• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 68

spiderman.jpg


இந்தப் படத்தை ஏன் போட்டேன் என யோசனையா?

இந்த மாதிரி உடையில் வந்தார் ஒரு மனிதர்; எங்கே?

ஒரு சிறுவனின் பிறந்தநாள் விழாவில்! அங்கு வந்த
சிறுவருடன், பெரியவரையும் நன்றாக மகிழ்வித்தார்.

புயல் மழை எச்சரிக்கை வந்துவிட்டதால், அவர்கள்
புல்வெளியில் விளையாட்டுக்கள் வைக்கவில்லை.

தங்கள் வீட்டின் கீழ்த்தளத்தில், Spiderman வர ஏற்பாடு;
எங்களுக்கு ஆச்சரியம் அவர் என்ன செய்வார் என்று!

பிறந்தநாள் சிறுவன் யார் தெரியுமா? சென்ற மாதம்
இரண்டு விஷமங்கள் வந்ததே! அதிலே பெரியவன்!

மாலை வருமென எண்ணிய மழை, நாலு மணிக்கே,
'வேலை எனக்கு இப்போதே ஆரம்பம்' என்பது போல,

புறப்படும் சமயம் பெய்யத் தொடங்கியது. எப்படியும்
புறப்பட வேண்டும் என்பதால், நேரம் கடத்தவில்லை.

நண்டு சிண்டுகள் நிறையக் கூடியிருக்க, வாசலில்,
நண்டு சிண்டுகளின் காலணிகளுடன், பெற்றோரின்

காலணிகளும் நிறைந்து வழிய, அவற்றைத் தாண்டி,
நாலரை மணிக்கு Spiderman ஆஜர் ஆனார், சிரிப்புடன்!

முழுவதும் மூடிய உடையில், துணி வழியே பேசினார்!
குழுமிய குழந்தைகள் சிலர் வீரிட, மேலும் சிரித்தார்.

மேஜிக் ஷோ ஆரம்பித்ததும், வீறிட்ட குழந்தைகளும்,
மேஜிக் காணும் ஆவலில், பயத்தை மறந்தனர். அவர்

தொப்பி ஒன்றில் கைக்குட்டையை வைத்து, மந்திரம்
ஒப்பித்து, நீளமான கலர் ரிப்பன்களாக மாற்றிவிட்டார்.

புள்ளிப் பையில் வைத்த, வெள்ளை கறுப்புத் துணிகள்
புள்ளி வைத்தவையாக மாற்றிக் காட்டி அசத்தினார்.

வெறும் தாளாக இருந்த புத்தகத்தில், படங்கள் வந்தன;
வெறும் படங்கள், கலர்ப் படங்களாகவும் மாறிவிட்டன!

:juggle: தொடரும் ...............
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 69

தன் மாஜிக்கை Spiderman தொடர, குழந்தைகள்

தம்மை மறந்து, கைகளைத் தட்டி மகிழ்ந்தனர்!

காலியான டப்பாவை மூடி, மந்திரம் சொல்ல,
ஜாலியாக எழுந்தது 'ஸ்பாஞ்ச்' கேக்! அதனை

நிஜம் என்று நம்பி, ஒரு சிறுமி உண்ணக் கேட்க,
நிஜமானது அப்புறம் கிடைக்கும் எனச் சொல்லி,

கடைசி நிகழ்ச்சியாக, பலூன் பொம்மைகள் பல
கடை விரித்துச் செய்ய ஆரம்பித்தார். எவருக்கு

எந்த பொம்மை, எந்தக் கலரிலே வேண்டுமோ,
அந்தப் பொம்மையை மிக அழகாகச் செய்தார்.

எத்தனை தன்னம்பிக்கை இருந்தால், இதுபோல்
அத்தனை பொம்மைகளையும் செய்ய முடியும்!

ஒரு சிறுமி ஊதா, பிங்க் வண்ணங்களில், நல்ல-
தொரு வண்ணத்துப் பூச்சி கேட்க, உடனே தயார்!

அடுத்த சிறுமியை, அதேபோல வேண்டுமா என
எடுத்துக் கேட்க, அவள் வேண்டாமெனக் கூறி,

இரு பலூன்களைத் தானே எடுத்துத் தர, அதன்
இரு வண்ணங்களும், முதல் சிறுமியுடையதே!

இதற்கிடையில் ஒரு வாள் (!) உடைந்து பறக்க,
அதற்கு அழ ஆரம்பித்தான் ஒரு சிறுவன்; அதை

கண்டவுடன், மீண்டும் வாள் ஒன்று தயாரானது;
கண்கள் மின்ன அதை வாங்கினான் சிறுவனும்!

எல்லாக் குழந்தைகளும் Spiderman ஐச் சுற்றியே,
நல்ல பிள்ளைகளாக அமர்ந்தது அதிசயமேதான்!

இதன் பின் கேக் வெட்டும் வைபவம் ஆரம்பித்தது;
இதில் ஒரு வேடிக்கை நடந்தது! மெழுகுவர்த்திகள்

நான்கை ஏற்றி வைத்தவுடன், சின்னவன் வந்தான்;
நான்கையும் ஊதி, அவற்றை அணைத்துவிட்டான்!

பெரியவன் முகம் உடனே வாட, சமாதானம் செய்து,
சிறியவனிடம், 'அண்ணாவின் சான்ஸ்' எனக் கூறி,

மீண்டும் நான்கையும் ஏற்ற, 'பிறந்த நாள்' பிள்ளை,
மீண்டும் அவற்றை அணைத்துக் கை தட்டினான்!

:party: . . . :dance:

தொடரும்.......................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 70

சிங்காரச் சென்னையில்தான் 'நிஷா' வருமென்றால்,

இங்கே வந்த பின்னும் 'ஐரீன்' துரத்துகிறது! ஞாயிறு

காலை, பாஸ்டனில் புயல் வருமென்று அச்சுறுத்தல்!
காலை எழுமணிக்கும் கூட, இருட்டாகவே இருந்தது!

விடியோ எடுக்க, Deck அருகிலுள்ள கதவைத் திறக்க,
நொடியில் பெருங்காற்று அடிக்க, அடுத்திருந்த கதவு

திடீரென்று அடித்து மூடிட, அந்த அதிர்விலே, விழுந்து
சிலீரென்று உடைந்தது, சுவற்றில் மாட்டிய கண்ணாடி!

சென்ற மாதம், கண்ணாடி பொம்மையை உடைத்தேன்;
இந்த மாதக் கணக்கு இதுதான் என்று எண்ணினேன்!

வாசலில் செல்லுவதே சாலச் சிறந்தது என நினைத்து,
வாசலில் சென்று சில விடியோக்கள் எடுத்தேன். இங்கு

மோசமான விளைவுகள் அதிகமாக இல்லை; ஆனால்
மோசமாகப் பல இடங்கள் தாக்கப்பட்டன, புயலினால்!

தொலைக்காட்சியில் பார்த்தும், நடுங்கிப் போயிற்று!
தொலை தூரத்தில், எத்தனை பேருக்கு பாதிப்பு என்று!

அன்று கிழக்குக் கடற்கரையில் 10,000 விமானங்கள்,
நின்று போயின பறக்காது, ஐரீன் புயலின் உபயத்தால்!

இரண்டு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது இங்கு;
இரண்டு மணி நேரமும் இன்டர்நெட், போன் இல்லை.

பெரிய சேதம் பாஸ்டனில் இல்லாதது அதிருஷ்டமே;
பெரிய காற்றுடன் புயல் கடந்தது, எங்களுக்கு நலமே!

:peace: தொடரும்................
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 71

புயலுக்குப் பின் அமைதியோ அமைதி வந்தது;

புயல் இருந்த எந்த அடையாளமுமே இல்லை!

ஞாயிறு இரவு, கூரையை மறைத்த இலைகள்,
ஞாயிறு மறுநாள் உதயம் ஆனபோது, இல்லை!

காற்றில் பேயாட்டம் ஆடிய செடிகளெல்லாம்,
காற்று தென்றலாய் மாற, மிக அமைதியாயின.

பிரகாசமாக ஆதவன் வெளிவர, செடி மரங்கள்,
பிரகாசமான பச்சையில் மிளிர்ந்திட, வீதிகளும்

கொட்டிய இலைகள் ஏதும் இன்றி, கண்ணுக்கு
எட்டிய தூரம் வரையில், சுத்தமாகக் காட்சி தர,

எப்போதும்போல வீட்டுக் குப்பைகளை அகற்ற
தப்பாது வண்டிகளும் வந்து செல்ல, நேற்றைய

நிகழ்வுகள் கனவா, இல்லை நினைவா என்றே
நினைத்தேன்! விடியோக்களே ஐயம் தீர்த்தன!

சுற்றத்தார் பலர் தொலைபேசியிலே விசாரிக்க,
சுற்றி வந்தன மனதில், அவர்களின் நினைவும்.

வேறு வேலைகள் இல்லாததால், திராக்ஷைச்
சாறு பிழிந்து, ஜூஸ் செய்ய முயல, ருசி மிக்க

பானமாக இருக்க, மேலும் அறுவடை செய்து,
தாகமான வேளை அருந்த Concentrate ஜூஸ்

செய்து, குளிர்சாதனப் பெட்டியில், பாட்டிலில்
வைத்துவிட முடிவு செய்தேன்; விசாகையில்,

மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் கற்றது, இன்று
மகன் வீட்டில் உள்ளபோது, உபயோகமாகிறது!

என்றோ கற்ற தட்டெழுத்து, இன்று உதவுகிறது!
என்றோ கற்ற சமையல் பாடம், அதுபோலவே!

தொடரும் ....................
 

ஞாயிறு இரவு, கூரையை மறைத்த இலைகள்,
ஞாயிறு மறுநாள் உதயம் ஆனபோது, இல்லை!

DSCN6630.JPG


காற்றில் பேயாட்டம் ஆடிய செடிகளெல்லாம்,

காற்று தென்றலாய் மாற, மிக அமைதியாயின.

DSCN6628.JPG



 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 72

மகனின் பிறந்தநாள், பெண்ணரசியை மணந்த நாள்,

எங்கள் மணநாள் எல்லாம், பத்து நாட்களுக்குள்ளே!

எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஒரே நாள் கோவிலில்,
எல்லா தெய்வங்களையும் வழிபட எண்ணினோம்!

ஆஷ்லாண்டில் உள்ள லக்ஷ்மி கோவில் சென்றுவர,
ஆசையுடன் புறப்பட்டுச் சென்றோம். நல்ல கூட்டம்.

சென்ற முறை காணாத கற்கள் வைத்த நகைகள் பல,
இந்த முறை ஐயப்பன் சுவாமிக்கு அணிவித்துள்ளார்!

ஐயப்பன் புதிய நகைகளால் மின்ன, அதனை அடுத்த
ஐங்கரன் சன்னதியும் அலங்காரத்தால் சிறந்திருக்க,

பட்டுடை உடுத்தி, லக்ஷ்மி தேவி பரிமளிக்க, அருகில்
பட்டுடை உடுத்திய வெங்கடசலபதி அருள் பாலிக்க,

நடராஜர், அம்பாளுடன் நடனக் கோலத்தில் இருக்க,
நடனமாடும் மயில் வாகனத்தில் முருகன் விளங்க,

தங்கக் கவசத்தில் ஆஞ்சநேயர் திகழ, இரு பெண்கள்
தங்கள் பங்காக, வண்ணப் பூ மாலைகளைக் கட்ட,

சிவப்பு நிறச் சேலைகள் உடுத்திப் பெண்கள் உலவ,
அதற்குக் காரணம், துர்கா பூஜையே என்று கூறினர்.

பாசிமணிகள் பல கழுத்தில் அணிந்து, பச்சை நிறப்
பாசிமணிகளை, பூணல் போலக் குறுக்கே அணிந்து,

அலங்காரக் கொண்டைகளில் பூக்களையும் வைத்த,
அலங்காரப் பிரியைகள் பலரை, அங்கு பார்த்தோம்!

ஆரத்தித் தட்டுடன் சிலர் கல்பூரம் காட்டத் தொடங்க
துரத்தி வந்த வயதான பூசாரி அவர்களைத் தடுக்க,

கூட்டமாய் சுற்றி அமர்ந்து பாடியபடி, சில பெண்கள்
ஆட்டமும் ஆடி, தம் மகிழ்ச்சியை வெளிக் காட்டினர்.

:grouphug: . . :dance:

தொடரும் ......................
 
hi RR,
i think they are nepaleese women....they do themselves.....red os very important dress.....its called hariyali theej....its called

swarna gowri vrtam....it comes before vinayaka chathurthi day.....some call as kevda theej in gujarati tooo...we lost power

for last 4 days in east coast ...due to hurricane IRENE....evem internet was down.....hows boston area?....i heard that

new england states suffered a lot.....

regards
tbs
 

By God's grace, nothing much happened in our area. Had the 'power cut' for a few hours (internet and phone were

down too). Hope you viewed the two video clipping I posted. They were 'shot' from the front portion of my son's
residence. Thanks a lot for your concern! :yo:

 

கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 73

இந்தக் கோவிலுக்கு வந்தபோதெல்லாம் இங்கு

வந்த நண்பரைப் பார்ப்பது வழக்கம் ஆயிற்றே!

புதிய மாமி ஒருவர் என்னைப் பார்த்துச் சிரிக்க,
புதிய நட்பு என்று எண்ணி, அருகில் சென்று பேச,

அவர்கள் ஹைதராபாத்திலிருந்து வந்தவர்கள்;
அவர்கள் பேத்தியின் வயது மூன்று மாதங்கள்;

எங்கள் மகனுடன் முன்நாள் டென்னிஸ் ஆடிய,
எங்கள் இல்லத்தின் அருகில் வசிக்கும், பழைய

நண்பனின் மனைவியின் பெற்றோர் என்பதை
நாங்கள் அறிந்து, நலம் விசாரித்து, பரஸ்பரம்

வீட்டிற்கு வர அழைப்பு விடுத்து, விடைபெற்று,
வீட்டிற்கு வருமுன், உணவு விடுதி சென்றோம்.

Dosa Temple என்ற பெயர்ப் பலகையைப் பார்த்து,
தோசைக்கு ஒரு கோவிலா என்று வியந்தோம்.

தோசை வகைகள் மட்டுமின்றி, வேறு பலவும்
ஆசையாக உண்ண, செய்து கொடுக்கிறார்கள்.

பத்து டாலருக்குக் கீழே விலைகள்; ஒருவருக்கு
பதினைந்து டாலர் செலவில், வயிறு நிறையும்!

மதுரைக்காரன் பரிமாறிய இளைஞன் என்றதும்,
மதுரைக்காரர் என்னவர் முகத்திலே மந்தகாசம்!

இரவு உணவை முடித்து, நல்ல மன நிறைவுடன்,
இரவு பத்து மணிக்கு இனிய இல்லம் வந்தோம்.

வரும் வழியில், மூன்றாம் பிறை நிலா தெரிந்தது;
அரும் தோற்றமாக ' ) ' வடிவில் அது மயக்கியது!

:pray2: . . . :popcorn:

தொடரும் ..............................


 
Yesterday was a scary day for us in Woburn, Boston. My write up will follow this soon.

This happened in our neighbourhood:

A manhunt is underway for suspects involved in the shooting of a Woburn police officer at Musto Jewelers at the

Four Corners intersection, according to police.
Patrolman Robert DeNapoli was taken to Lahey Clinic where his

condition is currently under evaluation, according to Steve Danehy, director of media relations for the hospital.


The Four Corners intersection remains closed and a command center has been set up there by the Middlesex

Sheriff’s office. Police officers are also searching door-to-door in the neighborhood.


SWAT teams, state police and police from surrounding communities, including Wakefield, Lexington, Billerica,

Burlington, Waltham, Lincoln and Wilmington are at the scene.
Initial reports say there was a gunfight between

police and three or more suspects shortly after 11 a.m on Tuesday. The jewelry store is located on the second floor

of a strip mall at 186 Cambridge Rd.


One of the suspects was reportedly shot and apprehended near 180 Lexington St. Another suspect may have been

apprehended near the intersection of Cambridge Road and South Bedford Street.


Police are advising people who live in the area to lock their doors. Two schools in the area -- the Joyce School

(grades 6-8) and the Reeves School (grades K-5) are in lock down. Students are not in the buildings as school

doesn’t start until later in the week, but teachers and support staff are there.


A K-9 team reportedly found a mask near the scene.
There are reports that one of the suspects was taken to Lahey

Clinic by ambulance for a gunshot wound to the abdomen.
Rick Capobanco, an eyewitness at the scene, said he

heard three gunshots, then a pause, and then another three gunshots: one which may have ricocheted off a nearby

building.

:scared:

 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 74

அமைதியாகச் சென்ற சில நாட்களை அடுத்து,

அமைதியைக் குலைத்திடும் நடுக்கம் வந்தது!

நில நடுக்கமும், சுழலும் சூறாவளியும் போய்,
மன நடுக்கம் தரும் ஒரு சைரன் ஒலி கேட்டது!

மதியம் கண்ணம்மாவை, அருகிலே இருக்கும்
புதிய விளையாட்டுக்கள் காட்டும் இடத்திற்குச்

செவ்வாய்தோறும் அழைத்துச் செல்லுவதுண்டு.
செவ்வாய் அன்று, காலை பதினோரு மணிக்கு,

தொடர்ந்து சைரன் போல ஒலி கேட்டது; அதைத்
தொடர்ந்து பல சைரன்கள் ஒலிக்க, ஏதோ ஒரு

விபத்து நடந்ததோ என ஐயப்பட்டோம்! ஆனால்,
விபத்து நடந்தால், இத்தனை ஆம்புலன்ஸ்களா?

ஒன்றுமே புரியாது தவித்தபோது, தொலைபேசி
ஒன்று வந்து, விளக்கம் தந்தது! அடுத்த வீட்டில்

இருக்கும் பஞ்சாபிப் பெண்மணிக்கு, போலீசிலே
இருந்து எச்சரிக்கை வந்ததாம் - போலீஸ் ஆபீசர்

ஒருவரை திருடன் ஒருவன் சுட்டதாகவும், மேலும்
இரு திருடர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும், அதனால்,

யாரும் வீட்டிலிருந்து வெளியே செல்லக் கூடாது;
யார் வந்தாலும் கதவைத் திறக்கக் கூடாது, என்று.

நடந்ததைச் செய்தியில் அறிந்தோம்:

ஒரு போலீஸ் ஆபீசர், நகைத் திருடர்களை எதிர்க்க,

ஒரு திருடன் அந்த ஆபீசரைச் பல முறை சுட்டுவிட,

ஆபீசருக்கு குண்டடி பட, அவனும் குண்டு பாய்ந்து
அடிபட்டு விழ, ஒரு பெண்ணும், ஒரு ஆணும் என்று

இரண்டு திருடர்கள் தப்பி ஓடிவிட, அந்த இடத்திலே
திரண்ட போலீஸ்கார்கள், சுற்றி உள்ள சாலைகளை

வாகனங்கள் செல்ல முடியாதவாறு அடைத்துவிட,
வாகனங்களில் வந்த பலர், வீடு சேரவே இயலாது,

தவிக்க, வீடுகளை விட்டு வெளியே செல்லத் தடை
விதிக்க, எங்கள் பகுதியே அன்று அல்லாடி நின்றது!

:ballchain: . . .
:scared:
 
hi RR
this is reaction chain present economical condition of USA....many golden days are gone.....now the situation looklike indian city

conditions......many things to be coming........this is start of new world order.....

regards
tbs
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 75

ஒரு ஹெலிகாப்டர் சுற்றிச் சுற்றி வட்டம் அடித்தது;

இரு திருடர்கள் வேட்டையை, தானும் தொடர்ந்தது!

நகைக்கடைக்காரருக்கு நஷ்டமில்லை; ஏனெனில்,
நகைகள் இருந்த பை, தெருவிலேயே வீசப்பட்டதாம்!

எங்கள் இல்லம் இருக்கும் woburn பகுதியில், இரவு
எங்கள் தூக்கம், பல எண்ண அலைகளால் கெட்டது!

கதைகளில் திருடர்கள் வீடுகளில் நுழைவது போல,
எதை எதையோ நினைத்து மனம் கலங்கிப் போனது!

மகன், அலுவலக வேலையாக இந்தியா சென்றதால்,
அவன் இல்லாத வீடும் வெறிச்சோடிக் கிடக்க, நான்

வீட்டில் ஜன்னல் கம்பித் தடுப்புகளே இல்லை என்று,
வீட்டைப் பற்றிய ஒரு விஷயம் சொல்ல, என்னுடன்

பெண்ணரசியும் சேர்ந்துகொண்டு பயந்து போனாள்!
என்னவரின் நல்ல ஊக்கத்தால், தூங்க முயன்றோம்!

மறுநாள் காலை நல்லபடி விடிய, மீண்டும் நாங்கள்
சிறு பயமும் இன்றி, வேலைகளைத் தொடர்ந்தோம்.

கொத்துக் கொத்தாகக் கிடக்கும் கனிந்த திராக்ஷை,
சத்தான பானத்திற்கு ஏற்றவாறு இருக்க, கொஞ்சம்

எடுத்து வந்து ஜூஸ் செய்ய, அடர் பிங்க் நிறத்திலே,
எடுத்து உடனே பருக, எங்கள் ஆவலைத் தூண்டியது!

எங்களுக்கு உதவும், இரு இந்திய நண்பர்களுக்கும்,
எங்கள் வீட்டு திராக்ஷையில், பானம் தயாரித்தோம்!

:thumb: . தொடரும் ......................
 
O dear! I know stealing is becoming more bolder these days.. in fact, when I lived in NJ.. I think this was in 2009, 10, a friend of mine had gone to pick up her husband from the train station, by the time they came back the whole house was ransacked, they had taken all her jewelry and some cash from the house.. I don't think anything else was taken, as they know now that Indian houses have jewelry and cash.. She was to go to India for a wedding so had brought all the jewelry home.. we all felt bad, not sure if she even recovered any of the stolen goods.. The police have warned not to disclose to anyone any travel plans or info re: jewelry..
 
The jewel thieves seem to bring a 'gold detector' (may be the metal detector ?)
to find out where gold is kept in the house! Mostly they attack houses of Indians. :spy:
 

.........................
எடுத்து வந்து ஜூஸ் செய்ய,
அடர் பிங்க் நிறத்திலே,
எடுத்து உடனே பருக, எங்கள் ஆவலைத் தூண்டியது!

DSCN6686.JPG
 

கொத்துக் கொத்தாகக் கிடக்கும் கனிந்த திராக்ஷை,

சத்தான பானத்திற்கு ஏற்றவாறு இருக்க, கொஞ்சம்

எடுத்து வந்து ஜூஸ் செய்ய, அடர் பிங்க் நிறத்திலே,
எடுத்து உடனே பருக, எங்கள் ஆவலைத் தூண்டியது!

எங்களுக்கு உதவும், இரு இந்திய நண்பர்களுக்கும்,
எங்கள் வீட்டு திராக்ஷையில், பானம் தயாரித்தோம்!

Dear Bushu..... Answer is in the above lines!! :ranger: Grapes from our garden...
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 76

வாழ்க்கையில் சில கலாட்டாக்கள் இருந்தால்தான்,

வாழ்க்கையும் சுவாரசியம் குறையாமல் இருக்கும்!

இந்த வார ஆரம்பத்தில், நகைத் திருட்டுச் சம்பவம்;
இந்த வார முடிவில், சந்தேகப்பட்ட ஒரு சம்பவம்!

அமெரிக்காவில் செப்டம்பர் பதினொன்று வந்தாலே,
அமர்க்களமான சோதனைகள் பற்பல அரங்கேறும்!

இந்தியா சென்று, பத்தாம் தேதி இரவு திரும்பும்போது,
விந்தையான புது அனுபவம் மகனுக்குக் கிடைத்தது!

மேலும் கீழும் நடக்கும் வினோதமான பழக்கத்தால்,
மேலும் கீழும் நடந்துள்ளான், லண்டன் ஏர்போர்ட்டில்.

ஒரு செக்யூரிட்டி அதிகாரி அருகில் வந்து, அவ்வாறு
ஒருவரும் நடக்கவே அனுமதி இல்லை என்றாராம்!

அதற்கு சம்மதித்து, திரும்பும்போது, திடீரென, தன்னை
அழைக்கும் குரல் கேட்டுத் திரும்ப, அங்கே சிரித்தபடி,

நின்றான், நியூயார்க் செல்லும் அவன் அத்தை மகன்;
நின்றான் மகனும், சில நொடிகள் பேச; விமானம் ஏற

நேரம் ஆகிவிட்டதால், இருவரும் பிரிந்து சென்றனர்;
நேராக இதைப் பார்த்த செக்யூரிட்டிக்கு கிலி பிடிக்க,

நியூஸ்போல இதை மேலதிகாரியிடம், சொல்லிவிட்டு,
'நியூயார்க்' விமானத்தில் 'யாரோ' ஏறியதாகச் சொல்ல,

உடனே விமானம் அங்கே நிறுத்தப்பட்டு, அத்தை மகன்
உடனடி சோதனைக்கு உள்ளானான்! தான் சந்தித்தவன்,

தன் மாமா மகன் என்று சொல்லிவிட, பாஸ்டன் வரத்
தன் கைப்பையுடன் ஏறிய மகனுக்கும், வந்தது வம்பு!

தன் விமான Gate அருகில் அமர்ந்து, நேரமானவுடன்,
தன் விமானத்தில் சென்று அமர்ந்ததும், ஓர் அழைப்பு!

தன் பெயரை அறிவித்து, கைப்பையுடன் சோதனைக்கு,
தன்னை வருமாறு அழைக்க, வியந்து போய்விட்டான்!

:scared: . . தொடரும் ..................
 
Last edited:
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 77

அதிகாரிகளில் சிலர் இந்தியர்; சிலர் அமெரிக்கர்;
அதிகாரத்துடன் பையைக் காலி செய்யச் சொல்ல,

வெளி வந்தன, கோவில் விபூதிப் பாக்கெட்; சில
வெளிநாட்டில் கிட்டாத மருந்துகள், நண்பனுக்கு;

இரண்டு சப்பாத்தி ரோல்கள்; Lap top, இன்னபிற!
இரண்டு நிமிடங்களில் புரிந்து போனது, ஒன்றும்

இல்லாத விஷயம், ஒரு திகிலாக மாறிவிட்டது!
இருந்தாலும், கேள்விக்கணைகள் தொடர்ந்தன.

தன் அத்தை மகனின் Official பெயரைக் கேட்டதும்,
தன் யூகம் அதுதான் என்று அவன் பெயரைக் கூற,

முதல் Cousin பெயரிலும் சந்தேகமா எனக் கேட்க,
'முதல் Cousin கள், அப்பா வழியில் பதினேழு பேர்!

அம்மா வழியில் ஆறு பேர்! அத்தனையும் தெரிவது
சும்மா லேசுப்பட்ட விஷயமா?' என்று மகன் கேட்க,

கடும், சுடும் பார்வையுள்ள ஆபீசர்கள் எல்லோரும்,
கடுமை நீங்கிச் சிரித்துவிட்டனராம்! பிழைத்தான்!

இதற்கிடையில், இந்தியாவிலிருந்து அந்த அத்தை,
'இருவரையுமே சோதனைக்கு அழைத்தார்களாமே;

என்னவெனத் தெரியவில்லை!', என்று தொலைபேச,
என்னவென்று தெரியாது, நாங்களும் குழம்பினோம்!

தன் மகன் சொன்ன விஷயம், அவளுக்குத் தெரியாது;
ஏன் இவர்களுக்குச் சோதனை என்பதும் தெரியாது!

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!'
அரண்டு போன அமெரிக்கர்களும், இதே போலவே!

:plane: . . :spy:

தொடரும் ........................
 

When I wrote page 76, the information I got was wrong. It was told that the plane took off to New York from London

Heathrow airport and soon brought back. The correct information is that before the plane took off, our nephew was

interrogated by the security officials! Now, I have made the necessary corrections. :typing:
 
கடல் கடந்த மூன்றாம் அனுபவம் ..... 78

இரண்டு மைல்கள் நடக்க முடியுமா என மகன் கேட்க,
இரண்டு நிமிடங்களிலே தயாரானோம்; புறப்பட்டோம்!

அன்று சென்ற Horn Pond; சுற்றியுள்ள நடைபாதையில்
சென்று நடந்தால், அது இரண்டு மைல்கள் இருக்கும்.

பலர் நாய்களைப் பிடித்தபடி நடக்க, குழந்தைகளைச்
சிலர் வண்டிகளில் தள்ளியபடிச் செல்ல, வேறு சிலர்

சக்கரக் காலணிகளில் உருண்டு செல்ல, சிலர் 'ஜாகிங்'
அக்கறையுடன் செய்தபடி ஓட, சிலர் மீன் பிடிக்க அமர,

நாங்கள் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்த்தபடி,
எங்கள் நடையைத் தொடர்ந்தோம், நடை பாதையிலே.

வாத்துக்களே நீரின் மேல் காணவில்லை; ஆனால் பல
வாத்துக்கள் சூழ்ந்தன ஓரிடத்தில், ஒரு சிறு பெண்ணை!

ரொட்டித் துண்டுகளை அவள் வீசியவாறு அமர்ந்திருக்க,
முட்டி மோதிக்கொண்டு, கொத்தித் தின்ன அவை செல்ல,

பெண்ணரசி மனம் வருந்தினாள்; ஏனென்று கேட்டதும்,
என்னிடம் சொன்னாள், அச் செயல் சட்டப்படிக் குற்றம்!

பறவைகளுக்கு உணவு இட்டால் நல்லதுதானே என்று
மறுபடியும் கேட்டதும், பதில் அவள் உரைத்தாள். இந்தப்

பழக்கம் வந்துவிட்டால், அவை சோம்பேறிகளாக மாறி,
வழக்கமாகத் தேடும் உணவு வேட்டைக்குச் செல்லாதாம்!

பனிக் காலத்தில், ஒருவரும் உணவு இடவில்லை எனில்,
பசியாலே வாடி அவை இறந்து போகுமாம், நிஜம்தானே!

தொடரும்................
 
Last edited:

Latest ads

Back
Top