• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
குடியரசு, ஜனநாயகம்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 121

குடியரசு, ஜனநாயகம்

தற்போது (1949) இப்படித்தான் நடக்கவேண்டுமென்று ஏற்பாடாகி வருகிறது. ஊர் மட்டுமில்லை, மாகாணம், தேசம் பூராவுக்குமே இப்படி நடத்துவதுதான் உத்தேசமாயிருக்கிறது. குடியரசாக தேசம் ஆகிறபோது ஜனங்கள் எல்லாரும் வோட்டுப் போட்டுப் பார்லிமென்டுக்கும், அஸெம்ப்ளிக்கும் ப்ரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தப் பண்ணவேண்டும் என்பதற்கு ஏற்பாடாகி வருகிறது.

இப்போது முடியரசு ஸாத்யமில்லை. ஈஸ்ட் இன்டியா கம்பெனி கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து அப்புறம் ப்ரிட்டிஷ் ராஜாங்கத்துக்கு தேசம் கை மாறின காலங்களில் இந்தத் தேசம் முழுவதற்கும் ஒரு ராஜா இருக்கவில்லை. பிற்பாடு ஸ்வதேச ஸம்ஸ்தானங்கள் என்று பெயர் பெற்ற ஏராளமான ராஜ்யங்களே அப்போது இருந்தன. நமக்கு ஸ்வதந்த்ரம் வந்தபோது இவற்றில் ஏதோ கொஞ்சம் ஸ்வயாதிக்யம் பெற்றிருந்தவற்றைத்தான் ஸ்வதேச ஸம்ஸ்தானம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். Native state என்பார்கள். இப்படி ஐநூற்றுக்கு மேல் இருக்கின்றனவென்றால், இம்மாதிரி கொஞ்சம் ராஜ்யாதிகாரம் கூடக்கொடுக்காமல் ப்ரிட்டிஷ்காரர்கள் முழுங்கியேவிட்ட சின்னச் சின்ன ராஜ்யங்கள் எத்தனையோ இருந்திருக்கும். ஏகப்பட்ட ராஜாக்களின் ஆளுகையில் இருந்த தேசம் அப்புறம் வெள்ளைக்கார, ‘கிங் எம்பர’ரிடம் போயிற்று. அதிகாரமில்லாமல் figure-head என்று ராஜாவாக இருப்பவர் அவர். அந்த ஹிஸ்டரி இப்போது வேண்டாம். சொல்ல வந்தது, இப்போது அந்த ஒரே ராஜாவிடமிருந்து தேசம் நமக்கு திரும்பி வருகிறபோது இது முழுதையும் ஒப்பிப்பதற்கு பாரம்பர்ய ரைட் உள்ளவராக ஒரு ராஜகுடும்ப வாரிசும் இல்லை. ஆனபடியால், மற்ற காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இப்போது தேசம் பூராவையும் ஏதோ ஒரு ராஜ வம்சம் வாங்கிக் கொள்வதற்கில்லாமல் ஜனங்கள்தான் வாங்கிக்கொள்ளவேண்டும். குடியரசுதான் இங்கே வரமுடியும். வெள்ளைக்காரர்களோடு ராஜா யாரும் சண்டை போட்டு தேசத்தைத் திரும்பவும் ஜயிக்கவில்லை. ஜனங்களே தான் கூடியமட்டும் அஹிம்ஸை மார்க்கம் என்று சொல்லக்கூடிய முறையில் ஓரளவு ஸாத்விக யுத்தம் செய்து ராஜ்யத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறார்கள். அதனால் ஜனங்களே இதை ஆண்டுக்கொள்ள உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதைத்தான் குடியரசு என்பது.

குடியரசு என்றாலும் அத்தனை ஜனங்களுக்கும் ஆட்சியில் நேர்ப்பொறுப்பும் பதவியும் கொடுக்க முடியாது. அதனால் அவர்களுக்கு ப்ரதிநிதிகளாக சிலபேர்தான் ராஜாங்கத்தை அமைத்த நடத்தவேண்டும். இதிலே பொதுஜனங்களுக்கு இடம் தராமல், ப்ரபுக்களாக இருக்கப்பட்டவர்களே சேர்ந்து அட்சி நடத்துவதான ‘அரிஸ்டாக்ரஸி’, மதத்தலைவர்கள் நடத்துவதான ‘தியாக்ரஸி’ – என்பது போலப் பல இருக்கின்றன. ஒருவரே எல்லா அதிகாரத்தையும் தன் வசமாக்கிக்கொண்டு, ஸர்வாதிகாரி என்றே பெயர் வைத்தக்கொண்டு, ஸர்வாதிகாரி என்றே பெயர் வைத்துக்கொண்டு ஆள்வதை ‘ஆடாக்ரஸி’ என்கிறார்கள். இம்மாதிரியுள்ள பல ஆட்சி முறைகளில், ஜனங்களில் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டும் சேர்ந்தவர்களாயில்லாமல் ஸகல ஜனங்களுக்கும் ப்ரதிநிதிகளாக இருக்கப்பட்டவர்களிடம் ஆட்சியைக் கொடுப்பதற்கு ‘டெமாக்ரஸி’ என்று பெயர். ஜனநாயகம் என்று நாம் சொல்கிறோம். இப்படிப் பொதுவான ஜனஸமூஹம் பூராவுக்குமான ப்ரதிநிதிகளைக் கொண்டே நம்முடைய குடியரசில் ஜனநாயகமாக ஆட்சியை ஏற்படுத்த உத்தேசிக்கப் பட்டிருக்கிறது. இது இப்படித்தான் இருக்க முடியும். கால தேச வர்த்தமானத்தில் இதைத் தவிர வேறு விதமாக ஏற்பாடு செய்வதற்கில்லை எனலாம்.


Sage of Kanchi

Krish Ram
 
அபிப்ராய பேதம்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 122

அபிப்ராய பேதம்

எல்லா வர்க்கத்தினருக்கும் இடம் தரும்படியாக ராஜாங்கம் அமையட்டும். ஆனால் இப்படிப்பட்ட ப்ரதிநிதிகளை வயஸு வந்த எல்லா ஜனங்களுமே தேர்ந்தெடுக்கும் முறைதான் ஸரியான வழியா என்பதில்தான் கொஞ்சம் அபிப்ராயபேதம் இருக்கிறது. கொஞ்சம் அபிப்ராய பேதம் என்று சொல்வது அவ்வளவு ஸரியில்லை, நிறையவேதான் அபிப்ராய பேதம். ஆனால் இப்படி ரொம்பவும் கொஞ்சம் பேருக்கே இருக்கிறது. இப்படி இருப்பதால், தேசத்தில் பொதுவாயுள்ள அபிப்ராயத்தைக் கவனிக்கும்போது இந்த அபிப்ராயபேதம் கொஞ்சமாகவே தெரிகிறது.

இம்மாதிரி வித்யாஸமாக நினைப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் நிர்வாஹம் பண்ணுவதற்கு ஒரு தகுதி வேண்டுமென்பது போலவே, ஒருத்தர் அப்படிப்பட்ட தகுதி உள்ளவர்தானா என்று எடை போட்டுப் பார்த்து அவரைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும். ஒரு அபேக்ஷகர் (வேட்பாளர்) என்றால் அவர் ஏதோ ஒரு கட்சியில் இருப்பார். அதற்கென்று கொள்கைகள் இருக்கும். ஸ்வயேச்சை அபேக்ஷகர் என்றால் அவருக்கும் ஏதோ கொள்கைகள் இருக்கத்தான் வேண்டும். தேர்ந்தெடுக்கிறவர்கள் இந்தக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கவேண்டும். ‘நம் தேசத்தில், தற்போதுள்ள நிலவரங்களில் இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நிர்வாஹம் செய்வது நல்லதா?’ என்று சீர்தூக்கி முடிவு பண்ணக்கூடியவர்களாக வோட்டர்கள் இருக்கவேண்டும். ‘அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்” என்று எதையாவது சொல்லிக்கொண்டு வோட்டு கேட்டால், “அது ஸாத்யந்தானா? ஸாத்யமானாலும் அப்படிச் செய்யலாமா?” என்று யோசித்துப் பார்த்து, பேச்சில் ஏமாந்து போகாமல் வோட்டுப் போடக்கூடியவர்களாக இருக்கவேண்டும். மொத்தத்தில், குடியரசு எல்லாருக்குமானாலும், அதிலே ராஜாங்கம் அமைப்பவர்கள் எல்லா வர்க்கத்தினருக்கும் ப்ரதிநிதிகளாயிருக்க வேண்டியவர்களானாலும், அவர்களுக்கு நிர்வாஹத்துக்கான யோக்யதாம்சம் இருக்க வேண்டியிருக்கிறது; அப்படிப்பட்ட யோக்யதாம்சம் அவர்களுக்கு இருக்கிறதா என்று பரிசீலனை பண்ணி அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு யோக்யதாம்சம் வேண்டியிருக்கிறது. அதாவது அபேக்ஷகர், வோட் போடுபவர் இருவருக்கும் யோக்யதாம்சம் வேண்டியிருக்கிறது.

ஒரு வேலை கொடுக்கும்போது, மனுப் போட்ட பலபேரிலே யாருக்குக் கொடுக்கலாம் என்று ஸெலக்ட் செய்யவேண்டியிருக்கிறது. ரொம்பவும் விஷயம் தெரிந்தவர்களைத் தான் ஸெலக்க்ஷன் கமிட்டியில் போட்டு அவர்கள் மூலம், மனுப் போட்ட பல பேரில் ஒருத்தருக்கு வேலை கொடுக்கிறார்கள். அதாவது வேலைக்கு வைக்கிறவனின் யோக்யதாம்சத்தைப் பரீக்ஷித்து அவனை ஸெலக்ட் செய்வதற்கு அவனை விட யோக்யதாம்சம் வாய்ந்தவரை நாட வேண்டியிருக்கிறது. குடியரசுத் தேர்தலில் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், இன்னாருக்கு இன்ன யோக்யதாம்சம் என்று சீர் தூக்கிப் பார்க்கவேண்டியவர்களான வோட்டர்களுக்கும் ஓரளவுக்கு யோக்யதை வேண்டித்தான் இருக்கும்.

தேச நிர்வாஹம், அரசியல் கொள்கைகள் முதலியவற்றைப் பற்றி ஓரளவேனும் விஷயஞானமுள்ளவர்கள் ஆலோசனை செய்து வோட் கொடுத்தால்தான் ஆட்சி ஸரியானவர்களிடம் போகும். விஷயம் தெரியாதவர்கள் எலெக்ட் செய்யும்படிவிட்டால் தப்பானவர்கள் அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடுமே, அதனால் ரொம்பவும் அனர்த்தமாகி விடுமே- என்பதெல்லாந்தான் நான் சொன்ன “கொஞ்சம் பேரின்” கவலை, ஆக்ஷேபனை எல்லாம்.

விஷயம் தெரிந்தவர்களும் ஸ்வயநலக்காரர்களாயிருக்கிறார்கள், தேச நலனைக் கருதாமல் தங்கள் ஸொந்த அபிமானங்களின் மீது வோட் போடுபவர்கள் அவர்களிலுந்தான் இருக்கிறார்கள் – என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.

ஆனாலும் இருப்பதற்குள் நல்லதாக, safe ஆக ராஜாங்கம் அமையவேண்டுமானால் அதற்கு, ஒன்றும் தெரியாத பாமர ஜனங்களிடம் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைத் தருவதைவிடத் தெரிந்தவர்களிடம் தருவதுதான் உசிதமானது. இருப்பதற்குள் இப்படிச் செய்தால்தான் குறைச்சல் அனர்த்தம் என்று வைத்துக்கொள்ளலாம்.

ஆனதினால், படிப்பு, ஸொத்து இம்மாதிரி ஏதோ ஒன்றினால் ராஜீய விஷயங்களில் ஓரளவு ஞானமும் பொறுப்புணர்ச்சியும் பெற்றிருப்பவர்கள் மட்டுமே வோட்டுரிமை பெற்றுத் தேர்ந்தெடுக்கும் முறையைப் பின்பற்றுவததுதான் ஸரி என்று இந்தக் “கொஞ்சம் பேரு”க்குத் தோன்றுகிறது. ஜாதி, மதம், பொருளாதார வர்க்கம் முதலானவற்றில் குறிப்பிட்ட ஏதோ ஒன்றை மட்டும் சேர்ந்தவர்களாயில்லாமல் எல்லாவற்றையும் சேர்ந்தவர்களான இப்படிப் பட்ட விஷயமறிந்த எல்லாருக்கும் வோட்டுரிமை தரவேண்டும், அப்படிச்செய்வதால் இது குறிப்பிட்ட ஒரு பிரிவின் ஆட்சியான மற்ற ‘க்ரஸி’களில் ஒன்றாக இல்லாமல் ‘டெமாக்ரஸி’ என்றே மதிக்கப்படவேண்டியதாகும் – என்கிறார்கள். எலெக்ட் ஆகிற அபேக்ஷகரும் இப்படியே ஏதோ ஒரு வர்க்கமாகத்தான் இருக்க வேண்டுமென்று வைக்காததால் டெமாக்ரஸிக் கொள்கை இன்னம் பலப்படுகிறது. இதற்கு மேல் Adult Franchise (வயது வந்தோர் யாவரும் வோட்டளிக்கும் முறை) என்று போனால், விஷயம் தெரியாத எராளமான பாமர ஜனங்களைக் கொண்ட நம் தேசத்தில் ஸரியனாவர்களிடம் நிர்வாஹம் போகாமல் கஷ்டப்பட வேண்டி வரப் போகிறதே என்று நான் சொன்ன “கொஞ்சம் பேர்” நினைக்கிறார்கள். நவீன முன்னேற்றப்போக்கு இல்லாதவர்கள், பழம் பெருச்சாளிகள் என்று முன்னேற்றத் தலைவர்கள் வர்ணிக்கிற “கொஞ்சம் பேர்!”

இந்தத் தலைவர்கள் ஜனங்கள் அத்தனை பேரையும் ஸ்வதந்த்ரப் போராட்டத்தில் தூண்டிவிட்டுத்தான் வெள்ளைக்காரனைப் போகப் பண்ணியிருக்கிறார்கள். அதனால் இப்போது அத்தனை பேரும் தேச ஆட்சிக்கு உயிர் நாடியாயுள்ள எலெக்க்ஷனில் கலந்து கொள்ளும்படிச் செய்யாமல், வோட்டர்களுக்கு யோக்யதாம்சம் நிர்ணயித்தால், ஜனங்கள் தங்களை என்ன பண்ணுவார்களோ என்ற எண்ணமும் இருக்கலாம். ‘வெள்ளைக்காரர்களை எதிர்த்து என்னென்ன பண்ணுவதற்கு ஜனங்களுக்குக் கற்றுக் கொடுத்தோமோ அதைத் தங்களிடமே அவர்கள் திருப்பிக் கொண்டால் என்ன பண்ணுவது?’ என்றும் இருக்கலாம். இப்படி எவனோ அந்நியனுக்குப் பண்ண வேண்டியிருந்ததை நம் தேசத்தின் தலைமையில் இருக்கும் நம்மவர்களுக்கே பண்ணலாமா என்று யோசிக்காமல் செய்யக் கூடிவயவர்கள் என்றாலே விஷயம் தெரியாதவர்கள், அரசியல் அறிவு போதாதவர்கள் என்பதற்காக ஒருத்தருக்கு ஒரு உரிமை கொடுக்கப்பட்டால் அப்படிப்பட்டவர்கள் அந்த உரிமையைத் தப்பாகத்தான்


Sage of Kanchi

Krish Ram
 
Important clarification on Rig Upakarma for 2015

Important clarification on Rig Upakarma for 2015


Thanks to Sudharshan for sending this document. This has been discussed, analyzed and finalized by great scholars in Sri Matam and approved by Sri Periyava.


Please open the link to read

https://mahaperiyavaa.wordpress.com/2015/08/25/important-clarification-on-rig-upakarma-for-2015/

 
ஆகஸ்டு 26,2015, புதன் கிழமை ரொம்பவும் சிலாக்க&#3007

ஆகஸ்டு 26,2015, புதன் கிழமை ரொம்பவும் சிலாக்கியமான நாள்-....மஹாபெரியவா!!

ஆயுஷ்மான் யோகம், பவ கரணம், ஸௌம்ய வாஸர ம் (புதன் கிழமை), இந்த மூன்றும் ஒன்று சேர்நது வந்தால் அந்த நாள் ரொம்பவும் சிலாக்கியமான நாள் என்று மஹா பெரியவா சொல்லியிருப்பது ஞாபகமிருக்கலாம். வரும் ஆகஸ்டு 26,2015, புதன் கிழமை அப்பேறபட்ட ரொம்பவும் சிலாக்கியமான நாள்

I am repeating below the episode,, in which Our Mahaperiyavaa has clarified in His own style WHAT DOES" AYUSHMAN BHAVAH SOWMYA "MEAN?, for the benefit of those who have not read this yet

When Maha Periyavaa was giving darshan, four or five Vidwans, who had come for darshan, were sitting on the floor.

In the course of his conversation (with the devotees), Maha Periyavaa asked them, “When Bhaktas do namaskaram to me, I bless them with the name ‘Narayana, Narayana’. What do you people, who are samsaris say for blessing?”

“We say, ‘dIrgha AyushmAn bhava sowmya‘; only that is the custom.”

“What does it mean?”

“Remain in saukyam for a long time’ is its meaning.”

Maha Periyavaa asked all the Vidwans present there, one by one. Everyone said the same meaning.

Maha Periyavaa remained in silence for sometime. Then he said, “The meaning you all said is a wrong one.”

The Pandits were taken aback. Everyone of them was a "bade", "bade" Vidwan, and had earned the Siromani title.

For the Samskrta Vaakyam ‘Dirgha AyushmAn bhavah’ even those with a little knowledge of Samskrtam can tell the meaning. Such simple words! Yet Periyavaa says the meaning is wrong?! The Pandits were looking at each other!

“Shall I tell it myself…..?” Maha Periyava shot the next arrow!!

The Pandits sat straight. & sharpened their ears .

“Of the twenty-seven Yogas, one is named Ayushman. Of the eleven Karanas, one is the called the Bhava. Among the week days, the Sowmya Vaasaram refers to a Wednesday. When –the Ayushman Yoga and the Bhava Karana–occur together on a Wednesday -Sowmya vasaram, , that day is said to be shlagya-very auspicious day. Therefore, if these three occur together, whatever good phalas would be got, I bless that you may get all those fruits…”

All the Vidwans got up in together and did Shashtanga namaskaram to Maha PeriyavaaL.

P.S . During the regular cycle of the Yoga, Karana & the Vaasaram, the configuration of all the three occurs once in a way & that day is considered to be very auspicious . Now this is happening on Aug26th. this year

Incidentally or coincidentally, that day is ekadasi too...



Sage of Kanchi

Sujatha Sankar
 
[h=2]ஆகஸ்டு 26,2015, புதன் கிழமை ரொம்பவும் சிலாக்கி[/h]

Dear PJ Sir

Thanks for sharing this wonderful details from Sri Kanchi Paramacharya .
 
GAYATRI MANTRA scientific meaning of Gaytri Manthra

GAYATRI MANTRA scientific meaning of Gaytri Manthra

Gayatri mantra has been bestowed the greatest importance in Vedic dharma. This mantra has also been termed as Savitri and Veda-Mata, the mother of the Vedas. The literal meaning of the mantra is:

God! You are Omnipresent, Omnipotent and Almighty.
You are all Light. You are all Knowledge and Bliss.
You are Destroyer of fear; You are Creator of this Universe,
You are the Greatest of all. We bow and meditate upon your light.
You guide our intellect in the right direction.

The mantra, however, has a great scientific import too, which somehow got lost in the literary tradition. The modern astrophysics and astronomy tell us that our Galaxy called Milky Way or Akash-Ganga contains approximately 100,000 million of stars. Each star is like our sun having its own planet system. We know that the moon moves round the earth and the earth moves round the sun along with the moon. All planets round the sun.

Each of the above bodies revolves round at its own axis as well. Our sun along with its family takes one round of the galactic centre in 22.5 crore years. All galaxies including ours are moving away at a terrific velocity of 20,000 miles per second. And now the alternative scientific meaning of the mantra step-by-step:

Om bhur bhuvah swah:

Bhur the earth, bhuvah the planets (solar family), swah the Galaxy. We observe that when an ordinary fan with a speed of 900 RPM (rotations Per minute) moves, it makes noise. Then, one can imagine, what great noise would be created when the galaxies move with a speed of 20,000 miles per second.

This is what this portion of the mantra explains that the sound produced due to the fast-moving earth, planets and galaxies is Om. The sound was heard during meditation by Rishi Vishvamitra, who mentioned it too their colleagues. All of them, then unanimously decided to call this sound Om the name of God, because this sound is available in all the three periods of time, hence it is set (permanent).

Therefore, it was the first ever-revolutionary idea to identify formless God with a specific title (form) called upadhi. Until that time, everybody recognized God as formless and nobody was prepared to accept this new idea. In the Gita also, it is said, "Omiti ekaksharam Brahma", meaning that the name of the Supreme is Om, which contains only one syllable (8/12).

This sound Om heard during samadhi was called by all the seers nada-Brahma a very great noise), but not a noise that is normally beyond a specific amplitude and limits of decibels suited to human hearing. Hence the rishis called this sound Udgith musical sound of the above, i.e., heaven.

They also noticed that the infinite mass of galaxies moving with a velocity of 20,000 miles/second was generating a kinetic energy= 1/2MV2 and this was balancing the total energy consumption of the cosmos. Hence they named it Pranavah, which means the body (vapu) or storehouse of energy (prana).

Tat savitur varenyam:

Tat that (God), savitur the sun (star), varenyam worthy of bowing or respect. Once the form of a person along with the name is known to us, we may locate the specific person. Hence the two titles (upadhi) provide the solid ground to identify the formless God, Vishvamitra suggested. He told us that we could know (realize) the unknowable formless God through the known factors, viz., sound Om and light of suns (stars).

A mathematician can solve an equation x2+y2=4; if x=2; then y can be known and so on. An engineer can measure the width of a river even by standing at the riverbank just by drawing a triangle. So was the scientific method suggested by Vishvamitra in the mantra in the next portion as under

Bhargo devasya dheemahi:

Bhargo the light, devasya of the deity, dheemahi we should meditate. The Rishi instructs us to meditate upon the available form (light of suns) to discover the formless Creator (God). Also he wants us to do Japam of the word Om (this is understood in the Mantra) . This is how the sage wants us to proceed, but there is a great problem to realize it, as the human mind is so shaky and restless that without the grace of the Supreme (Brahma) it cannot be controlled. Hence Vishvamitra suggests the way to pray Him as under.

Dhiyo yo nah prachodayat:

Dhiyo (intellect), yo (who), nah (we all), prachodayat (guide to right Direction). O God! Deploy our intellect on the right path.

Full scientific interpretation of the Mantra:

The earth (bhur), the planets (bhuvah), and the galaxies (swah) are moving at a very great velocity, the sound produced is Om, (the name of formless God.) That God (tat), who manifests Himself in the form of light of suns (savitur) is worthy of bowing / respect (varenyam). We all, therefore, should meditate (dheemahi) upon the light (bhargo) of that deity (devasya) and also do chanting of Om. May He (yo) guide in right direction (prachodayat) our (nah) intellect dhiyo

So we notice that the important points hinted in the mantra are:-

1) The total kinetic energy generated by the movement galaxies acts as an umbrella and balances the total energy consumption of the cosmos. Hence it was named as the Pranavah (body of energy). This is equal to 1/2 mv2 (Mass of galaxies x velocity)

2) Realizing the great importance of the syllable OM, the other later date religions adopted this word with a slight change in accent, viz., amen and Ameen.

3) The God could be realized through the saguna (gross), upasana (method), i.e.,
(a) by chanting the name of the supreme as OM and
(b) by meditating upon the light emitted by stars (suns).

http://www.adwaitjoshi.com/gayatrimantra.php

 
விசித்ர அம்சம் கொண்ட தேர்தல் முறை

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 123

விசித்ர அம்சம் கொண்ட தேர்தல் முறை

இம்மாதிரி ஸமாசரங்களையெல்லாம் நம்முடைய பழைய கால பெரியவர்கள் – சோழர் காலம் என்று சொன்னேனே, அப்போதிருந்த பெரியவர்கள் – யோசித்துப் பார்த்திருக்கிறார்கள். ஆனதினால், ஊர் ஸபைக்காரர்கள் ராஜாங்க அதிகாரத்தின் கீழ் நியமனமாகாமல், தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வஹிக்கும்படி ஏற்பாடு செய்ய எண்ணியபோதே, அது ஸர்வஜன வோட்டெடுப்பாக இருந்தால் ஸரிப்பட்டு வராது என்பதையும் கவனித்திருக்கிறார்கள். தகுதி நிர்ணயம் பண்ணிச் சில பேருக்கு மட்டும் வோட்டுரிமை தரலாமா என்றால், இதனாலே ஊர் ஜனங்களிடம் உயர்வு – தாழ்வு எண்ணங்கள் ஏற்பட்டு ஸமூஹத்தில் விரிசல் கண்டுவிடப் போகிறதே என்று நினைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

ஆகையால், நான் சொல்லப்போவது விசித்ரமாக இருக்கலாம், ராஜாங்க நியமனமாயுமில்லாமல், ஜனங்களில் எல்லோருமோ சிலரோ வோட் போடுவதாகவுமில்லாமலுள்ள ஒரு தேர்தல் முறையை ஏற்படுத்தினார்கள். விசித்ரம் என்று சொன்னதால் அதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உண்டாயிருக்கும். உடனேயே விசித்ரத்தைச் சொல்லி ஆர்வத்தைத் தணித்துவிடுவதில் ஸ்வாரஸ்யமில்லை. ஆகையால் இது ஸம்பந்தமான மற்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அப்புறம் இதற்கு வருகிறேன்.

சோழ வம்சம்

தமிழ்நாட்டின் சரித்ரம் இக்கால ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்ளும்படியாக ஆரம்பிக்கும் கி.மு. மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளிலேயே மூவேந்தர்கள் என்று சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் இருந்திருக்கின்றன. சங்க இலக்கியத்திலேயே பல சோழ ராஜாக்களைச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறது. புராண ரீதியாக ப்ரஸித்தி பெற்றவர்கள் திருவாரூரிலிருந்துகொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சக்ரவர்த்தி, மநுநீதிச் சோழன் முதலான ராஜாக்கள், சரித்ர பூர்வமாக ஒப்புக்கொள்ளும் பழைய சோழ அரசர்களில் கரிகாலச் சோழன், கோச்செங்கட் சோழன் முதலானோர் ப்ரஸித்தி பெற்றவர்கள். அவர்களுடைய காலத்தில் கொடிகட்டிப் பறந்த சோழ அரசு அப்புறம் நொடித்துப் போய், கி.பி.ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பல்லவ ஸாம்ராஜ்யம் விஸ்தரிப்புப் பெற்றுப் பெருமை கண்டது. மறுபடியும் ஒன்பதாம் நூற்றாண்டு மத்தியில் விஜயாலய சோழன் காலத்தில் சோழ வம்சம் தலைதூக்கி, தலைமுறைக்குத் தலைமுறை வ்ருத்தியாகி, ராஜராஜன், ராஜேந்திரன் முதலியவர்கள் ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் மிகவும் அபிவிருத்தியடைந்த மஹாஸாம்ராஜ்யமாக ஆயிற்று. இப்படி சுமார் நானூறு வருஷங்கள் இந்தப் பிற்காலச் சோழ வம்சம் புகழோடு விளங்கிற்று.

தேர்தல் குறித்த கல்வெட்டு

இவர்களில் விஜயாலயனுக்குப் பின்னால் இரண்டாம் பட்டமாக ஆட்சி நடத்திய பராந்தக சோழன் காலத்தில் நான் சொன்னபடி நடந்த தேர்தலைப் பற்றிய விவரங்கள் தெரியவந்திருக்கின்றன. ஆயிரம் வருஷத்துக்கு முந்திய (கி.பி.920-ம் வருஷத்திய) ஒரு கல்வெட்டில் இதைப்பற்றி விரிவாகவும், ஸ்வாரஸ்யமாகவும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறது. அந்தக் கல்வெட்டு காஞ்சீபுரத்துக்கு அருகே உள்ள உத்தரமேரூரில் இருக்கிறது. பேரூர் என்றும் அந்த ஊருக்கு பேர்வழங்கி வந்திருக்கிறது.

பார்லிமென்ட், ஸ்டேட் அஸெம்ப்ளிகள் மாதிரி ஒரு ராஜ்யம் முழுவதற்குமோ, அல்லது அதன் பெரிய பிரிவான மஹா மண்டலம் ஒன்றுக்கோ சட்டம் போட்டு திட்டம் போட்டு நடத்துவதற்காக ப்ரதிநிதிகளைப் பொறுக்கி எடுப்பதற்காக நடந்த தேர்தல் அல்ல, இந்த சாஸனத்தில் சொல்லப்படும் விஷயம். பல நூற்றாண்டுகளுக்கு முன் சோழ ராஜாக்களின் ஆட்சியில் அந்தந்த ஊர்க் கார்யங்களைக் கவனிப்பதற்காக, இந்த நாளில் ஸ்தல ஸ்தாபனம் (Local Body) என்று நகர ஸபைகளும் பஞ்சாயத்துக்களும் உள்ள மாதிரி ஸபைகள் இருந்திருக்கின்றன. இவற்றின் ப்ரதிநிதிகளுக்கான தேர்தல்தான் இந்த சாஸன விஷயம்.


Sage of Kanchi

Krish Ram
 
103rd Vishesha Upanyasam – honored by Periyavas

103rd Vishesha Upanyasam – honored by Periyavas


Very Proud Moment on 23rd Aug 2015 to have most of the Upanyasakars who performed various upanyasams at 102 different places were Honored by His Holiness of Kanchi Acharyas at Kachi Mutt.

visheesha_upanyasam.jpg


(103rd Visesha Upanyasam by Veda Dharma Shastra Paripalana Sabha took place on 23rd August 2015 from 3.00 PM to 5.30 PM on the occasion of “Sri Kanchi Kamakoti Peetathipathi Jagadguru Sri Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal Sathabisheka Jayanthi Mahothsavam” @ Sri Kanchi Kamakoti Peetam, Kanchipuram.)


https://mahaperiyavaa.wordpress.com/2015/08/24/103rd-vishesha-upanyasam-honored-by-periyavas/
 
பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்.

பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்...
பகவான் எப்போதும் காப்பாற்றுவார்..

வேதங்களில் பல சாகைகள் இருக்கின்றன.
சாம வேதத்தில் ஜைமினி சாகை என்றும்
தலவகார சாகை என்றும் அழைக்கப்படும்
பகுதிகள் முற்றிலும் மறைந்துவிடக் கூடிய
நிலையில் இருந்தன
.

ஸ்ரீரங்கம் ரங்கனாதர் கோவிலில் ஒரு
பணியாளர் ராஜகோபால ஐயங்கார்
என்பவர்..இருந்தார். கோவிலில் அவர் பணி
அர்த்தஜாம பூஜையில் பெருமாள் பள்ளி
அறைக்குச் செல்லும்போது, சாமவேதத்தின்
இந்தப் பகுதிகளை ஓதுவதுதான். குடும்பம்
நடத்த போதிய வருமானம் இன்மையால்
பகல் நேரத்தில் ஒரு விறகு கடையில்
கணக்கு எழுதி வந்தார்.

ஜைமினிய சாகையைக் காப்பாற்ற
வேணுமானால்..ராஜகோபால ஐயங்காரைக்
காப்பாற்றியாக வேண்டும்.

அவரையே ஆசிரியராக்கி ,போதுமான
சம்பளம் கொடுத்து 1963ல் பாடசாலை
ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்
அவரது சிஷ்யர் மகரபூஷணம் அவர்கள்
பாடசாலையை நடத்தி வருகிறர்கள்.

இதுவரை மஹாராஷ்ட் ரத்தைச் சேர்ந்த
சிஷ்யர்கள் உட்பட 20பேருக்கு மேற்பட்டவர்கள்
நல்ல முறையில் தேர்ச்சி பெற்று வித்வான்களாகி
உள்ளார்கள்.

ஸ்ரீமகரபூஷணத்துக்கு திருப்பதி தெவஸ்தானத்திலிருந்து
அழைப்பு வந்தது. ஜைமினீயசாகையை பதிவு
செய்து கொள்வதற்காக.

மகரபூஷணம் பெரியவாளிடம் ஓடி வந்தார்.
''நான் என்ன செய்யணும்ன்னு உத்தரவாகணும்''..
''உன் அபிப்ராயம் என்ன என்று சொல்லு''..
டேப் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை..
''ஆனால் திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அழைப்பு
வந்தததால் பெரியவாளிடம் தெரிவிக்க வந்தேன்''..

வேதத்தை நாடாப் பதிவு செய்வதை பெரியவா
எப்போது ஏற்றதில்லை. நாடாப் பதிவினால் ஏற்படும்
தீமைகளை மகரபூஷணத்திற்கு விளக்கினார்கள்.
மகர பூஷணத்துக்கு பெரியவா வாக்கு பெருமாள்
வாக்கு.

அவர் வேதக் குரல் பதிவாகவில்லை.''அரங்கன் கேட்டு
மகிழ்ந்தாலே போதும் என்ற முதிர்ச்சி!

மகர பூஷணத்துக்கு அமெரிக்காவிலிருந்தும்
அழைப்பு வந்தது.போனால் சில லகரங்களுடன்
வரலாம்.. விவகாரங்களும் வரலாம்...

''நான் போகப்போவதில்லை என தெண்டம் சமர்ப்பித்தார்...
''சரி.. பணம் கொஞ்ச நாள் காப்பாற்றும்.. பகவான்
எப்போதும் காப்பாற்றுவார்...''

இது பெரியவாளின் வாக்கு...
எம் .சுப்பராம சர்மாவின் அனுபவம்..

ஜய ஜய சங்கரா....



Sage of Kanchi

Saraswathi Thyagarajan
 
ராஜ்யப் பிரிவுகள்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 124

ராஜ்யப் பிரிவுகள்

சோழ ராஜ்யத்தைப் பல administrative division-களாக (நிர்வாஹப் பிரிவுகளாக)ப் பிரித்திருந்தார்கள் தற்போதைய ஜில்லா, தாலுகா, ஃபிர்க்கா முதலானவற்றைப் போல். இப்போதுள்ள பிரிவினைகளின் பெயர்களிலிருந்தே இவை துருக்கர் ஆட்சியில் ஏற்பட்டவை என்று தெரிகிறது. அப்புறம் வெள்ளைக்காரர் ஆட்சியில் இவை மேலும் திட்டமாக வரையறுக்கப்பட்டன. ஆனால் இதற்கெல்லாம் ரொம்ப முந்தியும் நம் நாட்டில் இப்படி ராஜ்யத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். அதில் சோழராட்சியில் நாட்டின் மிகப் பெரிய பிரிவு ‘மண்டலம்’ எனப்படும். அப்புறம் ஒரு மண்டலத்துக்குள் ஒவ்வொன்றும் பதினெட்டு ஊர் கொண்டதாக ‘வயநாடுகள்’ என்ற பிரிவினை வளநாட்டுக்குள்ளே கூற்றம், கோட்டட்ம என்று போய் முடிவிலே ஊர். ஊர் என்பது பெரும்பாலும் க்ராமமே. வர்த்தகத்தைவிட வ்யவஸாயமே (விவசாயமே) அதிகம் நடந்த அக்காலத்தில் நகரங்கள் என்னும் டவுன்கள் குறைச்சல். அவற்றைவிட க்ராமங்களே சிறப்பாக விளங்கின. உத்தரமேரூர்கூட அப்படிப்பட்ட க்ராமம்தான். க்ராமம் என்றால் ரொம்ப சின்னது என்று நினைக்க வேண்டாம். இப்போது நாம் ஊர் ஸபைத் தேர்தலில் ‘வார்ட்’ என்று சொல்கிற பிரிவுபோல் முப்பத்திரண்டு கொண்ட அளவுக்கு உத்தரமேரூர் விஸ்தாரமாக இருந்திருப்பதாக சிலா சாஸனத்திலிருந்து தெரிகிறது.

இப்படிப்பட்ட ஒரு ஊர் அல்லது க்ராமத்தில் முன்னே சொன்ன வேதகாலச் ச்ரேணியின் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும், அதாவது தொழிற்பிரிவுக்கும், ஒரு நாட்டாண்டை இருந்தது. இவற்றிலே வ்யாபாரிகளுடைய வ்யவஹாரங்களை அவர்களே கவனித்துக்கொண்ட அமைப்புக்குத்தான் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் “நகரம்” என்று பெயர். அதனால்தான் ராமநாதபுர ஜில்லாவில் வ்யாபார வைச்ய ஸமூஹமே முன்னணியில் இருப்பதான நாட்டுக்கோட்டைப் பகுதியினால் அவர்களுக்கு “நகரத்தார்” என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது. இதேபோல “ஸபை” என்று வெறுமே சொன்னால் அது தமிழ் தேசத்தில் ப்ராம்மணர்கள் தங்கள் ஸமாசாரங்களை விவாதித்து முடிவுசெய்து கொண்ட ஸபைதான். இப்படித் தனிப்பட்ட ஒரு ஜாதிக்காக இல்லாமல் ஊர்முழுவதுன் பொது விஷயங்களையும் கவனித்து, அதன் வ்யவஸாயம், நீர்ப்பாசனம் முதலியவற்றை நிர்வஹித்த ஸ்தலஸ்தாபனத்துக்கே “ஊர்” என்று பெயர் இருந்தது. இதில் எல்லா ஜாதியினரும் அங்கம் வஹிப்பார்கள். இதை ஊர்ச்சபை, க்ராமஸபை, க்ராமமஹாஸபை என்றெல்லாமும் சொல்வதுண்டு. அப்படிப்ட்ட உத்தரமேரூர் க்ராம மஹாசபைக்கு எப்படித் தேர்தல் நடந்தது என்பதைத்தான் இரண்டு சிலா சாஸனங்கள் தெரிவிக்கின்றன.

க்ராம ஸபையின் அமைப்பு

இந்த நாளில் ஊரை ‘வார்ட்’ என்று பல பிரிவுகளாகப் பிரித்திருக்கிறமாதிரி அப்போது ஒவ்வொரு ஊரையும் (கிராமத்தையும்) பல ‘குடும்பு’களாகப் பிரித்திருக்கிறார்கள். உத்தரமேரூர் கல்வெட்டுக்குச் சுமார் ஐம்பது வருஷம் முந்தியதும், செந்தலை என்கிற சந்த்ரலேகா சதுர்வேதி மங்கலம் என்ற ஊரிலிருள்ளதுமான முதலாம் ஆதித்ய சோழனின் கல்வெட்டிலேயே அந்த ஊரைக் ‘குடும்பு’கள் என்ற வார்டுகளாகப் பிரித்திருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு ப்ரதிநிதி கொண்டதாக க்ராம மஹாஸபை அமைக்கப்பட்டிருந்தது. மேற்படி ப்ரதிநிதிகள், அதாவது ஊர்ச்சபையின் அங்கத்தினர்கள்தான் ராஜாவாலோ, அல்லது ராஜாங்க அதிகாரியாலோ அல்லது அதிகாரக் குழுவாலோ நியமிக்கப்படாமல், தேர்தல் மூலமாகப் பொறுக்கி எடுக்கப்பட்டுப்பதவிக்கு வந்தனர். அதாவது – இதுதான் முக்யமான அம்சம் – ஊராட்சி ஸபையின் மெம்பர்ஷிப் பாரம்பர்யமாகவோ, அல்லது ராஜாங்க நியமனமாகவோ (கவர்ன்மென்ட் அப்பாயின்ட்மென்டாகவோ) இல்லை. மணியம் மாதிரி அப்பா – பிள்ளை என்று தலைமுறை தத்துவமாக இல்லை. Hereditary appointment இல்லை, nominated appointment -ம் இல்லை, Elected appointment . இதை ஒரு விதத்தில் ஜனங்களே எலெக்ட் செய்வதாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். வோட்டுச் சீட்டு மாதிரியே ஒன்றை அநுஸரித்து இந்தத் தேர்தல் நடந்தது என்பது இதில் இன்னொரு ஸாரமான அம்சம். ஆனாலும் வோட்டர்கள் என்று பல பேர் தலைக்கு ஒரு வோட்டுப் போட்டு நடந்த தேர்தல் அல்ல. பின்னே அது என்ன, எப்படி நடந்தது என்று பின்னால் சொல்கிறேன். காக்க வைத்துச் சொல்வதில்தான் ருசி அதிகம்.

கல்வெட்டைப் பற்றிய விவரம்

இப்படி ஊர் ஸபையின் அங்கத்தினர்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்பதைக் காஞ்சீபுரத்துத்து அருகிலுள்ள உத்தரமேரூரில் உள்ள சாஸனத்தால் மட்டுமின்றி, தெற்கு ஜில்லாகளிலுள்ள வேறே பல செப்பேடுகளிலிருந்தும் கல்வெட்டுக்களிலிருந்தும் தெரிந்து கொள்கிறோம்.

மாயவரம் தாலுகாவின் தலைஞாயிறு என்று (க்ராமம்) இருக்கிறது. அங்கே “குற்றம் பொறுத்தீச்வரர்” என்ற கருணை பெயர் கொண்ட சிவன் கோயில் இருக்கிறது. தனிவாழ்க்கையில் தனி மநுஷன் குற்றத்தைத்தான் பொறுக்கும்படி பகவானிடம் வேண்டலாம். பொதுவாழ்க்கையில் குற்றமில்லாமல் அப்பழுக்காகத்தான் ஒழுகணும்’ என்று காட்டுகிற மாதிரி இந்தக் கோவிலிலேயே ஊராட்சி பற்றி ஒரு சோழர் காலக் கல்வெட்டு இருக்கிறது. இத்தனை வயஸுக்கு மேலே ஆனவர்கள், இதற்கு முந்தி இத்தனை வருஷகாலம் ஊர்ஸபையில் அங்கம் வகிக்காதவர்கள், வேறே தன் உறவுக்காரர்கள் யாரும் ஊர்ஸபையில் இத்தனை வருஷத்துக்கு முந்திவரை மெம்பராயில்லாதவர்கள் ஆகியவர்களைத்தான் ‘எலெக்ட்’ செய்யலாமென்று இந்தக் கல்வெட்டிலிருப்பது, ஏறக்குறைய உத்தரமேரூர் “பாணியிலேயே இருக்கிறது.

சிலாசாஸனமும் (கல்வெட்டும்) , தாம்ர சாஸனமுமாக (செப்பேடுமாக) உத்தம சோழன், ஸுந்தர சோழன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்த்ரன், முதலாம் குலோத்துங்கன் என்று பல பேர் காலத்தியதாக ஊராட்சி விஷயங்களைச் சொல்பவை பல இருக்கின்றன. “அன்பில் plates”, “Leyden plates” என்று இவற்றில் இருப்பதிலும் இந்த விஷயங்கள் வருகின்றன. ஆனாலும் முக்யமாக, exhaustive ஆக (முழு விவரமும் தருவதாக) இருப்பது உத்தரமேரூர் சாஸனந்தான்.

ஸரியாகச் சொன்னால் உத்தரமேரூரிலேயே இரண்டு சாஸனங்கள் இருக்கின்றன. முதலில் ஒன்றும், அப்புறம் இரண்டு வருஷங்களுக்குப் பின்னால் இன்னொன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் அங்குக் காணப்படுகின்றன. முதல் கல்வெட்டு சுருக்கமாக இருக்கிறது. பிந்தையதுதான் விவரமாக இருப்பது. அதுதான் அதிக ப்ரஸித்தி அடைந்தது. நான் அதிலுள்ள விஷயங்களைத்தான் இப்போது சொல்ல இருக்கிறேன். ஏனைய கல்வெட்டுக்களில் கொஞ்சம் கொஞ்சம் தெரிகிற விஷயங்களைப் பூர்த்தியாகக் கொடுப்பது பராந்தக சோழன் காலத்திய இரண்டாம் கல்வெட்டுத்தான். (கி.பி.920-ம் வருஷத்தியது.)

ஓர் ஊரில் பொதுக் கார்யங்களில் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தால், முறையின்மை நடந்திருப்பதாகத் தெரிந்தால், அதை விசாரித்து நிவ்ருத்தி செய்வதற்காகச் சோழராஜா (எந்த அரசனுமே) தகுந்த அதிகாரிகளை அனுப்பி வைப்பான். இப்படி ஆயிரம் வருஷத்துக்கு முந்தி ‘பராந்தகன்’ என்று நாம் சுருக்கமாக சொல்லும் வீர நாராயண பராந்தக தேவ பரகேஸரி வர்ம சோழ மஹாராஜா, தத்தனூர் மூவேந்த வேளாண் என்னும் அதிகாரியை ஒரு தடவையும், அதற்கு இரண்டு வருஷங்களுக்கு அப்புறம் ஸ்ரீ வங்கநகர் ஸோமாசி க்ரமவித்தபட்டன் என்னும் அதிகாரியை இன்னொரு தடவையும் உத்தரமேரூருக்கு அனுப்பித் தேர்தல் முறைகளைச் சீர்ப்படுத்தியிருக்கிறான். இந்த இருவரும் மேற்பார்த்துச் செய்த ஏற்பாடுகளைத்தான் முறையே அந்த இரண்டு உத்தரமேரூர் சாஸனங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஊர்ப் பரிபாலன ஸபையார் கூடி வகுத்துக் கொண்டே தேர்தல் விதிகளை இந்த அதிகாரிகள் ஸூபர்வைஸ் செய்து அதிகார பூர்வமாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.



Sage of Kanchi

Krish Ram
 
மூளையும் ஹ்ருதயமும்

மூளையும் ஹ்ருதயமும்- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

மூளைக்குத் தெரிகிறது வேறே; அதற்கும் ஆதாரமான உயிருக்குத் தெரிகிறது வேறே. கோட்டான் கண்ணுக்கு வஸ்துக்கள் ராத்திரியில்தான் தெரிகிறது. பகலில் அதற்கு எதுவும் தெரிவதில்லை. மநுஷக் கண்ணுக்குப் பகலில்தான் தெரிகிறது. ராத்திரியில் தெரிவதில்லை. மூளைக்கு அநுபவம் தெரிவதில்லை. அதற்குத் தர்க்கத்தையொட்டி விசாரிக்கிற அறிவு வாதம்தான் தெரியும். அநுபவம் தெரிகிற ஹ்ரு தயத்துக்கு அறிவு வாதம் தெரிவதில்லை. ஜீவனின் ஸார ஸத்யமான உயிரைத்தான் ஹ்ருதயம் என்பது. ஆனாலும் ஹ்ருதயம் லேசில் திறந்து கொள்வதில்லை. எதனாலோ மநுஷ்யர்களுக்கு மூளைப் பெருமையையே பெரிசாக வைத்திருக்கிறது. அதனால் எதுவுமே முதலில் புத்தியில், மூளையில் உறைத்தாக வேண்டியிருக்கிறது.


ஹ்ருதயமே அநுபவிக்கவேண்டிய ஆத்யாத்மிக விஷயங்களைக் கூட மூளை ஸரியாயிருக்குமா, இருக்காதா என்று எடை போட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறது. ஸரியாயிருப்பதாக அது முடிவு பண்ணினால் அதற்கப்புறமே, இப்படி நாம் அறிவினால் முடிவு பண்ணினது போதாது. இதனால் அந்த விஷயத்தின் லக்ஷ்ய மான ப்ரயோஜனம் நமக்குக் கிடைத்துவிட வில்லை.

உதாரணமாக, ஆத்மா ஸச்சிதாநந்த ஸ்வரூபமாகத்தான் இருக்க வேண்டுமென்று இத்தனை வேதாந்த புஸ்தகங்களைப் படித்து, குரு உபதேசங்களைக் கேட்டு புத்தியினால் புரிந்துகொண்டபோதிலும் நமக்கும் ஸத்தும் தெரியலை, சித்தும் தெரியலை, ஆனந்தமும் தெரியலை. அசடு மாதிரி துக்கப்பட்டுக் கொண்டுதான் கிடக்கிறோம்.


அதனால் புத்திக்குள் போனதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை ஹ்ருதயத்துக்குள் இறக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். மூளை, தான் பண்ண வேண்டியதையெல்லாம் பண்ணியும் ஸாரமான ப்ரயோஜனத்தை அடைய முடியாமல் களைத்து விழுந்த அப்புறம் தான் ஹ்ருதயத்தைத் திறந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் பிறக்கிறது. இது மநுஷ்ய ஜீவனுக்குத் தன்னுடைய மூளை விசேஷத்தினால் உண்டான விபரீதமான பலன்!

அவ்வளவாக புத்தி போதாமலிருக்கிற எளிய ஜீவன்களைவிட புத்திமான்களுக்குத்தான் இதன் கஷ்டம் ஜாஸ்தியாக ஏற்படுகிறது. அவர்கள் (எளிய ஜீவர்கள்) புத்தியால் குடையாமல், ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ’புத்திசாலி’ களான நாம்தான் திண்டாடுகிறோம். ஏதோ சில ஸமயத்தில் நமக்கும் ‘இதையெல்லாம் நம்முடைய மூளையால் எடை போட்டுத் தீர்மானம் பண்ணிவிட முடியாது’ என்று தோன்றுகிறது. எல்லாம் நம்முடைய மூளையின் ஜூரிஸ்டிக்ஷனுக்குள் (ஆணையெல்லைக்குள்) வந்து விட முடியுமா என்று தோன்றுகிறது.


புத்திக்குள் போனதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை ஹ்ருதயத்துக்குள் இறக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். மூளை, தான் பண்ண வேண்டியதையெல்லாம் பண்ணியும் ஸாரமான ப்ரயோஜனத்தை அடைய முடியாமல் களைத்து விழுந்த அப்புறம் தான் ஹ்ருதயத்தைத் திறந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் பிறக்கிறது. இது மநுஷ்ய ஜீவனுக்குத் தன்னுடைய மூளை விசேஷத்தினால் உண்டான விபரீதமான பலன்!

அவ்வளவாக புத்தி போதாமலிருக்கிற எளிய ஜீவன்களைவிட புத்திமான்களுக்குத்தான் இதன் கஷ்டம் ஜாஸ்தியாக ஏற்படுகிறது. அவர்கள் (எளிய ஜீவர்கள்) புத்தியால் குடையாமல், ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ’புத்திசாலி’ களான நாம்தான் திண்டாடுகிறோம்.


ஏதோ சில ஸமயத்தில் நமக்கும் ‘இதையெல்லாம் நம்முடைய மூளையால் எடை போட்டுத் தீர்மானம் பண்ணிவிட முடியாது’ என்று தோன்றுகிறது. எல்லாம் நம்முடைய மூளையின் ஜூரிஸ்டிக்ஷனுக்குள் (ஆணையெல்லைக்குள்) வந்து விட முடியுமா என்று தோன்றுகிறது.



Sage of Kanchi

Krishnamoorthi Balasubramanian
 
தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய'

தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய'

(.பெரியவாளின் அற்புத விளக்கம்-எதேச்சையாக இன்று
26-08-2015 அமைந்திருக்கு)

(இன்று ஒரு பஞ்சாங்கத்தில் (திருக்)

புதன், 26 ஆகஸ்ட் 2015
.
யோகம் : ஆயுஷ்மான் -28:47+ வரை
முதல் கரணம் : பத்திரை - 11:40 வரை
இரண்டாவது கரணம் : பவம் - 22:41 வரை)

11-40க்குப் பிறகு எல்லாம் சேர்ந்திருக்கு இன்று

.
.

சொன்னவர்; பிரும்மஸ்ரீ

ராமகிருஷ்ண தீக்ஷிதர்
......................ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

பல வருஷங்களுக்கு முந்தைய செய்தி,

பெரியவா தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த
சமயத்தில், நாலைந்து வித்வான்கள் -தரிசனத்துக்காக
வந்தவர்கள் - உட்கார்ந்திருந்தார்கள்.

பேச்சு வாக்கில், "பக்தர்கள் நமஸ்காரம் பண்ணினால்
நான், 'நாராயண,நாராயண' என்று சொல்லி
ஆசீர்வதிக்கிறேன். சம்சாரிகளான நீங்கள் என்ன சொல்லி வாழ்த்துகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

"தீர்காயுஷ்மாந் பவ, சௌம்ய" என்று சொல்லுகிறோம்.
அதுதான் வழக்கம்.

"அதற்கு என்ன அர்த்தம்?"

"நீண்ட நாட்கள் சௌக்கியமா இரு - என்று அர்த்தம்."

அங்கிருந்த வித்வான்கள் எல்லோரையும் தனித்தனியே
கேட்டார்கள் பெரியவா. எல்லோரும் அதே அர்த்தத்தைச்
சொன்னார்கள்.

பெரியவா சில நிமிஷங்கள் மௌனமாக இருந்தார்கள்.
பின்னர் " நீங்கள் அத்தனை பேரும் சொன்னது
தவறான அர்த்தம்" என்றார்கள்.

பண்டிதர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.! எல்லோரும்
படே,படே வித்வான்கள்,'சிரோமணி' பெற்றவர்கள்.

"தீர்காயுஷ்மாந் பவ சௌம்ய' என்ற சாதாரண சம்ஸ்க்ருத வாக்கியத்துக்கு, ஓரளவு வடமொழி பயின்றவர்களே கூடப் பொருள் சொல்லிவிட ம்முடியும்.அவ்வளவு எளிமையான
சொற்கள்! 'தவறு' என்கிறார்களே, பெரியவா?

"நானே சொல்லிவிடட்டுமா?"

பண்டிதர்கள் செவிகளைத் தீட்டிக் கொண்டார்கள்.

"இருபத்தேழு யோகங்களில் ஒன்றின் பெயர்
..ஆயுஷ்மான்.பதினோரு கரணங்களில்.
..பவ என்று ஒரு கரணம். வார நாட்களில்
..சௌம்ய வாஸரம்.- புதன் கிழமை வருகிறது.
..இந்த மூன்றும்- புதன்கிழமையில்
...ஆயுஷ்மான் யோகமும் பவகரணமும் சேர்ந்து வந்தால்
...அந்த நாள் ரொம்பவும் சிலாக்கியமாகச் சொல்லப்பட்டிருக்கு.

...வேகமா விருத்தி ஏற்படும்னு சொல்லுவா.
...அதனாலே, இந்த மூணும் கூடி வந்தால் என்னென்ன
...நல்ல பலன்கள் கிடைக்குமோ, அதெல்லாம் உனக்குக்
...கிடைக்கட்டும் என்று ஆசீர்வாதம் பண்றேன்...."

வித்வான்கள் அத்தனை பேரும் ஒன்றாக எழுந்து
பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.

நாலைந்து சிரோமணிகள், ஐந்தாறு வித்யா வாசஸ்பதிகள் பட்டம் பெற்றவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டு வந்த வாக்கியத்துக்கு எவ்வளவு புஷ்டியான, ஆழமான பொருளைக் காட்டிக் கொடுத்துவிட்டது இந்த

'"தீர்காயுஷ்மந் பவ சௌம்ய'



Sage of Kanchi

Varagooran Narayanan
 
Mata Sri Maha Varalakshmi - Namo Namahah

Mata Sri Maha Varalakshmi - Namo Namahah

11952050_1039821042717780_3887987321516754535_n.jpg



Blessings Of Matah Sri Maha Varalakshmi shower on all of us Varalakshmi Vratam is an important pooja performed by many women in many states especially in states of Andhra Pradesh and Karnataka and some parts of Tamil Nadu.

The Hindu festival going by the name 'Vara Lakshmi Vrata' is celebrated on the last Friday of the bright fortnight in the month of Ashadha, also called Adi, (However this year it is in Avanai) rwhich corresponds to the English months of July-August.

Significance

Eight forces or energies are recognised and they are known as Sri (Wealth), Bhu (Earth), Sarasvati (learning), Priti (love), Kirti (Fame), Santi (Peace), Tushti(Pleasure) and Pushti(Strength).

Each one of these forces is called a Lakshmi and all the eight forces are called the Ashta Lakshmis or the eight Lakshmis of the Hindus. Vishnu is also called Ashta Lakshmi Padhi which is equivalent to saying that he is the asylum for the eight-Lakshmis or forces.

In fact, Vishnu representing the preservative aspect of the universe, radiates these forces from him.

These forces are personified and worshipped as Lakshmis, since abstract force is beyond the comprehension of the ordinary people.

As health, wealth and prosperity depend upon the rythmic play of these forces, the worship of Lakshmi is said to be to obtain these three. Only a woman can sympathise with women. Lakshmi is a woman. So she will more readily sympathise with women.

This festival is observed by women, seeking blessings of Lakshmi on them , their husbands and their children.

Legend

As the legend goes, this is a pooja that was pronounced by no other than Lord Parameswara to be performed by his consort Parvathi to seek prosperity and happiness for the family. Thus it came to be mulated by married women who sought boons (varam) for the health, wealth and knowledge for the entire family. In some cases, women prayed for being blessed with children. The prescribed day for the pooja is the Friday of the month of Sravan in the fortnight known as Sukla paksha, preceding the full moon day.

Story

On one occasion, Parvati and Parameswara were engaged in a game of chess. Parvati was winning game after game, but Parameswara is said to have claimed the victory at each games, wantonly, to her intense chagrin.

So Parvati wanted to have an umpire and one Chitranemi, a creation of Parameswara, was chosen. As an underling of Parameswara, he sided with him most unjustly.

This provoked Parvati's anger and she cursed Chitranemi that he should become a leper for discharging his duty in most unfair manner.

When Chitranemi begged Parvati's forgiveness and Parameswara added his entreaties to it, she is said to have relented and modified the curse by adding that he would be cured of his leprosy by observing the Vara Lakshmi Vrata.

By doing this Chitranemi was, it is said, rid of the loathsome disease.
The history of the origin Of the Vara Lakshmi Vrata is rather interesting.

Lakshmi is said to have visited a pious woman by name Sarmadi, living in the city of Kuntinapura in Magadha (Bihar), in in one of her dreams and expressed her satisfaction at her devotion to her children.

When she woke UP from her sleep, she took a bath and worshipped Lakshmi to ensure her blessings.

When the other ladies heard of her dream and her worship of Lakshmi, they too began to worship her, and the custom is then said to have spread everywhere throughout the land in course of time.

History

In the kingdom of Magadha of yore, there lived a brahmin woman called Charumathi in a town named Kundina. The prosperous town was the home of Charumathi and her husband. She devotedly served her husband and her parents-in-law. Impressed by her piety, Goddess Mahalakshmi appeared in her dream and asked her to worship Vara-Lakshmi (literally, boon granting - goddess of wealth) and seek to fulfill her wishes.

Varalakshmi is yet another form of Lord Vishnu's consort, Lakshmi, the goddess of wealth. Thus was prescribed the Friday of Sravana month preceding the full moon day for the worship.

When Charumathi explained her dream to her family, she found them encouraging her to perform the pooja. Many other women of the town also joined her in performing the pooja in a traditional way
and offered many sweet dishes to the Goddess Varalakshmi. They prayed with deep devotion:

"Padmaasane Padmakare sarva lokaika poojithe
Narayana priyadevi supreethaa bhava sarvada"

The well dressed women made offerings of delicious feast with utmost devotion. As they went round the deity in prayer, dazzling jewelry is said to have appeared as ornaments on the bodies of these worshipers and their houses filled with riches.

They rewarded the priest who assisted them in performing the pooja and they all partook in the feast. The women expressed their gratitude to Charumathi who shared her dream and helped them become prosperous. This pooja came to be practiced year after year by women. Done with devotion, it is said that boons would be granted and thus many wishes would be realized.

This pooja can be done with no restriction to caste or creed. To this day, the faithful of modern times observe this tradition.

Matah Sri Maha Varalakshmi Bless us all with Happiness, Health, Wealth, Wisdom, Knowledge, Success, Name, Fame, Victory, Joy, Cheers, Safety and Peaceful Happy Long Life.



Sage of Kanchi

Jambunatha Iyer
 
சிவ நாம மஹிமை

தெய்வத்தின் குரல்....
சிவ நாம மஹிமை

நம்மிடத்தில் ஒரு விலையுயர்ந்த ரத்னம் இருந்தால் அதை காபந்தாக இரும்பு பெட்டியில் வைத்துப் பாதுகாப்போம்.

அதேபோல வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வண வேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாம வேதங்கள் மூன்றையும்'த்ரயீ' என்பார்கள்.

அப்போதும் ரிக் மற்றும் ஸாம வேதங்களுக்கு நடுவில் இருக்கிறது யஜுஸ். இந்த யஜுர் வேதம் 'சுக்ல, க்ருஷ்ண' என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வணம் என்கிற 5 பகுதிகளின் மத்தியில் வருவது 'க்ருஷ்ண யஜுஸ்'.

இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் என்பது அதன் நாலாவது காண்டம். அந்த காண்டத்தின் மத்தியில் வருவது ஐந்தாம் ப்ரச்னம், இங்கே தான் வருகிறது ஸ்ரீ ருத்ரம்.

இந்த ருத்ரத்தின் நடுநாயகமாக வருவதே பஞ்சாக்ஷரம், அதன் நடுநாயகமாக வருவதே த்வயக்ஷரமான 'சிவ'.

ஜெய_ஜெய_சங்கர !



Sage of Kanchi

Jaykay Jawahar Kannan
 
அந்தண – வேளாள அதிகாரிகள்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 125

அந்தண – வேளாள அதிகாரிகள்

இந்த இரண்டு அதிகாரிகளில் வேளான் என்பவன் வேளாளர் ஜாதி என்று சொல்லாமலே புரியும். ‘ஸோமாசி’, ‘க்ரமவித்தன்’, ‘பட்டன்’ என்கிற மூன்று வார்த்தையுமே ப்ராம்மண ஜாதியைக் குறிப்பிடுபவைதான். ஸோமாசி என்றால் பக்ஷணம் இல்லை. ஸோமயாகம் செய்த ஸோமயாஜி’தான் தமிழில் ‘ஸோமாசி’ ஆனது ஸுந்தர மூர்த்தி நாயனார் சரித்ரத்தில் ‘சோமாசி மார நாயனார்’ என்று ஒருத்தர் வருகிறார். அறுபத்துமூவரில் ஒருத்தர் அவர்.

க்ரமவித்தன் என்றால் என்ன? எழுதி வைக்காமலே காதால் கேட்டுப் பாடம் பண்ணவேண்டியதான வேதத்தின் வாசகங்களில் கொஞ்சங்கூடத் தப்பு வரப்படாது. அப்படி வந்தால் மந்த்ர சக்தியே பாதிக்கப்படும் என்பதால் அவற்றின் பதங்களைப் பலவிதங்களில் ஒன்றோடு ஒன்று கூட்டியும், முன்பின்னாக மாற்றியும் சொல்லிக் கொடுத்து, ‘இதுதான் மூலரூபம்’ என்று ஆணி அடித்ததுபோல் நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடுகளை ரிஷிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி வேத அக்ஷரங்களைப் பல தினுசாக மாற்றிச் சொல்வதில் வர்ணம், க்ரமம், ஜடை, கனம் என்று பலமுறைகள் உண்டு. ‘கணம்’ தான் கடைசி ரொம்ப நுணுக்கமாகப் பதங்களைக் கோத்து வாங்கினது. ‘கனபாடி’ என்று கேள்விப்படுகிறோமே, ‘கனம்’ வரையில் பாடம் தெரிந்தவர்தான் கனபாடி. ‘ஜடாவல்லபர்’ என்றால் ‘ஜடை’யில் தேர்ச்சி பெற்றவர். இப்படியே க்ரமம்வரை அத்யயனம் பண்ணினவன் ‘க்ரமவித்’ தமிழில் க்ரமவித்தன்’, மூவேந்தர்களின் அநேகக் கல்வெட்டுக்களில் பல க்ரமவித்தர்’களின் பெயர் காணப்படுவதிலிருந்து தமிழ் நாட்டில் அப்போது ஏராளமாக வேத அத்யயனம் பண்ணின ப்ராம்ணர்கள் இருந்ததாகத் தெரிகிறது.


‘பட்டர்’ என்பதும் ‘அய்யர்’, ‘சாஸ்த்ரி’, ‘சர்மா’ என்ற மாதிரி அக்காலத்தில் ப்ராம்மணன் ‘சர்மா’ என்றும், க்ஷத்ரியன் ‘வர்மா’ என்றும், வைச்யன் ‘குப்தா’ என்றும், நாலாம் வர்ணத்தவன் ‘தாஸ’ என்றும் போட்டுக் கொள்ளவேண்டும். ஆனாலும் பூர்வகாலத்தில் ப்ராம்மணனை ‘பட்டன்’ என்று குறிப்பிடுவதே அதிகம் வழக்கத்திலிருந்திருக்கிறது. மஹாராஷ்ட்ர பட்டோஜி, மங்களூர் பட், பெங்காலி பட்டாசார்யா எல்லாரும் பட்டர்களான ப்ராம்மணர்கள்தாம்.

நாலாம் வர்ணத்தைச் சேர்ந்த வேளான், முதல் வர்ணத்தைச் சேர்ந்த பட்டன் இருவரும் முக்ய அதிகாரிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.

வேட்பாளரின் யோக்யாதாம்சங்கள்

உத்தரமேரூர் கல்வெட்டுக்களிலிருந்து, ஊர் ஸபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அபேக்ஷகருக்கு அநேக யோக்யதாம்சங்கள் நிர்ணயிக்கப் பட்டிருப்பதைத் தெரிந்துகொள்கிறோம். அபேக்ஷகரின் ‘க்வாலிஃபிகேஷ’னுக்கு ஒரு லிஸ்டே கொடுத்திருக்கிறது. அந்நாளில் ஊர் ஸபை அங்கத்தினருக்குத் தேவைப்பட்ட அந்தத் தகுதிகள் என்னவென்றால் –

1. அவன் தீர்வை செலுத்தும் கால் வேலி நிலமாவது உடையவனாக இருக்க வேண்டும். (“கானிலத்துக்கு மேல் இறை நிலமுடையான்” என்பது சாஸன வாசகம். இறை என்பதுதான் வரி, அதாவது நிலத்துக்குத் தரும் தீர்வை.)

2. தன்னுடைய ஸொந்த மனையில் வீடு கட்டிக் கொண்டவனாயிருக்க வேண்டும். (“தன் மனையிலே அகமெடுத்துக் கொண்டிருப்பான்.”)

3. அறுபது வயஸுக்கு அதிகமானவனாகவும், முப்பது வயஸுக்கு குறைந்தவனாகவும் இருக்கப்படாது என்று முதல் கல்வெட்டு சொல்கிறது. இரண்டு வருஷம் கழித்து அதை ‘ரிவைஸ்’ செய்த இரண்டாம் கல்வெட்டு, அறுபது என்பதை எழுபது என்றும், முப்பது என்பதை முப்பத்தைந்து என்றும் உயர்த்தி நிர்ணயம் செய்திருக்கிறது. “அறுபது பிராயத்துக் கீழ் முப்பது பிராயத்துக்கு மேற்பட்டார்” என்று முதலில் இருந்ததை “எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்பட்டார்” என்று மாற்றி வயஸு நிர்ணயம் செய்திருக்கிறது.

இதிலிருந்து தெரிகிற இன்னொரு விஷயம், ஏதோ ஒரு ரூல் போட்டுவிட்டால் அதையேதான் புனராலோசனை செய்து அதை இன்னும் சீர்படுத்தமுடியுமென்று தெரிகிறபோது ‘அமென்ட்மென்ட்’டும் (சட்டத் திருத்தமும்) கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது.

திருத்தக் கூடிய விதிகளும் – திருத்தக் கூடாத விதிகளும்

அமென்ட்மென்டைப் பற்றிச் சொல்லும்போது இன்னொன்று கவனிக்கவேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் நல்லவர்களாக, ஸ்வய நலம் அல்லது ஸ்வய ஜாதி அல்லது ஸ்வய கட்சி நலமில்லாமல் தேச நலனையே கருதுபவர்களாக இருக்கப்பட்டவர்கள் போடும் ரூல் (விதி) களையும் ‘லா’க்களையும் (சட்டங்களையும்) பிற்பாடு அப்படியில்லாதவர்கள் ஸ்வய நலனுக்காக மாற்றி அமென்ட் செய்கிற ஆபத்தும் இருக்கிறது.

இவ்விஷயமாகப் பழைய காலத்தில் இருந்த உத்தமமான அம்சம் என்ன என்றால், அடிப்படையாக நம்முடைய ராஜ்யங்கள் எல்லாவற்றுக்குமே தர்ம சாஸ்த்ரம்தான் கான்ஸ்டிட்யூஷன் (அரசியல் நிர்ணயச் சட்டம்) மாதிரி இருந்ததாகும். இருக்கப்பட்ட அநேக தர்ம சாஸ்த்ரங்களில் எல்லா விஷயங்களையும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் விவரிக்கும் மநுதர்ம சாஸ்திரத்தைத்தான் எந்த அரசனும் பின்பற்றியதாக அவனைப் பற்றிய ப்ரசஸ்திகளிலும் (சாஸன வாயிலாக) , மற்ற இலக்கியம், காவியம் முதலானவற்றிலும் காணப்படுகிறது. “மநுநீதி வழுவாது” என்று எந்த அரசனின் ஆட்சியையும் பற்றிச் சொல்லப்படுவதால், கொஞ்சங் கூட ஸ்வயச் சார்பே இல்லாமல் ரிஷிகள் வகுத்த தர்ம சாஸ்த்ரங்களின் ஸாரமாக மநு கொடுத்த அந்த ப்ரமாண நூலில் காண்கிற விதிமுறைகள் பின்னால் வந்த அரசர்களால் மாற்றப்படவேயில்லை என்று தெரிகிறது. இந்த அடிப்படைச் சட்டத்துக்கு ‘அமென்டமென்ட்’ என்பது கிடையாது. அதன் விதிகள் அவற்றின் ரூபம் சிதையாமலே காக்கப்பட்டு வந்தன.


தர்ம நெறிகளைக் குறித்ததாகவும், அவற்றை அநுஸரிப்பதற்கு ஏற்றவகையில் ஸமூஹத்தைப் பல பிரிவுகளாக்கி அவை ஒன்றுக்கொன்ற இசைந்து செயல்படும்படியாகவும் விதிகளைத் தரவே ஏற்பட்டது மநு தர்ம சாஸ்த்ரம். அதற்குப் பேரே தர்ம சாஸ்த்ரமே ஒழிய ராஜீய (அரசியல்) சாஸ்த்ரமல்ல. தேசத்தில் ஒட்டு மொத்தமாகவும், தேச ப்ரஜைகளில் ஒவ்வொருவரின் வாழ்ககையில் தனித்தனியாகவும் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பதெற்கே ஏற்பட்டது அந்த நூல். அந்த நூல் ஒரு ராஜாவின், ராஜாங்கத்தின் கடமையே இப்படிப்பட்ட தர்ம ஸ்தாபனம்தான் என்று உணர்த்துவதாகும். அரசியல் என்பது தர்மத்தை நிலைநாட்டுவதன் ஒரு அங்கமாகத்தான் பூர்விகர்களால் கருதப்பட்டது.

அர்த்த சாஸ்த்ரம், சுக்ரநீதி முதலான நூல்கள் பிற்பாடு அரசியலையே ப்ராதானமாக வைத்துச் செய்யப்பட்டன வென்றாலும், அவையும் தர்ம சாஸ்த்ரத்தை அநுஸரித்தேதான் பெரும்பாலும் செய்யப்பட்டன. யதார்த்த ஸெளகர்யங்களையும், தேவைகளையும் முன்னிட்டு தர்ம சாஸ்த்ர விதிகளை அப்படியே பின்பற்றாமல் சிற்சில விஷயங்களில், கொஞ்சம் மாற்றிச் செய்யவும் ராஜநீதி சாஸ்த்ரங்கள் இடம்தரத்தான் செய்கின்றன. ஆனாலும், இங்கேயுங்கூட அரசியல் சாஸனத்தின் அடிப்படை அமைப்பு – basic structure என்கிறார்களே, – அது போன்ற தர்ம சாஸ்த்ர அஸ்திவாரத்துக்கு ஹானி உண்டாக்காமலே செய்வேண்டுமென்பதுதான் கொள்கையாயிருந்திருக்கிறது. அப்படி எங்கேயாவது அர்த்த சாஸ்த்ரம் தர்மசாஸ்த்ரத்துக்கு வித்யாஸமாகப் போனாலும் சதுர்தச வித்யைகளிலுள்ள நாலு சாஸ்த்ரங்களில் ஒன்றாய் உள்ள தர்ம சாஸ்த்ரத்தைத் தான் ப்ரமாணமாக எடுத்துக் கொள்ளவேண்டுமென்றும், அந்த வித்யைகளுக்குப் பிற்பட்டே ஸ்தானம் பெறுகிற நாலு உபவேதங்களில் ஒன்று மட்டுமேயான அர்த்த சாஸ்த்ரம் முதலான அரசியல் நூல்களின் அபிப்ராயத்தைத் தள்ளிவிடவேண்டுமென்றும் ஆன்றோர் கருதியிருக்கிறார்கள். அந்த உத்தமக் கொள்கையைக் கடைப் பிடித்துத்தான் தமிழ் நாட்டு அரசர்கள் தங்களை மநு நூல் வழி நடப்பவர்களாகவே சொல்லிக் கொண்டார்கள். அர்த்த சாஸ்த்ர வழி நடப்பவர்களாக அல்ல.

எதற்குச் சொல்லவந்தேன் என்றால், தமிழ் வேந்தர்களின் ஆட்சிக்காலத்தில் சட்டத்திருத்தம் பண்ண இடமே இல்லாமலும் இல்லை, ஆனால், அதே ஸமயத்தில் சட்டத் திருத்தம் என்ற பெயரில் அவ்வப்போது ஆட்சியிலிருப்பவர்களின் இஷ்டப்படியும் ஸெளகர்யப்படியும் எந்த விதியை வேண்டுமானாலும் மாற்றலாம் என்றும் இல்லாமல், தர்ம சாஸ்த்ர அடிப்படை விதிகளை, intact -ஆக (கட்டுக் குலையாமல்) ரக்ஷிக்கத்தான் வேண்டும் என்றும் இருந்தது. தர்ம சாஸ்த்ரத்தை வேராகக் கொண்டு ராஜாங்க வ்ருக்ஷம் ரக்ஷிக்கப்பட்டபோது அந்த வேரைக் கொஞ்சம்கூட பாதிக்காமலே, யதார்த்த நடைமுறைகளையொட்டிக் கிளைகள் மாதிரித்தான் புதுச் சட்டங்கள் போட்டது. அவச்யமேற்படும்போது கிளைகளைக் கொஞ்சம் வெட்டி விடுகிறாற்போல, ஒன்றிரண்டைக் கழித்துக் கட்டியும் விடுகிறாற்போல இந்தப் புதுச் சட்டங்களை ‘அமென்ட்’ பண்ணவும் செய்தார்கள்.

சோழராட்சியில் க்ராம மஹா ஸபை அங்கத்தினருக்கான க்வாலிஃபிகேஷன்களில் மூன்றாவதான வயஸு பற்றிய விதியை இப்படித்தான் ரிவைஸ் பண்ணினது.



Sage of Kanchi

Krish Ram
 
Significance of pradosham

HOW PRADOSHAM STARTED AND THE SIGNIFICANCE OF PRADOSHAM - THIS TEMPLE BLESSED BY KANCHI PARAMACHARYA!!!

11935093_10153138006718004_2184191350842496635_n.jpg


ABOUT 56 KM from Chennai, on the Tamil Nadu-Andhra Pradesh border, is a small village called Surutapalli, which houses the only "Sayana Sivan" (sleeping Shiva) called Pallikondeswarar. The temple has an interesting history which is as follows:
Once Indra lost his kingdom and found that only if he consumed the Divine Nectar he could rule. So there was a tug of war between the devas and asuras to obtain this nectar. The Devas and Asuras got together to churn the ocean, using Mandramalai & Vaasuki, the snake. As they continued to churn the ocean, Vaasuki the snake began to tire and started spewing its poison. Siva consumed all the poison. Thus Siva became blue up to his throat and is also known by the name "Neelakantan" ( neela-blue colour, kantam-throat).

Goddess Parvati rushed and held his neck so that the poison would not spread to the whole of his body. Shiva then became drowsy and selected Surutappalli, where he is seen inclined/sleeping posture on the lap of Parvathi. This is the only temple that houses Lord Shiva in a sleeping position.

Narada, meanwhile, passed on the message and down came the Devas, Brahma, Vishnu and the Saptarishis, to have darshan. They were promptly stopped by Nandi who asked them all to come after some time, as Shiva was resting. All of them waited. Shiva, when he woke up, was filled with extreme happiness and danced ("Ananda Thandavam"). This day, when the Devas, Brahma, Vishnu, Narada and Saptarishis had Shiva darshan was a Krishnapaksha Trayodasi (Stiravaram, Saturday). This is the Mahapradosham day. Pradhosham, generally, is a significant occasion observed with great piety at all Shiva temples.

It is believed that all the Devas & Gods are assembled in the Shiva temples during Pradosham time. Further, the first pradosham was on a Saturday & hence "Sani Pradosham" is even more auspicious.

பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.

Pradhosha Vrata Significance:-

According to the Shiva Puranas, observing a fast on Pradosham Vratam is regarded as highly auspicious and beneficial. One would be blessed with wealth, children, happiness and honor. While the fast is undertaken by all Shiva devotees, but all women who have been longing for a son specially observe this. Also, praying to Lord Shiva during the course of the fast is said to liberate the devotee from all his previous and present sins and evil deeds committed.

According to one legend, Lord Shiva is believed to have drunk the Halahala poison during Pradosham. This poison was mixed with the Ocean of Milk (Samudra Manthan).

When you visit Tirupathi/Kalahasthi from Chennai, this is on the highway and visit this amazing place, and seek the blessings of the Lord.



Sage of Kanchi

Chandra Subramaniam
 
Today is Day of Jayanthi’s

Today is Day of Jayanthi’s

vamanaa.jpg


Today is Thiruvonam Thirunakshathiram, a very auspicious Day. A Day of Bhagawan Jayanthi’s along with Varalakshmi Vrattam.

1. Vaamana Jayanthi

2. Thiruvananthapuram Anantha Padmanabha Swami Jayanthi (one of the 108 Divya Desams)
3. Hayagreeva Jayanthi and

4. Varalakshmi Vrattam

Please listen to these small sathsangams (5-8 mins each) by Guruji Gopalavallidasar about these Jayanthi’s and Varalakshmi Vrattam. We will learn a lot about the significance of Bhagawan and his Jayanthi’s in a total of 15 minutes.

Sri Periyava has said doing “Gho Samrakshanam is a big Lakshmi Puja” so please consider doing Gho Matha Samrakshanam as well. Ram Ram


https://www.youtube.com/watch?v=2EaWwBzXBf4


https://www.youtube.com/watch?v=x6wusgYc5rU


https://mahaperiyavaa.wordpress.com/2015/08/28/today-is-day-of-jayanthis/

 
Sriman Narayaneeyam Upanyasam

Sriman Narayaneeyam Upanyasam


  • August 28, 2015
  • Sriman Narayaneeyam Upanyasam in Tamil is being held at Vedabhavan from 30.08.2015 to 05.09.2015. The Upanyasam is being done by Sri Rangaswami Dikshitar. Sri Rangaswami was our Vidyarthi at Sri Sankara Gurukula Veda Patasala. After studying Vedas, he mastered Sastras and performed many Yagnas. We are proud of him and are happy that he is now coming back to our Patasala and performing Upanyasam for all Vidyarthis and devotees.

    naaraayaneeyam2-193x300.jpg


    http://vedabhavan.org/sriman-narayaneeyam-upanyasam/


 
அம்பாளுடைய ரூபம்

அம்பாளுடைய ரூபம்

11952034_1132403850107961_3041276805050663068_n.jpg



அம்பாளுடைய ரூபம் எப்படி இருக்கும். சாதாரணமாக, பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள். அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது.

சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது. ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனுடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன. மகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான். அவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்கூடப் பார்க்க முடியாது.

அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள். அவளைப் பற்றி ஸெளந்தரிய லஹரி என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். இத்தனை ஸெளந்தரியம், லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு போய்விடுகிறது. அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள். எந்த பக்தருக்கு அந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி, புவனேசுவரி, துர்க்கை, காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.

ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால், அதற்கு உபயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள். அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வாணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று 'சியாமளா தண்டகத்தில்'ஸ்துதி செய்கிறார். வர்ணம் என்றால் நிறம் என்று நினைப்பீர்கள். வர்ணம் என்றால் அக்ஷரம் என்று அர்த்தம். ஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை. ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை வீசிதரங்கம் என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள். இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது .மாத்ரு என்றால் தாயார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன. இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான். கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான். அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள். இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம். அதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள். அ,உ,ம மூன்றும் சேர்ந்து ஒம் என்று ஆகிறது. அ - சிருஷ்டி; உ - பரிபாலனம்; ம - சம்ஹாரம் என்பார்கள். அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம். இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால், உ - ம - அ - என்றாகும். அதுதான் உமா என்பது. உபநிஷதமும் அவளை உமாஹைமவதி என்றே சொல்கிறது.

[Sage of Kanchi] From Periva forum

Bala Thiru

 
சாஸ்திர அறிவும், காரியத்திறனும்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 126

சாஸ்திர அறிவும், காரியத்திறனும்

நாலாவது யோக்யதாம்சம், அபேக்ஷகர்கள் வைதிக தர்மம் இன்ன என்று தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். நம்முடைய சாஸ்த்ரக் கொள்கைகளை நன்றாக அறிந்தவர்களாயிருக்கவேண்டும். நல்ல படிப்பறிவு உள்ளவர்களாயிருக்க வேண்டும்.

இதைச் சொன்ன கையோடேயே இந்த யோக்யதாம்சத்துடன் சேர்த்தே இன்னொன்றையும் வலியுறுத்தியிருக்கிறது. சாஸ்த்ரக்ஞர்களாகவும் படிப்பாளிகளாகவும் இருக்கப்பட்ட பல பேருக்குக் கார்யத் திறமை இல்லாமலிருப்பதைப் பார்க்கிறோமல்லவா? ஊர் நிர்வாஹத்தில் பொறுப்பு ஏற்பவர்கள் இப்படி இருக்கப்டாது. அவர்கள் வித்வான்களாக இருப்பது மட்டுமில்லாமல் செயல்திறமையுள்ளவர்களாயும் இருக்க வேண்டும் என்று விதி செய்திருக்கிறது. “வேதத்திலும், சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிக்ஷபுணர் என்னப்பட்டிருப்பவர்” என்று சாஸன வாசகம் கூறுகிறது.

ஜீவாஸாரமான தகுதி : அர்த்த சுத்தமும் ஆத்ம சுத்தமும்

5. இவர்கள் ஸொத்து உள்ளவர்களாயிருக்கவேண்டும் என்பதை முதல் இரண்டு விதிகளாலும் தெரிந்து கொண்டோம். இப்போது அது தப்பு வழியில் ஸம்பாதித்ததாக இருக்கப்படாது, ஸபை மெம்பர் ஆன பிற்பாடும் இவர்கள் தப்பு வழியிலே போய் ஸம்பாதிக்கக் கூடாது என்று தர்மத்தால் அர்த்தத்துக்கு – அறத்தினால் பொருளுக்கு – வேலி போட்டுக் கொடுப்பதாக ஒரு ஷரத்து வருகிறது. ஸொத்து விஷயம் மட்டுமில்லை, எல்லா விஷயத்திலுமே சிறந்த ஒழுக்கம் உள்ளவர்களாயும் ஆத்ம ஸம்பத்தை வ்ருத்திசெய்து கொண்டவர்களாயும் அபேக்ஷகர் இருக்க வேண்டும். அபேக்ஷகர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸபையின் அங்கத்தினர் ஆன பிற்பாடும் இதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நியாயமான முறையில் அடைந்த ஸொத்துக்களையும், பரிசுத்தமான நடத்தையும் உள்ளவர்கள்தான் முதலில் அபேக்ஷகராக இருக்கமுடியும், பிற்பாடு அங்கத்தினராக நீடிக்கவும் முடியும். “அர்த்த சுத்தமும் ஆத்மசுத்தமும் உடையார்” என்று சாஸனம் சொல்லும். இந்த வாசகந்தான் ஊரின் நிர்வாஹஸ்தர்களுக்கான யோக்யதாம்சங்கள் அத்தனைக்கும் ஜீவஸாரம்.

தொடர்ந்து அங்கம் வகிக்கலாகாது

6. இந்தத் தேர்தல் வருஷாவருஷம் நடப்பதாகும். இந்த வருஷமெம்பர் அடுத்த வருஷத் தேர்தலிலும் ‘கான்டிடேட்’டாக (வேட்பாளராக) இருக்க முடியாது. இப்படி, ஒரு வருஷ ‘டெர்மு’க்குப் பிறகு வருகிற மூன்று வருஷங்களுக்கு அங்கம் வஹிக்க முடியாது. மூன்று வருஷதுக்கு அப்புறம் வேண்டுமானால் மறுபடியும் ஸபையில் ‘மெம்பர்ஷிப்’ வஹிக்கலாம். இதை “மூவாண்டினிப்புறம் வாரியம் செய்திலாதார்” என்று சாஸனம் கூறுகிறது. அதாவது, ஒரு தேர்தல் நடப்பதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளுக்குள் அபேக்ஷகர் ஸபை மெம்பராக இருந்திருக்கப்படாது.

ஒருத்தர் அங்கத்தினரான பிற்பாடு அதிக நாள் பதவி வஹிப்பதாலேயே இதற்கு முந்திய விதியில் சொன்ன அர்த்த சுத்தமும் ஆத்ம சுத்தமும் கெட்டுப்போக ஹேது ஏற்பட்டுவிடப் போகிறதே என்று ஜாக்ரதை செய்வதாகத் தான் இந்த விதி ஏற்பட்டிருக்கிறது.

“மூவாண்டின் இப்புறம்” என்பதை, முதலில், “மூவாண்டின் அப்புறம்” என்று படித்துவிட்டு, தொடர்ச்சியாக மூன்று வருஷங்கள் மெம்பராக இருந்த எவரும் அதற்குப்புறம் தேர்தலுக்குத் தகுதிபெற மாட்டார்களென்று அர்த்தம் பண்ணிக் கொண்டுவிட்டேன். அப்புறம்தான் “இப்புறம்” என்பதை ஸரியாகத் தெரிந்து கொண்டு, அதற்கு “முந்தைய மூன்றாண்டுகளுக்குள்” என்று பொருள் என்று புரிந்துகொண்டேன். அதாவது ஒரு வருஷ ‘டெர்ம்’ வஹித்தபின் மூன்று வருஷ gap (இடைவெளி) கொடுத்து எத்தனை தடவை வேணுமானாலும் ஒருத்தர் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனாலும் ஒரு வருஷ பதவி வஹித்தால் அப்புறத் அதைப் போல மூன்று மடங்கு காலம் பதவி இல்லை என்பதால் எவரும் தப்பான முறையில் தங்களுடைய இன்ஃப்ளுயென்ஸை வளர்த்துக் கொள்ளமுடியாதபடி செய்திருக்கிறார்கள்.

உறவினர் உதவாது

7. கடைசியாய் வரும் ஏழாவது ஷரத்தும் இந்த ஐந்தாம், ஆறாம் ஷரத்துக்களை ஒட்டி அவற்றைக் ‘காம்ப்ளிமென்ட்’ பண்ணுவதாகவே (இட்டு நிரப்புவதாகவே) இருக்கிறது. அது என்ன சொல்கிறதென்றால் புதிதாக அங்கத்தினர் ஆகிறவர்கள் ஏற்கெனவே அங்கத்தினர்களாக இருந்தவர்களின் நெருங்கிய பந்தக்களாக இருக்கப்படாது என்கிறது. “வாரியம் செய்தொழித்த பெருமக்களுக்கு ஆத்ம பந்துக்களல்லாதார்” என்பது சாஸன வாக்கு.



Sage of Kanchi

Krish Ram
 
They came, they saw and they got blessed


[TD="colspan: 3"]
THEY CAME, THEY SAW AND THEY GOT BLESSED

During the nine years and more from May, 1984 till almost the end of 1993, apart from the teeming thousands of those who flocked at the Sankara Math at Kanchi for a glimpse of their `Maha Periyaval', almost not a day passed without some high-placed dignitary, some business magnate or some scientist or scholar of repute, or a small team of foreigners-some seeking an interview of a few minutes with the Acharyas, or some wishing for a mere darsan and other to simply make obeisance before the Great Guru. Presidents and Prime Ministers of our country, Ministers of foreign countries, judges of the Supreme court of India and of High courts of States, heads of political parties and so on, came over to Kanchi, had darsan of His Holiness, sought His advice on their public or private problems and left after attaining His blessings.

It was during that early part of this period that two ministers of the Government of Malaysia, paid respects to the Acharya. Late Sri M.G. Ramachandran, (when he was Chief Minister of the Government of Tamil Nadu), had darsan of His Holiness at the Kanchi Math and received His blessings. This was soon after late Ramachandran's return from the United States of America after having had treatment there. A group of Swedish and American visitors of India paid homage to the Great Guru on the 18th of February, 1987.

On the first of March of the same year, the Heads of the Dharmapuram, Tondaimandalam and Tirupanandal Saiva Aadhinams (Maths) had darsan of the Acharya which was followed by a long conversation. Among other heads of religious institutions who came down to Kanchi for having darsan, mention may be made of the Raval of Badrinath (18.4.87) the Dalai Lama (13th December 1987), the former Head of the Ahobilam Math and Sri Sumatindra Swami, had of the Puttige Madhva Matha at Udipi (8-4-91).

Sri R. Venkatraman, (who for long has been associated with the Kanchi Sankara Math) when he was President of India and after his retirement had darsan of His Holiness off and on during these years. Sri Ranganath Misra (who, according to his own words had his "first darsan of the Great Master," when he was lad of nine), when he was judge and later Chief Justice of the Supreme Court of India went over to Kanchi with the members of his family to get he blessings of the Great Guru. Late Rajiv Gandhi had darsan of the sage, at the Kanchi Math on 25th January, 1987 (when he was Prime Minister) and again later on 25th, January, 1990 (when not in power). Some other notables who paid respects to His Holiness during this period are : - The Rajmata of Gwalior, Brahmananda Reddy, (then Governor of Andhra, Maharashtra), Mr. Alexander (Governor of Tamil Nadu) and Sri Krishna Kant (Governor of Tamil Nadu). On the 8th of February, 1989, Sri L. Narendra Vishnu, Prime Minister of Mauritius and members of his family paid respects to the Acharya. On 6th June, Sri Peri Sastry, then Election Commissioner had darsan.

Among those dignitaries who came down to Kanchi for darsan of the Great Guru in 190 mention may be made of the following : - Sri C. Subramanyam (then Governor of Maharashtra), Sri L.K. Advani and Sri Atal Bihari Vajpayee (both leaders of the Bharatiya Janata Party) and Sir Chandrasekhar who was then Prima Minister of India. Of those who came in 1991, some are Sri Bhishma Narayan Singh, the Governor of Tamil Nadu, and Sri S.B. Chavan, Home Minister of the Government of India.


Sage of Kanchi

Jambunathan Iyer
[/TD]
 
ஸொத்து குறித்து நிபந்தனை

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 127

ஸொத்து குறித்து நிபந்தனை

இந்த க்வாலிஃபிகேஷன்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலில் அபேக்ஷகருக்கு கால் வேலியாவது நிலம் ஸொந்தமாக இருக்கவேண்டுமென்றும், ஸொந்தமனையில் வீடு இருக்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறது. அதோடு நிலத்துக்கு அவன் தீர்வை கட்டவேண்டுமென்றும் இருக்கிறது. நிலம் இருந்தால் வரி (தீர்வை) கட்டத்தானே வேண்டும் என்று கேட்கலாம். அப்படியில்லை. ராஜமான்யமாக ப்ராம்மண ச்ரௌதியிலிருந்து ஏகாலி மாதிரியான தொழிலாளி வரையிலும் ஸ்வஜாதித் தொழில் செய்கிற எல்லாருக்கும் நிலம் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்குத் தீர்வை கிடையாது. “இறையிலி” என்றே இவற்றை சொல்லியிருக்கும். இப்படி தானமாகப் பெறாமல் ஒருவன் தானே உழைத்தோ, அல்லது தன் பித்ருக்கள் உழைத்துப் பெற்றுப் பிதுரார்ஜிதமாகவோ அந்தக் கால்வேலி நிலம் படைத்தவனாக இருக்கவேண்டும் என்பதே விதி.

லக்ஷ்ய தர்மமும், நடைமுறை ஸாத்யமும்

‘ஸொத்து இருக்க வேண்டும், வரிகட்ட வேண்டும் என்று என் வைத்திருக்கிறது? ஏழைக்கு ப்ரதிநிதித்வம் வஹிக்க ரைட் இல்லையா?’ என்று அபேதவாதம் பேசலாம். ஐடியலிஸத்துக்கு (ஆதர்ச வாதத்துக்கு) இந்த வாதம் ஸரியாயிருக்கலாமே தவிர, ஸாதாரண ஜனங்களின் மனப் போக்குகளை வைத்து அன்றாடம் நடக்கிற ப்ராக்டிகலான (யதார்த்த) ராஜீய கார்யங்களுக்கு ஸரிப்பட்டு வராது என்று நம்முடைய மூதாதையர் கண்டிருக்கிறார்கள்.

ஐடியல் நிலையை எடுத்துச் சொன்ன தர்மசாஸ்த்ரங்களே, ப்ரத்யட்ச நடைமுறை முழுக்கவும் அந்தப்படிதான் இருக்கவேண்டும் என்று கண்டிப்புப் பண்ணினால் நிச்சயமாக அப்படிப் பண்ண ஸர்வஜனங்களாலும் முடியாமல் போய், வெறும் வேஷமாகவும் ஹிபாக்ரிஸியாகவும்தான் ஆகும் என்பதைக் கருத்தில் கொண்டு வர்ணம், ஆச்ரமம் என்றெல்லாம் பிரித்துக் கொடுத்து யார் யாருக்கு எந்தெந்த ஸ்டேஜில் எந்தெந்த அளவுக்கு அந்த ஐடியலையே இளக்கியும் இறுக்கியும் கொடுக்கவேண்டுமென்று நன்றாக வகை தொகை செய்து தந்திருக்கின்றன. “ஐடியலை இளக்கி” என்றால் அதர்மத்தை விதித்ததாக அர்த்தமில்லை. ஆனால் தர்ம விதியை ஒரு நிலைவரையில் ரொம்பக் கண்டிப்பு செய்யாமல், அதே ஸமயத்தில் ரொம்பவும் கண்டிப்பான அந்த ஐடியல் நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஒருத்தனைக் கொண்டு சேர்க்கும்படியாகப் பாகுபாடு செய்தது என்றே அர்த்தம். வாழ்க்கையின் பல துறைகளிலும் இப்படி என்றாலும் பெரிய ஜன ஸமூஹத்தின் அன்றாட உலகயில் நிலவரத்தைக் குறித்ததான பாலிடிக்ஸில் மற்றத் துறைகளைவிடவும் யதார்த்தத்துக்கும் ஸைகாலஜிக்கும் அதிக இடம் தரவேண்டுமென்பதைக் கருத்தில் கொண்டே அர்த்த சாஸ்த்ரம் உண்டான நாளிலிருந்து சோழர்காலம் வரைக்கும் சட்ட திட்டங்கள் செய்ததாகப் பார்க்கிறோம்.

இப்படிச் சொன்னதால் தற்காலத்தில் தர்ம ஸம்பந்தமே இல்லாமல், தெய்வ ஸம்பந்தமே இல்லாமல் பாலிடிக்ஸ் நடத்துகிற மாதிரி அப்போது இருந்ததாக அர்த்தம் இல்லை. தர்மம், தெய்வம் என்று நான் இரண்டாகப் பிரித்துச் சொல்வதுகூடத் தப்புத்தான். நம் அத்தனை பேரையும் ஆட்டிப் படைத்து ஆட்சி பண்ணிக் கொண்டிருக்கும் ஈச்வரனிடம் பயபக்தியிலே கட்டுப்படாமல் தனியாக தர்மம் என்னும் நன்னெறிக் கொள்கைகளுக்கு மட்டும் கட்டுப்பட்டு அவற்றைக் கடைபிடிப்பது என்பது வெறும் சவுடால்தான்.

தெய்வம், தெய்வ ஸங்கல்பத்தைப் புரிந்துகொண்ட ரிஷிகள் செய்த தர்ம சாஸ்த்ரம் ஆகியவற்றை “ஸம்பந்தமில்லாதவை” என்று தள்ளிவிட்டு தனியாக அரசியல் கொள்கை, அரசாங்கத் திட்டம் என்றெல்லாம் போனால் அது ஜனங்களின் ஆத்மஹானியில்தான் முடியும். வெள்ளைக்காரர்கள் கொண்டுவந்த அரசியல் ஐடியாலஜிகளிலிருந்துதான் இப்படி தெய்வ ஸம்பந்தத்தையும், சாஸ்த்ர ஸம்மதத்தையும் ஒதுக்கிவிட்டு ராஜ்ய நிர்வாஹம் செய்வதும், அரசியல் என்று தனியாக ஒன்றைப் பெரிசு படுத்துவதும் வழக்கமாயிருக்கிறது.


Sage of Kanchi

Krish Ram
 
ஆவணி அவிட்டம்-29-08-2015.

ஆவணி அவிட்டம்-29-08-2015.

( 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.)

"தெய்வத்தின் குரல்"

நன்றி-காமகோடி

அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம் பூணூல் சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும்..

அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல் உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல் போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை
அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக் கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய
அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய
நோக்கமாகும்.

அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல்
போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று சொல்லுகிறோம்.

உப நயனம் என்ற இரண்டு சொற்களின் அர்த்தம் காயத்ரீ மந்திரத்தைக் கற்றுக் கொள்வதற்கு குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல் என்று பொருள்.

இந்த வேதம் படிப்பதற்கு காலங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. தக்ஷிணாயனம் என்று சொல்லக்கூடிய ஆறு மாதங்கள், வேதம் சொல்லக் கூடிய காலங்கள்.
உத்ராயணத்தில் அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கு

சம்ஸ்க்ருதத்தையும், உப அங்கங்களையும், தர்ம சாஸ்திரத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும். தை,மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இந்த ஆறு மாதங்களும் உத்தராயணம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,
மார்கழி இந்த ஆறுமாதங்கள் தக்ஷிணாயனம்.

ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். இதையே எல்லோரும் பொதுவாக ஆவணி அவிட்டம் என்பார்கள். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு

ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில் ச்ரவண நட்சத்திரத்தன்று ஒரு தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள் ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.

சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் எடுத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மாறி வந்தாலும் ருக் வேதம்தான் முதன்மையாக இருப்பதினால் அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும் உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். இந்த உபாகர்மா அன்று
தக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து உத்தராயண ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில்
தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை ஆரம்பம் செய்ய வேண்டும்.

இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து
முடிக்காததற்காகத்தான் பரிகாரமாக "காமோகார்ஷீத்" ஜபம் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் எப்படியோ ஒரு அறியாமை இந்த விஷயத்தில் புகுந்து விட்டது. 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று
ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.

அதேபோல் பலரும் வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும் அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்
கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வது எதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே முக்கியம். பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை. பூணூலை மாற்றிக்
கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும்.

ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம்
வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம் ஸ்திரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து
இருக்கிறார்கள்.

பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான் காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு
இருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி இருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ
மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம் இருக்கின்றன. இந்த ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரீ ஜபத்தை அதிக அளவில் செய்தால்தான் சித்திக்கும் என்றும், மற்ற ஜபங்கள் பலன் அளிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீ மந்திரம் ஒன்றுதான்

வேதத்திலிருந்து வந்தது. மற்ற எல்லா மந்திரங்களும் அதிகமாக புராணத்திலிருந்துதான் வந்தவை. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப்பட்டு இருக்கிறது

. ஆனால் காயத்ரீ மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன்

மனத்தூய்மைதான். மனோபலம்தான். மனோபலத்தையும், மனத் தூய்மையும் வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.

இன்றைக்கு மனோபலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே

காயத்ரீ அனுஷ்டாணம் குறைந்து இருப்பதுதான்.

சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால் தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள் செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே
வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து விடுகிறது.


Sage of Kanchi

Varagooran Narayanan
 
துருக்கர், வெள்ளையர் ஆட்சிகளில்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 128

துருக்கர், வெள்ளையர் ஆட்சிகளில்

வெள்ளைக்காரர் ஆட்சிக்கு முன் நடைபெற்ற துருக்கர் ஆட்சி ஸமாசாரம் என்னவென்றால், முகாலயர்களும், மற்ற அநேக ஸுல்தான்களும் அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுடைய மதத்தில் நிரம்பப் பற்றுக் கொண்டிருந்தவர்கள். நம்மைப்போலவே அவர்களுக்கும் சட்டப் புஸ்தகமே மத ப்ரமாணமுள்ளதுதான். ஷாரியத் என்று அதற்குப் பேர். அதன்படிதான் அவர்கள் தீர்ப்புப் பண்ணியது. ஆனாலும் அது நம்முடைய தர்மசாஸ்த்ர ஸம்பந்தமில்லாதது. நம்முடைய தர்ம ஆசரணைகளையும் அநுஷ்டானங்களையும் முடிந்தமட்டும் அழிப்பதுதான் அவர்களுடைய எண்ணமாயிருந்ததால் பெரும்பாலான ஹிந்து ஸமூஹத்தைப் பொறுத்தமட்டில் ராஜாங்க நிர்வாஹம் அவைதிகமாகத்தான் நடந்தது.

இதைச் சொல்லும்போதே இன்னும் இரண்டு விஷயங்களைச் சொல்லவேண்டும். வேத விரோதமான முறை ரொம்பவும் காரமாகப் போய்விடாமல் இரண்டு ஸ்பூன் நெய்விட்டது போன்ற இரண்டு விஷயங்கள், ஒன்று – பலாத்கார மதமாற்றம் நடக்கத்தான் செய்தது என்றாலும், மதம் மாறாமல் இருந்த ஹிந்து ஸமூஹமானது பெரும்பாலான பிரச்னைகளைத் தங்கள் ஜாதி நாட்டாண்மைகளின் மூலமே தீர்த்துக்கொள்ளும்படி அப்போதும் விட்டிருந்தார்கள். இந்த அளவுக்கு நம்முடைய பூர்விகர்களின் முறையே தொடர்ந்து அநுஸரிக்கப்பட்டது. அக் காலங்களில் அந்தந்த ஸமூஹ நாட்டாண்மையே அந்தந்த ஜனங்களின் பிரச்னைகளையும் வழக்குகளையும் விசாரித்து முடிவுகள் எடுப்பதுதான் அதிகம். ராஜ ஸமூஹத்தின் விசாரணைக்குமூ ராஜாங்க நீதிஸ்தலங்களுக்கும் போன கேஸ்கள் குறைச்சல். இந்த நாட்டாண்மை எடுபடாமல் பழையபடி நடந்தவரைக்கும் அந்த அளவுக்கு தர்மசாஸ்த்ர விதிகளில் ராஜாங்கச் சட்ட திட்டங்களின் குறுக்கீடு குறைக்கப்பட்டிருந்தது. இன்னொன்று – விக்ரஹங்களை உடைப்பது, கோவிலை அழிப்பது என்றெல்லாம் அவர்கள் பண்ணினாலும்கூட, ஹிந்து ஸமூஹத்துக்காக சட்டம் போடும்போது பஹிரங்கமாக நம்முடைய சாஸ்த்ரிய வாழ்முறையை பாதிக்கும்படியாகவோ, தர்ம சாஸ்த்ர விதிகளுக்கு விருத்தமாகவோ போட்டதில்லை. பலாத்காரமாகப் பலரைத் தங்கள் மதத்துக்கே மாற்றிக் கொண்டு அப்படி மாறியவர்கள் தங்களுடைய மதக் கொள்கைப்படியே நடக்கவேண்டுமென்று நிர்பந்தித்தாலும், இப்படி மாற்றாமல் விட்டு வைத்திருந்த ஸமூஹம் அதன் தர்மப்படியே நடப்பதை ஆக்ஷேபிக்கவில்லை, அதன் தர்ம விதிகளை அரசாங்கச் சட்டத்தால் மாற்றவுமில்லை. (உதாரணமாக ஹிந்து ஸ்த்ரீகள் விவாஹரத்து செய்துவிட்டு இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளலாம், ஹிந்து ஸ்த்ரீகளுக்கு ஸொத்தில் பங்கு தரவேண்டும் என்றெல்லாம் அவர்கள் சட்டம் கொண்டுவரவில்லை.

அவர்களுடைய உள்ளெண்ணம் எதுவாயிருந்தாலும், மிகப் பெரிய மெஜாரிட்டியான ப்ரஜைகளின் அத்ருப்தியையும் விரோதத்தையும் ஸம்பாதித்துக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது என்பதை உத்தேசித்தாவது அவர்கள் இந்த இரண்டு அம்சங்களை அநுஸரிக்க வேண்டியதாயிருந்தது.

வெள்ளைக்காரர் ஆட்சியிலும் இந்த இரண்டும் தொடர்ந்தது. ஆனால் முன்னாலே இருந்தவர்கள் அடி, பிடி என்று பலாத்காரமாகவே போவது அதிகமாகவும் தந்த்ரமாக ஏமாற்றிச் செய்வது குறைவாகவும் இருந்தது என்றால், இவர்களோ அதைத் திருப்பி வைத்து வெளியிலே பலாத்காரம் அதிகம் தெரியாமலே நயவஞ்சகமாகப் பண்ணி ஹிந்து தர்மத்தை உள்ளூர உளுத்துப்போகச் செய்தார்கள். ஆகையால் விக்டோரியா பிரகடனத்திலிருந்து நேரடியாக மத விஷயங்களில் ப்ரவேசிக்காதது போலத்தான் சட்டங்கள் செய்தார்களென்றாலும், நேர் அடியைவிடப் பலமாக உள்ளே போய்த் தாக்குகிற தந்த்ர அடியாகத் தங்கள் உத்யோகங்களைக் காட்டி, அதற்குத் தேர்ச்சி பெறுவதற்காக ஒரு கல்விமுறையையும் காட்டி, அந்தக் கல்வி முறையால் ஹிந்துக்களே ஹிந்து தர்ம சாஸ்த்ரவிதிகளில் நம்பிக்கை இழந்துவிடும்படியாகப் பண்ணினார்கள். புதிய அரசியல் கொள்கைகள், ஸமூஹக் கொள்கைகள், சரித்ர ஆராய்ச்சி, பாஷை ஆராய்ச்சி, சாஸ்த்ர ஆராய்ச்சி என்றெல்லாம் ரொம்ப ‘இம்பார்ஷிய’லாகச் செய்கிறாற்போலவே பலவற்றைக் கொஞ்சங் கொஞ்சமாக நம்முடைய ஸமூஹ அமைப்பு, சாஸ்த்ராபிமானம் எல்லாம் கலகலத்துக்கொண்டே வரும் படியாகக் ‘கைங்கர்யம்’ பண்ணினார்கள். ஹிந்து என்பவன் இன்னொரு மதத்துக்கு மாறவேண்டுமென்பதில்லை, ஹிந்துவாக இருப்பது போல இருந்துகொண்டே அந்த மத சாஸ்த்ரங்களில் அடியோடு நம்பிக்கையில்லாதவனாக, அடியோடு, அவைதிகமாக ஆகும்படி பண்ணிகாட்ட முடியுமென்று நிரூபித்துவிட்டார்கள். ஜனங்களில் ஒரு பகுதியை நேராக அவர்களுடைய மதத்துக்குள்ளும் இழுத்துக் கொண்டார்கள்.

இதிலே ஒரு வேடிக்கை! அவர்களுடைய தேசங்களில் மதபீடத்துக்கும் ராஜபீடத்துக்கும் ஓயாமல் பலப் பரீக்ஷை நடந்து, முடிவில் இரண்டையும் தனித்தனியாக எல்லை வகுத்துப் பிரித்து, ராஜாங்கச் சட்டமுறையைப் பெரும்பாலும் மத ஸம்பந்தமில்லாததாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். ரோமன் காதலிக் மதம், லூதரனிஸம் என்கிற மாதிரி ஒன்றை State Religion என்று அநேக ஐரோப்பிய நாடுகளில் வைத்தக்கொண்டிருந்த போதிலும் இப்படி இருக்கிறது. பிஷப்புகளிலேயே ஒரு பிரிவை இங்க்லாண்டில் ராஜா நியமிப்பது, அவர்களுக்கும் House of Lords -ல் (ப்ரபுக்கள் ஸபையில், நம்தேச ‘மேல் ஸபை’ மாதிரியானதில்) ஸ்தானம் தருவது, ஆர்ச்பிஷப் ஆஃப் காண்டரிபரிதான் ராஜாவுக்கு ‘காரணேஷன்’ (பட்டாபிஷேகம்) பண்ணுவது – என்றெல்லாமிருந்தாலும், நேராக ஸமய விஷயமாயில்லாத ஸமூஹச் சட்டம் எல்லாமே அரசியல் கருத்துக்களின் மேலேயே பண்ணுவதாகத்தான் இருக்கிறது. ஷாரியத் மாதிரி கிறிஸ்துவ மதச் சட்ட புஸ்தகம் என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. கிறிஸ்துவுக்கு முன்னாலிருந்த ஹீப்ருக்களுக்கு நம் தர்ம சாஸ்த்ரங்களைப் போலவும் ஷாரியத் போலவும் மத ப்ரமாணமுள்ள சட்டமுறை இருந்தாலும் பிற்பாடு ஹீப்ரு ஸமூஹமானது கிறிஸ்துவம், யூத மதம் என்று உடைந்தபோத கிறிஸ்து தம்மை அநுஸரிப்பவர்களுக்கு அநேக ஒழுக்கங்களையும், வாழ்முறை நியமங்களையும் உபதேசித்தாரென்றாலும், சட்ட சாஸ்த்ரம் என்று சொல்லுமூபடியாக codify செய்து ஒன்றும் கொடுக்கவில்லை. அதனால் அப்புறம் போப்புகளுக்கும் ராஜாங்கங்களுக்கும் நித்ய யுத்தமாக இருந்து, முடிவில் மத பீடம் ராஜாங்க பீடம் இரண்டும் தனித்தனி அமைப்புக்களாக ஆகி, ராஜாங்கங்களால் ‘ஜூரிஸ்ப்ரூடன்ஸ்’ (நீதி சாஸ்த்ரம்) ஏற்படுத்தப்பட்டபோது அவற்றில் மத ப்ரமாணத்துக்கு அதிகமாக இடமே இல்லாமல் ‘ஸெக்யுலர்’ என்று சொல்லும்படிதான் அமைந்தது. ஸயன்ஸும் இந்த ஐரோப்பிய நாடுகளில்தான் தோன்றி அபிவ்ருத்தி கண்டது. அதிலே கண்ட உண்மைகள் அவர்களுடைய மதக் கொள்கைகளுக்கு ரொம்பவும் வித்யாஸமாகயிருந்தவனவாதலால் அவர்களுக்கு மதாபிமானம், மதாநுஷ்டானம் ஆகியன துருக்கர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது ரொம்பக் குறைவாக ஆயின.

நான் வேடிக்கை என்று சொல்ல வந்தது எதையென்றால், இப்படி அவர்களே ஸ்வமத அபிமானம் குன்றி, ஸயன்ஸிலும் நாகரிக இந்த்ரிய ஸுகத்திலும் அதிகமாக விழுந்த போதிலும்கூட, ‘நம்முடைய ஆட்சிக்குக் கீழே வந்துவிட்ட இந்த இந்தியா தேசத்துக்கு இப்படி மஹோந்நதமாக ஹிந்துமதம் என்று ஒன்று இருப்பதா?’ என்று மட்டும் கரிந்திருக்கிறது! அதனால் இங்கே அவர்களுடைய மதத்தை வேர் பிடிக்கப் பண்ணவும், நம்முடைய மதத்தின் வேரை அரிக்கப் பண்ணவும் என்னவெல்லாம் தந்த்ரமாகச் செய்யலாமோ அத்தனையும் செய்தார்கள். இருந்தாலும் சட்டம் என்று செய்யும் போது நம்முடைய மத சாஸ்த்ர விதிகளை நேராக பாதிக்கும்படியாத் துணிந்து எதுவும் செய்யாமலேதான் இருந்தார்கள்.



Sage of Kanchi

Krish Ram
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top