• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
If you are a victim of theft or any other offense during train journey, need not worry about the jurisdictions as you can file an FIR from anywhere during or after travel.
As per a recent decision, passengers can lodge a ‘zero FIR’ in any railway station and seek swift action. The station concerned, where the FIR is lodged, will fax a copy immediately to the police station under whose jurisdiction the incident has taken place, Joint CP, New Delhi Range, Mukesh Meena said.
The decision was taken at a high-level meeting chaired by him and attended by IGs of neighbouring States.
The issue of jurisdiction has been a contentious point among the complainants traveling in trains, as police are usually reluctant to file an FIR if the incident has happened in a different place. PTI
 
Although the travel industry is adapting to accommodate womentravelers, they are still more vulnerable than men while traveling by themselves.
GENERAL TRAVEL TIPS:
Know your environment around you. Travel is very distracting and you’re probably carrying more stuff than usual. Take a second to look back and see things that might be out of place, unusual or just don’t belong; Know your available exits in every room you enter. When entering a room or space, one of the first things you want to do is identify where the exits are. Find out where doors lead to. Note the fire exit signs as these may also be used to get away from other dangerous situations; Don’t carry too much stuff and always keep your hands free. Your hands, arms and elbows make for great selfdefense weapons; Be alert. Pay attention when traveling. Don’t allow yourself to be allconsumed with your digital devices. Looking down at your phone while walking around makes you an easy target for attackers. Keep your eyes on their eyes. Don’t look down; look up
and look around;
Separate your funds. When you are traveling for business, do not keep all of your bank cards in your wallet or purse;
Avoid traveling on foot after dark. Travel in groups. Use well-lit pathways. Avoid shortcuts and alleyways;
Do not accept rides from casual acquaintances;
Carry ‘weapons of opportunity’ with you. These are everyday objects such as water bottle, cane, pen/pencil, umbrella, rolled up magazine, keys, etc. They can be used as make-shift selfdefense tools. Learn how to use the ‘quick strike’ technique to the face of your attacker;
Your voice is a powerful weapon. If someone makes you feel uncomfortable or threatened, assume the defensive body stance and yell loudly and aggressively;
Making sure people at home have your itinerary, flight information, hotel information and phone numbers is mandatory;
Always fill out the emergency contact information at your workplace;
Keeping your cell phone on you at all times and making sure you have an emergency contact number programmed in speed dial are ways to ensure safety.
HOTEL SAFETY:
Choosing national hotel chains with interior room entrances as opposed to motel-style residences with individual point of entries and hotels with reception or concierge desks near the entrance deter potential threats;
Fake it to sound as though you have a roommate. You can also add a male name to your room. That male may never check in, but if anyone is listening, they will think two people are in the room; Ensuring a room with a peephole, preferably with no connecting door to another room is crucial; Women business travelers must never give out their room number; Women must avoid rooms near emergency exits, as well as those near any renovation work.
ELEVATOR SAFETY:
If, while you are waiting for an elevator, you find yourself alone with a stranger, let him take the elevator and wait for its return. There might be risk embarrassment and social awkwardness at that moment, but don’t risk your life; If you are on an elevator with someone who makes you feel uneasy, get off at the next floor; Always stand near the control panel, where you have access to the alarm and floor buttons; Maintain confident alertness when inside of elevators. If you feel more comfortable and safer, take the stairs; Travel in packs. If possible, don’t take the elevator or the staircase by yourself.
It’s about time to embrace a more positive and an empowering mentality that seeks to make businesswomen feel safe, comfortable and valued and enables them to be successful and productive members of the corporate traveling community.

- The author is chief HR officer, outbound & specialists division and head of group, training / development, Kuoni India


Source : Net

[SIZE=+1][/SIZE]
 
RAVANA 'S AMAZING REAL GOOD QUALITY :

When Rama was preparing for the invasion of Lanka he was advised to worship the goddess Durga and request her blessings and power for the upcoming war and to gain special power to kill Ravana.

It is said that Rama himself was a 'purohit' or priest in that ritual but as he was about to start the puja, Durga herself appeared and told Rama that she can only accept the puja from a pure brahmin who had never missed or forgotten for once to offer prayers to the gods thrice daily throughout his life.

Rama got up and asked his men to find such a Brahmin but to his surprise even the biggest and best of them confessed that somehow or the other they might have missed one or two prayers in their lives.

Frustrated and heart broken Rama starts praying to Durga and when she appeared he asked her to help him find such a brahmin.

Durga smiled and said there was only brahmin in the world who meets this criterion is no other than Ravana. Rama was shocked.

Later Durga advised him to pray to Lord Shiva and ask him to help with this.

When Rama prayed to Lord Shiva and explained him the situation Lord Shiva assured Rama that that would be taken care of.

Shiva then appeared in front of Ravana and asked him to travel to Rama and perform the puja for Durga.

Ravana was a big devotee of Lord Shiva, he smiled and told Shiva that he knew that Rama was doing the puja just to make sure he could kill Ravana.

In spite of knowing this Ravana went to Rama in the disguise of a priest and performed the puja perfectly.

This is an amazing characteristic of Ravana's principles and integrity, for no person can be so fearless to perform a puja that is intended towards his own death.

Source: Quora
 
5 விதமான தோஷங்கள்

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1. வஞ்சித தோஷம், 2. பந்த தோஷம், 3. கல்பித தோஷம் 4. வந்தூலக தோஷம், 5. ப்ரணகால தோஷம் எனப்படும்.

1. வஞ்சித தோஷம்:


பார்க்கக் கூடாத படங்கள், வெறியாட்டும் காட்சிகள், காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சித தோஷம் எனப் பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.

2. பந்த தோஷம்:

நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழி வாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.

3. கல்பித தோஷம்:


பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.

4. வந்தூலக தோஷம்:


ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

5. ப்ரணகால தோஷம்:

திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.


http://www.maalaimalar.com/2012/10/09122351/5-types-dosham.html
 
[h=3]தீர்த்தம்,விபூதி...[/h]
1003792_575249812530987_1601600287_n.jpg



பெருமாள் கோவில்களில்
தீர்த்தமும் ,சிவாலயங்களில்
விபூதியும் தருவதற்கான விளக்கம்:
வாழ்க்கையின் உயிர்த்தன்மைகளைக்
காட்டுவது வைணவம்.
நீர் இல்லை என்றால் உலகம்
இல்லை என்பதைக்
காட்டுவதற்கு (நீரின்றி அமையாது உலகு)
ஆதாரமாக உள்ள தீர்த்தம், பிரசாதமாகக்
கொடுக்கபடுகிறது.
வாழ்க்கையின் எல்லையை தொட்டுக்
காட்டுகிறது சைவம். எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்
கடைசியில் ஒன்றும் இல்லை. பஸ்பம்
சாம்பல்தான் என்கிற
நிலையாமையை உணர்த்தவே சிவாலயத்தில்
விபூதி பிரசாதமாகக்
கொடுக்கப்படுகிறது.


mirror : ?????????,??????...

 
The Three Dolls




A sage presented a prince with a set of three small dolls.

The prince was not amused.
"Am I a girl that you give me dolls?" he asked.

"This is a gift for a future king," said the man.

"If you look carefully, you'll see a hole in the ear of each doll."

"So?"

The sage handed him a piece of string.

"Pass it through each doll," he said.

Intrigued, the prince picked up the first doll and put the string into the ear.

It came out from the other ear.

"This is one type of person," said the man. "Whatever you tell him, comes out from the other ear.

He doesn't retain anything."

The prince put the string into the second doll. It came out from the mouth.

"This is the second type of person," said the man.

"Whatever you tell him, he tells everybody else."

The prince picked up the third doll and repeated the process.

The string did not reappear from anywhere else.

"This is the third type of person," said the man.

"Whatever you tell him is locked up within him. It never comes out."

"What is the best type of person?" asked the prince.

The man handed him a fourth doll, in answer.

When the prince put the string into the doll, it came out from the other ear.

"Do it again," said the sage.

The prince repeated the process.

This time the string came out from the mouth.

When he put the string in a third time, it did not come out at all.

"This is the best type of person," said the sage.

"To be trustworthy, a man must know when not to listen,

when to remain silent and when to speak out."


Moral Stories
 
பரதனுக்கு இராமர் சொன்ன அழியா உண்மைகள்!



TN_110621143927000000.jpg


அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமரை பரதன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான். அவனுக்கு ராமர் சில அழகான கருத்துக்களைக் கூறுகிறார். ராமகீதை என்று அழைக்கப்படும் இக் கருத்துகள் வருமாறு:



ஈஸ்வரனுக்கு உள்ள சுதந்திரம் இந்த ஜீவனுக்குக் கிடையாது. ஆகவே இங்கு யாரும் அவர்கள் இஷ்டப்படி நடக்க முடியாது. காலம் மனிதனை அங்கும் இங்கும் இழுத்துச் செல்லுகிறது. சேர்த்து வைக்கப்படும் பொருளுக்கு முடிவு அழிவுதான். லௌகிக உன்னதத்தின் முடிவு வீழ்ச்சிதான். கூடுவதின் முடிவு பிரிவு தான். எப்படி பழுத்த பழம் கீழே விழுந்துதான் ஆக வேண்டுமோ, அதேமாதிரி, பிறந்த மனிதன் இறந்துதான் ஆகவேண்டும். மூப்பு, மரணம் இவற்றுக்கு உட்பட்டு அழிந்துதான் ஆக வேண்டும். கழிந்த இரவு திரும்ப வராது.

யமுனை நீர் கடலை நோக்கிச் செல்லும், ஆனால் திரும்பாது. பகலும், இரவும் மாறி மாறி கழிகின்றன. கூடவே மனிதனுடைய ஆயுள் வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. மரணம் எப்பொழுதும் மனிதன் கூடவே இருக்கிறது. மனிதன் கூடவே செல்கிறது. சூரியோதயத்தைக் கண்டு மனிதன் மகிழ்கிறான். ஆனால் ஒவ்வொரு சூரியோதயத்தோடும் தன் ஆயுள் கழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்கிறான். கடலில் மிதக்கும் இரண்டு கட்டைகள் ஒன்றோடொன்று சிறிது காலம் சேர்ந்து இருக்கின்றன.

பிறகு பிரிந்து ஒவ்வொன்றும் ஒரு பக்கம் செல்கிறது. அதே மாதிரி மனிதனோடு, மனைவி, மக்கள், குடும்பம், பணம் எல்லாம் சேர்கின்றன. பிறகு பிரிந்து விடுகின்றன. அதனால் நாமெல்லோரும் நம் ஆத்மாவின் நன்மையைக் கோர வேண்டும். அதற்கு எப்பொழுதும் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

Rama and Bharathan | ????????? ?????? ????? ????? ????????!
 
குலதெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்

d0b9fd51-30af-4334-98a3-a11fb8c13d05_S_secvpf.gif



சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7*7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13. இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண்.

ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம். அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது.

அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.

ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்

?????????? ?????? ?????????????? ??? ?????????? ???????????? || How many lifetimes kula deivam save a family
 
சுவாமி ஐயப்பன் கோவிலில் பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவன

முதல் படி – விஷாத யோகம்
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம்.

இரண்டாம் படி – சாக்கிய யோகம்
பரமாத்மாவே எம் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.

மூன்றாம் படி – கர்ம யோகம்
கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்,

நான்காம் படி – ஞானகர்ம சன்னியாச யோகம்
பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.

ஐந்தாம் படி – சன்னியாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது.

ஆறாம் படி – தியான யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி – பிரம்ம ஞானம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்
எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

ஒன்பதாம் படி – ஆன்மிக யோகம்
கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

பத்தாம் படி – விபூதி யோகம்
அழகு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது.

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்
பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்
இன்பம் - துன்பம், ஏழை – பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது.

பதிமூன்றாம் படி – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல்.
பதினான்காம் படி – குணத்ர விபாக யோகம்
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவது.

பதினைந்தாம் படி – தெய்வாகர விபாக யோகம்
நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.

பதினாறாம் படி – சம்பத் விபாக யோகம்
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது.

பதினேழாம் படி – சிரித்தாத்ரய விபாக யோகம்
’சர்வம் பிரம்மம்’ என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது.

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்
உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்து பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன் என்பதே இந்த பதினெட்டாம் படி தத்துவம்.


1959489_10152310653023817_960501109_n.jpg



Source: Raman Kinetic Honda
 
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?

TN_111104140216000000.jpg


தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.



பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.

Temple News | News | Dinamalar Temple | ?????????? ???? ????? ?????? ????
 
துளசியின் மகிமை!

திருமாலின் மார்பினை அலங்கரிக்கும் துளசியை விஷ்ணுவின் மனைவி என்று தேவீ பாகவதம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளனர். திருப்பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத்தோடு துளசி பிறந்ததாக பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. லட்சுமியின் அம்சமான துளசி இருக்குமிடத்தில் விஷ்ணு வாசம் செய்வதாக ஐதீகம். எதனோடும் ஒப்பிட முடியாத உயர்வான பொருள் துளசி. ஒருமுறை, சுவாமிக்கு அணிவித்த துளசியைக் கழுவி, மீண்டும் ஒருமுறை பூஜைக்குப் பயன்படுத்தலாம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் துளசிதீர்த்தம் அருந்தி விரதம் பூர்த்தி செய்வர். துளசிமாட வழிபாட்டைத் துவங்க ஏற்ற மாதம் கார்த்திகை. கார்த்திகை சோமவாரம், கார்த்திகை அமாவாசை நாட்களில் துளசிமாடத்தை வலம் வந்து வழிபட விரைவில் திருமணயோகம் உண்டாகும்.

Temple News | News | Dinamalar Temple | ????????? ?????!
 
தமிழ் வளர்த்த பிராம்மணர்கள்

பிராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!
சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)

6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)

11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்

16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்

26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்

31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்


35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்

41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)

46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)

51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்

56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்

61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்

66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்

71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.


https://groups.google.com/forum/#!topic/brahmintoday/SVIWgAI9Zuw
 
திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்... காரணங்&#296

திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்... காரணங்கள்.


Tamil-Daily-News-Paper_65722292662.jpg




1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

7. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
தேனி.எஸ்.மாரியப்பன்

18 எத்தனை எத்தனை கோவிந்தன்கள்! :


திருப்பதி திருமலையில் த்ருவ ஸ்ரீநிவாசர், போக ஸ்ரீநிவாசர், கொலுவு ஸ்ரீநிவாசர், உக்ர ஸ்ரீநிவாசர், மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி

இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி

இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி

கொலுவு என்றால் ஆஸ்தானம் என்று பொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி

இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி

இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.

சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீநிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு. திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு.


????????? ??? ???????? ????????... ?????????... -Aanmeega Dinakaran
 
இராமேசுவரத் தீர்த்தங்கள்

இராமேசுவரத் தீர்த்தங்கள்

இராமேசுவரத்திற்குச் செல்பவர்கள் 22 தீர்த்தங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரைக் கொண்டு நீராடினால் பல நன்மைகள் உண்டாகும் என்கிற நம்பிக்கை இந்துசமயத்தினரிடம் உள்ளது. அந்தத் தீர்த்தங்களின் பட்டியல் இது.

1. மகாலட்சுமி தீர்த்தம்
2. சாவித்திரி தீர்த்தம்
3. காயத்திரி தீர்த்தம்
4. சரசுவதி தீர்த்தம்
5. சேதுமாதவ தீர்த்தம்

6. கந்தமாதன தீர்த்தம்
7. கவாட்ச தீர்த்தம்
8. கவப தீர்த்தம்
9. நளன் தீர்த்தம்
10. நீலன் தீர்த்தம்

11. சங்க தீர்த்தம்
12. சக்ர தீர்த்தம்
13. பிரம்மகத்தி விமோசன தீர்த்தம்
14. சூரிய தீர்த்தம்
15. சந்திர தீர்த்தம்

16. கங்கா தீர்த்தம்
17. யமுனா தீர்த்தம்
18. கயா தீர்த்தம்
19. சிவ தீர்த்தம்
20. சத்தியாம்ருத தீர்த்தம்
21. சர்வ தீர்த்தம்
22. கோடித் தீர்த்தம் (வங்கக் கடல்)

இராமேசுவரம் மற்றும் இராமேசுவரம் சுற்றுப்பகுதிகளில் மொத்தம் 48 தீர்த்தங்கள் இருக்கின்றன என்றும், இவையனைத்திலும் நீராடினால் பல நற்பயன்களை அடைய முடியும் என்கின்றனர்.

1. உப்பூர் விநாயகர் தீர்த்தம்
2. நவபாஷாண தீர்த்தம் (தேவி பட்டினம்)
3. சக்கர தீர்த்தம் (தர்மபுஷ்கரணி)
4. சக்கர தீர்த்தம் (திருப்புல்லானி)
5. வேதாள தீர்த்தம்

6. பாபவினாச தீர்த்தம்
7. கபி தீர்த்தம்
8. வைரவ தீர்த்தம் (பாம்பன் கடலூர்)
9. சீதாகுண்ட தீர்த்தம்
10. வில்லூன்றித் தீர்த்தம் (கடலூர்)

11. மங்கல தீர்த்தம்
12. இரணவிமோசன தீர்த்தம்
13. அமுதவாலி தீர்த்தம்
14. லட்சுமண தீர்த்தம்
15. ஸ்ரீராம தீர்த்தம்

16. தனுசுகோடி தீர்த்தம்
17. சடாம குட தீர்த்தம்
18. சுக்ரீவ தீர்த்தம்
19. பாண்டவ தீர்த்தம்
20. பீம தீர்த்தம்

21. அர்ச்சுன தீர்த்தம்
22. நகுல தீர்த்தம்
23. சகாதேவ தீர்த்தம்
24. திரௌபதி தீர்த்தம்
25. பிரம்ம தீர்த்தம்

26. பரசுராம தீர்த்தம்
27. அனுமகுண்ட தீர்த்தம்
28. அகத்திய தீர்த்தம்
29. அக்னி தீர்த்தம்
30. நாக தீர்த்தம்

31. சேதுமாதவ தீர்த்தம்
32. நளன் தீர்த்தம்
33. நீலன் தீர்த்தம்
34. கபி தீர்த்தம்
35. கவாட்சி தீர்த்தம்

36. கந்தமாதன தீர்த்தம்
37. பிரம்மகத்தி விமோசன தீர்த்தம்
38. சூரிய புஷ்க்ரணி தீர்த்தம்
39. சந்திர புஷ்கரணி தீர்த்தம்
40. கங்காய முனகாய தீர்த்தம்

41. சங்க தீர்த்தம்
42. முனி தீர்த்தம்
43. காயத்திரி சாவித்திரி தீர்த்தம்
44. மகாலட்சுமி தீர்த்தம்
45. சிவ தீர்த்தம்
46. சத்யாமூர்த்த தீர்த்தம்
47. சர்வ தீர்த்தம்
48. கோடித் தீர்த்தம் (வங்கக் கடல்)


-தேனி. பொன். கணேஷ்

Muthukamalam.com / Spiritual - Hindu - ???????? - ????? ?????
 
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்.

மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் புதையல்;
--------------------------------------------------------
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் உயிர் சக்தியே குண்டலினி ஆகும்.இந்து மதத்தில் பாம்பு பெரும்பான்மையான இடங்களில் வணங்கப்படுகிறது. கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார்கள். உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம்.



ஒரு பாம்பு அசை யாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினி யும் இந்தப் பாம்பு போன்றதுதான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும்.



நமது உடலில் பிராண சக்தி எழுபதாயிரம் நாடிகளில் பாய்கிறது.இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு சக்கரங்களில் இணைகிறது.இவை ஆற்ரல் மையங்கள் என சொல்லப்படுகின்றது.கீழிருந்து மேலாக மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிப்பூரகம்,அனாகதம்,விசுக்தி,ஆக்ஞை,சஹஸ்ரஹாரம்.


சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை. பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.


இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவது தான். அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல குண்டலி னியை எழுப்பி, சக்கரங்களைத் தூண்டும் போது மனிதனின் அளப்பறியா ஆற்றல் வெளிப்படுகிறது.
அது சரி, இந்தக் குண்டலினி சக்தியை எழுப்புவது எப்படி? அதை எழுப்ப மனிதனுக்குக் கிடைத்த அற்புதமான கருவிகள் தான் யோகாவும் தியானமும் ஆகும்.யோகாவை முறையான குருவிடம் கற்று நாமும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆற்றலை அனுபவிக்கலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
If a Lizard can do it

If a Lizard can do it

A householder started reconditioning the house by breaking open the wall. Usually, between the wooden walls, there will be hallow space in the Japanese house. He found a lizard stuck up there, because a nail hammered to its feet from outside.

He felt very much pity once he saw it and also curiously checked the nail to know what happened. Surprisingly he found that , when the house was first built, it was nailed and the house was constructed 10 years ago.

Just imagine how a lizard survived in such condition!!!!
It was really shocking and mind blowing!


He was also curious to know how that lizard survived for 10 years without moving. So he stopped his work and started observing the lizard. Suddenly from somewhere another lizard came with food in its mouth.

He was amazed and felt very sensitive towards them by knowing that from the past 10 years another lizard has been feeding to this struck lizard.

It was a great wonder to know that for 10 years it has been serving kindly without loosing hope on its partner.

Just think once whether you can do same to your partner or mother who has given birth to you, or father, or sister, or brother or your friends etc ?

Even though they cannot talk, these small creatures are blessed with loving and kind heart which is being missed in this modern human society. Distance between human beings is growing more as the information and communication technology advances.

It is our responsibility to look into ourselves and check whether we are really enhancing our lives or destroying.

Never say you are busy when someone really needs you.
You may have the entire world at your feet..But you might be the only world to them.

Just remember that before you say something to the others, "It takes a moment to break but an entire life to make".

Utilizing brain's intellect is sufficient to survive but a very much utilization of loving heart is needed to live and let others live.

Ultimately, Love is an ocean which accepts all the rivers as they are without bothering about their origins.


- Why can't we when a lizard can ? - Ultimate Truth Of Self
 
சிவ பக்திக்கு அர்த்தம்

சிவ பக்திக்கு அர்த்தம்

E_1386924469.jpeg




ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர். ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர். அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது.

அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி. அதற்கு அவள் கணவன், 'அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம். இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக அக்கரை சேரலாம்...' என்றான்.

அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால், அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார். உடன் அவன் பதறிப் போய், 'சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்...' என்றான்.

அதற்கு ஹரதத்தர், 'அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்...' என்று புகழ்ந்து பாராட்டினர்.

இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி, சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம். இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா? இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது. எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்.


varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
 
தெரிந்து கொள்ளுவோம் பஞ்சாங்கம்

தெரிந்து கொள்ளுவோம் பஞ்சாங்கம்



therinthu.jpg



• மூன்று வகையான பஞ்சாங்கங்கள் உள்ளன. அவை வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம், எபிமெரிஸ் பஞ்சாங்கம் ஆகும்.


• வாக்கியப் பஞ்சாங்கம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரிஷிகளால் கணித்து சொல்லப்பட்ட சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது.


• திருக்கணிதப் பஞ்சாங்கம் என்பது கோள்களின் பாதையில் ஏற்படும் இயக்கநிலை வித்தியாசத்தைக் கணக்கில்கொண்டு கணிக்கப்படுவது.


• எபிமெரிஸ் பஞ்சாங்கம் என்பது மேல்நாட்டு முறைப்படி கணிக்கப்படுவது.


• பஞ்சாங்கத்தின் உதவியுடனே தினசரி நாள்காட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் ஜோதிடக் கலைக்கு பஞ்சாங்கமே அடிப்படை ஆகும்.


• பஞ்சாங்கத்தின்படி ஒவ்வொரு நாளும் காலை சூரிய உதயத்தில் இருந்தே ஆரம்பம் ஆகிறது.


• சூரியன், சந்திரனின் இயக்கத்தை கணக்கில் கொண்டே பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.


• சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் நாள்தான் தமிழ் மாதப் பிறப்பாகும். அதாவது சித்திரை மாதம் பிறப்பு அன்று மேஷ ராசிக்குள் சூரியன் வரும் நாள். அடுத்த ராசியான ரிஷபத்திற்கு வரும் பொழுது வைகாசி மாதப் பிறப்பாகும்.


• ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தின்போது நடப்பில் இருக்கும் நட்சத்திரம், திதி, யோகம், கரணம் முதலியவையே பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.


மேலும் குறிப்பிடப்பட்ட நேரமும் நட்சத்திரம், திதி முதலியவை முடியும் நேரமே ஆகும்.
பஞ்சாங்கம் என்ற சொல்லுக்கு ஐந்து அங்கங்கள் என்று பொருளாகும். அவை:


1. வாரம்: வாரம் என்ற சொல்லிற்கு கிழமை எனப் பொருள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு கிழமைகளே வாரம் ஆகும்.


2. திதி: திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம். சூரியனும் சந்திரனும் ஒரே பாதையில் இணைந்து இருந்தால் அமாவாசை திதி ஆகும். ஒன்றுக்கொன்று நேர் எதிராக இருந்தால் பௌர்ணமி திதி ஆகும்.


திதிகள் மொத்தம் 30. இவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அமாவாசை முதல் பௌர்ணமி வரையில் வளர்பிறை திதி அல்லது சுக்லபட்ச திதி. அவை மொத்தம் 14 ஆகும்.


பௌர்ணமி முதல் அமாவாசை வரையில் தேய்பிறை திதி அல்லது கிருஷ்ணபட்ச திதி. அவை மொத்தம் 14.
இவற்றுடன் அமாவாசை, பௌர்ணமி ஆகிய இரண்டும் சேர்த்து 30 ஆகும்.


வளர்பிறை, தேய்பிறை எனப் பிரிக்கப்பட்டாலும் பெயர்களே ஒன்றுதான். பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 பெயர்களுக்கு முன்னும் வளர்பிறை தேய்பிறை என்று சேர்த்துச் சொல்லுவார்கள்.

(குறிப்பு - திதிகளின் பெயர்கள்: பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசை).


3. நட்சத்திரம்: நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தி ஏழு ஆகும். சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அந்த நட்சத்திரமே அன்றைய நாளின் நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரமே அந்த நேரத்தில் பிறந்த அனைவருக்கும் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.


(குறிப்பு - நட்சத்திரங்களின் பெயர்கள்: அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகும்).


4. யோகம்: யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்பது பொருள். வான் மண்டலத்தில் சூரியன் செல்லும் தூரத்தையும், சந்திரன் செல்லும் தூரத்தையும் கூட்டினால் யோகம் கிடைக்கும். யோகங்கள் மொத்தம் இருபத்தி ஏழு ஆகும்.


(குறிப்பு - யோகங்களின் பெயர்கள்: விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வ்யாகாதம், ஹர்ஷணம், வஜ்ரம், சித்தி, வ்யதீபாதம், வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுக்கிலம், பிராம்ஹம், ஐந்திரம், வைதிருதி).


5. கரணம்: கரணம் என்பது திதியில் பாதி ஆகும். அதாவது ஒரு திதிக்கு இரண்டு கரணங்கள். இவை சரகரணங்கள், ஸ்திர கரணங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


கரணங்கள் மொத்தம் 11 ஆகும். இதில் ஏழு கரணங்கள் சர கரணங்கள். இவை சுழற்சி முறையில் மாறி மாறி வரும். 4 கரணங்கள் ஸ்திர கரணங்கள் எனப்படும். இவை அமாவாசை ஒட்டிய நாள்களில் மட்டும் நடப்பில் இருக்கும்.


அதாவது அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தசியின் இரண்டாம் பாதி, அமாவாசை முழுவதும், மறுநாள் வரும் வளர்பிறை பிரதமையின் முதல் பாதி வரை ஸ்திர கரணங்கள் 4 நடப்பில் இருக்கும். மற்ற ஏழு கரணங்களும் பிற நாள்களில் சுழற்சி முறையில் வரிசைப்படி வரும்.


(சரகரணங்களின் பெயர்கள்: பலம், பாலவம், கௌலவம், தைதுலை, கரஜை, வணிஜை, பத்திரை. ஸ்திரகரணங்கள்: சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகும்).


-கே. பார்வதி,


திருநெல்வேலி.





http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2014/03/27/
 
பங்குனி உத்திரத்தின் மகிமைகள்;
---------------------------------------------

1509856_684569351584840_1441388119_n.jpg





*மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.


*உத்திரம் நட்சத்திரம் தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.


* பரமேஸ்வரன்-பார்வதி திருமணம் இந்த நாளில்தான் நடந்தது.


*முருகன்- தெய்வயானை திருமணம் இந்த நாளில்தான் நடந்தது.


*ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்தது.


*ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.


* சபரி மலை சாஸ்தாவான ஸ்ரீ ஐயப்பன் பிறந்தது இந்த நாளில்தான்.


*பஞ்ச பாண்டவர்களில் வல்லவரான அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.


*முருக பெருமானின் மனைவி ஸ்ரீவள்ளி பிறந்ததும் இந்த நாளில்தான்.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
ஆன்மிகத்தை விட சிறந்த அறிவியல் வேறேதும்

ஆன்மிகத்தை விட சிறந்த அறிவியல் வேறேதும் இல்லை


மகாபாரதப்போர் நடந்த இடம் எது என்றால் குருக்ஷேத்திரம் என்பார்கள். குருக்ஷேத்திரம் எங்கிருக்கிறது என்று கேட்டால் ஹரியானாவில் இருக்கிறது என்று கூட தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், குருக்ஷேத்திர யுத்தம், ஒரு அறிவியல் தத்துவத்தையும் எடுத்துச்சொல்வது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்! மனம் தான் நம் செயல்களுக்கு காரணமாக அமைகிறது என்பது அறிவியல் கலந்த ஆன்மிக உண்மை. ஒவ்வொரு நாளும் நமக்குள்ளும் குருக்ஷேத்திர யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.


மனசு தான் குருக்ஷேத்திரம். அதில் இருக்கும் நல்ல எண்ணமே நியாயத்திற்காகப் போராடும் தர்மர் தலைமையிலான பாண்டவர்கள். தீய எண்ணங்களே அநியாயத்தின் பக்கமிருக்கும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்கள். ஓயாமல் இருபிரிவுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கிறது.

பாண்டவர்களும், கவுரவர்களும் ஒரே பரம்பரையில் பிறந்த தாயாதிகள்(சகோதரர்கள்). அதேபோல, நல்லதும், கெட்டதும் ஒரே மனதில் உற்பத்தியானவை தான். அர்ஜூனன், தன் சொந்த பந்தத்தினர் மீது அம்பு விட தயங்கியது போல, உலகியல் வாழ்வில் ஈடுபடும் நமது புத்தியும், ஒன்றைச் செய்வதா வேண்டாமா என திண்டாடுகிறது.

அப்போது விவேகம் என்னும் கிருஷ்ணர், நம் புத்திக்கு வழிகாட்ட வருகிறார். பாரதப்போரில், விவேகமாக நடந்த கிருஷ்ணர் மூலம் நியாயம் ஜெயித்தது. நம் மனதில் நடக்கும் குருக்ஷேத்திர போரிலும் நன்மை ஜெயிக்க, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இப்போது புரிந்து கொண்டீர்களா! ஆன்மிகத்தை விட சிறந்த அறிவியல் வேறேதும் இல்லையென்று!

aanmigam: ?????????? ??? ?????? ???????? ???????? ?????
 
யானையின் தமிழ்ப்பெயர்கள்

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது), வேழம் (வெள்ளை யானை), களிறு ,களபம், மாதங்கம், கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)

உம்பர், உம்பல் (உயர்ந்தது), அஞ்சனாவதி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி
குஞ்சரம், இருள், தும்பு, வல்விலங்கு, தூங்கல் ,தோல், கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது) ,எறும்பி
பெருமா (பெரிய விலங்கு), வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது), ஒருத்தல், ஓங்கல் (மலைபோன்றது), நாக, பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)

கும்பி, தும்பி (துளையுள்ள கையை உடையது), நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது), குஞ்சரம் (திரண்டது)
கரேணு, உவா (திரண்டது), கரி (கரியது), கள்வன் (கரியது), கயம், சிந்துரம், வயமா, புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)

தந்தி, மதாவளம், தந்தாவளம், கைம்மலை (கையை உடைய மலை போன்றது), வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா, மருண்மா, மதகயம், போதகம், யூதநாதன் (யானைக்கூட்டத்துத தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தன் பெயர்), கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)



பெண் யானையின் பெயர்கள்


பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி



யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை, போதகம், துடியடி, களபம் ,கயமுனி


http://defenceforumindia.com/forum/a/47886-a.html
 
லெஷ்மி அம்சம் உள்ள முகம்;
-----------------------------------------

1902870_684955694879539_744543640_n.jpg


பொதுவாகவே சில பேரின் முகத்தை பார்த்தாலே ஒருவித ஈர்ப்போ,வசியமோ இருக்கும்.அவர்கள் முகத்தில் பொலிவும்,அழகும் இருக்கும் இதைதான் லட்சுமி கடாட்சம் என்பார்கள்.இந்த லட்சுமிகடாட்சம் யாருக்கு இருக்கும்

என ஜோதிட ரீதியாக பார்த்தால்,

லட்சுமிக்குரிய கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரன் தனஸ்தானம். 2ஆம் இடம் என்பது தனஸ்தானம் ஆகும்.தனம், பணம் எல்லாவற்றையும் கொடுப்பது. இந்த இடமாகும்.பணம் ஸ்தானத்தில் வந்து சுக்கிரன் உட்கார்ந்திருந்தார் என்றால் அது மிகவும் விசேஷம்.
சந்திரனுக்கு 2ல் சுக்கிரன் இருந்தாலும், லட்சுமி கடாட்சம் உண்டு. அதேபோல, லக்னாதிபதி 2, 5, 9க்கு உரியவருடன் சேர்ந்திருந்தாலும் அவர்கள் லட்சுமி கடாட்சமாகவும் இருப்பார்கள், வீட்டிலும் லட்சுமி கடாட்சம் இருக்கும். ஒரு உயர்ந்த நிலையிலும் இருப்பார்கள்.

இன்னும் சுருக்கமாக சொன்னால் இதைத்தான் முக ராசி என்பார்கள்.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
அறுபத்து நான்கு வித பைரவ மூர்த்திகள்

அறுபத்து நான்கு வித பைரவ மூர்த்திகள்

பைரவக் கடவுளின் மகிமை......



406a046e-c2da-4b72-b747-fea9b7308769_S_secvpf.gif


தனித்தனியாக இறைவனை வணங்க நேரம் இல்லாதவர் கள், காலங்களை நிர்ணயம் செய்பவரும், எல்லா கிரகணங் களின் அதிபதியானவருமான ஸ்ரீ பைரவர் கடவுளை வணங்கி னாலேபோதும்! எல்லா தோஷங்களில் இருந்தும் விடுபட்டு விடலாம்! ஸ்ரீபைரவரை வணங்குங்கள் இயல்புகள் மாறாமல் வணங்குங்கள் குல வழிபாட்டில் இருப்பவர்களும் ஸ்ரீபைரவக் கடவுளை வணங்கலாம். பாவ விமோச்சனம் பெறலாம்.

ஒரே பைரவர் எட்டு வகைச்செயல்கள் புரியும்போது அஷ்ட பைரவர் என்றும் அவர்களே அறுபத்து நான்கு செயல்களைப் புரியும்போது அறுபத்தி நான்கு பைரவர்களாகக் காட்சியளிக்கின்றனர்.

1.நீலகண்ட பைரவர்
2.விசாலாட்சி பைரவர்
3.மார்த்தாண்ட பைரவர்
4.முண்டனப் பிரபு பைரவர்
5.ஸ்வஸ்சந்த பைரவர்

6.அதிசந்துஷ்ட பைரவர்

7.கேர பைரவர்
8.சம்ஹார பைரவர்
9.விஸ்வரூப பைரவர்
10.நானாரூப பைரவர்

11.பரம பைரவர்

12.தண்டகர்ண பைரவர்
13.ஸ்தாபாத்ர பைரவர்
14.சீரீட பைரவர்
15.உன்மத்த பைரவர்

16.மேகநாத பைரவர்

17.மனோவேக பைரவர்
18.சேத்ர பாலக பைரவர்
19.விருபாச பைரவர்
20.கராள பைரவர்

21.நிர்பய பைரவர்

22.ஆகர்ஷ்ண பைரவர்
23.ப்ரேசத பைரவர்
24.லோகபால பைரவர்
25.கதாதர பைரவர்

26.வஞ்ரஹஸ்த பைரவர்

27.மகாகால பைரவர்
28.பிரகண்ட பைரவர்
29.ப்ரளய பைரவர்
30.அந்தக பைரவர்

31.பூமிகர்ப்ப பைரவர்

32.பீஷ்ண பைரவர்
33.சம்கார பைரவர்
34.குலபால பைரவர்
35.ருண்டமாலா பைரவர்

36.ரத்தாங்க பைரவர்

37.பிங்களேஷ்ண பைரவர்
38.அப்ரரூப பைரவர்
39.தாரபாலன பைரவர்
40.ப்ரஜா பாலன பைரவர்

41.குல பைரவர்

42.மந்திர நாயக பைரவர்
43.ருத்ர பைரவர்
44.பிதாமக பைரவர்
45.விஷ்ணு பைரவர்

46.வடுகநாத பைரவர்

47.கபால பைரவர்
48.பூதவேதாள பைரவர்
49.த்ரிநேத்ர பைரவர்
50.திரிபுராந்தக பைரவர்

51.வரத பைரவர்

52.பர்வத வாகனே பைரவர்
53.சசிவாகன பைரவர்
54.கபால பூஷண பைரவர்
55.சர்வவெத பைரவர்

56.ஈசான பைரவர்

57.சர்வபூத பைரவர்
58.சர்வபூத பைரவர்
59.கோரநாத பைரவர்
60.பயங்க பைரவர்

61.புத்திமுக்தி பயப்த பைரவர்

62.காலாக்னி பைரவர்
63.மகாரௌத்ர பைரவர்
64.தட்சணா பிஸ்தித பைரவர் கங்கைக் கரையில்
64 கட்டங்களில்



64 பைரவர்கள் உள்ளனர்.


???????? ?????? ??? ???? ??????????? || 64 type of bhairavas
 
அரிசியில் ஆண்டவன்!

அரிசியில் ஆண்டவன்!

TN_111942000000.jpg



"அன்னம் பரபிரம்ம சொரூபம்
என்று சொல்வது மரபு. அதாவது, அன்னம் வேறு; ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்று தான் இதையே நாட்டுப்புறங்களில் "சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும் குறிப்பிடுவர். சிவபெருமானுக்கு, ஐப்பசிமாதம் பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்கிறார்கள்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள பெரிய லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடப்பதைக் காண ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அன்னம் இட்ட கை சின்னம் கெட்டுப் போகாது. ஒருவர் செய்த அன்னதான புண்ணியபலன் பல பிறவிகளுக்கும் தொடரும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்னம் அரிசியிலிருந்து தயாராகிறது. "அரிசி என்ற சொல்லில் இருவித மந்திரங்கள் சேர்ந்துள்ளன. "அரி என்பதை விஷ்ணு என்றும், சிங்கம் என்றும் கூறலாம்.

பிரகலாதனைக் காப்பதற்காக பெருமாள் எடுத்த அவசரத்திருக்கோலம் சிங்க முகத்துடன் கூடிய நரசிம்ம அவதாரம். "சிஎன்பது சிவபெருமானைக் குறிக்கும். மகான்களுக்கு மட்டும் "சி என்ற மந்திரம் சொல்லி சிவனை வழிபட உரிமை இருக்கிறது. "சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று சாப்பாட்டு ராமன்களுக்கு உதாரணம் காட்டி சொல்வார்கள். உண்மையில், சோறால் அபிஷேகம் நடக்கும் சிவலிங்கத்தை தரிசிப்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையே இப்படி குறிப்பிட்டனர்.

God in rice | ????????? ???????!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top