கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 64
பற்பல சாகசங்கள் செய்தபடி, திமிங்கலங்கள் சுற்ற,
பற்பல போட்டோக்களும், வீடியோக்களும் எடுத்து,
எல்லோரும் சுறுசுறுப்பாகப் படகைச் சுற்றி வந்திட,
எல்லோரின் முகமும் மலர்ந்து, சந்தோஷம் காட்டிட,
நண்பர்களைப் போல, வாலால் திமிங்கலங்கள் பல,
நட்புடன் 'டாடா' காட்ட, படகு தன் திசை திருப்பியது!
போகும்போது சென்ற வேகத்தைவிட, கரை நோக்கி
வரும்போது, வேகம் அதிகம் பிடிக்க, பலரின் Coat கள்
காற்றில் படபடக்க, குளிர் அதிகமாகி உடல் நடுங்க,
காற்றின் வேகத்தில், குட்டிக் காமராக்களும் பறக்க,
என்றாலும் போட்டோ எடுக்க மனம் விழைய, நான்
சென்றேன் படகின் பின் பகுதிக்கு, ஆவல் மேலிட.
தூரத்தில் தெரிந்தன வேறு சில படகுகள்; இத்தனை
தூரம் வந்துள்ளன, எங்களைப்போல whales காண!
வரும் வழியில், தெளிந்த வானத்தில், மேலே பறந்தன,
பெரும் ஓசை எழுப்பியபடி, ஆகாய விமானங்கள். ஒரு
நிமிடத்தில் இரண்டு, மூன்று என மேலெழுந்தன; சில
நிமிடங்களில், கண்களை விட்டு மறைந்தன. மீண்டும்
பெரிய கப்பல்கள் இரண்டு செல்ல, அவற்றைப் பார்த்து,
அரிய Titanic கப்பல் மனதிலே நிழலாடியது, அப்போது!
எட்டினோம் கரையை; ரயிலில் ஏற நடக்கும்போது, ஒரு
கட்டிடத்தின் உச்சியில், 'வெட்டுக்கிளி'யின் உருவத்தை
திசை காட்டியுடன் இணைத்ததைக் கண்டு, படமெடுத்து,
இதை, போகும்போது பார்க்கவில்லை என்றும் எண்ணி,
நிறைவான நல்ல அனுபவம் அமைந்ததற்கு, மகிழ்ந்து,
இறைவனை எண்ணியபடி, இனிய இல்லம் சேர்ந்தோம்!
:dance: . தொடரும் ....................