• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Natural Remedies and Vitamins in Vegetables

Status
Not open for further replies.
வயிற்றுப்புண்ணை விரட்டும் சீதாப்பழம்!

வயிற்றுப்புண்ணை விரட்டும் சீதாப்பழம்!


p63a%281%29.jpg



' 'அனோனோ டுமாஸ்ஸா’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக இருப்பதால் சுவையும் இனிப்பாக இருக்கும்.

ரத்த விருத்திக்கும், ரத்தசோகைக்கும் இது நல்லதொரு மருந்தாகும். இதயநோய் வராமல் தடுக்க உதவும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் துணைபுரியும். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கும் முடி வளர்ச்சியைத் தூண்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.


சளித் தொல்லையைப் போக்கும். சிறுவர்களுக்கு ஏற்படும் பல்வலியைக் குணப்படுத்தும். பற்களை வலுப்படுத்தும். சோர்வுடன் இருக்கும் குழந்தைகளுக்கு, சீதாப்பழத்தை தினமும் கொடுக்கலாம். நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.


இதில் உள்ள தாமிரச் சத்து, குடலுக்கு மிகவும் நல்லது. காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு பழம் சாப்பிட்டுவர, அமிலத்தன்மையைச் சரிசெய்யும். வயிற்றில் புண்கள் வராமலும் தடுக்கும். மூட்டுகளில் உண்டாகும் அமிலங்களை வெளியேற்றுவதால், வாதநோய், மூட்டுவலி, கீல்வாதநோய்களைப் போக்கும்.


சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும்.


இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும்.


பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம். சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்துவந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.


பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.


சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.



எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது'' என்கிறார்.
உ.சிவராமன்,

http://www.vikatan.com/article.php?...book&utm_medium=DoctorVikatan&utm_campaign=11
 
சர்க்கரை நோய்க்கு கறிவேப்பிலை!

சர்க்கரை நோய்க்கு
கறிவேப்பிலை!


ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு அருமருந்து. கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் தேவை குறையும். உணவாக உட்கொள்ளும் மாவுப் பொருள்களை குளுகோசாக மாற்றி உடலுக்குத் தரும். சுண்ணாம்புச்சத்து இதில் அதிகம் இருக்கிறது.




Vikatan EMagazine
 
ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் நெல்லி&

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் நெல்லிக்காயின் மகத்துவம்.

ஏப்ரல் 26,2012



TN_120426180513000000.jpg


நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. அட்சய திருதியை தினம் ஒன்றில் தான் அம்பிகையைப் போற்றி கனகதாரா துதியினைப் பாடி தங்க நெல்லிக்கனி மழையைப் பொழியச் செய்தாராம் ஆதிசங்கர மகான். நெல்லி மரத்தில் திருமாலும் திருமகளும் சேர்ந்து உறைவதாகச் சொல்கின்றன புராணங்கள். ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு.

நெல்லிமரம் வளரும் வீட்டினைத் தீய சக்திகள் நெருங்காது. அங்கே துர்மரணம் நிகழாது. அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும். நெல்லிக் கனியை நிவேதனம் செய்வதாலும் அதன் இலைகளால் அர்ச்சிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். துவாதசி நாளில் ஏகாதசிவிரதத்தினை பூர்த்தி செய்து நெல்லிக்கனியை உண்பது அவசியம். இதனால் கங்கையில் நீராடிய பலனும், காசியில் வசித்த பலனும் கிட்டும். வெள்ளிக் கிழமைகளில் நெல்லி மரத்தினை வலம் வந்து வழிபடுபவர் திருமகளின் திருவருளைப் பெறுவர். அமாவாசை தினங்களிலும், இரவு நேரத்திலும் நெல்லிக்கனியை உண்பது கூடாது.


ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது.

தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று.

உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும், இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம் குறைந்து விடும்.




http://temple.dinamalar.com/news_detail.php?id=10200
 
துளசி ஒரு தாவரம். அதைப் போய் ஏன் கும்பிடு&#296

துளசி ஒரு தாவரம். அதைப் போய் ஏன் கும்பிடுகிறார்கள் ?


thulasi.jpg


துளசி வெறும் தாவரமல்ல. அது மிகச் சிறந்த மூலிகை. மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய கபத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது. அறவே நீக்கவல்லது. கபம் மனிதருக்கு மிக மோசமான பிரச்சனை.வெகு சீக்கிரம் அது மரணம் வரை கொண்டு போய் விட்டுவிடும். முன்பெல்லாம் குழந்தைகள் தும்மினால் [FONT=&quot]‘[/FONT]தீர்க்காயுசு[FONT=&quot]’[/FONT] என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஒரு முறை தும்மினாலே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது என்று தான் அர்த்தம்.

நுரையீரலில் நீர் சே
ர்ந்துவிட்டது என்பதற்கு அறிகுறி. நுரையீரலில் நீர் சேர்ந்தால் அது கபமாக மாறும்.நுரையீரல் பைகளை கபம் அடைத்துக் கொண்டால் மூச்சு விடுவது பிரச்சனை ஆகும்.

மூச்சு இழுத்து விடுவதில் பிரச்சனை என்றால் இதயத்தின் செயல்பாடுகள் வேகமாக குறையும். இதயத்தின் செயல்பாடு குறைந்தால் கிட்னியில் தாக்கம் ஏற்படும். கிட்னியில் தாக்கம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் மோசமாகும். பிறகு உடம்பு முழுக்க வலி மிகுந்து பிறகு ஜீரம் வரும்.



கபம் என்பது ஓரிரு நாளில் உச்சக் கட்டத்தை எட்டும். சட்டென்று மூச்சுத் திணறி மரணம் ஏற்படும். போன வாரம் ஆடிக் கொண்டிருந்த பையன் இந்த வாரம் இறந்து போனான் என்பது கபத்தால் ஏற்படக்கூடும்.



எனவே கபம் சேராமல் இருக்க, சேர்ந்த கபம் செயலிழக்க அவர்கள் துளசியை மிக முக்கியமான ஒரு மருந்தாக கருதி வந்தார்கள். எப்பொழுதும் கைவசம் இருக்க வேண்டும் என்று வீட்டுக்கு வீடு துளசியை வளர்ப்பதில் அக்கறை காட்டினார்கள். தினமும் உண்ணுதல் நலம் என்றார்கள்.



நீங்கள் நினைப்பது போல வெறும் தாவரம் என்று எல்லோரும் நினைத்துவிடக்கூடாது. அது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைச் சொல்வதற்காக அதற்குப் பின்னே கதைகள் ஏற்படுத்தினார்கள் .


துளசியை பெண்ணாக உருவகித்தார்கள். அது கடவுளுக்கு உகந்தது என்று காரணம் சொன்னார்கள். அந்தக் கதைகளெல்லாம் துளசியை வீட்டுக்கு வீடு வளர்ப்பதற்காக . துளசியினுடைய வளர்ச்சி கபத்தை நீக்குகின்ற கைமருந்து என்பதற்காக.

இது போல் பல்வேறு தாவரங்கள் இருக்கின்றன..


வேப்பங்கொழுந்து ஒரு அற்புதமான விஷயம். ஆனால் எல்லாவற்றையும் விட துளசியே முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்


http://balakumaranpesukirar.blogspot.in/
 
கொய்யா பழத்தை இரவில் சாப்பிடலாமா?

கொய்யா பழத்தை இரவில் சாப்பிடலாமா?

12-7-2015



E_1436692465.jpeg



பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யா பழத்தில், முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

கொய்யாமரத்தின் இலைகள், திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால், இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம், தயாரிக்கப்படும் கஷாயம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து, காயத்தின் மேல் தடவினால், அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கு மருந்தாக உதவுகின்றன.

கொய்யாமரத்தின் பட்டை, பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர் பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை நன்றாக கழுவிய பிறகு, பற்களால் கடித்து நன்கு மென்று தின்பதே நல்லது. இதனால்
பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து, இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

மது போதைக்கு அடிமையான, மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால், இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள், இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.


கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25946&ncat=11
 
நல்லா சாப்பிடுங்க நுங்கு கொழுப்பு கரையு&

நல்லா சாப்பிடுங்க நுங்கு கொழுப்பு கரையும் நன்கு!

12-7-2015


E_1436692574.jpeg



மக்களுக்கு பயன் தரும் மரங்களில் பனை மிக முக்கியமான மரமாகும். கடுமையான வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்ட பனை மரத்தில் இருந்து, பல மருத்துவ குணம் உள்ள உணவு பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால், இதன் பயன்பாடு பலருக்கு தெரிவதில்லை.

நுங்கிலிருந்து பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு என, பனையில் இருந்து கிடைக்கும் அனைத்து உணவு பொருட்களுமே மருத்துவ குணம் கொண்டவை. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.

நுங்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை கொண்டது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் நுங்கை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

நுங்கில் உள்ள நீர் வயிற்றை நிரப்பி, பசியை தூண்டும். மலச்சிக்கல் மற்றும்
வயிற்றுப்போக்கு இரண்டுக்கும், நுங்கு மருந்தாக பயன்படுகிறது. நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து, குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். நுங்கில் 'ஆந்த்யூசைன் எனும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.

வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

அதேபோல், பதநீரும், நம் ஊர் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற, மிகச் சிறந்த பானம். உடல் உஷ்ணத்தை உடனே தணித்து, உடலைக் குளிரவைக்கும் தன்மை கொண்டது.

நம் உடல் வெயில் காலத்தில் சந்திக்கும் அனைத்து அசவுகரியங்களில் இருந்தும், காக்கும் நுண்சத்துக்கள், இதில் அதிகம் உள்ளது. ரத்த சோகையைப் போக்கும். தலையில் பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இப்படி நுங்கும், பதநீரும் நமக்கு அள்ளித் தரும் மருத்துவ பலன்கள் எண்ணற்றவை.

நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். இதனால் சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும். சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.

நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தேகம் பளபளப்பாகும். நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25941&ncat=11



 
Diabetes UK - animation about diabetes and the body

Diabetes UK - animation about diabetes and the body

https://www.youtube.com/watch?v=X9ivR4y03DE

Published on Sep 3, 2013
There are two main types of diabetes, known as Type 1 and Type 2. Both types of diabetes are lifelong health conditions. There are 3.2 million people diagnosed with diabetes in the UK and an estimated 630,000 people who have the condition but don't know it.
 
சர்க்கரை நோய் தடுக்கும் உணவு

சர்க்கரை நோய் தடுக்கும் உணவு


12-7-2015

முழுதானிய உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முழுதானியத்தில் உள்ள தவிடு மற்றும் நார்ச்சத்தானது, செரிமான என்சைம்களை மட்டுப்படுத்தி, உணவு உடனடியாக செரிமானமாவதை தாமதப்படுத்துகிறது. இதன் வாயிலாக, சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தைக் குறைக்கிறது.

இதனால் ரத்தத்தில் சர்க்கரை சிறிது, சிறிதாகவே சேகரமாவதால் இன்சுலினின் வேலைப்பளு குறைகிறது. முழுதானியங்களில் தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் இதரச் சத்துக்கள் நிறைந்துள்ளதால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை தடுக்கிறது.

பிரட், வெள்ளை அரிசி சாதம், உருளைக்கிழங்கு மிக விரைவாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்பவை. இதனால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25931&ncat=11

 
List of 7 popular foods that you should NEVER reheat and eat again.

List of 7 popular foods that you should NEVER reheat and eat again.


What do you do when you have leftovers? Well, chances are that the majority of you probably reheat the leftover food and try to enjoy it for a second time. For many cases this would be considered acceptable. However, there are certain foods that pose a risk to your health once they have been repeated.

The funny thing is that you would not even consider any of these foods to be possibly dangerous. The fact of the matter is that there are certain foods that do not have the same nutritious value after being reheated.


Here is a list of 7 popular foods that you should NEVER reheat and eat again.

1. Beets

This vegetable contains nitrates, which are very good for you. However, this vegetable is not to harmful if heated up, but it is a food that doesn’t need to be re-heated.
2. Chicken

Eating chicken after a day or so is very dangerous. The composition of proteins will change, often causing digestive problems. In fact, chicken contains more protein than red meat. It is better to eat chicken cold, but if you feel it is necessary to heat up chicken make sure you do it over a long period of time on a low temperature.​
3. Potato

Potato’s are actually very good for you. They contain a lot of nutritional value. However, once you let potatoes sit they can potentially lose their nutritional value, and even become quite toxic for your system.
4. Mushrooms

You may have heard some rumors about mushrooms over the years. They are actually the most well known food that should not be reheated. Mushrooms are supposed to be eaten after preparation. If you do feel necessary to eat them the next day make sure you eat them cold. Their composition of proteins will change after sitting. They can also cause health problems including digestive issues.
5. Spinach

Re-heating spinach is very dangerous. Spinach contains a high percentage of nitrates, but when you reheat spinach you actually turn them into nitrites. This is also carcinogenetic to the body. Spinach is better to eat right after preparation.
6. Eggs

This is a high-risk food to reheat because it can become toxic if exposed to high temperatures. However, this doesn’t apply to foods where eggs are involved throughout the preparation process. You mainly want to stay away from reheating boiled eggs or scrambled eggs.
7. Celery

This vegetable is mostly used for soups, and no one is complaining about that. Like other items on this list celery contains nitrates. But if you are going to reheat soup you should take out the celery, it is not good to reheat much like carrots. This is just a general understanding many people have with regards to this vegetable.
So next time you are thinking about throwing some leftovers in the microwave, or the oven, think about what you are reheating. If your meal consists of any of these foods you should definitely reconsider. But if you are going to reheat food, which is not recommended, think about the health risks that are associated.
Sources:

http://www.healthyfoodteam.com/these-foods-must-not-be-re-heated-you-might-get-poisoned/
https://everythingorganized.org/dont-reheat-these-foods-you-may-get-poisoned/
http://2.bp.blogspot.com/-OzsLL-wLElE/TmfGjujaiTI/AAAAAAAAiM4/21jAhgiwZ2E/s1600/IMG_3551.JPG

http://www.fhfn.org/7-leftovers-you-should-never-reheat-as-this-could-poison-your-family/
 
நோய் தீர்க்கும் இஞ்சி

நோய் தீர்க்கும் இஞ்சி

வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி மற்றும் வாயு வெளியேற்றியாகவும் இஞ்சி பயன்படுகிறது.

இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு அல்லது எலுமிச்ச பழச்சாறு வகைக்கு, 30 மில்லியுடன் தேன், 15 மில்லி கலந்து, 15 மில்லியளவாக அடிக்கடி குடித்து வந்தால், ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இஞ்சிச்சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் வகைக்கு, 15 மில்லியளவு கலந்து, 15 மில்லியளவாக மூன்று வேளை குடித்தால் இருமல், இரைப்பு தீரும். 200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, 200 கிராம் தேனில் ஊறப்போட்டு, 4 நாட்கள் கழித்து, தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில், 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடன் பிணி நீங்கி, பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.

நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும். இஞ்சி முரப்பா சாப்பிட்டு வந்தால், வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும். 10 கிராம் இஞ்சி, 3 வெள்ளருக்கம் பூ, 6 மிளகு இலைகளைச் சிதைத்து, 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, 2 வேளை குடித்து வந்தால், ஆஸ்துமா, நுரையீரல் சளி அடைப்பு நீங்கும்.

முற்றிய இஞ்சியை தோல் நீக்கி, அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து, இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு, நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை, தலை முழுகி வந்தால் நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால், வாயு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25936&ncat=11
 
'கொதிப்பை' குறைக்கும் பனாரஸ் கொய்யா!

'கொதிப்பை' குறைக்கும் பனாரஸ் கொய்யா!



12-7-2015


ரத்தக்கொதிப்பை குறைக்கும் மருத்துவ குணம் வாய்ந்த, 'பனாரஸ்' ரக கொய்யா, பழநியில் விளைகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடியில், ஆண்டு முழுவதும் கொய்யா
விளைவிக்கப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள், 'லக்னோ - 49' ரக கொய்யாவை விளைவிக்கின்றனர். இவை, பெரும்பாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில், பழநி மருத்துவ நகர் விவசாயி ராஜ்குமார், ஆந்திராவில் இருந்து, 'பனாரஸ்' ரக கொய்யாவை கொண்டுவந்து பயிரிட்டுள்ளார்.

இந்த கொய்யா, ரத்தகொதிப்பை கட்டுப்படுத்துவதுடன், சர்க்கரை குறைவாக உள்ள பழமாகவும் விளங்குகிறது.புதுரகம்ராஜ்குமார் கூறுகையில், ''ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து, இந்த புதியரக கொய்யாச் செடிகளை வாங்கினேன். ஓராண்டுக்குப் பின், அவை காய்க்க துவங்கி உள்ளன.

காய்கள், வெளிப்புறம் கரும்சிவப்பாகவும், உள்புறம் முழுவதும் சிவப்பாகவும் உள்ளது. கன்று ஒன்றின் விலை, 150 ரூபாய்,'' என்றார். பழநி தோட்டக்கலை அலுவலர் பழனிச்சாமி கூறியதாவது:கொய்யாப் பழத்தில், கால்சியம், குளுக்கோஸ் அதிகமாக இருக்கும். 'பனாரஸ்' மற்றும் அலகாபாத் சிவப்புநிற கொய்யாவில், குளுக்கோஸ் குறைவாக இருக்கும். இதனால், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.தயக்கம்இவ்வகை செடிகள், கர்நாடகா, ஆந்திராவில் அதிகவிலைக்கு வாங்க வேண்டியுள்ளதால், இவ்வகை கொய்யாவை விளைவிக்க, தமிழக விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். நம்மூர் கொய்யா, இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து தான் காய்க்கும். ஆந்திர மாநில கொய்யா, ஒரே ஆண்டில் காய்க்கும். சந்தையிலும், இவ்வகை கொய்யாவிற்கு கிராக்கி உள்ளது.இவ்வாறு பழனிச்சாமி தெரிவித்தார்.'பனாரஸ்' ரக கொய்யா கன்றுகளை, மானிய விலையில் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால், அதிகளவில் விளைவிக்க, விவசாயிகள் ஆர்வமுடன் இருப்பதாக, பழநி பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1294255
 
இன்சுலின் சுரக்க உதவுகிறது ஆப்பிள்!

இன்சுலின் சுரக்க உதவுகிறது ஆப்பிள்!


12-7-2015

E_1436692596.jpeg


ஆப்பிள் பழம் எல்லா தரப்பு மக்களாலும், விரும்பி பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது.

ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது.

ஆர்கானிக் கலவை, இரும்புச்சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால், ரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது. அதிக ரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும், மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால், ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள்
ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடல் கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டால், ஆப்பிள் பழத்தை ஆவியில் வேக வைத்து, பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் சாப்பிடுவதால், மிகுந்த நன்மை கிடைக்கிறது. திருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள், தினசரி ஆப்பிள் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில், 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். உடம்பில் சிலருக்கு கெட்ட வாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படிப்பட்டவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள சென்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் ரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடை இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.

ஆப்பிள் பழம் ஒன்றை துண்டித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி, இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட், 500 கிராம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டு வந்தால் இயற்கையான தாதுபலம் கிடைக்கும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் ஆப்பிள் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25940&ncat=11
 
தவிர்க்கலாம் மூட்டுவலி!

தவிர்க்கலாம் மூட்டுவலி!



'காலை மடக்க முடியலையே...’ - வயோதிகர்கள் இருக்கும் வீட்டில்தான் இந்த மாதிரியான முனங்கல் சத்தம் கேட்கும். ஆனால், இன்றோ இளம் வயதிலேயே முழங்கால் மூட்டு வலியால் அவதிப்படும் நிலை. ஆர்த்தோ டாக்டரை சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது மூட்டுவலிப் பிரச்னைக்காக, அதிக அளவில் இளைஞர்கள்தான் வந்திருந்தனர். இளம் வயதில், மூட்டு தேய என்னக் காரணம் என விவரிக்கிறார் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் முத்துக்குமார்.


''தொடை எலும்பு, கால் எலும்பு, முட்டிச்சிப்பி (பெட்லா) இந்த மூன்று எலும்புகளும் சேர்ந்ததுதான் முழங்கால் மூட்டு. உடலில் அதிக எடையைத் தாங்கக்கூடியதும் இந்த முழங்கால் மூட்டுதான். இதன் இணைப்புகள் ஒரே மாதிரியாக இயங்க, உடல் எடை சீராக இருக்கவேண்டும். உடல் எடையில் மாறுதல் ஏற்படும்போது வீக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.


ஒருவரின் பி.எம்.ஐ அளவு 30-க்கு மேல் போகும்போது உடல்பருமன் பிரச்னை வரும். இந்த அதிகப்படியான உடல் எடை காரணமாக மூட்டு பாதிக்கத் தொடங்கும். சாதாரணமாக நம்மை அறியாமலேயே நாள் ஒன்றுக்கு மூட்டினை 9,000 முறை பயன்படுத்துகிறோம். உடலின் எடை அதிகரித்துக்கொண்டே போகும்போது, நிற்க, நடக்க என ஒவ்வோர் அசைவின்போதும் மூட்டுகளில் தேய்மானம் அதிகரிக்கும்.


இதனுடன் எலும்பு இணைப்புகளில் உள்ள கார்ட்டிலேஜ் என்ற ஜவ்வு தேயும்போது, எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கடுமையான வலி எடுக்கும். அழுத்தம் உள் பக்க வழியாக ஊடுருவும்போது, மூட்டின் ஒரு பகுதி தேய்மானம் அடையும்.


நடப்பதைத் தவிர்ப்பதால் முழங்காலில் தொடைப் பகுதியில் சதை குறைந்து அங்கு கொழுப்பு அதிகரிக்கிறது. அதிக எடையைத் தூக்கும்போது, அதிக அளவு முழங்கால் அசைவு, இடுப்பு அசைவு, கால் அசைவால் சின்ன எலும்பான முட்டிச்சிப்பியில் உராய்வு ஏற்பட்டு, மூட்டு வலிக்கு வழி வகுக்கும். முதுகு எலும்பு சரியான நிலையில் இல்லாமல் இருக்கும்போதுகூட மூட்டு எலும்பில் தேய்மானம் ஏற்படலாம்.


p24.jpg

சிக்குன்குனியா, ருமாட்டிக் போன்ற சில நோய்களால்கூட மூட்டுப் பகுதி பாதிக்கப்படும். இன்று இளம் வயதினர் சுமார் 10 கிலோ எடையை முதுகில் சுமந்து செல்கின்றனர். இதுவும் இளமையிலேயே மூட்டுவலி வருவதற்கு முக்கியக் காரணம். தவிர, எலும்புகள் மற்றும் தசைகள் போதிய வலுவின்றியும், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் மரபணுக் காரணங்களால் தேய்மானம் ஏற்படலாம்.'


அறிகுறிகள்:



'அதிக தூரம் நடப்பது, உட்கார்ந்து எழும்போது, தூக்கத்தின்போது என முழங்காலில் வலி ஏற்படும். சில நேரங்களில் சும்மாவே இருந்தாலும்கூட, மூட்டு வலி இருக்கும். மூட்டுப் பகுதியில் வலி இருந்தால், நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். ஓரிரு வாரங்களில் சரியாகலாம். ஆனால், மூட்டுவலி இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து குறையாமல் இருந்தால், பாதிப்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.


சிகிச்சை:



பிசியோதெரபி, உடற்பயிற்சி செய்வதன் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம். வலி அதிகமாக இருக்கும்போது எக்ஸ்ரே எடுப்பதன் மூலம் தேய்மானத்தின் அளவைத் தெரிந்துகொள்ளலாம். வலி, தேய்மானத்தைப் பொருத்து மருந்து மாத்திரைகள், ஊசி எனச் சிகிச்சைகள் தொடர வேண்டியிருக்கும். பத்தாயிரத்தில் ஒருவருக்குத்தான் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

டிப்ஸ்... டிப்ஸ்...



dot%282%29.jpg
உணவிலும் அதிகக் கவனம் தேவை. அரிசி சாதத்தைக் குறைத்து, வைட்டமின், கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற அனைத்துச் சத்துக்களும் இருக்கும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் எனச் சரிவிகித உணவை எடுத்துக்கொள்வது நல்லது.


dot%282%29.jpg
பிரத்யேக உடற்பயிற்சியுடன், யோகா பயிற்சியும் நல்ல பலனைத் தரும்.
dot%282%29.jpg
நடைப்பயிற்சியும் நல்ல பலனைத் தரும். மூட்டுத் தேய்மானம் இருந்தாலும், தினமும் சிறிது தூரம் நடப்பது நல்லது.
dot%282%29.jpg
முதுகில் 5 கிலோ எடைக்கு மேல் சுமையைத் தூக்கக் கூடாது.

மாடிப்படி ஏறலாமா?



மாடிப்படி ஏறுவது நல்ல உடற்பயிற்சி என்று சிலர் அதை மட்டுமே செய்கின்றனர். இது தவறு. மாடிப்படிகளில் ஏறி இறங்குவது மட்டுமே எக்சர்சைஸ் இல்லை. உடல் பருமன் உள்ளவர்கள், 40 வயதில் எந்தவிதமான உடற்பயிற்சியும் இன்றி இருப்பவர்கள் படிகளில் அதிகம் ஏறி இறங்கும்போது, முத்துச்சிப்பி உராய்வு ஏற்படும். சர்க்கரை நோய், மூட்டுவலி இருப்பவர்கள், இதய நோயாளிகள் படிக்கட்டுகள் ஏறுவது தவிர்ப்பது நல்லது. உயரத்துக்கு ஏற்ற எடையுடன் ஆரோக்கியமாக இருப்பவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் படிக்கட்டு ஏறுவது பாதிப்பை ஏற்படுத்தாது.

- ரேவதி, படங்கள்: தி. குமரகுருபரன்
http://www.vikatan.com/article.php?...book&utm_medium=DoctorVikatan&utm_campaign=11
 
ஜாதிக்காய் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை &#

ஜாதிக்காய் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை நீங்கும்


12-7- 2015

E_1436692474.jpeg


இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் அனைத்து மசாலா பொருட்களும் மருத்துவ குணம் உள்ளவை. அதில் சில விசேஷ தன்மையுள்ள மருத்துவ பொருட்களும் உள்ளன. அதில் ஜாதிக்காய் மிக முக்கியமானது. ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவற்றை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாவு சல்லடையில் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும், ஒரு டீஸ்பூன் அளவு தூளை எடுத்து, காய்ச்சிய பசும்பாலில் கலக்கி, 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண் மலட்டு தன்மை நீங்கும்.

ஜாதிக்காய், சித்திர மூலவேர், இலவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம், இவைகளில் வகைக்கு, 10 கிராம் எடுத்து, உரலில் போட்டு தூள் செய்து மாவு சல்லடையில் சலித்து, வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, காய்ச்சிய பசும்பாலில்
கலக்கிக் குடித்து வந்தால், வாத நோய் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். இதே மருந்து, பக்கவாதம், தலைவலி, வயிற்று வலியையும் குணப்படுத்தும்.

ஜாதிக்காய், சீரகம், சுக்கு ஆகியவற்றை நெல்லிக்காயளவு எடுத்து, அம்மியில் வைத்து மை போல அரைத்து, அதை மூன்று சம உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, காலை மாலை தினசரி ஒரு வேளைக்கு, ஒரு உருண்டை வீதம் ஒரு டம்ளர் பச்சை பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் வயிற்றுப்போக்கு நிற்கும்.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து, இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். விந்து முந்துதலை தவிர்க்க, மூலிகைகள் பல உள்ளன. அதில் மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.


எந்தக் கோளாறினால் பல் வலி ஏற்பட்டாலும், ஜாதிக்காயில் பட்டாணி அளவு எடுத்து, நைத்து வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்து, கால்மணி நேரம் வைத்திருந்தால் பல்வலி நீங்கும். காலை, பகல், மாலை என, ஒரு நாளைக்கு மூன்று வேளை வைத்தால் பல் வலி குணமாகும். ஜாதிக்காயை உடைத்து, கோலிக் குண்டளவு ஜாதிக்காயை சுத்தமான அம்மியில் பால் விட்டு மை போல அரைத்து, இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றிக் கனமாக பற்றுப் போட்டுப் படுத்துக் கொள்ள வேண்டும். காலையில் கண்களைக் கழுவினால், கண்பார்வை தெளிவடைந்து விடும். ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசி வந்தால், நாளடைவில் மறையும் என, சித்த மருத்துவம் கூறுகிறது.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25945&ncat=11
 
51 Black Seed (Klonji) Benefits

51 Black Seed (Klonji) Benefits




1. Baldness and Hair Loss
Loss of hair could be either due to age or some other underlying conditions. People have reported to have improved the growth of hair using black seed oil.
Just pour some oil in your palm and rub both hands against each other. Massage then to the scalp, especially the bald areas.
2. Beard Growth
If you have a thin beard and wants to make it thick, black seed is the solution. Just take some and massage in to the beard. Make sure it reaches the roots.
3. Bee and Wasp Stings
When I was a child, I used to “to make the wasps and bees angry” by inserting thins sticks in the wall holes.lol, naughty, any? I used to get stung and when it was on the face, I would not get out three days and stay at home. The reason that my face would be so swollen that I would become a good laughing stock for my friends. I did not know at the time the miracle of black seed
Boil the seeds in water and apply to the stings.
4. Cancer and Tumors
Crush fresh cloves of garlic and mix with honey and black seed or its oil. Take a teaspoon three times a day.
5. Cardiovascular
Mix half a teaspoon of the oil with warm water and drink before breakfast.



6. Radiant Skin and Face
Mix the oil with some olive oil and honey. Apply to face or skin and leave for 15 minutes. Wash with warm water. It makes the skin glow.
7. Chest Congestion
Take one teaspoon twice a day. If you mix it with honey, it works wonders.
8. Cough
Mix an equal amount of the oil with raw honey. Take a teaspoon of the mixture twice a day.
9. Diabetes
Mix the oil with raw or manuka honey. Take one teaspoon twice a day. Do not take sugar and other foods that cause diabetes.
10. Diarrhea
Put one teaspoon of the oil in one cup of yogurt and drink twice a day. If you add honey, it will add to the taste to make it yummy and heal you faster.



11. Earache

Take a few drops of olive and mix it with a few drops of black seed oil. Put three to five drops in the ear. Please note if you have perforated drum, ask your doctor.
12. Eye Disease and Vision
Carrots are known for making the eye sight better. Mix half a teaspoon of oil with one cup of carrot and drink.
13. Flue and Colds
Mix one teaspoon of honey with one teaspoon of black seed oil and take twice a day. For best results, use raw or local organic honey.
14. Facial Paralysis
Boil the water and add one teaspoon of oil and inhale the fumes.
15. Nasal Congestion
Place only 3 drops in each nostril to ease the congestion



16. Gallstones
Take one tablespoon of black seed and mix it with honey and warm water. Drink twice a day. You can also mix half a cup of olive oil with a tablespoon of black seed and raw honey. Drink the solution on empty stomach before going to bed.
17. Liver Stones
Same as above.
18. Gas and Flatulence
Mix honey and black seed in equal amount and take first thing in the morning.
19. Hemorrhoids
Mix honey, black seed and oil in equal amount and drink. You can also apply the paste to the itching area.
20. Premature Gray Hair
Mix an equal amount of olive and black seed oil and massage in to the scalp. Wash with warm water after an hour.



21. Headaches and Migraines
Mix black seed oil and honey in equal proportion and eat twice a day. For quick result put a few drops in nostrils and rub on the temples.
22. High Blood Pressure
Boil water and add one teaspoon of the oil. Leave it until it is moderately warm and then drink. For best results, mix garlic with black seed and eat.
23. Hypertension
Take half a teaspoon in warm water and drink.
24. Boosting Immunity
Take one teaspoon of the oil twice a day for general well being.
25. Breast Feeding and Lactation
Mix honey and the oil in equal amount. Take one teaspoon every day.



26. Boosting Memory
Take a half teaspoon of the oil with half a teaspoon of raw honey. Take twice a day.
27. Moles
Make a paste of honey and black seed oil and apply to moles.
28. Mosquitoes
In hot countries, it is often a big problem especially at night. Put some black seed oil in the incense burner and enjoy a nice and sound sleep.
29. Mouth Infection
Take half a teaspoon and swish around in your mouth for 5 minutes.
30. Gingivitis
Do the same procedure as above.




31. Nose and Throat Conditions




Make a mixture of the oil with lemon juice and honey. Take twice a day.
32. Back Pain
Rub the oil on the back before going to bed. Eat honey and black seed or its oil.
33. Muscular Pain
Apply the oil to the area where there is pain and massage gently for a few minutes.
34. Rheumatic Pains
Mix black seed and honey and eat daily in small amount. Rub the oil on the aching areas gently.
35. Stomach Pain
Take a teaspoon of black seed with honey. Also mix some honey in a peppermint tea and sip it while it is lightly warm.



36. Tooth ache
Boil cider vinegar and black seed and rinse the mouth with the liquid. Repeat twice a day until the pain is gone.
37. Gum infection
Take some oil and rub them on the gums gently all rounds. Repeat twice a day.
38. Weight Loss
Some people use it for weight loss with great results. It boost the metabolic rate so you may burn more calories. Take 1 a teaspoon in the morning and another at night.
39. Asthma
Take one teaspoon mixed with one teaspoon of honey.
40. Eczema



Mix one teaspoon of oil with one tablespoon of manuka honey and one tablespoon of extra virgin olive oil. Apply the paste twice a day.


41. Bladder infection
One teaspoon of black seed or its oil with raw or manuka honey twice a day.
42. Infections
Crush two fresh garlic cloves and add one teaspoon of black seed with one tablespoon of honey. Eat twice a day. You can also apply it to external wounds. For external replace the seeds with oil.
43. Sore Throat
Mix one teaspoon with fresh lemon juice and honey. Take twice a day.
44. Cold and Flue
Take one teaspoon of oil before break fast.
45. Nasal Congestion
Put 3 drops in each nostril.


46. Chest congestion
Massage gently on the chest.
47. Hemorrhoids
Take one teaspoon twice a day. Mix honey and olive and apply the paste to the itching area.
48. Gas and flatulence
Take one teaspoon twice a day.
49. Toothache
Dip a cotton ball in the oil and place it on aching tooth.
50. Insomnia
Mix one teaspoon with one tablespoon of honey and eat before going to bed.`
51. Dry Mouth
To treat dry mouth with black seed oil, take a table spoon and swish around your mouth for one minute and the spit out. Do not rinse your mouth with water for 30 minutes. You may also swallow on teaspoon twice a day for great results.

http://www.peashealth.com/top-50-tricks-and-tips-about-the-use-of-black-seed-oil/
 
வெள்ளைக் கரு சாப்பிட்டால்உடல் எடை குறைய&

வெள்ளைக் கரு சாப்பிட்டால்உடல் எடை குறையும்!

கோவையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து சிறப்பு நிபுணர், சுபத்ரா சுந்தர்: இத்தனை வயதிற்கு மேல் முட்டை சாப்பிடக் கூடாது என்ற விதிமுறை எல்லாம் கிடையாது. முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்து, முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு முட்டையில், 77 கலோரிகள் உள்ளன; இதில், 6 கிராம் புரதச்சத்து இருக்கிறது. புரதமும், அமினோ அமிலமும் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பித்தலுக்கும் முக்கியமான காரணிகள்.முட்டையில், இயற்கையாகவே வைட்டமின், 'பி12' மற்றும் ரைபோபிளமின் போன்ற நினைவாற்றலை மேம்படுத்தும் வைட்டமின்கள் உள்ளன.

இந்தச் சத்துக்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மார்களுக்கும் முக்கியத் தேவை. முட்டையில் உள்ள குறிப்பிட்ட சில ஆன்டி ஆக்சிடென்ட், கண் புரை போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு, 5 சதவீதம் உள்ளது.எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின், 'டி' முட்டையில் உள்ளது. அதேபோல், தோலுக்குத் தேவையான வைட்டமின், 'ஈ' மற்றும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ஆதாரமான இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துத்தநாகம் போன்றவையும் முட்டையில் உள்ளன.

செல் சுவர்களை உருவாக்கும், மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் கோலின் என்ற நுண்ணுாட்டச் சத்தும் முட்டையில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல், முட்டையை தவிர்க்க கூறப்படும் முக்கிய காரணம், மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மட்டும், 90 சதவீதம் உள்ளதால் தான். எனினும், அதனுடன் சேர்த்து நிறைய நுண்ணுாட்டமும் இருக்கிறது. ஒரு மஞ்சள் கருவில்,185 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. இளம் வயதினர் தினமும், 300 கிராம் கொழுப்பு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.இதய நோய், சர்க்கரை நோய் பிரச்னை, அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால், முட்டையின்
மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.


வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களும் முட்டையை தவிர்க்கலாம்.கொழுப்பை தவிர்க்க விரும்புபவர்கள், காலைஉணவில், இரு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், இதைப் பின்பற்றினால் நல்ல பலன் இருக்கும் என்பது, என் சொந்த அனுபவம். தொடர்ந்து எட்டு வாரங்கள், காலை உணவில்,

முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டால், உடல் எடை கணிசமாகக் குறையும். முட்டையை அதிக எண்ணெய், மசாலா சேர்த்து நிறைய விதங்களில் சமைக்கிறோம். முடிந்த அளவு இப்படி செய்வதைத் தவிர்த்து, வேக வைத்தோ அல்லது கொதிக்கும் நீரில் அப்படியே உடைத்து ஊற்றி நன்றாக வெந்த பின் சாப்பிடலாம்!


http://www.dinamalar.com/news_detail.asp?id=1294657
 
குழந்தையின் ஆரோக்கியம் உங்கள் கையில்...

குழந்தையின் ஆரோக்கியம் உங்கள் கையில்...



உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறதா? குழந்தைக்கு ஆரோக்கியமான நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்கிறீர்களா? என்பதை நீங்களே அலசி ஆராய்ந்து அறிந்துகொள்ள, இங்கே கொடுக்கப்பட்டுள்ள கேள்வி-பதில்கள் உங்களுக்குத் தெளிவான தீர்வைத் தரும். இதனால், எதிர்காலத்தில் உங்கள் குழந்தையின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும்.


1. காலை உணவாக உங்கள் குழந்தை விரும்பிச் சாப்பிடுவது?
அ. இட்லி, ஓட்ஸ் கஞ்சி போன்ற ஆரோக்கியமான உணவுடன் பால்
ஆ. சர்க்கரை நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவு வகைகள்

இ. பெரும்பாலும் சாப்பிடுவதே இல்லை


(ஆரோக்கிய உணவு எடுத்துக்கொள்வது அன்றைய தினம் நல்லபடியாக இருக்க உதவும்)

2. பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு நொறுக்குத் தீனியாக எதைக் கொடுக்கிறீர்கள்?



p44.jpg
அ. நறுக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் அல்லது உலர் பழங்கள், நட்ஸ்
ஆ. சிப்ஸ், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள்
இ. சாக்லேட், இனிப்புகள், பிஸ்கட்கள்
(சிப்ஸ் வகைகளில் அதிக அளவில் கொழுப்பு மற்றும் உப்பு இருக்கிறது. இனிப்புகளில் அதிக அளவில் சர்க்கரை உள்ளதால், உடலில் கொழுப்பு அதிகரிக்கும். இதற்கு பதில் பழங்கள், நட்ஸ், உலர் பழங்கள், காய்கறிகள் கொடுக்கலாம்.)


3. நாள் ஒன்றுக்கு எவ்வளவு பழங்கள் அல்லது பச்சைக் காய்கறிகளை உங்கள் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள்?
அ. ஐந்து சிறிய 'கப்’-க்கும் அதிகமாக
ஆ. மூன்று - நான்கு சிறிய கப்
இ. இரண்டுக்கும் கீழ்
(காய்கறி, பழங்கள்தான் வைட்டமின் மற்றும் தாது உப்புக்களின் முழுமையான இருப்பிடம். எனவே, ஒரு நாளைக்கு ஐந்து கப்-க்கு மேல் காய்கறி பழங்கள் சேர்த்துக்கொள்வது நல்லது.)


4. இரவில் உங்கள் குழந்தை எவ்வளவு நேரம் தூங்குகிறது?
அ. 8 மணி நேரத்துக்கும் மேல்
ஆ. 5 முதல் 7 மணி நேரம்
இ. 4 மணி நேரத்துக்கும் குறைவாக
(4-9 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 11.30 மணி நேரம் தூக்கம் அவசியம். 9 வயதைக் கடந்த குழந்தைகளுக்கு குறைந்தது 8.30 மணி நேரம் தூக்கம் அவசியம்.)


5. உங்கள் குழந்தை, பள்ளிக்கு எப்படிச் செல்கிறார்?
அ. நடந்து அல்லது சைக்கிளில்
ஆ. கார் அல்லது பஸ்ஸில்
இ. மற்றவை
(பள்ளிக்கு நடந்து செல்வது நல்லது. தொலைவில் இருக்கிறது என்றால், குறிப்பிட்ட தூரமாவது நடந்து செல்வது அவசியம்.)


6. உங்கள் குழந்தையை அன்றாடம் 'விளையாட்டு’ போன்ற ஏதேனும் உடற்பயிற்சியை எத்தனை மணி நேரம் செய்யவைக்கிறீர்களா?
அ. 1-2 மணி நேரத்துக்கு
ஆ. 2 மணி நேரத்துக்கும் மேல்
இ. 30 நிமிடங்களுக்கும் குறைவாக அல்லது இல்லை.
(பள்ளிக்கு நடந்து செல்வது, மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது என, ஏதேனும் ஓர் அடிப்படை உடல் உழைப்பு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 60 நிமிடங்களாவது விளையாட அனுமதியுங்கள். இது உங்கள் குழந்தையின் எலும்பு, தசை வளர்ச்சிக்கு நல்லது.)


7. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டர் முன் உங்கள் குழந்தை நேரம் செலவழிக்கிறார்?
அ. ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக
ஆ. 2 முதல் 7 மணி நேரம்
இ. 7 மணி நேரத்துக்கும் மேல்
(தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் கேம் போன்றவற்றைக்கும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் அனுமதிக்காதீர்கள்.)
(மதிப்பெண் அ-3, ஆ-2, இ-0)
மதிப்பெண் 17-க்கும் மேல்
உங்களின் 'குழந்தை வளர்ப்புமுறை’ சிறப்பாக உள்ளது. உங்கள் குழந்தை, துடிப்பான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமான உணவுமுறைகளால் நலமுடன் இருக்கிறார்.


மதிப்பெண் 12 முதல் 16 வரை
சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால், உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். உங்கள் குழந்தை என்றென்றும் ஆரோக்கியமாக இருக்கும்.


மதிப்பெண் 11-க்கும் கீழ்
உங்கள் குழந்தை ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் சற்று பின்தங்கியுள்ளார். கவலை வேண்டாம். ஒவ்வொரு கேள்வியின் முடிவிலும் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனைகளைப் இன்றிலிருந்தே பின்பற்ற ஆரம்பியுங்கள். உங்கள் குழந்தையும் ஆரோக்கியமான குழந்தைதான்.


- பா.பிரவீன் குமார்


http://www.vikatan.com/article.php?...book&utm_medium=DoctorVikatan&utm_campaign=11

 
பாகற்காயின் பலே மருத்துவ குணம்

பாகற்காயின் பலே மருத்துவ குணம்

ஜூலை 18,2015,

201507181130490477_Bale-of-bitter-gourd-Medical-Character_SECVPF.gif



காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.

அதனால்தான் நம் வீடுகளில் பாகற்காயை ஊறுகாய், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என்று பலவிதங்களில் சமைத்து உண்கிறோம்.

100 கிராம் பாகற்காயில், 25 மில்லி கிராம் கலோரி, 20 மி.கி. கால்சியம், 70 மி.கி. பாஸ்பரஸ், 1.6 சதவீதம் புரதம், 0.2 சதவீதம் கொழுப்பு, 1.8 மி.கி. இரும்புச் சத்து, 0.8 சதவீதம் தாதுக்கள், 88 மி.கி. பி காம்ப்ளெக்ஸ், 0.8 சதவீதம் நார்ச்சத்து, 4.2 சதவீதம் கார்போஹைட்ரேட் சத்துகள் உள்ளன.

வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா கரோட்டின், பிளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

மருத்துவப் பயன்கள்


பாகற்காயில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி ஹைபர் கிளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு தேவைப்படும் சர்க்கரையைக் கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கின்றன.

அதுமட்டுமல்லாது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

மேலும் செரிமான அமிலமான காஸ்ட்ரிக் ஆசிட் அதிகமாக சுரப்பதால் பசி அதிகரிக்கும்.

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

'டைப் 2' நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள 'பாலிபெப்டைடு-பி' என்ற வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகின்றன.

எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்!


http://www.dailythanthi.com/News/World/2015/07/18113057/Bale-of-bitter-gourd-Medical-Character.vpf
 
ஆஸ்துமா அறிகுறிகளை அறிவோம்!

ஆஸ்துமா அறிகுறிகளை அறிவோம்!

(16/07/2014)

வஸ்தையின் மறுபெயர் ஆஸ்துமா. மூச்சுக் குழாயின் உட்சுவர் வீக்கம் அடைதல் மற்றும் சளியை அதிக அளவில் சுரத்தல் போன்ற காரணங்களால் மூச்சுக்குழாயின் பாதை சுருங்கி மூச்சுவிடச் சிரமப்படுவதையே ஆஸ்துமா என்கிறோம். இதனால், இருமல், வீசிங் பிரச்னையும் ஏற்படுகிறது.


சிலருக்கு இந்தப் பிரச்னை எப்போதாவது ஏற்படலாம். வேறு சிலருக்கோ இது வாழ்வையே பாதிக்கக்கூடிய, உயிரைப் பறிக்கக்கூடிய அளவு மிகக் கடுமையானதாக இருக்கும். ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், டாக்டரிடம் சென்று தொடர் மருத்துவ ஆலோசனையின்படி 'இன்ஹேலர் தெரப்பி’ பெறுவதன் மூலம் இதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதன்மூலம் ஆஸ்துமா இல்லாதவர்கள் போலவே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.


அறிகுறிகள்:



மிகக் குறைந்த அளவு முதல் மிகக் கடுமையானது வரை இருக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறி வெளிப்படும் என்று கூற முடியாது.
பொதுவாக இதன் பாதிப்புகள், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் அதிகமாக இருக்கும்.


பொதுவான சில அறிகுறிகள்...
dot%282%29.jpg
சுவாசித்தலில் சிரமம்
dot%282%29.jpg
நெஞ்சில் ஒருவித இறுக்கம்
dot%282%29.jpg
இளைப்பு
dot%282%29.jpg
இருமல் அல்லது இளைப்பு காரணமாகத் தூக்கமின்மை
dot%282%29.jpg
மூச்சு விடும்போது விசில் அடிப்பது போன்ற மெல்லிய ஓசை (வீசிங்)
dot%282%29.jpg
ஜலதோஷம் பிடித்திருக்கும்போது சுவாசிக்க சிரமப்படுதல்


காரணம்:



ஆஸ்துமா ஏன் வருகிறது என்பதற்குத் தெளிவான காரணங்கள் இல்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் மற்றும் மரபியல்ரீதியான காரணங்களால் ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
p34b.jpg
ஆஸ்துமாவுக்கான வாய்ப்பை அதிகரிப்பவை:



மகரந்தத் தூள், நாய், பூனையின் முடி, தூசி, புகை மற்றும் மாசு படிந்த காற்று,

அடிக்கடி ஜலதோஷம் போன்ற நுரையீரல் தொடர்பான நோய்த்தொற்று,
குளிர்ந்த காற்று, சிலவகையான மருந்துகளைப் பயன்படுத்துதல், அதிக மன அழுத்தம், உணவு ஒவ்வாமை.


ஆஸ்துமா அட்டாக்கைத் தவிர்க்க:



ஆஸ்துமா ஏற்படுவதற்கான சூழ்நிலைகளைத் தவிர்ப்பதன் மூலம், வாய்ப்புகளைக் குறைக்க முடியும்.


ஜலதோஷம், நிமோனியா போன்ற பாதிப்புகளை அலட்சியம் செய்யாமல், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.



ஆஸ்துமாவை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைத் தவிர்க்க வேண்டும்.
சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் டாக்டரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.



ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.



டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

http://www.vikatan.com/article.php?...book&utm_medium=DoctorVikatan&utm_campaign=11
 
மூக்கில் ரத்தம் வடிவது ஏன்?

மூக்கில் ரத்தம் வடிவது ஏன்?

July 18, 2015


மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கிலிருந்து திடீரென்று ரத்தம் வடிவதுண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்தத் தொல்லை அதிகமாகக் காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' (Epistaxis ) என்று அழைக்கிறார்கள்.


மூக்கு ஒரு தொட்டாற்சிணுங்கி!



சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியிலிருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்குத் தேவையான வெப்பநிலைக்கு மாற்றி அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.


மூக்கு பார்ப்பதற்குத்தான் பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. வெளிப் பக்கம் தெரிகிற மூக்கின் இரு பக்கங்களிலும் துவாரங்கள் உள்ளன. இந்தப் புறநாசித் துவாரத்தில் விரல் விட்டால் குகை மாதிரி உள்ளே போகிறதல்லவா? அந்தப் பகுதிக்கு ‘மூக்குப் பெட்டகம்' (Nasal box) என்று பெயர். இதன் ஆரம்பப் பகுதியில், முகத்தின் பல பகுதிகளிலிருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன.


இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா ' (Little’s area) என்று பெயர். இது ஒரு தொட்டாற்சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்று பொதுவாகச் சொல்வார்கள்.

மூக்கிலிருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீதக் காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.



என்ன காரணம்?



குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்துக் குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பல்பம், பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்துக் குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்தக் கசிவு ஏற்படும்.


சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கிலிருந்து ரத்தம் வடியும். அல்லது மூக்கிலிருந்து சளியை வெளியேற்ற மூக்கைப் பலமாகச் சிந்துவார்கள். இதனாலும் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தம் வரலாம்.


மூக்கில் சதை வளர்ச்சி!



குழந்தைகளுக்கு மூக்கில் ‘நீர்க்கோப்புச் சதை' (Nasal Polyp) வளர்வதுண்டு. தவிர, மூக்கும் தொண்டையும் இணைகிற பகுதியில் ‘அண்ணச்சதை' (Adenoid) வீங்குவதும் உண்டு. இந்த இரண்டு காரணங்களால், மூக்கு அடைத்துக்கொள்ளும். அடைப்பை விலக்கக் குழந்தைகள் அடிக்கடி மூக்கைக் குடைவார்கள் அல்லது சிந்துவார்கள். விளைவு, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும்.


வினையாகும் விளையாட்டு!



குழந்தைகள் விளையாட்டாகக் குச்சி, பேப்பர் துண்டு, ரப்பர் துண்டு, பல்பம், பஞ்சு, பயறு, பொத்தான், நிலக் கடலை, பருத்தி விதை, ஆமணக்கு விதை, வேப்பமுத்து, பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை மூக்கில் திணித்துக் கொள்வார்கள். இவை மூக்கினுள்ளே ஊறி, புடைத்து, புண் ஏற்படுத்தும். அப்போது அப்புண்ணிலிருந்து ரத்தம் கசியும்.


வெப்பச் சூழல்!



படிக்கிற இடம், வேலை செய்கிற இடம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் நிலவுகிற தட்பவெப்பம் காரணமாகவும் மூக்கிலிருந்து ரத்தம் வடியும். மூக்குக்கு மிகுந்த குளிர்ச்சியும் ஆகாது; மிகுந்த வெப்பமும் ஆகாது. குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றைச் சுவாசித்தால், மூக்கில் ரத்தம் வடியும்.


கோடையில் வெப்பம் மிகுந்த காற்றைச் சுவாசிக்க நேரிட்டாலும் இதே பிரச்சினைதான். மூக்கின் உட்பகுதிகள் இந்த வெப்பத்தால் உலர்ந்து, அங்குள்ள சவ்வுகளில் விரிசல் ஏற்படும். இதன் காரணமாக மூக்கில் ரத்தம் வடியும். ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட பள்ளி அறைகளில் படிக்கிற குழந்தைகளுக்கு அதிக வெப்பம் காரணமாக, மூக்கில் ரத்தம் வடியும் வாய்ப்பு அதிகம்.


நோய்களும் காரணமாகலாம்!



ஒவ்வாமை, தடுமம், மூக்குச்சளி, மூக்குத்தண்டு வளைவு, காசநோய், கல்லீரல் நோய், தொழுநோய், இதயநோய், காளான்நோய், புற்றுநோய் கட்டி, ‘ஹீமோபிலியா' போன்ற ரத்த உறைதல் கோளாறுகள், சைனஸ் பிரச்சினை, டைபாய்டு காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வைட்டமின் சி, கே சத்துக்குறைவு, ரத்தசோகை, பரம்பரை ரத்தக் கோளாறுகள், கபாலக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், மது அருந்துவது போன்ற காரணங்களாலும் மூக்கு வழியாக ரத்தம் வடியலாம்.


அடிக்கடி மூக்கில் ரத்தம் வடிபவர்களும், நடுத்தர வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மூக்கில் ரத்தம் வந்தால், `இது சாதாரண சில்லுமூக்குத் தொல்லைதான்’ என்று அலட்சியமாக இருக்காமல் காலத்தோடு மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.


காரணம், இவர்களுக்குச் சாதாரணக் காரணங்களைவிட உயர் ரத்த அழுத்தம், ரத்தப் புற்றுநோய், புற்றுநோய் கட்டி ஆகிய மூன்று காரணங்களால் மூக்கில் ரத்தம் வடிவது உண்டு. இவற்றுக்கான முறையான சிகிச்சையை நோயின் ஆரம்ப நிலையிலேயே பெற்றுவிட்டால்தான், ஆரோக்கியத்துக்கு ஆபத்து வருவதும் தடுக்கப்படும்.


என்ன பரிசோதனை?



வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், மூக்குப் பகுதியை எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எண்டாஸ்கோப்பி எடுத்துப் பார்த்தால் மூக்கில் ரத்தம் வடிவதற்குக் காரணம் தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால், முழு நிவாரணம் கிடைக்கும்.


என்ன முதலுதவி செய்வது?



பாதிக்கப்பட்ட நபரை லேசாகத் தலையைக் குனிந்துகொண்டு உட்காரச் சொல்லுங்கள். வாயைத் திறந்து மூச்சுவிடச் சொல்லுங்கள்.


இப்போது மூக்கின் இரண்டு துவாரங்களையும் உங்கள் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் அழுத்தமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகப் பிடித்துக்கொள்ள, ரத்தம் வடிவது நின்றுவிடும்.
மூக்கைப் பிடித்திருப்பதால், வாய் வழியாக ரத்தம் வர வாய்ப்புள்ளது. பயப்பட வேண்டாம். வாயிலிருக்கும் ரத்தத்தைத் துப்பச் சொல்லுங்கள்.


இந்த முயற்சியில் ரத்தம் நிற்கவில்லை என்றால், குளிர்ந்த நீரில் பருத்தித் துணியை முக்கி எடுத்துப் பிழிந்துகொண்டு, மூக்கின்மேல் பத்து நிமிடம் வைக்கவும்.
ஐஸ் கட்டி கைவசமிருந்தால், அதையும் மூக்கின் மீதும் மூக்கின் இரண்டு பக்கங்களிலும் வைக்கலாம்.


பஞ்சு அல்லது சுத்தமான துணியைக் குளிர்ந்த நீரில் நனைத்து, திரி போல் செய்து, மூக்கினுள் அழுத்தமாகத் திணித்து, மூக்கை அடைக்கலாம்.


இத்தனை முயற்சிகளிலும் ரத்தக் கசிவு நிற்கவில்லை என்றால், அது மூக்கின் மேற்பகுதியிலிருந்துதான் வருகிறது என்று அர்த்தம். அதற்கு ரத்தக் குழாயைப் பொசுக்கி ரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். இதற்கு மருத்துவர் உதவியை நாட வேண்டும்.
என்ன செய்யக் கூடாது?



மூக்கிலிருந்து ரத்தம் கசியும்போது எந்தக் காரணத்தைக்கொண்டும் மூக்கைச் சிந்தக்கூடாது.


விரலை நுழைத்து மூக்கை அடைக்கக் கூடாது.



மூக்கிலிருந்து ரத்தம் வடியும்போது, தலையை நிமிர்த்தக் கூடாது. காரணம், மூக்கிலிருந்து ரத்தம் தொண்டைக்குச் சென்று குமட்டலை ஏற்படுத்தும். வாந்தி வரலாம். சமயங்களில் புரையேறி, இருமல் வந்து சேரும்.



மருத்துவர் சொல்லாமல் எந்த ஒரு மூக்கு சொட்டு மருந்தையும் மூக்கில் விடாதீர்கள்.



தடுப்பது எப்படி?



குளிக்கும்போது தினமும் மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
தேவையில்லாமல் மூக்கைக் குடையும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
மூக்குக்குள் குச்சி, ரப்பர் போன்ற பொருட்களை நுழைத்து விளையாடக் கூடாது.



மிகவும் குளிர்ந்த நீரைக் குடிக்கக் கூடாது. மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களைச் சாப்பிடக் கூடாது.



அதிக வெப்பச் சூழல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
ஒவ்வாமை நோய் உள்ளவர்கள், அதற்குரிய சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.



அடிக்கடி மூக்கடைப்பு ஏற்பட்டால், அலட்சியமாக இருக்கக் கூடாது. காரணம் அறிந்து, சிகிச்சை பெற வேண்டும்.



குளிர் காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் யோசனைப்படி மட்டும் மூக்கு சொட்டு மருந்து விடலாம்.



சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, சத்துக் குறைவு நோய்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.



அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளதா என்று சோதித்துக்கொள்ளவும். பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் உயர் ரத்தஅழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.



கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: [email protected]
http://tamil.thehindu.com/general/health/மூக்கில்-ரத்தம்-வடிவது-ஏன்/article7437990.ece
 
Benefits of foods by colours

Benefits of foods by colours

Did you know that foods can be divided into categories based on their colours and each category has a collective set of health benefits? this not only makes foods interesting, but also helps remember which food is good for which health aspect.

Foods are broadly divided into six categories based on their colors.

1) white - these foods assist in immune support. Garlic, onions, white beans, potatoes, mushrooms and cauliflower fall under this category. While garlic & onions help reduce the risk of cancer in stomach, colon & rectum, white beans & potatoes help lower blood cholesterol levels. Mushrooms are known to provide the important nutrients and cauliflower contains antioxidants & is also beneficial for women who are pregnant.

2) green -these foods assist in detoxification. Peas, spinach, green beans, capsicums, kiwi, and green tea are some green foods that we can consume. They are good for your health, provide the required nutrients and also assist in detox.

3) yellow - these foods assist in beauty. Banana, yellow capsicum, squash, corn and bananas are some of the yellow foods that we eat. They are full of carotenoids and bioflavonoids which all help maintain our skin, bone and teeth health.

4) orange - these foods assist in cancer prevention. Carrots, oranges, etc are some orange foods that we eat. They are good for the heart, protect our eyes and also boost our immune system.

5) red - these foods support better heart health. They are packed with antioxidants and vitamins. Red chillies, red capsicum, cherries and tomatoes, apples, etc are some red foods that we eat.

6) purple - these foods assist in longevity. Few purple foods that we eat are onions, blackberries, grapes, etc. They fight ulcer, help kill cancer, prevent urinary tract infection and are good for the heart & the liver.

http://knowhealthyindia.blogspot.in/2015/07/benefits-of-foods-by-colours.html
 
Love for dancing helps woman beat breast cancer

Love for dancing helps woman beat breast cancer

18-Jul-2015




After she was diagnosed with breast cancer seven years ago, this 68-year-old turned to dance to lift her spirits; after beating both the tumour and subsequent heart blockages, she now helps others tackle their ailments with the help of hobbies -

Watching this 68-year-old sway and twirl in time while humming a song to herself, it’s hard to imagine she had once had to fight off not only breast cancer but heart blockages as well. Even when she had first been diagnosed with cancer, it was dance that had raised her spirits and helped her emerge triumphant against the deadly disease.

“When one faces challenges or diseases in life, such hobbies offer refuge from all the stress,” said Aruna Jogalekar, who is now trying to pass on the same message to other senior citizens who face health problems. As a child, Jogalekar was encouraged by her parents to learn dance, and she received training in Kathak.

While she was in college, she even went on state-wide dance tours and performed alongside famous personalities such as Smita Patil. “Those were the magical days, when we were haunted by our passion and art,” recalled the former electrical engineer, who gave up dancing 35 years ago, once she began working and got married.

Then, in 2008, her world came to a halt when she found a suspicious lump in her breast, which would eventually be diagnosed as breast cancer. Instead of letting the disease weigh her down, however, she took it as an opportunity to revive her old passion, and took up various forms of dance Odissi, ballet and ballroom dance.

In fact, one of the dance teachers who taught her the Odissi form, was none other than her family doctor. “As engineers, we were always taught to think of ways out of a problem instead of sulking, and that’s what I decided to do. Once again, my parents and my in-laws supported me and said it was the time for me to enjoy life to the fullest.

I had already crossed 60 years; my children were settled and my husband earned enough to support both of us. So I began to focus on dancing and my other hobbies,” said Jogalekar, who also picked up embroidery and sewing, with the help of which she began to design Odissi dancers’ outfits.

With support from her family and doctors, Jogalekar simultaneously kept up her battle against cancer and eventually triumphed over it after a successful surgery the same year. Seven years since the cancer diagnosis, and two years after she underwent an angioplasty procedure for heart blockages, Jogalekar continues to fulfil her passion for dance.

She is part of Smitalay, a group of dancers in Santacruz who perform at local cultural events, and also choreographs performances for IIT alumni functions, with her husband being an IITian himself.

More recently, however, she became a part of Nanavati Super Speciality Hospital’s Live 360@60, a unique senior citizens’ club that intends to guide, assist, educate, and engage its members on all matters of health, as well as
keep them healthy and active through wellness activities.

As one of the motivational speakers in the group, she recounts all her experiences with disease and how her hobbies helped her overcome them. This is her message to everyone, young or old, in good health or poor “Everybody should learn or develop some hobby.

Dancing, instrument playing, stitching, drawing or crafts; it could be anything that keeps you engaged, teaches you, challenges your creativity and most importantly, gives you something to look forward to.”

http://www.mid-day.com/articles/sun...ncing-helps-woman-beat-breast-cancer/16379186
 
Women Need More Sleep Because They Use Their Brain More

Women Need More Sleep Because They Use Their Brain More

Women need more sleep than men, according to a recent study. Researchers from Duke University have discovered that, compared to men, women experience more mental and physical consequences from inadequate rest. Besides giving half the population a legitimate reason to sleep in, the findings could also inspire new health recommendations for women at greater risk of heart disease, depression, and psychological problems.


The study, which was led by clinical psychologist and sleep expert Michael Breus, estimated men and women’s respective needs for sleep by assessing their ability to deal with insufficient rest. According to Breus, the experiment suggested a sharp difference between genders. “We found that women had more depression, women had more anger, and women had more hostility early in the morning,” he told reporters.

Who needs How much ?


Many biological factors are thought to contribute to this disparity. However, some experts believe that it ultimately comes down to mental energy expenditure. Women, they say, simply use their brain more than men do.

“One of the major functions of sleep is to allow the brain to recover and repair itself. During deep sleep, the cortex — the part of the brain responsible for thought, memory, language and so on — disengages from the senses and goes into recovery mode,” Jim Horne, director of the Sleep Research Center at Loughborough University in England, told The Australian. “The more of your brain you use during the day, the more of it that needs to recover and, consequently, the more sleep you need. Women tend to multi-task — they do lots at once and are flexible — and so they use more of their actual brain than men do.”


It follows that, if men used their brains more during the day, they would need a couple of extra hours too. “A man who has a complex job that involves a lot of decision-making and lateral thinking may also need more sleep than the average male — though probably still not as much as a woman,” Horne said.


The science of Sleep


Breus’ and his colleagues’ study adds to a growing number of scientific inquiries into the health outcomes of sleep deprivation. In a paper published earlier this year, researchers from Case Western Reserve University School of Medicine showed a correlation between inadequate rest and accelerated skin aging.


Other studies have linked poor sleeping patterns to an elevated risk of heart disease, blood clots, stroke, and psychiatric problems.


The average American adult requires between 7 and 9 hours of sleep every day. That said, 80 percent of the population say they habitually fall short of this quota. To learn more about sleep and improving rest patterns, visit The National Sleep Foundation’s online resources.
http://theheartysoul.com/sleep-schedules/?t=NSM
 
Baking Soda – Helped to Cure Cancer

Baking Soda – Helped to Cure Cancer

July 20, 2015

“Cancer is a fungus, called candida albicans, and it can be treated using sodium bicarbonate”. So says Tulio Simoncini


Simoncini is a former Italian oncologist in Rome who developed a theory that all cancer is caused exclusively by a fungus called candida albicans. His alternative cancer treatment is simple: To alkalise the body and tumour by the use of a cheap, common compound, sodium bicarbonate, tackling the candida, shrinking the tumour and stopping metastases. Thus it is also a natural cancer cure.
Candida, beneficial bacteria, acid bodies and cancer
The background to Simoncini´s work involves the following theoretical elements:


Firstly, acid bodies are known to be linked to ill health and cancer.
Secondly, sodium bicarbonate can alkalise your body. It has been used in many preparations as an antacid; an indigestion aid. You can buy a small pot of it in high street chemists for a little over one pound.


Thirdly, the beneficial bacteria in your intestine are now known to direct up to 85 per cent of your immune response, to release anti-cancer vitamins (like biotin, B-12, folic acid, vitamin K) from your foods and even to produce a compound (sodium butyrate) which causes cancer cells to self-destruct. Beneficial bacteria work imperfectly if the acidity of the gut increases.


However, fourthly, at night when you sleep, beneficial bacteria digest vast quanities of microbes, fungus and yeasts that you consumed during the day with your food. In fact their favourite food is the yeast or fungus, Candida albicans. So, they are your first line of defence.


So how might candida cause cancer?


Candida albicans is known to be able to escape the intestine and travel around the body in the blood stream. Oregano oil and cinnamon can kill the yeast in the blood stream. About 25 per cent of type-2 Diabetics were shown to improve when given cinnamon. This is because the fungus sits on the outer membranes of cells, preventing crucial receptor sites from working properly – in the case of diabetes, those receptor sites are for insulin. However, candida also produces a sugar-like waste product. people with higher blood sugar levels develop more cancer; and survive less.


But there is a second potential problem. Yeasts like candida are anaerobes – this means they generate their energy in the absence of oxygen. Once in the blood stream they can colonise certain local areas of the body and greatly reduce the oxygen levels in that area. The result is that the local cells do not die, but switch their own energy production from an oxygen-based system to one that doesn´t use oxygen. This is the system employed by cancer cells, which also do not use oxygen to generate their energy from food molecules. In fact, Otto Warburg won a Nobel Prize in 1931 for telling the world this property of cancer cells and that oxygen was their enemy!


Is it, then, any surprise then that women who had taken antibiotics more than 25 times during their lifetime had twice the risk of breast cancer, according to research covered in CANCERactives research service Cancer Watch? Their friendly bacteria were reduced allowing candida more chance to survive in the gut and move to the blood stream. Their immune systems were weak, indicated by the illnesses that required the antibiotics. And so on.


Dr Simoncini was a respected Italian Oncologist until he developed his theory … His theory is that all cancer is caused by the fungus, candida albicans. His cure is to alkalse the body to produce conditions in which the candida could not thrive. His main weapon is the inexpensive, sodium bicarbonate. He was struck off, in Italy.

Source: http://www.canceractive.com/
http://complete-health-and-happiness.com/baking-soda-helped-to-cure-cancer/
 
The main causes of liver damage are~

The main causes of liver damage are~




1. Sleeping too late and waking up too late are the main cause..
2. Not urinating in the morning.
3. Too much eating.
4. Skipping breakfast.
5. Consuming too much medication.

6. Consuming too much preservatives, additives, food coloring, and artificial sweetener.
7. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil use when frying, which includes even the best
Cooking oils like olive oil. Do not consume fried foods when you are tired, except if the body is very fit.

8.Consumption of alcohal

9.Alcohal Consumption
10. Consuming overly done foods also add to the burden of liver. Veggies should be eaten raw or cooked 3-5 parts. Fried
Veggies should be finished in one sitting, do not store.

We have to adopt a good daily lifestyle and eating habits. Maintaining good eating habits is very important for our body to absorb and get rid of unnecessary chemicals.


Because….


Evening 9 - 11pm: is the time for eliminating unnecessary/ toxic chemicals (de- toxification) from the antibody system (lymph nodes). This time duration should be spent by relaxing or listening to music. If during this time a housewife is still in a un relaxed state such as washing the dishes or monitoring children doing their homework, this will have a negative impact on her health.


Night at 11pm - 1am: The de-toxification process in the liver, and ideally should be done in a deep sleep state.


Early morning 1 - 3am: de-toxification process in the gall, also ideally done in a deep sleep state.


Early morning 3 - 5am: de-toxification in the lungs. Therefore there will sometimes be a severe cough for cough sufferers during this time. Since the de-toxification process had reached the respiratory tract, there is no need to take cough medicine so as not to interfere with toxin removal process.


Morning 5 - 7am: de-toxification in the colon, you should empty your bowel.

Morning 7 - 9am: Absorption of nutrients in the small intestine, you should be having breakfast at this time. Breakfast should be earlier, before 6:30am, for those who are sick.

Breakfast before 7:30am is very beneficial to those wanting to stay fit. Those who always skip breakfast, they should change their habits, and it is still better to eat breakfast late until 9 -10am rather than no meal at all. Sleeping so late and waking up too late will disrupt the process of removing unnecessary chemicals.

http://knowfood.cn/en/events/dont-sleep-too-late-liver-damage-2/
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top