• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 131. தனிக் கொடி வேண்டும்!

Territorial Marking மிருகங்களுக்கு

மட்டும் தேவை என எண்ணாதீர்கள்.

மனிதர்களுக்கும் அது அவசியம் தான்!

கொடிப் பிரச்சனை பெரும் பிரச்னை!

ஒவ்வொருவருக்கும் தனிக்கொடி தேவை.

ஆத்திர அவசரத்துக்குக் கூட அதில்

அடுத்த வீட்டுக்காரர் துணி போடக்கூடாது!

அதையும் மீறிப் போட்டால் கலகம் வெடிக்கும்;

வாய்ச் சண்டையில் வேர்ல்ட் வார் III நடக்கும்.:argue:

இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை!:fencing:

பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லும் ஒரு

ஆசிரியையால் அப்படிச் செய்யமுடியும் என்று!

உஜாலா விளம்பரம் போல பத்துப் பதினைந்து

பளீரிடும் வெள்ளை ஆடைகள் ஒரு கொடியில்!

வந்தார் அதன் சொந்தக்காரரான ஒரு டீச்சர்.

அத்தனையையும் கீழே செம்மண்ணில் தள்ளி

கார்டூனில் Donald duck குதிப்பதுபோலவே

அவற்றின் மேல் Bangara டான்ஸ் ஆடினார்.

பிறகு ஒன்றும் நடக்காதது போலச் சென்றார்.

கேடு வரும் பின்னே மதி கெட்டுவரும் முன்னே. :crazy:

அவர் விரைவிலேயே வீட்டைக் காலி செய்து

காலனியை விட்டுப் போக நேர்ந்தது.
:bolt:
 
# 132. The moving platform.

ஏர்போர்டில் இருக்கும் moving platform.

நாம் நின்றாலே போதும் அது நகர்ந்து

நம்மைக் கொண்டு செல்லும் நீளமாக.

நான் சொல்லுவது அது அல்ல!

இந்தியன் ரயில்வே platform !

அத்தனை நேரம் பயணம் செய்பவர்கள்

ரயில் / விமானம் நிற்கும் முன்பே பெரிய

queue வில் நிற்பார்கள் இறங்குவதற்கு!

எதற்கு என்று எனக்குப் புரிவதே இல்லை!

அன்று இவர் இறங்கிச் சென்று விட்டார்.

ஓடும் ரயிலிலிருந்து இவர் இறங்கியது

எனக்கு அப்போது தெரியவில்லை.

மெல்லக் காலைக் கீழே வைக்க நினைத்தால்

அங்கே கண்டேன் அந்த moving platform!:fear:

மீண்டும் வண்டிக்குள் போகமுடியாதபடி

அடுத்த ஆள் குறுக்கே நிற்கின்றான்.

தரைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. :dizzy:

என்னுடைய terror stricken face ஐப் பார்த்த :scared:

ஒரு இளைஞன் எங்கிருந்தோ ஓடிவந்தான்.

ஒரு கையால் என் வலக் கையைத் தாங்கி

பிடித்துக் கொண்டு ரயிலுடனேயே ஓடி வந்தான்.

என்னைக் கைத் தாங்கலாக இறக்கிவிட்டான்.

என் பெரிய மகனே எனக்கு உதவுவதற்கு

ஓடி வந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

பலமுறை நன்றி சொல்லி வாழ்த்தினேன்!

நல்லவர்கள் உலகில் எப்போதும் இருப்பார்கள். :angel:

நான் அவர்களைக் காண்பதற்கு நிறைய

பாக்கியம் செய்திருக்க வேண்டும் அல்லவா.
 
John Milton.


The childhood shews the man, :baby:
As morning shews the day.

O impotence of mind, in body strong! :doh:
But what is strength without a double share
Of wisdom. :violin:

For him I reckon not in high estate :nono:
Whom long descent of birth
Or the sphere of fortune raises.
 
# 133. தொந்தரவில்லாமல் என்ஜாய் செய்யுங்கள்!

இரவு பத்தரைக்குப் புறப்பட்டது அந்த ரயில்.

படுத்தால் போதும் என்று கெஞ்சியது உடம்பு.

அன்று ஏதோ கல்லூரிக் கூட்டம் ரயில் நிறைய.

இரவு பதினோரு மணிக்குப் பாட்டுக் கச்சேரி! :sing:

Controversial ஃ பிலிம் songs போட்டி போல.

T. T. R இடம் சொன்னால் அவர் அவர்கள் சைடு.

"இப்பொ என்ஜாய் பண்ணாம இவங்க எல்லாம்

எப்போ என்ஜாய் பண்ணுவாங்க சொல்லுங்க?"

"என்ஜாய் பண்ண ஒரு நேரம் காலம் இல்லையா?"

"இல்லை"என்றார்." நான் சொல்ல மாட்டேன்!"

மீண்டும் மீண்டும்
நான் கேட்டபோது ஒரு சலுகை;

"வேண்டுமானால் வேறு இடத்தில் பெர்த்!"

"சரி" என்றேன். இவர் என்னை முறைத்தார்.

நான் சென்று அந்த பெர்த்தில் தூங்கினேன்.

அதற்குப் பிறகுதான் எப்போதும் கையேடு

இரண்டு EAR PLUGS எடுத்துச் செல்லலானேன். :ear:

என்ஜாய் செய்வதில் தவறு இல்லை உண்மை.

அதற்கு என்று இடம், காலம், நேரம் உள்ளன.

அடுத்தவனைத் துன்புறுத்தி என்ஜாய் செய்வதா?

கன்னத்தில் ஓங்கி அடித்துவிட்டு, கேட்டவுடன் :boxing:

"நான் அவனை ஒன்றும் அடிக்கவே இல்லை!

நான் கையை வீசிய இடத்தில் அவன் தான்

தன் முகத்தைக் கொண்டு வந்தான்" என்பதா?

புத்தி சொல்ல வேண்டியவரே அவர்கள் கட்சி!

மாணவர்களைக் கண்டு அச்சமா அவருக்கு? :noidea:
 
# 134. "சென்னை வந்தாச்சு!"

கல்லூரி வாலுகள்... ஆனால் ஆண்கள்!

சென்னை வர எவ்வளவோ நேரம் இருந்தது.

வாட்சைக் கூடப் பார்க்காமல் கூவல்,

"சென்னை வந்தாச்சு! சென்னை வந்தாச்சு!"

"எப்படிக் கண்டு பிடித்தாய்?" என்றால்

"காற்றினிலே வரும் நாத்தம்" :sing:

என்று முழுப் பாட்டும் அவர்கள்

இட்டுக் கட்டிப் பாடுகின்றார்கள்! :grouphug:

Extempore அல்லது already தயாரானதா?:noidea:

சென்னையை நெருங்கும் போதெல்லாம்

வால் பசங்கள் பாடிய பாடல் நினைவு வரும்.
:becky:
 
Candy is dandy :thumb:
But liquor is quicker. :spit:
Ogden Nash.

Qualis artifex pereo! :violin:
(What an artist dies with me!)
Nero.

Laws were made to be broken. :moony:
Christopher North.
 
# 135. "டேய் ஆகாஷ்!"

இரண்டு தலைமுறை நமக்குக் கீழே!

பெண்களுக்கு இல்லை அன்றைய நாணம்!

தலை முடி எலி கடித்துக் குதறியது போல; :mullet:

Blouse ஒரு நூலில் தாங்கி நின்றது! :shocked:

இந்த அழகில் ஒன்பது கஜப் புடவையாம்!

முதுகில் ஒரு aircraft land செய்யலாம்.

இதெல்லாம் வெளித் தோற்றம் தான்.

கணவனைக் கூப்பிடுவது "டேய் ஆகாஷ்!"

அடித்துக் கட்டிக் கொண்டு ஓடி வருவான்.

கணவன் பெயர் சொல்லாத காலம் இருந்தது.

பிறகு Mrs . XYZ என்று பெயர் சொல்லலானார்கள்.

பிறகு பெயர் சொல்லும் பழக்கம் வந்தது.

இன்று எல்லோர் முன்னிலையிலும் "டேய்" என்று...

ஒரு முறை கூப்பிட்டாள், "ஆகாஷ்! ஆகாஷ் !"

ஆனால் அவன் அவளிடம் ஓடி வரவில்லை.

"தடியன் கூப்பிட்டால் வரானா பார்!" என்றாள்.

"நீ initial உடன் 'டேய் ஆகாஷ்!' என்று கூப்பிட்டால்

விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்திருப்பான். :roll:

வேறு யாரோ கூப்பிடுகிறார்கள் என்று அவன் நீ

கூப்பிட்டவுடன் வரவில்லை போல!" என்றேன்.

என்ன ஆகிவிட்டது நம் வீட்டுப் பெண்களுக்கு??? :doh:
 
# 136. செல்வராஜ் ஐயர்.

இவர் அடிக்கடி சொல்லாமலேயே

யாரையாவது அழைத்து வருவார்

ஆபீஸ்காரர்களை தன்னுடன் லஞ்சுக்கு. :hungry:

அன்று வந்தவர் செல்வராஜ் என்பவர்.

வந்தவர் யார், என்ன ஜாதி, என்று

ஒரு நாளும் கேட்டதில்லை இதுவரை.

அன்று உடன் இருந்த குட்டித் தங்கை,

"அவர் பிராமினா?" என்று கேட்டாள்.

இவர் "ஆமாம்" என்றார் அவளிடம்.

"செல்வராஜ் என்ற பெயர் இருக்காது

ஐயர்களுக்கு!" என்று அவள் வாதம். :nono;

இவரோ "அவர் அய்யர் தான்"

என்று ஒரே அடியாக சாதிக்கின்றார்!

மகன் தன் புத்தகங்களைக் கொண்டு காட்ட :baby:

அதில் ஒரு யானை அழுது கொண்டிருந்தது.

"ஏன் கண்ணு யானை அளுவுது?"

தங்கையின் கொஞ்ச நஞ்ச ஐயமும்

மறைந்து போக அவள் சிரித்தாள்.:becky:

இன்றைக்கும் "செல்வராஜ் அய்யர்"

என்று சொல்லிக் கேலி செய்வதுண்டு!
 
Quotes by Alexander Pope.

For fools rush in :roll:
where angels fear to tread.:fear:

And the same age saw,
Learning fall and Rome.:tsk:


And then say not, man's imperfect,
Heav'n in fault; :whoo:

Say rather man is as perfect as he ought.
 
# 137. A heavenly drink !

அப்போதெல்லாம் தினமும் இவர்

மாலையில் பாதம் மில்க் குடிப்பார்.
அன்று வந்த நண்பருக்கும் கொடுத்தேன். :tea:

அவர் டீ யைத் தவிர எதுவும் குடித்ததில்லை

"What is this heavenly drink ?" என்றார்.:shocked:

பெயரைச் சொன்னவுடன் அடுத்த கேள்வி

"Do you mean to say this fellow gets to

drink this every day? Lucky fellow!"

அதற்கு முன்பு லஞ்சுக்கு அழைத்திருந்தபோது

சாம்பாரைக் கேட்டுக் கப்பில் விட்டுக் குடித்தது

என் நினைவுக்கு வந்து சிரித்தேன் நான்! :becky:

சாம்பாரையே அப்படிக் குடித்தவர்

பாதாம் மில்க் விரும்பிக் குடிப்பதில்

என்ன வியப்பு இருக்க முடியும் ???
:rolleyes:
 
# 138. Lucky or unlucky?

அவர்கள் குழந்தைகள் அசட்டுச் சிவப்பு!

அவர்களுக்கு பெருமையோ பெருமை.

பிறந்ததிலிருந்த மண்டையில் ஏற்றினர்,

"உன்னைப்போல சிவப்பு யாருமில்லை!"

கூப்பிட்டால் நம்மிடம் வரமாட்டார்கள்.

அவர்கள் யாருடனும் பேசக் கூடாது. :nono:

வெளியில் சென்று விளையாடக் கூடாது.

அப்பா, அம்மாவோடு தான் போகவேண்டும்.

அவர்கள் மட்டும் வெளியே போகும்போது

இவர்களை வீட்டில் வைத்து வெளியே

பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போவர்.:help:

இதன் பலன்...எப்படிப் பழகவேண்டும் என்றே

அந்தக் குழந்தைகளுக்குத் தெரியவில்லை.:peep:

தங்கம் எப்போது கைதியாகச் சிறை இருப்பதுபோல்

இந்தக் குழந்தைகளும் சிறையிலேயேஇருந்தனர்.

திருமணம் ஆன பின் என்ன நடக்கின்றது???:noidea:

கணவர்களும் வெளியே பூட்டிக்கொண்டு செல்கிறார்களா!!!
 
Quotes by Alexander pope.

Nor God alone in the still calm we find, :nono:
He mounts the storm, and walks upon the wind.

Pleasures are ever in our hands and eyes.:hungry:

A wit's a feather, and Chief a rod;
An honest Man's the noblest work of God.
:hail:
 
# 139. நானும், சினிமாவும்.

தூங்குவதற்கும், திரைப்படம் பார்ப்பதற்கும்,

நிறைய யோகம் வேண்டும், ஐயமில்லை.

"முதல் நாள் முதல் ஷோ" பார்
ப்பதையே

வாழ்வில் குறிக்கோளாகக் கொண்டவர்கள்

நடுவில் நாம் வாழ்ந்தாலும், அப்படிப்பட்ட

Lofty ideals இதுவரை எனக்குக் கிடையாது.

கல்லூரி ஆசிரியராக இருக்கும் போது

சக ஆசிரியர்களுடன் சென்றேன் ஒருநாள். :flock:

அன்று அம்மா, அப்பா என்னைத் தேடித்

தியேட்டருக்கே வந்து விட்டார்கள்.

எதோ தவறு செய்து விட்டது போல ஒரு

குற்ற உணர்ச்சி தோன்றியது எனக்கு.

அது போல அதற்குப் பிறகு நான் ஆசிரிய

நண்பிகளுடன் படத்துக்குச் செல்வதில்லை.

மணமான பிறகு இவருடன் கோவையில்

படம் பார்க்கச் சென்றால், அங்கேயும் "ஜம்"மென்று

தாய் மாமா தியேட்டருக்குள் வந்து

பாதி படத்தில் வெளியே அழைத்துச் சென்றார்.

குழந்தை பிறந்த பின் திரைப்படம் சென்றால்

அவன் aisle வழி நடந்து சென்று நொடியில்

வெள்ளித் திரையையே அடைந்துவிட்டான்!

கொஞ்சம் வளர்ந்தபின் "அம்மா! ஆய்!"

டாய்லெட்டுக்கு அவசரமாக அழைத்துச் சென்றால்

"
அம்மா! நான் சும்மாச் சொன்னேன்!"

என்று கண்ணன் போலக் குறும்பாய் சிரிப்பான்,

திட்டவும் மனம் வராது. :baby:

திரும்பிச் செல்வதற்குள் பல சீன்கள் கோவிந்தா!

மறுபடியும் அவன் உள்ளே வரமாட்டான்.

அவனுக்கு அங்கே வெளியே நிற்கவேண்டும்.

எனக்கு உள்ளே படம் பார்க்கவேண்டும்.

அவன் கையைப் பிடித்துக் கொண்டு நிற்பேன்,

நான் தியேட்டரின் உள்ளே....

அவன் தியேட்டரின் வெளியே....

"அப்படியாவது படம் பார்க்கவேண்டுமா?" :nono:

அதுவும் நின்று போனது மெல்ல மெல்ல.

பல வருடங்களுக்குப் பின் பலமுறை

காலரி சீட்டில் அமர்ந்து,

ஓசித் தெலுங்குப் படம் பார்க்க மட்டும்

நல்ல யோகம் இருந்தது!
:thumb:
 
# 140. "உங்களுக்கு அவளைப் பிடிக்காது!"

நல்ல நீளமான தலை முடி இருந்தது.

அழகான முகலக்ஷணம் இருந்தது.

ஆனால் தவற்றை ஒப்புக் கொள்ளும்

மாணவ மனப்பாங்கு இல்லவே இல்லை.

தவற்றைச் சுட்டிக் காட்டினால்...... !

அவள் அம்மாவுக்கும் கோபம் வரும்!

அந்தப் பெண்ணுக்கும் கோபம் வரும்!

"அத்தனை பேர்கள் பார்க்கின்றார்கள்.

யாருமே ஒரு தவறு கூடச் சொல்வதில்லை.

நீங்கள் மட்டும் எப்போதும் தவறு சொல்கிறீர்கள்.

உங்களுக்கு அவளைக் கண்டால் பிடிக்காது."

மற்றவர்கள் வெறுமனே பார்ப்பதற்கும் :violin:

ஆசிரியையாக நான் பார்ப்பதற்கும் :nerd:

நிறைய வேறுபாடு உள்ளது என்று

அவர்களுக்குப் புரியவேயில்லை.

தவறுகளைக் கண்டு பிடித்து அவற்றை

திருத்துவது என் வேலை அல்லவா!

அதற்குத் தானே சம்பளம் தருகின்றார்கள்?

கோபத்தில் வகுப்பையே புறக்கணித்தார்கள். :bolt:

நஷ்டம் யாருக்கு? எனக்கா? அவர்களுக்கா?

நான் நல்ல மாணவியை இழக்கவில்லை.

அவர்கள் நல்ல ஆசிரியை
யை இழந்தார்கள்.:pout:
 
I wish I loved the human race;

I wish I loved its silly face; :loco:

I wish I liked the way it walks;

I wish I liked the way it talks; :blabla:
And when I am introduced to one, :tea:

I wish I thought what jolly fun! :rolleyes:

Sir Walter Raleigh.
 
# 141. The perfect elope.

அவள் என் மாணவிகளில் மிகச் சிறந்தவள்.

தசாவதாரம் SPECIALIST அவள் தான்!

ஒல்லி உடம்பும், சுருட்டை முடியும்

பேசும் அழகிய கண்களும் கொண்டவள்.

எவ்வளவு நன்றாக ஆடினாலும் அவள் அன்னை

"இன்னமும் நன்றாக ஆடவேண்டும்!" என்பார்.

தந்தையும் தாயும் அவளை போஷித்தனர்.

அண்ணனும் அவளை மிகவும் நேசித்தான்.

இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது.

அப்பா ஸ்கூட்டரில் சென்று இறக்கி விடுவார்.

மாலையில் வந்து தன்னுடன் கூட்டிச் செல்வார்.

அவ்வளவு அமைதியாக இருந்தாள்.

"இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா?"

இறுதி ஆண்டில் ஒரு நாள் அவளைக் காணவில்லை.

யாருக்குமே அங்கே தெரியவில்லை

அவளுக்கு என்ன ஆயிற்று என்று!

"போலீசிடம் சொல்வதா? நாமே தேடுவதா?

kidnapping செய்து விட்டார்களா?

அவளே எங்கேனும் சென்றுவிட்டாளா/' என்று!

ஒரு வாரம் கழித்து ஒரு கடிதம் வந்தது.

"என் மனம் கவர்ந்தவனுடன் சென்று விட்டேன்!

என்னை நீங்கள் தேடி வர வேண்டாம்.

என்னை முற்றிலும் மறந்துவிடுங்கள்!"

இன்று வரை தெரியவில்லை அவள்...

யார் யாருடன் பழகினாள்?

எப்போது அவனுடன் பழகினாள்?

எங்கே
அவனுடன் பழகினாள்?

எப்போது perfect elope திட்டமிடப் பட்டது? :noidea:

பொத்திப் பொத்தி வளர்ப்பவர்களுக்கு

எச்சரிக்கை மணி அடித்தனர் அவர்கள். :moony:

கட்டுப்பாடு :nono: அதிகமாகும்போது அதை

உடைப்பதில் ஆர்வம் அதிகரிக்குமோ? :ballchain:
 
# 142. EXTEMPORE.

பேசுவதில் பல வகைகள் உண்டு.

திட்டமிட்டுப் பேசுவது ஒன்று.

திட்டம் இடாமல் பேசுவது ஒன்று.

திட்டம் இட்டுப் பேசும்போது

பேச்சைத் தயாரிப்பது சுலபம்.

தலைப்பும் தெரியும் நமக்கு.

தரப்பட்ட நேரமும் தெரியும்.

EXTEMPORE என்னும் திட்டமிடாத

பேச்சு பலருக்கு மிகவும் கடினம். :fear:

அப்போதே தலைப்பைத் தருவார்கள்.

சில மணித் துளிகள் பேச்சைத் தயாரிக்க.

சில மணித் துளிகள் பேசுவதற்கு.

நிறையப் படிப்பவர்களுக்கு மட்டுமே :nerd:

இது சாத்தியம் ஆகும் என்பது உண்மை.

இதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு

specialize செய்தவர்களில் ஒருவன் என் மகன்

U.S. Citizen ஆனபோது அந்தக் கூட்டதில்

பேச அழைத்தனர் ஆர்வம் உள்ளவர்களை.

பெண்கள் விரும்பி வந்து பேசினார்கள். :blabla:

ஆண்களில் பேசியது இவன் ஒருவனே!

EXTEMPORE பயிற்சி பலன் அளித்தது.
:thumb:
 
Quotes by Theodore Roosevelt.

Men who form the lunatic fringe in
all reform movements. :whoo:


Don't hit at all if it is honorably possible to

avoid hitting; :nono:

but never hit soft! :high5:

It is better to be faithful than famous.
:decision:
 
# 143. A Picnic to the zoo.

L.K.G. குழந்தைகளை அழைத்துச் சென்றனர்

ஒரு நாள் பிக்னிக் zoo வுக்கு அவர்கள் பள்ளியில்.

அவிழ்த்த நெல்லிக்காய் மூட்டை போல

ஆளுக்கு ஒரு பக்கம் இவர்கள் ஓடுவார்களே!

எப்படி சமாளிப்பார்கள் ஆசிரியைகள் ???

மகன் திரும்பி வரும் வரை ஒரே கவலை தான்!

"எப்படி எல்லோரும் பத்திரமாக வந்தீர்கள்?" என்றால்

"ரயில் வண்டி போல ஒருவர் தோளை ஒருவர்

பிடித்துக் கொண்டு பெரிய லைனில் போனோம்!"

நல்ல யோஜனை தான். வால்ப் பசங்களை மேய்க்க.

பிறகு தெரிந்து கொண்டேன் இந்த உண்மையை.

There is safety in numbers!

குரூப்பாகப் போகும் போது எல்லோரும் safe !

இலவச கண்முகாமில் சிகிச்சை செய்துகொண்ட,

ஒரு கண் கட்டுப் போட்டு மறைக்கப்பட்ட, :cool:

தடி ஊன்றிய, தலை நரைத்த, பொக்கை வாய்க் :crutch:

கிழவர்கள், கிழவியர்கள் செய்த சாதனை...???

நன்றாகக் கண் தெரியும், நன்றாக நடக்கும்,

இளையவர்களே நடக்க அஞ்சும்

அந்த அகன்று பரந்து விரிந்த சாலையினை

பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே கடந்தது தான்.

ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டு

மனிதச் சங்கிலி போல அவர்கள் நடந்த போது :flock:

அத்தனை பஸ்களும், லாரிகளும், மற்றவையும்

அசையாமல் இரு புறமும் நின்று இருந்ததை

இன்னமும் என்னால் மறக்கவே முடியவில்லை! :shocked:
 
# 144. கள் அப்பம் !!!

கணிதம் டியூஷன் கிளாஸ் அது!

"கெக்கே பிக்கே" என்று சிரிக்கும் :pound:

மாணவியிடம் கோபமாகக் கேட்டேன்,

"கள் குடித்துவிட்டு வந்து இருக்கிறாயா

இன்று இந்த டியூஷனுக்கு?"என்று.

"கள் அப்பம் மாலையில் சாப்பிட்டேன்!" :hungry:

என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறாள்!

கள் எந்த ரூபத்தில் உடலில் சென்றால் என்ன?

அதன் குணத்தைக் காட்டாமல் இருக்குமா என்ன?

இப்படியெல்லாம் கூடவா டிபன் செய்வார்கள்! :mmph:

அதுவும் படிக்கும் குழந்தைகளுக்குத் தருவதற்கு? :doh:
 

This is adding insult to injuries. :frusty:
Edward Moore.

All reformers are bachelors.
:moony:
George Moore.

Yet, who can help loving the land that has taught us, :cheer2:

Six hundred and eighty-five ways to dress eggs?
:rolleyes:
Thomas Moore.
 
# 145. "எனக்கு வித்துக் காசாக்கத் தெரியாது!"

இனாமாகக் கற்றுத் தந்தால் விலை இல்லை!

ஒழுங்காக வகுப்புக்கு வரமாட்டார்கள்!

குறைந்த பட்சம் ஃபீஸ் தான் எல்லோருக்குமே!

Nominal ஃபீஸ் என்றே சொல்லலாம்.

அதற்கே மூக்கால் அழுபவர்கள் "தனவந்துலு!"

அவர்கள் வகுப்புக்கு என் வீட்டுக்கு வராமல்

எனக்கு 'absent மார்க்' போடும் ஜாதியினர்!

"நானும் தான் பாட்டுப் படித்தேன்!

எனக்கு உங்களைப்போல அதை

வித்துக் காசாக்கத் தெரியவில்லை!" :caked:

வித்துக் காசாக்க வேண்டுமென்றால்

அதை வாங்குவதற்கு யாரவது வரவேண்டுமே!

அதை மறந்து விட்டுப் பே(ஏ)சுவார்கள்.

நான் சூழ் நிலையின் இறுக்கத்தைக் குறைக்கப்

பலமுறை இப்படிச் சொல்வதும் உண்டு.

"விற்றுக் காசாகா விட்டாலும் உங்கள்

குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து

டியூஷன் ஃபீசை மிச்சம் செய்யலாமே!

A penny saved is a penny earned ."

அதற்கும் உடம்பும் வணங்க வேண்டும், :couch2:

விஷயமும் தெரியவேண்டும் அல்லவா?

கலையை விற்றுக் காசாக்கியதாகக்

குற்றம் சாட்டினவர் செய்வது என்ன?

"காடாறு மாதம் நாடாறு மாதம்" என்று

இந்தியாவிலும், அமெரிக்காவிலுமாக

மருமகன் செலவில் சுகமாக வசிப்பதும்,

வருடம் தவறாமல் ஆகாயத்தில் பறப்பதும்! :plane:

கலையை விற்கும் அளவுக்கு புலமை இருந்தால்

சும்மா இருந்திருப்பாரா இந்த மாது சிரோன்மணி??? :rolleyes:
 
# 146. Frog race.

தமிழ்ச் சங்கம் ஒன்று நிறுவினோம்

தமிழ் வளர்ப்பதற்கு விசாகாவில்.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும்

கலை நிகழ்ச்சிகள், போட்டிகள்!

அந்த முறை frog race நடந்தது.

சின்ன மகனுக்கு அதில் முதல் பரிசு. :first:

அவன் பரிசுக்காக அங்கே நிற்காமல்

விளையாட ஓடிவிட்டான் நண்பர்களுடன்.

நான் பரிசை வாங்கச் சென்றால்

"தவளை போலத் தத்தி வந்தால் பரிசு!"

என்கிறார் விழாவின் சிறப்பு விருந்தினர்.

"நீங்களே அதை எடுத்துக் கொண்டு

வீட்டுக்குத் தத்தித் தத்திச் செல்லுங்கள்" :frog:

என்று கூறி என் இருக்கையில் அமர்ந்து விட்டேன். :hand:

பிறகு அவரே கீழே இறங்கி வந்து என்னிடம்

பரிசையும் தந்து மன்னிப்பும் கேட்டார். :sorry:

தலைவர் என்றால் தலை nut கழன்று விடுமா???

 
Science is for those who learn,
Poetry for those who know. :sing:

We love justice greatly, and just men but little.

Evil often triumphs, but never conquers.:high5:

The egoist does not tolerate egoism.:mmph:

Friends are rare for the good reason that men are not common. :shocked:

Joseph Roux.
 
Hello madam, not trying to contradict you. We love justice if it is in our favour. In today's world 'just men' are museum pieces. Evil lives on and on and good triumphs when evil ages near death. Puranic stories or today's serials/stories tell this eloquently. I always wonder why villains are paid less for toiling in the whole story when the dumb 'hero' is fated to win only at the end.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top