த மூன்றையும் வேண்டும் ப்ரார்த்தனா ரூபமான அநேக மந்த்ரங்கள் வேதத்தில் இருக்கின்றன. ரிஷிகள் புத்தியிலும் பெரியவர்கள், ஒழுக்கத்திலும் பெரியவர்களென்று நமக்குத் தெரியும். இவற்றோடு நல்லவாக்குச் சக்தியும் பெற்றுத் தாங்கள் ஸபைகளில் அங்கம் வகிக்கவேண்டும், அதன் வழியாக அரசாட்சிக்கும் மக்கள் நலனுக்கும் உதவவேண்டும் என்று அவர்களில் சிலர் விரும்பியிருக்கிறார்கள். “(விததா என்கிற) ஸபையில் வன்மையாகப் பேசும் சக்தி எங்களுக்கு வேண்டும்” என்று ரிஷிகள் ப்ரார்த்திக்கும் மந்த்ரங்கள் இருக்கின்றன.

“ருத்ரம்” என்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படும் ஸ்துதி – ஸபையையும் ஸபாபதியையும் பற்றிச் சொல்வது – யஜுர் வேதத்தில் வருகிறது. ரிக்வேதத்திலிருந்தும் ஈச்வரபரமான ஐந்து ஸூக்தங்களைச் சேர்த்துப் “பஞ்சருத்ரம்” என்று சொல்வார்கள். அதிலேகூட ஒரு இடத்தில் இந்த ப்ரார்த்தனை வருகிறது1. இப்படி புத்தி, குணம், வாக்கு மூன்றிலும் உயர்ந்தவனாக இருக்கப்பட்டவனையே “ஸபேயன்” அதாவது ஸபையில் மெம்பர்ஷிப் வஹிக்கத் தகுதி உள்ளவன் என்று சொல்லியிருக்கிறது. “ஸபேயன்” என்று ஒருத்தனைச் சொல்லிவிட்டால் போதும், அவன் குணஸம்பத்து, புத்திபலம், வாக்சக்தி மூன்றுமே உள்ளவன் என்று ஆகிவிடும். பிறப்பால் ஒருவன் ராஜாவாகிவிட்டால் போதாது, அவன் ஸபேயனாக இருக்கவேண்டும் என்று காட்டும் மந்த்ரங்கள் இருக்கின்றன.

மக்களுடைய நலனை ஆராய்ந்து, விவாதித்து முடிவுகள் எடுக்கவேண்டிய ஸபையைச் சேர்ந்தவர்கள் எப்படி ஒன்றுபட்டு செயலாற்றவேண்டும் என்பதை “ஸபேயர்”களுக்கு உபதேசிக்கும் ஒரு வேத ஸூக்தம் ரிக் வேதத்தின் முடிவிலே, பூர்த்தியாகும் இடத்தில் இருக்கிறது2. “உலகத்துக்கே முதல் நூலாக இருக்கப்பட்ட வேதத்தில் இத்தனை அழகாகச் சொல்லியிருக்கிறதே! இதையே U.N.-க்கு (ஐ.நா.ஸபைக்கு) motto-வாக (லக்ஷ்ய வாசகமாக) வைத்துவிடலாம்” என்று அறிஞர்கள் புகழ்கிறார்கள். “ஒன்று கூடுங்கள். ஒருவருக்கொருவர் திறந்து பேசி விவாதித்துக் கொள்ளுங்கள். லோக க்ஷேமம், மக்கள் நலன் ஒன்றே லக்ஷ்யம் என்பதில் உங்கள் எல்லாருடைய மனஸும் ஒத்துப் போகட்டும். ஒரே லக்ஷ்யத்துக்காக ஏக மனஸாகப் பாடுபட்டுப் பரஸ்பரம் ஹ்ருதயம் கலந்து ஒன்றாகுங்கள் ஐகமத்யத்தால் (மன ஒற்றுமையால்) எல்லோரும் இன்புற்றிருக்க வழி காணுங்கள்” என்று அந்த ஸூக்தத்தில் உபதேசிக்கிறது.

பல ஸமூஹத்தினரும் இம்மாதிர ஸபைகளில் ப்ரதிநிதித்வம் வஹித்துத்தான் நாட்டு நிர்வாஹம் நடந்திருக்கிறது. ப்ராம்மணப் புரோஹிதன் வைத்ததே சட்டமாயிருந்தது என்பது கொஞ்சங்கூட ஸரியில்லை. புரோஹிதனைப் போலவே க்ராமணி, ஸேநானி முதலான பலரையும் அரசாங்க கார்யங்களில் முக்யமானவர்களாகச் சொல்லியிருக்கிறது. க்ராமணி என்பவன் க்ராம வாழ்கையையும், அதாவது ஸிவில் வ்யவஹாரங்களையும், ஸேநானி என்பவன் மிலிடரி வ்யவஹாரங்களையும் கவனித்து வந்திருக்கிற அதிகாரிகளாகத் தெரிகிறது. ஸேநானி நிச்சயமாக பிராம்மணனில்லை, க்ஷத்ரியன்தான். ‘க்ராமணி’ என்று இப்போதும் உள்ள ஸமூஹமும் அப்ராம்மண ஜாதியாகத்தான் இருக்கிறது.

ஆதியிலேயே இப்படி இருப்பதற்கு இடம் இல்லாவிட்டால் பிற்பாடு அப்படி ஆகி இருக்க முடியாது.

(‘க்ராமணி’ என்பதிலிருந்துதான் ‘க்ராம மணியம்’ என்பது வந்து, அப்புறம் மணியக்காரன் என்றே வார்த்தை ஏற்பட்டிருக்குமோ என்னவோ?)

ராஜ பட்டாபிஷேகத்தைப் பற்றிய வேத மந்த்ரங்களைப் பார்த்தால் ஜன ஸமூஹத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அவனைத் தங்கள் அரசனாக ஏற்று ப்ரகடனம் செய்திருக்கிறார்களென்று தெரிகிறது. இதில் முடியரசோடு குடியரசும் ஒருவிதத்தில் கைகோத்துக் கொண்டு போகிறதென்று சொல்லலாம்.

* இந்த வியாஸம் பல உரைகளின் தொகுப்பாயினும், இதன் மிகப்பெரும் பகுதி ஸ்வதந்திரம் வருவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் 1945-லும், நாம் குடியரசாவதற்கு ஓராண்டு முன் 1949-ல் நமது அரசியல் நிர்ணயச் சட்டவிதிகள் உருவாகி நிறைவேற்றப்பட்டு வந்தபோதும் அருளப் பெற்றவை என்பதைக் கவனித்தோமாயின் ஸ்ரீ சரணர்களின் தீர்க்க த்ருஷ்டியை வியக்காமலிருக்க முடியாது.




Sage of Kanchi

Krish Ram
 
Bhaja Govindam- An Introduction

Bhaja Govindam- An Introduction

Bhaja Govindam - The Introduction



"Bhaja Govindam" means a lot of things traditionally. But simply put, it means "Seek Divinity"
Seeking is not searching.
Seeking is within. Searching outside.
Seeking is when we are sure that what we Seek exists.
Searching is when we are not sure, but if we get it, its there.


Seek Divinity - Why??
1. Divinity is my nature. Happiness, peace, love in infinite magnitude is natural to me. So unknowingly we all seek it at all times.
2. Divinity brings us to balance. Balance is the only way to handle chaos. Balance within gives strength to handle chaos outside.
3. Divinity is the HIGHEST potential in me as a human being - the best i can be, the best i can get. Why settle for anything less??


So, those who seek love, peace, knowledge, bliss, those who want nothing but the best in whatever they do, those who are even attempting to live in balance - each one is a seeker of Divinity - irrespective of whther they r into formal spirituality or not.


But the difference is - On the spiritual path, we seek Divinity "consciously". That is very important because the moment my action is backed by intention - it bcomes infallible.


In other words, there is never a spiritual failure. We cant fail if we intend to seek divinity. We may fall. But every fall is actually a rise!! What a strange journey!!! THINK.


Quotes for today -
"Live Intentionally" - Buddha
"Don't be scared to fall in your spiritual journey. Playing in HIS lap, if you fall, you can only fall into HIS lap!" - Gurudev


Reminder for Today - We think 60000 thoughts a day. How many are backed by an intention to seek the Divine (the best, the highest, the maximum)?


Practice for Today - In every action i do, may i seek the Best, the Divine. No compromise at all - even if it is somethng as insignificant as brushing our teeth!! Yes, when we do ordinary things like that with intentional extraordinariness, we are "Seeking Divinity"

https://www.youtube.com/watch?v=wl1PYqL96sk

Bhaja Govindam MS Subbulakshmi Adi Shankaracharya


Uploaded on Dec 10, 2008







http://seek-the-eternal.blogspot.com/2013/11/bhaja-govindam-introduction.html
http://isatsang.blogspot.com/2015/08/bhaja-govindam-introduction.html?spref=fb

http://www.omjai.org/Bhaja Govindam - Tamil
 
ஜாதி நாட்டாண்மை

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 118

ஜாதி நாட்டாண்மை

ஜனநாயகத்தின் அம்சமாக நாம் ஆதிகாலத்திலிருந்தே பார்க்கிற இன்னொன்று, ஸகல ஸமூஹத்தினரும் சேர்ந்து பெரிய அளவில் ராஜ்யம் முழுதற்குமான கார்யங்களை கவனித்ததோடு மட்டுமில்லாமல், அந்தந்த ஜாதியினரும் ஸ்வதந்த்ரமாகத் தங்களுடைய கூட்டு வாழ்க்கையை நாட்டாண்மைகள் மூலம் நிர்வஹித்துக் கொண்டதாகும்.

‘குலம்’ என்பது ஒரு குடும்பத்தைக் குறித்த ஏற்பாடு; ராஷ்ட்ரம், ஜனபதம் என்கிறவை ஒரு ராஜ்யம் (ஜனபதம் என்றால் டவுனாக இல்லாத ‘கன்ட்ரி’ – க்ராமப்புறம் – என்றும் சொல்கிறார்கள்) , இந்த இரண்டுக்கும் நடுவே ‘ச்ரேணி’ என்று ஒன்று. அது ஒவ்வொரு தொழில்காரர்கள் ஒன்றாகச்சேர்ந்த அமைப்பு. ‘சேணியர்’ என்று இப்போது நெசவுத் தொழிலில் உள்ளவர்களைச் சொல்வது ‘ச்ரேணியர்’ என்பதிலிருந்து வந்ததுதான். அவரவர் தொழிலை வைத்து guild -கள் என்பதுபோல் ஏற்பட்ட ச்ரேணிகளில் நெசவுத் தொழிற்காரர்கள் நன்றாகக் கட்டுக்கோப்புடன் தங்களையும் ஒரு ஸமூஹமாக நெய்துகொண்டு அதனால் ச்ரேணியர், சேணியர் என்றே சிறப்பாகப் பெயர் பெற்றிருக்கிறார்கள் போலிருக்கிறது.

ரொம்பவும் பூர்வகாலத்தில், அதாவது இன்றைக்கு நாகரிக உச்சியிலுள்ள மேல்நாட்டுக்காரர்களுக்கு நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாத காலத்திலேயே, நம்முடைய தேசத்தில் மக்கள் பலவிதங்களில் குடியரசு, ஜனநாயகம், self-government (ஸ்வய ஆட்சி) முதலானவற்றின் அம்சங்களைப் பெற்றிருந்திருக்கிறார்களென்று காட்டுவதற்காக ஏதோ கொஞ்சம் சொன்னேன். அந்த நாளிலிருந்தே நம் நாட்டில் ப்ரஜை என்பவன் ஆளப்படுபவனாக மட்டுமில்லாமல் ஆட்சியிலும் தானே ஒரு பங்கு பெற்றிருந்தானென்று தெரிவிக்க நினைத்தேன்.

தகுதி தேவை

ஆனாலும் ராஜ்ய நிர்வாஹம் என்பது ரொம்பவும் பெரிய விஷயம், சிக்கலான விஷயம். ஒரு ராஜ்யத்தைக் கட்டி ஆளுவது, ஒரு பெரிய ஜனஸமூஹத்துக்குக் காப்புத்தருவது, அவர்களுக்காகச் சட்டம் பண்ணுவது, அந்தச் சட்டங்களை அவர்கள் பின்பற்றும்படியாகப் பண்ணுவது என்பதற்கெல்லாம் நிறையப் படிப்பறிவு, பகுத்தறிவு, கார்ய ஸாமர்த்யம், உலக அநுபவம் ஆகியவை இருந்தால்தான் முடியும். வீட்டை ஒழுங்காக நடத்துவதென்பதே கஷ்டமாயிருக்கிறது. ஒரு ராஜ்யத்தை நடத்துவதென்றால் சும்மாவா? ஆனதால், வீட்டை நடத்தவே ஸாமர்த்யம் போதாதவர்களாகத்தான் ஜனங்களில் ரொம்பப் பேர் இருக்கும்போது, நாட்டு நிர்வாஹத்திலும் அவர்களுக்கு நேராகப் பொறுப்புத் தந்தால்தான் என்ன ஆகும்?

அதனால் எல்லாரும் நேராக ராஜ்யப்பாரம் பண்ணுவது என்று இருக்க முடியாது. அதற்கான தகுதிகள் படைத்த சிலரைக் கொண்டுதான் ஆட்சி நடக்கவேண்டும்.

தேசத் தலைமைக்கு அரசன்

ஆட்சி நடத்துபவர்களிடம் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். எனவே கட்டுப்படுத்த ஒரு தலைவன் வேண்டும். ஆளப்படுகிறவர்களுக்கும், தங்களுடைய நாடு என்பது மண்ணும் மலையும் நதியுமாக முடிந்துபோகாமல், அதனிடம் அன்பு, பக்தி, விச்வாஸம் எல்லாம் உண்டாக்குவதாக அதன் ரூபகமான (உருவகமான) ஒரு உயிருள்ள பிடிப்புவேண்டும். இந்த இரண்டு உத்தேசங்களுக்காகவும் ஆட்சியின் தலைவராக, தேசத்தின் தலைவராக ஒருத்தர் இருக்க வேண்டியதாகிறது. ராஜா என்று ஒருத்தனை அப்படி வைத்துக் கொண்டார்கள். பாரம்பர்யமாக இப்படிப்பட்ட ராஜாவை வைத்துக்கொண்டால்தான், குழந்தையாக அவன் பிறந்ததிலிருந்தே அந்தத் தலைமைப் பீடத்துக்கு வேண்டிய எல்லா யோக்யதாம்சமும் அவனுக்கு இருக்குமாறு பயிற்சி கொடுக்க முடியும் என்பதால் ராஜபதவியை hereditary -யாக வைத்துக் கொண்டார்கள். கற்றுக் கொடுத்துப் பயிற்சி பண்ணுவது மட்டுமில்லாமல், தன்னுடைய background (வாழ்க்கைப் பின்னணி) , சூழ்நிலை, ரத்தத்தோடு வந்த குணம் முதலியவற்றிலிருந்தே ராஜாவுக்கு இருக்கவேண்டிய அநேக அம்சங்களையும் தோரணைகளையும் ஒருவன் பெறுவதும் பாரம்பர்ய முறையில்தான் ஸாத்யமாகிறது.

அவன் மனம்போனபடிச் செய்யவிடாமல், தர்ம சாஸ்த்ரம், அர்த்த சாஸ்த்ரம், நீதி சாஸ்த்ரம் என்று ஏற்கனவே இருக்கப்பட்டவைகளை அநுஸரித்து, அவற்றுக்குக் கட்டுப்பட்டே ஆட்சி பண்ண வேண்டுமென்று வைத்தார்கள். ராஜகுரு, மந்த்ரிகள், புத்திமான்கள் ஆகியோரைக் கொண்ட அநேக விதமான ஆலோசனை ஸபைகளின் அபிப்ராயங்களைக் கேட்டு, அதன்படியே ராஜா ஆட்சி நடத்த வேண்டுமென்று வைத்தார்கள்.


Sage of Kanchi

Krish Ram
 
சஹஸ்ர காயத்திரீ ஜபம்

சஹஸ்ர காயத்திரீ ஜபம்

இடம்: வேளச்சேரி தண்டீஸ்வரம் திருக்கோயில்
நாள்: 06 செப்டம்பர் 2015
நேரம்: காலை 8.30 மணிக்கு

சஹஸ்ர காயத்ரீ ஜப சங்கல்பம்

சுக்லாம்பரதரம் + ஓம் பூ: + மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், சுபே ஷோபனே முகூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்ஷதி தமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரத: கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சஹாப்தே அஸ்மின் வர்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்ட்யா: ஸம்வத்ஸரானாம் மத்யே மன்மத நாம சம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதௌ, சிம்ம மாஸே க்ருஷ்ண பக்க்ஷே நவம்யாம் சுபதிதௌ வாசர: பானு (ஞாயிறு) வாஸர யுக்தாயாம் ம்ருகஷிரோ நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண சகல விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் நவம்யாம் சுப திதௌ சம்வத்சர தோஷாநாம் சமனார்த்தம் மம ஜன்மாப்யாஸாத் ஜன்மப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம் மனோ வாக் காயாதி சர்வாங்கானி விரசித பாபானாம் நிவ்ருத்யர்த்தம் ஆத்ம ஸுத்தி ஸித்யர்த்தம் ஸ்ரீ சந்த்யா காயத்ரீ சாவித்ரீ சரஸ்வதீ ப்ரேரணயா ஸ்ரீ சந்த்யா காயத்ரீ சாவித்ரீ சரஸ்வதீ ப்ரீத்யர்த்தம் லோகக்ஷேம அவாப்யர்த்தம் ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரீ ஸமேத ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர ஸ்வரூபஸ்ய ஸ்ரீ காஞ்சீ காமகோடீ பீடாதீஷ்வரஸ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸம்யமீந்த்ர குருவர்யஸ்ய ப்ரேரணயா ஸ்ரீவேதஸ்ரேணீ க்ஷேத்ரே ஸ்ரீ கருணாம்பிகா சமேத ஸ்ரீ தண்டீஸ்வர ஸ்வாமி சன்னிதௌ அஷ்டோத்ர சஹஸ்ர ஸங்க்யயா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே ||

வேதஸ்ரேணி: எனும் வேளச்சேரியி தண்டீஸ்வரர் திருக்கோயில் வரலாரறும் சிறப்பும்:

ஒரு சமயம் தேவர்கள் ஈசனை வழிபடும் போது அவர்களின் வழிபாட்டிற்கு அசுரர்கள் இடையூறு செய்தனர்.. துன்பமுற்ற தேவர்கள், தங்கள் துயர் தீர்க்குமாறு ஈசனை துதிக்க, அவரும் கண்ணுக்கினிய எழில் வாய்ந்த சோலைகள், அடர்தருக்கள், மலைகள், பூவனங்கள் நிறைந்த இடங்களில் சுயம்புவாகத் தோன்றுவதாயும்,. அம்மூர்த்தியைத் தரிசித்து பூஜித்து வர துயர் அகலும் என்றும் திருவாய் மலர்ந்தார். பூவுலகில் சுயம்பு மூர்த்தியாக ஈசன் எழுந்தருளிய தலங்கள் ‘பூ கயிலாயம்’ எனப் பெயர் பெறும் என்பது நம் சான்றோர் வாக்கு. அத்தகைய பூ கயிலாயங்களுள் குறிப்பிடத்தக்க சிறப்புப் பெற்ற தலம் வேதஸ்ரேணி எனப்படும் வேளச்சேரியாகும்.

முற்காலத்தில் சோமுகன் என்ற ஓர் அரக்க மன்னன், வரங்கள் பல பெற்றதால், திக்விஜயம் செய்து பலருக்குத் துன்பம் விளைவித்து வந்தான். தேவர்களை வெருட்டினான். துரத்தியடித்தான். நான்முகனிடம் இருந்த நால்வகை வேதங்களைப் பறித்துக் கொண்டான். கவர்ந்து வந்த வேதங்களை ஆழ்கடலின் அடியில் சேற்றில் புதைத்தான். வேதங்கள் இல்லாததால், வேள்விகள் தடைப்பட்டன. நற்கருமங்கள் நடைபெறவில்லை. அறம் குன்றியது. திருமால் மச்சமாக மாறி ஆழ்கடலுள் சென்று வேதங்களைக் கொண்டு வந்து நான்முகனிடம் அளித்தார் என்பது புராணம். நாம் அனைவரும் அறிவோம். அவ்வாறு அரக்கனின் கைப்பிடியிலும் ஆழ்கடல் சேற்றிலும் சிக்கி மாசடைந்த வேதங்கள், தாங்கள் தூய்மையுறும் வழிநாடின. சிவபதமே தங்களின் மாசு நீக்குமென எண்ணி, சிவபெருமானின் திருவடிகளை நாடின. ஈசனைப் பூஜிப்பதற்கு கடலோரத்தில் அமைந்துள்ள திருவான்மியூர் உகந்த இடம் என நான்முகன் கூறியருளினார்.

நான்கு வேதங்களும் மனித உருவிலே பூவுலகத்துக்கு வந்து தென்னகத்தில் கீழ்த்திசைக் கடலோரத்துக்கு வந்தனர். சோலை சூழ்ந்த அழகான நந்தவனங்களும் நீர்வளமும் நிறைந்த இடத்திலே ஆசிரமம் அமைத்துக் கொண்டனர். நாள்தோறும் பூஜிப்பதற்காக தவச்சாலைக்கருகே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

சிவபூஜை செய்த பிறகு, அருகில் அமைந்த திருவான்மியூரை அடைந்து அங்கு கோவில் கொண்ட சுயம்பு மூர்த்தியை வழிபட்டு மனநிறைவடைந்தனர். பலகாலும் வேதவடிவான மானுடர்கள் நால்வரும் சிவபெருமானை வழிபட்டதால், சிவபெருமான் மகிழ்ந்து அவர் முன்னே காட்சி தந்தார். “வேண்டும் வரம் கேளுங்கள்” என்றார். வேதங்கள் கைதொழுது வேண்டினர் “எங்கள் தோஷங்கள், மாசுகள் நீங்க வேண்டும். நாங்கள் வழிபட்ட தலம் வேதபுரி எனவும், தங்கிய இடம் வேதஸ்ரேணி எனவும் வழங்கப்பட்டு மானுடர் குறை தீர வரமருள வேண்டும்” என்றதும் முக்கண்ணனும் “அவ்வாறே ஆகுக” என்று வரமளித்தார்.

இந்த வேதஸ்ரேணியே நாளடைவில் வேளச்சேரி என மருவியது என அறிகிறோம்.

மிருகண்டு முனிவர் தவமியற்றிப் பெற்ற புதல்வன் மார்க்கண்டேயனுக்கு ஆயுள் பதினாறு ஆண்டுகளே. அக்காலம் முடியும்போது மார்க்கண்டேயன் திருக்கடவூருக்குச் சென்று அமிர்தகடேஸ்வரரை பூஜித்து வந்தான். ஆயுள் முடியும் நாளில் யமன் வந்தபோது பாலகன் ஈஸ்வரனைக் கட்டி அணைத்தவாறு இருந்தான். மார்க்கண்டேயனைக் காப்பதற்காக ஈசன் லிங்கத்தினின்று வெளிப்பட்டு, காலனைக் காலால் உதைத்தார். யமனின் தண்டத்தைப் பறித்தார். யமன் உயிர் பறிக்கும் செயலில் ஈடுபடமுடியாமல் போனான்.

பூபாரம் அதிகமாயிற்று. பூதேவி கலங்கினாள். யமன் தன் தண்டத்தைப் பெற முனைந்தான். கயிலைக்குச் செல்லும் வழியில் நாரதர் அவனைத் தடுத்து நிறுத்தி, கயிலைக்குச் செல்வதைத் தவிர்த்து வேதங்களால் பூஜிக்கப் பெற்ற சுயம்பு மூர்த்தியை வேதஸ்ரேணியில் தரிசித்து வேண்டி தண்டத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

யமதர்மனும் வேதஸ்ரேணியில் திருக்குளம் ஒன்றை ஏற்படுத்தி, அத்தலத்தின் சுயம்புமூர்த்தியைப் பூஜித்தான். சிவனருளால் மீண்டும் தண்டத்தைப் பெற்றான். யமன் ஏற்படுத்தியதால் இத்தலத் தீர்த்தம் யமதீர்த்தம் என்று பெயர் பெற்றது.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பையதீக்ஷிதர் மகா ஞானி. திருவான்மியூரில் திரிபுரசுந்தரியைப் பூஜித்து வந்த அந்த மகான் வேதஸ்ரேணிக்கு வந்தார். அங்கு சிவலிங்கத் திருமேனியை மட்டுமே கண்டு அம்பிகையைப் பிரதிஷ்டை செய்தார். கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரராக வேதஸ்ரேணியில் அம்மையுடன் அப்பன் காட்சி தருகிறார். தீக்ஷிதர் இக்கோவிலில் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டையும் செய்துள்ளதால் சாந்நித்யம் நிறைந்து திகழ்கிறது.

சென்னையில் திருவேற்காடு, மாங்காடு, வேதஸ்ரேணி ஆகிய மூன்று கோவில்கள் மட்டுமே ஸ்ரீசக்ரபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தண்டீஸ்வரர் திருக்கோவிலில் கருவறையின் தென்புறத்தில் தக்ஷிணாமூர்த்தி அமர்ந்த கோலம்; குபேரனின் திசையான தென் மேற்கு திசை நோக்கி அமர்ந்துள்ளதால் இவர் ‘குபேர தக்ஷிணாமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

சிவலிங்கத்தின் நடுவில் சந்திரசேகரமூர்த்தியைத் தரிசித்து ஆனந்தமடையலாம்.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு ஒட்டக்கூத்தரால் கட்டப்பட்ட ஆலயம் கூத்தனூரில் உள்ளது. ஆனால் சரஸ்வதிக்கு தனிச்சந்நிதி வேதஸ்ரேணி தண்டீஸ்வரர் கோவிலில் மட்டுமே உள்ளது சிறப்பாகும்.

பொதுவாக எல்லா கோயில்களிலும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரர் இத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.சூரிய ஒளி தை முதல் தேதியில், சிவலிங்கம் மீது விழுகிறது.

திருக்கடவூர், மார்க்கண்டேயனுக்கு சிவபெருமான் அருள்பாலித்த க்ஷேத்திரம். ‘என்றும் பதினாறு’ என்ற சிரஞ்சீவித் தன்மையை வழங்கிய தலம். எனவே 60ஆம் வயது பூர்த்தியாகிற பலரும் தம்முடைய சஷ்டியப்த பூர்த்தி வைபவத்தை திருக்கடவூரில் நிகழ்த்துகின்றனர். அதுபோன்றே தண்டீஸ்வரமும் யமனால் வழிபடப்பட்ட ஈசனின் திருத்தலம். இக்கோவிலில் சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்வதும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

வேதங்கள் பூஜித்த ஈசன்; மாசுகளை நீக்கிய மகேஸ்வரன்; வரமருளும் வேதகீதன்; தண்டீஸ்வரரும் கருணாம்பிகையும் வேதஸ்ரேணியின் பெருமைக்கும் மகிமைக்கும் உரிய தெய்வங்கள். இக்கோவிலில் நந்தியம் பெருமானும் அருள்மிகு தண்டீஸ்வரரும் தலைசாய்ந்தவாறு தோன்றும் காட்சி அபூர்வமானது. பக்தர்களின் குறைக்குச் செவிசாய்த்துக் கேட்பது போலத் தோன்றுகிற நிலை இறைவரின் அருள் திறத்தைக் வெகுவாகக் குறிக்கிறது.

வேதஸ்ரேணி எனப்படும் இன்றைய வேளச்சேரியில் சோழர்கள் காலத்தில் ஆயிரத்தி இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட திருக்கோயிலான தண்டீஸ்வரம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததென இதுகாறும் கண்டோம்.

அன்பான உறவுகளே! ஒன்று கூடி வாருங்கள்!

வருகிற செப்டம்பர் மாதம் 6-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று மஹோன்னதமான சென்னையில் உள்ள “வேதஸ்ரேணி”யெனும் “வேளச்சேரி”யில் அமைந்துள்ள “தண்டீஸ்வரம்” எனும் இந்தத் திருத்தலத்தில். அருள்மிகு கருணாம்பிகை உடனுறை தண்டீஸ்வரரை சென்று வழிபட்டு, வேதம் போற்றிய வேந்தனவன் சன்னதியில் வேதஸ்வரூபியாம் ஸ்ரீசரணாள் அனுக்ரஹித்தபடியாக வேதமாதாவை ஸ்மரணம் செய்து, சஹஸ்ர காயத்திரீ ஜப யக்ஞ்சம் செய்து லோகக்ஷேமத்திற்கான நமது பிரார்த்தனையை செய்வோம்.

ஜெகத்குருவாக்கின்படியாக ஜெகத்துக்கான பிரார்த்தனையை செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கும் வெகுவான அனுக்ரஹத்தின் வாயிலாக சிறப்போடு வாழ்வொமாக!

குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை!

பெரியவா கடாக்ஷம்

நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்


Sa g e of Kanchi
 
ஊர்த் தலைமை

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 119

ஊர்த் தலைமை

இது ஒரு ராஜ்யம் பூராவுக்குமாகச் செய்த ஏற்பாடு. அப்புறம் ஒவ்வொரு ஊரிலும் ஊர்க்காரர்களுக்கு வேண்டிய வசதிகளை கவனித்துச் செய்து தருவதற்காக ஸ்தல நிர்வாஹம் என்று தனியாய் ஏற்பாடு செய்தார்கள். ஊருக்கு ஊர் ராஜா வைத்தால் நாடு என்று எல்லாரும் ஐக்யப்பட்டுப் பொதுவாகச் சேர்வதும், அதற்கான ஆட்சி பீடத்துக்கு உரிய மதிப்புத் தருவதும் குலைந்து போகும். அங்கங்கே தங்கள் கார்யங்களைத் தாங்களே நிர்வஹித்துக் கொள்ள ஜனங்களுக்கு ஸ்வதந்த்ரம் இருக்க வேண்டுமானாலும், ஒரு ஊர்க்காரர்கள் செய்வது இன்னொரு ஊர்க்காரர்களை பாதிக்காதபடி மேற்பார்வை செய்து ஊர் ஸபைகளை ஒற்றுமையாக ஒத்துப்போகும்படிச்செய்யவும், தேசம் பூராவுக்குமான கார்யங்களை கவனிப்பதற்கும், ராணுவத்தைக் கொண்டு சத்ருக்களிடமிருந்து ரக்ஷை தருவதற்கும், central authority (மத்ய அதிகார பீடம்) இருக்கத்தான் வேண்டும். ராஜா என்ற அதன் தலைவனும் இருக்கத்தான் வேண்டும். இதற்குக் குந்தகம் பண்ணுவதற்கு இடம் கொடுப்பதாக ஊருக்கு ஊர் ராஜா வைத்துக்கொள்ளக்கூடாது. ராஜாவைக் காட்டியே தேசாபிமானம் உண்டாக்கவேண்டியிருப்பதுபோல ஊர் விஷயத்தில் இல்லை. ஏனென்றால் நாட்டைவிட ஊர் என்பது ஜனங்களுக்கு நெருக்கமாக இருப்பது. ‘தங்கள் நாடு’ என்று இருப்பதைவிடத் ‘தங்கள் ஊர்’ என்பதில் அதிக அபிமானம் இயற்கையாகவே இருக்கும்.

முதலில் தான், அபபுறம் தன் குடும்பம், அதற்கப்புறம் தன் ஊர், பிற்பாடுதான் தன்நாடு என்று இருக்கிறது. ‘தன் உலகம்’ என்றே மனஸ் விஸ்தாரமாக வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அதிருக்கட்டும். நடைமுறையில் ஊருக்கு அப்புறம்தான் நாடு என்று இருக்கிறது. அதுதான் மநுஷ இயற்கை. தினமும் பார்த்துப் பழகுகிற ஆறு, குளம், கோவில், வயல், கடைவீதி, அன்றன்றும் பழகுகிற ஜனங்கள் ஆகியவர்களைக் கொண்டிருப்பதால், சொந்த ஊர் என்ற பாசம் ஏற்படுகிறது. பார்க்காத இடங்கள், பார்க்காத மநுஷ்யர்கள் உள்ள விஸ்தாரமான பரப்பு – அதாவது தேசம் – என்றால் அதனிடம் இத்தனை பிடிப்பு ஏற்பட முடிவதில்லை. எதற்குச் சொல்கிறேனென்றால், தேசம் என்ற ஒன்றிடம் புதுசாகப் பிடிமானத்தை ஏற்படுத்தித் தருவதற்காக அதற்கு ‘ஸிம்ப’லாக உயிருள்ள ஒருத்தனை ராஜா என்று வைக்க வேண்டியிருப்பது போல, இயற்கையாகவே ஜனங்களுக்குப் பிடிமானமுள்ள ஊரில், அதாவது ஸ்தல ஆட்சியில் ஒருத்தனை வைக்க வேண்டிய அவச்யமிருக்கவில்லை. ராஜாக்கள் என்று பலபேரை அந்தந்த ஊர் ஜனங்களின் விசேஷ மரியாதை – விச்வாஸங்களைப் பெறும்படி வைத்துவிட்டாலே தேசம் பூராவுக்கும் இருப்பவனின் அதிகார ஸ்தானத்தையும் ‘இமேஜை’யும் அது ‘வீக்’காக்கிவிடும். (பலஹீனப்படுத்திவிடும்) .

ஆனாலும் எந்த நிர்வாஹமானாலும் அதிலே ஒரு தலைவன் இருக்கவேண்டும். இப்படி ஊர் ஸபைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனாலும் இவனுக்கு விசேஷமாக ஒரு ‘இமேஜ்’ இருக்கவேண்டியதில்லை. மத்ய பீட ராஜாவுக்குள்ளது போன்ற பெரிய பொறுப்புகளும் இவனுக்கு இல்லை. ஊர்த்தலைமை என்பது ராஜ்யாதிகாரத்தைப் போலப் பிறநததிலிருந்து பழக்கினால்தான் உரிய யோக்யதாம்சங்களைப் பெறமுடியும் என்கிற அளவுக்கு நுட்பமான பொறுப்பு வாய்ந்த ஒன்றில்லை. தேசத்தின் ராஜாவுக்கு அடங்கி, அவன் அதிகாரத்துக்கும் மேற்பார்வைக்கும் கட்டுப்பட்டு ஊர்த் தலைவன் உள்ளூர் ஸமாசாரங்களை மட்டும் கவனிக்க வேண்டியவன்தான். ஆகையால் இதற்குப் பாரம்பர்ய ரைட் அவச்யமில்லை. பார்க்கப்போனால், இப்படிச் சின்ன அளவில் அதிகாரமிருக்கும்போது அதைப் பாரம்பர்யமாக்குவதே தான் யோக்யதாம்சம் இல்லாதவர்களிடம் பொறுப்பு போவதற்கு வழி பண்ணிவிடும். ‘தனக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது, ஒரு பெரிய நிலப்பரப்பையும், பெரிய ஜன ஸமூஹத்தையும் தான் ஆண்டு நிர்வாஹம் செய்து மதிப்புக்குப் பாத்ரமாக வேண்டும்; சத்ருக்கள் வந்தால் ஸமாளிக்க வேண்டும்’ என்கிறபோது ஒரு ராஜகுமாரன் ரொம்பவும் கவனத்தோடு, கவலையோடு யோக்யதை ஸம்பாதித்துக் கொள்ளப் பாடுபடுவான். “எல்லாம் நம் மநுஷர்கள்தான் – நமக்குத் தெரிந்த சேஷன் சுப்பன்தான்” என்று இருக்கும் போது, பொறுப்பும் குறைவாக இருந்து, “இது எப்படியும் ஹெரிடிடரி, வேறே யாரும் போட்டிக்கு வர முடியாது” என்றும் இருந்துவிட்டால் ஒருத்தன் யோக்யதை ஸம்பாதித்துக்கொள்ளப் பாடுபடவேண்டியதில்லைதானே!

இம்மாதிரியான பல காரணங்களினால் ஊர் நிர்வாஹத்தைப் பாரம்பர்யமாக வைக்காமல் விட்டார்கள்.

நாடானால் ராஜா என்கிறவன் ஆலோசனை ஸபைகளின் துணையுடன் நிர்வாஹம் செய்யவேண்டும்; ஊரானால் ஒரு நிர்வாஹ ஸபை தனக்குத் தலைவனாக ஒருத்தனை வைத்துக் கொண்டு கார்யங்களைச் செய்யவேண்டும் என்று வைத்தார்கள். இரண்டுக்கும் இருக்கிற வித்யாஸத்தை கவனிக்க வேண்டும். நாட்டில் ராஜா என்கிறவன்தான் முடிவான நிர்வாஹ அதிகாரம் உள்ளவன். அவனுக்கு ஸபைகள் ஆலோசனை சொல்கின்றன. ஆலோசனைதான். முடிவு அவன்தான் எடுப்பான். ஊரிலே இப்படியில்லை. ஸபையேதான் ஆலோசனை சொல்வதோடு நிற்காமல் நேராக நிர்வஹிப்பது, முடிவு எடுப்பது. தலைவன் என்று ஒருத்தன் இல்லாமல் பல பேர் உதிரியாக இருப்பது ஸரியாய் வராது; பலபேரை ஒரு கட்டுக்கோப்பில் வைப்பதற்காகத் தலைவன் இருக்கத்தான் வேண்டும் என்பதற்காக ஸபை ஒரு தலைவனை வைத்துக் கொள்கிறது.

Sage of Kanchi

Krish Ram
 
மஹேஸ்வர ஸூத்ரம்



மஹேஸ்வர ஸூத்ரம்: பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா- மஹா பெரியவா

பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்! நடராஜாவோட சாப்பும் 14 சப்தத்தையே குடுத்துது!

இந்த பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா. மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால, அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது.

அ இ உண்
ருலுக்
ஏ ஒங்
ஐ ஔச்
ஹயவரட்
லண்
ஞம ஙண நம்
ஜ ப ஞ்
க ட த ஷ்
ஜ ப க ட த ஸ்
க ப ச ட த சடதவ்
கபய்
சஷஸர்
ஹல்

ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்!
இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயேசும்மா ஒப்பிச்சிருப்பேள்!
பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்!
ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய

ஜய சங்கர ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர


Sage of Kanchi

Krishnamoorthi Bal asubrama nian
 
தேர்தல் மூலம் ஊர் ஸபையில் அங்கம்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 120

தேர்தல் மூலம் ஊர் ஸபையில் அங்கம்

ராஜா, அவனுக்கு ஆலோசனை சொல்கிறவர்கள், ஊர் ஸபைக்காரர்கள் ஆகியவர்களால் மொத்தத்தில் நிர்வாஹம் நடந்தது.

யார் வேண்டுமானாலும் ராஜாவாக வரமுடியாது. அது ஹெரிடிடரி.

மற்ற ஸ்தானங்களுக்கு அதாவது அவனுடைய ஆலோசனை ஸபை, ஊராட்சி ஸபை, முதலியவற்றில் யார் வேண்டுமானாலும் இடம் பெறலாமா? ‘கூடாது. ஊர் நிர்வாஹம், நாட்டு நிர்வாஹம் ஆகியன சிக்கலான விஷயம். நாட்டு நிர்வாஹத்தை விட ஊர் நிர்வாஹம் சிக்கல் குறைந்தது, பொறுப்பு குறைந்தது என்றாலும் இதிலேயும் சிக்கல் உன்டு, பொறுப்பு உண்டு. எனவே உரிய தகுதி பெற்றிருப்பவர்களிடம்தான் பொறுப்புக் கொடுத்து மேலே சொன்ன ஸபைகளில் அமர்த்தலாம்’ என்று ஏற்பாடு செய்தார்கள்.

இப்படி அமர்த்துவதிலே தான் ஜனங்கள் தங்களுக்கும் பங்கு இருக்கிறதென்று ஸந்தோஷப்படும்படியாக ஒரு தேர்தல் முறையை ஊர் விஷயத்தில் கையாண்டார்கள்.

இப்போது இப்படி உங்களையெல்லாம் மெனக்கெடுத்தி உட்காரவைத்து முக்யமாகச் சொல்ல நினைத்து, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தற்போது ஜனநாயகத்தின் மூச்சாக நினைக்கப்படும் “தேர்தல்” என்ற ஏற்பாடுகூட இருந்தது என்பதைப் பற்றித்தான். தேர்தல் இருந்தாலும் இப்போதுள்ள தேர்தல் முறைக்கு எப்படி அந்தக்கால முறை வித்யாஸமாயிருந்தது என்பதைச் சொல்லி, இப்போதிருப்பதைவிட அந்த முறை எப்படி ச்லாக்யமானது என்று கொஞ்சம் காட்ட ஆசை. ‘ராஜ்யத்தையோ, ஊரையோ நிர்வாஹம் செய்பவர்களுக்குத் தகுதி இருக்கவேண்டும், எல்லாரையும் அதில் விட முடியாது’ என்றால், அப்போது, இப்படிப்பட்ட தகுதிகள் அவர்களுக்கு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்துத் தான் அவர்களுக்கு ஸ்தானம் தரவேண்டும் என்றும் ஆகிவிடுகிறது. ராஜ்யத்தைப் பொறுத்தமட்டில் ஒரு ராஜகுமாரன் பட்டத்துக்கு வரும்போது, அவனுடைய தகப்பனாருக்குத் துணையாயிருந்த ஸதஸ் பெரியவர்களே இவனக்கும் ஆலோசனை சொல்லி நல்ல வழியிலே போகப் பண்ணுவார்கள். அப்புறம் அவர்கள் வயோதிகத்தில் பதவியை விட்டு விட்டுப் போனாலோ, அல்லது காலமாய் விட்டாலோ, அந்த ராஜாவே அதற்குள் நல்ல ஆட்சி அநுபவமும், விவேகமும் பெற்றிருப்பானாதலால் தனக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் யார் என்று பார்த்து அப்படிப்பட்டவர்களை நியமனம் செய்து கொண்டுவிடுவான். இங்கே ராஜாவேதான் ‘அப்பாயின்டிங் அதாரிடி’.

ஊர் விஷயத்தைப் பார்க்கலாம். ஊர் நிர்வாஹத்தை ஏற்று நடத்தும் ஸபையினருக்கும் தகுதிகள் இருக்கவேண்டும். ஸபையினருக்கும் தகுதிகள் இருக்கவேண்டும். ஆனாலும் ராஜா அல்லது ராஜாங்க அதிகாரியால் அவர்கள் நியமிக்கப்ட்டதாக இல்லாமல், ‘தங்கள் ஊரை நிர்வஹிப்பவர்களின் நியமனம் தங்கள் ஊராராலேயே முடிவாயிற்று’ என்று ஜனங்களுக்கு ஒரு த்ருப்தி இருக்கும்படிச் செய்தால் நன்றாய் இருக்கும். எந்த ஊரிலோ இருந்து கொண்டு, யாரோ உத்தரவு போட்டு நம்முடைய இந்த ஸொந்த ஊரை நிர்வஹிக்க ஆஸாமிகள் வரவேண்டுமா என்று அவர்கள் நினைக்காமல், தங்களுக்கே இதில் பங்கு இருக்கிறது, ‘பார்ட்டிஸிபேஷன்’ இருக்கிறது என்று பெருமையுடன் நினைக்கப் பண்ணவேண்டும். இதற்கான ஒரு தேர்தல் முறையைத்தான் சோழர் ஆட்சியில் பார்க்கிறோம்.

ஸரி, அப்படியானால் பொது ஜனங்களையே, “உங்கள் ப்ரதிநிதிகளாக ஸபைக்காரர்களை ‘எலெக்ட்’ செய்யுங்கள்” என்று விட்டுவிட்டார்களா?


Sage of Kanchi

Krish Ram
 
Thanks for the timely reminder and for sharing the wonderful incident relating to the Rs.51/- offering and Periyava's divine grace. May Mahaperiyava's blessings be showered on all of the Members in this forum and on all the world and may we all improve spiritually slowly and steadily!
 
இன்றைய தேவை மன சுத்தம்

இன்றைய தேவை மன சுத்தம்


சென்னை பல்கலைக்கழக நூலகத்தில் மகாபெரியவர், 1958.


'அனைத்து அறன்', அதாவது சர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்', அதாவது, தங்கள் மனசைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாக சுத்தம் செய்துகொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர்.


கர்மாநுஷ்டானத்தால் அவரவரும் சித்த சுத்தி ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற வைதிக சம்பிரதாயத்தைத்தான் இங்கே திருக்குறளும் சொல்கிறது. முதலில் இவன் தன்னைத்தானே சுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். இது இல்லாமல் பரோபகாரம், சோஷல் சர்வீஸ் என்று கிளம்பினால் அது வெற்றுக் காரியம்தான்.

தான் அடங்கியிருக்க வேண்டும். பக்தியோடு ஈஸ்வர சேவை என்று நினைத்து சமூக சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும். அந்தரங்க சுத்தமில்லாமல் செய்கிற காரியங்கள் வெறும் படாடோபமாகவும், ‘ஷோ'வாகவுமே முடிந்து போகும். இந்த படாடோபத்தால் ‘சேவை' என்று செய்கிறவனுக்கு அகங்காரம் மேலும் ஜாஸ்தியாகத்தான் செய்யும். அகங்காரம் தொலைவதற்கு உதவ வேண்டிய சேவையை அடக்கமும் பணிவும் பக்தியும் அன்பும் இல்லாமல் செய்தால் அகங்காரத்தை அதிகமாக்கிவிடும். குளிக்க வேண்டும் என்று போய், சேற்றை வாரிப் பூசிக்கொண்டதாகிவிடும்.

“தான் சுத்தமாவதுதான் சர்வ தர்மமும்'' என்றால் இது சுயநலம் மாதிரி அல்லவா இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் இது நாம் லோக ரீதியில் நினைக்கிற மாதிரியான சுயநலம் இல்லை. பிறத்தியாரைக் கஷ்டப்படுத்தியாவது நம் இந்திரிய சுகங்களைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதுதான் தப்பான சுயநலம். மனசை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நாம் கஷ்டப்பட்டாவது நல்லதே பண்ண வேண்டியதாகிறது. இது இந்தி்ரிய செளக்கியங்களிலிருந்து நம் மனசை மீட்டு சாச்வதமான பேரின்பத்தில் சேர்ப்பதற்கு உதவுகிறது.

‘உபகாரம்' என்றால் பிறத்தியாருக்குச் செய்தால் மட்டும் போதுமா? இதோ நமக்கென்று ஈஸ்வரன் ஓர் உயிரைக் கொடுத்த மாதிரி கொஞ்சம் வெளியே அவிழ்த்துவிட்டிருக்கிறானே, மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதை நல்லது கெட்டது இரண்டிலும் ஆடுகிற மாதிரி விட்டிருக்கிறானே.

இந்த நம் உயிருக்கு ஜீவாத்மா என்கிறார்களே அதற்கு, மட்டும் நாம் உபகாரம் பண்ணாமல் இருக்கலாமா? மனசை நல்லதிலேயே செலுத்தி, பகவான் தந்திருக்கிற வாக்கு, சரீரம் எல்லாவற்றையும் நல்ல பேச்சு, நல்ல காரியங்கள் இவற்றிலேயே பிரயோஜனப்படுத்தி இந்த உயிரைப் பேரின்ப நெறியில் சேர்க்க நாம் கடமைப்பட்டிருக்கவில்லையா? சின்னதான சுயநலத்தைவிட்டு, இந்தப் பெரிய ‘சுயநல'த்துக்கு எல்லோரும் பாடுபடத்தான் வேண்டும்.

இப்படிச் செய்வதற்குப் பரநலப் பணியே ரொம்பவும் சகாயம் செய்கிறது. இதிலே ஒரு வேடிக்கை, இவன் மனசு சுத்தமாக இருந்தால்தான் பரோபகாரம் நிஜமாக நடக்கிறது. பலன் தருகிறது. பரோபகாரத்தால் தான் இவன் மனசே சுத்தமாகத் தொடங்குகிறது என்றால் contradiction (முரண்) மாதிரித்தானே இருக்கிறது? ஆனால் முரண்பாடு இல்லை.

முதலில் இவனுக்கு மனசு சுத்தமாக இருக்க வேண்டும் என்ற தாபம் இருந்தாலே போதும். மனசு லேசில் கட்டுப்பட்டு வரத்தான் வராது. இந்திரிய செளக்கியத்தையே நினைத்து அது திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்போது, ‘ஐயோ, இது திருந்த வேண்டுமே!' என்ற உண்மையான கவலை இருந்தால் இந்த விசாரத்துக்கே ஒரு நல்ல சக்தி (effect) உண்டு.

இப்படி ஒரு தாபத்தோடு பரோபகார காரியங்கள் என்ற லகானைப் போட்டு அப்போதப்போதும் ஓடுகிற மனசை இழுத்து ஒரு பொதுத் தொண்டில் செலுத்த வேண்டும். ஒன்றுக்கொன்று போஷித்து இட்டு நிரப்புவது, complementary என்கிறார்களே, அப்படி.

பரோபகாரப் பணி மனசைக் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் பண்ணப் பண்ண, அந்தச் சித்த சுத்தியால் நாம் செய்கிற தொண்டும் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமாகிக் கொண்டு சக்தியோடு பலன் தர ஆரம்பிக்கிறது. இப்படிப் பரோபகாரமும் ஆத்மாபிவிருத்தியும் ஒன்றுக்கொன்று கைகோத்துக் கொண்டு, பரஸ்பரம் பலம் தந்து கொண்டு வளர்கின்றன.

என்ன சொன்னாலும் வெளி உலகத்தை நாம் முழுக்க சரி பண்ணுவது நம் கையில் இல்லை. பல பேர் பல தினுசான கர்மாவால் கஷ்டப்படும்போது நாம் எத்தனை சேவை செய்தாலும், அவர்கள் கர்மா குறுக்கே நின்று வெளியிலே பலன் இல்லாமலும் போகலாம்.

ஆனால் பிடிவாதமாக நாம் இந்தக் காரியத்தைச் செய்துகொண்டே வந்தால், அது நிச்சயமாக நம் கர்மாவைக் கழுவத்தான் செய்யும். கர்ம வாசனையால் ஏற்பட்ட நம் உள் அழுக்குகளை அலம்பத்தான் செய்யும்.

இதனால்தான் திருவள்ளுவர், “வெளியில் உன் தொண்டு பலன் தந்ததா என்று proof (நிரூபணம்) தேடாதே. உன் மனசிலே அழுக்கு போச்சா, மனத்துக்கண் மாசிலன் ஆனாயா என்று பார்த்துக்கொள். இந்த உள் proof - இதை யாரும் உன்னிடமிருந்து ஒளிக்க முடியாது. கிடைத்துவிட்டால் பண்ணின தர்மம், அறன் பலித்துவிட்டது என்று அர்த்தம்'' என்று சொல்கிற மாதிரி குறளைப் பண்ணியிருக்கிறார்.


Sage of Kanchi

Bala Thiru
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top