# 40. The neck-less became the trunk-less.
உருவத்துக்கு அதிக மதிப்பு
ஒருபோதும் கொடுத்ததில்லை.
உருவத்தைத் தாண்டி ஒன்றும்
இல்லாதவர்கள் செய்வது அது.
இருந்த போதும் அவளை யாருமே
கவனிக்காமல இருக்க முடியாது.
நாலரை அடி உயரம்! 85 கிலோ!!
Due to any hormone problem ???
(No problem!)
கால் வலி வந்துவிட்டது.
Chinese feet எத்தனை
வெயிட் தாங்கும் பாவம்!
Doctor's strange advice,
"ஒரு வேலையும் செய்யாதே!"
ஒரு வேலையும் செய்வதில்லை!
அந்த இரண்டைத் தவிர.
உண்பது, உறங்குவது இத்யாதி
எல்லோரும் செய்வது தானே!
கண்ணைக் கொட்டாமல் T. V.!
வாய் ஓயாமல் ஊர்வம்புகள்!
"வேலை செய்யாதே!" என்று சொன்னவர்
"வாய் பேசாதே!" என்று சொல்லி இருந்தால்,
Colony யாவது அமைதியாக இருந்திருக்கும்!
உணவு உண்டபின் Dining Table ஐக் கூடத்
நின்று துடைக்க முடியாதாம் அவளுக்கு.
'நரம்பு மனிதன்' என்று புகழ் பெற்ற
நாகேஷைக் காட்டிலும் ஒல்லியான
நரம்பு மனிதன் அவள் கணவன்.
மாமிச மலையை உட்கார வைத்து
மாய்ந்து மாய்ந்து வேலைசெய்கிறான்!
விடியற்காலையில் எழுந்து சமையல்.
லஞ்ச் ஆன பிறகு துணி துவைப்பான்.
ஆபீஸ் முடிந்து மற்ற வேலைகள்
மாடாய் உழைத்து ஓடாய் தேய்கின்றான்
"யார் வீடு விருந்தோ!" என்பது போல
A benevolent smile உடன் வேடிக்கை!
"வேலை செய்யாதே!" என்ற உடன்
கேள்விகள் கேட்காதவளுக்கு,
"மாடி ஏறிப் போகாதே!" என்றதும்
வந்ததே வண்டியாகக் கோபம்!
"மடப்பயல் டாக்டர்! மாடி ஏறக்கூடாதாம்!"
தினமும் நாலு ட்ரிப் மாடி ஏறுகிறாள்.
தினசரி வம்புக் கச்சேரிகளுக்கு!
மடப் பயல் யார் என்று கூறுங்கள்!!
"We lose what we don't use "
என்று தெரியாத அந்த டாக்டரா?
யானையைக் கட்டித் தீனி போடும்
கணவன் ஆகிய நரம்பு மனிதனா?
ஊனுக்கு முந்தி, வேலைக்குப் பிந்தி,
Helium balloon போல் ஆன அவளா?
Consequence of this physical inactivity...
She came here as a "neck-less" lady!
She has become a "trunk-less" Haathi!