• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
சமித்து

சமித்து

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.


ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.


வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது


துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது




அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது



நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது



பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது

அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது


வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது


அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது


மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்


பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி


தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது


மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.


சமித்து குச்சிகளும் பலன்களும்:



அத்திக் குச்சி : மக்கட்பேறு.


நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்


எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை


அரசங் குச்சி : அரசாங்க நன்மை


கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .


வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.


புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி


வில்வக் குச்சி : செல்வம் சேரும்


அருகம்புல் : விஷபயம் நீங்கும்.


ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.


நொச்சி : காரியத்தடை விலகும்.




1010673_10152321524118817_1716321562_n.jpg



Source: Raman Kinetic Honda
 
SANDALWOOD, VIBHUTI, VERMILION (KUNGUMAM) EVERYTHING.. FOR WHAT? WONDERFUL HINDU RELIGION.


m_027-089.jpg


.

All of our body are seeking to connect with narampukalum brain. Most of the nerves that pass through the body of the bot forehead. The forehead area is much usnamakave. Fire power we have in the abdomen. But most feel the impact of the hot forehead pottiltan done. If you placed your hand on the forehead of fever usnat know why. Following the running of the engine overheats when we most vehicles. Reduce the heat to the engine and the radiator to give more life. Perhaps our brains, we have to cool it on the forehead veins connecting the paramount duty of applying cantanakkulampu.



Sweating in the head, the head of water above the falls as snow and remain at the head of the fractional kettippattu.

The headache, insomnia occurs. Vibhuti veliyerrave tarippatan such bad aim to absorb water. Nerrippakuti high cutavat is likely to cause infection. Yellow stop infection, and made from vermilion. Vermilion, sandal, Vibhuti Three of the best disinfectants. Women today have forgotten it yellow, vermilion, are excluded. Most women pottaiye relies on the sticker. Ketutiye to mark sticker to health. If the chemistry is ottumpacai will apply. It can cause irritation in the forehead. And prevent sunlight from falling on the forehead bot. Sticker mark dangerous to the eye and eyebrows.



சந்தனம்,விபூதி,குங்குமம் எல்லாம் எதுக்காக..? இந்து மதம் அற்புதம்




நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம்.

வாகனங்க ளின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு அதிக ஆயுளைக் கொடுப்பது ரேடியேட்டர். அதுபோல நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.



தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம்.

குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். ஸ்டிக்கர் பொட்டு உடல்நலனுக்குக் கெடுதியே செய்யும். அதில் தடவியிருக்கும் ஒட்டும்பசை ரசாயனத்தால் ஆனது. இது நெற்றியில் எரிச்சலை ஏற்படுத்தும். மற்றும் சூரிய ஒளி நெற்றிப் பொட்டில் விழுவதைத் தடுத்துவிடும். கண் மற்றும் புருவங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஆபத்தானது.


Why? | elenshilian
 
நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பதற்கா&#


நந்தியின் குறுக்கே செல்வதை தடுப்பதற்கான காரணம்


சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும்.

பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர்.

இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான்.

மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். . அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

????????? ???????? ??????? ???????????? ?????? ~ Simple Search
 
அஷ்டமி, நவமி திதிகளில் மங்கள நிகழ்ச்சிகள

அஷ்டமி, நவமி திதிகளில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. ஏன்?

Tamil-Daily-News-Paper_19487726689.jpg


ஓவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. அந்த தேவதைகள் நற்பலன்களை அளிப்பவர்களாக இருந்தால் அந்தத் திதி, மங்கள நிகழ்ச்சிகளுக்கு உகந்ததாகும். உதாரணமாக வார நாட்களில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மங்கள நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. காரணம் இவ்விரு கிரகங்களும் பாப கிரகங்கள்.

இது போல் பதினைந்து திதிகளில் முதலாவதாகிய பிரதமை எட்டாவது அஷ்டமி, ஒன்பதாவது நவமி, பதினைந்தாவது அமாவாசை இந்த நான்கு திதிகளிலும் தீய பலன்களைக் கொடுக்கும் தேவதைகளின் பலம் அதிகம் என்பதால் இந்த நாட்களில் மங்கள நிகழ்ச்சிகள் செய்வதில்லை. அதனால் தான், இந்த திதிகளில் துர்க்கை, பைரவர் போன்ற தெய்வங்களை வழிபடுகிறோம்.

Astami, falls on the auspicious ceremonies should not Tithis. Why? |??????, ???? ????????? ????? ???????????? ?????????????. ???? -Aanmeega Dinakaran
 
கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏ&

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.png



ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.



ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.



உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.

நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.


நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.


நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.


ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம்.


இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன.
இதுவே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.


Spiritual Search | spiritual thoughts exchange
 
பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம்

பச்சரிசி மாவில் கோலம் போடுவதன் தத்துவம் என்ன?


248116_642630619096289_345105924_n.jpg


மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் புண்ணியம். அதிலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தல் பெரும் புண்ணியமாகும். வசதி படைத்த பணக்காரர்கள் அக்காலத்தில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தார்கள். ஆனால், ஏழை என்ன செய்வான்? அந்த ஏழையும் ஆயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்யும் வழிவகைகளை நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பச்சரிசி மாவில் கோலம் போட்டால் அம் மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள் சாப்பிட்டபின், மீதமிருக்கும் அரிசி மாவை எடுத்துச் சென்று தங்கள் வலைகளில் சேமித்து வைக்கும். எனவே, ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு உணவளித்து மகிழ்ச்சிப்படுத்தும்,

இந்த முறையைப் போல் ஆன்ம நேயத்தையும், ஆன்மீகத்தையும் சிறப்பிக்கும் செயல் வேறு உண்டோ எனில் இல்லையெனக் கூறலாம்.


” உன்னிலும் என்னிலும் இருக்கும் ஈசன், ஈயெறும் புடலிலும் இருக்கிறான்” எனபது நினைவு கூறத்தக்கவை. ஆயிரம் உயர்களுக்கு உணவளித்த அந்த மகிழ்ச்சி, உணவளித்தவரின் உள்ளம், உடல் ஆகிய இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அல்லவா?


கோலம் போடுவதில் இன்னொரு தத்துவமும் அடங்கியிருக்கிறது. பல புள்ளிகள் வைத்து பல வடிவங்களில் வளைத்து போடப்படுகின்ற கோலம், பார்ப்பவரின் மனத்தைக் கவரும். யாராவது வீட்டில் தகராறு செய்ய வேண்டும் என்று நினைத்து வருகின்றபோது, அந்த அழகுக் கோலங்கள், வருபவரின் எண்ணத்தைச் சிதற வைக்கிறது. அதனால், வருபவர் கோபம் தணிந்துதான் வீட்டுக்குள்ளே வருவார்.

இப்படிப்பட்ட மனோவசிய சக்தி கோலங்களுக்கு உண்டு என அறிந்தே முன்னோர்கள் கோலம் போடுவதைப் பரவலாக செய்தார்கள்.

Why? | elenshilian
 
ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது?

ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது?

Tamil-Daily-News-Paper_1163446904.jpg



நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.


Why offerings made? |?????? ??? ????????????????? -Aanmeega Dinakaran
 
Importance of friendship



Friendship is a Rainbow between,

Two hearts, sharing seven feelings:
1....Love
2....Happiness
3....Truth
4....Faith
5....Secret
6....Trust &
7....Sadness

:tea:

SMS-Friendship-is-a-Rainbow.webp
 
ஸ்படிகம்

ஸ்படிகம்


ஸ்படிகம்:::


ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமா னாலும் அணியலாம்.


ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல.

தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.


ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம்.

இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.



ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மேரு. இந்த மேரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.



இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.

Source: Hari Krishnamurthy
 
அது என்ன 27 நட்சத்திரங்கள்?

அது என்ன 27 நட்சத்திரங்கள்?

நம்முடைய வான மண்டலத்தில் பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன.ஜோதிட சாஸ்திரத்தில் அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் கணக்கிடபடுகிறது.27 நட்சத்திரங்களின் செயல்பாடு மட்டும்தான் மனிதனுக்கு பலன் தருமா?மற்ற நட்சத்திரங்கள் பலன் தராதா என பெரும்பான்மையோரின் சந்தேகமாக உள்ளது. அதாவது 27 நட்சத்திரங்கள் என்பது 27 நட்சத்திர கூட்டங்கள் ஆகும்.பண்டைய காலத்தில் ரிஷிகள் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திர கூட்டங்களை 27 பிரிவுகளாக பிரிவுகளாகவும்.வான மண்டலத்தை மேசம் முதல் மீனம் வரை 12 ராசி மண்டலங்களாக பிரித்திரிக்கிறார்கள்.



27 நட்சத்திரங்கள் கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாக பிரித்து,ஒரு ராசி மண்டலத்திற்கு 2.25 நட்சத்திர கூட்டங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.சந்திரன் ஒவ்வொரு நாளும் எந்த நட்சத்திர கூட்டத்தில் பயணம் செய்கிறாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசி மண்டலத்தில் வருகிறதோ அதுவே அன்று பிறந்தவரின் ஜென்ம ராசியாகும்.


நட்சத்திர கூட்டங்கள் எந்த வடிவில் உள்ளதோ அதன் அடிப்படையிலே பெயரும் வைக்கப்பட்டது.உதரணமாக உத்திரம் என்றால் ஒரு பொருளை தாங்கும் நீள மரமாகும்.பெரும்பாலன வீடுகள் உத்திரமில்லாமல் இருப்பதில்லை அதுதான் அந்த வீட்டை தாங்குவதற்கு ஆதாரம்.உத்திரம் வடிவில் இருக்கும் நட்சத்திர கூட்டத்திற்கு உத்திரம் ஆகும்.இது மாதிரியேதான் 27 நட்சத்திரத்திற்கும் பெயர் அமைந்தது.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
How many years Ma Sita was Kept in Asoka Vanam by Ravana ?

How many years Ma Sita was Kept in Asoka Vanam by Ravana ?

Ever wondered about this ?

Ma Sita ,was abducted by the Ravana and was kept in Ashoka vanam ( as far as I know it is not ashoka vatika...vatica implies a ghat or a building).

When Hanuman, jumps over the mighty ocean and enters Lanka and finally sees SITA under the tree SIMSUPA , he makes a careful approach to her to make her believe that he is not a Raakshasa in disguise , but a messenger from Rama and presents Sri Rama's Ring as token.


Then in the conversation between Sita nad Hanuman, Sita very clearly says that Rama has kept her as captive , and given ONE YEAR TIME to change her mind and marry Ravana.Sita further clearly says only two months time is left in the one year that was given to her by Ravana.

After this hanuman ,after doing all he could, flies back to Sri Ram , and then Sugreeva,the king of Kiskinda with his army and Sri Rama,Lakshmana and Hanuman arrive at the end of the land,stand at the shore .After much deliberations Sri Rama decides build a bridge to make all his army to go to Lanka.Finally Sri Rama arrives in Lanka and a fearful battle takes plce for days together and finally ravana was killed and after Agni Pariksha ,Sita and Sri Rama and others come in Puspak Viman .So this period is almost nearly one month ond 25 days or so, because Sri Rama then says to Hanuman to go urgently to Bharata to tell that he is coming,since Bharata told Sri Rama that if Sri Rama does not appear before him the after fourteen years are over,he will end his life.

Taking all this into consuderation you can come to a conclsion that Sita was in ashoka vanam 10 months + 1month and 25 days or so.that is days short of one year.




Source: https://in.answers.yahoo.com/question/index?qid=20070328095559AA33aF6
 
குரு வழிகாட்டலின் அவசியம்..!

மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.

அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும், பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரபலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.

அப்போது பக்தனை நோக்கி மாகான் சொன்னார், இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக்கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது.. இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம் என்றார்..!

உண்மையை உணர்ந்த பக்தன் மாகனின் பாதங்களின் விழுந்து வணங்கி சரணடைந்தான்..!

சற்குரு திருவடிகளே சரணம் சரணம் சரணம்..!
 
சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!


large_142350771.jpg



1. வியாசரின் இயற்பெயர்........

கிருஷ்ண துவைபாயனர்

2. யாகம் செய்யும் நடைமுறையைக் கூறும் வேதம்......
யஜுர்

3. வேதபுருஷனின் கண்ணாக இருக்கும் சாஸ்திரம்......
ஜோதிடம்

4. 18 புராணங்களில் மிகப் பெரியது........
ஸ்கந்த புராணம்

5. விஷ்ணுபுராணத்தை எழுதியவர்........
பராசரர்

6. வால்மீகி ராமாயணத்திலுள்ள ஸ்லோகங்கள்.......
24,000

7. படைத்தல் தொழிலின் போது சிவன் ஆடும் நடனம்......
காளிகா தாண்டவம்

8. மரணத்தின் பின் மனிதநிலை பற்றி எமனுடன் வாதிட்டவன்......
நசிகேதன்

9. விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த உபநிஷதம்........
கடோபநிஷத்

10. முண்டக உபநிஷத்தில் உள்ள புகழ் மிக்க வாசகம்........
சத்ய மேவ ஜயதே(வாய்மையே வெல்லும்)

Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
சுந்தர காண்டம் படிபதனால் கிடைக்கும் நன்மை :
- படிக்க துவங்குவோம் . .



1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.


2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.


3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.


4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.


5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.


6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.


7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.


8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.


9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.


10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.


11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.


12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.


13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.


14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.


15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.


16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.


17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.


18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.


19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.


20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.


21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.


22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.


23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.


24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.


25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.


26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.


27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.


28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.



29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.



30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.


31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.


32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)


33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.


34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.


35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.


36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.


37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.


38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.


39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.


40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.


https://groups.google.com/forum/#!topic/tamilamutham/AEiigk28_Uw
 
முப்பட்டை விபூதி அணிவதன் தாத்பர்யம்

முப்பட்டை விபூதி அணிவதன் தாத்பர்யம்

மூன்று கோடுகள் ஒன்றன் கீழ் ஒன்றாக நெற்றியில் புருவமத்தி, கண்கள் வரைக்கும் -

இடுவதன் சாஸ்திரப் பிரமாணம் பின்வருமாறு:

எது முதல் கோடோ அது கார்ஹபத்யாக்னி, அகாரம், ரஜோகுணம், பூலோகம், ஸ்தூலசரீரம், க்ரியாசக்தி, ருக்வேதம், காலை வழிபாடு. தேவதை; மஹேச்வரன்.


எது இரண்டாவது கோடோ அது தக்ஷிணாக்னி, உகாரம், ஸத்வகுணம், அந்தரிக்ஷம் அந்தராத்மாவாகிய மனது, இச்சாசக்தி, யஜுர்வேதம், நடுப்பகல் வழிபாடு. தேவதை: ஸதாசிவன்.


எது மூன்றாவது கோடோ அது ஆஹவனீயாக்னி, மகாரம், தமோகுணம், வானுலகம், பரமாத்மா, ஞான சக்தி, ஸாமவேதம், மாலைவழிபாடு. தேவதை: மஹாதேவன்.

?????? ??????? - Deepawali 2010 - ???????????????????? ????????? ????????? ?????? ??????? ??????????
 
சர்வ மங்களம் தரும் சாயுஜ்ய லிங்கம்!

சர்வ மங்களம் தரும் சாயுஜ்ய லிங்கம்!


TN_131106142525000000.jpg



லிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன், சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார். பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டார். அதன் அடிப்படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திருநல்லூரில் காணலாம்.

நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்றும் அருள்சோமநாதரை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது.

குடவாசல் தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணேசுவரரை கருடன் வழிபட்டார் அப்படி வழிபட்ட போது கருடனுடையை கால்சுவடுகள் லிங்கத்தின் மீது படிந்தது. அந்த அடையாளத்தை இன்றும் தரிசிக்கலாம்.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருந்துதேவன்குடி தலத்தில் குதிரையும் வண்டும் ஈசனை வழிபட்டு முக்தி அடைந்தன. அவற்றின் காலடிச் சுவடுகள் லிங்கத்தில் பதிந்திருப்பதைக் காணலாம்.

திருக்கொண்டீஸ்வரம் தலத்தில் சுயம்புலிங்கமாக பசுபதீஸ்வரர் அருள்புரிகிறார். இந்த லிங்கத்தை பசு வழிபட்டதால், பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவு காணப்படுகிறது.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் லிங்கத் திருமேனியில், எமனின் பாசக்கயிறு பட்டதால் ஏற்பட்ட தழும்பு உள்ளது.

ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ராமநாதர் லிங்கத்தை அனுமன் தன் வாலால் கட்டி இழுத்ததால், அனுமனின் வால்பட்ட தழும்பு லிங்கத்தில் பதிந்திருக்கிறது. இதே போல் ஆந்திர மாநிலம் ராமகிரியில் உள்ள சிவன் கோவிலில் அருள்புரியும் லிங்கத்திலும் அனுமனின் வால்பட்ட தழும்பு உள்ளது.

திருவிஜயமங்கைத் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீவிஜயநாதேஸ்வரர் லிங்கத்தில் அர்ஜுனனின் அம்புபட்ட தழும்பு உள்ளதைக் காணலாம்.

வித்தியாசமான லிங்கங்கள் சில திருத்தலங்களில் காணப்படுவதுபோல புனிதமான நீரில் நனையும் சிவலிங்கங்களும் உள்ளன.

ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்கா ஆலயத்தில் அருள்புரியும் ஜம்புகேஸ்வரர் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் ஊறிக்கொண்டேயிருக்கும். லிங்கம் தண்ணீரில் மூழ்கி மறையாமலிருக்க நீரை அடிக்கடி முகந்து வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த சிவலிங்கத்தை கருவறையின் மேற்குப் பகுதியில் உள்ள சாளரத்தின் வழியாகத்தான் தரிசிப்பார்கள்.

சீர்காழி திருக்காளமுடையார் கோவிலிலும் லிங்கம் தண்ணீரில் மூழ்கியிருப்பதைக் காணலாம்.

திருவேடகம் திருத்தலத்தில் மூலவர் லிங்கத்தின் முடியிலுள்ள பள்ளத்திலிருந்து தண்ணீர் ஊறி வெளிவந்து கொண்டிருக்கும்.

தஞ்சை பெரிய கோவில் மூலவர் பெரிய திருவுருவில் அருள்புரிகிறார். கருவறையைச் சுற்றி சந்திரகாந்தக் கற்கள் அமைந்திருப்பதால், கோடைக்காலத்தில் கருவறையின் உட்சுவர்களில் நீர்த்துளிகள் படிந்து, சிவலிங்கம் குளிர்ச்சியாக இருக்கும், மேலும், பெரிய கோயிலிலுள்ள சிவகங்கைத் தீர்த்தகுளத்தின் நடுவில் ஒரு லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கம் தீர்த்தக்குளத்தில் மூழ்கியே இருக்கும். கடுமையான கோடைக்காலத்தில் நீர் வற்றும்போது மட்டும் லிங்கத்தை தரிசிக்கலாம்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கருவறையில் மேல்தளம் சந்திரகாந்தக் கற்களால் அமைந்துள்ளதால், எப்பொழுதும் சொட்டுச் சொட்டாக நீர்த்துளிகள் சிவலிங்கத்தின்மீது விழுந்த வண்ணம் உள்ளது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மூலவரின் திருவடியில் தேவதீர்த்த நீர் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும். இந்த நீர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிவலிங்கங்களில் பலவிதங்கள் உள்ளது போல், பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை தாராலிங்கம் என்று கூறப்படுகின்றன.

காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரத்தில் உள்ள கற்கோவில்கள், தென்னாற்காடு மாவட்டம் பனைமலையில் உள்ள சிவன் கோயில், பொன்பரப்பி சிவன் கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் போன்ற ஆலயங்களின் வளாகத்திலும் தாராலிங்கங்கள் உள்ளன.

தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. 4,8,16,32,64 என்ற விகிதத்தில் பட்டைகள் அதாவது தாரைகள் அமைத்திருப்பார்கள்.

நான்கு பட்டைகள் கொண்ட லிங்கங்களை வேதலிங்கம் என்று போற்றுவர், சக்கரப்பள்ளி என்ற பாடல் பெற்ற திருத்தலத்தில் மூலவர் நான்கு பட்டை லிங்கமாகத் திகழ்கிறார்

கோவை காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நாற்பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். பொதுவாக, நான்கு பட்டைகள் கொண்ட லிங்கத்தை சர்வதோபத்ர தாரா லிங்கம் என்பர்.


எண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா லிங்கம் காஞ்சி கைலாச நாதர் கோயிலிலும் காணப்படுகிறது. இதன் எட்டுப் பட்டைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றைக் குறிக்கும் என்பர்.

மேலும் எட்டு பைரவ சக்திகளையும், இறைவனின் அஷ்ட வீரச் செயல்களையும் குறிப்பன என்பர் சிதம்பரம் நவலிங்க சந்நிதியிலும் எட்டு திசைலிங்கங்கள் உள்ளன. இவை அஷ்டதாரா லிங்கங்களாகும்.

பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் சொல்வர். இவ்வகை லிங்கங்கள் குளிர்ச்சியான கல்லில் உருவானவையாகும். பெரும்பாலும் சந்திரக்காந்தக் கல்லில் உருவானதாக இருக்கும்.

சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்திலும், பழையாறை மேற்றளியிலும், பொன்பரப்பி தலத்திலும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள கோயிலிலும் சோடச தாராலிங்கம் உள்ளது.

முப்பத்திரண்டு பட்டைகளுடன் காட்சி தரும் லிங்கத்தை தர்மதாரா லிங்கம் என்பர். காஞ்சியம்பதியில் 32 பட்டைகள் கொண்ட லிங்கத்தை தரிசக்கலாம்.64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ லிங்கத் திருவுரு கலைகள், சிவபெருமானின் 64 லீலா விநோதங்கள், 64 யோகியர்களைக் குறிக்கும் என்பர்.

இவ்வகை லிங்கத்தை காஞ்சியம்பதியில் தரிசிக்கலாம்.

மேலும் அறுபத்து நான்கு பட்டைகள் கொண்ட லிங்கம் பைரவரையும் குறிப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. பொதுவாக தாரா லிங்கங்களை வழிபடுவதால், இறைவனின் பூரண அருள் கிட்டுவதுடன் சிவபதம் கிட்டும் என்றும் சொல்வர்.

எனவே இதை சாயுஜ்ய லிங்கம் என்றும் போற்றுவர். இந்தத் தாராலிங்கத்தின் மேல் தாராபாத்திரம் மூலமாக அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீர் தாரைகளின் வழியே பிரிந்து செல்லும் காட்சியை தரிசிப்பதால் பரம்பொருளின் முழுமையான அருளைப் பெற்று வளமுடன் வாழலாம் என்பர்.


Temple News | News | Dinamalar Temple | ???? ??????? ????? ??????? ???????!
 
சாளக்கிராமம் :

சாளக்கிராமம் :


பண்டைய இந்தியாவில் தலைசிறந்து விளங்கிய அவந்தி தேசமே இன்றைய நேபாளம்.


இங்கு இமயத்தின் அடிவாரத்தை ஒட்டினாற்போல் ஹரிபர்வதம் என்னுமோர் மலை உள்ளது.
பகுதியில் கண்டகிநதி உற்பத்தியாகின்றது.

இங்கு சக்ரதீர்த்தம் என்னும் இந்தப்பகுதி தான் சாளக்கிராமம் என்றழைக்கப்படுகிறத.

இந்த ஹரி சேத்திரத்தில் உள்ளசகல கற்களிலும், (குளிர் காற்றுஇவைகளில்லாமல்அமைந்துள்ள ஸைலகர்ப்பத்தில்)விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம்
மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாகப்படுகிறது.



சாளக்கிராமம் என்பது என்ன?


சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும்
ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும்.
இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல
வண்ணங்களில் கிடைக்கிறது.

திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும்
பூச்சியின் வடிவெடுத்து,சாளக்கிராமத்தை குடைந்து, அதன்
கர்ப்பத்தை அடைவார்.

அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன்
கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை
விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர்.

இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.


சாளக்கிராமத்தின் சிறப்பு
:


சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது
மட்டுமில்லாமல் இவற்றில் 14உலோக சக்திகள் இருப்பதாக
கூறப்படுகிறது.


வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம்
பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி.


சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன்
வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை
ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது
சிறப்பு.



சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன்,
நாராயணன், மாதவன், விஷ்ணு,மதுசூதனன், திரிவிக்கிரமன்,
வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன்,பத்மநாபன், தாமோதரன் ஆகிய
பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி,
செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி
எழுந்தருளியுள்ளார்.


சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய
காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக்
கொண்டு விளங்குகிறது.



இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில்
நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப்
பெரியோர்கள்.

சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால்
தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம்.

சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.


1. ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு
வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண
சாளக்கிராமம்.


2. நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது
லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம்,


3. இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு
ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம்.


4. இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன
சாளக்கிராமம்.


5. வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும்
கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்.


6. விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது
தாமோதர சாளக்கிராமம்.


7. மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு
சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ
ராஜேஸ்வர சாளக்கிராமம்.


8. விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும்
பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம்.


9. பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம்.


10. சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது
மதுசூதன சாளக்கிராமம்.

11. ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம்.


12. மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர
சாளக்கிராமம்.

13. இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக்
காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம்.


14. இரண்டு சக்கரங்களையும்,பெரிய வாயையும்
வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்.


15. துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு
சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம்.


16. சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல
ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம்.

17. விருத்தாகாரமாகவும்,செம்பட்டு நிறம் கொண்டதாகவும்
இருப்பது அநிருத்த சாளக்கிராமம்.


இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில்
எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம்
செய்வார்கள்.

சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும்.

இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை
கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும்
அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும்.


சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல
இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் .

சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும்.

அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய
வீடுகளை 108திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க
வேண்டுமென்பர்.


12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக
கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும்.
சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில்
அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும்
இடமாக கருதப்படுகின்றன.

வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.


நீலநிறம் - செல்வத்தையும்,சுகத்தையும் தரும்


பச்சை - பலம், வலிமையைத் தரும்

கருப்பு - புகழ், பெருமை சேரும்

புகைநிறம் - துக்கம், தரித்திரம்.


அற்புதங்கள் நிறைந்த சாளக்கிராமம்!


ஒவ்வொரு கோவில்களிலும் மூலஸ்தானத்தில் உள்ள சுவாமிகளுக்கு தான
வழிபாடு , திருவிழாக்கள் நடத்தப்படுவதை அறிந்திருப்போம்.

மூலஸ்தானத்தில் சாளக்கிராமம் என்ற ஒரு தெய்வீக கல்லுக்கு பூஜை
நடப்பதை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள்.

இந்த சாளக் கிராமம் நேபாளம் முக்திநாத் கோவில் அருகில் கண்டேகி நதியில் மட்டுமே உருவாகுகிறது. இதில் தான் சுவாமி குடியிருப்பதாக ஐதீகம். பெருமாள் கோவில்களில் இதை சாளக் கிராமம் என்றும், சிவன்
கோவில்களில் பானலிங்கம் என்றும்,விநாயகர் கோவிலில் சோனபத்ரம்
என்றும் அழைக்கிறார்கள்.இந்த சாளக் கிராமத்தில் பெருமாளின் அத்தனை அவதாரங்களும் அடங்கி உள்ளதாம்.

பக்தர்கள் இறைவனை வேண்டி துளசி செடியை கண்டேகி
ஆற்றில் போட்டு கைகளை விரித்து தண்ணீரில் மூழ்கியபடி நின்றால் தங்களுக்கு இறைவனின் அருள்படி சாளக் கிராமம் கிடைக்கும் என்கிறார்கள்.


நம் வீட்டிலும் இந்த சாள கிராமத்தை வைத்து வழிபடலாம்.

12 சாளக்கிராமங்கள் இருந்தால் அந்த வீட்டில் பெருமாளே குடியேறி இருப்பதாக
ஐதீகம்.



Source;Jeyanathan Durai
 
குல தெய்வம் தெரியாதவர்கள் எவ்வாறு வழிபட

குல தெய்வம் தெரியாதவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும்?


TN_120213174509000000.jpg



பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.

குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.


சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர். சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு. இதனால், சோதனைகள் ஏற்படும் போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு. உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.

குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைப்பின் அவர்கள் தெய்வ அருளினால் தங்களுக்கு வழிகாட்டலாம். சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது. இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை, கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்கை கோயிலுக்கு செல்ல வேண்டும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும்.கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாரம்.

Pooja for Kula Daivam | ??? ??????? ????????????? ??????? ????? ?????????
 
சட்டம்பி

சட்டம்பி

TN_130810134228000000.jpg




கேரளத்தில் வாழ்ந்த சட்டம்பி சுவாமிகள் பெரும் மகான். இவரது மேன்மைகளைப்பற்றி அறிந்த ஓர் அரசு அதிகாரி அவரைத் தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தார். அந்த அதிகாரி லஞ்ச லாவண்யத்துக்குப் பெயர் போனவர். அவரைப் பற்றி சட்டம்பி சுவாமிகள் நன்கு அறிந்திருந்தார். இருந்தாலும் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டார். விருந்துக்கு அவரது சீடர்களும் வருவார்கள் என்ற ஒரு நிபந்தனையுடன். அதிகாரி சம்மதித்தார். குறிப்பிட்ட நாளன்று சட்டம்பி சுவாமிகள் தனியாக அந்த அதிகாரியின் வீட்டிற்குச் சென்றார்.

அதிகாரி சுவாமிஜி, சீடர்கள் எங்கே? என விசாரித்தார். அவர்கள் வெளியே உள்ளார்கள், உணவு பரிமாறியதும் வருவார்கள். உணவு பரிமாறப்பட்டதும் சுவாமிகள், அருமைச் சீடர்களே உள்ளே வாருங்கள் என்று உரக்க அழைத்தார். உடனே அந்த அதிகாரிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பல தெருநாய்கள் வரிசையாக வந்து ஒவ்வோர் இலையிலும் அமர்ந்து பரிமாறப்பட்டிருந்த உணவுகளை உண்டன. அந்த நாய்கள் சத்தம் ஒன்றும் செய்யாமல், உண்டுவிட்டு வந்தது போலவே வரிசையாகத் திரும்பிச் சென்றன. வீட்டிலிருந்த யாவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர்.

அட, நாய்களுக்கு இவ்வளவு அடக்கமும், அமைதியுமா! சிரித்தவாறே சுவாமிகள் அவர்களிடம், இவை இப்போது சாதாரண நாய்களாக இருக்கலாம்; ஆனால் போன ஜன்மாவில் ஊழல் பேர்வழிகளாக இருந்தவர்கள். செய்த ஊழல்களின் பயனாக இந்த நாய்ப் பிறவியைப் பெற்று அவை செய்த தீயவினைகளை அனுபவிக்கின்றனர். என்றார். இதைக் கேட்டதும் அந்த அதிகாரி கலங்கினார். அவரது அகக்கண் திறந்தது. அன்று முதல் தனது ஊழல் செயல்களை விட்டு நல்ல வாழ்க்கையை மேற்கொண்டார்.

ஸ்ரீநாராயணகுருவின் குருவான சட்டம்பி சுவாமிகள் சுவாமி விவேகானந்தரின் பாரத யாத்திரையின் கேரள பகுதி பயணத்தில் சுவாமிஜியைச் சந்தித்து உரையாடி உள்ளார்.

Sattambi | ????????
 
பிறந்த நட்சத்திரமும் தொடங்க வேண்டிய பெய&

நட்சத்திரம் எழுத்துக்கள்

அசுவினி சு-சே-சோ-ல, ர


பரணி லி-லு-லே-லோ


கிருத்திகை அ-இ-உ-ஏ


ரோகிணி ஒ-வ-வி-வு


மிருகசீரிஷம் வே-வோ-கா-கி-ரு


திருவாதிரை கு-கம்-ஹம்-ஜ-ங-ச-க


புனர்பூசம் கே-கோ-ஹா-ஹீ


பூசம் ஹு-ஹே-ஹோ-டா



ஆயில்யம் டி-டு-டெ-டோ-டா

மகம் ம-மி-மு-மே


பூரம் மோ-டா-டி-டு


உத்திரம் டே-டோ-ப-பா-பி


அஸ்தம் பூ-கீ-ஜ-ண-தா-டா


சித்திரை பி-போ-ரா-ரி-ஸ்ரீ


சுவாதி ரு-ரே-ரோ-தா-க்ரு


விசாகம் தி-து-தே-தோ


அனுஷம் ந-நி-நு-நே


கேட்டை நோ-யா-யீ-யு


மூலம் யே-யோ-பா-பி


பூராடம் பூ-தா-ட-பா-டா-பி



உத்திராடம் பே-போ-ஷ-ஜ-ஜி

திருவோணம் ஜு-ஜெ-ஜொ-கா-க


அவிட்டம் க-கீ-கு-கே


சதயம் கோ-ச-சீ-சு-ஸ-ஸீ-ஸு


பூரட்டாதி ஸ-ஸோ-தா-தீ-சே-சோ-டா-டி


உத்திரட்டாதி து-ஷா-ஜு-சா-சி-சீ-டா-தா-த-ஜ-ஞ


ரேவதி தே-தோ-ச-சி-டே-டோ-சா-சி



27 Nakshatras | Nakshatra Names | ?????? ????????????? ?????? ??????? ??????? ?????????!
 
27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய க&#3007

27 நட்சத்திரங்களுக்குரிய வணங்க வேண்டிய கிரகங்கள்!

அஸ்வினி கேது

பரணி சுக்கிரன்

கார்த்திகை சூரியன்

ரோகிணி சந்திரன்

மிருகசீரிஷம் செவ்வாய்

திருவாதிரை ராகு

புனர்பூசம் குரு (வியாழன்)

பூசம் சனி

ஆயில்யம் புதன்

மகம் கேது

பூரம் சுக்கிரன்

உத்திரம் சூரியன்

அஸ்தம் சந்திரன்



சித்திரை செவ்வாய்

சுவாதி ராகு

விசாகம் குரு (வியாழன்)

அனுஷம் சனி

கேட்டை புதன்

மூலம் கேது

பூராடம் சுக்கிரன்

உத்திராடம் சூரியன்

திருவோணம் சந்திரன்

அவிட்டம் செவ்வாய்

சதயம் ராகு

பூரட்டாதி குரு (வியாழன்)

உத்திரட்டாதி சனி

ரேவதி புதன்.


27 Nakshatras | Nakshatra Names | ?????? ????????????? ?????? ??????? ??????? ?????????!
 
அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:

அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்:

அசுவினி சுகந்த தைலம்

பரணி மாவுப்பொடி

கார்த்திகை நெல்லிப்பொடி

ரோகிணி மஞ்சள்பொடி

மிருகசீரிடம் திரவியப்பொடி

திருவாதிரை பஞ்சகவ்யம்

புனர்பூசம் பஞ்சாமிர்தம்

பூசம் பலாமிர்தம் (மா, பலா, வாழை)

ஆயில்யம் பால்

மகம் தயிர்

பூரம் நெய்

உத்திரம் சர்க்கரை

அஸ்தம் தேன்

சித்திரை கரும்புச்சாறு


சுவாதி பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)

விசாகம் இளநீர்

அனுஷம் அன்னம்

கேட்டை விபூதி

மூலம் சந்தனம்

பூராடம் வில்வம்

உத்திராடம் தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)

திருவோணம் கொம்பு தீர்த்தம்

அவிட்டம் சங்காபிஷேகம்

சதயம் பன்னீர்

பூரட்டாதி சொர்ணாபிஷேகம்

உத்திரட்டாதி வெள்ளி

ரேவதி ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்).

27 Nakshatras | Nakshatra Names | ?????? ????????????? ?????? ??????? ??????? ?????????!
 
Who are all the Vanaras Fought for Sri Rama Against Mighty Ravana

Who are all the Vanaras Fought for Sri Rama Against Mighty Ravana


Millions and Millions of Vanara Sena fought for Sri Rama against Mighty Ravana


Sushena, the father of Lady Tara, a valorous one with the sheen of golden mountain then appeared with very many thousands of crores of vanara s

Like that the most efficient vanara chief Taara, the father of Ruma and Sugreeva s father in law, turned up with another thousand crores of vanara s following him.

Honourable Kesari, the father of Hanuma, with his bodily gleam like that of the fibrils of lotuses and visage glittering in the gleam of nascent sun, and who is an intellectual, graceful and prominent vanara among all the vanara s, then came into view associated with thousands and thousands of armies of vanara s.

Gavaksha, the formidably adventurous sovereign of baboons is then seen encircled by a thousand crore vanara s

Dhuumra, the enemy destroyer, marched to the fore of Rama and others surrounded with two thousand crores of Rikshas which have frightful fastness.

The highly valorous commander named Panasa has then arrived attended by a three crore legion of horrendous vanara s who are beaming forth like gigantic mountains.

Commander Niila has then come into view with his colossal and blackish mascara mound like body encircled by ten crores of vanara s that are selfsame to their leader.

Then the great mighty commander named Gavaya whose bodily sheen is like that of a golden mountain has come forth surrounded by five crores of vanara s.

Dariimukha, the mighty commander then came along with a thousand crore vanara s and he stayed nearby Sugreeva drawing nigh of him

Both Mainda and Dvivida, the great mighty sons Ashvini twin Gods have then appeared, each with a thousand crore vanara s.

The mighty, braving and highly resplendent Gaja came forth to the near of Sugreeva encompassed by three crores of vanara s.

Gandhamadana has then arrived while ten thousand crores and hundred thousand crores of Vanaras are following him at his behind.

Angada, the crown prince of Kishkindha, who matches his father Vali in valour has then turned up with a thousand Padma legions and a hundred Shanku legions of vanara s

Tara, the vanara commander, whose sparkle is as that of stars and whose valour is remarkable then appeared at a distance with five crore Vanaras

Indrajanu, the brave Vanara commander who is the chief of eleven crores of Vanaras has appeared then encompassed by selfsame vanara troopers.

Rambha whose bodily glow is like that of tender sun has then come forth fenced in a thousand plus a hundred of Aayuta s of vanara legions.




Brihaspati, the Jupiter, gave rise to a great Vanara named Tara, who is the most important one among all vanara s, and who excels all by his intelligence.



The brilliant Gandhamadana is the son of Kubera, while the divine architect Vishvakarma procreated the great Vanara called Nala.

The direct son of Vayu is the marvellous and adventurous Hanuma with an indestructible body, and one identical in the speed of lady Vinata s son, namely Garuda, the divine eagle vehicle of Vishnu, and among all Vanara chiefs he is the intelligent and the indefatigable one too.

Some of the Vanara s endowed with superior valour are born to female Golangulas, and like that some more to female Rikshas and Kinnara s.

All of the Vanaras stood by the brothers, namely the son of Indra Vali, and the son of sun Sugreeva, and even with the Vanara generals like Nala, Neela and Hanuma

The earth is thus suffused with those mighty army generals of Vanara race whose physiques resembled the clusters of clouds and peaks of mountains, and who have emerged for the reason of helping Rama.

Studded with bright coloured girdle bands and many other excellent ornaments, Manthara appeared like a female Vanara tied with ropes!

Vanara - AncientVoice

Ram4 39 - AncientVoice
 
The Role of Sampati In Ramayana

The Role of Sampati In Ramayana

In Hindu theology, Sampati (Sanskrit: सम्पाति Sampāti, Indonesian: Sempati, Thai: Sampathi, Tamil: Campati, Malay: Dasampani) was the oldest son of Aruṇa and a brother of Jatayu. Sampati lost his wings when he was a child.

Sampathi and Jatayu, when young, used to compete as to who could fly higher. On one such instance Jatayu flew so high that he was about to get seared by the sun's flames. Sampati saved his brother by spreading his own wings and thus shielding Jatayu from the hot flames. In the process, Sampati himself got injured and lost his wings. As a result, Sampati lived wingless for the rest of his life.

Sampati proved instrumental in Sita's search later on in the Ramayana. His role comes when the search party sent to the south, Led by Angada with Hanuman and Jambavan, exhausted, thirsty and depressed, reach to the southern end of the land. They have the endless sea before them, and still no clue of Sita. Disappointed, everybody just collapses on the sand, unable as well as unwilling to move or act any further.

Suddenly, they all hear a voice which says - "I will feast today. I shall be ever grateful to God for having such delicious meal walk to my doorsteps all by itself". Everyone looks in the direction of the voice, and see a huge vulture progressing towards them slowly, saying these words. At that moment, Jambavan says - "Life is so ironical. One is this vulture, who is planning to eat this disappointed lot, too exhausted to defend themselves - and defeated in this search for Seeta Mata; too guilty even to wish to live any further. And one was that Vulture Jatayu, who gave his life trying to save Sita Mata from the clutches of Ravana."



The vulture froze as soon as he heard the word "Jatayu". " Jatayu? Did you say Jatayu? What happened to him? Please tell me." Jambuvana told the story of Jatayu and his bravery. The vulture's eyes were moist at the end of the story. His throat choked; he said - "My name is Sampati. Jatayu was my brother. It has been ages since I have heard of any news from him. I hear a news now - news that he is no more!" Then, collecting himself, he says - "I am grateful to you, Sir! You have brought me the news of my brother. I shall return this favour. This lady Sita you are searching so fervently for; I know where she is."

Everybody jumped as soon as he said this. They listened with utmost concentration, as Sampati continued. " 100 Yojan from here is Lanka, the kingdom of Ravana. Some days ago, I had seen him flying in his Pushpak, landing at Lanka with a beautiful lady with him, forcibly being taken into Lanka and banished in one of the Vatika. I now know after listening to your story, She was Sita." "Good you gentlemen came. Now she will be remedied of her agony. Everyday, I used to watch her, sitting beneath that tree in that vatika - distraught, waiting for someone. Her wait will end now." Griddhraj Parvat, situated in Satna district in Madhya Pradesh, is believed to be the birthplace of Sampati

Sampati - Wikipedia, the free encyclopedia
 
பதினாறு வகை உபசாரங்கள்

பதினாறு வகை உபசாரங்கள்


ஆலயத்தில் இறைவனுக்கு அபிஷேகம் அலங்காரம் முடிந்தவுடன் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள் அவற்றில் நாம்

தூபத்தில்-அக்னி தேவனையும்


மகாதீபத்தில்-சிவனையும்

நாக தீபத்தில்-கேதுவையும்

விருஷப தீபத்தில்-தர்ம தேவதையையும்

புருஷாமிருக தீபத்தில்-விஷ்ணுவையும்

பூரணகும்பத்தில்-ருத்ரனையும்

பஞ்சதட்டுகளில்-பஞ்சபிரும்ம தேவதைகளையும்

நட்சத்திர தீபத்தில்-27 நட்சத்திரங்களையும்


மேரு தீபத்தில்-12 சூரியர்களையும்

விபூதியில்-பரமேஸ்வரனையும்

கண்ணாடியில்-சூரியனையும்

குடையில்-சந்திரனையும்

சாமரத்தில்-மகாலக்ஷ்மியையும்

விசிறியில்-வாயு தேவதைகளையும்
ஆலவட்டத்தில்-பிரம்மாவையும்

கற்பூரத்தில்-அக்னியையும்

அதிதேவதைகளாக பாவித்து வணங்க வேண்டும் பொருளுணர்ந்து பூஜையை ரசிக்கும் போது தன்னால் இறையுணர்வு வரும்.


Temple News | News | Dinamalar Temple | ?????? ???????? ??????? ???????? ???????
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top