• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 46 ( 1 to 5)

வாயில் உலகங்களைக் காட்டியது

அயி தேவ புராகில த்வயி ஸ்வய
முத்தானச’யே ஸ்தனந்த4யே |
பரி ஜ்ரும்ப4ணதோ வ்ய3பாவ்ருதே
வதனே விச்’வமசசஷ்ட வல்லவீ ||(46 – 1)


பால லீலைகள் செய்த தேவா! முன்பு சர்வேஸ்வரனாகிய தாங்கள் மல்லக்கப் படுத்துக் கொண்டு முலைப் பால் குடித்துக் கொட்டாவி விடும்போது; திறக்கப்பட்ட தங்கள் திருவாயில் யசோதை இந்த பிரபஞ்சத்தையே கண்டாள் அல்லவா? ( 46 – 1)


புனரப்யத2 பா3லகை: ஸமம்
த்வயி லீலாநிரதே ஜகத்பதே |
ப2ல சஞ்சய வஞ்சன க்ருதா4
தவ ம்ருத்3 போ4ஜன மூசூரர்ப4கா:||(46 – 2 ​)


ஜகதீசனே! அதன் பிறகு மறுபடியும் தாங்கள் குழந்தைகளுடன் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் போது; பழங்களை மாற்றியதால் கோபித்துக் கொண்டு; குழந்தைகள் தாங்கள் மண் தின்றதைப் பற்றி யசோதையிடம் சொன்னார்கள் அல்லவா? ( 46 – 2)


அயி தே ப்ரலயாவதௌ4 விபோ4
க்ஷிதி தோயாதி3 ஸமஸ்த ப4க்ஷிண: |
ம்ருது3 பாச’னதோ ருஜா ப4வேதி3தி
பீ4தா ஜனனி சுகோப ஸா ||(46 – 3 )

சர்வ வல்லமை படைத்த ஈசனே! பிரளய காலத்தில் பிருத்வி, ஜலம் போன்ற பஞ்ச பூதங்களை உண்ணும் தங்களுக்கு; மண்ணைத் தின்றதால் வியாதிகள் உண்டாகிவிடும் என்று பயந்த அந்தத் தாய் தங்களிடம் வெகுவாகக் கோபித்துக் கொண்டாள் அல்லவா?
( 43 – 3)


அயி து3ர்வினயாத்மக த்வயா
கிமு ம்ருத்ஸா ப3த வத்ஸ ப4க்ஷிதா |
இதி மாத்ரு கி3ரம் சிரம் விபோ4
விததா2ம் த்வம் ப்ரதி ஜக்ஞிஷே ஹஸன் ||(46 – 4)


“துர்விநயம் கொண்ட குழந்தையே ! நீ மண்ணை உண்டாயா என்ன?” என்று அவள் கேட்டபோது தாங்கள் வெகு நேரம் சிரித்துக் கொண்டே இருந்து,”அது பொய்!” என்று ஆணை இட்டுச் சொன்னீர்கள் அல்லவா? ( 46 – 4)


அயி தே ஸகலைர் விநிச்’சிதே
விமதிச் சேத்3வத3னம் விதா3ர்யதாம் |
இதி மாத்ரு விப4ர்த்ஸிதோ முகம்
விகஸத் பத்3மநிப4ம் வ்யதா3ரய : ||(46 – 5)


“அடேய் எல்லோரும் நிச்சயமாகக் கூறினார்களே! உனக்கு வித்தியாசம் தோன்றுமே ஆனால் வாயைத் திற!” என்று தாய் அதட்டியதும் தாங்கள் மலர்ந்த தாமரைக் கொப்பான திருவாயைத் திறந்தீர்கள் அல்லவா? ( 46 – 5 )
 
[h=1]புஜ பலம், நிஜ பலம்[/h]
புஜ பலம் என்றுமே நிஜ பலம் அன்று;
புத்தி பலம் தான் நிஜ பலம் என்றுமே.
நன்றாய் நமக்கு உணர்த்திடும் இதை,
தொன்று தொட்டு வரும் ஒரு நல்ல கதை.

சாபம் அடைந்த, தேவர்கள் கூட்டம்,
பாபம் நீங்கி, பலம் முன்போல் அடைய;
பாற்கடல் கடைந்து, அமுத கலசத்தை,
நோற்பது போல, பெற்றிட வேண்டும்.

“அரக்கர்கள் ஆயினும் நீர் எம் உறவினரே,
அமுதம் பெற்றிட எமக்கு உதவிட வேண்டும்!
தேனாம் அமுதை பகிர்ந்து கொள்வோம்” எனத்
தேன் போல் இனிக்க பேசினர் தேவர்கள்.

மந்தர மலையையே மா மத்தாக்கி,
வாசுகி பாம்பை பெரும் கயிறாக்கி,
முந்தித் தலைப் பக்கம் சென்று நின்றனர்,
கேசவன் மாயம் உணர்ந்த தேவர்கள்.

“வலிமை நிறைந்த அரக்கர் நாங்கள்,
வால்புறம் ஏன் நாம் பிடித்திட வேண்டும்?
தலைப்புறம் எமக்கு தந்திடுவீர்”, என
தொலை நோக்கில்லா அசுரர் வேண்டினர்.

கடைந்த போது துவண்ட மேனியால்,
வீசியது வாசுகி விஷ மூச்சு காற்றை.
கடைசி அரக்கன் வரை விஷ வாயுவினால்,
வீரியம் இழந்து வாடிப் போயினர் அசுரர்.

வால் பக்கம் உள்ள வானவர்கள் எல்லாம் ,
மால் அவன் கருணையால் ஒரு சிறிதும்
துயர் இன்றியும் முன்போன்றே சற்றும்
அயர்வின்றியும் கடைந்தனர் பாற்கடலை.

விரும்பியதை அளிக்கும் காமதேனுவை,
விரும்பினர் வேள்வி வளர்க்கும் முனிவர்;
வியனுலகு காணா வெண்பரி உச்சைசிரவசை,
விரும்பிப் பெற்றான் மன்னன் மகாபலி.

ஐராவதம் என்னும் வெள்ளை யானையை,
சுரர்கள் தலைவன் இந்திரன் பெற்றான்.
சிவப்பொளி வீசிய கௌஸ்துபம் என்னும்
சீரிய மணி ஸ்ரீமன் நாராயணனுக்கே.

பாரிஜாதம் என்னும் தெய்வீக மரத்தை,
கோரிப் பெற்றது தேவர்கள் கூட்டம்.
அப்சரஸ் என்னும் தெய்வ மங்கையரை,
அடைந்து மகிழ்ந்தார் வானுலகத்தோர்.

அமுதமே பெண்ணாகி வந்த திருமகள்,
ஆதி தேவன் நாராயணனை வரித்தாள்.
மதுவின் தெய்வமாய் மனத்தை மயக்கி,
மதத்தை வளர்த்தும் வாருணி அசுரர்களுக்கு!

கலசமும் கையுமாய் கடலில் இருந்து,
களையான முகத்துடன் வந்த தன்வந்த்ரியின்,
கலசத்தைப் பறித்து கலஹம் செய்தாலும்,
கடைசி வரை அமுதம் பெறவில்லை அசுரர்!

அனைத்து பொருட்களையும் தங்கள் வசமே,
அமைத்துக்கொண்டது தேவர்கள் கூட்டம்.
அமுத பகிர்விலும் மோகினியாக வந்து,
தமது வசீகரத்தால் வஞ்சித்தார் கண்ணன்.

ஆயிரம் யானைகள் பலம் இருந்தாலும்,
ஆயிரம் தோள்கள் பெற்று இருந்தாலும்,
ஆயிரம் ஆயுதங்கள் வைத்து இருந்தாலும்,
புய பலம் தோற்கும் புத்தி பலத்திடம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 46 ( 6 to 10)

வாயில் உலகங்களைக் காட்டியது

அபி ம்ருல்லவ த3ர்ச’னோத்ஸுகாம்
ஜனனீம் தாம் ப3ஹு தர்ப்பயன்னிவ |
ப்ருதிவீம் நிகி2லாம் ந கேவலம்
பு4வனான்யப்யகி4லான்ய தீ3த்3ருசா: ||(46 – 6 )


சிறிதளவேனும் மண்ணைக் காண விரும்பிய அந்தத் தாயைத் திருப்தி செய்யும் பொருட்டு, தாங்கள் இந்த பூமி மட்டும் அல்லாது எல்லா உலகங்களையும் தங்கள் சிறு வாயினில் அவளுக்குக் காண்பித்தீர்கள் அல்லவா? ( 46 – 6)


குஹசித்3வனமம்பு3தி4: க்வசித்
க்வசித3ப்4ரம் குஹசித்3ரஸாதலம் |
மனுஜா த3னுஜா க்வசித்ஸுரா
தத்3ருசே’ கிண்ண ததா3 த்வதா3னனே ||(46 – 7)

அப்போது தங்கள் திருவாயில் ஓரிடத்தில் காடும், வேறு ஓரிடத்தில் சமுத்திரமும், மற்றும் ஓரிடத்தில் மேகங்கள் உள்ள ஆகாயமும், வேறு ஓரிடத்தில் பாதாளமும், வேறு ஓரிடத்தில் மனிதர்கள், தேவர்கள் அசுரர்கள் என்று என்னதான் காணப் படவில்லை?
( 46 – 7 )


கலசா’ம்பு3தி4 சா’யினம் புன:
பர வைகுண்ட பதா3தி4வாஸினம் |
ஸ்வபுரச்’ச நிஜார்ப4காத்மகம்
கதிதா3 த்வாம் ந ததர்ச’ ஸா முகே2 ||(46 – 8)

அந்த யசோதை தங்கள் திருவாயில் தங்களைப் பாற்கடலில் பள்ளி கொண்டவராகவும்; மறுபடியும் மிகவும் மேன்மை உடைய வைகுந்தத்தில் வீற்றிருப்பவரகவும், தன் கண்ணெதிரில் உள்ள தன் பிள்ளையாகவும் இப்படி எத்தனை விதமாகத் தான் பார்க்கவில்லை? ( 46 – 8)


விகஸத்3 பு4வனே முகோ2த3ரே
நனு பூ4யோsபி ததா2 விதா4னன: |
அனயா ஸ்புடமீக்ஷிதோ ப4வான்
அனவஸ்தாம் ஜக3தாம் ப3தாதனோத் ||(46 – 9)


பிரகாசிக்கும் சகல லோகங்களையும் உடைய தங்கள் திரு முகத்தில் மீண்டும் முன் கூறிய முகத்தை உடையவனாகவே காட்டி, உலகங்களின் முடிவு இல்லதிருக்கும் தன்மையையும் யசோதைக்கு உணர்த்தினீர்கள் அல்லவா? என்ன ஆச்சரியம்! ( 46 – 9 )


க்4ருத தத்வதி4யம் ததா3 க்ஷணம்
ஜனனீம் தாம் ப்ரணயேன மோஹயன் |
ஸ்தனமம்ப தி3சே’த்யுபாஸஜன்
ப4கவன்னத்3பு4த பா3ல பாஹிமாம் ||(46 – 10)


அதிசயக் குழந்தையே! பகவானே! அப்போது சிறிது நேரம் உண்மையை அறிந்த அந்தத் தாயை புத்திர வாஞ்சையால் மீண்டும் மோஹம் அடையச் செய்தாய். ” அம்மா ! பால் கொடு!” என்று அவள் மடியில் ஏறி அமர்ந்த தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.
( 46 – 10)
 
[h=1]இயற்கையே நம் குரு[/h]

அகழ்வாரைத் தாங்கும் நில மடந்தையிடம்,
இகழ்வாரைத் தாங்கும் பொறுமை கற்போம்;
அனைத்தையும் புனிதமாக்கிய பின் தெளிந்து,
இனிக்கும் நீர் போல மாறிவிடக் கற்போம்.

பொருட்கள் அனைத்திலும் மறைந்து நிற்கும்,
நெருப்பைப் போன்றது ஆத்மா என்று அறிவோம்;
மாற்றம் அடையாமல் மணங்களைப் பரப்பும்,
காற்றிடம் கற்போம் பற்று அறுக்கும் தன்மையை.

நிர்மலமாக எங்கும் என்றும் நிறைந்திருக்கும்
மர்மம் என்ன என்று ஆகாசத்திடம் கற்போம்;
ஆழம் காண முடியாத கம்பீரத்தை அங்கு
ஆழ்ந்து விளங்கும் கடலிடம் கற்போம்.

நூறு குடங்களில் வேறு வேறாகத் தெரியும்
சூரியன் போன்றதே ஆத்மா, அறிந்திடுவோம்;
வளர்ந்து தேயும் சந்திர கலைகள் போன்றே
வளர்ந்து தேயும் மனித சரீரமும், அறிவோம்.

தன் உடலில் இருந்தே உற்பத்தி செய்து,
தன் உடலுள் வலையை மீண்டும் மறைக்கும்
சிலந்தியிடம் காண்போம் நம் இறைவனின்
சிருஷ்டி, பிரளய ரகசியங்களை எல்லாம்!

நினைக்கும் பொருளாக நாம் மாறுவதை,
தினமும் காணும் குளவியிடம் கற்போம்;
தினவு எடுத்து திரியாமல், கிடைத்தைத்
தின்பதை மலைப் பாம்பிடம் கற்போம்.

மலருக்கு மலர் தாவிச் சென்று பல
மலர்களின் தேனைச் சேர்த்து வைத்து,
தேனாலேயே அழியும் தேனீ கற்பிப்பது
தேவைக்கு மீறின செல்வத்தின் ஆபத்து.

கண்களால் நன்கு காணும் திறனையும்,
காதுகளால் நன்கு கேட்கும் திறனையும்
அழகாய் வளர்த்தால், நமக்கு இறைவனும்
அழகிய இயற்கையும் குருவாகவே ஆவர்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 47 ( 1 to 5)

உலூக2ல ப3ந்த4னம்
ஏகதா3 த3தி4 விமாத2 காரிணீம்
மாதரம் ஸ முபசேதி3வான் ப4வான் |
ஸ்தன்ய லோலுபயதா நிவாரயன்
அங்கமேத்ய பபிவான் பயோத4ரௌ ||(47 – 1 )


ஒரு நாள் தாங்கள் தயிர் கடைந்து கொண்டிருக்கும் தாயிடம் சென்று பால் குடிக்க விரும்பியதால் தயிர் கடைவதை நிறுத்தி மடிமேல் ஏறி அமர்ந்து முலை குடித்தீர்கள் அல்லவா? ( 47 – 1)


அர்த்த4 பீத குசகுட்3மலே த்வயி
ஸ்நிக்3த ஹாஸ மது4ரானனாம்பு3ஜே |
து3க்3த4மீச’ த3ஹனே பரிஸ்ருதம்
த4ர்துமாசு’ ஜனனீ ஜகா3ம தே ||(47 – 2)


ஹே ஈசனே! தாங்கள் தாமரை மொட்டுப் போன்ற ஸ்தனங்களைப் பாதி குடித்துக் கொண்டு இருக்கும் போது, அன்பார்ந்த மந்தஹாசத்தால் மிகவும் அழகான வதனாரவிந்தத்தோடு இருக்கும்போது, நெருப்பில் பொங்கி வழிந்த பாலை எடுத்து வைப்பதற்காகத் தங்கள் தாய் உள்ளே விரைந்து சென்றாள். ( 47 – 2)


ஸாமிபீத ரஸ ப4ங்க3 ஸங்க3த
க்ரோத3 பா4ர பரிபூ4த சேதஸா |
மந்த2 த3ண்ட முபக்3ருஹ்ய பாடிதம்
ஹந்த தே3வ தாதி பா4ஜனம் த்வயா ||(47 – 3)

பால் குடிக்கும்போது பாதியில் ஏற்பட்ட தடையால் தங்களுகுக் கடும் கோபம் உண்டாயிற்று. தன்னை மறந்து மத்தினால் அந்தத் தயிர்ப் பாத்திரத்தை உடைத்தீர்கள் அல்லவா? ( 47 – 3)


உச்சலத்3 த்4வனித் முச்சகைஸ்ததா
ஸ்ன்னிச’ம்ய ஜனனீ ஸமாத்3ருதா |
த்வத்3 யசோ’ விஸரவத்3த3த3ர்ச’ ஸா
ஸத்ய ஏவ த3தி4 விஸ்த்ருதம் க்ஷிதௌ ||(47 – 4)


அப்போது தங்கள் தாய் யசோதை மிக பலமான சப்தத்தைக் கேட்டு விரைவாக ஓடி வந்தாள். தங்கள் கீர்த்தி பரவுவதைப் போல நிலத்தில் பரவி இருக்கும் தயிரை மட்டும் கண்டாள். ( 47 – 4)


வேத3 மார்க3 பரிமார்கி3தம் ருஷா த்வாம்
அவீக்ஷ்ய பரிமார்க3யந்த்யசௌ |
ஸந்த3த3ர்ச ஸுக்ருதி ந்யுலூக2லே
தீ3யமான நவநீத மோதவே ||(47 – 5 )

மகா புண்ணியசாலியாகிய யசோதை, வேத மார்க்கங்களால் தேடப்பட்டும் காண முடியாத தங்களைக் காணாமல், கோபத்துடன் தேடிக் கொண்டு வந்தாள். உரல் மேல் இருந்து கொண்டு பூனைக்கு வெண்ணை ஊட்டும் தங்களைக் கண்டாள் அல்லவா? ( 47 – 5)
 
[h=1]10. மாயாவிலாசம்.[/h]

நர நாராயணர்களாக அவதரித்த இறைவன்,
வரங்கள் பலவற்றைத் தர விரும்பினாலும்,
இறைவனின் மாயா விலாசத்தை காணவே,
மறை முனிவர் மார்க்கண்டேயர் விழைந்தார்.

வீசும் காற்றாலும், பெய்யும் மழையாலும்,
வாசம் செய்து வந்த உலகமே மூழ்கிவிட்டது!
எங்கு நோக்கினும் சுழித்து ஓடும் நீர்தான்,
எங்குமே எதுவுமே காணப்படவில்லை!

பத்துக் கோடி ஆண்டுகள் தனிமையிலே
ஒற்றையாகச் சுழன்றவர் பிறகு கண்டார்,
ஆல் இலை மேல் ஒரு அழகிய குழந்தையை;
கால் விரலை வாயில் இட்டுச் சுவைப்பவனை!

தழுவ விரும்பி அதன் அருகே சென்றவரை,
முழுதுமாக கவர்ந்தது உள் மூச்சுக் காற்று.
முழு உலகமும் கண்டார் குழந்தையினுள்!
முழுதுமாய் வெளி வந்தார் வெளி மூச்சில்.

மீண்டும் குழந்தையைத் தழுவ முயன்றவர்,
மீண்டும் தன் ஆசிரமத்திலேயே இருந்தார்!
காற்று, வெள்ளம், மேகம், மழை, சுழல்கள்
பார்த்த எல்லாம் மாயா விலாசம் அல்லவா?

மாயையின் சக்தியை வெல்வது கடினம்.
மாலவன் பூரண அருள் இருந்தால் அன்றி
மாயையை வெல்லவே முடியாது என்று
மாதவனே தன் கீதையில் உரைக்கின்றான்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 47 ( 6 to 10)

உலூக2ல ப3ந்த4னம்

த்வாம் ப்ரக்3ருஹ்ய ப3த பீ4தி பா4வனா
பா4ஸுரானான ஸரோஜ மாசு’ ஸா|
ரோஷ ரோஷித முகி2 ஸகி2 புரோ
ப3ந்தனாய ரச ‘னா முபாத3தே3 ||( 47 – 6)


அந்த யசோதை பயத்தை அபிநயிக்கின்றதால் அதிக சோபை அடைந்த தாமரை
போன்ற திருமுகத்தை உடைய தங்களை விரைவாகப் பிடித்தாள். கோபத்தில் சிவந்த முகத்துடன் தோழிகளின் முன்னிலையில் தங்களைக் கட்டுவதற்காகக் கயிற்றை எடுத்தாள் அல்லவா? கஷ்டம்! ( 47 – 6)


ப3ந்து மிச்ச2தி யமேவ ஸஜ்ஜனஸ்தம்
ப4வந்த மயி ப3ந்துமிச்சதி |
ஸாநியுஜ்ய ரஜனா குணான் பஹூன்
த்3வ்யங்கு3லோனமகி2லம் கிலைக்ஷத ||(47 – 7)

பகவனே! எந்த சாதுக்கள் தங்களையே பந்துவாக விரும்புகின்றார்களோ அப்படிப் பட்ட தங்களை பந்தப்படுத்த விரும்பிய யசோதை, அநேகம் கயிறுகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிய போதும் அது எப்போதுமே இரண்டு அங்குலம் குறைவாக இருக்கக் கண்டாள் அல்லவா? (47 – 7)


விஸ்மிதோஸ்மித ஸகி2 ஜனேக்ஷிதாம்
ஸ்வின்ன ஸன்ன வபுஷம் நிரீக்ஷ்ய தாம் |
நித்ய முக்த வபுரப்யஹோ ஹரே
ப3ந்த4 மேவ க்ருபயாsன்வமன்யதா ||(47 – 8)

பக்தர்களுடைய துக்கத்தைப் போக்கடிக்கும் ஸ்ரீ ஹரியே! ஆச்சரியம் அடைந்து சிரிக்கின்ற தோழிகளின் பார்வையால் யசோதை வியர்த்து சோர்வடைந்து விட்டாள். அதக் கண்டு மனம் இரங்கி என்றுமே விடுதலை அடைந்துள்ள பரபிரம்மம் ஆகிய தாங்கள் தங்களை அவள் கட்ட அனுமதித்தீர்கள் அல்லவா? ( 47 – 8)


ஸ்தீ2யதாம் சிர முலூக2லே கே2லத்யாக3தா
ப4வனமேவ ஸா யதா3 |
ப்ராகு3லூக2 லபி3லான்தரே ததா3
ஸர்பி ரர்பித மத3ன்ன்வாஸ்தி2தா2 : ||(47 – 9 )


“அடே துஷ்டப் பயலே! உரலில் கட்டுண்டு வெகு நேரம் இருக்கக் கடவது!” என்று சொல்லி அந்த யசோதை எப்போது தன் வீட்டுக்குத் திரும்பி வந்தாளோ அப்போதே அதற்கு முன்பாகவே அந்த உரல் குழியில் வைக்கப்பட்டு இருந்த நெய்யைத் தின்று கொண்டு இருந்தீர்கள் அல்லவா?( 47 – 9)


யத்3ய பாச’ ஸுக3மோ விபோ4 ப4வான்
ஸம்யத: கிமு ஸபாச’யாSனயா |
ஏவமாதி3 தி3விஜை ரபி4ஷ்டுதோ
வாதநாத பரிபாஹி மாம் க3தா3த் ||(47 – 10)

பிரபுவே! தாங்கள் ஒன்றிலும் பற்றில்லாதவர்களால் (கையில் கயிறு இல்லாதவர்களால்) எளிதாக அடைய முடிந்தவர் என்பது உண்மை என்றால் ; பற்றுதல் உள்ள (கையில் கயிறு கொண்டுள்ள ) இந்த யசோதையால் ஏன் கட்டப்பட்டீர்கள்? குருவாயூரப்பா! தேவலோக வாசிகளால் இவ்விதம் எல்லாம் துதிக்கப்பட்ட தாங்கள் என்னை ரோகத்தில் இருந்து காப்பாற்றவேண்டும். ( 47 – 10)
 
[h=1]17. பூரண சரணாகதி.[/h]

ஒரு சிறந்த இறை பக்தனுக்கும்,
ஒரு சலவைத் தொழிலாளிக்கும்

வலுத்து விட்ட வாக்குவாதம்
வம்புச் சண்டையில் முடியவே;

துவைக்கலானான் அப்பக்தனையும்
துணிகளைப் போலவே வண்ணான்.

“கண்ணா! கண்ணா!” என்று பக்தன்
கதறுவது கேட்டதும் எழுந்தான்,

ஒய்யாரமாக வைகுண்டத்திலே
ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவன்.

நான்கடிகள் நடந்து சென்றவன்,
மீண்டும் வந்து அமர்ந்துவிடவே,

நாயகனிடம் விவரம் கேட்டாள்,
நானிலம் வணங்கும் இலக்குமி.

“நானே செல்ல வேண்டியதில்லை;
தானே திருப்பி அடிக்கத் துணிந்தவன்,

தன்னையே காத்துக் கொள்வான்;
என்னை எதிர்பார்க்க மாட்டான்!”

சரணாகதியும் பலன்கள் தரும்
பூரணமாக இருந்தால் மட்டுமே.

போராடியவரை பாஞ்சாலிக்குமே
புடவைகள் தரவில்லையே கண்ணன்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 48 ( 1 to 5)

நளகூப4ரன் மணிக்3ரீவன் சா’பமோக்ஷம்

முதா3 ஸுரௌகை4 ஸ்த்வமுதா3ர ஸம்மதை3
உதீ3ர்த்ய தா3மோத3ர இத்யபி4ஷ்டுத: |
ம்ருதூ3த3ர: ஸ்வைர முலூக2லே லக3ன்
னதூ3ரதோ த்3வௌ ககுபா4வுதி3க்ஷித: ||(48 – 1)

அதிகமான சந்தோஷத்தை உடைய தேவ சமூகங்கள் தங்களை தாமோதரன் என்று துதித்தன. கோமலமான உதரத்தை உடைய தாங்கள் உரலிலேயே சுகமாகக் கட்டுண்டு இருந்து கொண்டு அருகில் இருந்த இரண்டு மரங்களைக் கண்டீர்கள் அல்லவா? ( 48 – 1)


குபே3ர ஸூனுர் நலகூப3ராபி4த:
பரோ மணிக்ரீவ இதி ப்ரதாம் கத:|
மஹேச’ ஸேவாதி4க3த ஸ்ரியோன் மதௌ3
சிரம் கில த்வத்3 விமுகா2வகே2லதாம் ||( 48 – 2 )


குபேரனின் புத்திரனும் நலகூபரன் என்ற பெயர் உடையவனும்; வேறு ஒருவன் மணிகிரீவன் என்று பிரசித்தி பெற்றவனும்; ஸ்ரீபரம சிவனை ஆராதித்து அடைந்த ஐஸ்வரியத்தால் மதம் மேலிட்டவர்களாகத் தங்களிடம் பக்தி என்பதே இல்லாமல் வெகு காலம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் அல்லவா? ( 48 – 2)


ஸுராபகா3யாம் கிலதௌ மதோ3த்கடௌ
ஸுராபகா3யத்3 ப3ஹு யௌதகா வ்ருதௌ |
விவாஸசௌ கேலி பரௌ ஸ நாரதோ
ப4வத் பதை3க ப்ரவணோ நிரைக்ஷத ||(48 – 3)

கங்கை நதியில் மதத்தால் மெய் மறந்தவர்களாக, கள் குடித்தவர்களாக, பாட்டுப் பாடுபவர்களாக, அழகிய இளம் பெண்களால் சூழப்பட்டவர்களாக, இடுப்பில் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டு இருந்தவர்களைத் தங்கள் திருப்பதங்களிலே மனத்தைப் பதித்துவிட்ட நாரதமுனிவர் கண்டார் அல்லவா? ( 48 – 3)


பி4யா ப்ரியாலோக முபாத்த வாஸஸம்
புரோ நிரீக்ஷ்யாபி மாதா3ந்த4 சேதசௌ |
இமௌ ப3வத்3 ப4க்த்யுப சா’ந்தி சித்3த4யே
முனிர் ஜகௌ3 சா’ந்தி ம்ருதே குதஸ் ஸுக2ம் ||(48 – 4)

பெண்கள் சாபத்துக்கு அஞ்சி வஸ்திரங்களை எடுப்பதைக் கண்ட பிறகும், மதத்தால் மதி மயங்கி நிற்பவர்களைக் கண்ட நாரதர், தங்களிடம் பக்தியும் மன சாந்தியும் கிடைப்பதற்காக அவர்களைச் சபித்தார். சித்த சுத்தி இல்லாமல் சுகம் எவ்விதம் உண்டாகும்? ( 48 – 4)


யுவாமவாப்தௌ ககுபா4த்மதாம் சிரம்
ஹரிம் நிரீக்ஷ்யாத2 பத3ம் ஸ்வ மாப்னுதம் |
இதீரிதௌ தௌ ப4வதீ3க்ஷண ஸ்ப்ருஹாம்
க3தௌ வ்ரஜாந்தே ககுபௌ4 ப3பூ4வது : ||(48 – 5)

“நீங்கள் இருவரும் வெகு காலம் மரமாக இருக்கும் தன்மையை அடைவீர்கள்! ஸ்ரீ ஹரியை தரிசனம் செய்து அதன் பிறகு உங்கள் இடத்துக்குத் திரும்புவீர்கள்.” என்று நாரதர் சபித்த பிறகு ,தங்களை தரிசிக்க ஆசை கொண்டவர்களாக, கோகுலத்துக்குப் பக்கத்தில் இரண்டு மரங்களாகப் பிறந்தார்கள். ( 48 – 5)
 


33. நெருப்பில் நெய்.


அசுர குருவின் ஒரே அருமை மகள்
அசுரர்களில் அழகியான தேவயானி.
தந்தையின் அன்பில் திளைத்தவள்,
தன்னையே எண்ணி கர்வமுற்றாள்.

சர்மிஷ்டா அசுர அரசிளங்குமரி.
தர்மவான் அசுர அரசனும், அவளும்
சென்றனர் குலகுரு ஆஸ்ரமத்துக்கு,
அன்றொரு நாள், மன விருப்பத்துடனே.

சென்றனர் நீராட இவ்விளம்பெண்கள்,
மன்னன், குலகுருவின் அனுமதியுடன்.
களைந்த ஆடைகள் காற்றில் பறக்கவே,
விரைந்து அணிந்தனர் உடைகளை மாற்றி.

குலகுரு மகளோ பெரும் கோபக்காரி;
குலத்தின் இளவரசியை அவள் பழிக்கவே,
கோபம் கொண்ட இளவரசியும், அவளைப்
பாவம் பாராமல் கிணற்றில் தள்ளினாள்.

வழியே வந்த அரசன் யயாதியின்
விழிகளில் பட்டாள் குருவின் பெண்;
கணத்தில் காத்த அரசனிடம், தன்னை
மணக்கும்படிக் கோரினாள் தேவயானி.

குல வேறுபாடுகள் ஒரு புறம்; மற்றும்
குலகுருவின் அதீதக் கோபம் மறு புறம்.
பயந்த அரசன் மறுத்துவிட்டான்; மேலும்
தயங்கியபடியே அவன் சென்றுவிட்டான்.

பிடிவாதக்காரி தேவயானி; அதனால்
விடவில்லை அத்துடன் விஷயங்களை.
அரச குமாரியைத் தன் சேடி ஆக்கினாள்;
அரசன் யயாதியை மணந்து கொண்டாள்.

தேவயானிக்கு உண்டு இரண்டு மகன்கள்;
தேவயானிக்குத் தெரியாமல் யயாதி
மணந்துகொண்ட அதே அரசகுமாரிக்கு,
குணவான்கள் மூன்று மகன்கள் உண்டு.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்;
பலவான் அரசனின் வேடம் கலையவே,
தந்தையைக் கொண்டு சபித்துவிட்டாள்,
தாளாத முதுமையை அரசன் அடையும்படி.

தள்ளாத கிழவன் ஆனபோதும், மனம்
கொள்ளாத காம வசப்பட்ட மன்னன்,
இளமையைத் தந்து, ஒரு மகனேனும் தன்
முதுமையை பெறும்படிக் கெஞ்சினான்.

நான்கு மூத்த மகன்கள் மறுத்துவிடவே,
முன்வந்தான் கடைக்குட்டி புரு என்பான்.

மன்னனின் தள்ளாமையைத் தான் பெற்றுத்
தன் இளமையைத் தன் தந்தைக்குத் தந்தான்.

கேளிக்கைகளில் காலம் கழித்த மன்னன்,
தெளிவடைந்து அறிந்தான் ஒரு திருநாளில்,
ஆசைகளை நிறைவேற்றுவது என்பது
ஓசையுடன் எரியும் தீயில் இடும் நெய்யே!

மகனுக்கு மீண்டும் இளமையைத் தந்து,
மன்னனாக மணி மகுடமும் சூட்டினான்.
ஒரு முள்ளை, ஒரு முள்ளால் எடுக்கலாம்,
நெருப்பை, நெய்யால் அழிக்க முடியுமா?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 48 ( 6 to 10)

நளகூப4ரன் மணிக்3ரீவன் சா’பமோக்ஷம்

அதந்த்ர மிந்த்ர த்3ரயுக3ம் ததா2 வித4ம்
ஸமேயுஷா மந்த2ர கா3மினா த்வ்யா |
திராயிதோலூக2ல ரோத3 நிர்து4தௌ
சிராய ஜீர்ணை பரிபாதிதௌ தரூ ||(48 – 6)


சோம்பல் இல்லாமல் மெதுவாகச் சென்று அந்த இரண்டு மருத மரங்களை அடைந்தீர்கள். குறுக்காக உள்ள உரல் மரங்களின் அடிபாகத்தைத் தகைத்ததால் வேரறுக்கப்பட்டன வெகு காலமாக நின்று இருந்ததால் ஜீரணமடைந்த அந்த இரண்டு மரங்கள். ( 48 – 6)


அபாஜி சா’கி2 த்3விதயம் யதா3 த்வயா
ததை3வ தத்3 க3ர்ப4தலான்னிரேயுஷா |
மஹத் விஷா யக்ஷ யுகே2ன தத்க்ஷணாத்
அபாஜி கோ3விந்த3 ப4வானபி ஸ்தவை: ||(48 – 7)


எப்போது தங்களால் அந்த இரண்டு மரங்களும் முறிக்கப்பட்டனவோ அப்போதே அம்மரங்களின் நடுவில் இருந்து வெளிக் கிளம்பினர் மிகவும் காந்தி உடைய இரண்டு யக்ஷர்கள். ஹே கோவிந்தா! அவர்களும் தங்களைத் தோத்திரங்களைக் கொண்டு துதித்தனர் அல்லவா? ( 48 – 7)


இஹான்ய ப4க்தோபி ஸமேஷ்யதி க்ரமாத்
ப4வந்த மேதௌ கலு ருத்3ர ஸேவகௌ |
முனி ப்ரஸாதாத் பவத3ங்க்4ரி மாக3தௌ
கதௌ வ்ரணானௌ கலு ப4க்தி முத்தமாம் ||(48 – 8 )


இவ்வுலகில் மற்ற தேவர்களுடைய பக்தன் கூட கிராமமாக வந்து தங்களை அடைவான். ருத்திரனையே சேவித்து வந்த இவர்களும், நாரதர் மகிமையால் தங்கள் திருவடிகளைச் சரணடைந்து சிறந்த பக்தியை வரமாகப் பெற்றுச் சென்றனர் அல்லவா? ( 48 – 8)


ததஸ்தரூத்3தா3ரண பாஹி மாம் கதான்
ப்ரகம்பி ஸம்பாதினி கோபமண்ட3லே |
விலஜ்ஜித தவஜ்ஜனநீ முகேக்ஷிணா
வ்யாமோக்ஷி நந்தேன ப4வான் விமோக்ஷத:||(48 – 9)


அதன் பிறகு இடையர் கூட்டம், மரங்கள் முறிந்து விழுந்த போது உண்டான பயங்கர சப்தம் கேட்டு நடு நடுங்கிக் கொண்டு வந்தபோது, வெட்கி நின்றிருந்த யசோதையைப் பார்த்துவிட்டு நந்தகோபன் ஜீவன்களுக்கு விடுதலை அளிக்கும் தங்களுக்கே உரலில் இருந்து விடுதலை அளித்தான் அல்லவா? ( 48 – 9)


மஹீருஹோர் மத்3ய க3தோ ப3தார்ப3கோ
ஹரே: ப்ரபா4வா த3பரிக்ஷதோS து4னா |
இதி ப்3ருவாணைர் க3மிதோ க்3ருஹம் ப4வான்
மருத்புராதீ3ச்’வர பாஹி மாம் க3தா3த் ||( 48 – 10)

“இரண்டு மரங்களுக்கு நடுவில் சென்ற குழந்தை இப்போது ஸ்ரீ ஹரியின் அனுக்ரஹத்தால் சிதைக்கப்படாமல் இருந்தான்! ஆச்சரியம் தான்!” என்று வியந்துகொண்டே நந்தன் முதலியவர்கள் தங்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள் அல்லவா? ( 48​ ​- 10)
 
37. அபகீர்த்தி.




நேரம் நன்றாக இல்லாத பொழுது
நேராக நம்மிடம் வரும் அபகீர்த்தி!
கண்ணனையே பீடித்த அபகீர்த்தி,
மண்ணில் நம்மை விட்டு விடுமா?

சத்ரஜித் சூரியனின் சீரிய பக்தன்,
பக்தியுடன் பூஜித்தவனுக்கு, ஒரு
சூரியனை நிகர்த்த ஒளி வீசுகின்ற
சீரிய ச்யமந்தக மணி, சூரியன் பரிசு.

மணி பூஜிக்கப்படும் இடத்தில்,
மாயாவிகள் நுழைய மாட்டார்.
பஞ்சம், அகால மரணம், கவலை,
கொஞ்சமும் நெருங்க முடியாது.

மன்னன் உக்கிரசேனனுக்கு, அதைக்
கண்ணன் தருமாறு பணித்தபோதும்,
சத்ரஜித் மறுத்து, கண்ணனைத் தன்
சத்ருவாக எண்ணத் தொடங்கினான்.

வேட்டைக்குச் செல்லும் தம்பி பிரசேனன்,
காட்டுக்குள் மணியை அணிந்து செல்லவே,
சிங்கம் ஒன்று அவனைக் கொன்றுவிட்டு,
பொங்கும் ஒளி வீசும் மணியினை எடுத்துக்

கொண்டு செல்லுகையில், அச் சிங்கத்தைக்
கொன்று ஜாம்பவான், மின்னும் மணியைச்
செல்ல மகனுக்கு அளித்திட விரும்பியே
செல்லலானான் தன் குகைக்கு உள்ளே.

மணித் திருடன் கண்ணனே என்று
மண்ணில் உள்ளோர் நினைத்தனர்.
தன் நற்பெயரைக் காக்க வேண்டி,
தானே தேடிச் சென்றான் கண்ணன்.

சிங்கத்தின் அடிச் சுவடுகளையும்,
சிங்கத்தைக் கொன்ற அக் கரடியின்
அடிச் சுவடுகளையும் தொடர்ந்தவன்,
கடின குகையில் கண்டான் மணியை.

கரடிக்கும், கண்ணனுக்கும் கடும்போர்,
இரவு பகல் என விடாமல் தொடர்ந்தது
இருபத்தி எட்டு நாட்கள்! ஜாம்பவான்
இறுதியில் உணர்ந்தான் கண்ணன் யாரென!

மன்னிக்கும் படிப் பலமுறை வேண்டி,
மணியையும் அளித்தான்; தன்னுடைய
பெண்ணையும் அளித்து வாழ்த்தினான்!
மண்ணில் அப கீர்த்தி யாரைவிட்டது?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
[h=1]த3ச’கம் 49 ( 1 to 5)[/h] ப்ருந்தா3வனப் ப்ரவேச’ம்


ப4வத் ப்ரபா4வாத்3 விது3ரா ஹி கோ3பா:
தரு ப்ரபா4தி3க மத்ர கோ3ஷ்டே |
அஹேது முத்பாதக3ணம் விச’ங்க்ய
ப்ரயாது மன்யத்ர மனோ விதேனு : ||(49 – 1)



இடையர்கள் தங்கள் மகிமையை அறியவில்லை. காரணம் இல்லாமல் மரங்கள் விழுவது போன்ற அனேக துர் நிமித்தங்களைக் கண்டு சந்தேகம் அடைந்து வேறு ஒரு நல்ல இடத்துக்குச் செல்லத் தீர்மானித்தார்கள். ( 49 – 1)



தத்ரோப நந்தா3பி4த4 கோ3பவர்யோ
ஜகௌ3 ப4வத் ப்ரேரணைவ நூனம் |
இத: ப்ரதீச்யாம் விபினம் மனோக்ஞம்
ப்3ருந்தா3வன நாம விராஜதீதி ||(49 – 2)

அந்த இடையர்களில் ஒரு சிறந்தவன் உபனந்தன் என்னும் பெயர் உடையவன். “இங்கிருந்து மேற்கு திசையில் பிருந்தாவனம் என்னும் அழகிய காடு ஒன்று உள்ளது!” என்று நிச்சயமாகத் தங்கள் பிரேரணையால் தான் அங்கு தெரிவித்தான் அல்லவா? ( 49 – 2 )


ப்3ருஹத்3வனம் தத்க3லு நந்த3 முக்2யா
விதா4ய கௌ3ஷ்டீ3ன மத3 க்ஷனேன |
த்வத3ன்வித த்வஜ்ஜனநீ நிவிஷ்ட
க3ரிஷ்ட யனானுகதா விசேலு: ||(49 – 3)



உடனே நந்தன் முதலியவர்கள் பிருஹத்வனம் என்னும் அந்த இடத்தை ஒரே நொடியில் பழைய பசுக்களின் கொட்டிலாகச் செய்துவிட்டு; தங்களும், தாங்கள் தாயார் யசோதையும் ஏறிக் கொண்ட வண்டியைப் பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார்கள் அல்லவா? ( 49 – 3)



அனோ மனோக்ஞ த்4வனி தே4னுபாலீ
கு2ர ப்ரணாதா3ந்தரதோ வதூ4பி: |
ப4வத்3 வினோதா3லபிதாக்ஷராணி
ப்ரபீய நாக்ஞாயத மார்3க தை4ர்க்யம் ||(49 – 4)

வண்டிகளின் இன்பமான த்வனிகளாலும், பசுக் கூட்டங்களின் குளம்பு சப்தங்களாலும், தங்களுடைய அவ்யக்த மதுர மழலைகளாலும் வசீகரிக்கப்பட்டதால், நீண்ட பயணத்தின் களைப்பை அந்த கோபிகைகள் அன்று உணரவில்லை அல்லவா? ( 49 – 4)



நிரீக்ஷ்ய ப்3ருந்தா3வனமீச’ நந்த3த்
ப்ரஸூன குந்த3 ப்ரமுக2 த்3ருமௌக4ம் |
அமோதா3தா2: சா’த்3வல ஸாந்த்ர லக்ஷ்ம்யா
ஹ்ரின்மணி குட்டித2 புஷ்ட சோ’பம் ||(49 – 5)

அடர்ந்த புஷ்பங்களை உடைய குந்தமரம் முதலிய மரக் கூட்டங்களை உடையதும்; அடர்ந்த பச்சைப் புல் தரைகளால் பச்சைக் கல் பதித்த இடம் போல் சோபை உடையதும் ஆகிய பிருந்தாவனத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தீர்கள் அல்லவா? (49 – 5)

[h=3][/h]
 
[h=1]38. பொறாமைத் தீ.[/h]

கச்யபரின் பல மனைவிகளில் இருவர்,
கத்ரு, வினதா என்னும் சகோதரிகள்.

கணவனின் அன்பைப் பெறவேண்டியே
கண நேரமும் வீணாக்காமல் முயலுவர்.

பலமுறை கத்ரு விரும்பி விழைந்தது,
பலமுள்ள புதல்வர்கள் ஓராயிரம் பேர்.

விரும்பியபடியே அவள் அடைந்தாள்,
வீரம், பலம் மிகுந்த ஆயிரம் நாகங்களை.

வினதா விரும்பியதோ இரு மகன்கள்;
வீரமும், வெற்றியும் கொண்டவர்கள்.

பிறந்தன அழகிய இரண்டு முட்டைகள்,
பிறகு மாறி விடும் இரண்டு மகன்களாக!

ஐநூறு ஆண்டுகள் தவம் கிடந்தாள், பல
ஐயங்களை மனதில் கொண்ட வினதா.

பொரியவில்லை அங்கே முட்டைகள்.
வெளியே வரவில்லை இரு மகன்களும் .

பொறுமை இழந்தவள், ஒரு முட்டையை
பொரியும் முன்பே உடைத்து விட்டாள்.

பாதி உடல் மட்டுமே உருவாகி இருந்த
பாலனைக் கண்டு, மனம் பதைத்தாள்.

ஆக்கப் பொறுத்தவள் ஆகிய அன்னை
ஆறப் பொறுக்கவில்லை, கொடுமையே!

பாதி உடலுடன் இருக்கும் அருணனை,
சாரதி ஆக்கிக் கொண்டான், சூரியன்.

அல்லும் பகலும் இரத்தில் ஏறிச்
செல்லுவதற்கு கால்கள் வேண்டாமே!

போயின மேலும் ஐநூறு ஆண்டுகள்;
தாயின் தவமும் பலித்தது அங்கே.

ஆயிரம் சூரியர்களின் ஒளியுடனே,
அருமை மகன் கருடன் தோன்றினான்.

சேய்கள் நாக, அருண, கருடர்கள்
தாய் வேறானாலும் சகோதரரே.

ஒரு தந்தை மகன்களான போதும்
ஒருவருக்கொருவர் ஜன்மப் பகை.

மகளிர் கொண்டது பொறாமைத் தீ;
மகன்கள் கொண்டதோ பகைமைத் தீ!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 49 ( 6 to 10)

ப்ருந்தா3வனப் ப்ரவேச’ம்

நவாக நிர்வ்யூட4 நிவாஸ பே4தே3ஷு
அசே’ஷ கோ3பேஷு ஸுகாஸிதேஷு |
வனச்ரியம் கோ3ப கிஷோர பாலீ
விமிச்’ரித: பர்யாவலோகதாஸ்த்வம் ||(49 – 6)


அர்த்த சந்திரன் போலப் புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளில் எல்லா கோபர்களும் சுகமாக வசிக்கத் தொடங்கினார்கள். தாங்கள் பால கோபர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பிருந்தாவனந்தின் சோபையை நான்கு புறங்களிலும் சென்று கண்டீர்கள் அல்லவா?
( 49 – 6)


அரால மார்கா3க3த நிர்மலாபாம்
மரால கூஜாக்ருத நர்மலாபாம் |
நிரந்தர ஸ்மேர ஸரோஜ வக்த்ரம்
கலிந்த3 கன்யாம் ஸமலோக யஸ்த்வம் ||(49 – 7)


வளைந்து தூய ஜலத்துடன் ஓடுவதும்; அன்னங்களின் கூவுதலால் நிரம்பிய சாதுர்யமான பேச்சினை உடையதும்; எப்போதும் புன்னகை பூக்கின்ற தாமரைப் பூக்களாகிய முகத்துடனும் கூடிய; களிந்தன் பெண்ணாகிய யமுனை நதியைத் தாங்கள் நன்றாகப் பார்த்தீர்கள் அல்லவா? ( 49 – 7)

மயூர கேகா ச’த லோப4நீயம்
மயூக 2மாலா ச’ப3லம் மணினாம் |
விரிஞ்ச லோக ச்’ப்ருஷ முச்ச ச்’ருங்கை:
கி3ரிம் ச கோ3வர்த்த4ன மைக்ஷதஸ்த்வம் ||( 49 – 8)


மயில்களுடைய அகவல்களால் மனோஹரமானதும்; ரத்தினங்களுடைய கிரணங்களால் பல நிறங்களில் பொலிவதும்; உயர்ந்த கொடுமுடிகளால் சத்தியலோகத்தைத் தொடுவதும் ஆகிய கோவர்த்தன மலையையும் தாங்கள் கண்டீர்கள் அல்லவா? ( 49 – 8)


ஸமம் ததோ கோ3ப குமாரகைஸ்த்வம்
ஸமன்ததோ யத்ர வனாந்தமாகா: |
ததஸ்ததஸ்தாம் குடிலாமுபச்’ய:
களிந்த3ஜாம் ராக3வதீ மிவைகாம் ||(49 – 9)

பிறகு தாங்கள் பாலகோபர்களுடன் காட்டின் நான்கு புறங்களிலும் எங்கெங்கு சென்றீர்களோ, அங்கெல்லாம் தங்களிடம் ஆசை கொண்டவள் போல் தனியாகச் சுற்றி வந்து கொண்டிருந்த அந்தக் களிந்தன் பெண்ணாகிய யமுனையைக் கண்டீர்கள் அல்லவா? ( 49 – 9)


ததா விதே4ஸ்மின் விபினே பச’வ்யே
ஸமுத்ஸுகோ வத்ஸ க3ண ப்ரசாரை |
சரன் ஸராமோSத குமாரகைஸ் த்வம்
ஸமீர கே3ஹாதி4ப பாஹி ரோகா3த் ||(49 – 10)


பசுக்களுக்கு ஹிதமான, மேலே வர்ணித்தபடி அமைந்துள்ள அந்த பிருந்தாவனத்தில், கன்றுகளை மேய்ப்பதில் ஆவல் கொண்டவராக, இடைப் பையன்களுடனும் பலராமனுடனும் கூடிய தாங்கள், என்னைத் துன்புறுத்தும் வியாதிகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். ( 49 – 10)
 
[h=1]39. அமரத்துவம்.[/h]

நாகங்களும், வீரன் கருடனும்
ஜனித்தது ஒரு முனிவருக்கே!
நண்பர்கள் அல்லவே அவர்கள்;
ஜன்மப் பகைவர்கள் ஆவார்கள்.

அந்நியத் தாயிடம் அடிமையாகத்
தன் தாய் இருப்பதைக் கண்ட கருடன்,
விடுதலை பெறும் வழிமுறைகளைக்
கொடுக்குமாறு வேண்டிக் கொண்டான்.

“அமரத்துவம் வேண்டும் எங்களுக்கு!
அமிர்தம் தர வேண்டும் அதற்காக!
அமிர்தம் கொண்டுவந்து கொடுத்தால்,
அன்னையின் அடிமைத்தனம் போகும்”.

நாகங்களின் கோரிக்கைக் கேட்டு,
வேகமாகக் கிளம்பினான் கருடன்;
வானவர் நாட்டினை அடைந்து,
வான் புகழ் அமுதம் கொண்டுவர.

எத்தனைக் கட்டுக் காவல்கள்?
எத்தனை பாதுகாப்பு அரண்கள்?
அத்தனையும் தாண்டி கருடன்,
அமிர்தத்தை அடைந்துவிட்டான்!

திரும்பும் வழியில் கண்டான், தான்
விரும்பும் விஷ்ணு மூர்த்தியை.
உடனே செய்து கொண்டனர் ஒரு
உடன் படிக்கை, அவ்விருவரும்.

அமிர்தம் அருந்தாமலேயே கருடன்
அமரன் ஆகலாம், இறை அருளால்;
இறைவனின் இனிய வாகனமாக
இருப்பான் கருடன் இனிமேலே.

தொடர்ந்து சென்ற கருடனைத்
தொடர்ந்தவன் அந்த தேவேந்திரன்,
“அமிர்தத்தை அளித்து நாகங்களை
அமரர்கள் ஆக்குவது மிகத் தவறு.

நாகங்கள் அருந்துமுன் அமிர்தத்தை,
நான் எடுத்துச் சென்றுவிடவேண்டும்!
உதவி புரிந்தால், உனக்கு உகந்த
உணவாக நாகங்களை ஆக்குவேன்!”

அமுதத்தை பெறுவதற்கு நாகங்கள்
ஆவலாய்க் காத்து நின்று இருந்தன.
“உண்ணும் முன் நீங்கள் அனைவரும்
திண்ணமாக நீராடி வர வேண்டும்!”

நீராடச் சென்று விட்டன நாகங்கள்;
நிமிட நேரத்தில் வந்த இந்திரன்
அமிர்த கலசத்தை மீட்டுகொண்டு,
அமரர் உலகம் விரைந்து சென்றான்.

தாயின் அடிமைத்தளை போயிற்று,
தானும் அமரத்துவம் பெற்றான் கருடன்.
விஷ்ணுவின் இனிய வாகனம் ஆனான்;
விரும்பி உண்ணும் உணவு நாகங்களே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 50 ( 1 to 5)

வத்ஸாஸுர ப3காஸுர வத4ம்

தரல மது4க்ருத்4 வ்ருந்தே3 ப்3ருந்தா3வனே மனோஹரே
பசு’ப சி’சு’பி4ஸ் ஸாகம் வத்ஸானுபாலன லோலுப: |
ஹலத4ர ஸகோ2 தே3வ ஸ்ரீமன் விசேரித தா4ரயன்
க3வல முரளீ வேத்ரம் நேத்ராபி4ராம தனு த்3யுதி: ||( 50 – 1)

ஸ்வயம் பிரகாசியாகிய மஹா விஷ்ணுவே! சுற்றித் திரியும் வண்டுக் கூட்டங்களை உடையதும்; மனத்தைக்கவருவதும் ஆகிய பிருந்தாவனத்தில்;கண்களுக்கு இனிமையான சரீர காந்தியை உடையவரும்; பலராமனுடன் கூடியவரும் ஆன தாங்கள் கன்றுக் குட்டிகளை மேய்க்க விருப்பம் கொண்டீர். கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், பிரம்பு இவற்றை எடுத்துக் கொண்டு கோப பாலர்களுடன் அங்கு சுற்றித் திரிந்தீர்கள் அல்லவா?
( 50 – 1)


விஹித ஜக3தீ ரக்ஷம் லக்ஷ்மி கராம்பு3ஜ லாலிதம்
த3த3தி சரணத்3வந்த்3வம் வ்ருந்தா3வனே த்வயி பாவனே |
கிமிவ ந ப3பௌ4 ஸம்பத் ஸம்பூரிதம் தருவல்லரீ
ஸலில த4ரணீ கோ3த்ர க்ஷேத்ராதி3கம் கமலாபதே ||( 50 – 2)


லக்ஷ்மி கந்தா! மிகவும் பரிசுத்தமான பிருந்தாவனத்தில், உலகங்களை ரக்ஷித்ததும், லக்ஷ்மி தேவியின் தாமரைக் கரங்களால் லாளிக்கப்பட்டதும் ஆகிய இரண்டு திருவடிகளை வைத்தபோது மரங்கள், கொடிகள், ஜலம், பூமி, மலை, வயல் முதலிய எது தான் மேன்மை பெற்று விளங்கவில்லை? ( 50 – 2)


விலஸது3லபே காந்தாராந்தே ஸமீரண சீ ‘தலே
விபுல யமுனா தீரே கோ3வர்த4னாசல மூர்த4ஸு |
லலிதா முரளி நாத3 சஞ்சாரயன் கலு வாத்ஸகம்
க்வசன தி3வஸே தை3த்யம் வத்ஸாக்ருதீம் த்வமுதை3க்ஷதா2: ||(50 – 3)

பச்சைப் புற்களுடன் கூடி விளங்குகின்ற வனத்தின் நடுவிலும், காற்றினால் சீதளமான விசாலமன யமுனை நதிக் கரையிலும், கோவர்த்தன மலையின் சிகரங்களிலும் தாங்கள் இனிமையாகப் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு கன்றுக் குட்டிகளை மேய்க்கும் போது ஒருநாள் கன்றின் உருவில் வந்திருந்த ஓர் அசுரனைக் கண்டீர்கள் அல்லவா?( 50 – 3)


ரப4ஸ விலஸத்3 புச்ச2ம் விச்சா2ய தோஸ்ய விலோகயன்
கிமபி வலிதஸ் ஸ்கந்த4ம் ரந்த்4ர ப்ரதீக்ஷ முதீ3க்ஷிதம் |
தமத2 சரணே விப்4ராத்3 விப்4ராமயன் முஹுருச்சகை:
குஹசன மஹா வ்ருக்ஷே விக்ஷேபித2 க்ஷத ஜீவிதம் ||(50 – 4)

விரைவாக வாலை ஆடிக் கொண்டும், சிறிது கழுத்தைத் திருப்பிக் கொண்டும், தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டும், சுற்றித் திரிகின்ற அந்த அசுரனைத் தாங்கள் இனம் கண்டு கொண்டீர்கள். உடனே அவன் கால்களைப் பற்றி, அவனை விரைவாகச் சுழற்றி, உயிர் அற்றவனாகச் செய்து, ஒரு பெரிய மரத்தின் மீது தூக்கி எறிந்தீர்கள் அல்லவா?
( 50 – 4)


நிபததி மஹா தை3த்யை ஜாத்யா து3ராத்மனி தத்க்ஷணம்
நிபதன ஜவ க்ஷுண்ண க்ஷோணீ ருஹ க்ஷத கானனே |
தி3வி பரிமிலத்3 ப்3ருந்தா3:ப்3ருந்தா3ரக குஸுமோத்கரை:
ஸிரஸி ப4வதோ ஹர்ஷாத்3 வர்ஷந்தி நாம ததா3 ஹரே ||(50 – 5)


ஹே கிருஷ்ணா! பிறவியிலேயே துஷ்டனாகிய அந்த அசுரன் விழும்போது உண்டான வேகத்தால் மரங்கள்பொடிப் பொடியாகி வனம் உருவழிந்தது! அப்போது ஆகாயத்தில் கூட்டமாக நின்றிருந்த தேவர்கள் அதிக சந்தோஷம் அடைந்து தாங்கள் தலை மேல் புஷ்பங்களை வர்ஷித்தார்கள் அல்லவா? ( 50 – 5)
 
[h=1]41. “சர்ப்ப! சர்ப்ப !”[/h]

பிரம்மஹத்தி பீடித்ததால் இந்திரன்,
பிரமை பிடித்தவன் போல ஆனான்!
ஒளி இழந்து, அவமானம் அடைந்து,
ஒளிந்து கொண்டான் வெட்கத்தினால்.

எங்கு சென்றான் என்றே யாராலும்
எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
அரசன் இல்லாமல் ராஜ்ஜியம் ஏது? புது
அரசனைத் தேடிக் கண்டு பிடித்தார்கள்!

வீரனும்; நல்ல சீலமும், புகழும் பெற்ற
சூரனும்; ஆகிய நஹுஷனே அவன்.
“மண்ணுலகின் சிறந்த அரசனையே,
விண்ணுலகின் அரசன் ஆக்குவோம்!”

புதிய பதவியை ஏற்க பயந்தவனுக்கு,
போதிய தைரியம் கூறினர், மேலும்
தத்தம் தவப் பயன்களை எல்லாம்
தத்தம் செய்து விட்டனர் விண்ணோர்.

“கண்ணில் படும் அந்நியர்களுடைய
மன்னிய தேஜசும், பிற சிறப்புக்களும்
வந்து அடையும் புதிய இந்திரனையே!”
வரமும் அளித்துவிட்டனர் அவர்கள்.

புண்ணியம் தீரும்வரை புனிதனாகவும்
புண்ணியம் தீர்ந்தபின் மனிதனாகவும்
மாறினான் மன்னன் நஹுஷ இந்திரன்!
கோரினான் சசியைத் தன் மனைவியாக!

பாவியின் விருப்பத்தைக் கேட்டவுடன்,
பதறிப் போனாள் அந்தப் பதிவிரதை.
குல குருவிடம் சரணம் அடைந்தாள்,
“குலப் பெண்ணைக் காப்பாற்றும்” என.

“கால விசேஷத்தால் தோன்றும் துன்பம்
கால விளம்பத்தால் நீங்கி விடும்” என
தைரியம் கூறிய குலகுரு, “சசிதேவியின்
வைரி அழியும் நேரமும் வந்தது” என்றார்.

மானஸரோவரில் தாமரைத் தண்டில்,
மறைந்து தவம் செய்திருந்த இந்திரன்,
“மறை முனிகள் சுமக்கும் பல்லக்கில் ஏறி
மாண்புடன் வந்தால் உன்னை மணப்பேன்”

என்று நஹுஷனிடம் நாடகமாடும்படித்
தன் மனைவி சசிதேவியைப் பணித்தான்.
பாவம் பழுத்து விட்டது நஹுஷனுக்கு;
சாபம் கிடைக்கும் நேரம் வந்து விட்டது!

சப்த ரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் ஏறி,
சசி தேவியைக் காணும் ஆவல் உந்த,
சல்லாபிக்க வந்தவன், ஆத்திரத்தில்
“சர்ப்ப! சர்ப்ப!” என்று அதட்டியபடியே,

அகத்தியரை காலால் உதைத்தபோது,
அவன் பாவமூட்டை நிறைந்து விடவே,
‘சர்ப்ப!’ என விரையச் சொன்னவனை,
சர்ப்பமாகும்படி அகத்தியர் சபித்தார்.

மலைப் பாம்பாக மாறியவன், கீழே
தலைக் குப்புற விழுந்தான் மண்ணில்.
நிலை மாறி பழைய வடிவம் பெறவே
பல நூறாண்டுகள் காத்தும் கிடந்தான்.

“நிலை உயரும் போதும் மனிதன் தன்
நிலைமை மாறலாகாது” என்றறிவோம்,
“பதவியைத் தந்தவர்களாலேயே அதே
பதவி பறிக்கப்படும்” என்றுணர்வோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 50 ( 6 to 10)

வத்ஸாஸுர ப3காஸுர வத4ம்

ஸுரபிலதமா மூர்த4ன் யூர்த்4வம் குத: குஸுமாவலி
நிபததி தவேத் யுக்தோ பா3லைஸ்ஸஹேல முதை3ரய : |
ஜடிதி த3னுஜ க்ஷேபணோர்த்4வம் க3தஸ் தருமண்ட3லாத்
குஸும நிகரஸ்ஸோயம் நூனம் ஸமேதி ச’னைரிதி ||(50 – 6)


“மிகவும் நறுமணம் வாய்ந்த இந்தப் புஷ்பக் குவியல் தங்கள் தலை மேல் எங்கிருந்து விழுகின்றது?” என்று கோபாலர்கள் கேட்டபோது, “அசுரனை எறிந்ததால் மரக் கூட்டத்தில் இருந்து விரைவாக உயரச் சென்ற அந்தப் புஷ்பக் குவியல் மெதுவாகக் கீழே விழுகின்றது என்று நினைக்கின்றேன்!” என்று விளையாட்டாகத் தாங்கள்பதில் அளித்தீர்கள் அல்லவா?
( 50 – 6)

க்வசன திவஸே பூ4யோ பூ4யஸ்தரே பருஷா தபே
தபன தனயாபாத2: பாதும் க3தா3 ப4வதா3த3ய : |
சலித க3ருதம் ப்ரேக்ஷா மாஸுர் ப3கம் கலு விஸ்ம்ருதம்
க்ஷிதித4ர க3ருச்சே2தே3 கைலாஸ சை’லாமிவாபரம் || (50 – 7 )


பிறகு ஒரு நாள் கடுமையான வெப்பம் இருந்தபோது யமுனா நதி நீரைப் பருகத் தாங்களும், மற்றவர்களும் சென்றீர்கள். மலைகளின் சிறகுகள் வெட்டப் பட்டபோது மறைக்கப்பட்ட மற்றொரு கைலாச மலையைப் போலிருக்கும் ஆனால் சிறகுகளை அசைத்துக் கொண்டிருக்கும் அந்த பகாசுரனைக் கண்டீர்கள் அல்லவா? ( 50 – 7)

பிப3தி ஸலிலம் கோ3பவ்ராதே ப4வந்தமபி4 த்ருத:
ஸ கில நிகி3லன்னக்3னி ப்ரக்2யம் புனர்த்3ருத முத்3வமன் |
த3லயிது மகா3த் த்ரோட்யா: கோட்யா ததா3 து ப4வான் விபோ
க2லஜன பி4தா3 சஞ்சுச்’சஞ்சு ப்ரக்3ருஹ்ய ததா3ரதம் ||(50 – 8 )

கோபர்கள் நீர் பருகும் போது அந்த பகாசுரன் தங்களை எதிர்த்து வந்து விழுங்கினான். நெருப்புக்கு ஒப்பான தங்களை உடனேயே வாந்தியும் எடுத்தான். மறுபடியும் தங்களை அலகின் கூரிய நுனியால் கிழிக்க வந்தான் அல்லவா? ஆனால் துஷ்ட ஜனங்களைக் கொல்லுவதில் தேர்ச்சி பெற்ற தாங்கள் அவன் இரு அலகுகளையும்பிடித்து வலித்து அவனை இரண்டாகப் பிளந்துவிட்டீர்கள் அல்லவா? ( 50 – 8)

ஸபதி3 ஸஹஜாம் ஸந்த்3ரஷ்டும் வா ம்ருதாம் கலு பூதனாம்
அனுஜ மக4 மப்யக்3ரே க3த்வா ப்ரதீக்ஷிது மேவ வா |
ச’மன் நிலயம் யாதே தஸ்மின் ப3கே ஸுமனோக3ணே
கிரதி ஸுமனோவ்ருந்த3ம் ப்3ருந்தா3வனாத் க்ருஹமையதா2 :||( 50 – 9)


முதலில் இறந்த தன் சஹோதரியாகிய பூதனையை சீக்கிரம் பார்ப்பதற்கோ, அல்லது முதலில் சென்றுதம்பியாகிய அகாசுரனை வரவேற்பதற்கோ, அந்த பகாசுரன் யமலோகத்தை அடைந்த போது தேவர்கள் புஷ்பக் குவியலை வாரி
இறைக்கும்போது, பிருந்தாவனத்தில் இருந்து தாங்கள் வீட்டுக்குச் சென்றீர்கள் அல்லவா?
( 50 – 9)

லலித முரளீ நாத3ம் தூ3ரன்னிச’ம்ய வதூ4 ஜனை:
த்வரித முபக3ம்யாராத்3 ஆரூட4 மோத3 முதீ3க்ஷித : |
ஜனித ஜனனீ நந்தா3னந்த3 ஸமீரண மந்திர
ப்ரதி2த வஸதே சௌரே தூ3ரி குருஷ்வ மமாமயான் ||(50 – 10)


குருவாயூரில் பிரசித்தமாக வாழும் சூரவம்சத்தில் பிறந்த ஹே கிருஷ்ணா! தூரத்தில்
இருந்து வரும் தங்கள் புல்லாங்குழலின் இசையைக் கேட்டு சீக்கிரமாகப் பக்கத்தில் வரும் கோபிகைகளால் மிகவும் ஆனந்தத்துடன் பார்க்கப் பட்டவரும், யசோதைக்கும் நந்தகோபனுக்கும் ஆனந்தத்தை உண்டு பண்ணியவரும் ஆகிய தாங்கள் என் ரோகங்களைப் போக்கி அருள வேண்டும். ( 50 – 10)
 
[h=1]42. பண்டமாற்று.[/h]
ஒரே கண்ணன் வேறு வேறான
இரு வடிவங்களையும் எடுப்பான்.
பகைவர்களுக்குச் சுடும் சூரியன்;
பாசமுள்ளவர்களுக்குச் சந்திரன்.

பங்கிடாமல் உண்பது என்னும்
பழக்கமே இல்லையே அவனுக்கு!
வெண்ணை, பால், தயிர், பழங்கள்
கண்ணனுக்கு எல்லாம் ஒன்றே.

பழக்காரி ஒருத்தி வந்தது கண்டு,
குழந்தைக் கை நிறைய தானியம்
அன்புடன் தந்த பின் பழம் கேட்டான்.
தன்னுடைய நல்ல நண்பர்களுக்கு!

தாமரைக் கண்ணனைக் கண்டதும்
தாய் போன்ற பழக்காரி, தன்னுடைய
கூடைப் பழங்களை எல்லாம் மழலைக்
கூட்டத்திற்கே கொடுத்து விட்டாள்.

தானியம் இட்ட அவள் கூடையில்
தானியம் காணப் படவே இல்லை!
மாயாஜாலம் போலக் கூடை நிறைய
முத்து, ரத்தினங்களையே கண்டாள்!

“மனம் போல வாழ்வு” என்பார் சிலர்,
“மனம் போல மாங்கல்யம்” என்பார் பலர்,
“மனம் போல ஏற்றம்” என்பதையும் கூட
மாயவனே அன்று நிலை நாட்டி விட்டான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 51 ( 1 to 5)

அகா4ஸுர வத4ம்; வன போஜனம்


கதா3சன வ்ரஜ சி’சு’பி4ஸ் ஸமம் ப4வான்
வனாச’னே விஹித மதி: ப்ரகே3தராம் |
ஸமாவ்ருதே ப3ஹுதர வத்ஸ மண்ட3லை:
ஸதே மனைர் நிரக3ம தீ3ச’ஜேமனை:||(51 – 1)

ஸர்வேஸ்வரனே! பால கோபர்களுடன் வனபோஜனம் செய்ய தீர்மானித்த நீங்கள், அதிகாலையில் பற்பல பசு, கன்றுகளின் கூட்டத்துடன், ஊறுகாயும், கட்டுச் சோறும் எடுத்துக்கொண்டு வெளிச் சென்றீர்கள் அல்லவா? ( 51 – 1)


விநிர்யதஸ்தவ சரணாம்பு3ஜ த்3வயாத்3
உத3ஞ்சிதம் த்ரிபு4வன பாவனம் ரஜ:|
மஹர்ஷய : புலகத4ரை: கலேப3ரை:
உதூ3ஹிரே த்4ருதப4வ தீ3க்ஷணோத்ஸவா : ||(51 – 2)

வெளியே செல்லுகின்ற தங்கள் திருவடித் தாமரைகளில் இருந்து கிளம்பிய, மூவுலகங்களையும் பரிசுத்தம் ஆக்குகின்ற பாததூளியை, மயிர்சிலிர்த்த தேஹங்களுடன் மஹரிஷிகள் அனுபவித்தனர் அல்லவா? ( 51 – 2)


ப்ரசாரயத்யவிரல சா’த்3வலே தலே
பசூ’ன் விபோ4 ப4வதி ஸமம் குமாரகை:|
அகா4சஸுரோ ந்யருண தகா3ய வர்த்தநீம்
ப4யானகஸ்ஸபதி3 ச’யானகாக்ருதி:||(51 – 3)

ஸர்வேஸ்வரனே! பாலகோபர்களுடன் தாங்கள் பசும்புல் நிறைந்த இடத்தில் கன்றுகளை மேய்க்கும் போது, அகாசுரன் தங்களுக்குத் தீங்கு இழைப்பதற்கும் (தன்னுடைய பாபங்கள் நசிப்பதற்கும்) பெரிய மலைப் பாம்பின் உருவில் தங்களை வழி மறித்தான் அல்லவா?
( 51 – 3)


மஹாசல ப்ரதி மதனோர் குஹா நிபா4
ப்ரசாரித2 ப்ரதி2த முகஸ்ய கானனே |
முகோ2த3ரம் விஹரண கௌதுகாத்3 க3தா
குமாரகா : கிமபி விதூ3ரகே3த்வயி ||(51 – 4 )

தாங்கள் சற்று எட்டிச் சென்றதும், கோபச் சிறுவர்கள் காட்டில் விளையாடும் ஆவல் மேலிட்டு, குஹை போன்று அகன்று திறந்திருந்த அகாசுரனின் வாயில் நுழைந்து சென்றனர் அல்லவா? ( 51 – 4)


ப்ரமாத3த ப்ரவிச’தி பன்னகோ3த3ரம்
க்வத2தனௌ பசு’பகுலே ஸவத்ஸகே |
வித3ன்னித3ம் த்வமபி விவேசி’த2 ப்ரபோ4
ஸுஹ்ருஜ்ஜனம் விச’ரண மாசு’ ரக்ஷிதும் ||( 51 – 5)

ஹே பிரபுவே! கோப பாலர்களும், கன்றுகளும், மதியீனத்தால் பாம்பின் வயிற்றில் கடந்து செல்லும் போதே சரீரம் வெந்து போனார்கள். இதை உணர்ந்த தாங்களும் உடனேயே தோழர்களைக் காப்பாற்ற எண்ணி பாம்பின் வாயில் நுழைந்து உட்சென்றீர்களல்லவா?
( 51 – 5)
 
[h=1]43. தீப் பார்வை.[/h]

தானே கொல்ல விரும்பாவிடில், கண்ணன்
தன் பக்தர்கள் மூலம் கொல்வான், தீயோரை!

தீப் பார்வையால் யவனன் எனும் தீயோனைத்
தீர்த்துக் கட்டிய முசுகுந்தனின் கதை இது.

துவாரகையை நிர்மாணித்த கண்ணன்,
யாவருமே கண்டு அதிசயிக்கும்படியாக,

தன் யோக வலிமையால் குடியேற்றினான்
தன் குடிமக்களை, அந்தப் புதிய நகரத்தில்.

பின்னர் நிராயுத பாணியாகவே நடந்தான்,
அண்ணன் பலராமனுடன், மதுராவிலிருந்து.

யவனன் என்னும் கண்ணனின் வைரியும்,
தனியன் ஆகவே அவனைத் தொடர்ந்தான்.

வேகம் அதிகரித்துக் கண்ணன் விரைந்தால்,
வேகமாகவே யவனனும் பின் தொடர்ந்தான்.

ஒரு குகையில் நுழைந்து விட்டான் கண்ணன்;
இருள் குகையில் யவனனும் பின் நுழைந்தான்.

உறங்கும் ஒரு மனிதனிக் கண்டு, அவன்
உறக்கம் கெடுமாறு அவனை எழுப்பினான்.

எழுந்தவன் விழித்த தீப் பார்வை பட்டு,
எரிந்து சாம்பல் ஆகிவிட்டான் யவனன்.

உறங்கியவனே மன்னன் முசுகுந்தன்.
உலகம் அறியும் மாந்தாதாவின் மகன்.

தேவர்களின் சேனைக்கு அதிபதியாகத்
தேவர்களுக்காகப் போர் செய்து ஓய்ந்தவன்.

வேண்டி அவன் பெற்ற வரம் இது ஒன்றே.
வேண்டும் வரையில் உறங்கவேண்டும்.

உறங்குபவனை எழுப்பி எவரேனும்
உபத்திரவித்தால், சாம்பலாகிவிடுவர்.

உறக்கம் கெட்டுத் தனக்கு உதவிய அந்த
உத்தமனுக்கு வரம் அளித்தார் கண்ணனும்.

மறு பிறவியில் அந்தணத் தவசீலனாகி,
மாறா வைகுண்டப் பதவி அடையுமாறு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 51 ( 6 to 10)

அகா4ஸுர வத4ம்; வன போஜனம்

க3லோத3ரே விபுலித வர்ஷ்மணா த்வயா
மஹோரகே3 லுட2தி நிருந்த3 மாருதே |
த்3ருதம் ப4வான் வித3லித கண்ட2 மண்ட3லோ
விமோசயன் பசு’ப பசூ’ன் வினிர்யயௌ ||(51 – 6 )


ஹே பிரபுவே! கோப பாலர்களும், கன்றுகளும், மதியீனத்தால் பாம்பின் வயிற்றில் கடந்து செல்லும் போதே சரீரம் வெந்து போனார்கள். இதை உணர்ந்த தாங்களும் உடனேயே தோழர்களைக் காப்பாற்ற எண்ணி பாம்பின் வாயில் நுழைந்து உட்சென்றீர்களல்லவா?
( 51 – 6)


க்ஷணம் தி3வி த்வது3பக3மார்த2 மாஸ்தி2தம்
மஹாஸுர ப்ரப4வ மஹோ மஹோ மஹத் |
விநிர்க3தே த்வயி து நிலீனா மஞ்ஜஸா
நப4: ஸ்தலே நந்ருரதோ2 ஜகஸ்ஸுரா: ||(51 – 7 )

அந்த அசுரனிடமிருந்து வெளிப்பட்ட பெரிய ஜோதியானது தாங்கள் வெளிவருவதற்காக ஆகாயத்தில் சிறிது நேரம் காத்து நின்றது. தாங்கள் வெளிப்பட்டதும் தங்களிடம் விரைந்து புகுந்து லயித்தது அல்லவா? அதைக் கண்ட தேவர்கள் ஆடினார், பாடினர், கொண்டாடினர்.
( 51 – 7)


ஸவிஸ்மயை: கமல ப4வாதி3பி4ஸ்ஸுரை:
அனுத்3ருதஸ் தத3னு க3த: குமாரகை: |
தி3னே புனஸ்தருண த3சா’ முபேயுஷி
ஸ்வகைர் ப4வானதனுத போஜநோத்ஸவம் ||(51 – 8)

ஆச்சரியம் அடைந்த பிரமன் முதலான தேவர்கள் பின் தொடரவும், தங்கள் நண்பர்களுடன் வேறு இடத்துக்குச் சென்று, உச்சிப் பொழுதில் வன போஜனம் செய்தீர்கள் அல்லவா?
( 51 – 8)


விஷாணிகாமபி முரளீ நிதம்ப3கே
நிவேச’யன் கப3லத4ர: கராம்பு3ஜே |
ப்ரஹாஸயன் கலவசனை : குமாரகான்
பு3போ4ஜித2 த்ரித3ச’ க3ணைர் முதா3நுத: ||( 51 – 9)


கொம்பு, புல்லாங்குழல் இவற்றை இடையில் சொருகிக் கொண்டும் , தாமரை போன்ற கைகளில் ஒரு கவளம் அன்னத்தை வைத்துக் கொண்டும் , இனிய சொற்களால் அனைவரையும் மகிழச் செய்து கொண்டும், தேவ கணங்களால் துதிக்கப் பட்டும் தாங்கள் வனபோஜனம் செய்தீர்கள் அல்லவா? ( 51 – 9)


ஸுகா2ச’னன்த்விஹ தவ கோ3ப மண்ட3லே
மகா2ச’னாத் ப்ரிய மிவ தே3வமண்ட3லே |
இதி ஸ்துதஸ் த்ரித3ச’ வரைர் ஜக3த்பதே
மருத்புரீ நிலய க3தாத் ப்ரபாஹிமாம் ||(51 – 10)


குருவாயூரில் குடி கொண்டிருக்கும் கிருஷ்ணா! தேவர்கள் கூட்டத்தில் யாகத்தில் தரப்படும் ஹவிஸ்ஸைப் புசிப்பதைவிடவும், இந்த வனத்தில் கோபர்கள் கூட்டத்தில் புசிக்கும் போஜனமே அதிகப் பிரியமானது என்று தேவர்களும், பெரியவர்களும் எண்ணினார்கள். அப்படிப் பட்ட குருவாயூரப்பா! தாங்கள் தான் என்னை வியாதிகளின் கூட்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும். ( 51 – 10)
 
[h=1]44. வரப் பரீட்சை.[/h]

செல்வத்தைப் பெற வேண்டிப் பலர்
தெய்வங்களை ஆராதிக்கின்றனர்.
செல்வம் பெற்ற அவர்களே பிறகு
தெய்வங்களை மறந்துவிடுகின்றனர்.

விருகன் என்னும் அசுரன் மிகவும்
விரும்பி விழைந்ததோர் அற்புதசக்தி.
எவர் தலை மீது கையைக் காட்டினாலும்,
அவர் வெந்து சாம்பலாகிவிட வேண்டும்!

“யாரை நான் உபாசனை செய்வது?”
நாரதரை அணுகியவன் கேட்டான்.
“விரைவில் மன மகிழ்ந்து, வேண்டும்
வரம் தருபவர், பாரில் பரமசிவனே”.

கேதார க்ஷேத்திரத்துக்கு விரைந்து
போனான் விருகாசுரன், அன்றைக்கே!
தன் தசைகளை வெட்டி இட்டு, ஒரு
தன்னிகரில்லா ஹோமம் செய்தான்.

ஆறு நாட்கள் கழிந்த பின்னரும்,
ஆண்டவன் அவனுக்கு இரங்கி
வரவோ, அன்றி அவன் கேட்ட வரம்
தரவோ இல்லை! நொந்து போனான்.

ஏழாம் நாள் தன் தலையையே வெட்ட
எத்தனிகையில் தோன்றினார் ஈசன்.
“வினோதமான வரமே இது, எனினும்
விரும்பும் வரம் தந்தோம்” என்றார்.

‘இருக்க இடம் கொடுத்தவரிடம்
படுக்கப் பாய் கேட்பது’ போலவே
வரத்தை சோதிக்க விரும்பியவன்
வரம் தந்த ஈசனையே நாடினான்.

‘அனர்த்தம் விளையுமே’ என்று
அஞ்சியே சிவன் ஓடத் தொடங்க,
‘விட்டேனா பார்’ என்றே கருவிய
விருகனும் பின் தொடர்ந்தான்.

ரட்சிக்கும் கடவுளையே யாரால்
ரட்சிக்க முடியும்? நாம் அறியோம்!
ஓட்டப் பந்தயத்தைப் பார்த்து விட்ட
ஓங்கி வளர்ந்த வாமன ரூபனும்

அழகிய பிரம்மச்சாரியாக அங்கே
அவர்கள் முன்னே தோன்றினான்.
“இவன் சொல்வதையா நம்புகின்றாய்?
இவன் பிசாசுக் கூட்டத்தின் தலைவன்!

சோதித்துப் பார்போம் நாம் இப்போதே!
சொல்வது பொய்யாகிவிட்டால், நாமே
இவனைக் கொன்று விடுவோம். நீயும்
இப்போதுன் தலைமேல் கையை வை.”

இந்த வார்த்தை ஜாலத்தில் மயங்கி,
அந்தக் கணமே தன் தலை மீது தானே
கையை வைத்ததுதான் தாமதம்!
மெய்யாகவே எரிந்து போய்விட்டான்.

தவம் செய்வார்கள் வரங்கள் பெற;
வரங்கள் பெறுவது வாழ்விப்பதற்கா?
தானும் கெட்டு, அடுத்தவனையும்
தான் துன்புறுத்துவதற்காகவா ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top