• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
நோயாளி: வைத்தியர் ஐயா, எனக்கு மூட்டுக்கு மூட்டு உயிரே போற மாதிரி வலிக்கிறது.
ஆயுர்வேத வைத்தியர்: (பரிசோதித்து விட்டு) சரி. நான் இப்ப ஒரு மருந்து தரேன். அதை நீங்க விடாம சாப்பிட்டுக் கொண்டு வரணும். ஆனால் உருளைக் கிழங்கை சாப்பிடறதை மட்டும் அடியோடு விட்டுடணும். என்ன சரியா?
மறு நாளிலிருந்தே நோயாளி அடியோடு விட்டு விட்டார், வைத்தியர் கொடுத்த ஆயுர்வேத மருந்தை சாப்பிடுவதை.
 
ஆமாம். நான் தெரியாமதான் கேக்கறேன். பையனை பள்ளிக்கூடம் அனுப்பறது எதுக்கு?
பாடம் கத்துக்கறதுக்குத்தானே. அப்படீன்னா நீங்க அவனுக்குப் பாடம் சொல்லித் தரவேண்டியதுதானே உங்க ட்யூட்டி. அதோட நிக்காம அவனைக் கேள்வி கேக்கிறீங்களாமே கிளாஸுலே. இதை இத்தோட விட்டுடுங்க.
 
ஏன் நாம பேசற மொழியைத் தாய் மொழின்னு சொல்றோம்?
ஏன்னா, வீட்டிலே அப்பாவுக்குப் பேச சான்ஸே கிடைக்கிறது இல்லே.
 
Why was the writer SENTENCED?
He was given the SENTENCE
because of the one SENTENCE
that he wrote against judiciary.
 
He quits drinking

An Irishman walks into a bar in Dublin, orders three pints of Guinness and sits in the back of the room, drinking a sip out of each one in turn. When he finished all three, he comes back to the bar and orders three more. The bartender says to him, 'You know, a pint goes flat after I draw it; it would taste better if you bought one at a time.' The Irishman replies, 'Well, you see, I have two brothers. One is in America, the other in Australia, and I'm here in Dublin. When we all left home, we promised that we'd drink this way to remember the days we all drank together. 'The bartender admits that this is a nice custom, and leaves it there. The Irishman becomes a regular in the bar and always drinks the same way: he orders three pints and drinks the three pints by taking drinks from each of them in turn. One day, he comes in and orders two pints. All the other regulars in the bar notice and fall silent. When he comes back to the bar for the second round, the bartender says, 'I don't want to intrude on your grief, but I wanted to offer my condolences on your great loss.' The Irishman looks confused for a moment, then a lights dawns in his eye and he laughs. 'Oh, no, ' he says, 'Everyone is fine. I've just quit drinking!
 
It’s hard to understand why a burning ghat or burial ground raises its cost and blame it on the cost of living
 
ஏழைங்க கடன் வாங்கித் திரும்பக் கட்ட முடியலைனா, அரசாங்கம் அவங்க கடனைத் தள்ளிடும்.
கோடீஸ்வரர்கள் கடன் வாங்கித் திரும்பக் கட்டலைனா, அதை திரும்பி வாராக் கடன்னு பாங்க் தள்ளிடும்.
சாதாரண பொதுமக்கள் கடன்வாங்கி திரும்பக் கட்டலைனா, பாங்க் அவங்களை உள்ளே தள்ளிடும்.
 
Recent study shows that men who are married live longer than single men, but they’re a lot more willing to die.
 
டிமு- டிபி
சார், நீங்க கேட்ட மாதிரியே உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல அமெரிக்க மாப்பிள்ளையையே கொண்டு வந்திருக்கேன்.
அமெரிக்க மாப்பிள்ளையா? வேணாம்.
என்ன சார், நீங்க தானே ரெண்டு மாசத்துக்கு முன்னாடி அமெரிக்க மாப்பிள்ளையாப் பாருன்னு சொன்னீங்க. இப்ப வேணாங்கிறீங்க?
ஆமாம். உண்மைதான். அது அப்போ. ஆனா இப்ப வேணாம்.
( அது என்ன டிமு- டிபி? டிரம்புக்கு முன்-டிரம்புக்குப் பின்)
 
நாடகத்துலே நடிச்சிக்கிட்டு இருந்த நீங்க இப்ப அரசியலுக்கு வந்தப்புறம் நாடகத்துலே நடிக்கிறதை ஏன் நிறுத்திட்டீங்க?
ஒரே சமயத்துலே ரெண்டு இடத்துலே நடிக்க முடியாதுங்கறதாலே.
 
'ஆபரேஷன் பண்ணியே ஆகணும். அப்பத்தான் பிழைக்க முடியும்'னு என்னை நேத்து செக் பண்ணின டாக்டர் சொல்றாரே.
அது அவர் பிழைக்கறதைப் பத்திச் சொல்லியிருப்பார்.
 
டிமு
அந்த வீட்டு அம்மாவுக்கு அவங்க பையன் அமெரிக்காவுலே இருக்கான்னு ஏகப்பட்ட பெருமை. நம்மையெல்லாம் மதிச்சிப்பேசமாட்டாங்க. எப்பவும் தாம்தூம்னு இருப்பாங்க.
டிபி
இப்ப அந்த அம்மா தன்பையன் அமெரிக்காவிலே இருக்கிறதை நெனச்சு ரொம்பவும் கவலைப் படறாங்க. பாவம். சரியா சாப்பிடக்கூட மாட்டேங்குறாங்க
 
என்னங்க, பாங்க் பூட்டி இருக்கு. பாங்க் ஸ்டிரைக்கா?
இல்லீங்க. அவங்க எல்லாம் இப்ப வீட்டுலே இருந்தபடியே வேலை செய்யறாங்க.
 
அந்தப் பெண் கண்ணை கறுப்புக் கண்ணாடி போட்டு மறைச்சிக்கிட்டு நுனி மூக்கு மாத்திரம் தெரியற மாதிரி முகத்தையெல்லாம் மூடிக்கிட்டு இருக்கே. ஒரு வேளை தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த பெண்ணா இருக்குமோ?
அதெல்லாம் ஒண்ணுமில்லை. அது ஒரு Environmentalist. அதாவது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டத்தைச் சேர்ந்த பெண். காத்துலே உள்ள தூசி, புகை யெல்லாம் மூக்குக்குள்ளேயும் கண்ணுக்குள்ளேயும் போகாம இருக்க அந்த மாதிரி முகத்தை மூடிக்கிட்டு இருக்கு. அவ்வளவுதான்.
 
நீங்க அவரைத் தற்கொலை பண்ணிக்கச் சொல்லி தூண்டினதாக அவர் சொல்றாரே.
ஆமாம் சார். அவர்தான் என்னைத் தூண்டினார்.
என்னன்னு சொல்லித் தூண்டினார்?
நீ தில்லு முல்லு செய்யறதை விட்டுட்டு ஒழுங்கா வேலை செஞ்சிப் பிழைச்சிக்கன்னு சொன்னார்.
 
ஏன் அந்த நோயாளியை போலீஸ் கைது செஞ்சு கூட்டிக்கிட்டு போறாங்க?
யாரோ அவருக்குத் தீவிர வியாதின்னு சொன்னதைப் போலீஸ் தவறாப் புரிஞ்சிக்கிட்டாங்க.
 
என்ன சர்வர்? நான் சாப்பிட்டது ரெண்டு இட்லி. அதுக்கான சார்ஜ் 25 ரூபா தானே. பின்னே எப்படி பில் 35 ரூபாய்க்குக் கொடுத்திருக்கே?
அதுவா சார். இட்லிக்கு 25 ரூபா தான். ஆனால் இன்னியிலேந்து ப்ளேட், அது மேலே போட்டிருக்கிற இலை, சட்னி, சாம்பார், உங்க டேபிளுக்கு வந்து செர்வ் பண்றது, பில் தயாரிக்கிறது, கை கழுவற தண்ணி இதுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா சார்ஜ் பத்து ரூபா.
என்ன அக்கிரமமா இருக்கே?
இதுக்கே இப்படிச் சொல்றீங்களே. இனிமே பிளேன்லே போகணும்னா நீங்க ஓர சீட்டுக்கு, ட்ரிங்க்ஸுக்கு, சாப்பாட்டுக்குன்னு எக்ஸ்ட்ரா சார்ஜ் கட்டணுமே, அதுக்கு என்ன சொல்லப் போறீங்க?
 
அவர் ஒரு மாதிரியான ஆளுன்னு எப்படிச் சொல்றீங்க?
குத்தால சீஸனுக்குப் போய் அங்கே ஒரு ரூம் எடுத்துக் கிட்டு பாத்ரூம்லே வென்னீர் வருமா குளிக்கிறதுக்குன்னு கேட்ட ஒரே ஆள் இவர்தான்னா பாத்துக்கங்களேன்..
 
அமெரிக்கா! அமெரிக்கா!
அமெரிக்காகிட்டே இருந்து நாம கத்துக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ இருக்க நம்ம நாட்டு மக்கள் எதுவெல்லாம் தேவையில்லையோ அதையெல்லாம் அவங்ககிட்டே இருந்து காபி அடிக்கிறாங்க. என்ன சொல்றீங்க?
அமெரிக்கா கிட்டே இருந்து கெட்ட விஷயங்களைக் காபி அடிக்கிறது மாத்திரம் இல்லாம தங்க கிட்டே இருக்கிற கெட்ட விஷயங்களையும் விடாப்பிடியா பிடிச்சிகிட்டு இருக்காங்க. அதைச் சொல்லுங்க.
 
அங்கே ஒருத்தர் நடு ரோட்டிலே கழுத்துலே ஏதோ ஒரு போர்டு மாட்டிக்கிட்டு புகை பிடிச்சிக்கிட்டு இருக்காரே. யார் அவர்?
அவர் அரசாங்கத்தோட கொள்கையை தீவிரமா அனுசரிக்கிறவர். அதனாலே புகைபிடித்தல் உடலுக்குக் கேடு அப்படீங்கற போர்டை மாட்டிக்கிட்டு புகை பிடிக்கிறார்.
 
அண்மையில் நடந்தது. உண்மையில் நடந்தது.
நான் மயிலாப்புர் லஸ்ஸில் ஒரு மினி வேனில் ஏறினேன். இப்பொழுது எல்லாம் இங்கே மினி வேன்கள் சர்வசாதாரணம். காரணம் ஆட்டோக்களின் அட்டூழியம் தான். வேனில் நான் ஏறினவுடன் 'எங்கே சார் போகணும்' என்று வேன் டிரைவர் கேட்க,
நான் 'அனுமார் கோவிலுக்கு' என்றேன்.
'இறங்கு சார். அனுமார் கோவிலுக்கெல்லாம் இது போகாது' என்றார் அவர்.
'நீங்க ஆள்வார்பேட் ஃப்ளை ஓவர் வழியாகத் தானே போறீங்க' என்று நான் கேட்டேன்.
'ஆமாம்' என்றார் அவர்.
'அப்படீன்னா இது அனுமார் கோவிலைத் தாண்டித் தானே போகணும்' என்றேன் நான். 'அதெல்லாம் சரிதான் சார். ஆனா இது அனுமார் கோவிலெல்லாம் போகாது' என்று அடித்துச் சொன்னார்.
'அப்படிப் போகும்போது அங்கே ஒரு கோவில் இருக்குமே. பாத்தது இல்லியா நீங்க?' என்று கேட்டேன்.
'நீங்க ஒண்ணு. வெவரம் புரியாம பேசுறீங்க. அந்தக் கோவில் அனுமார் கோவில் இல்லை சார். அது ஆஞ்சனேயர் கோவிலாக்கும்' என்றாரே பார்க்கலாம்!
விவரம் தெரியாமல் நான் பேசுவதாக செர்ட்டிபிகேட் கொடுத்து விட்டார் விவரம் தெரிந்த அந்த வேன் ஓட்டுனர்.
 
அவனுக்கு என்னைப் பத்தி முழுசாத் தெரியாது.



அதுக்காகக் கவலைப்பபடாதே. உன்னைப் பத்தி முழுசா தெரிஞ்சி போச்சுதுன்னாத்தான் நீ கவலைப் படணும்.
 
சட்டத்தை அவமதித்ததற்காக உங்களை தண்டிக்கிறேன்.
யார் அந்த அவ? இருந்தாலும் அவ சட்டத்தை மதிச்சித்தானே இருக்கா. அவ சட்டத்தை மதிச்சதுக்காக என்னை தண்டிக்கிறது என்ன நியாயம்?
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top