• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
You know you work for the government when:









* You don''t see anything wrong with attending a meeting on a subject you know nothing about.




* You feel you contributed to the meeting just by being there.




* You stop raising issues/problems because you know you will be the one answering them.




* You fly first class across the country to attend a conference with 100+ people to discuss the fact that the project does not have enough money.




* You've sat at the same desk for 3 years, done the same thing for 3 years, but have had 3 different business cards.
 
Reversal of Roles

Barbara Walters filed a report on gender roles in Kuwait a few years prior to the Gulf War, and noted then that, in traditional Islamic fashion, women customarily walked about 10 feet behind their husbands.




Recently, Barbara returned to Kuwait and observed that the MEN now walked several yards behind their wives.




She approached one of the Kuwaiti women for an explanation.




"This is marvelous," Barbara said. "What enabled women here to achieve this reversal of roles?"




The Kuwaiti woman replied, "Land mines."
 
வர் உடம்புலே என்ன இவ்வளவு சுகர் இருக்கு?.
ஆமாம்சார். இருக்காதா பின்னே? அவர் பேரே சீனிவாசன் ஆச்சே.
 
எங்க காதலுக்கு எதிர்ப்பு ரொம்ப பலமா இருக்கு.
யார் எதிர்க்கிறது? உங்க ரெண்டு பேரோடே அம்மாவும் அப்பாவுமா?
எங்க ரெண்டு பேருக்குமே அம்மா அப்பா இல்லை.
அப்படின்னா வேறே யாரு?
அவளோடே புருஷன் தான்.
 
நான் அவன் கிட்டே மாடு வாங்காதே, மாடு வாங்காதேன்னு முட்டிகிட்டேன். அவன் கேக்கலை.
அதனாலே இப்ப என்ன ஆச்சு?


அவன் வாங்கின மாடு என்னை முட்டி அதனாலே நான் ஒரு வாரம் ஆஸ்பத்திரியிலே இருக்க வேண்டியதா ஆயிடுச்சு.
 
ஏ(பே)ட்டிக்கு போட்டி
டிவி நிருபர்: தமிழ் நாட்டிலேயே +2 பரீட்சையிலே முதல்முதலா ஒத்தைப் படையிலே 1200க்கு 9 மார்க் வாங்கி ஒரு ரெகார்டு படைச்சிருக்கீங்களே. எப்படி உங்களாலே அது முடிந்தது?
அது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை. ஆனால் நான் குறைஞ்ச மார்க் வாங்கறதுலே இப்படி ஒரு ரெக்கார்டு படைப்பேன்னு எதிர்பார்க்கவேயில்லை.
நிருபர்: எல்லாப் பரீட்சையிலும் சேர்த்து ஒத்தப்படை மார்க் வாங்கற அளவுக்கு எப்படி முடிஞ்சதுங்க?
முதல்லே எங்க அம்மா, அப்பாவுக்குத் தான் இந்தப் பெருமை சேரணும். எப்பப் பார்த்தாலும் அவங்க போடற சண்டையிலே என் புத்தகம் நோட்டு எல்லத்தையும் கிழிச்சி எறிஞ்சுடுவாங்க. நீ படிச்சி என்னடா கிழிக்கப்போறேன்னு நொடிக்கு நூறு தரம் என்னை ஆசீர்வாதம் பண்ணுவாங்க. என் தம்பி தங்கைகளும் என்னை படிக்க விடாம எனக்கு ஆதரவு கொடுப்பாங்க. ஸ்கூல்லே எல்லா வாத்தியார்களும், ஹெட்மாஸ்டர் உள்பட நீ உருப்படவே மாட்டேன்னு சொல்லி என்னை அப்பப்போ என்கரேஜ் பண்ணுவாங்க. இன்னும் என்னுடைய நண்பர்களெல்லாம் எனக்கு இந்த விஷயத்திலே உறுதுணையா இருந்தாங்க. பக்கத்து வீட்டுக் குமாரி கோகிலாவும் இதுக்கு ரொம்பவும் உதவியா இருந்தாங்க. என் பெற்றோர்களுக்கு என்னாலே மேல் படிப்புக்கான செலவெல்லாம் மிச்சம்னு அவங்களுக்கு ஒரே சந்தோஷம். .............
 
A doctor remarked on his patients, ruddy complexion.
“I know” the patient said “It’s high blood pressure, it’s from my family.
“Your mother’s side, or father’s side?” questioned the doctor.
Neither, my wife’s.
“What?” the doctor said “that can’t be, how can you get it from your wife’s family?”
“Oh yeah,” the patient responded, “You should meet them sometime
 
அவர் என்ன பெரிய ஆர்டிஸ்டா? பேனாவாலே வட்டம் அவ்வளவு அழகாப் போடறாரே?
இல்லை. அவர் ஒரு ஸ்கூல் டீச்சர்
 
நம்ம வீட்டுக் கூரையிலே இவ்வளவு பெரிய ஓட்டை போட்டது யாரு?
நீங்க தான் வீடுவீடாப் போய் வீட்டுச்சின்னத்துலே ஓட்டை போடுங்க, ஓட்டை போடுங்கன்னு கேட்டீங்க. அதுதான் யாரோ நம்ம வீட்டுக் கூரையிலேயே ஓட்டை போட்டுட்டாங்க.
 
ஒரு டிக்ரி காபி போடத் தெரியல்லே. பெரிசா டிக்ரீ வாங்கிட்டாளாம். என்ன பெருமை வேண்டி கெடக்கு?
 
Anne went away to college and promptly became an avid animal right activist. When she came home for the Holidays she noticed her mother wearing a beautiful genuine fur coat. “Oh Mom,” Anne exclaimed in a disapproving tone, “some animal must have suffered terribly just so you can get a fur coat.”
“ANNE!” Screamed her Mom Aghast ” I SEND YOU AWAY TO COLLEGE AND YOU COME BACK TALKING LIKE THAT?! HOW DARE YOU TALK THAT WAY ABOUT YOUR DAD!!!”
 
எங்க வீட்டு பாத்ரூம்லே யாரும் வழுக்கி கீழே விழ சான்ஸே இல்லை.
உன் வீட்டு சொந்தக்கார்ர் இஞ்சினீயர் ஆச்சே. அதனாலே பாத்ரூமை எல்லாம் ஜாக்கிரதையாப் பாத்துக் கட்டியிருப்பார்.
அதெல்லாம் இல்லே. பாத்ரூம் சைஸே 3அடிக்கு 2 அடிதான். பாத்ரூம்லே ஒரு குழந்தை கூட வழுக்கிக் கீழே விழ இடம் கிடையாது. ரொம்பப் போனா தலையை மாத்திரம் சுவத்துலே மோதிக்கலாம். அவ்வளவுதான்.
 
கண்டக்டர்: என்னப்பா நீ பாசா?
மாணவன்: இல்லை. நான் ஃபெயில்.
கண்டக்டர்: நான் அதைக் கேக்கலை. நீ டிக்கட் வங்காம இருக்கியே அதனாலே பாசான்னு கேட்டேன். சீக்கிரம் டிக்கட் எடு.
 
அவ என்ன அப்ளமாவோ உப்ளமாவோ படிச்சி இருக்காளாமே. அப்படி ஒரு படிப்பு இருக்கா என்ன?
பாட்டி. அது அப்ளமாவும் இல்லே. உப்புமாவும் இல்லே. சமையல்லே டிப்ளமா படிச்சிருக்கா.
 
வாடா, போடா, வாடி, போடி ன்னு சொல்லக் கூடாது. வாங்க, போங்கன்னு தான் சொல்லணும்னு சொல்றான் என் நண்பன் ஒருத்தன்.
ஆமாம். அவன் சொல்றதுலே என்ன தப்பு இருக்கு? அது நல்ல பழக்கம்தானே.
அதுக்காக போங்கநாயக்கனூர், விஜயவாங்கன்னு ஊர்களுக்கு எல்லாம் கூட மரியாதை கொடுத்துப் பேசறது எல்லாம் டூ மச் இல்லையா?
 
ஹோட்டல் சாப்பாடு எனக்கு ஒத்துக்கல்லே. நானே சமைச்சு சாப்பிடறதும் எனக்குப் பிடிக்கலை. அதான் நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தீர்மானிச்சுட்டேன்.


நானும் சமைக்கிறது, வீட்டு வேலை செய்யறது இதெல்லாம் பிடிக்காமதான் டைவர்ஸ் பண்றதா தீர்மானிச்சுட்டேன்.
 
கம்ப்யூட்டர் மூளை அவனுக்கு.
அப்படின்னா அவனுக்கு சொந்த புத்தி இல்லைன்னு சொல்றீங்களா?
 
இந்தப் புத்தகத்தோட தலைப்பே நல்லா இல்லையே.
ஏன்?
"பொறுக்கி எடுத்த பத்துக் கதைகள்"னு போட்டிருக்கு. இருந்திருந்தும் ஒரு பொறுக்கி எடுத்த பத்துக் கதைகளையா போடணும்? அதுக்குப் பதிலா ஒரு நல்லவன் எடுத்த நாலு கதைகளைப் போட்டிருக்கக் கூடாதா?.
 
உங்க பொண்ணு தமிழ் சீரியல் நிறைய பார்ப்பாளா?
ஏன் கேக்கறீங்க?
சீலிங் ஃபேனோடே பயன் என்னன்னு கேட்டா, தூக்குப் போட்டுக்கறதுக்கு உதவும்னு சொல்றாளே.
 
அந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.
எதனாலே அப்படிச் சொல்றே?
ஒரு ஜலதோஷம்னு அவர்கிட்டே போனா Chest X-ray, ECG, தலையிலிருந்து கால் வரையிலும் Scan எடுக்கணும், மத்த எல்லா டெஸ்டும் பண்ணணும் அப்படீன்னு எல்லாம் சொல்லாம, ஒரு மருந்தை அதையும் புரியற மாதிரி எழுதிக் கொடுத்து "ரெண்டு நாள் இந்த மருந்தை சாப்பிடுங்க. அப்புறம் வந்து என்னைப் பாருங்க" ன்னு சொல்றார்னா பாத்துக்கோயேன்.
 
ஆஹா!இந்த மாம்பழம் கல்கண்டு மாதிரி எவ்வளவு இனிப்பா இருக்கு. இனிமே இந்த மாதிரி பழங்களையே நீங்க வாங்கிண்டு வாங்க.
அதுக்குப் பதிலா நான் கல்கண்டையே வாங்கிண்டு வந்துடறேனே. ஏன் இவ்வளவு செலவு பண்ணி மாம்பழம் வாங்கணும்?
 
கோவிலுக்குப் போய் உங்க பேரிலே சுவாமிக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன்.
ஏண்டி? இன்னிக்குக் காலையிலே இருந்து இத்தனை நேரம் வரையிலும் நீ வீட்டிலே எனக்கு அர்ச்சனை பண்ணினது பத்தாதா?
 
நீங்க காதல் கல்யாணத்தை ஆதரிக்கிறீங்களா இல்லை எதிர்க்கிறீங்களா?
என் பொண்ணு காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை ஆதரிப்பேன். ஆனா பையன் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை எதிர்ப்பேன்.
ஏன்?
பையன் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா வரவேண்டிய வரதட்சிணை போயிடும்.
அதே பொண்ணு காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா செலவு மிச்சம். அதான் காரணம்.
 
என்னது? உன் மாமியார் கிணத்துலே விழுந்துட்டாரா? உடனே தீ அணைப்பு நிலையத்துக்கு ஃபோன் பண்ணினியா?
இல்லை. ரெண்டு மணி நேரம் கழிச்சித் தான் ஃபோன் பண்ணினேன்.
ஏன் உடனே ஃபோன் பண்ணல்லே?
உடனே ஃபோன் பண்ணினா அவங்க வந்து காப்பாத்திடமாட்டாங்களா? அதுக்குத்தான்.
 
யாருக்கு ஓட்டுப் போடறதுன்னே புரியலைங்க. யாரைப் பாத்தாலும் எனக்கே உங்க ஓட்டைப் போடுங்க, எனக்கே உங்க ஓட்டைப் போடுங்கன்னு கேக்கறாங்க.
பாருங்க, நீங்க யாருக்கு உங்க ஓட்டைப் போட்டாலும் கடைசியிலே அவங்க உங்க வாழ்க்கையிலே பெரிய ஓட்டைதான் போடப் போறாங்க.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top