• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 52 ( 1 to 5)

ப்3ரஹ்ம க3ர்வ ச’மனம்

அன்யாவதார நிகரேஷ்வ நிரக்ஷிதம் தே
பூ4மாதிரேக மபி4வீக்ஷ்ய ததாsக4மோக்ஷே |
ப்3ரஹ்மா பரக்ஷிதுமனா : ஸ பரோக்ஷ பா4வம்
நின்யேத2 வத்ஸக க3ணான் ப்ரவிதத்ய மாயாம் ||( 52 – 1)

மற்ற அவதாரங்களில் காணாத தங்களின் ஐஸ்வரியத்தின் மேன்மையை அகாசுர வதத்தில் கண்கூடாகக் கண்ட பிரமன் அதை மறுபடியும் சோதிக்க விரும்பினார். தம் மாயையினால் கன்றுக் கூட்டங்களைக் கண்களுக்குப் புலப்படாத வண்ணம் மறைத்து விட்டார்.( 52 – 1)


வத்ஸானவீக்ஷ்ய விவசே’ பசு’போத்கரேதான்
ஆனேது காம இவ தா4த்ரு மதானுவர்தீ |
த்வம் ஸாமிபு3க்த கவளோ க3தவாம்ஸ்ததா3நீம்
முக்தாம் ஸ்திரோதி4த ஸரோஜ ப4வ குமாரான் ||( 52 – 2)


கன்றுகளைக் காணாமல் கோப பாலர்கள் கலங்கியபோது, அவற்றை மீட்டுக் கொண்டு வரவிரும்பியவர் போலத் தாங்கள் பாதி உண்ட அன்னக் கவளத்துடனேயே விலகிச் சென்றீர்கள். பிரமனின் உள்ளக் கருத்தைத் தாங்கள் அறிந்திருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். அப்போது பிரமன் பாதி உண்டு கொண்டிருந்த கோபச் சிறுவர்களையும் தம் மாயையினால் முற்றிலுமாக மறைத்துவிட்டார் அல்லவா? ( 52 – 2)


வத்ஸாயிதஸ் தத3னு கோ3ப க3ணாயிதஸ்த்வம்
சி’க்யாதி3 பா4ண்ட3 முரளீ க3வலாதி3ரூப:|
ப்ராக்3வத்3விஹ்ருத்ய விபினேஷு சிராய ஸாயம்
த்வம் மாயயாSத ப3ஹுதா4 வ்ரஜ மாயயாத2 ||( 52 – 3 )

அதன் பிறகு தாங்கள் தங்கள் மாயையினால் அத்தனை கன்றுகளாகவும், அத்தனை கோப பாலர்களாகவும், அவர்களின் உரிகளாகவும், அதில் உள்ள பாத்திரங்களாகவும், மற்றும் அவர்களின் கொம்பு வாத்தியங்களாகவும், அவர்களின் புல்லாங்குழல்களாகவும், உருவெடுத்தீர்கள். வழக்கம் போலக் காட்டில் வெகு நேரம் விளையாடிவிட்டு வீட்டுக்குக் கூட்டத்துடன் திரும்பினீர்கள். ( 52 – 3)


தாமேவ சிகா கவலாதிமயம் ததானோ
பூயச்தமேவ பசு வத்சக பாலரூப:|
கோ3ரூபிணீபி4 ரபி கோ3பவதூ4மயீபி:
அஸாதி3தோSஸி ஜனனீபி4 ரதிப்ரஹர்ஷாத் ||( 52 – 4)


கன்றுகளாகவும், சிறுவர்களாகவும், மற்ற பொருட்களாகவும் உரு மாறி இருந்த தங்களளைக் கண்டு அன்று அத்தனை தாய்மார்களும் அதிக ஆனந்தம் அடைந்தனர் அல்லவா?( 52 – 4)


ஜீவம் ஹி கிஞ்சித3பி4மான வசா’த் ஸ்வகீயம்
மத்வா தனூஜ இதி ராக3ப4ரம் வ்ஹந்த்ய:|
ஆத்மான மேவது ப4வந்த மவாப்ய ஸூனும்
ப்ரீதிம் யயுர்ன கியதீம் வனிதாச்’ச கா3வ: ||(52 – 5)


யாரென்று தெரியாத ஒரு ஜீவனை பிள்ளை என்ற அபிமானம் காரணமாகத் தன்னைச் சார்ந்தவன் என்று எண்ணி அதிக வாத்சல்யம் கொள்கிறான் மனிதன். ஆத்மாவகவே உள்ள தங்களை மகனாகவும், கன்றாகவும் பெற்ற கோபிகைகளும், ஆவினங்களும் அன்று எத்தனை மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள்! ( 52 – 5)
 
[h=1]45. ஜடபரதன்.[/h]

பரதன் என்ற பெயர் படைத்த
அரசன், மகான் ரிஷபரின் மகன்.
பாரத வர்ஷம் என்னும் அழகிய
காரணப் பெயர், இவராலேயே!

மனைவி, மக்கள் மோட்சத் தடை
எனவே நினைத்து, அவரை விடுத்து,
அனைத்தையும் துறந்து வாழ்ந்தார்,
அழகிய சக்ர நதியின் கரையினிலே.

ஒரு நாள் கண்டார், ஒரு பெண் மான்
அருகினில் ஆற்று நீர் பருகுவதை.
பூரண கர்ப்பிணியான அம் மானும்
நீர் வேட்கையைத் தீர்க்கும்போதே,

விழுந்தது செவிகளில், சிம்ம கர்ஜனை!
விழுந்தது நழுவி நீரில், அதன் கர்ப்பம்!
தாவிய பெண்மான் கரையிலேயே விழ,
ஆவி பிரிந்தது அவ்வழகிய மானின்.

நீரில் அடித்துச் செல்லப்படுகின்ற,
சீரிய கர்ப்பத்தைத் துரத்திச் சென்று,
வீரியத்துடன் மீட்ட பரதன், அதன்
காரியங்கள் அனைத்தையும் செய்ய,

தாயும் ஆகித் தந்தையுமாகிப் பேணி
தவ நியமங்களைத் துறந்துவிட்டான்.
மனம் முழுவதும் மான்குட்டி மீதே!
தினமும் விரும்பிய முக்தி மீதல்ல.

இறுதி நினைவுகள் மான் மீதே இருக்க,
பிறவி எடுத்தார், ஒரு மானாகவே!
பக்தியும், ஞானமும் மறையவில்லை,
முக்தியின் ஆசையும் குறையவில்லை.

தனியாகவே அம் மான் வாழ்ந்து வந்தது,
தவச் சீலரின் ஒருவர் ஆசிரமத்தருகே!
இலை, தழை, புல்லைத் தின்ற மான்
இயற்கை எய்தியது, நீர் நிலையிலேயே!

தவச் சீலரான அந்தணர் ஒருவருக்குத்
தவறாமல் சென்று பிறந்தான் பரதன்.
பாச வலைக்கு அஞ்சி வெருண்டதால்,
மோசம் போகாமல் காத்துக்கொண்டான்.

குருடன் போலவும், ஒரு பித்தனாகவும்,
செவிடன் போலவும், உன்மத்தனாகவும்,
கிடைத்ததை உண்டு, நிலத்தில் உறங்கி,
கிடைத்ததை அணிந்து, ஜடபரதன் ஆனான்.

இறுதி நினைவுகளே முடிவு செய்யும்,
மறுபிறவி நம்முடையது என்ன என்று!
இறை நினைவினில் திளைத்திருந்தால்,
இறையுடன் கலந்திடும் வாய்ப்பு உண்டு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 52 ( 6 to 10)

ஏவம் ப்ரதி க்ஷண விஜ்ரும்பி4த ஹர்ஷா பா4ர
நிச்’சே’ஷா கோ3ப க3ணான் லாலித பூ4ரி மூர்த்திம்|
த்வா மக்3ரஜோபி பு3பு3தே கில வத்ஸராந்தே
ப்ரஹ்மாதமனோரபி மஹான் யுவயோர் விசே’ஷ: ||( 52 – 6)


வினாடிக்கு வினாடி வளர்ந்து வரும் அன்பின் பெருக்கால் திக்கு முக்காடிய கோபிகைகள் தங்கள் மகன்கள் என்றே கருதித் தங்களின் பல வேறு உருவங்களையும் சீராட்டிப் பாராட்டினார்கள். இந்த ரகசியத்தைத் தங்கள் தமையன் பலராமன் கூட ஒரு வருடம் கடந்த பின்னரே அறிந்துகொண்டார் அல்லவா? பரபிரம்மத்தின் ஸ்வரூபங்களாக நீங்கள் இருவரும் இருந்த போதிலும் உங்கள் இருவரிடையே மகத்தானபேதங்கள் உண்டு.( 52 – 6)


வர்ஷாவதௌ3 நவ புராதன வத்ஸ பாலான்
த்3ருஷ்ட்வா விவேக மஸ்ருணே த்3ருஹிணே விமூடே4 |
ப்ராதீ3த்3ருஷ: ப்ரதி நவான் முகுடாங்க3கதா3தி3
பூ4ஷாச்’சதுர் பு4ஜ யுஜஸ்ஸஜலாம்புதா3பா4ன் ||(53 – 7)

வருடத்தின் முடிவில் பிரமன் கண்டது பழைய கோப பாலர்களுடனும், கன்றுகளுடனும், அவர்களைப் போன்ற புதிய கோப பாலகர்களும், கன்றுகளும். இனம் பிரித்து அறியமுடியாமல் மயங்கிய பிரமனுக்குத் தாங்கள் புதிய கோபர்கள், புதிய கன்றுகள் ஒவ்வொருவரையும் நீலநிறம் கொண்டவராகத் தோள்வளை கிரீடம் அணிந்தவராக, நான்கு கரங்கள் உடையவராகக் காட்டினீர்கள் அல்லவா?( 52 – 7)


ப்ரத்யேகமேவ கமலா பரிலாலிதாங்கா3ன்
போ4கீ4ந்த்ர போ4க3 ச’யனான் நயனபி4ராமான் |
லீலா நிமீலித த்3ருஷஸ் ஸனகாதி3 யோகி3
வ்யாஸேவிதான் கமலபூ4ர் ப4வதோ த3த3ர்ஷ ||(53 – 8)

ஒவ்வொருவரும் லக்ஷ்மி தேவியால் சீராட்டப்பட்டவராக, சர்ப்ப ராஜன் ஆதிசேடனின் உடலில் படுத்து இருப்பவராக, கண்களுக்கு ஆனந்தம் அளிப்பவராக, யோகநித்திரை செய்பவராக, யோகிகளால் சேவிக்கப்படுகிறவராக பிரமன் கண்டார்.( 52 – 8)


நாராயணாக்ருதி மஸங்க்யதாமான் நிரீக்ஷ்ய
ஸர்வத்ர ஸேவகமபி ஸ்வ்மவேக்ஷ்ய தா4தா |
மாயா நிமக்3ன ஹ்ருத3யோ விமுமோஹ யாவத் 3
ஏகோ ப3பூ4வித2 ததா3 கப3லார்த4பாணி: ||( 53 – 9)

எண்ணமுடியாத நாராயண மூர்த்திகளை ஏக காலத்தில், எல்லா இடங்களிலும் கண்டு மாயையில் மூழ்கின் அறிவிழந்தான் பிரமன். அதே கணத்தில் பழையபடிக் கையில் பாதி உண்ட கவளத்துடன் தாங்கள் மீண்டும் காட்சி அளித்தீர்கள் அல்லவா? ( 52 – 9)


நச்’யன்மதே3 தத3னு விச்’வபதிம் முஹுஸ்த்வாம்
நத்வா ச நூனவதி தா4தரி தா4ம யாதே |
போதைஸ்ஸமம் ப்ரமுதி3தை: ப்ரவிச’ன் நிகேதம்
வாதாலயாதி4ப விபோ4 பரிபாஹி ரோகா3த் ||( 53 – 10 )

ஹே கிருஷ்ண! கர்வம் நசித்த பிரமன், அதன் பிறகு லோகநாதனானத் தங்களை பலமுறை நமஸ்கரித்து எழுந்தான். பலவாறு துதித் துவிட்டு சத்ய லோகம் சென்றான். மிக குதூகலத்துடன் எப்போதும் போலநண்பர்களுடனும், கன்றுகளுடனும் வீடு திரும்பிய குருவாயூரப்பா! தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காப்பற்றவேண்டும். ( 52 – 10)
 
[h=1]55. மாயக் கண்ணன்.[/h]

கோபாலனுக்குப் பிடித்த உணவுகள்,
பால், தயிர், வெண்ணை இவைதானே!
கட்டித் தயிர் சாதமும், அதற்குத்
தொட்டுக்கொள்ள ஊறுகாயும்தானே!

மாடு மேய்க்கச் செல்லுவதே, கூடித் தன்
மற்ற நண்பர்களுடன் உண்பதற்காகவே!
ஒரு பிடிச் சாதம், ஒரு கடி ஊறுகாய்!
ஒரு அமிர்தமும் ஈடாகாது அன்றோ?

மணல் மேட்டில், யமுனா தீரத்தில்,
நண்பகல் வேளையில் உணவு உண்ண,
கன்று, மாடுகள் கண் காணாது செல்ல,
தன் நண்பரை விட்டுச்சென்றான் கண்ணன்.

திரும்பி வந்தால், மாயமாகி இருந்தனர்,
அருமை நண்பர்கள் அனைவருமே!
மாடு, கன்றுகளும் போனவைகளே;
தேடியும் கிடைக்கவில்லை எவையுமே!

மாயக் கண்ணனுக்கு, இது ஒரு சவாலா?
மாயப் பசுக்களாகவும், கன்றுகளாகவும்,
எத்தனை நண்பர்கள் காணவில்லையோ,
அத்தனை பேர்களாகவும் உருவெடுத்தான்.

என்றைக்கும் விட அன்றைக்கே அங்கு,
அன்பு ஆறு பெருக்கெடுத்து ஓடியது.
அண்ணன் பலராமன் கூடச் சற்றும்
அறியவில்லை, இந்த மாற்றங்களை!

ஒரு நாள் பிரமனது உலகில் எனில்
ஓராண்டு ஆகிவிடும் நம் உலகில்!
ஓராண்டு காலம், மாயக்கண்ணன் இந்த
ஓரங்க நாடகத்தை நடத்தி வந்தான்!

பிரமன் மறுநாள் பார்த்து, முற்றும்
பிரமித்து, மதி மயங்கி நின்றான்.
தான் மறைத்த அத்தனை பேர்களும்,
தன் கண் முன், பூலோகத்திலேயே!

அனைத்தும் அக்கண்ணனே என்றதும்,
மலைத்துபோய், விழுந்து வணங்கினார்.
“அகந்தையால் அறிவிழந்தேன்; நான்
அறியவில்லை, உம் மகிமைகளை.

பக்தியால் மட்டுமே அறியவல்லவரே!
பக்தியைத் தாரும்” என்று வேண்டினார்.
பிரமனின் மாயைகள் செல்லுமா, நம்
பிரமாண்ட நாயகன், கண்ணனிடம் ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 53 ( 1 to 5)

தே4னுகாஸுர வதம்

அதீத்ய பா3ல்யம் ஜக3தாம் பதே த்வம்
உபேத்ய பௌக3ண்ட3வயோ மனோக்ஞம் |
உபேத்ய வத்ஸாவன முத்ஸவேன
ப்ராவர்ததா2 கோ3க3ண பாலனாயாம் ||( 53 – 1 )


ஹே கிருஷ்ணா! ஐந்து வயது முடிந்து ஆறாவது வயதை அடைந்ததும் கன்றுக் குட்டிகளை மேய்ப்பதை விட்டு விட்டு உற்சாகத்துடன் பசுக்களை மேய்க்கத் தொடங்கினீர்கள் அல்லவா? ( 53 – 1)


உபக்ரமஸ்யானு கு3ணைவ ஸேயம்
மருத் புராதீ3ச’ தவ ப்ரவ்ருத்தி : |
கோ3த்ரா பரித்ராண க்ருதேவதீர்ணஸ்
ததே3வ தே3வாSரப4தா2ஸ் ததா3 யத் ||(53 – 2)

பூமிப் பசுவைக் காப்பாற்ற அவதரித்த நீங்கள் அந்தச் சிறு வயதிலேயே அதை செய்ய ஆரம்பித்த இந்தப் பிரவிருத்தியானது மிகவும் பொருத்தமானதே!( 53 – 2)


கதா3பி ராமேண ஸமம் வனாந்தே
வனச்’ரியம் வீக்ஷ்ய சரன் ஸுகேன ||
ஸ்ரீதா3ம நாம்ன:ஸ்வஸக2ச்ய வாசா
மோதா3த3கா தே4னுக கானனம் த்வம் ||( 53 – 3 )


ஒரு நாள் பாலராமனுடன் நடுக் காட்டில் அதன் அழகை ரசித்தவாறு சுகமாகத் திரிந்து கொண்டு இருந்தீர்கள். ஸ்ரீ தாமா என்ற நண்பனின் சொற்களைக் கேட்டு சந்தோஷமாக தேனுகாசுரனின் காட்டிற்குச் சென்றீர்கள் அல்லவா? ( 53 – 3)


உத்தால தாலீநிவஹே த்வது3க்த்யா
ப3லேன தூ4தேSத2 பலேன தோ3ர்ப்4யாம் |
ம்ருது3: க2ரச்’சாப்4ய பதத் புரஸ்தாத்
ப2லோத் கரோ தே4னுக தா3னவோபி ||( 53 – 4)

தங்கள் விருப்பப்படி பலராமன் உயர்ந்த பனை மரக் கூட்டத்தை இரண்டு கரங்களாலும் பலமாகக் குலுக்கினான். பழுத்ததும், பழுக்கததும் ஆக பனம் பழங்கள் நாலாப் பக்கங்களிலும் விழுந்தன. மர்த்தனம் செய்யப்படவிருந்த தேனுகாசுரனும் கழுதை வேடத்தில் எதிர்த்து வந்தான். ( 53 – 4)


ஸமுத்3யதோ தே4னுக பாலனேஹம்
கத2ம் வத4ம் தே3னுகமத்ய குர்வே |
இதீவ மத்வா த்4ருவமக்3ரஜேன
ஸுரௌக4 யோத்3தா4ர மஜீக4தஸ்த்வம் ||( 53 – 5)


“பசுக்கூட்டத்தைக் காப்பாற்ற முயலும் நான் தேனுகனை எவ்வாறு வதம் செய்வேன்?”என்று ஆலோசித்த தாங்கள் அண்ணன் பாலராமனைக் கொண்டு தேவர்களின் சத்ருவான தேனுகாசுரனைக் கொல்லச் செய்தீர்கள் அல்லவா? (53 – 5)
 
[h=1]48. விதிவிலக்கு.[/h]

விதி என்று ஒன்று இருந்தால்,
விதி விலக்கு ஒன்றும் உண்டு.
விதியை மாற்றி விலக்கிவிட
விமலனால் மட்டுமே முடியும்!

இரட்டை யமன்களைப் போல
இந்த உலகைத் துன்புறுத்தினர்
இரண்யாக்கன், இரண்யன் என்ற
இரு கொடிய அசுர சகோதரர்கள்.

வராக மூர்த்தியால் கொல்லப்பட்ட
வலிய சகோதரனின் சாவைக் கண்டு,
மரணமே இல்லா வாழ்வு வேண்டிச்
சிறந்த தவம் செய்தான் இரண்யகசிபு.

கரையான் புற்று மூடிய போதும்,
கலையாத சிறந்த தவம் ஒன்று.
விரும்பிக் கேட்டதோ மிகவும்
வினோதமான வரம் ஒன்று.

இரவிலோ அன்றிப் பகலிலோ,
தரையிலோ, ஆகாயத்திலோ,
வீட்டிலோ அன்றி வெளியிலோ,
விலங்கினாலோ, மனிதனாலோ,

உயிருள்ள ஆயுதத்தினாலேயோ,
உயிரற்ற ஆயுதத்தினாலேயோ,
மரணம் தனக்கு நிகழக்கூடாதென,
பரமனிடம் பெற்றான் அரிய வரம்.

மரணமில்லாப் பெருவாழ்வை நம்பி,
இறைவன் நானே என்று அறைகூவி,
பரமனின் பக்தர்கள் எல்லோரையும்
விரோதிகளாகவே எண்ணலானான்.

நேரம் கனிந்ததும், இரண்யகசிபுவை
வேறு உலகுக்கு அனுப்பவேண்டியே,
கூறிய விதிகள் அனைத்தையும் தன்
சீரிய அறிவினால் உடைத்தான், ஹரி!

இரவோ பகலோ அல்லாத சந்திவேளை ,
தரையோ ஆகாயமோ அல்லாத படிக்கட்டு ,
வீடோ வெளியோ அல்லாத வீட்டு வாசல்,
விலங்கோ மனிதனோ அல்லாத உருவம்,

வலிக்காததால் உயிரற்றதும்,
வளர்வதால் உயிருள்ளதுமானக்
கூறிய நகங்களையே அவன் தன்
சீரிய ஆயுதங்களாகக் கொண்டான்.

எத்தனை வரங்களைப் பெற்றாலும்,
பித்தனைப் போல நடந்துகொண்டால்,
நித்தம் நித்தம் பயந்து அஞ்சி, நாம்
அத்தனிடம் தோற்றே ஆகவேண்டும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 53 ( 6 to 10)

தே4னுகாஸுர வதம்
ததீ3ய ப்4ருத்யானபி ஜம்பு3கத்வேன உபாக3தாநக்3ரஜ ஸம்யுதஸ்த்வம் |
ஜம்பூ3 பலானீவ ததா நிரச்தஸ் தாலேஷு கே2லன் ப4கவன் நிராஸ்த:||( 53 – 6)

பகவானே! அப்போது நரி வேடம் அணிந்து கொண்டு நெருங்கி வந்த அவனுடைய வேலையாட்களை, பலராமனும் நீங்களும் சிரமம் இல்லாமல் விளையாட்டுப் போலவே நாவல் பழங்களை வீசுவது போல எடுத்துப் பனை மரங்களின் மீது எறிந்தீர்கள் அல்லவா?
( 53 – 6)

வினிக்4நதி த்வய்யத2 ஜம்பு3கௌக4ம் ஸ நாமகத்வாத்3 வருணஸ் ததா3நீம் |
பயாகுலோ ஜம்பு3க நாம தே4யம் ஸ்ருதி ப்ரஸித்3த4ம் வ்யதி4தேதி மன்யே ||
( 53 – 7)


தாங்கள் ஜம்புகக் கூட்டத்தைக் (நரிகளின் கூட்டத்தைக்) கொல்லத் துணிந்த போது, அதே பெயரை உடைய வருணன் அஞ்சிக் கலங்கினான் போலும். அதன் காரணமாக அதன் பின் சம்புகன் என்ற தன் பெயரை வேதத்தில்மட்டும் பிரசித்தி பெறச் செய்தான் போலும்.
( 53 – 7)

தவாவதாரஸ்ய ப2லம் முராரே ஸஞ்ஜாத மத்3யேதி ஸுரைர் நுதஸ்த்வம் |
ஸத்யம் பலம் ஜாத மிஹேதி ஹாஸீ பா3லைஸ்ஸமம் தால ப2லான்ய பு4ங்க்தா: ||
( 53 – 8 )


“ஹே முராரியே! தங்கள் திரு அவதாரத்திற்குப் பலன் இப்போது தான் உண்டானது!” என்று தேவர்கள் தங்களைத் துதித்தனர். “உண்மைதான்! இந்த இடத்தில் பலன் (பழம்) சித்தித்தது (கிடைத்தது)” என்று சிரித்துக் கொண்டே கூறினீர்கள். பிறகு மற்ற சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு பனம் பழங்களை உண்டீர்கள் அல்லவா? ( 53 – 8)

மது4 ஸ்ரவந்தி ப்3ருஹந்தி தானி ப2லானி மேதோப4ர ப்4ருந்தி பு4க்த்வா |
த்ருப்தைச்’ச த்3ருப்தைர் ப4வனம் ப2லௌக4ம் வஹத்3பி4ராகா: க2லு பா3லகைஸ்த்வம் ||(53 – 9)


தேனைப் பெருக்குகின்ற, பெருத்துப் பருத்த, தசைப்பற்றுள்ள அந்தப் பழங்களைத் தின்று திருப்தி அடைந்த பின்னர் பழக் குவியலையும் எடுத்துக் கொண்டு சிறுவர்களுடன் வீடுதிரும்பினீர்கள் அல்லலவா? ( 53 – 9)

ஹதோ ஹதோ தே4னுக இத்யுபேத்ய ப2லான்யத3த்3பி4ர் மது4ராணி லோகே:|
ஜயேதி ஜீவேதி நுதோ விபோ4த்வம் மருத்புராதீ4ச்’வர பாஹி ரோகா3த் ||(53 – 10)


ஹே குருவாயூரப்பா! தேனுகசுரன் கொல்லப்பட்டான் என்று உற்சாகத்துடன் அருகில் வந்து இனிப்பான பழங்களை உண்ட மக்கள் “தாங்கள் மேன்மை பெற்று வெகு காலம் ஜீவித்து இருக்க வேண்டும்” என்று தங்களை வாழ்த்தினார்கள் அல்லவா? அப்படிப் பட்ட நீங்கள் என்னை வியாதிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.( 53 – 10)
 
[h=1]53. இரும்பு உலக்கை.[/h]

விளையாட்டு வினையாகும் அறிவோம்!
விளையாட்டால் ஒரு குலநாசம் ஆனதே!
யாதவ திலகம் கண்ணன் நம்மவன் என்று,
யாதவ குலம் கர்வமடைந்தது உலகினில்.

“நான் அவர்களை அழிக்காவிட்டால்,
நானிலத்தை அவர்கள் அழித்துவிடுவர்!”
அஞ்சிய கண்ணன் செய்தான், அதற்குக்
கொஞ்சம் அவசியமான ஏற்பாடுகளை.

வசிஷ்டர், விஸ்வாமித்திரர் மற்றும்
வாமதேவர் போன்ற மகரிஷிகளைப்
புண்ணிய தீர்த்தமாக அன்று விளங்கிய,
பிண்டாரகத்துக்கு அனுப்பிவைத்தான்.

கண்ணன் மகனான சாம்பனுடைய
நண்பர்கள் சிலர் சேர்ந்து கொண்டு,
பெண் வேடமிட்ட ஆண்மகன் சாம்பனை
கொண்டு நிறுத்தினர் முனிவர்கள் முன்.

“என்ன குழந்தை பிறக்கும் இவளுக்கு?
பெண்ணா அல்லது ஆணா?” எனக் கேட்க,
ஞான திருஷ்டியில் அவன் ஆண் எனக் கண்டு
மோனத் தவசீலர்கள் கோபம் அடைந்தனர்.

“குலத்தையே அழித்து நாசமாக்க, ஒரு
உலக்கை பிறக்கும் இவனுக்கு, சீக்கிரம்!”
‘வினையாக ஆகி விட்டதே விளையாட்டு !’
சினையாக உருவானது உலக்கை ஒன்று.

உலக்கை பிறந்ததும், உண்மையில் அஞ்சி
நிலத்தை ஆளுகின்ற மன்னனிடம் கூற,
குலநாச சாபத்துக்கு அஞ்சிய அரசரும்
உலக்கையைப் பொடிசெய்து கடலில் வீசினார்.

கரையில் ஒதுங்கிய பொடிகள், வலிய
கோரைப் புற்களாக வளர்ந்து நின்றன.
விழுங்கிய மீனிடம் கிடைத்த இரும்பை,
மழுங்கிய அம்பில் வைத்தான் ஜரன்.

துர் நிமித்தங்களைக் கண்டு அஞ்சி,
தீர்த்தமாடி, தான தருமங்கள் செய்யச்
சென்றனர் பிரபாச க்ஷேத்திரத்துக்கு,
கொன்றனர் மதியினை, மது அருந்தி!

போதையில் ஒருவரை ஒருவர் தாக்க,
கோரைப் புற்களைப் பறிக்க, அவைகள்
இரும்பு உலக்கைகளாக மாறிவிட்டன!
கரும்பு போலாயினர், ஆலையில் இட்ட!

அனைவரும் அங்கே மடிந்து போகவே,
அனந்தனின் அவதாரம் பலராமனும்,
யோகத்தில் அமர்ந்து, உடலை விட்டு
ஏகினான், தன்னுடைய வைகுண்டம்!

மரத்தடியில் அமர்ந்திருத்த கண்ணின்
மங்கலப் பாதத்தை, மான் என எண்ணி,
செலுத்தினான் வேடன் ஜரன், அதே கூரிய
உலக்கை இரும்பு பொருத்திய பாணத்தை.

சங்கு, சக்கரம், கதை என அனைத்தும்
மங்காத ஒளியுடன் வானகம் செல்ல,
ஸ்ருங்காரக் கண்ணனும், தன் உடலோடு
சிங்காரமாகச் சென்றான், வைகுண்டம்.

நமக்குச் சமமானவர்களுடன் நாம்,
நன்றாக விளையாடலாம்; தவறல்ல!
முனிவர்களிடம் சென்று குறும்பா?
இனியேனும் கவனமாக இருப்போம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 54 ( 1 to 5)

கோ3பானாம் உஜ்ஜீவனம்

த்வத் ஸேவோத்கஸ் சௌப4ரி நாம பூர்வம்
காளிந்த்3யன்தர் த்3வாத்3சா’ப்3த3ம் தபஸ்யன் |
மீனவ்ராதே ஸ்நேஹவான் போ4க3லோலே
தார்க்ஷ்யம் ஸாக்ஷா தை3க்ஷதாக்3ரே கதா3சித் ||( 54 – 1)


தங்களை சேவிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் சௌபரி என்ற முனிவர். முற்காலத்தில் யமுனா நதிக்குள் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்து கொண்டு இருந்தபோது அவர் மீன்களிடத்தில் அன்பு கொண்டார். ஒரு நாள் கருடனைத் தன் கண் முன்னே பிரத்தியக்ஷமாகக் கண்டார். ( 54 – 1)


த்வத்3வாஹம் தம் ஸக்ஷுத4ம் த்ருக்ஷஸூனும்
மீனம் கஞ்சிஜ் ஜக்ஷதம் லக்ஷயன் ஸ:|
தப்தச்’ சித்தே ச’ப்தவானத்ர சேத்தம்
ஜந்தூன் போ4க்தா ஜீவிதஞ்சாபி மோக்தா ||( 54 – 2 )

அந்த முனிவர் பசியுடன் கூடியவனும், ஒரு மீனைத் தின்றவனும், தங்கள் வாகனமும் ஆகிய கருடனைப் பார்த்து கோபம் கொண்டார். “நீ இங்கே வந்து பிராணிகளை உண்டால் உயிரை இழந்து விடுவாய்!” என்று கருடனையும் சபித்தார்.( 54 – 2)


தஸ்மின் காலே காலிய: க்ஷ்வேல த3ர்பாத்
ஸர்பாராதே: கல்பிதம் பா4க3மன்னம் |
தேன க்ரோதா4த் பதா3ம் போ4ஜபா4ஜா
பக்ஷ க்ஷிப்தஸ் தத்3து3ராபம் பயோகா3த் ||(54 – 3)


காளீயன் என்ற கொடிய விஷப் பாம்பு, கருடனுக்கு வைக்கப் பட்டிருந்த பாகத்தைத் தின்று விட்டான். தங்கள் திருவடிகளை சேவிக்கும் கருடன் கோபம் கொண்டு இறக்கையால் அடித்து விரட்டவும், காளீயன் அந்த கருடன் வரமுடியாத யமுனை நதியை அடைந்தான்.
( 54 – 3)


கோ4ரே தஸ்மின் சூரஜாநீரவாஸே
தீரே வ்ருக்ஷா விக்ஷதா: க்ஷ்வேலவேகா3த் |
பக்ஷி வ்ராத: பேதுரப்ரே பதந்த:
காருண்யார்த்3ரம் த்வன்மவஸ்தேன ஜாதம் ||(54 – 4 )

கொடியவனாகிய அந்தக் காளீயன் யமுனை நதியில் வசிக்கும் போது அவன் விஷத்தின் வீரியத்தால் நதிக் கரையில் இருக்கும் மரங்கள் நாசம் அடைந்தன. ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் மயங்கி விழுந்தன. உங்கள் மனம் கருணையினால் கனிந்தது. ( 54 – 4)


காலே தஸ்மின் ஏகதா3 ஸீரபாணிம்
முக்த்வா யாதே யாமுனம் கானனாந்தம் |
த்வய்யுத்3தா3ம க்3ரீஷ்ம பீ4ஷ்மோஷ்ண தப்தா
கோ3: கோ3பாலா வ்யாபிப3ன் க்ஷ்வேலதோயம் ||( 54 – 5 )


அக்காலத்தில் ஒருநாள் தாங்கள் பலராமன் இல்லாமல் இடைப் பிள்ளைகளுடனும் பசுக்களுடனும் யமுனையின் கரையில் உள்ள காட்டுக்குச் சென்றீர்கள். பொறுக்க முடியாத உஷ்ணத்தினாலும், தாகத்தினாலும் தவித்த பசுக்களும், இடையர்களும் யமுனையின் நீரைப் பருகினார்கள் அல்லவா? ( 54 – 5)
 
[h=1]54. பக்தனின் பக்தன்.[/h]

நாபாகன் என்னும் மன்னனின் மகன்,
நானிலம் புகழும் மன்னன் அம்பரீசன்.
பிராமண சாபத்தை வென்று, புகழ் பெற்ற
பரம பாகவதன், பக்தன், ஞானி, அரசன் .

பக்தியுடன், சம நோக்கும் கொண்டு,
யுக்தியுடன் அரசாண்டு வந்தவனின்
விவேக, வைராக்கியங்களைக் கண்டு,
விஷ்ணு அளித்தார் தன் சுதர்சனத்தை.

பகைவர்களிடமிருந்து கணம் தவறாது,
பாதுகாத்து வந்தது சுதர்சனச் சக்கரம்.
பசுதானமும், துவாதசி விரதமும் செயும்
விசுவாச அரசனிடம் துர்வாசர் வந்தார்!

உணவு உண்ண அழைத்ததும், முனிவர்
உணவுக்கு முன்பு நீராடச் சென்றார்.
விரதம் முடிக்கும் வேளை வரவே,
அரசன் தண்ணீரைப் பருகி முடித்தான் .

தம் ஞான திருஷ்டியால் கண்ட முனிவர்,
தம் கோபம் பொங்கி எழ, அக்கணமே
ஏவினார் அவனை அழித்துவிட, ஒரு
பேயினை ஜடையில் தோற்றுவித்து.

ஊழித்தீயைப்போல அழிக்க வந்த பேயை,
ஆழிச் சக்கரம் சினந்து அழித்துவிட்டது.
ஓட ஓட விரட்டிச் சென்று, முனிவரை
ஓடச் செய்தது மூவுலகமும், சுதர்சனம்.

பிரமனைச் சென்று அடைந்தார் முனிவர்.
பிரமனோ நாரணனை அஞ்சுபவர் அன்றோ?
கைலாசம் சென்றாலும் பலன் இல்லையே!
கைலாசபதியும் நாரணனிடமே அனுப்பினார்.

நாராயணணும் கை கொடுக்கவில்லையே!
“நான் செய்வது ஒன்றுமில்லை முனிவரே!
பக்தனின் பக்தன் நான் என்று நீர் அறியீரா?
பக்தனின் பாதம் சென்று பற்றுங்கள்” என்றான்.

காலடியில் வீழ்ந்த பெருந்தவ முனிவரின்
கோலம் கண்டு மனம் பதைத்த மன்னன்,
சக்கரத்திடம், “இவரை விட்டு விடு!” என,
சக்கரமும் அங்கிருந்து அகன்று சென்றது.

பிராமணசாபம் என்றால் உலகே அஞ்சும்!
பிராமணரையே அஞ்ச வைத்த ஒருவன்,
சாபத்தை வென்று, இறைவனின் நல்ல
நாமத்தின் புகழை நிலை நிறுத்தினான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 54 (6 to 10)

கோ3பானாம் உஜ்ஜீவனம்

நச்’யஜ்ஜீவன் விச்யுதான் க்ஷ்மாதலே தான்
விச்’வான் பச்’யன் நச்யுத த்வம் தயார்த்ர: |
ப்ராப்யோபாந்தம் ஜீவயாமாஸித2 த்3ராக்3
பீயூஷாம்போ4வர்ஷிபிச்’ ஸ்ரீகடாக்ஷை:||( 54 – 6)

தன்னைச் சரண் அடைந்தவர்களைக் கைவிடாத கிருஷ்ணா! நண்பர்களும், பசுக்களும் விஷ நீரைப் பருகியதால் உயிர் இழந்து தரையில் விழுவதைக் கண்டதும் கருணை கொண்டு அவர்கள் அருகில் சென்று அமிர்தத்தை வர்ஷிக்கும் கடைக்கண் பார்வையால் அவர்களை உயிர்ப்பித்தீர்கள் அல்லவா? ( 54 – 6)


கிம் கிம் ஜாதோ ஹர்ஷவர்ஷா திரேக:
ஸர்வாங்கே3ஷ் வித்யுத்தி2த கோ3ப ஸங்கா3:|
த்3ருஷ்ட்வாக்3ரே த்வாம் த்வத்க்ருதம் தத்3வித3ந்த :
த்வாமாலிங்கன் த்3ருஷ்டனானா ப்ரபா4வ:||( 54 – 7 )


கோபர்கள் “இது என்ன ஆச்சரியம்? உடல் முழுவது ஆனந்தம் பொங்குகிறதே!” என்று சொல்லிக் கொண்டே எழுந்தனர். எதிரில் உங்களைக் கண்டதும் அது உங்கள் கருணையின் வெளிப்பாடே என்று அறிந்து அன்புடன் உங்களை ஆலிங்கனம் செய்து கொண்டார்கள் அல்லவா?( 54 – 7)


கா3வச்’ சைவம் லப்3த4 ஜீவா: க்ஷணேன
ஸ்பீதானந்தா3ஸ்த்வா ச த்3ருஷ்ட்வா புரஸ்தாத் |
த்3ராகா3வவ்ருஸ் ஸர்வதோ ஹர்ஷ பா3ஷ்பம்
வ்யாமுஞ்சந்த்யோ மந்த3 முத்3யன் நிநாதா3:||(54 – 8)

அவ்விதமே பசுக்களும் ஒரே நொடியில் உயிர் பெற்று எழுந்தன. எதிரில் தங்களைக் கண்டு ஆனந்தம் பெருகி கண்களில் நீர் வழிய மெதுவாகக் கத்திக் கொண்டு தங்களைச் சுற்றி நின்றன அல்லவா? ( 54 – 8)


ரோமாஞ்சோSயம் ஸர்வதோ ந: ச’ரீரே
பூயஸ்யந்த : கதா3சிதா3னந்த3 மூர்ச்சா2 |
ஆச்’சர்யோயம் க்ஷ்வேல வேகோ3 முகுந்தே3தி
உக்தோ கோ3பைர் நந்தி3தோ வந்தி3தோ பூ4: ||(54 – 9)

“முக்தியைக் கொடுக்கும் ஈசா! எங்கள் தேகங்களில் எங்கும் மயிர் கூச்செரிகிறது. உள்ளத்தில் இனம் தெரியாத ஆனந்தம் பெருகுகிறது. இந்த விஷத்தின் வேகமோ ஆச்சரியமாக இருக்கிறது!” என்று கூறிய கோபாலர்கள் தங்களைக் கொண்டாடி வணங்கினார்கள் அல்லவா? ( 54 – 9)


ஏவம் பக்தான் முக்த ஜீவானபி த்வம்
முக்3தா4பாங்கை3ரஸ்தரோகா3ம்ஸ்தனோதி |
தாத்3ருக்3 பூ4த ஸ்பீத காருண்யா பூ4மா
ரோகா3த் பாயா வாயுகே3ஹாதி4நாத2 ||(54 – 10)


இவ்விதம் உயிர் இழந்த தங்களின் பக்தர்களைக் கூடத் தங்களின் கடைக்கண் பார்வையால்
உயிர் பெறச் செய்கின்றீர்கள். அப்படிப்பட்ட கருணையை உடைய தாங்கள் என்னையும் வியாதிகளில்இருந்து காப்பாற்ற வேண்டும். ( 54 – 10)
 
[h=1]56. த்ரி வக்ரா.[/h]

அஷ்ட வக்ரன் கதையை அறிவோம்;
அஷ்ட வக்ரமும், அறிவுக்கு அல்லவே!

த்ரிவக்ரா கூனியும் பெற்றிருந்தாள்,
த்ரிவக்ரம் உடலில், மனதில்அல்ல!

வில் யாகத்துக்கு வந்த அழைப்பை,
விழைந்து ஏற்ற கண்ணன், பலராமன்,

மதுரா நகரிலே, ராஜ வீதியிலே,
மதர்ப்புடன் நடந்து சென்றனர்.

தாமரைக் கண்ணியும், அழகியுமான
கூனி ஒருத்தி, எதிரே வந்தாள்.

சந்தனம் சேர்ப்பதில் திறமைசாலி!
‘சந்தனம் பூசுவீர்’, என்று அளித்தாள்.

சந்தனம் பூசி மகிழ்ந்த கண்ணன்,
மந்திரமின்றி, மாயம் செய்தான்.

உள்ளத்தில் கொள்ளை அழகும்,
உடலில் கூனலும் பெற்ற அவளை,

உலகம் மூன்றும் கண்டு மயங்கும்,
உலக அழகியாக ஆக்க முனைந்தான்.

தன் இரு கால்களால், அவளது
தளிர்ப் பாதங்களை மிதித்து,

தன் இரு விரல்களால், அவள்
தாடையைப் பற்றி உயர்த்தவே,

மூன்று கூனல்களும் மறைந்து,
மூன்றுலக அழகி ஆனாள், அவள்.

கண்ணனின் தரிசனமே போதும்,
மண்ணில் நாம் கடைத்தேறவே.

கண்ணன் அருளும், ஸ்பரிசமும்,
என்ன மாயம் செய்ய இயலாது?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
IN CASE YOU DO NOT THE STORY OF ASTA VAKRA, IT IS GIVEN BELOW!

[h=1]35. அஷ்ட வக்கிரன்.[/h]

வேத விற்பன்னரான உத்தாலகரிடம்
வேதம் பயின்ற ஒரு சீடர் கஹோளர்;

நியம நிஷ்டைகளில் சிறந்த போதிலும்,
திறமை குறைந்தவர் வேதப் பயிற்சியில்.

சீலம், பக்தி, நற்குணம் பெற்றிருந்ததால்,
சீலவதி குருவின் மகளையே மணந்தார்.

வேத பாடத்தின்போது அருகே அமர்வாள்
மாதரில் சிறந்த குருவின் மகள் சுஜாதை.

கருவில் உருவான குழந்தையும் கூட,
கருவிலேயே வேதம் கேட்டுப் படித்தது;

தந்தையின் தவறுகளைக் கேட்டு வருந்தி,
விந்தையாய் எட்டுக் கோணல் அடைந்தது!

அஷ்ட வக்கிரன் என்று பெயர் பெற்றவன்,
கஷ்டமான வேத, வேதாந்தங்களைத் தன்

பாலப் பருவத்திலேயே நன்கு பயின்றதால்
பால சூரியனைப் போலவே திகழ்ந்தான்.

மிதிலையில் நிகழ்ந்த பெரிய யாகத்துக்கு
மிதப்புடன் சென்றவனைத் தடுத்தான்,

தோற்றத்தை மட்டும் கண்டு ஏமாந்த,
ஏற்றத்தை அறியாத அறிவிலி சேவகன்.

“வெளித் தோற்றம் அறிவுக்குப் பிரமாணமா?
வெளி வடிவம் பருத்து, உள்ளே பஞ்சு ஆனால்?

முதிர்ச்சி என்பது வெறும் வயதினால் அல்ல;
முதிர்ச்சி என்பது ஞானத்தாலேயே உண்டு.”

வாத நிபுணன் வந்தியைத் தன்னுடைய
வாதத்தால் வென்ற அஷ்டவக்கிரன், தன்

தந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்ற அந்த
வந்திக்கும் அதே கதியை ஏற்படுத்தினான்.

தோற்றத்தைக் கண்டு ஒரு மனிதனின்
ஏற்றத்தை நாம் எடை போட வேண்டாம்.

தோற்றங்கள் நம்மை ஏமாற்றிவிடலாம்;
ஏற்றங்களை நாம் உணருதல் வேண்டும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 55 ( 1 to 5)

காளிய மர்த்த3னம்

அத2 வாரிணி கோ4ரதரம் ப2ணினம்
ப்ரதி வாரயிதும் க்ருத தீ4ர்ப4க3வன் |
த்ருதமாரித2 தீரக3 நீபதரும் விஷ
மாருதசோ’ஷித பர்ணசயம் ||(55 – 1)

ஹே கிருஷ்ணா! அதன் பிறகு யமுனா நதியில் வசிக்கும் கொடிய காளீயனை அங்கிருந்து விரட்ட நிச்சயித்துக் கொண்டீர்கள் நீங்கள். நதிக் கரையில் இருந்த, விஷக் காற்றினால் உலர்ந்த இலைகளைக் கொண்ட, கதம்ப மரத்தில் விரைவாக ஏறினீர்கள் அல்லவா?
( 55 – 1)

அதி4ருஹ்ய பதா3ம்பு3ருஹேன ச தம்
நவபல்லவ துல்ய மனோக்ஞ ருசா |
ஹ்ருத3 வாரிணி தூ3ரதரம் ந்யபத:
பரி கூர்ணீத கோ3ர தரங்க க3ணே ||( 55 – 2)


இளம் தளிர்களை ஒத்த மிருதுவானதும், அழகான நிறத்தை உடையதும் ஆகிய தாமரை போன்ற கால்களினால் அந்த மரத்தின் மீது ஏறிய நீங்கள் , நீர்ச் சுழிகளும், பயங்கர அலைகளும் நிறைந்த அந்த மடுவில் குதித்தீர்கள் அல்லவா? ( 55 – 2)

பு4வனத்ரயா பா4ர ப்4ருதோ ப4வதோ
கு3ரு பா3ர விகம்பி விஜ்ரும்பி4 ஜலா |
பரிமஜ்ஜயதி ஸ்ம த4னுச்’ச’தகம்
தடிநீ ஜடிதீ ஸ்புட கோ4ஷவதி ||( 55 – 3)


மூவுலகங்களுடைய பாரத்தைச் சுமக்கும் தங்களுடைய அதிகமான பாரத்தால் சலித்து உயரக் கிளம்பிய யமுனை நீர் விரைவாக நூறு வில்லிடை நிலத்தைத் தண்ணீரில் மூழ்கடித்தது அல்லவா? ( 55 – 3)

அத2தி2க்ஷு விதி3க்ஷு பரிக்ஷுபி4த
ப்4ரமி தோத3ர வாரி நிநாத3ப4ரை: |
உத3கா3 துத3கா3 து3ரகாதி4பதி:
த்வதுபாந்த மசா’ந்த ருஷாந்த4மனா: ||(55 – 4)


அதன் பின்னர் திக்குகளும் விதிக்குகளும் கலக்கப்பட்டு சுழி உண்டாகும்படி செய்யப்பட யமுனை ஜலத்தாலும், அதன் அதிக ஒலியாலும், சினம் அடைந்த காளீயன் தங்கள் அருகில் மெய்மறந்து வந்து அடைந்தான் அல்லவா? (55 – 4 )

ப2ண: ச்’ருங்க3 ஸஹஸ்ர வினிஸ்ஸ்ருமர
ஜவலத3க்னி கணோக்3ர விஷாம்பு3த4ரம் |
புரத; பணினம் ஸமலோகயதா2
ப3ஹு ச்’ருங்கி3ண மஞ்சன சை’லமிவ ||( 55 – 5 )


ஆயிரம் படங்களின் நுனிகளில் இருந்து வெளிக் கிளம்பும் ஜ்வலிக்கின்ற தீக்கனலை உடையவனும், கொடிய விஷத்தை உடையவனும், அநேகக் கொடுமுடிகள் கொண்ட கரிய மலை போன்று இருப்பவனும் ஆகிய காளீயனைத் தாங்கள் தங்கள் எதிரில் கண்டீர்கள் அல்லவா? (55 – 5)
 
[h=1]57. தச அவதாரம்.[/h]

மனிதர்களும் எடுக்கின்றார்கள்,
மண்ணுலகில் தச அவதாரங்கள்!

தந்தைக்கு நல்ல ஒரு மகனாகவும்,
மகனுக்குத் நல்ல தந்தையாகவும்;

தாத்தாவுக்குச் செல்லப் பேரனாகவும்,
பேரனுக்குப் பிடித்த தாத்தாவாகவும்;

அண்ணனுக்குத் தக்க தம்பியாகவும்,
தம்பிக்கு ஏற்ற அண்ணனாகவும்;

ஆசிரியருக்குச் சிறந்த மாணவனாகவும்,
மாணவனுக்கு உகந்த ஆசிரியராகவும்;

மாமனாருக்குப் பிரிய மருமகனாகவும்,
மருமகனுக்கு, உயர்ந்த மாமனாராகவும்!

கண்ணன் எடுத்த அவதாரங்களைக்
கண்கள் குளிரக் காண்போமா, நாம்?

மனிதர்களுக்கு அவன் ஒரு மாணிக்கம்;
மனம் கவர்ந்த மன்மதன், மாதர்களுக்கு!

கோபர்களுக்கு, நெருங்கிய நண்பன் அவன்;
கோபியருக்கோ, உள்ளம் கவர்ந்த காதலன்.

தேவகி வசுதேவருக்கு, நோற்றுப் பெற்ற புதல்வன்;
பாவிகளுக்குத் தண்டனை அளிக்கும் தர்மதேவன்.

பொல்லாத கம்சனுக்கு, அச்சம் தரும் காலதேவன்;
பொது ஜனங்களுக்கு, அவன் ஒரு சிறு குழந்தை.

யோகியருக்கு, எல்லாம் வல்ல பரமாத்மா;
ஞானியருக்கு, அவன் ஞானம் தந்த பரமன்.

கண்டவர் மனங்களில், கம்சன் அரண்மனையில்,
கண்ணன் நிலை பெற்று விளங்கியது, இவ்வண்ணமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 55 ( 6 to 10)

காளிய மர்த்த3னம்

ஜ்வலத3க்ஷி பரிக்ஷர து3க்3ரவிஷ
ச்’வஸநோஷ்மப4ர: ஸ மஹா பு4ஜக3:|
பரித3ஷ்ய ப4வந்த மனந்த ப3லம்
ஸம வேஷ்டய த3ஸ்புட சேஷ்டமஹோ ||(55 – 6)

ஜ்வலிக்கும் கண்களும், விஷ வாயுவாகிய வெப்பமான மூச்சுக் காற்றும், கொண்ட காளீயன் அளவற்ற பலம் கொண்ட தங்களைக் கடித்தான். தாங்கள் அசைவற்று இருப்பதைக் கண்டு தங்களைச் சுற்றிக் கொண்டான் அல்லவா? ( 55 – 6)


அவிலோக்ய ப4வந்த மதா2குலிதோ
தடகா3மினி பா3லக தே4னு கணே:|
வ்ரஜ கே3ஹ தலேSப்ய நிமித்த ச’தம்
ஸமுதீ3க்ஷ்ய க3தா யமுனாம் பசு’ப:||( 55 – 7)


அதன் பிறகு யமுனைக் கரையில் இருக்கும் சிறுவர்களும், பசுக் கூட்டமும் தங்களைக் காணமல் வருந்தும் பொழுது கோகுலத்திலும் அனேக அபசகுனங்களைக் கண்ட கோபர்களும் யமுனைக் கரைக்கு விரைந்தார்கள் அல்லவா? ( 55 – 7)


அகி2லேஷு விபோ4 ப4வதீ3ய த33சா’ம்
அவலோக்ய ஜிஹாஸுஷு ஜீவப4ரம் |
பணி ப3ந்த4ன மாசு’ விமுச்ய ஜவாத்
உத3க3ம்யத ஹாஸ ஜூஷா ப4வதா ||(55 – 8 )


ஹே கிருஷ்ணா! அவர்கள் தங்கள் நிலையை எண்ணி வருந்தி உயிரை விடத் துணிந்தபோது விரைவாக பாம்பின் கட்டை அவிழ்த்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே தாங்கள் நீரின் அடியிலிருந்து நீருக்கு மேலே வெளியே வந்தீர்கள் அல்லவா? ( 55 – 8)


அதி4ருஹ்ய தத: ப2ணிராஜ ப2ணான்
நந்ருதே ப4வதா ம்ருது3 பாத3 ருசா|
கலசி’ஞ்ஜித நூபுர மஞ்ஜுமிலத்
கரகங்கண ஸங்குல ஸங்வணிதம் ||(55 – 9 )


அதன் பிறகு சர்ப்ப ராஜனின் படங்களில் எறிக் கொண்டு; அழகான காந்தியுடைய தங்கள் திருவடிகளின் சலங்கைகளின் இனிய ஒலியும், இரு கைகளில் குலுங்கும் வளைகளின் ஒலியும் பின்னிப் பிணைந்து ஒலிக்கும்படி அழகிய நர்த்தனம் செய்தீர்கள் அல்லவா?
( 55 – 9)


ஜஹ்ருஷு பசு’பாஸ் துதுஷுர் முனயோ
வவ்ருஷு: குஸுமானி ஸுரேந்த்3ர க3ணா:|
த்வயி ந்ருத்யதி மாருத கே3ஹபதே
பரிபாஹி ஸ மாம் த்வமதா3ந்த க3தா3த் ||( 55 – 10)


ஹே குருவாயூரப்பா! இங்ஙனம் தங்கள் நர்த்தனம் செய்யும் பொழுது கோபர்கள் ஆனந்தம் அடைந்தனர்; முனிவர்கள் ஆனந்தம் அடைந்தனர்; இந்திராதி தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அப்படிப்பட்ட தாங்கள் என் வியாதிகளைப் போக்கி அருள வேண்டும்.
( 55 – 10)
 
[h=1]58. அடங்கிய பசி.[/h]

துர்வாச முனிவரும், பதினாயிரம் சீடர்களும்,
துரியோதனனைக் காண வந்தனர், ஒருநாள்.
கோபக்கார முனிவரை நன்கு உபசரித்து,
சாபம் வராமல் பார்த்துக்கொண்டான் அவன்.

‘தனக்கு ஒருகண் போனாலும் பரவாயில்லை,
தன் எதிரிக்கு இருகண்களும் போகவேண்டும்’,
என்று எண்ணும் மனிதருள் ஒருவன்தானே,
என்றும் சினந்திருக்கும், அந்த துரியோதனன்!

“வரம் நான் தருவேன்” என்னும் முனிவரிடம்,
வரம் என்ன அவன் கேட்டான் என அறிவீரா?
“பஞ்ச பாண்டவர்களிடமும் நீங்கள் சென்று,
கொஞ்சமேனும் உணவு அருந்த வேண்டும்”.

“அறுவர்களான அவர்களும், மனைவியும்,
அறுசுவை உணவை உண்டுவிட்டுச் சுகமாக
அமர்ந்திருக்கும்போதே, செல்லவேண்டும்
அவர்களிடம், அங்கே” என்று வேண்டினான்.

பரீட்சை செய்து பார்ப்பதில், அளவிலாத
பிரீத்தி உடைய முனிவரும், அவ்வாறே
கானகத்தில் உள்ள அறுவரையும் தேடி,
மாணவர்களுடனே தாம் செல்லலானார்.

வனவாசம் தொடங்கும் முன்பு, தருமனுக்கு
வானில் உலவும் சூரியதேவன் அளித்தான்,
அதிசயமான அக்ஷய பாத்திரம் ஒன்று;
அறுசுவை உணவினை அளிக்க வல்லது!

அனைவரும் உண்டபின், சுத்தம் செய்தால்,
அன்றைய சக்தி மறைந்தே போய்விடும்.
அறுசுவை உணவினை, அடுத்த நாளிலேயே,
அற்புதக் கலயம் அளிக்க வல்லது, மீண்டும்.

“நீராடி விட்டு வருகின்றோம், நாங்கள்;
சீரான உணவைத் தயார் செய்யும்”, என
முனிவரும், சீடரும் அகன்று செல்லவே,
முனிவரின் சாபத்துக்கு அஞ்சிய திரௌபதி,

“கண்ணா எங்களைக் காப்பாய்” என வேண்ட,
கண்ணன் நின்றான், அவள் கண் முன்னாலே!
“உண்பதற்கு ஏதேனும் தருவாய் எனக்கு,
உடனடியாக நீயும்” என்று அவன் சொல்லவே,

“சோதனை மேல் சோதனை இன்று, ஏன்?”
வேதனையுடன், திரௌபதி மிகவும் வருந்த,
அக்ஷயபாத்திரத்தில் தேடிக் கண்டுபிடித்தான்,
அடியில் ஒரு பருக்கைச் சோறும் கீரையும்!

“விஸ்வரூபனான ஹரியின் பசி அடங்கட்டும்”
விஸ்வரூபன் கண்ணன் வாயில் இட்டான்.
முனிவரை அழைத்துவர, அனுப்பினான் பீமனை.
முனிவரோ, “பசியில்லை மன்னியுங்கள்” என்றார்.

பசி தீர்ந்தது கண்ணன் உண்ட பருக்கையால்;
பசி தீர்ந்தவர், தம் வழியே சென்றுவிட்டனர்.
விஸ்வரூபன் விளையாடிய லீலையினை,
வியந்தபடி நின்றனர், பஞ்ச பாண்டவர்கள்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 56 ( 1 to 5)

காலிய அனுக்3ரஹம்

ருசிர கம்பித குண்ட3லமண்ட3லஸ்
ஸுசிரமீச’ நநர்தி2த பன்னகே3 |
அமர தாடி3த து3ந்து3பி4 ஸுந்தரம்
வியதி கா3யதி தை3வத யௌவதே ||( 56 – 1 )

ஹே கிருஷ்ணா! ஆகாயத்தில் அப்ஸர ஸ்திரீக்களும், தேவர்களும் துந்துபிகளை முழக்கியபடி இனிமையாகப் பாடும்போது, அழகிய குண்டலங்கள் அசையத் தாங்கள் பாம்பின் மேல் வெகு நேரம் ஆடினீர்கள் அல்லவா?(56-1)

நமதி யத்3யத3முஷ்ய சி’ ரோ ஹரே
பரிவிஹாய தது3ன்னதமுன்னதம் |
பரிமத3ன் பத3 பங்கருஹா சிரம்
வ்யஹரதா கரதால மனோஹரம் ||( 56 – 2 )

ஹரே ஸ்ரீ கிருஷ்ணா! அந்தக் காளீயனுடைய வணங்கிய தலைகளை விட்டுவிட்டு, மேலே கிளம்புகின்ற தலைகளைத் தங்கள் திருவடி மலர்களால் மிதித்துக் கொண்டு, தாளத்துடன் வெகு நேரம் நர்த்தனம் செய்தீர்கள் அல்லவா? ( 56 – 2)

த்வத3 ப4க்ன விபு4க்ன ப2ணாக3ணே
க3லித சோ’ணித சோ’ணித பாத3ஸி |
பணி பதா வவஸீத3தி ஸன்னதாஸ்
தத3பலாஸ்தவ மாத3வ பாத3யோ:||( 56 – 3 )


ஹே லக்ஷ்மி காந்தா! தங்கள் கால்களால் நசுக்கப்பட்டு தொங்கிய படங்களுடனும், பெருகும் இரத்தத்தால் நதி நீரை சிவப்பாக்கிய காளீயன் சோர்வடைந்த பொழுது, அவன் பத்தினிகள் தங்கள் திருவடிகளை வந்து வணங்கினார்கள் அல்லவா? ( 56 – 3)

அயி புரைவ சிராய பரிச்’ருத
த்வத3னுபா4வ விலீன ஹ்ருதோ3 ஹிதா:|
முனிபி4ரப்யனவாப்ய பதைஸ் ஸ்தவைர்
நுநுவு ரீச’ பவந்த மயந்த்ரிதம் |( 56 – 4 )

ஹே கிருஷ்ணா! வெகு நாட்களுக்கு முன்பே தங்கள் மகிமையைக் கேட்டு அதில் மனத்தை ஈடுபடுத்தி இருந்த அவர்கள் முனிவர்களுக்கும் அரிதாகிய அழகிய தோத்திரங்களால் தங்களைத் தங்கு தடை இன்றி துதித்தார்கள் அல்லவா? ( 56 – 4)

பணி வதூ4ஜன ப4க்தி விலோகயன்
ப்ரவிகஸத் கருணாகுல சேதஸா |
பணி பதிர் ப4வதாச்’யுத ஜீவிதஸ்
த்வயி ஸமர்பித மூர்த்தி ரவானமத் ||( 56 – 5 )


தங்களைச் சரண் அடைந்தவரைக் கை விடாத அச்யுதனே! காளீயனுடைய பத்தினிகளின் பக்தியைக் கண்டு கருணை மேலிட்ட தாங்கள் சர்ப்ப ராஜனை முன்போலவே ஆக்கினீர்கள். அவனும் மதம் ஒடுங்கியவனாகத் தங்களை வணங்கி நின்றான். ( 56 – 5)
 
[h=1]59. நிருகன் கதை.[/h]

களித்து விளையாடிய கண்ணனின் மகன்கள்
களைத்து நீர் வேட்கை மிகுந்ததால் ஒரு
கிணற்றில் எட்டிப் பார்த்தனர்; அங்கே
கிண்ணென்று கல் போன்ற ஒரு ஓணான்.

அற்புதமான அதனை அவர்களால் வெளியே,
எத்தனை முயன்றும் தூக்க இயலவில்லை.
கண்ணனிடம் சென்று கூறினர் பிள்ளைகள்
மண்ணுலகோர் காணா விந்தையைப் பற்றி.

இடத்தை அடைந்த கண்ணன் தன் சிவந்த
இடக்கையால் தூக்கி வெளியே எடுத்தான்;
கண்ணன் கைபட்டவுடனேயே அந்த ஓணான்
பொன்னிற தேவனாகவே மாறி விட்டது!

பட்டாடைகளும், பலப்பல ஆபரணங்களும்
பளபளக்கும் ஒரு வாலிபனாக மாறியது.
பணிவுடன் கண்ணன் தாள்களை அவன்
பணிந்து தன் கதையைக் கூறலானான்.

அரசன் நிருகன் எனப்படுபவன் அவனே!
சிறந்த இக்ஷ்வாகு குலத்தின் மன்னன்;
கொடைவள்ளல் என்ற புகழ் பெற்றவனுக்கு
கொடையினாலேயே கொடுமை நிகழ்ந்தது.

காராம் பசுக்களை அந்தணர்களுக்கு தானம்
கோராமலேயே அளிக்குபோது, ஒருவனின்
கராம் பசுவும் மந்தையில் சேர்ந்துகொண்டது.
ஆராயாமல் அதையும் அளித்து விட்டான்.

பசுவின் சொந்தக்கார மனிதனுக்கும்
பசுவை தானம் பெற்ற மனிதனுக்கும்
பரபரப்பான வாக்குவாதங்கள் முற்றி
சமரசம் செய்ய முடியவே இல்லை.

அந்திமக் காலம் வந்த மன்னனிடம்,
“முந்தி தண்டனையா சுவர்க்கமா?”
வந்து வினவினான் யமதர்மராஜன்,
“தந்து விடு தண்டனையை முதலில்!”

“விழு!” என்றதும் ஒரு ஓணானாக மாறி
விழுந்தான் கிணற்றில் என்றோ ஒருநாள்!
விழுந்தவன் வெகுநாள் காத்திருந்தான்;
வேணு கோபாலனின் கை ஸ்பரிசத்துக்கு.

காத்திருந்தது சற்றும் வீண்போகவில்லை.
“காலமெல்லாம் உன்மீது நான் கொண்ட
பக்தி மாறாமலேயே நிலைத்து இருக்க
பக்தனுக்கு அருள் செய்வாய் கண்ணா!”

பொன் விமானத்தில் ஏறிக் கொண்டான்;
பொன்னுலகம் பறந்து சென்றான் நிருகன்.
நல்லதையே எண்ணிச் செய்யும் போதும்
நாம் எதிர்பாராத தீயவிளைவுகள் வரலாம்!

வாழ்க வளமுடன்
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 57 ( 1 to 5 )

ப்ரலம்பா3ஸுர வத4ம்

ராமஸக2: க்வாபி தி3னே காமாத
ப4க3வன் க3தோ ப4வான் விபினம் |
ஸூனுபி4ரபி கோபானாம் தே3னுபி
ரபி4 ஸம்வ்ருதே லஸத்3வேஷ: ||( 57 – 1 )


பக்தர்களின் இஷ்டதைக் கொடுக்கும், துஷ்டர்களின் இஷ்டதைக் கெடுக்கும் பகவானே! தாங்கள் ஒரு நாள் பலராமனுடன் கூட, ஆபரணங்கள் அணிந்து கொண்டு அலங்கரித்துக் கொண்டவராக, கோப குமாரர்களாலும், பசுக்களாலும் சூழப் பட்டவராக காட்டுக்குச் சென்றீர்கள் அல்லவா? ( 57 – 1)


ஸந்த3ர்ஷயன் ப3லாய ஸ்வைரம்
ப்3ருந்தா3வனச்’ரியம் விமலாம் |
காண்டீ3ரை: ஸஹ பாலைர்
பா4ண்டீ3ரக மாக3மோ வடம் க்ரீட3ன் ||( 57 – 2)


நிர்மலமான பிருந்தாவனத்தின் அழகினை பலராமனுக்குக் காட்டியபடியே, கையில் தடி எடுத்துக் கொண்ட சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு, பாண்டீரகம் என்ற ஆலமரத்தை அடைந்தீர்கள் அல்லவா? ( 57 – 2)


தாவத் தாவக நித3னஸ்ப்ருஹயாலுர்
கோ3ப மூர்த்தி ரத3யாலு: |
தை3த்யை ப்ரலம்ப3 நாம
ப்ரலம்ப3 பா3ஹும் ப3வந்த மாபேதே3 ||( 57 – 3)


அப்பொழுது தங்களைக் கொல்ல விரும்பிய, கருணை அற்ற கொடிய பிரலம்பன் என்னும் அசுரன் நீண்ட கரங்களை உடைய தங்களிடம் வந்தான். (57 – 3)


ஜானன்யப்ய விஜானன்னிவ
தேன ஸமம் நிப3த்3த4 சௌஹார்த்3ர: |
வடநிகடே படுபசு’ப வ்யாபத்3த4ம்
த்3வந்த3 யுத்3த4 மாரப்3தா4:||( 57
– 4 )

தாங்கள் அவனை அறிந்து இருந்த போதிலும் முற்றிலும் அறியாதவர் போல அவனுடன் சிநேகம் செய்து கொண்டு பிறகு ஆலமரத்தடியில் நிபுணத்வம் வாய்ந்த கோபபாலர்களுடன் துவந்த யுத்தம் செய்யத் தொடங்கினீர்கள் அல்லவா? ( 57 – 4)


கோ3பான் விப4ஜ்ய தன்வன்
ஸங்க4ம் ப3லப4த்3ரகம் ப4வத்கமபி |
த்வத்3 ப4லபீ4தம் தை3த்யம் த்வத்3 ப3லக3த
மன்வ மன்யதா2 ப4கவன் ||( 57 – 5 )

எல்லாம் அறிந்த பகவானே! கோபர்களை இரண்டு குழுவாகப் பிரித்து ஒரு குழுவுக்கு பலராமனைத் தலைவன் ஆக்கினீர்கள். ஒரு குழுவுக்குத் தாங்களே தலைவராக ஆனீர்கள் அல்லவா? தங்கள் பலத்தைக் கண்டு பயந்த அசுரனைத் தங்கள் குழுவிலேயே சேர்த்துக் கொண்டீர்கள். ( 57 – 5 )
 
60. முற்பிறப்பு.



முந்தைய பிறவியில் நாரத முனிவர்
தந்தையில்லாமல், தாய் ஒருத்தியின்,
துறவியரை அண்டிப் பிழைப்பவளின்,
வறுமையில் வாடும் மகனாக இருந்தார்.

மாரிக் காலத்தில் நான்கு மாதங்களும்
வேறிடம் செல்லார் துறவியர் எவரும்;
தாயுடன் சேர்ந்து தானும் உதவினான்
மாயையை வென்ற அம்முனிவர்களுக்கு.

அவர்கள் புசித்து எஞ்சிய உணவை
அருள்மிகு பிரசாதமாகவே உண்டும்;
அவர்கள் பேசும் மொழிகளை எல்லாம்
அமர்ந்து கேட்டும் ஞானம் பெற்றான்.

சிறுவனின் தீவிர சிரத்தையைக் கண்டு,
மறை முனிவர்களும் மனம் மிக மகிழ்ந்து
போதனை செய்தனர் இறைபக்தியையும்,
சாதனை செய்யும் சில முறைகளையும்.

பால் கறக்கச் சென்ற அன்னையை
பாம்பு ஒன்று தீண்டிக் கொல்லவே;
பாலகன் பாரினில் தனியன் ஆனான்,
கால் போன போக்கில் திரியலானான்.

ஒரு நாள் தியானம் செய்யும்போது
ஒரு திருவுருவம் மனக்கண்ணில் தோன்ற,
மீண்டும் மீண்டும் அதைத் தான் காண
வேண்டும் வேண்டும் என ஆவல் மிகுந்தது.

“பற்றை முற்றும் விடாதவர்களும், மனப்
பக்குவம் சிறிதும் அடையாதவர்களும்,
காண இயலாது என்னை அறிவாய்! நீ
காண இயலும் உன் அடுத்த பிறவியில்”

அசரீரியாக அவன் மட்டும் கேட்டான்,
அதிசயமான இனிய வார்த்தைகளை!
விசனப்பட்டான் இன்னும் எத்தனை நாள்
விரும்பாத இது போன்ற வாழ்க்கை என?

மின்னல் வெட்டியது போலச் சரிந்தது
முன்னர் பெற்ற அவனது ஸ்தூலதேகம்,
விண்ணில் பறந்தது அவன் சூக்ஷ்மதேகம்,
விஷ்ணுவின் மூச்சுடன் உள்ளே புகுந்தது.

பிரமனின் செய்த அடுத்த படைப்பினில்
பிரமனின் அற்புத மானச புத்திரனாகத்
தோன்றினார் நம் தேவமுனி
வர் நாரதர்,
மூன்று உலகமும் பக்தியுடன் சஞ்சரிக்க.

பாமரப் பணிப்பெண் ஒருவளின் மகன்
பார்புகழும் தேவமுனிவர் ஆகிவிட்டதன்
ரகசியம் எது என அறிந்திடுவோம் நாம்,
விகசித்த அவர் பக்தியினால் அன்றோ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 57 ( 6 to 11 )

ப்ரலம்பா3ஸுர வத4ம்

கல்பித விஜேத்ரு வஹனே ஸமரே
பரயூதக3ம் ஸ்வ தயிததரம்|
ஸ்ரீ தாமான மத4த்தா2: பராஜிதோ
பக்த தாஸதோ ப்ரத2யன் ||( 57 – 6)


ஜெயித்தவர்களைத் தோற்றவர்கள் தோளில் தூக்கிச் செல்லவேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய விளையாட்டுப் போரில் தோற்ற தாங்கள், எதிர் பக்ஷத்தில் இருக்கும் தங்களுக்கு மிகவும் பிரியமான ஸ்ரீதாமா என்பவனைச் சுமந்து சென்று, அதன் மூலம் தாங்கள் பக்தனின் தாசன் என்று நிரூபித்தீர்கள் அல்லவா? ( 57 – 6 )


ஏவம் ப3ஹுஷு விபூ4மன் பா3லேஷு
வஹத்ஸு பா3ஹ்யமானேஷு |
ராம விஜித: ப்ரலம்போ3 ஜஹார
தம் தூ3ரதோ ப4வத்3 பீ4த்யா ||( 57 – 7)

எங்கும் நிறைந்து விளங்கும் ஈசா! இவ்விதம்மாக அநேகம் சிறுவர்களை அநேகம் சிறுவர்கள் தூக்கிச் சென்று விளையாடும் பொழுது, பலராமனிடம் தோற்றுப் போன பிரலம்ப அசுரன், தங்களிடம் உள்ள பயத்தால் பலராமனைத் தூக்கிக் கொண்டு வெகு தூரம் சென்று விட்டான் அல்லவா? ( 57 – 7)


த்வத்3 தூ3ரம் க3மயந்தம் தம் த்3ருஷ்ட்வா
ஹலினி விஹித க3ரிம ப4ரே|
தை3த்ய :ஸ்வரூப மாகா3த்3 யத்3ரூபாத்
ஸ ஹி ப3லோSபி சகிதோSபூ4த் ||( 57 – 8)

தங்களிடம் இருந்து தன்னை வெகு தூரம் சுமந்து செல்வதைக் கண்ட பலராமன் தன் உடலின் எடையை அதிகரித்த போது , அசுரனும் தன் சுய வடிவத்தை எடுத்துக் கொண்டான் அல்லவா? அந்த உருவத்தைக் கண்ட பலவான் ஆகிய பலராமன் கூட அஞ்சினான். ( 57 – 8)


உச்சயதோ தைத்ய தனோஸ்
தவன் முகமாலோக்ய தூ3ரதோ ராம: |
விக3த ப4யோ த்3ருட3 முஷ்ட்யா
ப்3ருஷ து3ஷ்டம் ஸபதி3 பிஷ்டவாநேனம் ||( 57 – 9)

அந்த அசுரனின் உடல் வெகு உயரமாக இருந்தது. அதனால் வெகு தொலைவில் இருந்தும் கூடத் தங்கள் திரு முகத்தைக் கண்ட பலராமன் உடனேயே பயம் நீங்கியவனாக அந்த துஷ்ட அசுரனைத் தன் கை முஷ்டியால் சதைத்து விட்டான் அல்லவா? ( 57 – 9 )


ஹத்வா தா3னவ வீரம் ப்ராப்தம் ப3ல
மாலிலிங்கி3த ப்ரேம்ணா |
தாவன் மிலதோர் யுவயோ:
ஸிரஸி க்ருதா புஷ்பா வ்ருஷ்டி ரமரகணை : ||( 57 – 10)

அசுர வீரனைக் கொன்று விட்டுத் திரும்பி வந்த பலராமனைத் தாங்கள் அன்புடன் ஆலிங்கனம் செய்து கொண்டீர்கள். அப்போது ஒன்று சேர்ந்து இருந்த உங்கள் இருவர் மீதும் தேவர்கள் பூ மாரி பெய்தார்கள். ( 57 – 10)


ஆலம்போ3 பு4வனானாம் ப்ராலம்ப3ம்
நித4ன மேவ மாரசயன் |
காலம் விஹாய ஸத்3யோ
லோலம்ப3ருசே ஹரே ஹரே க்லேசா’ன் ||( 57 – 11)

வண்டின் நிறத்துக்கு நிகரான நிறம் உடைய ஸ்ரீ ஹரியே! உலகங்களுக்கு ஆச்ரயம் ஆனவரும் பிரலம்பாசுரனின் வதத்தை செய்வித்தவரும் ஆகிய தாங்கள் தாமதம் செய்யாமல் என் வியாதிகளை இப்போதே போக்க வேண்டும். ( 57 – 11)
 
[h=1]தீவிர பக்தன்[/h]

பார்த்தன் மனத்தில் ஒருமுறை,
கர்வம் தோன்றி வளரலானது;
“பாரினில் பரம பக்தன் நானே!”
கார்வண்ணன் சிறிது நகைத்தான்.

“உனக்கு ஒரு நல்ல வேடிக்கையை,
தனித்துக் காட்டுவேன் வா!” எனப்
பார்த்தனை அழைத்துச் சென்றான்,
பார்த்தசாரதி ஓர் தனி இடத்துக்கு.

உலர்ந்து காய்ந்த புல்லை மட்டுமே,
உண்டு உயிர் வாழுகின்ற ஒரு
வினோத மனிதனைக் கண்டு,
வியப்பில் ஆழ்ந்தான் பார்த்தன்!

படைப்பில் அரியவன் ஆகிய அவன்
இடுப்பில் இருந்த வாளே காரணம்.
புல்லைத் தின்னும் இம் மனிதனிடம்,
கொல்லும் வாளா என வியந்தான்!

வினோத மனிதன் அவனிடம் உரைத்தான்,
“எனது பரம எதிரிகள் நால்வர் ஆவர்;
கண்டதும் கொல்வேன் நான் அவர்களை,
கத்தியும் என்னிடம் உள்ளது பார்!” என்றான்.

“முதல் முதல் எதிரி அந்த நாரதனே;
முழு நேரமும் பாட்டு, வீணை எனத்
தொல்லைகள் பலவும் செய்வான்,
எல்லை இல்லாத நம் இறைவனை!

இரண்டாவது எதிரி திரௌபதியே;
இரக்கம் என்பதே இல்லை அவளிடம்;
உண்ணவிடாமல் வரவழைத்தாள்,
கண்ணனைக் காம்ய வனத்துக்கு!

நீரிலும், நெருப்பிலும், இறைவனை
நுழையச் செய்து, தூணிலிருந்தும்
தோன்றச் செய்தான் நரஹரியாக,
மூன்றாம் எதிரியான பிரஹ்லாதன்.

நான்காம் எதிரி அந்த அர்ஜுனனே.
இறைவனைத் தேர்ப்பாகன் ஆக்கி,
இவன் அமர்ந்தான் அந்தத் தேரில்,
இவன் மேலே, கண்ணன் கீழே என!

பார்த்தனின் பொங்கிய மனோ கர்வம்,
பாலில் தண்ணீர் தெளித்தது போல
நொடியில் அடங்கியது! “தீவிர பக்தன்
தேடினாலும் கிடையான் இவனைப் போல!”

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top